காதல் ரசவாதி நீ

This entry is part 6 of 13 in the series காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ

காதல் ரசவாதி நீ 7

சுகி கேட்ட கேள்வியில் அவளது முகம் சிவந்து
எடுத்து “பொறுக்கி’ என்று மீண்டும் உச்சரிக்க.. அவளது வார்த்தைகள் காதில்
விழவில்லை என்பது போல அவளது இதழ்களுக்கு அருகே தன்னுடைய காதுகளை கொண்டு போனவன் “சத்தமா”
என்று சொல்ல..

தர்ஷுவோ “பொறுக்கி பொறுக்கி பொறுக்கி” என்று
உச்ச ஸ்தாதியில் அவன் காதுகளுக்குள் கத்த என்னவோ தேசிய விருது வாங்கியவன் போல
முகத்தில் சிரிப்புடன் “ஆஹான்” என்றான்.

தர்ஷுவோ அவன் சிரிப்புக்கு பின் உள்ள வில்லங்கம்
தெரிந்தவள் அவனிடம் இருந்து இடைவெளி விட்டு லேசாக தள்ளி அமர அவனோ “விவரம் தான்”
என்று மட்டும் சொல்லிவிட்டு காரை எடுத்து எங்கேயோ ஒட்டிக்கொண்டு சென்றான் தர்ஷுவோ “எங்க
போறீங்க வீட்டுக்கு போகணும் தேடுவாங்க” என்று பதற..

சுகியோ “தேடட்டும்” என்று சொல்லிக்கொண்டே நகரின்
மையத்தில் இருக்கும் மிகபெரிய நகை கடை முன் வண்டியை நிறுத்த.. தர்ஷி மட்டும்
இறங்காமல் அந்த கடையை எட்டி பார்த்து வைத்தாள் பின்னே அங்கே இருக்கும் அத்தனை
பொருட்களும் நடுத்தர வர்க்கம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கான மதிப்பில்
இருக்கும்..

அதனை பார்த்தால் பயம் வருவது இயல்பு தானே..
தர்ஷுவோ மெல்ல அவனிடம் “இங்க எதுக்கு வந்துருக்கோம் நீங்க எதாவது வாங்கணும்னா
என்னை எதுக்கு கூப்டு வரீங்க நான் வீட்டுக்கு போகணும் “ என்று அவனிடம் கெஞ்சும்
தொனியில் சொன்னாள்.

சுகியோ “ஜஸ்ட் ஒன்னே ஒன்னு தான் வாங்கணும் அது
மட்டும் வாங்கிட்டு நாம போய்டலாம் எங்க வீட்டுக்கு வர போற மருமகளுக்கு முதன்
முதலில் வாங்கி கொடுக்கிறேன் சோ ஒன்னும் மறுப்பு சொல்லாமல் வந்து செலக்ட் பண்ணு..”
என்று மட்டும் சொல்ல..

தர்ஷுவோ “உங்க வீட்டுக்கா?” என்று கேட்க.. சுகி
லேசாக சிரித்து பின் “ரெண் கூட எங்க வீடு தான் மா அப்படி கூட வெச்சுக்கோ” என்க இதை
சொன்னதும் தர்ஷு முகம் சுருங்க அதனை கவனிக்காதவன் போல ஓரமாக பார்த்தவன்
இன்ஸ்டண்டாக மிகுந்த குஷியாகி அவள் புறம் வந்து கதவை திறந்து விட்டான்..

வெளியில் நின்றுகொண்டு இடைவரை குனிந்து அவளது
கைக்காக தனது கையை நீட்ட அவளோ மலங்க மலங்க விழித்தபடி அவனது கைக்குள் தனது கையை
வைத்தபடி கீழே இறங்கினாள்.

அவள் இறங்கியதும் அவசரமாக அவளை இழுத்துக்கொண்டு
கடைக்குள் சென்றவன் அங்கு நின்ற பணியாளரிடம் காதுக்குள் சென்று எதையோ சொல்ல அவரோ
வாயெல்லாம் பல்லாக அவர்களை அழைத்துக்கொண்டு தான் பிரத்யோகமாக உபயோகிக்கும்
அறைக்குள் அழைத்து சென்றார்.

இவள் அவன் கையை விட முயலும்போதெல்லாம் லேசான
அழுத்தத்துடன் அவளது கையை மீண்டும் தன் கைக்குள் பொத்தி வைத்துகொண்டு அந்த
அறைக்குள் அழைத்து சென்றான்.

அங்கோ அந்த கடையின் மிக முக்கிய வைர நகைகள்
இடம்பெற்று இருக்க..அங்கு அவளை அமர வைத்தவன் மீண்டும் பணியாளிடம் எதையோ எடுத்து வர
சொல்லி அனுப்ப..

அவரும் ஒரு பெட்டியுடன் இவர்களுக்கு அருகே வந்து
சேர்ந்தார். அதனை திறந்து சுகிர்தனுக்கு மட்டுமாக அவர் காண்பிக்க.. அவன் கையில்
அந்த பெட்டியை வாங்கி அவளிடம் காண்பிக்க அந்த பெட்டி நிறைய வைரம் மற்றும் பிளாட்டினம்
மூலம் செய்யப்பட்ட மெட்டி வகைகள் இடம்பெற்று இருந்தது.

தர்ஷுவோ இதை எல்லாமா வைரத்தில் போடுவாங்க என்று
மலைத்து போய் அந்த மெட்டி முழுவதையும் சுவாரசியமாக பார்த்து வைக்க.. சுகியோ அதனுள்
தன் விரல்களை வைத்து ஒவ்வொன்றாக இதுவா அதுவா என்று தேர்ந்து எடுப்பவன் போல
பார்வையை சுழலவிட..

தர்ஷினி மட்டும் அதனை கவனமாக பார்க்காமல்
அங்கும் இங்கும் வேடிக்கை பார்க்க துவங்கினாள். அவளை ஒருமுறை திரும்பி பார்த்தவன் “தேர்ந்தெடு”
என்ற ஒற்றை வார்த்தை மட்டும் சொல்ல..தர்ஷு “யாருக்கு உங்க அம்மாவுக்கா?” என்றாள்.

சுகியோ “எங்க வீட்டு மருமகளுக்கு” என்று மட்டும்
சொல்லி பெட்டியை நீட்ட.. அவளோ “நாங்க இதெல்லாம் பார்க்க கூட மாட்டோம் வேண்டாம்
சுகி..ர்தன் சார்” என்று மரியாதை பன்மைக்கு போக.

சுகியோ சற்று கடுப்புடன் “ ஏன் அவன் தான் வாங்கி
கொடுக்கணுமோ?” என்று கடுப்புடன் கேட்க.. தர்ஷியோ சட்டென்று இதையே ரெத்னா வாங்கி
கொடுத்து இருந்தால் தனக்கு அதை வாங்கிக்கொள்ள மனம் வருமா என்ற யோசனையில் இறங்க..

அவளது உள்மனமோ அவனுக்கு சுகியே பரவாயில்லை..
ரெண் கொடுத்தால் இதை வாங்க மனம் இடம் கொடுக்காது ஆனால் இவனை மறுக்க தோன்றவில்லையே..
இப்போ என்ன செய்ய.. அப்போ சுகி கொடுத்தா வாங்கிப்பேனா?

ஆனால் இவனோ ரெண் கட்டிக்க போற பொண்ணுனு தான் இதை
எல்லாம் செய்வதாக சொலிட்டு இருக்கான் இது என்ன வம்பு” என்று மனமே குழம்பி எடுத்து
யோசனைக்குள் தாவ..

கை மட்டும் அந்த விதவிதமான மெட்டிக்கள் மீது
அலைய.. கண்கள் இலக்கில்லாமல் எங்கேயோ வெறிக்க அமர்ந்து இருந்தாள்.. அதற்குள்
சுகியோ அவளது தோளில் தட்டி நிகழ உலகுக்கு கொண்டு வந்தவன் “எதாவது பிடிச்சு
இருக்கான்னு பாரு இல்லைனா வேற எங்கயாவது பாக்கலாம்” என்று சொல்ல..

தர்ஷுவோ “அதெல்லாம் வேண்டாம்.. எனக்கு இது பிடிக்கல..
வெள்ளி வெள்ளியில வாங்கிக்கலாமா?” என்று கேட்க.. சுகியோ “என் வீட்டுக்கு வர போற
பொண்ணுக்கு நான் வாங்கி தர முதல் பரிசு அது வெள்ளில இருக்க கூடாது இதிலே எதாவது
பிடிச்சா எடு இல்லைனா வேற கடைக்கு போகலாம்” என்று பிடிவாதமாக அமர்ந்து விட்டான்.

தர்ஷுவோ தர்மசங்கட்டமாய் அதனை பார்த்துக்கொண்டே
இருந்தவள் கண்கள் அதில் இருந்த எஸ் மற்றும் டீயும் இணைந்த அமெரிக்க டாலர் போன்ற
மேல் கற்கள் பதிக்கபட்ட மெட்டியை ஆவலுடன் வருட தர்ஷுவோ அது வேண்டாம் இவ்வளவு பணம்
கொடுத்து வாங்கும் அளவுக்கு தான் இல்லை என்ற மனநிலையில் எதையுமே தேர்ந்து
எடுக்காமல் அமர்ந்திருக்க..

அவளுக்கு அருகில் அவசரமாக வந்த சுகியோ அங்கு ஆர்
மற்றும் எஸ் இணைவாக சற்று வித்தியாசமாக இருந்த இன்னொரு மெட்டியை தேர்ந்தெடுத்து “இது
பாரு உன்னோட இனிசியலும் ரெத்னாவோடதும் சேர்ந்து இருக்கு இதையே எடுத்துக்கோ”
என்றவன் தானே அதனை எடுத்து பில்லுக்கு அனுப்பினான்.

தர்ஷுவோ அந்த நகை பெட்டியுடன் போகும் மெட்டியை
பார்த்தபடியே அமர்ந்திருக்க.. சுகி “ஒகே இன்னைக்கு முப்பது நாளில் முதல் நாள்
நல்லபடியா போச்சு சோ அதுக்கு என்னோட ட்ரீட் வா” என்றவன் அந்த கடையின் கீழ்தளத்தில்
இருந்த உணவு அருந்தும் ஹோட்டலுக்கு அவளை அழைத்து இல்லை இழுத்துக்கொண்டு சென்றான்.

தர்ஷுவுக்கு யோசித்து யோசித்து தலை வலி
வந்திருக்க சுகி அவளிடம் கேட்காமலே காபியை வரவழைத்தான் அவளோ நன்றி பெருக்குடன்
அதனை குடிக்க.. இடையில் குடிக்கும்போதே அவளது கோப்பையை பறித்து தான் அதில் குடிக்க
ஆரம்பிக்க..

தர்ஷினியோ பாதியில் காபி பறிபோன கோபத்தில் என்ன
செய்கிறோம் எது செய்கிறோம் என்று தெரியாமல் அவனிடம் இருந்து காபியை பிடுங்க போக
சுகியோ அங்கும் இங்கும் திரும்பி காபியை முழுதாக குடித்து முடித்துவிட்டான்.

தர்ஷுவோ அவனை அடிக்க துவங்கி இருந்தாள் அவளது
அடிகளை தானாக வாங்கிகொண்டவன் “தர்ஷு தர்ஷு போதும் போதும் வலிக்குது” என்றதும் மூச்சு
வாங்க அவனுக்கு எதிரில் நாற்காலியில் அமர்ந்தவள் “யு யு என்னோட காபியை குடிச்சிட்ட”
என்று அவனை திட்ட.

சுகியோ சிரிப்புடன் “நீதான் உன் லிப்ஸ் தர
மாட்டேன்கிற அதான் உன் லிப்ஸ் பட்ட காபியாவது கிடைக்கட்டும்ன்னு” என்று
சொல்லிவிட்டு அமைதியாக அமர அவள் சற்று நேரத்தில் மீண்டும் அமைதிக்குள் அதாவது
யோசனைக்குள் இவனுக்கும் ரெத்னாவுகும் தான் மனதிடம் உள்ள வேற்றுமையை யோசனை செய்ய
சென்றுவிட்டாள்,

சுகியும் அவளது எண்ணங்களை படித்தவன் போல “தர்ஷு
ரெண் கூட காபி குடிக்க போயிருக்கியா?” என்று கேட்க..யோசனையில் இருந்தவள் பட்டென்று
“அய்யே அவன் கூட நான் எதுக்கு போறேன்.. எப்போதும் ஜூன் ஜூன் னு சொல்லிக்கிட்டு..
சரியான லூசு அவன்” என்று மனதில் பட்டதை படபடவென்று சொல்லி பின் நாக்கை கடிக்க..

சுகியோ சிரிப்பை உள்ளடக்கிய குரலில் “உன்னை
கல்யாணம் பண்ணிக்க இருக்கிறவன போய் இப்படி சொல்ற? உனக்கு அவன் மேல லவ் அவ்ளோதானா?
அவன் என்னவோ நீ அவனை உருகி உருகி காதல் பண்றதா சொல்லிட்டு இருக்கானே” என்று லேசாக
சொல்லி முடித்தான்.

தர்ஷுவுகோ கோபம் வந்துவிட “அவனைபத்தி பேச
வேண்டாம்” என்று சொல்லி முடிக்க.. அவர்களின் டேபிளுக்கு அருகில் இருந்த டேபிளில்
உணவு அருந்தி கொண்டிருந்த பெண்ணை திடீரென தர்ஷு நன்றாக உற்று உற்று பார்க்க
துவங்கவும் சுகியும் அவர்களை திரும்பி பார்த்தான்.

அதற்குள் தர்ஷு வேகமாக எழுந்து சென்று அங்கு இருந்த
பெண்ணை தோளில் தட்டி கூப்பிட.. அந்த பெண்ணும் திரும்பியதும் இருவரும் நீ நீ நீ
என்று மாறி மாறி சொல்லியபடியே சற்று நேரம் இருந்துவிட்டு வேகமாக கட்டி அணைத்துக்கொள்ள..

சுகியோ யார் என்று பார்த்து வைத்தான் அங்கே
தர்ஷுவும் அந்த பெண்ணும் மாறி மாறி கட்டிக்கொண்டு தங்களுக்குள் முத்தமழை பொழிய..
சுகிகோ காதில் புகை வராத குறை தான்.. சற்று நேரம் பொறுத்தவன் மெல்ல தர்ஷுவை
அ;அழைக்க..

அவளோ குதூகலாமாக “சுகி இது இவ என்னோட நெருங்கின
தோழி… நிவாஷினி நானும் இவளும் பக்கத்துக்கு பக்கத்துக்கு வீட்ல இருந்தோம்
இவளுக்கும் எனக்கும் ஒண்ணா தான் பேர் கூட வெச்சாங்க..

கொஞ்சம் வருசத்துக்கு முன்னாடி வீடு மாறி போய்ட்டாங்க..
என்றவள் அவளுடன் கதை அளக்க துவங்கி அவளது வாழ்க்கை பற்றி எல்லாம் பேசிக்கொண்டே
இருக்க.. நிவா கூட வந்து இருந்த ஒருவன் வேகமாக தர்ஷுவின் அருகில் வந்து அவளது
தலையில் கொட்டி “ஏய் தர்பூஸ் என்னை எல்லாம் உனக்கு கண்ணுக்கு தெரியாதா?

அவளை மட்டும் பார்த்து பேசிக்கிட்டே இருக்க..
நாங்களும் உங்க பிரின்ட் தான்மா” என்று அவளை வம்புக்கு இழுக்க.

இங்கு சுகிக்கோ யாரடா நீ? என்ற கோபம் கனன்று
கிளம்ப.. கையில் இருந்த தொலைபேசியை இறுக்கமாக பிடித்து தன்னுடைய கோபத்தை
கட்டுபடுத்தும் வேலையில் இறங்கினான்.

அந்த புதியவனோ தர்ஷியின் கையுடன் கையை
கோர்த்தபடி நீண்ட நாள் பழக்கத்தில் அவளிடம் பேசிக்கொண்டே இருந்தான். தர்ஷுவும்
அவனுடன் நெடும் நேரமாக பேச.. அங்கு நின்ற நிவாவின் கவனம் சுகி மீது திரும்பியது.
அவள் வேகமாக இவனை நெருங்கி “ஹை நீங்க தர்ஷு பிரின்ட் ஆ? நான் நிவா.. அது என்னோட
அண்ணா நிரூபன்..

நானும் அவளும் ரொம்ப கிளோஸ் கொஞ்ச வருசமா
காண்டக்ட் இல்லாம போய்டுச்சு.. என்னை விட எங்க அண்ணனுக்கு தர்ஷின்னா ரொம்ப பிடிக்கும்..
அவங்க ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சா இன்னைக்கு நிறுத்த மாட்டாங்க..

அப்பரம் பாஸ் நீங்க ரொம்ப ஹான்ட்ச்சம்மா
இருக்கீங்க” என்று படபட பட்டாசு போல் பொரிந்து கொண்டிருக்க.. சுகியின் பார்வை
முழுவதும் அங்கு நின்ற நிரூபன் மற்றும் தர்ஷி மீதே போய்கொண்டிருக்க..

நிவா அவர்களை பார்த்து “ஹேய் வாங்க உட்கார்ந்து
பேசலாம்” என்று அதே மேசையில் அமர.. நிருபனுடன் பேசிக்கொண்டு இருந்த தர்ஷி அவனுக்கு
அருகிலேயே ஒரு நாற்காலியில் அமர்ந்து விட்டாள்.

இங்கு சுகிகோ உயர் ரத்த அழுத்தம் போல் கோபம்
பன்மடங்காக வேகமாக எழுந்தவன் “நான் கொஞ்சம் அவசரமா போகணும்” என்று எழுந்துகொள்ள
தர்ஷு அப்பொழுதுதான் அவனை பார்த்தவள் கோபத்தில் நிற்கும் சுகியை பார்த்து
முழிக்க..

அதற்குள் முந்திக்கொண்ட நிருபனோ “ஒ அப்போ ஒகே
சார் தர்ஷியை நானே வீட்ல கொண்டு போய் விட்டுடறேன் நீங்க உங்களோட வேலையை பாருங்க” ஏன்று
சாதரணமாக சொல்ல.. சுகி பற்களை நரநரவென்று கடிப்பது மற்றவர்களுக்கு கேட்கவில்லை
என்றாலும் தர்ஷுவுக்கு நன்றாக தெரிய..

அவளோ வேகமாக “இல்லை நிரூ நான் கிளம்பறேன் வீட்ல
தேடுவாங்க நாம அப்பறமா” என்றவள் சுகியின் தீபார்வையில் கப் சிப்பென்று வாயை
மூடிக்கொள்ள சுகியே நிருபனிடம் “தர்ஷுவோட கல்யாணத்துக்கு நீங்க கண்டிப்பா வரணும்
நாங்களே இன்வைட் பண்ண உங்க வீட்டுக்கு வருவோம்

உங்க அட்ரெஸ் அண்ட் நம்பர் கொஞ்சம் கொடுங்க, இதோ
இது என்னோட கார்ட் உங்களுக்கு தர்ஷுவை எப்போ பார்க்கனும்னு தோணினாலும் என்கிட்டே சொல்லுங்க
நானே கூப்ட்டுட்டு வந்து.. காமிக்கிறேன்” என்று சொல்லி தர்ஷுவை ஒரு பார்வை பார்க்க..

அவளோ அவர்களிடம் விடைபெற்று கூட செல்லாமல் அவனுக்கு
பின்னால் அவசரமாக கிளம்ப.. நிருபனோ விரக்தியாக புன்னகைத்தவன் நிவாவிடம் “இப்போவும்
எனக்கு லக் இல்லை டா” என்று சொல்லிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து
கிளம்பினான்.

இவர்கள் சென்றதுவரை பார்க்காதது போல
பார்த்துக்கொண்டே கார் வரைக்கும் போனவன் தர்ஷுவிடம் “யாரு?” என்க.. அவளோ “நிவா..
நிரூபன் பிரின்ட்” என்று சொல்லிவிட்டு முழிக்க..

சுகியோ “உனக்கு யாருன்னு கேட்டேன்” என்று
அழுத்தமாக சொல்ல.. அபபொழுது தான் அவன் சொல்ல வந்த அர்த்தம் அவளுக்கும் விளங்க
அவனது முகத்தை கோபமாக பார்க்க முயன்று தோற்றவள் “பிரின்ட் தான்’ போதுமா?” என்று
சொல்லிவிட்டு வேகமாக இவனது காரை நோக்கி செல்ல..

அவனோ அவளுக்கு பின்னே காருக்கு சென்று எதையும்
பேசாமல் கோபமாகவே காரை எடுத்தவன் அதன் பின் எதையும் கேட்கவும் இல்லை சொல்லவும்
இல்லை..

பாதி தூரம் சென்றதும் நிவாவின் எண்ணை வாங்கலாம்
என்று அவனது முகத்தை முகத்தை பார்த்தபடி இவள் வந்துகொண்டு இருக்க.. சுகியோ அவளது
முகத்தை பார்த்தாலும் சாலையில் பதித்த பார்வையை திருப்பவே இல்லை அவளிடம்..

அவளுடைய வீடு அருகில் வந்ததும் தைரியத்தை கூட்டி
“அந்த நம்பர் தாங்களேன்” என்று கேட்டே விட்டாள்.. அவனோ அந்த கார்டை எடுத்து
அவளுக்கு முன்னே நீட்டி “நிவா.. ஹ்ம்ம் நிவா” என்று சொன்னதையே சொல்லிகொண்டிருக்க..

தர்ஷிக்கோ அவனது வார்த்தைகளில் என்ன புரிந்ததோ
வேகமாக அதனை பிடுங்கி வைத்து கொண்டவள் அவனிடம் “அவ மட்டும் தான் என்னோட கிளோஸ்
பிரின்ட்.. அவகிட்ட பேச கூட எனக்கு உரிமை இல்லையா?” என்று சண்டைக்கு கிளம்ப..

சற்று நார்மல் ஆனவன் லேசாக அவளை பார்த்தபடி “இருக்கு”
என்ற பதிலை கொடுக்க.. நிஜமாகவே தலை முடியை கைவிட்டு கலைத்துகொண்டாள் தர்ஷினி..
அவனது பேச்சு நடவடிக்கை எல்லாம் அவளை குழப்பத்தின் உச்சிக்கே கொண்டு செல்ல..

எதையும் சொல்ல முடியாமல் அந்த கார்டை அவனது காரில்
டாஷ்போர்டிலேயே போட்டவள் “யார்கிட்டையும் நான் பேசவே இல்லை போதுமா” என்று கோபமாக
சொல்லிவிட்டு கையை கட்டிக்கொண்டு அமர்ந்து விட்டால்.

அவளது வீட்டின் வாசலில் வண்டியை நிறுத்தியவன்
அவள் இறங்கும் முன் அவளது கையில்  அந்த
சிறிய நகை பெட்டியை வைத்து “எங்க வீட்டு மருமகளுக்கு என் சார்பா முதல் பரிசு”
என்று சொல்லி சிரித்த முகத்துடன் அதனை கொடுக்க..

தர்ஷி இவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று
பார்க்க.. அவளது பார்வை தன்னை நோக்கி இருக்கும்போதே அங்கிருந்து கிளம்பியவன் அவள்
வீட்டின் கேட் தாண்டி காருக்குள் இருந்தபடியே கையை நீட்டி அவளுக்கு டாட்டா
காட்டிவிட்டு அதன் பின் போன் என்று சமிக்ஞை காட்டினான்.

தர்ஷுவும் அவளது போனை எடுத்து பார்க்க அவனிடம்
இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவிப்பு தான் அது..

அதனை திறந்தவள் இதழ்கள் புன்னகையில் மலர.. அதில்
இருந்த செய்திதான் என்ன?

அதிலோ முதலில் ஒரு பத்து இலக்க தொலைபேசி எண்
எழுதி இருக்க.. அதன் கீழே நிவா என்று எழுதி இருந்தது.. இவளோ அந்த செய்தியின் நீளம்
முழுவதும் விரல்கள் கொண்டு நகர்த்தி கடைசி வரி வரை போய் பார்க்க..

கடைசியாக நிரூபன் எண் இல்லாமல் அங்கு “தேடாதே..
என்னைத்தவிர யாரையும்” என்று எழுதி இருக்க.. இவளோ கோபத்தை மறந்து அவனது செயலை
எண்ணி சிரித்துக்கொண்டே ஒரு சிரிக்கும் ஸ்மைல்லியை அவனுக்கு அனுப்பினாள்..

அதன் பின் இவள் வீட்டுக்குள் சென்று பார்த்தால்
அங்கு இவளை பார்க்கவென்று காமாட்சியும் ரெத்னாவும் வந்து காத்திருக்க.. விட்டு போன
தலைவலி வந்து சேர.. அங்கிருந்து உள்ளே போக போனவள் தொலைபேசிக்கு மீண்டும்
குறுஞ்செய்தி வந்து சத்தம் கொடுக்க..

சுகியே தான் “என்ஜாய் தி ஷோ” என்று மட்டும்
போடப்பட்டு இருந்தது! அவளோ ஒன்றும் புரியாமல் விழிக்க.. அதற்க்குள் மீண்டும் ஒரு
செய்தி “காமட்சி மா இஸ் சோ ஸ்வீட் டேக் கேர்” என்று மட்டும் அனுப்பிவிட்டு
இருந்தான்.

இவளது இன்னல்களை எல்லாம் முன்னமே அறிபவன் எதற்காக
இவர்களை இங்கு வர அனுமதித்தான் ஒன்னும் புரியல.. என்று நினைத்தவளின் கவனத்தை தன்
பக்கமாக இழுத்துகொண்ட காமாட்சி தான் அவளுக்காக கொண்டு வந்த பலவண்ண புடவைகளையும்
பரிசுகளையும் கடை பரப்ப.. சுகி கொடுத்து சென்ற நகை பெட்டி மட்டும் தர்ஷுவின்
கைகளுக்குள் பத்திரமாக பொதிந்து இருந்தது!       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *