மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு
மோகம் – 4
“சே….! நீ ஒரு டெவில் ஆதி.” என சீற்றத்தில் கத்தியவளின் கழுத்தை வளைத்து அவள் இதழ்களை தன் அதரங்கள் கொண்டு மூடினான் ஆதித்யன்.
அவனை எதிர்த்து வாதம் புரியும் அவளுடைய இதழ்களை அடக்க எண்ணி முத்தமிட்டவன் அவளுடைய இதழ்களின் மென்மையில் தன் செயலின் அடிப்படைக் காரணத்தையே மறந்து போனான்.
அவனது கரங்களில் ஒன்று அவளது கூந்தலினுள் நுழைந்து அவளது பின்னந்தலையை இறுகப் பற்றிக் கொள்ள, அவனுடைய மற்றைய கரமோ அவளுடைய கழுத்து வளைவை வருடத் தொடங்கியது.
பெண்ணவளின் இதழ்களில் மூழ்கி சுகவதை அடையலாம் என்பதை அக்கணம் உணர்ந்தான் அந்த ஆண்மகன்.
முதலில் திகைத்தவள் அடுத்த கணமே அவனுடைய பிடியில் இருந்து விடுபட முயன்றாள்.
அவளுடைய திணறலை அடக்கி அவளுடைய செவ் இதழ்களை விழுங்கி, அவளுள் கரைந்து கொண்டே போனவனின் தலை முடியை பிடித்து இழுத்தான் யஷ்விந்த்.
“ப்பாஆ எனக்கும் கிஸ் வ்வேணும்.” என்ற யஷ்வியின் குரலில் இருவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.
சட்டென அவளை விட்டு விலகி நேராக அமர்ந்தவன் கட்டுப்பாடின்றி அலைபாய்ந்த உணர்வுகளை அடக்கத் தெரியாது தன் தலைக் கேசத்தை அழுந்தக் கோதினான்.
“ப்பாஆ….”
“ம்மாஆ….” என இருவரையும் மாறி மாறி அழைத்தவன் பின் பக்கத்தில் இருந்து முன் பக்கத்திற்கு வந்து தன்மயாவின் மடியில் அமர, சட்டென அவனைத் தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டான் ஆதி.
“நோ கண்ணா. அம்மாவோட வயித்துக்குள்ள குட்டி பாப்பா இருக்கு. அம்மாக்கு வலிக்கும். நீ என்கூட இரு.”
“அதெல்லாம் எனக்கு வலிக்காது. நீ அம்மாகிட்ட வா யஷ்வி” என அழைத்தாள் தன்மயா.
“நீ அப்பா கூடவே இருடா. நாம கார் ட்ரைவ் பண்ணுவோம்.” என ஆசை காட்டி அவனைத் தன் மடியிலேயே அமர்த்தியவன் காரை ஸ்டார்ட் செய்தான்.
“குயின்.”
“என்ன.?”
“ஏய் என்கிட்ட அதட்டிப் பேசாதடி.” அவன் குரல் சடுதியில் மாறியது.
“என்னன்னுதானே கேட்டேன். அதுவும் குத்தமா.?” சலித்துக் கொண்டாள் அவள்.
“திமிர்.” என பல்லைக் கடித்தவன் ஒரு பிரம்மாண்டமான நகைக் கடையின் முன்னே வண்டியை நிறுத்தினான்.
“உள்ளே வர்றியா.? உனக்கு என்ன ஜ்வல் பிடிக்கும்.”
“எனக்கு இதெல்லாம் வ்வேணாம்.” என்றவள் யஷ்வியுடன் பேசத் தொடங்கினாள்.
அவனோ காரை விட்டு இறங்கியவன் நேரே நகைக் கடையினுள் நுழைந்து தனக்கு தேவையானவற்றை வாங்கிக் கொண்டு மீண்டும் காருக்கு வந்தான்.
இறுக்கமான முகத்துடன் வந்தவன் காரினுள் இருந்த இருவரையும் கண்டதும் தன் இறுக்கத்தை தொலைத்தான்.
யஷ்விந்தின் சேட்டையில் அவன் இதழ்கள் புன்னகையைக் கூட வெளிப்படுத்தின.
சற்று நேரத்தில் வீடு வந்ததும் அவர்களை உள்ளே அனுப்பியவன் தன் காரை எடுத்துக் கொண்டு மீண்டும் வெளியே கிளம்ப எத்தணித்தான்.
காருக்கு வெளியே யஷ்விந்தோடு நின்றவளோ “ஆதீஈஈஈஈ.” என அவசரமாக அழைத்தாள்.
“சொல்லு.”
“அந்த நர்ஸ்ஸை ஒன்னும் பண்ணிராதீங்க ப்ளீஸ்.”
“சரி. நீ உள்ள போ.” என்றவனின் அழுத்தமான குரலில் யஷ்வியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் அவள்.
தன்னுடைய அறைக்குள் நுழைந்தவளுக்கு வாழ்க்கையே வெறுமையாகிப் போனதைப் போல இருந்தது.
சற்று நேரம் விளையாடிக் கொண்டிருந்த யஷ்விந்தோ அப்படியே தரையில் உறங்கி விட, அவனைத் தூக்கி படுக்கையில் கிடத்தியவள் சோபாவில் அமர்ந்தாள்.
கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக இந்த வீட்டில் இருப்பவளுக்கோ சீக்கிரமே இந்த இடத்தை விட்டு செல்ல வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது.
தன் ஆடையை மாற்றி விட்டு வந்தவள் அருகே இருந்த கவினுடைய அறையைப் பார்த்து அப்படியே நின்றாள். முன்பு அடிக்கடி திறந்திருக்கும் அறை இப்போதெல்லாம் பூட்டியே இருந்தது.
தன்னைத் திடப்படுத்திக் கொண்டு அந்த அறையினுள் நுழைந்தவள் அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த வித விதமான ஷர்ட்களைப் பார்த்து கசப்பாய் புன்னகைத்தாள்.
“ஆதிக்கு ஷர்ட் பிடிக்காது. கவினுக்கு டீஷர்ட் பிடிக்காது.” என அவளுடைய இதழ்கள் மெல்ல முணுமுணுத்தன.
அங்கிருந்த ஒயிட் போர்ட்டை பார்த்தவள் அதில் இருந்த சித்துவின் கையெழுத்து மற்றும் கவினுடைய கையெழுத்தைப் பார்த்தாள். அன்று ஆதி தன் இடையில் கையெழுத்திட்டதை எண்ணி இன்றும் அவள் உடல் சிலிர்த்தது.
‘எல்லாரையும் விட என் ஆதியோட ஹேன்ட் ரைட்டிங் ரொம்ப அழகு.’ என மனதினுள் நினைத்தவள் திடுக்கிட்டாள்.
‘ஐயோ நான் என்ன பண்ணிகிட்டு இருக்கேன்.? என் ஆதின்னா சொன்னேன். சே….! இது எல்லாமே அவனோட நடிப்பு. என்னைத் திட்டம் போட்டு ஏமாத்திருக்கான். நம்ப வெச்சு கழுத்தறுத்திருக்கான். இப்படிப்பட்டவன் எப்படி என்னோட ஆதியா இருக்க முடியும்….?’ என எண்ணியவளுக்கு அழுகையே மிஞ்சியது.
கன்னத்தில் வழிந்த கண்ணீரைக் கூட துடைக்காது அந்த அறையினுள்ளே நின்றவளின் தோளில் கரம் பதித்தான் ஆதி.
அந்த அழுத்தமான தொடுகையில் ஆதியை உணர்ந்தவள் அவனைத் திரும்பியும் பாராது ஒயிட் போர்ட்டை வெறித்தபடியே நின்றாள்.
அவனுடைய கரத்தை தட்டி விட்டவள் விலகி நின்றாள்.
“என்ன குயின் இந்த ரூம்குள்ள வந்திருக்க.? மலரும் நினைவுகளா.?” என கிண்டலாகக் கேட்டான் ஆதி.
“இந்த வீட்ல இருக்கிற எல்லா நினைவுகளுமே நரகம் மாதிரிதான் இருக்கு ஆதி. நினைச்சாலே கசக்குது.”
“பட் கவினுடைய நினைவுகள் நினைத்தாலே இனிக்குமே. அம் ஐ ரைட்.?”
“ஷட் அப் ஆதி.” எனச் சீறியவள் அங்கிருந்து வெளியேற முயல, அவளை வெளியே செல்ல விடாமற் தடுத்தவன் அவளைச் சுற்றி வந்து அந்த ஒயிட் போர்ட்டில் தன் கையெழுத்தை அவளுடைய பெயருக்கு அருகில் வைத்தான்.
“திஸ் இஸ் மை ஒரிஜினல் ஹேன்ட் ரைட்டிங்.” என்றான்.
“இது மட்டும் உண்மையா இருக்கும்னு எப்படி நம்புறது.? எனக்கு உன் மேல கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்ல ஆதி. நீ எப்போ வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் மாறுவ. ஐ டோன்ட் ட்ரஸ்ட் யு.”
“இஸ் இட்….?” என்றவாறு சிரித்தவன் தன் இரு தோள்களையும் அலட்சியமாக குலுக்கி “ஐ டோன்ட் கெயார் அபௌட் தட்.” என்றான்.
தன் முகத்தை திருப்பிக் கொண்டாள் தன்மயா.
“ஹேய் நான் நினைச்சது ஒன்னு. ஆனா நடந்தது ஒன்னுடி.”
“என்னது.? எனக்குப் புரியலை.”
“என்னோட ஒரிஜினல் கேரக்டர் ஆதிதான். கவினை நான் நல்லவனா கிரியேட் பண்ணினேன். என்னை மாதிரி இல்லாம ரொம்ப ரொம்ப நல்லவனா உருகி உருகி காதலிக்கிறவனா அவனை படைச்சேன். நீ கண்டிப்பா கவினைத்தான் லவ் பண்ணுன்னு நினைச்சேன். ப்ச் பட் இந்த டெரர் ஆதியை லவ் பண்ணுவன்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலை.” என்றான் ஆதி.
“………..”
“பொண்ணுங்களுக்கு நல்லவனா இருந்தா பிடிக்காதாமே அப்படியா.?”
“ரப்பிஷ்.” சிடுசிடுத்தாள் தன்மயா. அவள் குரலோ கலங்கிப் போனது.
“அப்போ ஏன் உனக்கு கவினை பிடிக்கலை.?”
“யார் சொன்னா எனக்கு கவினைப் பிடிக்காதுன்னு.?”
“ஐ க்நோ குயின். உனக்கு ஆதியைத்தான் பிடிக்கும். உனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்.”
“நோஓஓஓ…. ஐ ஹேட் யு. ஐ ஹேட் யு ஆதி. எனக்கு கவினைத்தான் பிடிக்கும். எனக்கு கவினை மட்டும்தான் பிடிக்கும்” என வேண்டுமென்றே பொய் கூறினாள் அவள்.
“வாட்….? அப்போ எதுக்கு என்னை லவ் பண்ணின.?”
“நான் ஒன்னும் உன்னை லவ் பண்ணலை ஆதி.”
“அப்போ… அந்த நிஜம் இல்லாத கவினையா லவ் பண்ணின.?” அவனது குரல் பொறுமை இழந்து ஓங்கி ஒலித்தது.
“எஸ்…. எஸ்…. எஸ்…. ஐ லைக் கவின். ஐ லவ் கவின். ஐ லவ் ஹிம். ஐ லவ் ஹிம் சோ மச்.” என அவனுடைய கண்களைப் பார்த்துக் கொண்டே கூறியவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் ஆதி.
அவன் உடலோ தாங்க முடியாத சினத்தில் நடுங்கத் தொடங்கியது.
“அம்மாஆஆ….” என அலறியவள் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு நிற்க முடியாமல் தடுமாற, அவளது இரு தோள்களையும் வலிக்கும்படி இறுகப் பற்றி அவளை நிலைப் படுத்தியவன் “நீ என்னைத் தவிர வேற எவனையும் லவ் பண்ண கூடாது.” என எச்சரித்தான்.
முதல் முறையாக ஆதியின் உடல் நடுக்கத்தையும் விழிகள் நிலையின்றி அலைபாய்வதையும் அவதானித்தவளது கன்னத்து வலி கூட மறைந்து போனது.
அவனது குரலோ சற்றே நடுக்கத்தோடு வெளிவர, தன்மயாவின் இதழ்களோ இகழ்ச்சியாக வளைந்தன.
அவன் அடித்த கன்னம் தீப் பிடித்தாற் போல எரிந்து கொண்டிருந்தது. அதனை சற்றும் பொருட்படுத்தாது மேலும் அவனை நெருங்கி வந்தவள் “ஐ லவ் கவின்.” என மீண்டும் கூறினாள்.
“ஏய்ய்ய்….” எனக் கர்ஜித்தவாறு அவளது முகத்தை இறுகப் பற்றி தன் முகம் நோக்கி உயர்த்தியவன் “உன்னைக் கொன்னு புதைச்சிருவேன்டி.” என உறுமினான்.
“நீங்க என்ன பண்ணினாலும் உண்மையை மறைக்க முடியாது ஆதி. நான் கவினைத்தான் காதலிக்கிறேன். அவன் நிஜம் இல்லைன்னாலும் கூட என்னோட காதல் அவனுக்கு மட்டும்தான்.” என்றவளை சட்டென கீழே தள்ளிவிட்டான் ஆதி.
“ஐயோஓஓ….” எனப் பதறியவள் கீழே விழும் முன்னரே அவளைத் தாங்கியவன் அவளுடைய வெண்ணிற கழுத்தில் தன் இரும்புக் கரத்தை அழுத்தமாக பதித்து இறுக்கினான்.
அவனது அழுத்தமான பிடியில் அவளுடைய கழுத்து எலும்புகள் ஒவ்வொன்றாக உடைவதைப் போல இருந்தது.
தாங்க முடியாத வலியில் அவள் கண்களின் நின்றும் கண்ணீர் கொட்டியது. வலியில் துடித்தவள் அவன் மார்பிலே தன் மெல்லிய கரங்களால் அடிக்கத் தொடங்கினாள்.
அத்தனை வலியிலும் அவனைக் காயப்படுத்த எண்ணியவள் திக்கித் திணறி “ஐ…. ஐ…. ல….வ் கவின்….” என்றவாறு கண்ணீர் வழிந்த கண்களோடு அவள் கூறி முடிக்க, ஆதியின் கண்கள் சிவந்து போயின.
அவனுடைய மூக்கில் இருந்து உதிரம் வழியத் தொடங்க, அவளை விடுவித்தான் ஆதி.
அவனது பிடியில் இருந்து விடுபட்டவள் தொப்பென தரையில் அமர்ந்து தொடர்ந்து இருமத் தொடங்கினாள். நா உலர்ந்து தொண்டை வரண்டு போனது அவளுக்கு.
கண்களில் நீர் நிறைந்து ஆறு போல் நிற்காமல் ஓட, அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தவன் அவளுக்கு பருகுவதற்கு தண்ணீரைக் கொடுத்தான்.
சட்டென வாங்கி அந்த கிளாஸில் இருந்த தண்ணீர் முழுவதையும் குடித்து முடித்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
பார்த்த கணம் ஆடித்தான் போனாள். அவன் மூக்கில் இருந்து வழிந்த உதிரம் அவளை விதிர்விதிர்க்கச் செய்தது.
உள்ளம் நடுங்கிப் போக, தன் கரத்தில் இருந்த கிளாஸை தவற விட்டாள் தன்மயா.
அவன் உதிரத்தை துடைக்க உயர்ந்த கரத்தை சிரமப்பட்டு அடக்கியவள் தன் பார்வையை தழைத்துக் கொண்டாள்.
‘என்னை எப்படிக் கதற விட்டான்.
உடலாலையும் மனசாலையும் எவ்வளவு டார்ச்சர் பண்ணிருப்பான்.
கொஞ்சமாவது என் மேல இரக்கப்பட்டானா.? எத்தனை நாள் நான் துடிச்சிருப்பேன்.?’ என எண்ணி தன் பார்வையை திருப்பிக் கொண்டாள் அவள்.
அவளது வதனத்தை இறுகப் பற்றி தன் முகத்தைப் பார்க்கச் செய்தவன் “வ்வேணாம் குயின். நான் ரொம்ப ரொம்ப கெட்டவன். என்னை கோபப் படுத்திப் பார்க்கிறது உனக்கு நல்லது இல்ல.” என்றவன் தன் புறங்கையால் வழிந்த உதிரத்தை அழுத்தி துடைத்துக் கொண்டான்.
“எ…. என்….ன பண்ணுவீங்க.?” எனத் திணறியவளின் முகத்தருகே நெருங்கியவன் “சத்தியமா கொன்னுருவேன்டி.” என அழுத்தமான குரலில் கூற, அவள் உடலோ சில்லிட்டுப் போனது.
அதிர்ந்து நடுங்கிப் போய் நின்றவளின் கரத்தைப் பிடித்து எழுப்பியவன் “இன்னைக்கு நைட் பன்னிரண்டு மணிக்கு நமக்கு கல்யாணம். தாலி வாங்கிட்டேன். தூங்கிராத. இன்னைக்கு நைட் உனக்கு நிறைய சர்ப்ரைஸ் இருக்கு.” என்றவாறு அவளுடைய கன்னத்தில் தட்டியவன் எழுந்து சென்றுவிட, அவளோ உறைந்துபோய் அசையாது அவ்விடத்திலேயே சிலையாகச் சமைந்து போனாள்.
நள்ளிரவில் கூட திருமணம் நடக்குமா….?
ஆதித்யன் எனும் டெவிலுக்கு சர்வ நிச்சயமாக நடக்கும்.
💙💜காதல் வேட்டை தொடரும்💜💙
