காதல் ரசவாதி நீ
காதல் ரசவாதி நீ 1
நாயகன் – சுகிர்தன் ராமச்சந்திரன்
நாயகி – ஜூன் @ தர்ஷினி நடேசன்
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையின் பணியாளர்கள்
எல்லோரும் காலையிலேயே கிளம்பி நகரின் சாலைகளை கூட்ட நெரிசல்களில் இருந்து தப்பி
விரைவாக செல்ல வேண்டிய இடம் நோக்கி எல்லோரும் செல்ல அவதானிக்கும் அந்த காலை நேர
பொழுது..
அவர்களை தடுத்து தாமதம் ஆக்குவதே தன் தலையாய பணி
என்று செவ்வனே அவர்களை நிறுத்தி வைத்திருந்தது அம்பத்தூர் சிக்னல்.. அனைவரும்
தங்களால் இயன்ற அளவுக்கு அந்த இடத்திலே நின்று தங்கள் வாகனங்களின் ஹாரனை காதுகள்
கிழியும்படி ஒலிக்க விட..
இத்தனை சத்தங்களின் இடையிலும் அழகாய் பிங்க்
வண்ண சுடிதாரில் தன் செல்ல லச்சு எனப்படும் மஞ்சள் நிற வெஸ்பா வண்டியில் அமர்ந்து
தலை அசைத்து அந்த மொட்டை வெயிலில் எதோ குளிர் நிலவாய் இருபது போல சிரித்துக்கொண்டே
கண்மூடி லயித்துக்கொண்டிருந்த அவள் ஜூன்..
இது அவளுக்கு பிடித்த பெயர் அவளது அப்பா நடேசன்
செல்லமாய் அழைப்பது. ஒரிஜினல் பேர் தர்ஷினி நடேசன். கல்லூரி மூன்றாம் ஆண்டு
படிக்கிறாள். படிப்பது மாடர்ன் இன்ஜினியரிங் கல்லூரி ஊரிலேயே மிக பெரும் நிறுவனம்.
அவளது அப்பாவும் அங்கு கணக்காளராக அக்கவுண்ட்ஸ்
பார்த்து கொடுப்பவர். அவரது பெயரால் நம்ம ஆளுக்கு கல்லூரியில் இடம் கிடைத்து
இருந்தது.
இவளும் நம்மை போல தான்.. எண்பது மார்க்கை
தாண்டினால் தெய்வ குத்தம் போல எழுபத்து ஒன்பது புள்ளி ஒன்பதில் நிற்பவள். அந்த
கல்லூரியில் எல்லாமே சாம்பார் சாதங்களும் தயிர் சாதங்களும் தான் அதாவது எல்லாமே
தொண்ணூறு சதவிகிதம் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் தான் படிக்கவே முடியும்.
இவளுக்கு இனாமாக கிடைக்க சரி படித்து தான் பார்ப்போமே என்ற ஒரு நப்பாசையில்
சேர்ந்து அவளது காலம் முழுக்க புக் படிப்பு புக் படிப்பு என்று மிகுந்த வறட்சியாக
போய்கொண்டு இருக்கிறது..
அது எப்படி நம்ம கதாநாயகி அமைதியா அங்க நிக்க
நாம விட்ருவோமா என்ன? அவள் கண்மூடி வெயிலில் நிற்பது எதற்கு? ஹெட்போன் முழு
சத்தத்தில் இசைக்க.. காதில் கேட்டுக்கொண்டு இருந்த “நீயும் நானும் அன்பே கைகள்
கோர்த்து கொண்டே” பாடலை காதுகளில் வழியே மனதுக்குள் பாய்ச்சி விஜய் சேதுபதி கூட
டூயட் பாடிக்கொண்டு இருக்க..
அவளது நவரசங்களும் முகத்தில் நர்த்தனம் ஆடி
காதல் பாடலுக்கு தானே நடனம் ஆடுவதை போன்ற முக பாவத்துடன் வண்டியில் அமர்ந்தபடி
தானும் சேர்ந்து பாடிக்கொண்டு இருக்க..
அவளுக்கு அருகே தங்கள் பழைய வண்டியில்
சிரித்தபடி அமர்ந்து இருந்தனர் ஒரு வயதான தம்பதி. அந்த முதியவர் இவளை பார்த்து தன்
பொக்கை வாய் பற்களோடு சிரித்துகொண்டு இருக்க.. அவரது மனைவியோ அவரை பார்த்து “ஆஹா
அழகாண பொண்ணை பார்த்துடா போதுமே ஐயா குஷி ஆகிடுவீங்களே” என்று அவரது தோளில்
இடிக்க.
அவரோ “ஆமா நான் இன்னமும் இளமையா இருக்கேன் நீ
கிழவி ஆகிட்ட சோ எனக்கு தகுந்த மாதிரி பொண்ண பாக்குறேன்” என்றார்.
அவரது மனைவியோ “ஹ்ம்ம் கல்யாண வயசுல பேரனை
வெச்சுகிட்டு இப்போ பேசுற பேச்சை பாரு” என்று மீண்டும் இடிக்க..
அவரோ மனைவியை விட்டுவிட்டு அங்கு நின்ற
ஜுன்னிடம் “ஹை ப்யூடி” என்று கையசைக்க.. அவளோ பாடலில் லயித்து இருந்தவள் அவரை
கவனிக்காமல் நிற்க.. அவரோ அவளது கையில் லேசாக தட்டியவராக “ஒய் டார்லிங் கூப்டுட்டு
இருக்கேன் கவனிக்கவே மாட்டேன்கிற?” என்றார்.
அவளோ பாட்டு தடைப்பட்ட வியப்பில் கண்களை
திறந்தவள் எதிரே சிரித்த முகத்துடன் இருக்கும் இரண்டு முதியவர்களையும் பார்த்து
சிரித்துவிட்டு “ஒஹோ சாரி ஹன்ட்சம் நான் உங்களை கவனிக்காம இருந்துட்டேன்” என்று
அவரை பார்த்து கண்ணடித்து சிரிக்க..
அவரோ மேலும் குஷி ஆனவராக “ஒ வாவ் ப்யூடி எங்க நீ
பேசமாட்டியோன்னு நெனச்சேன்” என்று நினைத்ததை சொல்ல.. அவரது மனைவியோ “ஆமா பேசலைனா
விட்டுடுவீங்களா?” என்றார்.
இருவரையும் பார்த்த ஜூன் மேலும் வம்பு
வளர்க்கும் எண்ணத்தில் “ஒ ஹன்ட்சம் உங்களுக்கு போய் இப்படி ஒரு வயசான மனைவியா?”
என்று இரக்கம் சொட்டும் குரலில் கேட்க அவரும் அதற்கு ஆமாம் எங்க அங்கு நின்ற அந்த
நேரம் முழுவதும் அவர்களோடு கதை அளந்து கொண்டு சிறு குழந்தை போல பேசி சிரித்துகொண்டு
இருந்தவளை இரண்டு ஜோடி கண்கள் மிகுந்த ஆவலுடன் பார்த்துக்கொண்டு இருந்தது.
அதில் ஒருவன் சுகிர்தன் ராமச்சந்திரன் தன்னுடைய
விலை உயர்ந்த காருக்குள் இருந்து கொண்டு அவளை தன்னை அறியாமல் ரசித்துக்கொண்டு
அமர்ந்து இருந்தான் அவன். இதுவரையில் பெண்கள் மீது பெரும் ஈர்ப்பு என்பது இருந்தது
இல்லை அவனுக்கு.. இன்று மாற்றத்திலும் மாற்றமாக அவளை அவ்வளவு நேரமாக உற்று
பார்த்துகொண்டு இருந்தான்.
வயது: இருபத்து ஏழு
தொழில்: சாப்ட்வேர் நிறுவனம் தன்னுடைய சொந்த
உழைப்பில் முன்னேற வேண்டும் என்ற நினைப்பில் சிறிய நிறுவனம் துவங்கி இப்பொழுது
நல்ல நிலையில் வசதியாக வந்துவிட்டான். அதற்காக அவனது குடும்பம் ஒன்றும் ஏனோ தானோ
இல்லை மிகபெரும் துணி கடல் போன்ற ஆறு ஏழு கடைகளின் சொந்தக்காரர்கள். அவனது அப்பா
ராமசந்திரன் சிறிய கடையாக துவங்கி இப்பொழுது ஆறு ஏழு மாநிலங்களில் மிகபெரிய கிளை
நிறுவனங்கள் கொண்ட அபயாம்பிகா டெக்ஸ்டைல்ஸ் குழுமம்.
படிப்பு: இன்ஜினியரிங் முடித்து இப்பொழுது பகுதி
நேரமாக மாஸ்டர்ஸ்..
குணம்: பிடிவாதம், கோபம் ஆத்திரம் எல்லாமே உண்டு
நினைத்ததை நடத்தியே பழக்கம் வீட்டின் ஒற்றை ஆண் வாரிசு, வேண்டியதை எப்பாடு பட்டும்
கிட்டித்துகொள்ளும் எமகாதகன்.. என்னதான் கொஞ்சமா குடிச்சாலும் கொஞ்சமா
கோபபட்டாலும் எதோ கொஞ்சம் நல்ல பையன் தான்..eee
மெயின் விஷயம் இவனது தோற்றம் ஆளு சும்மா
எலுமிச்சை கலரு தகதகன்னு எம்ஜியார் மாதிரி மின்னுவான்.. மிடில் கிளாஸ் மாதவன் ஆக
இருந்தாலும் அழகுல இவன் ஆம்பள ஐஸ்வர்யா ராய் தான்.. எக்கச்சக்க அழகு செம ஹான்சம்..
ஊடால நடந்து போனா பத்து பொண்ணுங்களாவது ஜொள்ளு விட்டு ரசிக்கும் கனவு கண்ணன்.(போதும்
போதும் லிஸ்ட்..உஹ்)
இப்பொழுது தனது கல்லூரியின் மாஸ்டர்ஸ்
படிப்புக்காக எதோ நோட்ஸ் வாங்க போய்கொண்டு இருந்தான். போகும் வழியில் இந்த தர்ஷினி
தேவியாரின் தரிசனம் கிடைக்க.. பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க.. சிக்னலில்
காத்திருந்த காட்சி யாவும் காண கிடைக்க.. அவன் அவளிலேயே லயிக்க..துவங்கிய நேரம்…அம்மா
ஐயா தர்மம் பண்ணுங்க ஐயா சாமே…
(என்னது இது நதி ஒரு காதல் பீல் கூட ஒழுங்கா
கொடுக்க மாட்டியா?)
சுகிர்தனின் காரின் கதவை தட்டி ஒரு பிச்சை
எடுக்கும் ஆசாமி தர்மம் கேட்க.. இவனோ அவளை பார்க்கும் மும்முரத்திலும் கையில்
இருந்து பத்து ரூபாயை தேடி எடுத்து அவருக்கு கொடுத்து.. கொடுத்து சிவந்த கையுடன்
அவளை திரும்பி பார்க்க.. அவள் தான் எப்பொழுதோ பறந்து இருந்தாளே! (உழைச்சு
சம்பாதிச்ச பத்து ரூபா பாஸ்)
சை என்று தன் காரின் சீட்டில் குத்தியவன் தன்
கல்லூரியை நோக்கி காரை செலுத்தினான்.
தர்ஷினி அங்கு நின்று இருக்க அவளை பார்த்துகொண்டு
இருந்த இன்னொரு கண்களின் சொந்தக்காரன் ரெத்னசபாபதி @ ரென் அவனும் தர்ஷினி படிக்கும்
கல்லூரியில் படிப்பவன் தான். இதுவரை ஒருதலை ராகம் பாடிக்கொண்டு இருப்பவன்..
தர்ஷினி உப்பை கொடுத்து சர்க்கரை என்றாலும் அதற்கு ஆமாம் சாமி போடுவான் அவன்.
எப்பொழுதும் ஜூன் ஜூன் தான் அவனுக்கு.
ரென் அந்த ஊரின் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்
வீரசிங்கத்தின் மகன். வீட்டின் செல்லம் அடுத்த சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு நேரடி
வாரிசு.. எங்கு போனாலும் நான்கு ஐந்து ஆட்களுடன் அலம்பல் செய்யும் பச்சா குட்டி..
மினி அரசியல்வாதி..
கடந்த இரண்டு வருடங்களாக தர்ஷினி பின்னே சுற்றி
சுற்றி நான்கு ஐந்து ஜோடி செருப்புகளையும் தன்னுடைய பைக் டயர்களையும் தேய விட்ட
தேவதாஸ் அவன்.
இவர்களின் பார்வைகளை கண நேரத்தில் களவாடி போன தேவதை
அவளோ தன் லச்சுவுடன் கல்லூரி வளாகத்தினுள் சென்று வண்டியை பத்திரமாக
நிறுத்திவிட்டு அங்கு தன்னுடன் பேச பிடித்து வைத்து இருக்கும் தன் தோழியிடம் கதை
அளந்து கொண்டு இருந்தாள். தர்ஷினி வாய் ஓயாமல் பேசும் குழந்தை குமரி அவள்.
இப்பொழுது காத்துகொண்டு இருப்பது கூட அங்கு
பணியில் இருக்கும் ஒரு அம்மா அவரை பார்த்து கதை பேசத்தான்.. அவள் அவருடன் கதை பேசி
பேசி நேரம் மறந்து லயிக்க துவங்கிய நேரம்..
டமால் என்று எதோ மோதும் சப்தம்
கேட்க..
சாவகாசமாய் எவ அவ என்னும் போஸில் திரும்பி பார்த்தவள் அதிர்ந்தாள். ஏன்?
ஏன்? ஏன்? அவ கனகச்சிதமாக பயம் பத்திரமாக நிறுத்திவிட்டு வந்த அவளது லச்சு வண்டியை
ஒரு கார் இடித்து கீழே தள்ளி இருக்க.. விழுந்த வண்டியின் சேதம் ரத்த கண்ணீரை
வரவழைக்கும் அளவுக்கு இருந்தது.
ஐயோவென்று பதறி வண்டியின் அருகில் சென்றவள் “லச்சு
உனக்கு என்ன ஆச்சு லச்சு ஹையோ” என்று கோபத்தில் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம்
என்றே தெரியாமல் அங்கு கீழே கிடந்த பெரிய கல்லை எடுத்து அவளது லச்சுவை இடித்து
தள்ளிய காரை நன்றாக பதம் பார்க்க துவங்கினாள்.
காரின் மீது தன்னுடைய ஆத்திரம் தீரும்படி
அடித்து நொறுக்க அந்த விலை உயர்ந்த ஆடி கார்.. அதாவது நம்ம சுகி நாற்பது லச்சம்
காரை ஆடி தள்ளுபடியில் அஞ்சு லச்சம் கொடுத்து முன்பதிவு செய்து லோனில் வாங்கிய..
அந்த.. ஆடி காரின் முன்பகுதியை அப்பளம் போல நொறுக்கி சல்லி சல்லியாக ஆக்கிவிட்டாள்
நம்ம ஜூன்.. ஜூனுக்கும் ஜூலைக்கும் (ஆடி) ஆகாது போல பாஸ்..
சுகிர்தனோ கீழே விழுந்த வண்டியை எடுத்து அதற்கு
வைத்தியம் பார்த்து கொடுத்துவிடலாம் என்ற நல்ல எண்ணத்தில் எழுந்து வந்தவன் தன்
காரின் நிலையை பார்த்து கடுமையான கோபத்தில் அவளிடம் பேச துவங்கினான்.
“ஏய் என்ன பண்ணி வெச்சு இருக்க? உனக்கு என்ன
பைத்தியமா? மை கார்..ஒ ஷிட்.. இந்த காரோட விலை என்ன தெரியுமா உனக்கு? பார்ட்டி
லாக்ஸ் யு டர்ட்டி..சன் ஒப் அ..****” அவனுக்கு தெரிந்த ஆங்கில சொற்கள் தூய்மையான
வார்த்தைகள் கொண்டு அர்ச்சனை செய்து முடிக்க…
அவளது லச்சுவை காயப்படுத்திய அந்த காரை அடித்து
நொறுக்கிவிட்டு தன் வண்டியை குனிந்து பார்த்துகொண்டு இருந்தவள் நிமிர்ந்து
முகத்தில் விழுந்த கார்கூந்தலை ஒதுக்கி அவனது கெட்ட வார்த்தைகளின் அணிவகுப்பை
கண்டு முகத்தை அஷ்டகோணல் ஆக்கி “ச்சை” என்று காதுகளை பொத்தியபடி நிமிர..
அங்கே ஒரு மெதுவான கேமரா ஸ்லொவ் ஷாட்.. அவள்
கூந்தல் முடிகள் சிலும்பிய வேகத்தில் காற்றில் பறந்து அவளது பவளமல்லி நிறம் கொண்ட
பால்வண்ண முகம் இவனுக்கு காட்சி அளிக்க.. பேசிய தன் வாயை மூடியபடி அப்படியே
நின்றுவிட்டான் நம் ஸ்விக்கி பாய்..
அவனோ இவளா? இவளையா? திட்டிவிட்டோம் அதுவும் மோசமான
கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டோமே என்ற நினைப்பில் நிற்க..அவனது அமைதியை
பயன்படுத்தி நவீன கண்ணகி போல் நீதி கேட்க கிளம்பி விட்டாள் ஜூன்..
வேகமாக எழுந்தவள் சுற்றிலும் தங்களை வேடிக்கை
பார்த்தபடி இருந்த அனைவரையும் ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு “யோவ் உனக்கு
ஏதாவது அறிவு இருக்கா? எப்படி அசிங்கம் அசிங்கமா பேசுற?
உனக்கு கெட்ட வார்த்தை பேசுனா சாமி கண்ணை
குத்தும்னு தெரியாது? ஆளு தான் அபிஷேக் பச்சன் மாதிரி அழகா இருக்க ஆனால் இப்படி
அசிங்கம் அசிங்கமா பேசுற?” என்று திட்ட..
தண்ணீர் தெளித்த நெருப்பினை போல் அவள் மீதான உணர்வுகள்
அடங்கி அவள் மீது தவறை வைத்துகொண்டு தன்னை திட்டுபவள் மீது அவனுக்கும் கோபம் வர கையை
நீட்டி பேசுபவளை தடுத்தவன் “ஏய் என்ன விட்டா பேசிகிட்டே போற ஒழுங்கா என்னோட
காருக்கு உண்டான காசை எடுத்து வெச்சுட்டு கிளம்பு இல்லேன்னா நடக்குறதே வேற” என்று
அவனும் பத்திரம் காட்டி மிரட்ட..
அவளோ “நான் எதுக்கு உனக்கு காசு கொடுக்கணும்
அதெல்லாம் முடியாது நீ முதலில் என்னோட வண்டிக்கான காசை கொடுத்துட்டு கிளம்பு”
என்று அவனுக்கு மேல் எகிற..
இருவரின் சண்டையும் அங்கு முத்தி போகும்முன்
அங்கு வந்து சேர்ந்தார் நடேசன் அன்று கல்லூரியின் மாதாந்திர கணக்கு வழக்குகளை
பார்த்து முடிக்கும் நாள் ஆகையால் அவரும் தன் அலுவலகம் சென்றுவிட்டு கல்லூரிக்கு
வந்திருக்க.. அவரது ஸ்ட்ரிக்ட் ஆபீசர் குணத்துக்கு அஞ்சி சாட்சிக்காரன் காலில்
விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று படக்கென்று சுகியின் பின்னே
சென்று அவள் ஒளிந்து கொள்ள..
அவனோ யாருக்கு இப்படி பயம் என்று அங்கு எட்டி
பார்த்துக்கொண்டே அவளை முன்னால் கொண்டு வர கையால் அவளை பிடித்து இழுக்க.. அவளோ “யோவ்
சும்மா இருயா அவர்கிட்ட மாட்டி விட்டுடாத.. அப்பறம் ரெண்டு பெரும் தொலைஞ்சோம்”
என்று அவனுக்கு பின் இன்னமும் நன்றாக ஒளிந்து கொள்ள..
இந்த முரட்டு பையனுக்கும் சற்று சுவாரஸ்யம்
ஏற்பட்டதோ என்னவோ தன் தோளில் வழியே எட்டி எட்டி பார்த்தபடி நிற்கும் அவளை பார்க்க
குனிந்து “யாரு அவரு எதுக்கு இப்படி பயம்?” என்று கேட்க..
அவளும் அவன் காதுக்குள் குனிந்து “என்னோட டாடி
தான் மாட்டினேன் கொன்னுடுவாரு” என்றாள். அதற்கு சுகியோ “அட அப்போ அவர்கிட்டவே
என்னோட காருக்கான காசை வாங்கிகிட்டா போச்சு” என்று சுலபமாக சொல்லி “ஆமா அவர் பேர்
என்ன?” என்க
அவளோ அவன் சொன்னதின் அர்த்தம் உணரும் முன்பே “நடேசன்”
என்று சொல்லிவிட்டு நாக்கை கடிக்க.. அவன் அவரை கூப்பிட துவங்கினான் “மிஸ்டர்
நடேசன் சார் நடேசன் சார்” என்று கத்தி கூப்பாடு போட.. அவளது அப்பா இந்த பக்கமாக
திரும்பும் முன் அவனது சட்டையை பிடித்து பின்புறமாகவே இழுத்துக்கொண்டு அவனது
உடைந்த காருக்குள் தள்ள முயல..
அவனை பின்புறமாக இழுத்தவள் வேகம் அவளுக்கும்
அவனுக்குமே தடுமாற இருவருமாக திறந்து இருந்த காரின் கதவு வழியாக காருக்குள் எசகு
பிசகாக விழுந்து வைக்க..
முதலில் விழுந்த ஜூன் சுதாரித்து திரும்ப சரியாய்
அவள் மீது நொடி பொழுதில் விழுந்தான் சுகிர்தன். விழுந்தவன் அவளது பஞ்சு மேனியில்
விழுந்து பவள இதழ்களுடன் தன் இதழ்களை பச்சக்கென்று மோதிகொண்டான். (அடேய் இதெல்லாம்
ரொம்ப ஓவர் சொல்லிட்டேன் உங்களுக்கு மோத உதடை தவிர வேறு எதுவும் கிடைக்காதா டா
கதாநாயகன்ஸ்?)
நான்கு இதழ்களும் ஒன்றை ஒன்று சந்தித்துக்கொள்ள அவளது
அதிமென்மையான இதழ்கள் அவனுக்கு ஆச்சர்யத்தை கொடுக்க.. எழுந்துகொள்ள வாய்ப்பு
இருந்தும் அவள் உதடுகளை விட்டு பிரியாமல் கிடக்க..
அவனது பாரம் முழுதும் தன் மீது அழுத்த கீழே
இருந்தவளோ அவனை தள்ளும் முயற்சியில் இறங்க.. மெல்ல சுயம் பெற்றவன் அப்பொழுதுதான்
சுற்றிலும் நின்ற கூட்டத்தை அவதானித்தான்.
உடனே படகென்று எழுந்து அவளை முறைக்க துவங்க..
அவளும் அவனை முறைக்க.. கூட்டமோ இந்த எலியும் பூனையுமான சண்டையை நன்றாக ரசிக்க
துவங்கியது.
அவள் எழுந்துகொண்டதும் அவனது முகத்தை பார்க்க
முடியாமல் சற்று முன் நடந்த நிகழ்வு அவளை தாக்க ஆனாலும் கோபம் அதற்கும் மேலாக
வந்து அவனிடம் மீண்டும் சண்டைக்கு இறங்க அவனோ தன் திமிர்த்தனம் தலைதோங்க இவளை விட
கூடாது என்னும் எண்ணத்தில் கையை காண்பித்து அவளை அமைதியாக இருக்கும்படி
காண்பித்தவன்..
காருக்குள் குனிந்து எதையோ எடுக்க தேடினான்.
அதனை எடுத்து எதையோ எழுதி வெளியே எடுத்தவன் அவளது கைகளில் அதை கொடுப்பது போல
நீட்டி.. பின்பு அதனை தன் உடைந்த காரின் பானெட் மீது பட்டென்று வைத்துவிட்டு “ஹ்ம்ம்
ஒகே இப்போ டீலுக்கு வருவோம் நான் உடைச்ச உன்னோட வண்டிக்கு செலவு கம்மிதான்..
ஆனாலும் அதுக்காக நான் ஒரு அறுபது ஆயிரம் பணம் செக் எழுதி இருக்கேன்..
இப்போ நீ உடைச்ச என்னோட காருக்கு செலவுக்கு
எவ்வளவு பணம் ஆகுமோ அதை கொடுத்துட்டு நீ போகலாம்..
எனக்கு நிறைய வேலை இருக்கு.. அப்பரம் எப்படி
காஷ் ஆ? செக் ஆ?” என்றுவிட்டு தன்னுடைய காரில் சாய்ந்துகொண்டு நிற்க.. இப்பொழுது
எச்சில் விழுங்கி முழிப்பது அவளது முறை ஆனது..
அவளோ அந்த காரை பார்த்து பயத்தில் மிடறு
விழுங்கி “இதை சரிசெய்ய என்கிட்ட பணமா? அதெல்லாம் என்கிட்ட..” என்று பயந்தவள்
பயந்தால் வேலைக்கு ஆகாது என்று கெத்து காண்பிக்க நினைத்து “என்கிட்ட இவ்வளவு பணம்
எல்லாம் இல்லை அதெல்லாம் ஒன்னும் தர முடியாது” என்று மிடுக்காக சொல்லிவிட்டு செல்ல
பார்க்க..
போகும் அவசரத்திலும் அந்த செக் மீது வைத்த அவளது
கையை மேலே கோழி அமுக்குவது போல் அமுக்கியவன் “பணத்தை எண்ணி எடுத்து வெச்சுட்டு நீ
போகலாம்” என்று விடாப்பிடியாக நின்றான் அந்த விடாக்கொண்டன்.
அவள் திமிராக “கொடுக்கலைனா?” என்க அவனோ “சிம்பிள்
இதோ உள்ளே இருக்கிற உங்க அப்பா அவர் பேரென்ன..ஹ்ம்ம்” என்று யோசிக்க நம் ஜூன்
மீண்டும் அவசரமாக “நடேசன்” என்று சொல்லிவிட்டு இந்த முறை தலையில்
அடித்துக்கொள்ள…
அவன் வந்த சிரிப்பை மறைத்துக்கொண்டு “ஹான்
நடேசன் அவர்கிட்ட நீ என் வண்டியில் வந்து இடிச்சு இது போல டேமேஜ் பண்ணிட்டனு
சொல்லி எனக்கு தேவையான அமௌன்ட் அவர்கிட்ட கேட்டு வாங்கிக்கிறேன் தட்ஸ் ஆள்”
என்றான் மிடுக்காக..
அவளோ அழும் நிலைக்கு வந்துவிட்ட பின்
யோசனைக்குள் தாவி “ஜூன் என்னடி இப்படி ஆகிடுச்சு ஏதாவது யோசி.., ஏதாவது.. ஹ்ம்ம்
ஐடியா” என்று மண்டைக்குள் மணி அடித்த மாபெரும் யோசனையுடன் அவனை பார்த்தவள்..
பழம்பெரும் நாவல்களின் நாயகிகள் போல முகத்தை
சோகத்தை டன் கணக்கில் சேகரித்து வைத்து “உங்களை மாதிரி பணக்கார பாஸ் எல்லாம் என்ன
கேட்பாங்க? அந்த பணத்தை நான் உங்ககிட்ட வேலை செஞ்சு முழுசா அடைக்கணும் அதை தானே..
நான் இந்த பணத்தை உங்ககிட்ட வேலை செஞ்சு
தீர்த்துட்றேன்” என்று எதோ ஒரு லட்சம் ஆகும் என்ற எண்ணத்தில் அவள் சொல்ல..
வகையாக
மாட்டியவளை வைத்து செய்ய திட்டம் தீட்டினான் நாம ஸ்விக்கி பாய்..(கண்ணா லட்டு
தின்ன ஆசையா?)
அவளாக இந்த திட்டத்தை அவனுக்கு எடுத்து
கொடுத்துவிட்டு அமைதியாக மிக பாவமாக அவனை பார்த்துக்கொண்டே நிற்க.. சற்று நேரம்
யோசனை செய்வதை போல பாவ்லா காண்பித்துவிட்டு பிறகு “ம்ம் எனக்கு இப்போ வேலைக்கு ஆள்
எல்லாம் தேவை படவே இல்லையே ஆனாலும் நீ எனக்கு பட்ட கடனை அடைக்க வேற வழி எதுவும்
இல்லை.. சோ எதோ போனா போகுதேன்னு உன்னை வேலைக்கு எடுத்துக்கிறேன்” என்றவன் அவளிடம்
தன் மகிழ்ச்சி தெரிய கூடாது என்று கண்களில் தன் குளிர் கண்ணாடியை அணிந்து
கொண்டான்.
அவளோ “அப்போ நான் போகட்டா எப்போ வேலைக்கு
வரணும்னு சொல்லு ஓகே வா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து டிமிக்கி கொடுத்து செல்ல
பார்க்க..
அவள் தோல் வழியாக ஒற்றை பக்கமாக வழிய விட்டு
இருந்த பையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் “எங்க ஓட பாக்குற உன்னோட பேர் வீடு
அட்ரெஸ் எதுவுமே தெரியாம உன்னை விட்டு போக நான் என்ன லூசா? ஒழுங்கா பேர் ஊரு
அட்ரெஸ் எல்லாத்தையும் கொடுத்துட்டு போ” என்றவன்
அவள் சொல்லும் முன்பு அவள் கையில் இருந்த
கல்லூரி கார்டை பிடிங்கிகொண்டான்..
அவளோ “நான் தான் சொல்லுவேனே அதை கொடு ப்ளீஸ் அது
இல்லைனா காலேஜ்க்கு உள்ள விடமாட்டாங்க ப்ளீஸ்” என்று உண்மையை விளம்ப..
சுகியோ “ஆஹா அப்போ ஒகே இனிமே தினமும் காலையில்
என்னோட வீட்டுக்கு வந்து எனக்கு தேவையான எல்லா வேலையும் ஒன்பது மணி வரைக்கும்
செய்யணும் அதுக்கு பிறகு இதை கொடுப்பேன்.. நீ காலேஜ் போகலாம்..
ஈவ்னிங் வந்து என்கிட்ட திரும்ப கொடுத்துடணும்..
ஒகே வா” என்று சொல்லிவிட்டு தன் சட்டை பையில் இருந்த விசிட்டிங் கார்டை எடுத்து
அவள் கையில் திணித்துவிட்டு.. அவள் சுதாரிக்கும் முன்பு அவளை இழுத்து அவளது
இதழ்களை கவ்விகொண்டான் அந்த காதல் ரசவாதி!
அவள் அதிர்ந்து விழிக்க “இதுக்கு அஞ்சு ரூபா
கழிஞ்சு போச்சு” என்றுவிட்டு அவளை விட்டு விலகி “ஹ்ம்ம் ரொம்ப சாப்ட் லிப்ஸ்
அதுக்கு அஞ்சு ரூபாய் போனஸ்” என்றுவிட்டு தன் தொலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்து
வண்டியை எடுத்து செல்ல சொன்னவன் தனக்கான நோட்ஸ் வாங்க கல்லூரிக்குள் நுழைந்தான்.
போகும் அவனையே அதிர்ச்சியுடன் பார்த்து நின்றாள்
தர்ஷு.. காதல் ரசவாதியிடம் சிக்கிய இந்த தீவிரவாதி!
