காதல் ரசவாதி நீ
காதல் ரசவாதி நீ 6
சுகி தர்ஷினிக்கு முன் அவளது வீட்டுக்குள் நுழைய
அங்கோ மீனாட்சியும் நடேசனும் எதையோ தீவிரமாக விவாதித்தபடி அமர்ந்திருந்தனர்.
பின்னே திடுதிடுப்பென்று கல்லூரியில் படிக்கும் தங்கள் மகளுக்கு வரன் வந்தால்
அவர்களும் என்னதான் செய்வார்கள் அவளோ இன்னமும் இந்தவருடமும் அதற்கு
தொடர்ந்தாற்போல் அடுத்த வருடமும் படிப்பை தொடர வேண்டும்..
இதில் வரனாக வந்த ரெத்னசபாபதி இவளுடனே படிப்பை
தொடர்ந்து கொண்டு இருக்கிறானே அவனாவது வேலை அல்லது ஏதாவது தொழில்
செய்துகொண்டிருந்தாலும் இதை பற்றி யோசிக்கலாம் இப்பொழுதோ கொடுக்க முடியாது என்று
லேசு பாசாக நடேசன் சொல்ல முயல..
ரெண்னின் தந்தை ராமமூர்த்தியோ பெண்ணை கொடுக்க
சம்மதமா என்று கேட்காமல் பெண்ணை கொடுக்க வேண்டும் என்று மிரட்டி விட்டு சென்றது
போல தெரிய மீனாட்சிக்கும் நடேசனுக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை.
அவர்களை பார்த்து ராமமூர்த்தியோ “அதுங்க என்ற
பையனும் உங்க பொண்ணும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க இந்த விஷயம் எனக்கு
தெரியும் முன்னாடி இங்க என்ற தொண்டர்களுக்கு தெரிஞ்சு இருந்தா உங்க குடும்பமே
இருக்குமோ என்னவோ வேற சாதிக்கார மக்கள் என்ற மகனை வளைச்சு போட்டதுக்கு என்னனவோ ஆகி
இருக்கும்
கழுதைய.. காதல் பண்ணிட்டோம்னு சொல்லுதான் அதான்
பேசி கல்யாணத்தை முடிச்சுடலாம்னு பாத்தேன் நீங்களும் இப்போ இந்த சம்மந்தத்தை
வேணாமுன்னு சொல்ல உங்களுக்கு என்ன பைத்தியமா?” என்று நேராகவே ஒருமாதிரி மிரட்டும்
தொனியில் பேசி சென்றிருக்க அவரோ இதை எப்படி சமாளிப்பது என்று மிகுந்த கவலைக்கு
உள்ளகிவிட்டார்.
இதற்கிடையில் சுகியும் தர்ஷினியும் வீட்டுக்குள்
ஒன்றாக நுழைய மீனாட்சியும் நடேசனும் அவனை பார்த்ததும் சுகி எதற்காக வந்திருக்கிறான் என்று தெரியாமல் “தம்பி
வாங்க வாங்க என்ன இவ்வளவு தூரம் நாம தான் இந்த வருசத்துக்கான எல்லா அக்கௌன்ட்ஸ்
முழுசும் அன்னைக்கே பார்த்தாச்சே அதுல ஏதாவது உங்களுக்கு சந்தேகமா?” என்று தொழில்
முறையாக வந்திருகிரானோ என்று கேட்டு வைத்தார்.
சுகியோ ஒன்றையும் சிரத்தை எடுத்துக்கொள்ளாமல் “இல்லை
சார் இது பாமிலி சம்பந்தமான விஷயம் அதை உங்கக்கிட பேசுவது தான முறை அதான் நேராக
பாக்க வந்துட்டேன்” என்றான்.
அவனுக்கு அருகில் நின்ற தர்ஷினியோ அவனை நினைத்து
“நம்மகிட்ட மட்டும் ஒரே ஒரு வார்த்தை தான் பேசுவது.. இப்போ அப்பாகிட்ட பேச்சு
பட்டிமன்றம் நடக்குது” என்று மனதுக்குள் நினைத்து உதட்டை நெளித்து அளவம்
காண்பித்தாள்.
அவனோ பார்வை முழுவதும் நடேசன் மீது இருந்தாலும்
அவளிடம் லேசாக சாய்ந்து “உன்கிட்ட பேசி என்ன செய்யபோறேன்.. பேச்சா முக்கியம்?”
என்று அவளுக்கு மட்டுமாக கேட்கும் படி சொல்ல.. அவளோ அதிர்ந்து குண்டு பல்பை போல
விழிகள் தெறிக்க விழிக்க..
அதற்குள் நடேசனோ “ஜுனை உங்களுக்கு முன்னாடியே
தெரியுமா தம்பி?” என்று இவர்களின் பேச்சுகளையும் செய்கையையும் பார்த்து வைத்து
கேட்க.. சுகியோ “நல்லா தெரியும் அதான் பார்த்து இருக்கேனே” என்றவன் இரட்டை
அர்த்தம் கொண்ட பேச்சுகளில் முகத்தை எங்காவது கொண்டு போய் முட்டிகொள்ளளாம் என்று
இருந்தது.
அவளோ அவனை பார்த்து “சுகிர்தன் சார் நீங்களும்
என்னோட காலேஜ்ல தானே படிக்கிறீங்க அப்டி தான் தெரியும் இல்லை.. அதை அப்பகிட்ட
சொல்லுங்களேன் அவர் குழப்பம் ஆகுறார் பாருங்களேன்” என்று வாயை சிரித்தமாதிரி
வைத்துகொண்டு வார்த்தைகளை கடித்து துப்ப..
சுகியோ நன்றாக சிரித்து அவளிடம் வம்புக்கு
இழுக்கும் பணியை துவங்க நினைத்து “அதை தான் தர்ஷு சொல்ல வந்தேன் அங்கிள் கேட்கும்
முன்னாடி நமக்குள்ள இருக்குற பழக்கத்தை எப்படி முந்திகிட்டு சொல்லுறது அதான் இப்போ
சொல்றேன்’ என்று இருவருக்கும் நன்றாக பழக்கம்தான் என்ற செய்தியை நடேசனிடம் போட்டு
கொடுக்க..
அவரோ “பசங்களுடன் உனக்கு என்ன பழக்கம்” என்பது
போல் தர்ஷுவை முறைத்து எடுத்து பஸ்பம் செய்யும் பணியை துவங்கினார் ஏற்கனவே தர்ஷினி
மீது காதல் புகார் சற்று நேரத்துக்கு முன் வைக்கப்பட்டு அதன் ஈரம் காய்வதற்கு முன்
இன்னும் ஒரு செய்தி காதில் வந்து விழ.. இன்று மகளை ஒரு வழி ஆக்கும் அளவுக்கான
கோபத்தை வைத்து காத்திருந்தார் நடேசன்.
தர்ஷுவுகோ “இன்றைக்கு தன் நிலைமை அவ்வளவுதான்”
என்று உள்ளுக்குள் கிடுகிடுக்க துவங்க.. சுகியோ அவளது பதற்றம் சுமந்த முகத்தை
பார்த்ததும் நடேசனை நோக்கி “அங்கிள் விளையாட்டை விட்டுடறேன் உங்க பொண்ணை எங்க
வீட்டு மருமகளா கொடுக்க சம்மதமா?” என்று கேட்க..
தர்ஷு ஆவென்று அதிர்ந்து அவனுக்கு பக்கத்தில்
நின்றவள் வேகமாக மீனாட்சி பக்கத்தில் சென்று நிற்க.. அவனோ அவளை பார்த்து சிரித்து “நோ
டென்ஷன் தர்ஷு” என்று அவளுக்கு ஆறுதல் சொல்ல..
நடேசனோ அமர்ந்து இருந்த இருக்கையில் இருந்தே
எழுந்து விட்டார் பின்னே இப்பொழுது தான் ஒருவன் பெண் கேட்க வந்து கலவரம் செய்து
போயிருக்க அடுத்தது இவனா என்று நினைத்தவர் அவனை நோக்கி கையெடுத்து கும்பிட்டு “தம்பி
நாங்க இப்போதைக்கு எங்க பொண்ணுக்கு வரன் பார்க்கிறதை பத்தின யோசனையிலே இல்லை
அதானால் மன்னிச்சுக்கோங்க தம்பி” என்று சொல்லிவிட..
சுகியோ “இப்போ வந்துட்டு போனவங்க என்னோட
குடும்பம் தான் நான் பொண்ணு கேட்பதும் எங்க வீட்டு பையனுக்கு தான் சார்” அவரோ “என்ன
தம்பி இப்போதான் அவங்களும் கேட்டுட்டு போனாங்க நீங்க மறுபடியும் குழப்பம்
செய்றீங்க” என்று அவர் நார்மலாக நாற்காலியில் அமர..
சுகியோ “சார் உங்க பொண்ணை நீங்க எங்க
குடும்பத்து பையனுக்கு கல்யாணம் செஞ்சு கொடுக்க சம்மதமா அத மட்டும் சொல்லுங்க”
என்று கேட்க..நடேசனோ குழம்பி “தம்பி பையன் யாருன்னு சொல்லவே இல்லையே” என்க..
சுகியோ “அதான் சொல்றேனே சார் எங்க குடும்பத்து
பையன் வந்து இருந்தானே உங்க வீட்டுக்கு” என்க.. அவரோ இப்பொழுது சூழலில் சற்று
யோசிக்க நிதானிக்க அவகாசம் தேவை என்று நினைத்த நேரம் இவனும் குழப்ப.
தம்பி “இப்போவே நாங்க ரொம்ப குழப்பத்தில்
இருக்கோம் மறுபடியும் எங்களை குழப்பாதீங்க” என்று அவர் புருவத்தை நீவி விட்டபடி
சொல்ல..
சுகியோ “அங்கிள் நீங்க ஒன்னும் குழம்ப
வேண்டாம்.. இப்போ தர்ஷுவுக்கு வந்து இருக்கறது ஒரேயொரு சம்பந்த்தம்ன்னு நெனச்சிக்கோங்க
அதுவும் எங்க குடும்பத்தில் இருந்துன்னு.. இப்போதைக்கு அதை மட்டும் மனசுல வைங்க,
எந்த டெண்சனும் எடுத்துகாதீங்க என்ன?” என்று அவரிடம் சொல்லிவிட்டு எழுந்துகொண்டு மீனாட்சியை
பார்த்து “என்ன ஆண்ட்டி உங்க வீட்டுக்கு பொண்ணு கேட்க வந்துருக்கேன் ஒரு காபி கூட
கொடுக்க மாட்டேன்கிறீங்க..
பொண்ணு தான் கொடுபீங்கலான்னு தெரியலை அட்லீஸ்ட்
ஒரு கப் காபி?” என்று புன்முறுவலாக சொல்ல.. மீனாட்சியோ “அச்சச்சோ தம்பி சாரி இதோ
வரேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே ஓட போனவரை தடுத்து “அதெல்லாம் விருந்தே சாப்பிட்டு
போறேன் அடுத்த தடவை வரும்போது” என்றவன் எழுந்துகொண்டு போய்வருவதாக சொல்ல..
இவன் வந்ததில் இருந்து என்ன சொல்கிறான் என்றே
புரியாமல் முழித்துகொண்டு இருந்த நடேசனும் அவனுக்கு விடை கொடுத்து போக சொல்லி
விட்டவர் அதன் பின் அவனது பேச்சுக்கு அர்த்தம் என்னவென்று யோசனையிலேயே பொழுதை
கழிக்க..
தர்ஷுவோ அவன் யாருக்கு பெண் கேட்டான் இவனுக்கா
இல்லை ரெண்னுக்கா என்ற குழப்பத்தில் சுற்றி கொண்டிருந்தாள். அவளது உள்மனமோ ஒருவேளை
இவனுக்காக தான் கேட்கிறானா? ஆனால் இதுவரைக்கும் கல்யாணம் என்ற வார்த்தை இவன்
வாயில் இருந்து வரவே இல்லை ஆனால் எப்போது பார்த்தாலும் நொச்சு நொச்சு என்று தன்னுடன்
இளைபவன் தம்பிக்கு தன்னை கல்யாணம் செய்யவா கேட்பான் என்று குழம்பினாள்.
ஆனாலும் அவன் குணம் பற்றிய சந்தேகம் வேறு இவன்
செய்தாலும் செய்வான் என்று தோன்ற குழப்பத்தில் அவனுக்கே அழைப்பு எடுத்துவிட்டாள் அவளது
அழைப்பை ஏற்றதும் சுகி அமைதியாக இருக்க..
தர்ஷினியோ “சுகி இப்போ உன்னோட எண்ணம் தான் என்ன?
என்கிட்ட? கல்யாணம் னு கேக்கிற ஆனால் ரெண்னுகாக கேட்கிற?
அப்பரம் எதுக்கு என்னை முப்பது நாள் பழகனும்னு
கேட்ட? உன்னோட நோக்கம் தான் என்ன? ப்ளீஸ் சொல்லிடேன்” என்க..
சுகியோ “தர்ஷினி நடேசன்” என்று ஒற்றை
வார்த்தையில் மீண்டும் பதிலை சொல்ல.. அவளோ “அது என் பெயர் தான் அதுதான் எனக்கு
தெரியுமே பிறகு என்ன?” என்று பல்லை கடிக்க…
சுகியோ அந்த பக்கம் அட்டகாசமாய் சிரித்து “நோக்கம்”
என்று மட்டும் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தும் விட்டான். இவளோ அவனது
வார்த்தைகளை கோர்வையாக ஆக்கி “நோக்கம் தர்ஷினியா?” ஹையோ ராமா இவன்கிட்ட என்னை
மாட்டி விட்டுட்டியே என்னும் புலம்பலில் தூங்காமல் அன்றைய இரவை கடத்த…
அங்கு சுகியோ தான் உணர்ந்த விஷயத்தின் குதூகலத்தில்
இருந்தான் அதுதான் தர்ஷியுடன் தனக்கு திருமணம் செய்ய தோன்றுகிறது.. அப்போ அவனுக்கு
அவள் மீது காதல் தான் என்று அவனுக்கு தெரிய வந்துவிட..
காரணம்
முழுதாய் கிடைத்துவிட்ட மகிழ்வில் அவன் குதூகலமாய் இருந்தான். இருந்தாலும்
இப்பொழுது தனக்கு அவளை பிடித்து இருப்பது தெரிந்தும் ராமமூர்த்தி எதையோ இடைஞ்சலை
செய்வதாக அவனுக்கு பட்டுவிட..
முதலில் அவர்களின் வழியிலே சென்று அவர்களை மடக்க
கிளம்பிவிட்டான். அதன் படி இப்படி ரெண்னுக்கு தர்ஷியை கேட்டுவிட்டு வந்து
விட்டான்.
அங்கு இதை எல்லாம் அறியாத அவனது காதலியோ
குழப்பத்தில் கிடக்க.. சுகியோ காதல் வானில் பறந்து கொண்டிருக்க..
அபயாவோ மகனுக்கு ஏற்ற பெண்ணாக வரன்களை பார்க்க
துவங்கிவிட்டார். அவன் காதல் தோல்வியில் துவண்டு போகும் முன்பு அவனுக்கு வற்புறுத்தியாவது
திருமணம் செய்து வைத்துவிட நினைத்து அவரும் அஞ்சுகமும் அவரது கணவரும் சேர்ந்து பல
பெண்களின் ஜாதகம் குளம் கோத்திரம் என்று எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து கொண்டு
அமர்ந்திருந்தனர்.
அஞ்சுகமோ பார்க்கும் அத்தனை பெண்களையும்
நிராகரித்து அபயாவை டென்ஷன் செய்ய.. அபயாவோ “என்னத்தை இப்படி ஏதாவது ஒரு
பெண்ணையாவது நல்லா இருக்குனு சொல்றீங்களா?
எல்லாத்தையும் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிகிட்டே
இருக்கீங்களே இப்போ என்னதான் செய்ய?” என்று அங்கலாய்க்க.. அஞ்சுகமோ “அடிபோடி என்
பேரனுக்கு ஏற்ற பொண்ணுனா அது அன்னைக்கு வந்தாளே தர்ஷு அவளை மாதிரி தான் இருக்கணும்”
என்று தன் மனதின் ஆசையை வெளியிட..
அபயவோ பெருமூச்சை வெளியிட்டு “போங்க அத்தை
எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா அதுதான் நானும் விரும்புறேன் ஆனால் அந்த கடவுளுக்கு
என்மேல் இரக்கமே இல்லையே ‘
அதுதான் அந்த பொண்ணு மனசுல வேற ஒரு பையன்
இருக்கானாமே” என்று சோகமாக சொல்லி முடித்தார். அன்று பீச்சில் சுகி நடந்து கொண்ட
விதத்தையும் தர்ஷு அவனை அறைந்ததையும் வைத்து அவர்களுக்குள் எதோ இருப்பதை யூகித்த
அஞ்சுகமோ “அபயா அதெல்லாம் இருக்காதே
அந்த பொண்ணு வேற யாரையும் காதலிக்க வாய்ப்பே
இல்லையே நீ தான் எதையோ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க” என்று பதிலுக்கு சொல்ல..
அபயாவும் “அது போல இருந்தா என்னாகும் சந்தோசம் தான் அத்தை ஆனா நடக்குறது ஒன்னும்
சரியா படல..” என்றவர் அமைதியாய் அமர்ந்துவிட்டார்.
இவர்களின் கூட்டணி பேச்சுவார்த்தையை
பார்த்தபடியே அங்கு வந்த சுகியோ அவர்களுடன் இணைந்து அமர்ந்துகொண்டான். அபயா அவனது
தலையை கோதிவிட்டபடி எதையோ சிந்தனையில் இறங்க.. வழக்கத்துக்கு மாறாக அனைவரும்
சிந்தனையில் இருப்பதை பார்த்து அவனுக்கும் துணுக்குற்று என்னவென்று கேட்க
விழைந்தான்.
“ம்மா என்னாச்சு எல்லோரும் எதோ போல இருக்கீங்க”
என்று கேட்க. அபயாவோ “அதுப்பா உனக்கும் பொண்ணு பார்க்கணும் அதுதான் யோசனை” என்று
சொல்ல..
சுகியோ சற்று யோசனைக்கு பின் இதுவும் தம்பியின்
வேலையாக இருக்குமோ என்ற யோசனையுடன் “இப்போ என்னமா அவசரம் அதெல்லாம் கொஞ்ச நாள்
போகட்டும் பார்த்துக்கலாம்” என்று சிரிக்க..
அபயாவும் அஞ்சுகமும் ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொண்டே “அது இல்லை ரெத்னாவுக்கு பொண்ணு பார்த்து முடிசுருக்காங்கலாம்
காமாட்சி சொன்னா.. அவன் உனக்கு பின்ன பிறந்தவன் அவனுக்கே முடிகிறாங்க..
உனக்கும் வயசு ஆகிட்டே போகுதே தம்பி ஒரு பொண்ணை
பார்த்து முடிச்சுட்டா எங்க கடமை முடியும்” என்று மெதுவாக சொல்ல.. சுகியின் முகம்
கோபத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பது அவர்களின் கண்களுக்கு தெளிவாக தெரிய..
பேச்சின் சுருதியும் மெல்ல மெல்ல குறைய
ஆரம்பித்தது. சுகியோ சற்று நேரம் அவர்களையே பார்த்தவன் இது இவன் தானா இல்லை வேறு
யாரோவுமா என்ற சந்தேகம் கிளம்பும் வகையில் சன்னமாக சிரித்தவன் “அம்மா இப்போ என்ன
நம்ம வீட்டுக்கு மருமக வரணும் அவ்ளோதானே..
எனக்கு கல்யாணம் ஆனா என்ன ரெத்னாவுக்கு ஆனால்
என்ன எப்படியோ நம்ம வீட்டுக்கு வரபோறது மருமகள் தானே.. ரொம்ப கவலை படாதீங்க ஒகே வா”
என்று அங்கு இருந்த அஞ்சுகத்தின் கன்னத்தில் கிள்ளி முத்தம் வைத்துவிட்டு எழுந்து
சென்றான்.
இவர்களும் அவனது பதிலில் குழம்பி நிற்க
எல்லோரையும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டவன் தான் மட்டும் காதலில் திளைத்து
கொண்டிருந்தான். அன்று மாலை ஆனதும் தர்ஷுவுக்கு அழைத்தவன் ‘பேபி இன்னிக்கி டே ஒன்
மா எங்கே மீட் பண்லாம்?” என்று குதூகலாமாக கேட்க..
அவளோ இவனிடம் என்ன சொல்வது “உங்க தம்பிக்கு பேசின
பொண்ணு நான் உங்களுக்கே சேம்மா இல்லையா?’ என்று கோபமாக கேட்டு பதிலை வரவழைக்க
பார்க்க.
சுகியா அசருவான் “அதெல்லாம் ஒகே தான் அவனுக்கு
பேசின பொண்ணு அவனோட ஜூன்.. இப்போ நான் கூப்டறது தர்ஷினியை” என்க..
அவளோ மீண்டும் குழம்பி “ரெண்டுமே ஒண்ணுதான்..”
என்று நறநறக்க அவனோ கூலாக “வேற வேற” என்று சொல்லி அழைப்பை துண்டிக்க.. தர்ஷுவோ “நான்
வரமாட்டேன்” என்று குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு வீட்டுக்கு கிளம்ப போக..
அவளை இடிப்பது போல உரசாமல் வந்து நின்றது
சுகிர்தனின் கார் அவளோ அதனை தாண்டி போக பார்க்க.. அவளை நோக்கி ஹாரனை அழுத்தி அங்கு
நின்ற அத்தனை பேரின் கவனத்தையும் அவள் மீதே படும்படி வேலையை ஆரம்பித்தான்.
அவளோ சுற்றும் முற்றும் பார்த்தபடி நிறுத்த
சொல்லி அவனிடம் கெஞ்ச.. அவளது வார்த்தைகள் காதில் விலாததைபோல் அவனோ ஹாரனை
தொடர்ந்து அழுந்த பிடித்தபடி அடம் செய்தான்.
சுற்றிலும் இருந்த மக்கள் எரிச்சல் அடைந்து
அவனது காரை சுற்றிலும் குழுமி நின்று சத்தத்தை நிறுத்த சொல்லி கெஞ்ச சுகியோ
பிடிவாதத்தை கொஞ்சமும் விட்டான் இல்லை..
தர்ஷுவோ சுற்றிலும் பார்த்தபடி காலை தரையில்
உதைத்துக்கொண்டே அவனது காரை நோக்கி போனவள் கதவை திறந்து உர்ரென்ற முகத்துடன் உள்ளே
ஏறி அமர.. அப்படியே சத்தத்தை நிறுத்தியவன் காரை எடுத்தான்.
அனைவரும் அடப்பாவி இதுக்கு தான் இத்தனை அக்கபோறா
என்று தங்களுக்குள் திட்டியபடி களைந்து செல்ல அவளோ ஜன்னல் புறமாக திரும்பி
வேடிக்கை பார்த்தபடியே சுகியை தவிர்க்கவும் அவனும் நீண்ட நேரமாக அவளையே வைத்த கண்
வாங்காமல் பார்த்தபடியே வாகனைத்தை செலுத்தினான்.
ஒருக்கட்டத்தில் அவளாகவே அவன் புறம் திரும்புபடியாக
ஆனதும் வெற்றிகளிப்போடு “அப்பாடி இப்போதான் தரிசனம் கிடைக்குது” என்று சொல்லி
விசில் அடிக்க..
தர்ஷினியோ அவனை முறைக்க.. அதை எல்லாம்
கண்டுகொள்ளாமல் அவளிடம் அவன் கேட்ட கேள்வியில் திகைப்பது அவளது முறை ஆனது.. அவளை
ஏற இறங்க பார்த்தவன் “ஏன் அந்த டிரஸ் போடல” என்றான்.
தர்ஷுவோ தான் போட்டிருந்த ஷால் மற்றும் உடையை
லேசாக பதற்றமாக சரி செய்துகொண்டே அவனை முறைத்து “எந்த.. எந்த டிரஸ்?” என்க..
சுகியோ உல்லாசமாக “வீட்ல போட்ருந்த அந்த டிரஸ்”
என்றான் அவளது வீட்டுக்கு முதல் முறை போனபோது போட்டிருந்த உடையை.. அவளுக்கும் அது
புரிந்தது என்பத்து போல் உச்சுகொட்டியவள் “பிடிக்கலை” என்று ஒருவார்த்தையில்
சொல்ல..
சுகியோ “எனக்கு பிடிசுருந்ததே” என்று
கண்ணடிக்க.. தர்ஷுவால் அவனை முறைக்க மட்டுமே முடிந்தது..
டிஸ்க்ளைமர்:
சுகிர்தனின் குணம் பற்றிய கணிப்புகள் உங்களுக்கு
எவ்வாறு இருக்கிறது என்று தெரியவில்லை ஆனால் அவன் பிடிவாத குணம் கொண்டவன்.. தர்ஷு
வேண்டாம் என்று சொன்னாலும் அவளை விடபோவது இல்லை.. இதுபோன்ற குணம் உடைய ஒரு
நாயகனுடன் காதல் என்பது சற்று கடினம்தான் அப்படி இருந்தால் எனவெல்லாம் நடக்கும்
என்ற கற்பனை தான் ‘காதல் ரசவாதி நீ”..
அது எப்படி தர்ஷினியின் சம்மதம் இல்லாமல் அவளை
தொட்டு தொடர்ந்து தொல்லை செய்வது என்றெல்லாம் பொங்கல் வைக்கும் அன்பு நெஞ்சத்துக்கு..
நான் இதை கற்பனையாக தான் எழுதுகிறேன்.. மேலும் தர்ஷினியின் பக்கம் சில இடங்களில்
அவனை தவிர்க்க வாய்புகள் இருந்து அவள் அதை செய்யவில்லை..
தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை..
பேசாம தர்ஷுவை சுகி மேல ஒரு போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க வைத்து விடுவோமா செல்லமே?
கூட்டத்தில் பொங்கல் வைக்காமல் தனியே சொன்னதற்கு
நன்றிகள் love யு அன்பே
இப்படிக்கு உங்கள் அன்பு நதி
