1. தீரா திரவியமே! சுடரொளியே
5.திரவியமே
அவந்திகா அமுதினியின் காயம் பட்ட கன்னத்தை தொட்டுப்பார்த்து விசும்பியது.
“அம்மாக்கு ஒண்ணுமில்லைடா உன்னை போல பயந்து மயங்கிட்டாங்க அவ்ளோதான். ஹாஸ்பிட்டல் போனதும் கண் விழிச்சுக்குவாங்க” என்று விசும்பும் அவந்திகாவை சமாதானப்படுத்தினான் சர்வா.
அவந்திகாவை சர்வா தோளில் போட்டு தட்டிக்கொடுக்க அழுத அசதியில் உறங்கிவிட்டது.
அவந்திகாவின் தூக்கம் கலையாது இருக்க சர்வாவிடமிருந்து வாங்கிக்கொண்டான் வினோத்.
அமுதினியை தூக்கிக்கொண்டு ரிசப்ஷனில் “இவங்களுக்கு அடிப்பட்டிருக்கு டாக்டரை பார்க்கணும்” என்றான் சர்வா அவசரமாக.
சர்வாவின் நண்பனின் ஹாஸ்பிட்டல் என்பதால் உடனே அமுதினியை எமர்ஜென்சி வார்டில் அட்மிட் செய்தனர்.
அவந்திகாவை ஒரு அறையில் படுக்க வைத்துவிட்டு வினோத்தை குழந்தையை பார்த்துக்க சொல்லிவிட்டு அமுதினி இருக்கும் வார்டுக்கு வந்தான் சர்வா.
அமுதினிக்கு ஃபர்ஸ்ட் எய்டு முடித்து விட்டு தலையில் தையல் போட்டு முடித்திருந்தான் டாக்டர் சுரேஷ்.
சர்வா அமுதினியின் பக்கம் போனவன் “சுரேஷ் இந்த பொண்ணுக்கு காயம் ஆழம் இல்லையே! சர்ஜரி ஏதும் பண்ண வேண்டி இருக்கா. இரத்தம் நிறைய போயிருந்ததே! அதான் கேட்குறேன்” என்றான் அவனது நணபன் சுரேஷிடம்.
“நீயே டாக்டர் போல பேசுறியேடா” என்று சிரித்தவன் “தலையில அடிப்பட்டா இரத்தம் வராமா என்ன செய்யும். காயம் கொஞ்சம் ஆழம்தான் 10 தையல் போட்டிருக்கேன் ஒன் ஹவர்ல கண் முழிச்சிடுவாங்க” என்றவன் “ஆமா இந்த பொண்ணு உனக்கு முக்கியமான ரிலேஷனா? இல்லை எனக்கு தெரியாம லவ்வு கிவ்வுனு ஏதாவது இருக்கா?” என்று கண்ணைச் சிமிட்டி சிரித்தான் சுரேஷ்.
“அடப்போடா எனக்கும் லவ்வுக்கும் ஏணி வச்சாலும் எட்டாதுனு உனக்கு தெரியாதா என்ன? இவ! இவ! என் நியூ ஆபிஸ் ஸ்டாப் கைகுழந்தையோட அடிப்பட்டு ஆபத்துக்கட்டத்துல இருந்தவங்களை காப்பாத்த கூட்டி வந்துருக்கேன் அவ்ளோதான்” என்றான் தோளைக்குலுக்கி.
“சரிடா எனக்கு சர்ஜரி இருக்கு நான் கிளம்புறேன்” என்று சுரேஷ் கிளம்பி விட்டான்.
தனியறையில் அமுதினியை படுக்க வைத்திருந்தார்கள். அவள் பக்கம் நின்றவனுக்கு இந்த பொண்ணோட கண்ணை எங்கேயோ பார்த்த ஞாபகம் என்று யோசனை செய்தபடி உட்கார்ந்திருந்தான்.
சதாசிவம் ஆரவ்வை தூங்க வைக்க படாத பாடு பட்டுக்கொண்டிருந்தார். இடையில் சர்வாவிற்கு போன் செய்ய அவன் பிக் பண்ணவில்லை.
“அப்பா ஏன் போன் எடுக்கல தாத்தா? இன்னொரு முறை போன் செய்யுங்க” என்று கலாட்டா செய்துவிட்டான் ஆரவ்.
சர்வா சதாசிவத்திற்கு போன் போட்டு விட்டான். “அப்பாடா உங்கப்பன் போன் பண்ணிட்டான் இந்தா பேசு” என்று ஆரவ்வின் கையில் போனை கொடுத்து விட்டார் சதாசிவம்.
“டாடி எப்போ வருவீங்க?” என்று ஆரவ் ஏக்கமாக கேட்டான்.
“டாடிக்கு தெரிஞ்சவங்களுக்கு அடிப்பட்டிருச்சு ராஜா. அவங்களை ஹாஸ்பிட்டல அட்மிட் பண்ணியிருக்கேன். அவங்க கண் முழிச்சதும் டாடி உன்னை பார்க்க ஓடி வந்துடுவேன். நீ சமத்துப்பையனா தாத்தாவ டிஸ்டர்ப் பண்ணாம தூங்குவியாம் சரியா” என்றான் கொஞ்சும் மொழியில் ஆரவ்வுடன் பேசும் போது மட்டும் குழந்தையாக மாறிவிடுவான் சர்வா.
“ரொம்ப அடிப்பட்டிருச்சா டாடி? நான் சாமிகிட்ட வேண்டிக்குறேன் அவங்களுக்கு குணமாகணும்னு” என்றான் கண்ணை உருட்டி.
அமுதினி கண்ணை திறக்க முயல “ஆரவ் டாடி வந்துடுவேன் நீங்க தூங்குங்க பை” என்று போனை வைத்துவிட்டான் சர்வா.
அமுதினி கண்ணை திறந்ததும் சுற்றும் முற்றும் பார்த்தவள் “அவந்தி அவந்தி எங்கிருக்க?” என்று பதட்டப்பட்டு கட்டிலிலிருந்து சர்வா நின்றது கூட தெரியாமல் கதவு வரை சென்றவள் தள்ளாடி கீழே விழப்போகும் முன் சர்வா அமுதினியை தாங்கி பிடித்துக்கொண்டான்.
அமுதினியை கைதாங்கலாக கூட்டி வந்து கட்டிலில் உட்கார வைத்தவன் “ஏய் பொண்ணு உனக்கு அறிவிருக்கா? தலையில தையல் போட்டிருக்காங்க நீ பாட்டுக்கு எழுந்து ஓடுற” என்று காரமாக பேசினான்.
சர்வா திட்டி பேசுவதெல்லாம் அவள் காதில் விழவில்லை “என் பொண்ணு என் பொண்ணை கடத்திட்டாங்க சார் சார் காப்பாத்துங்க என் பொண்ணை” என்று சர்வாவின் கையை பிடித்துக்கொண்டாள்.
சர்வா அவளின் தாய் பாசத்தை கண்டு மிரண்டு போனான்.
“அமுதினி லிசன் உன் பொண்ணு என் கிட்ட பத்திரமா இருக்கா. எமோஷனல் ஆகாத” என்றவனோ வினோத்திற்கு போன் போட்டு “அந்த பாப்பா எழுந்துட்டாளா? எழுந்தாச்சுனா இங்க கூட்டிட்டு வா” என்றான் சர்வா.
“ம்ம் கண் விழிச்சுட்டா சார் அம்மா அம்மானு அழறா நான் கூட்டுட்டு வரேன்” என்று அழுதுக் கொண்டிருக்கும் அவந்திகாவை தூக்கிக்கொண்டு அமுதினி இருக்கும் அறைக்கு கூட்டிச்சென்றான் வினோத்.
அமுதினியை பார்த்த அவந்திகா “அம்மா” என்று கையை நீட்டிக்கொண்டு தாவியது.
“அம்மாக்கு தலையில அடிப்பட்டிருக்கு பாப்பா வா அங்கிள் எடுத்துக்குறேன்” என்று அவந்திகாவை சர்வா தூக்கிக்கொண்டு அமுதினியின் பக்கம் உட்கார்ந்துக் கொண்டான்.
அமுதினியோ சர்வா பக்கத்தில் உட்கார்ந்ததும் சங்கடமாக நெளிந்தாள். சர்வா அவளை கவனிக்கவில்லை.
அமுதினியோ “நான் மடியில என் பொண்ணை தூக்கி உட்கார வச்சுக்குறேன் சார்” என்று அவந்திகாவை தூக்கி வைத்துக்கொண்டாள்.
அவந்திகாவோ அமுதினியின் தலையில் கட்டை தொட்டு பார்த்து “வலிக்குதாம்மா? அந்த தடியன்களை இந்த அங்கிள் அடிச்சாரு இனிமே அவன் நம்மளை டிஸ்டர்ப் பண்ணினா இந்த அங்கிள் கிட்ட சொல்லி அடிக்கச் சொல்லிடலாம்” என்ற அவந்திகாவோ அமுதினி நெஞ்சில் சாய்ந்துக் கொண்டது.
“வினோத் அப்பாவுக்கு உடம்பு சரியில்லைனு சொன்னல்ல நீ கிளம்புறியா?” என்றான் சர்வா.
“இருக்கட்டும் நானும் இங்க இருக்கேன்” என்றவன் “இந்த பொண்ணை எங்க தங்க வைப்பது இவங்களை துரத்திய கும்பல் மறுபடியும் வந்துட்டா?” என்று அமுதினியை பார்த்து கவலைப்பட்டு கேட்டான் வினோத்.
“ம்ம் இந்த பொண்ணையும் பாப்பாவையும் என்னோட கெஸ்ட் ஹவுஸ்ல தங்க வச்சிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்றவன் அமுதினியிடம் திரும்பி “இந்தா பொண்ணு எங்க வீட்ல தங்கிக்க உனக்கு சம்மதம் தானே?” என்றான் அதிரடியாக.
அமுதினிக்கும் இந்த ஊரில் நம்பிக்கையான ஆள் யாரையும் தெரியாது. கடவுளே சர்வாவை தனக்கென அனுப்பி விட்டதை போல எண்ணியவள் “சம்மதம்ங்க ஆனா வாடகை கொடுத்திடுவேன்” என்றாள் மெல்லிய குரலில்.
“ம்ம் நானும் வாடகை வாங்காம உன்னை தங்க வைக்க மாட்டேன். வாடகை வாங்காம உன்னை என் வீட்டில் தங்க வைக்க நீ என்ன சொந்தமா பந்தமா?” என்று தேள் கொடுக்காக கொட்டிவிட்டான். அடிக்கடி சர்வா அந்நியனாக மாறிவிடுவான்.
சர்வாவின் பேச்சை அமுதினி பெரிதாக எண்ணவில்லை. இதைவிட பெரிய திட்டும் அவமானமும் கேட்டவள் ஆயிற்றே. அமைதியாக உட்கார்ந்துக் கொண்டாள். அவன் ஒரு நிமிட முக மாற்றத்தை குழந்தை கண்டுக் கொண்டது.
“என்ன அங்கிள் கொஞ்ச நேரம் முன்னே என்னை பார்த்துக்கிறேனு சொன்னீங்க. இப்ப ரொம்ப கோபமா பேசுறீங்க. இப்படியெல்லாம் பேசினா நாங்க உங்க கூட வர மாட்டோம். வினோத் அங்கிள் எங்களை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க” என்றது மழலை மொழியில் அவந்திகா.
அவந்திகா தன்னுடன் வரவில்லையென்றதும் சர்வாவுக்கு ஏதோ நெஞ்சுக்குள் வலி வந்தது.
வினோத்தோ “ஆல்வேஸ் வெல்கம் பாப்பா” என்றான் சிரிப்புடன்.
சர்வாவோ வினோத்தை முறைத்தவன் “சாரி பாப்பா நான் கோபமா பேசலை சரியா என்கூடவே வா” என்று அவந்திகாவை தூக்கி வைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
இவனை புரிச்சுக்கவே முடியாதுப்பா என்ன டிசைனோ இவன் என்று தலையை ஆட்டிக்கொண்டான் வினோத். அவனுக்கு சர்வாவின் செயல் சிரிப்பை மூட்டியது. சிரித்துவிட்டான்.
“என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு?” என்றான் கோபமாக வினோத்திடம்.
சர்வா பக்கம் வந்த வினோத்தோ “டேய் இந்த பாப்பா உனக்கு ஸ்பெஷல் ஆகிட்டா போல என்கூட கூட்டிட்டு போறேன்னதும் உனக்கு ஏன் கோபம் வந்து என்னை முறைச்சு பார்க்குற. பாப்பாவை மட்டும் பிடிச்சிருக்கா இல்லை அந்த பொண்ணு…” என்று வினோத் பேச வாயெடுக்க.
வினோத்தின் காலில் ஓங்கி மிதித்து விட்டான். வினோத்திற்கோ கத்த முடியாத நிலை வலியை பொறுத்துக்கொண்டு அமைதியாக நின்றுவிட்டான்.
ஆப்ரேஷன் முடித்து வந்த சுரேஷ் அமுதினியை செக் பண்ணியவன் “சர்வா இவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் ஒன் வீக் கழிச்சு கூட்டிட்டு வா. தையல் பிரிச்சுடலாம். குளிக்கும் போது மட்டும் தலையில தண்ணி படாம பார்த்துக்கோங்க” என்று என்றவன் மாத்திரைகளை எழுதிக்கொடுத்தான்.
வினோத் மாத்திரைகளை வாங்க போன சமயம் சதாசிவத்திற்கு போன் செய்து அமுதினியை கூட்டிட்டு வருவதாக கூறி விட்டான். அவளது விசயங்களை மேலோட்டமாக சொல்லியும் விட்டான். ஒரு பெண்ணை திடுதிப்பென்று கூட்டிச்சென்றால் சதாசிவம் என்ன கற்பனை குதிரைகளை ஓட விடுவார் என்று சர்வாவிற்கு தெரியும். எதையும் ப்ளான் செய்து நடத்தும் சர்வா, அமுதினி விசயத்திலும் ப்ராப்ளம் வரக்கூடாதென முன்னெச்சிரிக்கையாய் இருந்தான்.
வினோத்தை அவன் வீட்டில் இறங்கிவிட்டு அமுதினியையும் அவந்திகாவையும் தன் வீட்டிற்கு அழைத்துச்சென்றான் சர்வா.
சதாசிவம் போர்டிகோவில் சர்வாவிற்காக காத்திருந்தார்.
சர்வாவின் கார் நின்றதும் அமுதினி தயங்கிக்கொண்டே அமர்ந்திருந்தாள்.
என்னதான் சர்வாவை நல்லவனாக எண்ணியிருந்தாலும் புது இடம் அவளுக்கு சங்கோஜமாக இருந்தது. வீட்டில் இருப்பவர்கள் தன்னை ஏதும் சொல்லி விடுவார்களோ என்ற பயமும் வந்தது அந்த மென் மனம் கொண்ட மங்கைக்கு.
சர்வா காரிலிருந்து இறங்கியதும் உறங்கும் அவந்திகாவை தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டான். சதாசிவமோ குழந்தையை எடுத்த சர்வாவை பார்த்து அதிர்ந்து விட்டார்.
அமுதினியை பற்றி மட்டும் சொன்னவன் அவந்திகாவை பற்றி எதுவும் சொல்லவில்லை. அமுதினியும் காரிலிருந்து இறங்கி சர்வாவின் பின்னே நின்றுக் கொண்டாள். அவள் முகத்தில் ஆயிரம் கவலைகள் இதுவரை இருந்தது.
ஏனோ இந்த இடத்தில் கால் வைத்ததும் நிம்மதி பரவியது அமுதினியின் மனதில்.
சதாசிவம் அமுதினியை பார்த்து சினேகமாக புன்னகைத்தார். அவளும் மெல்லியதாய் இதழ் விரித்தாள்.
“சித்தப்பா இந்த பொண்ணுக்கு தலையில காயம் ஆறும் வரை நம்ம வீட்டுக்குள்ள இருப்பா. காயம் ஆறினதும் கெஸ்ட் ஹவுஸ்ல தங்க வைச்சிடலாம்” என்றவன் மேற்படி எதுவும் பேசாமல் உள்ளேச் சென்று விட்டான்.
அமுதினியோ வீட்டுக்குள் சென்றதும் எங்கே போவது என்று திருதிருவென முழித்துக்கொண்டிருந்தாள். மாற்றுவதற்கு கூட மாற்றுத்துணி கிடையாது.
சர்வாவோ அவந்திகாவை ஒரு அறையில் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தவன் “இந்த ரூம்ல இருந்துக்கோ காலையில் புது டிரஸ் வரும்” என்றவன் சமையல்கட்டுக்குள் சென்றான்.
சதாசிவமோ சர்வாவின் செயல்களை பார்த்தவருக்கு கண்கட்டி வித்தை காட்டுவது போல் இருந்தது. ஏதோ புதிய உலகில் நுழைந்தவர் போல ஆச்சரியமாக சர்வாவை பார்த்துக்கொண்டிருந்தார்.
பால் டம்ளருடன் வந்தவன் “இந்தா பாலைக்குடிச்சிட்டு தூங்கு. ஏதோ உடம்பு சரியல்லாத பொண்ணுனு பால் கொண்டு வந்து தரேன். நான் உனக்கு முதலாளிதான் நீ எனக்கு கீழே வேலை செய்யும் பெண் அதை நினைவில் வச்சிக்கோ இந்தா பாலைக்குடிச்சுட்டு ரெஸ்ட் எடு” என்று பாலை அமுதினியின் கையில் கொடுத்தான்.
‘ம்க்கும் அதானே பார்த்தேன் என் மகன் மாறுவதா என்ன? அவன் குணம் மாற்ற புதுசா ஒரு ஆள் வரணும்’ என்று பெரும்மூச்சு விட்டார் சதாசிவம்
சர்வா பேசியதில் பயம் கொண்டு பாலைக் கையில் வாங்கிக்கொண்டு அவந்திகா இருந்த அறைக்குள் சென்று விட்டவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. “நம்ம மேல யாரும் பாசமா இருக்க மாட்டாங்களா அம்மா ஏன்மா என்னை விட்டு போன?” என்று சத்தமில்லாமல் அழுது கரைந்தாள்
அமுதினி. அவள் வாழ்வில் இன்னும் போராட்டம் இருக்கே!
அமுதினி கதவை லாக் செய்யாமல் இருக்க கதவை தட்டி விட்டு உள்ளே வந்த சதாசிவம் “கண்ணு நீ யாருனே எனக்கு தெரியாது. ஆனா என் பையன் முடரன்தான் ஆனா நல்லவன் கொஞ்சா நாளாத்தான் அவன் இப்படி எரிந்து விழுந்து பேசுறான் அவனும் கலகலப்பாக இருந்தவன்தான். நீயும் எதையும் நினைச்சு மனசை கஷ்டப்படுத்திக்காம பாலை குடிச்சிட்டு தூங்குமா” என்று அமுதினியின் தலையை வருடிக்கொடுத்தார்.
“ரொம்ப நன்றிப்பா” என்றவளுக்கு கண்ணீர்துளி எட்டிப்பார்த்தது. வெகுநாட்கள் கழித்து அவளிடம் பாசமாக பேசும் நபர் சதாசிவம் மட்டுமே.
“கதவை லாக் போட்டு தூங்குமா பாப்பா இடையில எழுந்துப்பாளா! நான் ஹாலில்தான் படுத்திருக்கேன் ஏதாவது வேணும்னா எழுப்பி விடு” என்று வெளியேச் சென்றுவிட்டார்.
சதாசிவம் சென்றதும் பசியாக இருக்க பாலை குடித்து விட்டு அசந்து உறங்கும் அவந்திகாவின் அருகில் படுத்தவள் குழந்தையை அணைத்துக்கொண்டு படுத்துவிட்டாள்.
காலையில் எப்போதும் போல ஆரவ் சர்வாவின் மார்பில் உறங்கிக்கொண்டிருந்தான். சர்வா கண் விழித்ததும் ஆரவ்வும் “டாடி” என்று அவன் கன்னத்தில் எச்சில் முத்தம் கொடுத்தான்.
“டாடியை ரொம்ப தேடுனீங்களா?” என்று அவனும் ஆரவ் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
“ஆமா நான் உங்க மேல கோவமா இருக்கேன்” என்று எழுந்து சர்வாவை விட்டு விலகி அமர்ந்துக் கொண்டான்.
அதே சமயம் அவந்திகா எழுந்து விட்டது. அமுதினி மாத்திரையின் வீரியத்தில் உறங்கிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு நாம எங்க இருக்கோம் என்று சுற்றி பார்க்க அந்த அறையில் சர்வாவின் போட்டோ இருந்தது.
“ஓஓ இது அங்கிள் வீடுதான்” என்று சிரிந்தது. அமுதினி கதவை லாக் போடாமலேயே உறங்கி விட்டாள். அவந்திகாவிற்கு பசியெடுக்க “ம்மா ம்மா பசிக்குது” என்று அமுதினியின் கன்னத்தில் தட்ட அவள் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.
அமுதினிக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பயந்த குழந்தை வெளியே வந்து பார்க்க யாரும் இல்லை. வீட்டை சுற்றி பார்க்க மாடியில் ஆரவ்வின் சிரிப்பு சத்தம் கேட்டது. வேகமாக தான் போட்டிருந்த கவுனை தூக்கி கையில் பிடித்துக்கொண்டு படியேறியது.
ஆரவ்வை சாமதானப்படுத்தி கிச்சுகிச்சு மூட்டிக்கொண்டிருந்தான் சர்வா.
சர்வாவின் அறைக்குள் ஓடிய அவந்திகா கட்டிலில் தந்தையும் மகனும் விளையாடுவதை கண்ட அவந்திகா “அங்கிள்! அங்கிள் நான் அம்மாவை எழுப்பினேன் எழும்பவேயில்லை” என்று இதழ் பிதுக்கியது.
ஆரவ்வோ அவந்திகாவை தலை சாய்த்து பார்த்து “டாடி இவ யாரு?” என்றான் அவந்திகாவை பார்த்து சிரித்தபடி.
“இந்த பாப்பா நம்மோட கெஸ்ட் ராஜா” என்றவன்
பயந்துடன் நிற்கும் அவந்திகாவை தூக்கி மடியில் உட்கார வைத்து “டால் பேபி அம்மாக்கு நேத்து ஊசி போட்டாங்கல்ல தூக்கம் வரும் நீங்க பயப்படாதீங்க” என்று அவந்திகாவின் நெற்றியில் முத்தம் கொடுத்தான் சர்வா.
ஆரவ்வுக்கோ அவந்திகாவிற்கு முத்தம் கொடுத்ததும் முகம் சின்னதாய் போனது. அவந்திகாவை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தவனோ “ஏய் பாப்பா எங்கப்பா மடியிலிருந்து கீழே இறங்கு” என்று அவந்திகாவின் கையை பிடித்து இழுத்தான்.
