மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு

மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு


மோகம் – 2 


பெண்ணவளை பின்னிருந்து அணைத்தவன் அவள் வயிற்றை வருடி குழந்தையோடு பல கதை பேச, தன்மயாவின் உடலோ வெறுப்பில் மூழ்கியது. 

அவள் எஞ்ஞான்றும் வெறுக்கும் ஒருவனின் கரம் அவள் உடலில் எங்கோவெல்லாம் படர, அவனுடைய கரங்களை பிய்த்து எறிய வேண்டுமென்ற வெறியே அவளுக்குள் சடுதியில் தோன்றியது.

ஆனால் அவனுக்கு அப்படி ஒரு வெறுப்பும் இல்லை போலும். அவனுடைய இரும்பை ஒத்த கரங்களோ தாராளமாக அவளுடலை வருடி கதை பேசின.

அவளை இன்னும் இன்னும் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டவன் அவனுடைய குழந்தையை கொஞ்சத் தொடங்கினான். 

“சீக்கிரமா டாடிகிட்ட வந்துருங்க ஏஞ்சல்.” என்ற அவனுடைய கொஞ்சலில் அவளுடைய இதயத் துடிப்பு ஏகத்துக்கும் எகிறியது.

அதற்கு மேல் சகிப்புத் தன்மை அற்ற தன்மயாவோ அவனுடைய கரத்தை வலுக்கட்டாயமாக எடுத்து விலக்கி விட்டவள் அவனுடைய அணைப்பில் இருந்து விலகிப் படுத்தாள். 

“ப்ச் என்னாச்சுடி.?”

“பி…. பிடிக்கலை.” 

“பரவால்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.”

“முடியாது.” என்றவளின் தோளில் அழுத்தமாக கரம் பதித்தான் அவன்.

“டோன்ட் டச் மீ ஆதி.” சீறினாள் அவள்.

“ஹலோ மேடம்  நான் ஒன்னும் உங்களைத் தொடலை. என் குழந்தையைத்தான் ஹக் பண்ணினேன்.” 

“உங்க குழந்தையை ஹக் பண்ணனும்னா அது வெளியே வந்ததும் என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க. ப்ளீஸ் இப்போ இதெல்லாம் வ்வேணாம்.”

“பேசி முடிச்சிட்டியா ட்ராமா குயின்.? நாட் பேட் நல்லாதான் பேசுற. நாளைக்கு அவார்ட் தர்றேன்.” என்றவன் மீண்டும் அவளது உடலைத் தீண்டினான்.

“ என்னைத் தொட உனக்கு எந்த உரிமையும் இல்ல ஆதி. இந்த குழந்தைக்காக மட்டும்தான் நான் இன்னும் இந்த வீட்ல இருக்கேன். என்கூட சேர்ந்து இன்னொரு உயிர் அழியிறதுல எனக்கு இஷ்டம் இல்ல. இன்னும் அஞ்சு மாசத்துல குழந்தையை உன்கிட்ட கொடுத்துட்டு நான் எங்கேயாவது போயிடுறேன். ப்ளீஸ் அதுவரைக்கும் என்னை நிம்மதியா இருக்க வ்விடு.” என்றவளின் குரல் சோர்ந்து ஒலித்தது.

“சாரி டு சே திஸ். என்னோட அண்ணாவைக் கொலை பண்ண உன்னை நான் கடைசி வரைக்கும் சந்தோஷமா வாழ விடமாட்டேன்.” என அழுத்தமான குரலில் பதில் கொடுத்தான் ஆதித்யன்.

அவனுடைய வார்த்தைகளில் அவளுக்கு சிரிக்கத்தான் தோன்றியது. அவள்  சந்தோஷமாக வாழ்ந்தால் தானே அந்த சந்தோஷத்தை அழிக்க முடியும்.? மகிழ்ச்சிக்கும் எனக்கும் எட்டாம் பொருத்தம் போலும். என எண்ணிக் கொண்டவள், “சந்தோஷமா….? நான் எப்போ ஆதி சந்தோஷமா இருந்திருக்கேன்.? எனக்கு எந்த சந்தோஷமும் தேவலை ஆதி. ஆனா கொஞ்சமாவது நிம்மதி வ்வேணும் ப்ளீஸ்.” என அவனிடம் மன்றாடினாள் அவள். 

அவன் நெருங்கி வரும் போதெல்லாம் அவளுடைய பழைய எண்ணங்கள் அவளைப் பாடாய்ப் படுத்தின. தீப் படுக்கையில் படுப்பதைப் போல உணர்ந்தவள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவனை விட்டு விலகியே இருக்க முயன்றாள். 

ஆனால் அதற்கு அவனும் சம்மதிக்க வேண்டுமே. அவளுடைய விலகல் அவனுக்கு உச்சகட்ட சினத்தையும் அவளைச் சீண்டிப் பார்க்கும் எண்ணத்தையும் தோற்றுவித்தது.

மீண்டும் அவனுடைய கரம் அவள் உடலைத் தீண்ட,  “சே….! வெறுப்பா இருக்கு ஆதி.” என வீறிட்டாள் அவள்.

“ஓ….? நான் தொட்டா வெறுப்பா இருக்கா.? நம்புற மாதிரி இல்லையே. ஹாங் நீ இந்த ஆதியை காதலிச்சவ தானே.? இப்போ என்ன புதுசா வெறுப்பா இருக்கு.? என்கூட படுக்கைல எத்தனையோ எல்லையைத் தாண்டி வந்தவதானே நீ. அப்போ அமைதியாதானே இருந்த. இப்போ மட்டும் ஏன்டி வெறுப்பா இருக்குன்னு நடிக்கிற.?” விசமத்துடன் வார்த்தைகளைக் கொட்டினான் ஆதி.

சட்டென தன் காதுகளைப் பொத்திக் கொண்டாள் அவள். அவளுடைய அழகிய அஞ்சன விழிகள் உவர் நீரால் நிறைந்து போயின. அவனுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் தேள் கொட்டியதைப் போல வலிக்கச் செய்ய, விட்டத்தை வெறிக்கத் தொடங்கினாள் மாது.

அவள் உடலோ அவனுடைய தொடுகைக்கு எந்த துலங்கலையும் காட்டாது இறுகிப் போனது. 

அவளது அமைதியைக் கண்டு புருவம் உயர்த்தியவன், அவளை வேண்டுமென்றே சீண்ட எண்ணினான்.
 
அவளுடைய காதோரம் நெருங்கி “ஹாய் மயா பேபி. ஐ லவ் யு. நாம லவ் மேக் பண்ணலாமா….? ம்ம்….?” என தன் குரலை மாற்றி கவின் போலவே நடித்துக் காட்ட பதறிப்போனாள் தன்மயா. 

அவன் அவ்வாறு பேசியதும் இடையில் நடந்த அத்தனையும் அதிர்ச்சியில் மறந்து தான் போனது அவளுக்கு. 

ஒரு மாத காலம் கவின் எனும் நபரோடு பழகியவளுக்கு அதே குரல் கேட்டதும் கவின்தான் வந்துவிட்டான் என நம்பினாள் அவள். இது அத்தனையும் ஆதியின் நடிப்பு என்பது அக்கணம் மிகுந்த பதற்றத்தில் அவளுக்கு மறந்தே போனது.

“ப்ச்…. கிட்ட வா மயா பேபி” என அவளை இழுத்து தன் கை வளைவிற்குள் கொண்டு வர, அவளோ அந்த அழைப்பில் தன்னை மறந்து “கவின்…. நோ….. தொ…. தொடாத…. நோ…. வ்விடு….” என சத்தமாக அலறியவள் படுக்கையை விட்டு எழுந்து ஓட ஆதியோ ஸ்தம்பித்துப் போனான்.

“ஏய் பாத்துடி…. ஓடாத. இட்ஸ் மீ ஆதி.” என அவனும் சட்டென படுக்கையை விட்டு எழுந்தான். 

அந்த சில நொடிகளுக்குள்ளேயே அவள் ஆதியா கவினா என்ற குழப்பத்தில் தலையைப் பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்து விட, அப்போதுதான் அவளுடைய மனக் குழப்பத்தை கவனித்தான் ஆதி.

“ஓ மை காட்.” என தன் தலையில் தட்டிக் கொண்டவன் அவள் அருகே சென்று மண்டியிட்டு அமர்ந்தான்.

அவளது கலங்கிய விழிகள் அவனை சந்தேகத்தோடு நோக்கின.

“குயின் ரிலாக்ஸ். கவின்னு யாருமே இல்லை. மறந்துட்டியா.? ஆதி மட்டும்தான் உண்மை. ரிலாக்ஸ் ஆகு.” என நிதானமாக அவன் புரிய வைக்கத் தொடங்கிய பின்னரே விடுபட்ட நினைவுகள் அவளை வந்தடைந்தன.

அந்த மயா பேபி என்ற அழைப்பும் மென்மையான தொடுகையும் ஐ லவ் யு என்ற வார்த்தைகளும் அவளுடைய மூளையின் செயல்திறனை மழுங்கடித்து விட்டன போலும். ஓர் நொடி கவினுடைய அணைப்பிற்குள்தான் இருக்கிறோம் என எண்ணி விதிர்விதிர்த்துப் போனாள் பேதை.

அவளுடைய தவிப்பையும் தடுமாற்றத்தையும் கண்டு அவளுடைய நடுங்கிய வெண்டைப் பிஞ்சு விரல்களை தன் கரங்களுக்குள் பொத்தி வைத்தவன், அவளுடைய விழிகளையே இமைக்காது பார்த்தான். 

“நத்திங் டு வெரி. நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல தன்மயா. லுக் அட் மீ.” என்றவன் அவளுடைய முகத்திற்கு நேரே சொடக்கிட்டான். 

அவள் அதீதமான கற்பனைச் சுழலுக்குள் சிக்கிக் கொண்டாள் என்பதனை உணர்ந்த அந்த மனநல மருத்துவன் மீண்டும் அவள் மனதில் பதியும் படி அழுத்தமான குரலில் அவளை அழைத்தான்.

“தன்மயா.”

“………….”

“தன்மயாஆஆஆ.” என்ற உரத்த அழைப்பில் சட்டென விழிகளை சிமிட்டியவள் “ஹாங்….?” என அதிர்ந்து விழிக்க, அவனுக்குள்ளே ஏதோ ஒன்று உடையும் உணர்வு.

“லுக் அட் மை ஐஸ். என்னோட கண்ணைப் பாரு. கூல். டென்ஷன் ஆகாத.” என மீண்டும் மீண்டும் கூற சற்றே இயல்புக்கு வந்த தன்மயாவிற்கு உடலின் நடுக்கம் குறைந்து உண்மை புரிந்தது.

அவள் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்து விட்டாள் என்பதனை உணர்ந்தவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
 அவளுடைய இத்தகைய உணர்வு வெளிப்பாடும் உச்சகட்ட அதிர்ச்சியும் அவள் வயிற்றினுள் வளரும் குழந்தைக்கு நல்லதல்லவே. 

தன்னைத் தானே கடிந்து கொண்டவன் அவளை இனி மனரீதியாக துன்புறுத்தக் கூடாது என்ற முடிவினை எடுத்தான்.

அவளுடைய வெறித்த பார்வையை பார்த்து புன்னகைத்தவன் “என்னை முறைச்சது போதும். வந்து தூங்கு வா.” என மென்மையான குரலில் அழைத்தான்.

அடுத்த நொடி அடங்காத சீற்றத்தில் ஆதியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் தன்மயா. ஏமாற்றம் தாளாது தன் கூரிய நகங்களால் அவனுடைய கன்னத்தில் கீறி காயப்படுத்தி மீண்டும் மீண்டும் அவனைத் தாக்க, அதிர்ச்சியில் உறைந்தவன் சட்டென அவளைத் தடுத்துப் பிடித்தான். 

அவளோ அடங்காது அலறியவாறு அவனைக் காயப்படுத்த முன்னேற அவளை இறுக அணைத்துக் கொண்டான் அவன். 

அவனுடைய கரங்களுக்குள் ஆக்ரோஷமாகத் திமிறியவளின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக சமாதானம் அடைய, விம்மி வெடித்த அழுகையோடு அவன் மார்போடு ஒன்றிக் கொண்டாள் பேதை.

ஏங்கி ஏங்கி அழுதவளின் முகம் அவனுடைய வெற்று மார்பில் புதைந்து போனது. 

“எ…. எதுக்கு என்…. என்னை ஏமாத்தினீங்க….? ஏ…. ஏன் இப்படி பண்ணீங்க ஆது.? நான் கொ…. கொலை பண்ணலை. நான் எந்தத் தப்பும் பண்ணலை. ச…. சத்தியமா நான் தப்பு பண்ணலை. என்னை எதுக்கு இந்த மாதிரி கஷ்டப்படுத்துறீங்க….? ஏன் ஏன் என்கிட்ட நடிச்சீங்க.? என்…. என்னால தாங்க முடியலையை ஆதி. ஒரு மாசமா உ…. உங்களால எப்படி நடிக்க முடிஞ்சுது. என்னோட நிம்மதி சந்தோஷம் எல்லாத்தையும் எதுக்காக கொன்னு புதைச்சீங்க….? என…. எனக்கு எதுவுமே புரியலை. எதையுமே நம்ப முடியலை. எது நிஜம்.? எது பொய்னு சத்தியமா புரியலை. இப்போ இருக்கிற நீங்கதான் நிஜமா.? இல்லை இது கூட நடிப்பா? ப…. ப…. பயம்மா இருக்கு ஆதி. இப்படி மென்டல் டார்ச்சர் பண்றதுக்குப் பதிலா நீங்க என்னைக் கொன்னுருக்கலாம்.” என்றவள் கேவிக் கேவி அழுதாள்.

அவளுடைய விழி நீர்த் துளிகள் அவனுடைய மார்பு உரோமத்தை நனைய வைத்தன. 

“உஷ்ஷ் போதும் குயின். இப்படி அழுகுறது குழந்தைக்கு நல்லது இல்ல.” என்றதும் அவளுடைய உடல் விறைத்துப் போனது.

பொங்கிப் பெருகிய அழுகையை சட்டென துடைத்துக் கொண்டவள் அவனிடம் இருந்து விலகி நடக்கத் தொடங்கினாள்.
 மேஜை மீது  இருந்த தண்ணீர்ப் போத்தலை எடுத்து பருகியவள் அந்த அறையின் பால்கனி நோக்கிச் சென்றாள். 

அந்த பால்கனியில் தொங்க விடப்பட்டிருந்தது ஒரு பெரிய ஊஞ்சல். மெல்ல மெல்ல கனத்த மனதோடு ஊஞ்சல் அருகே சென்றவள் அதில் ஏறி அமர்ந்து அப்படியே சுருண்டு படுத்துக் கொண்டாள். 

இரவு நேரத்தில் வீசிய தென்றல் காற்றோ மங்கையவளுக்கு அந்நொடி அன்னையாகிப் போனது போலும். மென்மையாக அவளுடைய உடலை தீண்டி தழுவி சமாதானப்படுத்தத் தொடங்கியது. 

அவளுடைய விழிகள் சிந்திய நீர்த் துளிகள் யாவும் அந்தக் கண்ணாடி ஊஞ்சலில் பட்டு தெறிக்கத் தொடங்கின. 

உணர்வுகள் மரத்துப் போக வேதனையோடு விழிகளை மூடிக் கொண்டவள் தென்றல் காற்றின் வருடலில் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள். 

ஆதியின் மனமோ தன்மயாவின் செயற்பாடுகளில் படபடத்துப் போனது. அவள் பால்கனி நோக்கி சென்றதை தூரத்தில் இருந்தே பார்த்தவன் அவளை நெருங்காது விலகியே நின்றான்.

உடல் மெலிந்த உருவத்தோடு அவள் ஊஞ்சலில் சுருண்டு படுத்திருக்கும் காட்சி அவனுக்கோ பூங்கொடி ஒன்று ஊஞ்சலில் படர்ந்திருப்பதைப் போலவே இருந்தது. 

ஒரு மணி நேரம் அசையாது அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் பின் அவள் தூங்கி விட்டாள் என்பதை உணர்ந்ததும் தடித்த போர்வையை எடுத்து வந்து அவளுக்குப் போர்த்தி விட்டான். 

மழை பெய்து ஓய்ந்திருந்த வானத்தைப் பார்த்தவன் தன்னுடைய சகோதரனையும் தன்மயாவையும் எண்ணி வேதனை கொண்டான். 

அவனால் ஒரு போதும் தன்மயாவின் தவறை மறக்கவோ மன்னிக்கவோ முடியாதென்றே தோன்றியது. 

அவளுடைய பதினெட்டு வயதில் அவள் செய்த சிறு தவறு ராணாவின் வாழ்வை அழித்ததோடு மட்டுமல்லாமல் ஆதியின் வாழ்க்கையில் இருந்த நிம்மதியையும் அல்லவா வேரோடு சாய்த்து விட்டது.

காலங்கள் கடந்தும் மாறாத வலி அவனுடையது. 

யுகங்கள் பல கடந்தாலும் மாறாத வெறுப்பு அவளுடையது.

மன்னவனின் வலியும் மங்கையின் வெறுப்பும் ஓங்கி நிற்கும் போது மனதில் இருந்த மெல்லிய காதல் கூட மாண்டுதான் போனது போலும்.
 
 
 💜💙காதல் வேட்டை தொடரும்💙💜

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *