மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு



அத்தியாயம்- 21
 
தன்னைத் திரும்பியும் பாராது வீட்டின் உள்ளே தன் மகனோடு நடந்து செல்லும் மனைவியை உணர்வுகள் துடைத்த பார்வை பார்த்தவன் அதே இடத்தில் அசையாது அப்படியே நின்றான்.

‘தெரியாம நடந்த விபத்துக்கு நான் என்னடி பண்ணுவேன்.?’ என தனக்குள் எண்ணி மருகியவன் தன்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த ராமுவைக் கண்டு இதழ் பிரியாது புன்னகைத்தான்.

ராமுவோடு வந்த அவனுடைய மனைவிக்கு     வணக்கம் கூறியவன், “உங்க ரெண்டு பேரையும் நம்பித்தான் மயாவை இங்கே விட்டுட்டுப் போறேன். அவளை பத்திரமா பார்த்துக்கோங்க. ஏதாவது தேவைன்னா என்கிட்ட கேளுங்க. முக்கியமா அவளை எந்த வேலையும் செய்ய விடாதீங்க. அதிகமா திங் பண்ணிகிட்டு இருப்பா. அவ கூடவே இருங்க. பெரியவங்க நீங்க சொன்னா கேட்பா. ஜாக்கிரதை.” என கூறினான்.

“சரி சார். நீங்க எதைப் பத்தியும் கவலைப் படாதீங்க நாங்க பார்த்துக்கிறோம்.”

“ம்ம்…. ஹான் அவளுக்கு காரம் அதிகம் பிடிக்காது. சமைக்கும் போது அதிக காரம் சேர்க்காதீங்க.”

“சரிங்க….”

“ம்ம் என்னோட பையன் ஜாக்கிரதை ராமு.. அவன் என்னைத் தேடினா வீடியோ கால் பண்ணுங்க.”

“சரிப்பா பண்றேன்.”

“மூணு நாளைக்கு ஒரு தடவை நான் அவளைப் பார்க்க வருவேன்.” என்றவனுடைய பார்வை வீட்டினுள் சென்ற தன்மயாவை தேடி அலசின.

பெருமூச்சோடு அவர்களைப் பார்த்து தலை அசைத்தவன் விருட்டென தன் காரில் ஏறி அமர்ந்து கொண்டான்.
 அடுத்த நொடியே அந்த தோப்பில் இருந்து விரைந்து மறைந்தது நம் ஆதியின் கார். 

தன் வீட்டிற்குள் நுழைந்தவன் ஒரு விதமான வெறுமையை உணர்ந்து கொண்டான். அலைபாயும் தன் மனதை அடக்கியவன் குளித்து விட்டு ஓய்வாக படுக்கையில் சரிந்தான்.

பஞ்சை ஒத்த படுக்கையும் பாறாங் கல்லைப் போன்ற உணர்வை அவனுக்கு கொடுத்தது.

அந்த படுக்கை விரிப்பில் அவளுடைய நறுமணம் அவனைத் தாக்க, அவனுடைய கரங்களோ படுக்கை விரிப்பை இறுகப் பற்றி தன்னோடு சுருட்டிக் கொண்டன. 

“ஏன்டி என்னை விட்டுப் போன.?” தனக்குத் தானே பேசிக் கொண்டவன் அவள் மீது எழுந்த சினத்தில் சட்டென அவளுடைய நறுமணம் வீசிய போர்வையை தூக்கி தூர எறிந்தான்.

“சரிதான் போடீஈஈஈஈஈஈ…. ரொம்ம்ம்பபபப ஓவராத்தான் பண்ணுற. நீ இல்லாம நான் இருக்க மாட்டேன்னு யாரு சொன்னா.? ஐ கேன். என்னால முடியும்டி. நல்லா சாப்பிட்டு படுத்து தூங்கினா எந்த நினைப்பும் வராது.” என்றவன் தலையணையில் தன் முகத்தை புதைத்து புரண்டு படுத்தான்.

“நான் இனி உன்னைப் பத்தி நினைக்க மாட்டேன்டி.” உறுதி எடுத்தவன் தூங்க ஆயத்தம் ஆகினான்.

‘சே….! இந்த தலையணை ஏன் இப்படி இருக்கு.? சாஃப்டாவே இல்லையே. அவளோட மார்புல முகம் புதைச்சு தூங்கும் போது எவ்ளோ இதமா பஞ்சு மேல படுக்குற மாதிரி இருக்கும். ட்ராமா குயின் ரொம்ம்ம்பபபப சாஃப்ட்.’ என்றவன் சட்டென அந்த தலையணையையும் தூக்கி எறிந்தான்.

‘சே….! என்ன இது? அவளைப் பத்தி நினைக்கவே மாட்டேன்னு சொல்லிட்டு இப்போ எதுக்கு அவளைப் பத்தி திங் பண்ணிட்டு இருக்கேன்.’ என எண்ணி தன்னைத் தானே கடிந்து கொண்டவன் தன் விழிகளை இறுக மூடிக் கொண்டான். 

‘நான் இனி அவளைப் பத்தி நினைக்க மாட்டேன். ஆனா அவ இப்போ தூங்கிருப்பாளா….? இல்லையா….?’

‘சாப்பிட்டாளா….?’

‘என்னோட நினைவு வந்திருக்குமா.?’

‘என்னை மிஸ் பண்ணிருப்பாளோ.?’

‘யஷ்வி என்னை கண்டிப்பா தேடியிருப்பான். பட் இந்த ட்ராமா குயின் என்னை தேடினாளான்னு தெரியலையே.’ என பல கேள்விகளின் மத்தியில் தன் தூக்கத்தை தொலைத்தான்.

“டாமிட்….” என சத்தமாக கர்ஜித்தான் அவன். 

இப்போதே அவள் இருக்குமிடம் சென்று இராவணனைப் போல தன்னவளை கவர்ந்து வர அவன் உள்ளம் ஏங்கியது.
அவளைப் பத்தி நினையாதே மனமே. என எண்ணியவனின் சிந்தனை முழுவதும் நீக்கமற நிறைந்து போனாள் தன்மயா.

******************** 

தன்மயாவுக்கோ ஆதியை விட்டு விலகி வந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது. தன்னால் அவனுடன் நிச்சயமாக இணைந்து வாழ முடியாது என அறிந்தவளுக்கு இந்தத் தனிமையோ சக்கரைக் கட்டி போல இனிக்கத் தொடங்கியது.

“ம்மாஆ ப்பா எங்க.?”  என்ற யஷ்வியின் கேள்விக்கு மாத்திரம் என்ன சொல்லி சமாளிப்பது என அறியாமல் குழம்பித் தவித்துப் போனாள்.

“ம்மாஆ, ப்பா வ்வேணும்.”

“அப்பா வருவார் கண்ணா. இன்னும் மூணு நாள்ல வந்துருவார்.” என கூறி சமாதானம் செய்தவள் யஷ்வியை குளிப்பாட்டத் தொடங்கினாள்.

அவனைக் குளிப்பாட்டி விட்டு தானும் நனைந்து ஈர ஆடையோடு வெளியே வந்தவள் ராமுவின் மனைவியிடம் யஷ்வியை ஒப்படைத்து விட்டு அந்த சிறிய பால்கனியில் வந்து நின்றாள். 

கருமை அடர்ந்த கார் கூந்தலில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளை மல்லிகை மொட்டுக்களைப் போல இருண்ட வானில் வெண்ணிற  நட்சத்திரங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன. 

இமைக்காது அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தவளின் மனமோ தன் குடும்பத்தை எண்ணி மீண்டும் வாடியது. 

கடந்த கால இனிப்பான நிகழ்வுகளை எண்ணியவளின் உதடுகளோ விரக்தியான புன்னகையை மொட்டவிழ்த்தன. 

தான் மாத்திரம் இப்பூவுலகில் தனித்திருப்பதைப் போன்ற மாயை அவளை ஆட்டுவிக்க, அதன் சுழலில் அகப்பட்டவள் மீள முடியாத பெருந் துயரில் ஆழ்ந்து போனாள். 

அறையின் மின் விளக்குகளைக் கூட போடாது பால்கனி கம்பியில் சாய்ந்து நின்றவளுடைய விழிகளில் இருந்து வழிந்தது குருதியை ஒத்த கண்ணீர். 

இருள் அவள் துயரை இன்னும் அதிகரிக்க, மின் விளக்குகளை ஒளிரச் செய்தாள். மின் விளக்குகளை ஒளிரச் செய்ததும் விலகிய இருளைப் போல தன் துயரும் விலகாதா என்ற ஆசை அக்கணம் அவளுள் எழுந்தது.

ஒரு துளிக் கண்ணீர் பெரு வெள்ளமாக மாற, விம்மி வெடித்து அழத் தொடங்கியவளை தடுத்து நிறுத்தியது அந்தக் கம்பீரக் குரல்.

“ஏய் ட்ராமா குயின். ஓ நோஓஓஓ…. மறுபடியும் அழுகையா.? அகெய்ன் உன்னோட ட்ராமாவ ஆரம்பிச்சுட்டியா.?” என சற்று அதட்டலாக கேட்ட அவனுடைய குரலில் திகைத்து திரும்பியவள் மனம் படபடக்க “ஆதீஈஈஈ….?” என்றாள்.

திரும்பி பார்த்தவள் அந்த இடம் வெறுமையாக இருப்பதைக் கண்டு குழம்பிப் போனாள். 

“ஐயோ என்ன யாரையுமே காணோம்….? இப்போ அந்த டெவிலோட குரல் கேட்டிச்சே.” என்றவாறு அவளுடைய அறையை பார்வையால் அலசினாள்.

அந்த இடமோ வெறுமையாகவே இருத்தது. பெருமூச்சோடு தன் தலையில் தட்டிக் கொண்டவள் மீண்டும் பால்கனியில் நின்று தென்னந் தோப்புகளை பார்க்கத் தொடங்கினாள்.

‘ஒரு நாள் முழுக்க அலைஞ்சு திரிஞ்சு நான் ஆசைப் பட்டதைப் போலவே வீடு வாங்கியிருக்கான்.’ அவளுடைய பார்வை இன்னும் ஆழமாக அந்த இடத்தின் அழகை ரசிக்க ஆரம்பித்தது.

“ஹேய் குயின். எதுக்கு இப்போ ஈரமான ட்ரெஸ் போட்டுருக்க.? லூசாடி நீ.? முதல்ல போய் ட்ரெஸ்ஸ மாத்து இடியட்.” என்ற ஆதியின் கர்ஜனைக் குரலில் பால்கனியில் இருந்து நடு அறைக்கு ஓடி வத்தவள் “ஆ…. ஆதீஈ….? நீ இங்க தானே இருக்கு.? என்னை நிம்மதியா இருக்க விட மாட்டீயா….? எங்க மறைஞ்சிருக்க.?” என திட்டியவள் அந்த அறையின் ஒவ்வொரு இடமும் ஒன்று விடாது தேடி சோர்ந்து போனாள்.

இறுதியாக கட்டிலின் அருகே அமர்ந்து குனிந்து பார்த்தவள் அங்கும் அவன் இல்லாது போக அதிர்ந்தே போனாள்.

“அச்சோ அந்த கிறுக்கனோட குரல் மட்டும் கேட்குதே. நான் அவனை மிஸ் பண்றேனா.? சே…. சே…. நெவர்.” என்றவள் பால்கனி கதவு மூலை, பாத்ரூம் என அனைத்து இடமும் தேடி களைத்து அடப் போங்கடா என்றவாறு குளிக்கச் சென்று விட்டாள். 

தன்னுடைய ஈர ஆடையைக் களைந்து விட்டு இதமான நீரில் குளித்து முடித்தவள் பெரிய பூந்துவாலை ஒன்றை தன் மார்போடு கட்டிக் கொண்டு வெளியே வந்தாள். 

ஆதி வாங்கிக் கொடுத்த இலகுவான ஆடைகளைக் கண்டவள் அதில் ஒரு கவுனை எடுத்துக் கொண்டாள். 

துவாலையைக் களைந்து கூந்தலைத் துவட்டியவள் மெல்லிய கவுன் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டாள். 

அவள் அணிந்து வந்திருந்த துவாலையை படுக்கையில் போட்டவள் கூந்தலை விரித்து விட்டாள்.

கண்ணாடியின் முன்னே வந்து நின்றவள் தன் மார்பின் மீது கிடந்த தாலியை இமைக்காது பார்த்தாள். 

ஆதியின் தங்கச் சங்கிலியோடு கோர்க்கப்பட்டு நள்ளிரவுதனில் கழுத்தில் ஏறிய தாலி அல்லவா.? அதனைத் தன் கரங்களில் ஏந்தியவளுக்கு விழி நீர் பொங்கியது.

வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு தாலியில் குங்குமத்தை வைத்தவள் தன் நெற்றியிலும் திலகம் இட்டுக் கொண்டாள்.

“ம்மாஆஆஆ…. ம்மாஆஆ…” என்ற யஷ்விந்தின் அழைப்பு வெளியே கேட்க, புன்னகையோடு தன் அறையை விட்டு வெளியேறினாள் தன்மயா. 

யஷ்விந்தின் மழலை கேட்டாலே அவள் வதனம் புன்னகையை தத்தெடுத்துக் கொள்ளும்.

அவள் அந்த அறையை விட்டு  வெளியே செல்லும் வரை அந்த வீட்டின் கூரையில் சற்றும் அசையாது   அமர்ந்திருந்தான் ஆதித்யன். 

தன்னவளை நினைக்கவே கூடாது என உறுதி எடுத்தவன் அவள் பற்றிய சிந்தனையில் சிதைந்து சின்னாபின்னமாகி இறுதியில் அவளை பார்த்தே ஆக வேண்டுமென்ற வெறியில் தன் வீட்டில் இருந்து புறப்பட்டவன் நேரே தன்மயாவுக்காக வாங்கிய தோப்பு வீட்டிற்கு வந்திருந்தான். 

அங்கிருந்த மாமரம் ஒன்றில் ஏறியவன் அதில் இருந்து அந்த வீட்டின் கூரையில் ஏறி தன்மயாவின் அறையின் கூரைக்கு வந்திருந்தவன் அங்கிருந்த ஓடுகளைக் கழற்றி வைத்து விட்டு அதன் மூலம் தன் மனைவியை ரசிக்கத் தொடங்கினான்.

அவள் ஈர ஆடையோடு வந்து நிற்பதைக் கண்டதும் பதறியவன் ஆடையை மாற்றும்படி கூறி விட, அவளுடைய விழிகள் திகைத்து விரிந்ததை எண்ணி சத்தமின்றி சிரித்தான் அவன்.

சற்று அசைந்தாலும் அவள் தன்னை பார்த்து விடக் கூடும் என்பதை உணர்ந்தவன் அசைவின்றியே இருந்தான். 

சற்று நேரத்தில் அவள் அவனுடைய குரல் கற்பனை என எண்ணி குளியல் அறைக்குள் புகுந்து கொள்ள, குளியல் அறையின் கூரையைப் பிரித்து உள்ளே குதித்து விடுவோமா என்ற பேரவா அவனுள் எழுந்தது. 

‘டேய் ஆதி அடங்குடா…. நீ அவளைப் பார்க்கிறது மட்டும் அவளுக்கு தெரிஞ்சுது கூரையோடு சேர்த்து உனக்கும் ஆணி அடிச்சிருவா.’ என தனக்குத் தானே கூறிக் கொண்டவன் அவள் குளித்து முடித்து விட்டு வெளியே வரும் வரைக் காத்திருந்தான்.

அவளும் வந்தாள்….

பூந்துவாலையுடன் நீர் சொட்டச் சொட்ட வெளியே வந்தவளைக் கண்ட கணம் அவனுடைய அத்தனை உரோமங்களும் சிலிர்த்துப் போயின.

உடல் எங்கும் புது உதிரம் பாய்ந்தாற் போல உணர்ந்தவன் அவளுடைய வெண்ணிற தோள் தொடக்கம் பாதம் வரை அணு அணுவாய் இரசிக்கத் தொடங்கினான். 

ஏனோ அவனுக்கு தன்மயாவை இன்றுதான் முதல் முறையாக பார்ப்பதைப் போல இருந்தது.

தன்மயாவோ தன் அறையின் கூரையில் இருந்து ஆதி பார்வையால் விழுங்குவதை பற்றி அறியாது கட்டியிருந்த துவாலையை அவிழ்த்து கூந்தலை துவட்ட, ஆதிக்கோ மூச்சடைத்துப் போனது. 

அவளது கொள்ளை அழகில் திணறிப் போனவன் எங்கே தான் மூச்சடைத்தே இறந்து போய்விடுவோமோ என பயந்து போனான்.

சட்டென விழிகளை இறுக மூடி கூரையின் மீது மல்லாக்க படுத்துக் கொண்டவனின் விரல்கள் நடுங்கத் தொடங்கின.

அவனுக்கோ ஏன் அவளைப் பார்க்க வந்தோம் என்றாகிவிட்டது.

தன்னவள் கைக்கெட்டும் தூரம் இருந்தாலும் அவளைத் தொட முடியாதே….

பார்வை படும் இடத்தில் இருந்தாலும் கள்ளத்தனமாய் காண வேண்டிய நிலை அவனுடைய மனதை நொறுங்கச் செய்தது. 

மோகம் மட்டும் இருந்த போது துணிந்து அவளைத் தொட்டவன் காதல் வந்ததும் தயங்கினான். 

அவளுடைய காந்த விழிகளில் காதலைக் காண ஏங்கினான். 

அவன் தொட்டால் அவள் அச்சம் கொள்ளாமல் வெட்கம் கொள்ள வேண்டுமென்ற ஆவல் கொண்டான்.

மோகம் தேவையில்லை உன் காதல் போதுமடி என அவள் காதோரம் கூற அவனுடைய இதழ்கள் குறுகுறுத்தன. 

இனி கூறி என்ன பயன்….?

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு.?

அவள் வெட்கத்தை அழித்து உடலை வன்மையாய் தீண்டி மோகம் கடைந்தெடுத்தவனுக்கு கேட்டவுடன் அவள் காதலை கொடுத்து விடுவாளா என்ன.?

உணர்வுகளைக் கொன்றவனே அவளுடைய உணர்வுகளை மீட்க வேண்டும். 

மோகத்தால் முட்டியவனே அவளைக் காதலால் முக்குளிக்க வைக்க வேண்டும். 

எல்லையற்ற வலிகளைக் கொடுத்தவனே அவளுடைய வலிகளை அன்பெனும் துணி கொண்டு துடைத்தெறிய வேண்டும்.

மோகமல்ல காதலே வேண்டுமென அவளுடைய காதலை யாசிக்க வேண்டும். 

டெவில் யாசிப்பானா….? 

இல்லை காதலையும் அதிரடியாக எடுத்துக் கொள்வானா….?

 
 💜💙காதல் வேட்டை தொடரும்💙💜

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *