என் மன்னனோ! கண்ணனோ
5 என் மன்னனோ! கண்ணனோ
தேன்கனி பைலுடன் வந்து நின்றதை நிமிர்ந்து பார்த்தான் அவனது கைகள் அவளைஅணைக்கத்தான் சொன்னது.. கயிறு தான் இல்லை கட்டிப்போட.. ஆனால் அவளை தொட முடியவில்லை.. எத்தனை பெண்களை இரசித்து புசித்திருப்பான்.. ஆனால் இன்று இந்த இளம் சிறய புள்ளி மானை தொடக் கூட முடியாமல் தடுமாறினான்… தேவ் ஹர்ஷா. என்ன செய்வது என்று அவனது மூளை குழம்பிக் கிடந்தது. எங்கே இவளை பார்த்தோம்… இவளுடன் ஏழு ஜென்மம் வாழ்ந்த நெருக்கம் போல தோன்றியது அவனுக்கு.
மன்னவனின் மோகன பார்வையில் சற்று மயங்கித்தான் போனாள் மங்கை.
தன் எண்ண சிந்தனைகளை கட்டுக்குள் கொண்டு வந்து “மிஸ் தேன் மதுரா பிளீஸ் சிட்” என அவளின் அழகை மறைத்து வைத்திருக்கும் பைலின் மீது கோவம் கொண்டான்.
“சார்!! என் நேம் தேன்கனி.. நீங்க என்ன வேற நேம் சொல்லி கூப்டுறீங்க” என பட்டுக்குரலில் பேசினாள். அவள் பேசுவது கூட அவனுக்கு ராகமாக தோன்றி இரசித்து கேட்டான்.
“சாரி! மிஸ் தேன்கனி.. பைல்ஸ் கொடுங்க” என எழுந்து அவள் முன் கையை நீட்ட.. அவள் அங்கத்தில் பட்டுவிடும் என சற்று தள்ளி நின்று பைலை ஹர்ஷாவிடம் கொடுத்தாள்.
“சிறிது ஏமாற்றம் தான் அவனுக்கு.. அதுவும் நல்லதுக்குத்தான் எங்கே அவளின் அங்கம் தீண்டி என்னுள் இன்னும் புதைந்து கிடக்கும் மோக புயலை கிளற வேண்டாம்” என எண்ணி பைலை அவள் விரலை தீண்டாமல் வாங்கத்தான் நினைத்தான்.. ஆனால் அவனால் முடியவில்லை.. மீண்டும் அவள் விரலை தொட்டு தடவ ஆசை வந்து அதை அடக்கவும் வழி தெரியாமல் மெல்ல வருடித்தான் வாங்கினான் மன்னவன்.
மன்னவனின் செயலில் புயலில் சிக்கிய பூ போல அவள் மனம் துவண்டு போனது..பைலை கொடுத்துவிட்டு தள்ளி நின்று கொண்டாள்.
பெண்ணவள் தள்ளி நின்றது அவன் மனதை காயப்படுத்தியது.. அதை அவளிடம் வெளிக்காட்ட முடியாமல்… “நான் உங்கள உட்கார சொன்னதா ஞாபகம்..” என்று சற்று குரலை உயர்த்தி பேச.
“ம்ம்… உட்காரேன் சார்” என அவன் பக்கத்தில் இருந்த சேரை தள்ளி போட்டு அமர்ந்தாள்.
அவளது ஒவ்வொரு அசைவையும் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டுதான் இருந்தான் அந்த மாயகண்ணன் தேவ் ஹர்ஷா.
பைலை கையில் வாங்கி ஓபன் செய்து பார்க்க அதில் ஒரு துளி கவனம் கூட செலுத்த முடியவில்லை அவனால்.. பைலை டேபிளில் வைத்துவிட்டு “தேன்கனி அக்கவுண்டஸ்ல எந்த டவுட் இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க நான் கிளியர் பண்ணுறேன்.. பென் டிரைவ் லேப்டாப்ல போட்டு பைல் ஓபன் பண்ணுங்க நான் உங்களுக்கு சில முக்கியமான டீட்டைல்ஸ் சொல்லிக்கொடுக்குறேன்” என்று அவளிடம் கூற….
அவளோ நானா சார் என்றால் பார்க்கலாம்..
நெற்றியை தேய்த்தவன் அக்கவுண்ட்ஸ் பத்தி தெரியாதவங்கள என் தலையில கட்டிட்டு இந்த பரதன் அங்கிள் வெளிய போய் ஜாலியா இருக்காரு என அவனது மனதை கட்டுப்படுத்த முடியாமல் அவளிடம் கோபத்தை காட்ட எண்ணினான்.
“ஆமா நீங்கதான் போடணும்.. டைம் வேஸ்ட் பண்றது எனக்கு பிடிக்காது” என எரிந்து விழுந்தான்.
ஏனோ அவளுக்கு சிங்கத்தின் குகைக்குள் மாட்டிய உணர்வு ஏற்பட்டது.. சிங்கத்தின் குகைக்குள் நுழைந்தாயிற்று.. அதன் பக்கத்தில் போவத்தற்குதான் இப்போது பயம் வந்து விட்டது அவளுக்கு.
“என்ன? தேன் என்ன பார்த்தா சிங்கம் போல இருக்கா?.. என் பக்கத்துல வர இப்படி பயப்படுறீங்க” என இதழை கோணலாக வைத்து நகைத்தான்.
லேப்டாப்பில் பென் டிரைவ் போட வேண்டும் என்றால் அவன் நகர வேண்டும்.. அப்போதுதான் அவன் மீது உரசாமல் லேப்டாப்பில் ஓர்க் பண்ண முடியும்.
“அப்..அப்டியல்லாம் இல்ல சார்.. நீங்க கொ..கொஞ்சம் இந்த பக்கம் வரிங்களா” என அவளது வாயிலிருந்து வார்த்தைகள் தந்தி அடித்தது..
“ஓ ஷுயர்”… என அவன் நகர்ந்ததும் கையிலிருந்த பென்டிரைவை எடுத்து லேப்டாப்பில் சொருகினாள்.. அந்த அக்கவுண்ட்ஸ் அவனது லேப்டாப்பிலும் இருக்கு.. ஆனால் அவளை சீண்டிப்பார்க்கவும் எனக்கு ஏற்பட்ட அதே உணர்வுகள் அவளுக்கு ஏற்படுதா… என அறிந்து கொள்ள அக்கவுண்ட்ஸ் டவுட் சொல்லி தரேன் என்னும் வகையில் அவளுக்கு சோதனை கொடுக்க பார்த்தான்.
லேப்டாப்பில் பென் டிரைவ் போட்டு பைல் ஓபன் செய்தாள்.. பேன் காற்றில் அவளது இடுப்பு சேலை விலக.. பெண்களுக்கே உண்டான அச்சத்தில் கைகள் தானாக இடுப்பு சேலையை இழுத்து விட்டுக்கொண்டாள்.. ஆனால் அதை ஹர்ஷாவும் கவனிக்க தவறவில்லை.. வெள்ளை வெளேர்னு தெரியும் இடையை தடவி பார்க்க எண்ணம் வந்தது.. அந்த இடம் பல முறை முத்தம் இட்ட ஞாபகமும் அவனை கொல்லாமல் கொன்று தின்றது.. தலையை பிடித்து அவனது இருக்கையில் அமர்ந்தான்.
பைலை ஓபன் செய்து விட்டு சார் என திரும்பி பார்க்க தலையை பிடித்து அமர்ந்திருந்தான் தேன்கனியின் தேவ்.
கனி கூப்பிட்டது காதில் விழாமல் இல்லை.. அவனால் நிகழ் காலத்துக்கு வரமுடியவில்லை.. அவன் நிமிரவில்லை… என தேவ் சார் என்னாச்சு என எழுந்து நின்றாள்.
“தேவ் சார்” என்றதும் பட்டென கண்திறந்து “ஹேய் ஹனிஇஇஇ இப்ப என்னை என்ன சொல்லி கூப்ட” என மோக பித்துடன் அவளது தோளை பிடித்து தன் மார்பில் அவளது மென்மைகளை அழுத்தி தன்னுடன் சாய்த்துக்கொண்டான்.
அவளோ கட்டுபாடான மலைஜாதி பெண்.. கணவனை தவிர யாரும் தொட்டுவிடக் கூடாது என இருக்கும் பெண்மணி.. இப்போது ஆடவனது மார்பில் சாய்த்துக்கொண்டதை எண்ணி தன் மீது தீக்கணலை கொட்டியது போல.. “விடு.. விடுங்க தேவ் சார்.. இது போல இனி ஒரு முறை நடக்காதீங்க” என அவனிடமிருந்து விலகி நின்றாள்.
ஹர்ஷா அணைத்ததில் அவளது ஆடைகள் கலைந்து.. தலைமுடிகளும் கலைந்து போயிருந்தது..
“சாரி!! சாரி!! நீங்க கிளம்புங்க நாளைக்கு பார்க்கலாம்…” என அவள் முகம் பார்க்காமல் கூறினான்.
அவளோ விட்டாள் போதும் என கதவை திறந்து வெளியே வந்து அவளது அறைக்கு வேக நடைபோட்டு புகுந்து அங்கேயிருந்த ஷோபாவில் அமர்ந்து நன்றாக மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டாள்.. மன்னவன் தொட்ட இடமெல்லாம் அவளுக்கு வலித்தது.. அவனது பிடி அப்படி வலுவாக இருந்தது.. இந்த தேவ் சாருக்கு என்னாச்சு… என்னப் பார்த்து வேற பேர் சொல்லி கூப்டுறாரு.. இவரு ஒரு வேளை சைக்கோவா இருக்குமோ..இனி நாம இங்க வேலை செய்யறது சரியா இருக்குமா?.. அம்மா சொன்னது போல வேலைக்கு வந்தா இது போல நடக்குமா? என பல முறை யோசித்து பார்த்து தலைவலி வந்தது தான் அவளுக்கு மிச்சம். கூடவே கண்ணீரும் சேர்ந்து வந்தது.
ஹர்ஷா குழம்பியது இல்லாமல் கனியையும் சேர்த்து குழப்பிவிட்டிருந்தான்.
கனி அறையை விட்டு போனதும் “ஆஆஆ…” எனக் கத்திக்கொண்டு அங்கிருந்த பொருட்களையெல்லாம் உடைத்து போட்டான்.. இவ யாரு என் மண்டைக்குள் வண்டு புகுந்து குடைவது போல இருந்தது.
உடனே போனை எடுத்து சைக்காட்ரிஸ்ட் டாக்டருக்கு போட்டான்.. ஹர்ஷாவிற்கு நன்கு பரிச்சயம் ஆனவர் அவர்.
“சொல்லு ஹர்ஷா எப்டியிருக்க.. இப்ப எங்க இருக்க.. இந்தியா வந்திருக்கியா” என கேட்க…
“சார் நான் இப்பவே உங்கள பார்க்க வரேன்”…
“எனி ப்ராப்ளம்.”
“ஆமா சார் வந்து சொல்றேன்” என போனை அணைத்து விட்டு ரெஸ்ட்ரூம் சென்று முகத்தை தண்ணீரில் பல முறை கழுவி.. கண்ணாடியில் பார்க்க அவனின் எண்ணங்கள் தேன்மதுராவை பற்றியே இருந்தது.. நேற்றுவரை வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்தவன்.. இன்று அந்த சந்தோஷத்தை இழந்து நிற்கிறான்.. இப்படி ஒரு நிலைமை வரும் என கனவு கூட கண்டிருக்க மாட்டான் ஹர்ஷா.
கார் கீயை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேறினான்.. அவன் வேகமாக செல்வதை பார்த்த ரமா என்ன எம்.டி சார் இவ்ளோ புயல் வேகத்துல நடக்குறாரு என ஆச்சர்யமாக பார்த்தாள்.
காரை எடுத்தவன் நேராக சென்றது மனநல மருத்துவர் டாக்டர் நந்தாவிடம் தான். அவரும் ஹர்ஷாவிற்காக காத்திருந்தார்..
இங்கே மாலையானதும் செல்வம் தேன் கனியின் போனுக்கு அழைத்தார்..
கனி ஷோபாவில் கண் முடி அமர்ந்தவள் அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டாள்.. ரமா அவள் அறைக்கு வர கனி தூங்குவதையும் அவள் போன் அடிப்பதையும் கண்டு “என்ன இவ இப்டி தூங்குறா படிக்கும் போது கூட க்ளாஸ்ல கூட தூங்க மாட்டாளே” என போனை எடுத்து சொல்லுங்கப்பா கனி ரெஸ்ட் ரூம் போயிருக்கா என சமாளித்து பேச.
“அப்டியாம்மா மணி ஆறு ஆச்சு வீட்டுக்கு கிளம்பணும்ல அதான் கேட்டேன்” என்றார்.
ரமா போனில் பேசும் சத்தம் கேட்டு கண் விழித்து பார்த்தாள்.. “ஏய் அப்பா பேசுறார்டி” என போனை கனியிடம் நீட்ட…
போனை வாங்கி “அப்பா நான் கிளம்பிடேன்ப்பா” என பேக்கை எடுத்து மாட்டினாள்.. இருவரும் யாரிடம் சொல்லி போவது என தெரியாமல் விழித்து கிளம்பி வெளியே வந்தனர்.. இன்னொரு முறை தேவ் சார் ரூமுக்கு நாம போகக் கூடாது.. அவர் கண்ணுல நாம படக்கூடாது என மனதில் எண்ணிக்கொண்டு வந்தாள்… பரதன் ஆபிஸ் உள்ளே வந்தார்.
“என்னம்மா கிளம்பிட்டீங்களா?
“ஆமா சார்? என்றனர் இருவரும்..
“எப்டி போவீங்க.. நான் ஆட்டோ புடிச்சு போயிடுவேன்.. கனிய கூட்டிட்டு போக அவங்க அப்பா வந்துருவாரு” எனக் கூற…
“சரி கிளம்புங்க” என ஹர்ஷாவின் அறைக்குச் சென்றார்.
இருவரும் வெளியே வந்தனர்.. அங்கே ரமாவுக்கு ஆட்டோவை பிடித்து வந்திருந்தார் செல்வம்.
ரமாவை ஆட்டோவில் ஏற்றிவிட்டு.. “கனி ஏறுமா” என மகளின் முகத்தை பார்த்தார்.. அவளது முகம் என்றும் பிரகாசமாக ஒளிவீசும்.. இன்று ஏனோ அந்த ஒளி அவளது முகத்தில் இல்லாது போக “கனிம்மா என்னாச்சு உன் முகம் வெளுத்துச் சோக்கையா இருக்கு” என பாசமாய் கன்னத்தை தடவினார்.
“அப்பா முதல் நாள் வேலை அதிகம்ப்பா” என சொல்லி சமாளிக்க.
நீ வேலைக்கு போக வேண்டாம் கனி.. ஒரு “ஆறுமாசம் வீட்ல ரெஸ்ட் எடு..” இல்லப்பா ஒரு ஆறுமாசம் தானே எனக் கெஞ்சினாள் கனி.
“ம்ம்… சரி கண்ணு அப்பா சொன்னா கேட்கமாட்ட.. பைக்ல ஏறு இருட்றதுக்குள்ள வீடு போய் சேரணும்” என மகளை பைக்கில் ஏத்தி கிளம்பினார்.
பைக்கில் செல்லும் போது “கனி மத்தியானம் எங்க அக்கா போன் பண்ணியிருந்தாங்க.. வர வெள்ளிக்கிழமை காளி கோவில்ல உனக்கும் முத்துவுக்கும் பரிசம் போடலாம்னு சொன்னாங்கடா.. நானும் சரின்னு சொல்லிட்டேன் கனி.. நீ என்ன சொல்ற..” என பதுவுசாக கேட்டார்.
“எனக்கு சம்மதம்பா” எனக் கனி கூறியதும் அத்தனை சந்தோஷம் செல்வத்துக்கு.
பரதன், ஹர்ஷாவின் அறைக்குள் செல்ல அங்கே பொருட்கள் எல்லாம் உடைந்து சிதறி கிடந்தது.. அவர் பதறி ஹர்ஷாவிற்கு போன் போட அது ரிங்காகிக்கொண்டே இருந்தது..
ஹர்ஷாவிற்கு என்ன நடந்திருக்கும்?
நெஸ்ட் எபிசொட் பிளாஷ் பாக்
அடுத்து எபிசொட் ரெடியா இருக்கு ஒரு 30 லைக் போடுவீங்களா பிரெண்ட்ஸ் .. லைக் வர வர குறைத்து போகுது
