காதல் ரசவாதி நீ
சுகிர்தன் அலுவலக மேசையில் தலை வைத்து
படுத்திருந்தான். கடந்த பத்து நாளில் அவனது வேலைகள் ரெட்டிப்பாக இருப்பது மட்டும்
இல்லாமல் நிறைய பிரச்சனைகள் வந்து சேர நாள் முழுவதும் அலுவலக வேலைகள் இழுத்து
கொண்டிருக்க.. கடைசியாக தர்ஷினியை சந்தித்து வந்தது நினைவுக்கு வந்து அவனை புன்னகை
கொள்ள செய்தது.
பிறகு புது உற்ச்சாகம் பிறக்க எழுந்து
அமர்ந்தவன் “தர்ஷு பேபி உனக்கு என் ஞாபகமே வரலையா? இவ்வளவு நாள்ல ஹ்ம்ம்? சோ யு
வான்ட் டு ப்ளே தி கேம் அகைன்ச்ட் மீ ரைட்? ஒகே இன்னும் போர் டேஸ் பாரு இந்த
சுகியோட ரசவாதத்தை..” என்று சொல்லிக்கொண்டே தனது வேலையை காண்பிக்க கிளம்பினான்.
அங்கு வேலைகள் அத்தனையும் தனது லாப்டாபில்
காப்பி செய்து எடுத்துக்கொண்டவன் ராமமூர்த்தியின் வீட்டுக்கு கிளம்பினான். அவர்கள்
வீட்டில் இருந்துகொண்டு சில வேலைகளை செய்ய வேண்டிய விஷயத்தை செய்ய முடியும். அங்கு போனாள் தானே
எல்லாவற்றையும் செய்ய முடியும்..கிளம்பிவிட்டான் தனது காதல் தேவதையை தேடி!
சுகி கிளம்பியதும் அங்கு ராமமூர்த்திக்கு தகவல்
உடனே அனுப்பப்பட அவரோ “அது என்ன டே இதுவரைக்கும் அமைதியா இருந்தவன் இப்போ மட்டும்
துள்ளிக்கிட்டு கிளம்பி இருக்கான், எங்க போக போறான்? அவனை விசாரிச்சு பார்த்தியா?
எங்க போறான்னு?” என்று அந்த ஆளை கேட்க..
அவரோ “அதெல்லாம் சொல்லவே இல்லை சார் இனிமே இந்த
ப்ராஜெக்ட் வேலை எல்லாம் நான் வேறு இடத்தில இருந்து செய்ய போறேன்னு சொல்லிட்டு
கிளம்பிட்டு இருக்கார் சார், இதுக்கு மேலும் எதாவது கேள்வி கேட்டேன்னா அவருக்கு
சந்தேகம் வந்துடும் சார் அது தான் நான் இதுக்கு மேலும் கேட்கவே இல்லை” என்று பதில்
சொன்னான்.
ராமூர்தியோ “ஒ அப்போ இதில் எதோ திட்டம் இருக்கு,
அதுதான் அந்த பய இதெல்லாம் செஞ்சுட்டு இருக்கான்..” என்று சொல்லி முடிக்கும்
முன்பே ராமச்சந்திரன் வீட்டுக்குள் நுழைந்தார் அபயா, தனது தாய் தந்தை என்று..
இராமமூர்த்தி “அண்ணே அட வாங்க வாங்க, நீங்க கடையை விட்டுட்டு வர மாடீங்க..
கல்யாணத்துக்கு தான் வருவீங்கன்னு நினைச்சேன்.. இப்போவே வந்துடீங்க” என்று
வாயெல்லாம் பல்லாக அவரை வரவேற்றார். மனதுக்குள் வஞ்சத்தை வைத்துக்கொண்டு தான்..
ராமச்சந்திரனோ “அது என்னடா மூர்த்தி அப்படி சொல்லிட்ட..
இது நம்ம வீட்டு கல்யாணம் டா, நம்ம பையன் கல்யாணம், நான் இல்லாமல் எப்படி நீ
மட்டும் தனியா சமாளிப்ப.. இப்போ வரைக்கும் இங்க வராமல் இருப்பதே எனக்கு கவலையா
இருந்தது, அதுதான் கடையை அங்க இருக்கிற ஆட்களை வெச்சு பார்த்துக்க சொல்லிட்டு உனக்கு
கொஞ்சம் துணையா இருக்கலாம்ன்னு வந்தேன் தம்பி.. சரி இந்தா” என்று ஒரு பையை
ராமமூர்த்தியின் கையில் கொடுக்க..
அவரோ என்ன என்பது போல் பார்த்துவிட்டு அதனை
பிரித்து பார்க்க உள்ளே முழுவதும் பண கட்டுக்கள் அதனை கண்டு கண்களை அகல விரித்தவர்
“அண்ணே இது” என்று எதுவோ கேட்க வந்தார். ராமச்சந்திரனோ “டேய் இது உனக்கு சேர
வேண்டியது தான் நம்ம துணி கடையில் நான் உனக்கும் முப்பது சதம் போட்டு தான் வெச்சு
இருக்கேன்.. நீ அரசியல் அது இதுன்னு போய் பணத்தை எல்லாம் விட்டுட்டு எப்போவாவது
பிரச்சனையை இழுத்து விட்டுட்டா என்ன செய்ய.. அதுதான்எனக்கு சுகிர்தனுக்கு முன்னாடி
நீ தான் டா முதல் பையன்..” என்று சொல்ல.
இதுவரை அண்ணன் மீது பொறாமை எண்ணம் கொண்டு இருந்த
இராமமூர்த்தி அதிர்ந்து போய்விட்டார். அவருக்கு வார்த்தைகளே வரவில்லை “அது அது
அண்ணே அந்த கடை எல்லாம் உங்க உழைப்பு நான் அதில் ஒண்ணுமே செய்யவே இல்லையே நீங்க
எப்பி இதை எல்லாம் எனக்காக, சுகி சுகிர்தன் ஒன்னும் சொல்ல மாட்டானா?” என்று அண்ணன்
மகனுக்கு தெரியாமல் இதை எல்லாம் செய்கிறானோ என்னும் எண்ணத்தில் கேட்க..
ராமச்சந்திரன் “டேய் அவனுக்கு எல்லாமே தெரியும்
உனக்கு அப்பபோ கொடுக்கும் பணம் எல்லாம் உன்னோடது தான், அவன் தான் உன் பங்குகளை
எல்லாம் பார்த்துக்கிறான், ரெத்னா கொஞ்சம் வளர்ந்ததும் அவன்கிட்ட கொடுத்துட்டு
எனக்கு பிறகு ரெத்னாவை கொண்டு வரணும் அப்டின்னு தான் அவனோட எண்ணம்” என்று சொல்ல..
ராமமூர்த்திக்கு தொண்டைக்குள் முள் ஒன்று
சிக்கிய உணர்வு, இதுநாள் வரையில் அண்ணனையும் அண்ணன் மகனையும் புரிந்து கொள்ளாமல்
பகைத்து கொண்டு அவர்களை இப்படி எதிரியாக நினைத்தோமே என்று மனதுக்குள் குற்ற உணர்வு
குடைய ஆரம்பித்தது. ஆனால் அதை எல்லாம் எதையும் நினைக்காத சந்திரனோ “டேய் உனக்கு
என் மேல ரொம்ப கோபம் இருக்குனு எனக்கு தெரியும் நீ எதுவோ என்னை பற்றி தவறான அபிப்ராயம்
வெச்சு இருக்கேன்னும் எனக்கு தெரியும்..
எது எப்படி இருந்தாலும் நீ என்னோட தம்பி டா
அதனால தான் நான் உன்னை எதையும் நினைக்கவே இல்லை..” என்று சொல்லி தனது நல்ல உள்ளதை
காண்பிக்க.. இராமமூர்த்தி அதன் பிறகு என்ன பேசுவார்.
பாய்ந்து சென்று அண்ணனை கட்டிகொண்டவர் அதன்
பிறகு எதையும் பேசவில்லை. ரெத்னா மேலே இருந்து இரங்கி வந்தவன் தனது தந்தையும்
பெரியப்பாவும் கட்டி பிடித்தபடி நிற்பதை கவனித்து கீழே வந்து “வாங்க” என்று
அழைத்துவிட்டு வேடிக்கை பார்த்து நின்றான்.
அபயாவோ அவனிடம் ஒரு பெரிய துணிக்கடை பார்சலை
கொடுத்து “இந்தா டா உனக்கு தான், வெளியூர்ல டிசைன் பண்ணி வந்தது.. உனக்கு ரொம்ப
நல்லா இருக்கும்.. அண்ணன் தான் வரவழைத்து கொடுத்தான்.” என்றவர் அதன் பிறகு ஒரு நகை
பெட்டியை எடுத்து அதில் இருந்து கைக்காப்பு செயின் மோதிரம் என்று அவனுக்கு
எல்லாவற்றையும் போட்டு விட்டார்.
அவனோ அதனை எல்லாம் பார்த்துவிட்டு “எதுக்கு
இதெல்லாம்” என்று கேட்க.. அவனை செல்லமாக தலையில் தட்டிய அபயா “டேய் கல்யாண
மாப்பிள்ளை இதை எல்லாம் போட்டு நின்னா தான் டா அழகா இருக்கும்” என்று அவனை கன்னம்
வழித்து கொஞ்சினார். அவனோ அவர்களிடம் பாசம் கொண்டவன் தானே அபயாவை அணைத்துக்கொண்டு
அவனும் நிற்க..
அழகு நிலைய பெண்களின் ஒப்பனைகள் முடித்து வைலெட்
நிறத்தில் அடர்ந்த முத்துக்களும் மின்னும் வெள்ளை நிற கற்கள் கொண்ட வேலைபாடுகளை
உடைய லேஹெங்கா உடையில் வெள்ளை நிறத்திலான கழுத்து நகைகள் என்று அம்சமாக தேவதை போல்
அங்கிருந்து வந்த தர்ஷு அபயாவை பார்த்ததும் வேகமாக அவரிடம் வந்து ஒட்டி
நின்றுகொண்டாள்.
அவரோ மனதுக்குள் சுகிர்தன் மட்டும் கொஞ்சம் பிடி
கொடுத்து அவளை பார்க்க சொல்லி இருந்து இருந்தாள் இவள் தங்கள் மகள் ஆகி இருப்பாளே
என்ற நினைப்பு எழுவதை தவிர்க்க முடியவில்லை.அவளிடம் “என்னடா சந்தோசமா இருக்கியா?”
என்று கேட்க..
அவளும் ம்ம் என்பதை தவிர வேறு எதை சொல்ல
முடியும் அப்படியே பொம்மை போல் நின்றவளை அழைத்து கொண்டு சென்று அமரவைத்து அவளுக்கு
கொண்டு வந்த பரிசுகளையும் நகைகளையும் அணிவித்து விட்டார் அபயாம்பிகை.
அவளோ சுகிர்தனின் குடும்பம் வந்து இருக்கிறது
இன்றாவது அவன் வருவானா? என்று அவனை தான் தேடிக்கொண்டு இருந்தாள். அவளது
எதிர்பார்ப்பை பொய் ஆக்காமல் அங்கு வந்து சேர்ந்தான் சுகிர்தன்.
வந்தவனோ எல்லோரையும் பார்த்துக்கொண்டே
புன்னகையோடு உள்ளே நுழைய முதலில் அவனை கண்டு கடுப்பின் உச்சம் சென்ற ரெத்னாவை
வேகமாக கட்டி பிடித்து “வாழ்த்துக்கள்” என்று சொல்ல..
அவனது வாழ்த்து எதற்கு என்று அவனுக்கு மட்டுமே
தெரியும்.. இருவரும் இணைந்து நிற்பதை கண்டு தர்ஷு கடுமையாக முறைக்க.. ஓரக்கண்ணில்
அவளை பார்த்த சுகி அவளைநோக்கி ஒரு பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்ப.. அவளோ விழி
விரித்து மீண்டும் முறைத்து அங்கிருந்து எழுந்து போக முயற்சி செய்தாள். விடுவானா?
அவளை நோக்கி “என்ன தர்ஷு கண்டுக்கவே மாட்டேன்கிற?
இப்போவே இப்படி என்றால் கல்யாணத்துக்கு பிறகு
ஹ்ம்ம் ஹ்ம்ம்” என்றவனை மற்றவர்கள் சிரிப்புடன் பார்க்க.. அவளுக்கோ உள் அர்த்தம்
கொண்டு பேசும் வார்த்தைகள் தெளிவாய் புரிய.. அவனை மேலும் முறைத்தவள் தானும்
அவனுடன் வம்புக்கு இழுக்கலாம் என்னும் நினைப்பில் “உங்களை கண்டுகிட்டு நான் என்ன
செய்ய போறேன் சுகி மாமா, இனிமே நான் கல்யாணம் செஞ்சுக்க போறவரை தானே நான்
கவனிக்கணும்” என்று சொல்லி கண்களை சுருக்கி அவனை பார்த்து ஏளனம் செய்தாள்.
சுகியோ லேசான வம்பு புன்னகயுடன் “ஒ வாவ் அப்போ
கல்யாணத்துக்கு தயார் ஆகியாச்சு கல்யாண பொண்ணு” என்று கேட்க.. தர்ஷு அவனை மிதப்பாக
பார்த்துக்கொண்டே “ஆமாம் பிறகு இன்னும் மூணு நாளில் கல்யாணத்தை வெச்சுட்டு தயாரா
இருக்காமல் எப்படி?” என்று சரிக்கு சரி கொடுக்க..
அவனோ “ஒ ஒகே ஒகே கல்யாணத்துக்கு தயாரா இருக்கிற
வரைக்கும் ரொம்ப நல்லது தான்..” என்று சொல்லிவிட்டு மனதுக்குள் “கேட் ரெடி பேபி
கல்யாணத்துக்கு” என்று சொல்லிகொண்டான்.
அவன் வந்ததும் தர்ஷு முகம் பொலிவாக ஆனதையும்
அவர்களின் பேச்சுக்களையும் கேட்டுக்கொண்டு நின்ற ரெத்னா அதன் பிறகு தர்ஷுவையும்
அவனையும் பேச விட கூடாது என்று நினைத்துகொண்டு “சரி எல்லாரும் வாங்க சாப்பிடலாம்,
அண்ணா நீங்க என்னோட ரூம் எடுத்துகோங்க உங்களுக்கு வேலை இருக்குமேவாங்க” என்று
சுகிர்தனை வலுகட்டாயமாக அழைத்து சென்று அவனது அறைக்குள் விட்டு அதன் பிறகு தர்ஷுவை
சுற்றிலும் எப்பொழுதும் யாராவது இருக்கும் படியாக பார்த்து வைத்து கொண்டான்.
தனது பொம்மை வேறு யாரேனும் எடுத்து கொண்டு
சென்று விடுவார்களோ என்னும் பயமே அவனது.. ஆனால் சுகிர்தனோ எந்த வித செயலையும்
செய்யவே இல்லை தனது பிடிவாதத்தினால் தர்ஷு தன்னிடம் காதலை முதலில் சொன்னால் தான்
எதையும் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்தான். தர்ஷு அவன் ஏதாவது செய்தால் தானே அவனது
காதலை உணர முடியும், அவளும் தவித்தாள்.
அடுத்த நாள் காலை சுகி காலையில் எழுந்ததில்
இருந்து வேலையை கட்டிக்கொண்டு அமர்ந்திருக்க.. அவனது அறைக்கு வந்த ரெத்னா
லேப்டாப்பில் தலையை நுழைத்து கொண்டிருக்கும் சுகியை நோக்கி “அண்ணா” என்று
அழைத்தான். சுகியோ “என்ன டா ரெண் என்ன வேணும் கேளு” என்க.
ரெண் மெதுவாக “அண்ணா என்னோட பிரிண்ட்ஸ் ஒரு மூணு
பேர் இன்னைக்கு தான் அமெரிக்காவில் இருந்து கிளம்பி இங்க கல்யாணத்துக்கு வராங்க,
அவங்க நாளைக்கு நைட் தான் இங்க ரீச் ஆவாங்க, நீங்க அவங்களை அழைச்சுட்டு வர
முடியுமா?” என்று கேட்க.
எத்தனை ஆட்கள் வீட்டில் இருந்தும் தன்னை அங்கு
போக சொல்கிறான் என்றால் இது சரி இல்லையே என்று நினைத்த சுகிர்தனும் “டேய் நான்
போகனுமா?” என்று கேட்க.. ரெண் உறுதியாக “அண்ணா அவனுங்க எல்லாம் பெரிய இடத்து பசங்க
அண்ட் இங்க நம்ம தமிழ் அவனுங்களுக்கு தெரியாது, நீங்க போனால் கண்டிப்பா அவங்க
பத்திரமா இங்க வந்துட்வாங்கன்னு நம்பலாம் அதனால் தான் அண்ணா ப்ளீஸ் முடியாதுன்னு
மட்டும் சொல்லிடாதீங்க” என்று லேசான கெஞ்சுதல் கலந்து கேட்டான்.
சுகியோ “அது சரி நானே போயிட்டு வந்துடறேன்
அதுக்கு எதுக்காக இப்படி கெஞ்சி கேட்கிற? நீ கவலை படாதே நான் போயிட்டு வந்துடறேன்
ஒகே” என்றான்.
அவனை போக சொல்லி சென்ற ரென்னோ மனதுக்குள் “ம்ம்
நீ போவ ஆனால் வரும்போது உனக்கு உண்டான பேர் புகழ், உன்னோட காதலி எல்லாமே எனக்கு
உண்டானது ஆகிடும்.. என்னவோ தியாகி போல நடிக்கிறியா? உனக்கு இருக்குடா” என்று
மனதுக்குள் பேசிக்கொண்டே சென்றான்.
சுகி தனது வேலைகளை செய்துவிட்டு அங்கிருந்து
ஏர்போர்ட் செல்ல கிளம்பிகொண்டிருக்க அபயா அங்கு வந்து “தம்பி நீங்க எங்க இந்நேரம்
கிளம்பி போறீங்க? கல்யாணம் நாளைக்கு என்ன இப்படி?” என்று கேட்டதற்கு சுகிர்தனோ
“ம்மா நான் வந்துடுவேன் கல்யாண நேரத்துக்கு நீங்க எதையும் நினைத்து கவலை படாதீங்க”
என்று சம்பந்தம் இல்லாமல் சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல..
அபயாவோ இவன் என்ன சொலிட்டு போறான் என்று கலங்கி
கொண்டு இருந்தார். அவர் மனதுக்கு எதுவோ சரி இல்லாமல் பட்டுக்கொண்டே இருந்தது.
சுகிர்தன் அங்கிருந்து கிளம்பி போனவன் அதற்கு
பிறகு ரெண்க்கு அழைத்து பேசினான்..”டேய் நான் கிளம்பிட்டேன் அங்க இருக்கவங்க யாரோட
நம்பர் இருந்தா கொடு இல்லைனா பேர் போட்டோ என்று கேட்க.. அவனும் சில தகவல்களை
அனுப்பி வைத்தான்.
ஆபத்து தான் என்று தெரிந்துமே அதை தேடி போவேன்
என்று பிடிவாதமாக கிளம்பினான் சுகி. வேறு எதுவும் பெரிய அளவுக்கு தன்னை எதிர்த்து
செய்ய ரெத்னாவுக்கு தைரியம் இருக்காது என்னும் நம்பிக்கையில் அவன் இருக்க.. அவன்
எதிர்பார்க்காத ஒரு செயலை செய்து வைத்திருந்தான் ரெத்னா.
சுகிர்தன் எங்கோ கிளம்புகிறான் என்று காமாட்சி
வாயிலாக கேட்ட தர்ஷு கூட அவனை தடுக்க முயன்றாள். சுகியின் அறைக்கு வந்து நின்றாள்
அவள் அவனோ தர்ஷுவை கண்டுகொள்ளாமல் தான் போக்கில் கிளம்பிக்கொண்டு இருக்க.. அவளோ
அவனது கவனத்தை தனது பக்கம் திருப்ப முயன்றுகொண்டு இருந்தாள்.
அவளாகவே “சுகி” என்று மெல்லிய குரலில் அழைக்க..
அவனுக்கு எதுவோ தோன்றியது போல அவளை காணாமல் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக்கொண்டு
தனது உடையை சரி செய்து கொண்டிருந்தான். அவளோ அவன் பக்கம் வந்து முகத்துக்கு நேரே
நின்று “சுகி உங்களை தான் கூப்பிடறேன் ப்ளீஸ் நான் சொல்ல வரத்தை கேளுங்க.. இந்த
ஒரு முறை நீங்க அங்க எங்கேயும் போகவேண்டாம்” என்று கண்கலங்க சொன்னாள்.
அவனோ பொருள் விளங்காத பார்வையில் அவளை
பார்த்துவிட்டு “அக்கறையா?” என்றான். அவளோ “பின்ன அக்கறை இல்லாமல் தான்
பைத்தியகாரி மாதிரி உங்ககிட்ட வந்து சொல்லிக்கிட்டு இருக்கேனா? இப்போவும் என்
முகத்தை கூட பார்க்கவே மாட்டேன்கிறீங்க.. உங்க கிட்ட வந்து கெஞ்சிட்டு
நிக்கிறேன்..” என்று கத்தினாள்.
அவனோ சுற்றிலும் அங்கு கல்யாண வேலையாக அலைந்து
கொண்டிருக்கும் உறவுகளை ஒரு முறை லேசாக திரும்ப பார்த்தவன் கதவை லேசாக
ஒருக்களித்து வைத்துவிட்டு “ஹேய் சத்தமா பேசாத எல்லோரும் கேட்டா ஏதாவது
நினைப்பாங்க” என்று சொல்லி அவளை கடிந்தான்.
அவளோ ஏற்கனவே இந்த திருமணத்தை வெறுப்பவள் அவனை
பார்த்து கோபமாக “அதெல்லாம் முடியாது நான் அப்படி தான் கத்துவேன் இந்த கல்யாணம்
எனக்கு வேண்டாம்.. எனக்கு பிடிக்கல.. இந்த கல்யாணத்தை நிறுத்துங்கன்னு
கத்துவேன்..அப்படி தான் கத்துவேன்” என்று அவனது காதுக்கு அருகில் சென்று
கத்தினாள்.
அவனோ அவள் எப்போது கத்த ஆரம்பித்தாளோ அப்பொழுதே
அந்த கதவை நன்றாக யாரும் கவனிக்கும் முன்பு அடித்தவன் அதனை தாளிட்டு அவளுக்கு முன்
கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு அவளது முகத்தையே பார்த்துகொண்டிருந்தான். சத்தம்
போட்டு கத்த வேண்டும் என்பதால் கண்களை இறுக்கமாக மூடி இருந்த தர்ஷு கத்தி முடித்து
சுகிர்தன் எதையுமே செய்யவில்லையே இந்நேரம் கோபத்தில் ஒரு அடியாவது அடித்து இருக்க
வேண்டுமே? ஒன்றையுமே செய்யவில்லையே” என்று மனதுக்குள் நினைத்தபடி ஒற்றை கண்ணை
மட்டும் திறந்து பார்க்க..
அவனோ அதற்கென காத்துகொண்டு இருந்தவன் போல அவளை
தோள்களை பிடித்து லேசாக பின்னே தள்ளிவிட, கீழே விழுவதை நினைத்து அவனையும் சேர்த்தே
பிடித்து இழுக்க..
அவனோ அவளுக்கு பின் இருந்த கட்டிலின் மீது அவளை
தள்ளி விட்டு இருந்தான். பொத்தென்று கட்டிலில் விழுந்தவள் அவனுடன் சேர்ந்தே விழ..
எக்குத்தப்பாய் மிக சரியாய் அவள் மீதே படர்ந்தவனாக விழுந்து கொண்ட சுகிர்தனோ
எழுந்து கொள்ளும் மனதுடன் இல்லவே இல்லை.
அவளோ அவனது பாரம் முழுவதும் தன் மீது இருக்க,
வழக்கம் போல அரண்டு போய் “ஹையோ எழுந்துக்கோ சுகி” என்று அவனுக்கு கீழே கிடக்கும்
தனது நிலையில் கூச்சம் கொண்டு நொந்து கொண்டவள் அந்த நிலையில் அசையவும் முடியாமல்
அவனிடமே இறைஞ்சும் பார்வை பார்த்தபடி “ப்ளீஸ் சுகி இப்படி பண்ணாதீங்க யாராவது
பார்த்தால் தப்பா நினைப்பாங்க” என்று கெஞ்சினாள்.
அவனோ பிடிவாதக்காரன் “ஒ அப்போ நான் கத்தாதேன்னு
சொன்னேனே அப்போ எல்லோரும் பார்த்தால் பரவாயில்லைன்னு சொன்ன? இப்போவும் எல்லோரும்
பார்த்தால் பரவாயில்லை தானே.. இப்போவும் கத்து எல்லோரும் பார்க்கட்டும்” என்று
அவளது மேனியின் மென்மையில் கிறங்கி போன குரலில் அவன் கூற..
அவளோ கலங்கி போன கண்களுடன் அவனிடம் “இப்போவும்
உங்களை தள்ளிவிடாமல் நான் இருக்கிறேன் அதானால் என்னை தப்பான பொண்ணுன்னு தானே
நினைகிறீங்க? இவளை எது வேணும் என்றாலும் செய்யலாம் இவள் மயங்கி போய்
எல்லாத்துக்கும் ஒத்துழைப்பு தருவான்னு தானே நினைகிறீங்க? சொல்லுங்க” என்று
கேட்டுவிட்டு வேறு பக்கமாக திரும்பிக்கொள்ள.
அவளது கேள்விக்கு பதில் சொல்ல வேண்டாம் என்று
நினைப்பவன் போல அவள் மீது இருந்து அற்று தள்ளி படுத்தவன் அவள் இடையில் கைகொடுத்து
தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு “உனக்கு பதில் இப்போ சொல்ல முடியாது, உன்னோட
கல்யாணம் முடிஞ்சதும் உனக்கான பதில் கிடைக்கும்” என்று சொல்ல..
அவளோ அவனை தன் மீது சாய்ந்ததில் இருந்து
தள்ளிவிட்டு “ஒ இப்போ கூட உனக்கு பதில் சொல்ல முடியாது இல்லையா? இனிமே உன்னோட
தம்பிக்கு பொண்டாட்டியா ஆனதுக்கு பிறகு இப்படி என்கூட இருந்துகிட்டு தான் பதில்
சொல்லுவே இல்லை?” என்று பேசி முடிக்கும் முன்பு அவளது கன்னம் பற்றி எரிய துவங்க..
அவன் அவளை அறைந்து இருந்தான்.
அவனோ கோபத்தில் அவளை அடித்துவிட்டு பிறகு
அதிர்ந்து இருந்தவளை பார்த்து “பார்த்து பேசு தர்ஷு” என்று சொல்லிவிட்டு
எழுந்துகொள்ள.. அவளும் வேகமாக எழுந்து அமர்ந்து அவனை முறைத்து கொண்டே “இனி என்ன
பார்த்து பேசுவது? அதுதான் உன்னோட நோக்கம் என்ன அப்டின்னு தெளிவா தெரிஞ்சு போச்சே
உனக்கு என்னை யூஸ் பண்ணிக்கணும் அதுக்காக என்னை சுற்றி சுற்றி வந்து இவ்வளவு
எல்லாம் செஞ்ச..
\நான் அதுக்கு கொஞ்சமா ஒத்துழைப்பு கொடுத்தும்
என்னையும் உன்னை போல உடம்புக்கு அலையுறேன்னு நினைப்பு உனக்கு… நான் நான் உன்னை”
என்று அவளது காதலை சொல்ல வந்தவளை கை நீட்டி தடுத்தவன் “ஏனோப் ஈஸ் ஏனோப் நிறுத்து
டி என்னை பற்றிய உன் மேலான என்னத்தை உன் வாயால் கேட்க எனக்கு புல்லரிக்குது..
என்னை பற்றிய உன்னோட நினைப்பு ரொம்ப அழகா இருக்கு தர்ஷு.. சாரி மிஸ் தர்ஷினி
நடேசன்” என்றவன் அதன் பிறகு அவளை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி
சென்றான்.
அவன் போனதும் அங்கேயே ஒருமூச்சு அழுகையில்
கரைந்தவள் அதன் பிறகு ஒரு முறைக்கு பல முறை யோசனைக்கு பிறகு முடிவை எடுத்துவிட்டு
அமைதியாக கல்யாண நேரத்துக்காக காத்திருந்தாள்.
சுகி அங்கு அழைக்க சென்ற நபர்களை
அழைத்துக்கொண்டு காருக்கு வந்து சேர்ந்தவன் அவர்களிடம் “நீங்க நாலு பேரும்
ரெத்னாவுக்கு எப்படி பழக்கம்?” என்று கேட்க. அதில் ஒருவன் “அது சார் நாங்க எல்லாம்
ஆள் இந்தியா டூர் வந்தப்போ ஒரு இடத்தில சந்திச்சோம் இப்போ வரை காண்டாக்ட்ல தான்
இருக்கோம், ரெத்னா சார் எங்களை அவர் கல்யாணத்துக்கு கூப்பிடவும் கண்டிப்பா
கலந்துக்கணும் நினைப்பில் கிளம்பி வந்தோம், எங்க ட்ரிப் கூட அவர் தான் இந்த முறை
முழு செலவும்.. டிக்கெட்ஸ் கூட அவரே எடுத்து அனுப்பி வெச்சுட்டார்.” என்று அவனை
பற்றி பெருமையாக சொல்லவும்..
சுகியோ “ஒ அவர் அவ்ளோ பெரிய ஆள் ஆகிட்டாரா?”
என்று சொல்லி அவர்களை ஒருமாத்திரு பார்த்து வைக்க.. வந்தவர்களோ திரு திரு
பார்வையுடன் அவனை நேருக்கு நேராக பார்க்காமல் தவிர்த்துக்கொண்டு இருந்தனர்.
அவனும் அவர்களின் விவரங்களை பல மணிநேர பயணத்தில்
விசாரித்துகொண்டே வர.. அவர்களுள் ஒருவன் முதலில் “ஏதாவது ஹோட்டேல் ரூம் ஒன்னு
பாருங்க சார் பிரெஸ் அப் ஆகி போகலாம், எங்களுக்கு ரொம்ப சோர்வா இருக்கு” என்று
கேட்க. விருந்தினராக வருபவர்கள் தாங்களே இப்படி கேட்கவும் சுகி “ஒ மறந்துட்டேன்
இதோ இன்னும் கொஞ்சம் தூரம் தான் போய்டலாம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஒரு
ஹோட்டல் முன்பு வண்டியை நிறுத்தி அவர்களை உள்ளே போக சொன்னான்.
அவர்களோ “சார் நீங்க வரலையா? வாங்க கொஞ்சம்
சாப்பிட்டுட்டு இல்லை ஜூஸ் குடிச்சுட்டு போகலாம்” என்று அன்பாக கூப்பிட, சுகிர்தன்
“ஒகே ஒரு அஞ்சு நிமிஷம் நான் முக்கியமா ஒரு கால் பேச வேண்டி இருக்கு நாம பேசலாம்
இதோ வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு அங்கு தனது போனில் யாருக்கோ அலைப்பு
விடுத்தான்.
அவர்களும் அவனை விட்டுவிட்டு உள்ளே சென்று உணவை
எடுத்துகொள்ள.. சிறிது நேரம் கழிந்து அங்கு அவர்களுடன் சென்று சேர்ந்து கொண்ட சுகி
அவர்களுடன் உணவை முடித்துக்கொண்டு மீண்டும் கிளம்பினான்.
கிளம்பிய சிறிது தூரத்தில் அவனுக்கு எதுவோ
கண்களை சுழற்றிக்கொண்டு மயக்கம் வருவது போல ஆக.. மிகுந்த சிரமப்பட்டு கண்களை
விழிக்க போராடியவன் முடியாமல் போகவே அவர்களிடம் “நீங்க கொஞ்சம் காரை ஓட்டுங்க
எனக்கு ரொம்ப டயர்ட்யா இருக்கு” என்க.
அவர்களும் “சரிங்க நீங்க பின்னால போய் ரெஸ்ட்
எடுங்க நான் ஓட்டுறேன்” என்று சொல்லி அவனை பின் சீட்டில் படுக்க வைக்க.. அதன் பின்
சுகி மயங்கி போனான். அவர்கள் கிளம்பி இருந்து இரவு நேரமாக ஆகி இருக்க.. மறுநாள்
விடியல் திருமண நாள் என்றிருக்க சுகி மயங்கி போனதும் அவர்கள் சொன்ன இடத்துக்கு
பாதை மாறி போக துவங்கி இருந்தது அவர்கள் சென்றுகொண்டு இருந்த அந்த கார்.
