மோகத்தை வென்றவளே பாகம் இரண்டு
மோகம் – 6
“பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் மிகப் பீழை இருக்குதடி தங்கமே தங்கம்” என்ற பாரதியின் வரிகள் அழையாத விருந்தாளியாக தன்மயாவின் மனதினுள் அந்நொடி புகுந்து கொண்டன.
இருபத்தொரு வயதே நிரம்பிய இக் காரிகைக்கு திருமணம் எனும் பந்தம் மிகப் புனிதமான ஒன்றாக இருக்கையில் அவ் எண்ணத்தை தகர்த்தி விட்டு ஏனோ தானோ என திருமண ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தான் ஆதி.
திருமணம் என்பது ஆயிரக்காலத்துப் பயிர் அல்லவா?
பந்தல்கால் நடுதல், பெண், மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயதார்த்தம், பொன் உருக்குதல், பத்திரிகை வாசித்தல், கன்னிகா தானம் செய்தல், சுபமுகூர்த்தம் பார்த்ல், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், ஏழடி வலம் வருதல் என எத்தனை எத்தனை சடங்குகள். எத்தனை எத்தனை சம்பிரதாயங்கள் திருமணத்தில் உள்ளன.
இவை ஏதும் இன்றி நள்ளிரவில் அதுவும் அவள் எஞ்ஞான்றும் வெறுத்து ஒதுக்கும் ஆண் மகனுடன் திருமணம் எனும் போது அவளுடைய மன நிலை எப்படி இருக்கும்.?
அந்த நொடியே இந்த இடத்தை விட்டு கண் காணாத இடம் நோக்கி ஓட வேண்டும் போல இருந்தது அவளுக்கு.
அவளுடைய எண்ணங்கள் பற்றி எதுவும் அறியாதவன் அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்துக் கொண்டு படிகளில் ஏறினான்.
புயலில் இழுபட்டுச் செல்லும் சிறு பூங்கொடி போல தள்ளாடியவாறு அவன் பின்னே சென்றாள் அந்த அழகி.
அந்த மொட்டை மாடியில் ஏறியதும் அவளுடைய விழிகள் விரிந்தன.
அந்த மொட்டைமாடி எங்கும் விஸ்டேரியா எனும் அடுக்கடுக்கான அழகான மலர்க் கொடிகள், வெளிர் ஊதா நிறத்திலும் வெண்ணிற நிறத்திலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அந்த அழகிய விஸ்டேரியா மலர்க் கொடிகளை இன்னும் அழகு படுத்தும் வகையில் அடர் ஊதா நிற ஃபோகஸ் லைட்கள் அந்த கொடிகளின் பின்னே பொருத்தப்பட்டு அந்த இடமே ஏதோ ஓர் பூ வனத்திற்குள் நுழைந்ததைப் போல அவளை உணர வைத்தது.
“வெல்கம் மை டியர் ட்ராமா குயின்.” என இடை வரை குனிந்து அவளை வரவேற்றவன் மீண்டும் அவளது கரத்தைப் பற்றி அழைத்துக் கொண்டு நடக்கத் தொடங்க, சடசடவென்ற சத்தத்தோடு சிறிய சிறிய அலங்கார விளக்குகள் அந்த இடம் முழுதும் பிரகாசமாகவும் பல வண்ண நிறங்களிலும் ஜொலிக்கத் தொடங்கின.
அவளுடைய பாதங்கள் மென்மையான தரையை உணர தன் பார்வையை தரையை நோக்கித் திருப்பினாள்.
கீழே சிவப்பு நிற ரோஜாக்களின் இதழ்கள் அவள் நடந்து வரும் பாதைக்கு சிவப்பு கம்பளமாக மாறிப் போயிருந்தது.
“அச்சச்சோ….” என துள்ளி அந்த இதழ்களை மிதிக்காது தரையில் கால் பதித்து நின்றவளை கேள்வியாக பார்த்தான் ஆதி.
“இந்த ரோஜா இதழ் எல்லாம் பாவம் இ…. இல்லையா.? இதை மிதிச்சு நடக்க எனக்கு பி…. பிடிக்கலை. என்னை கஷ்டப்படுத்தியது போதாதுன்னு இந்தப் பூவையும் எதுக்கு ஹர்ட் பண்றீங்க.?” என அழுகுரலில் கேட்டாள் அந்த மெல்லிய மனம் கொண்ட கொடியிடையாள்.
“ட்ராமா பண்ண ஆரம்பிச்சிட்டியா குயின்.? என் மூடை மாத்தாம வா.” என்றவாறு மீண்டும் அவளுடைய கரத்தைப் பற்றி அழைத்துச் சென்றான்.
இல்லை இல்லை இழுத்துச் சென்றான்.
அழகிய இயற்கை தாவரங்களினால் அழகுற அமைக்கப்பட்டிருந்த மண மேடையில் அவளை அமர்த்தியவன் அவளுக்கு அருகே தானும் அமர்ந்து கொண்டான்.
அந்த நள்ளிரவு நேர திருமணத்திற்கு சாட்சியாக குளிர்மையை பரப்பி தீயாய் தகித்துக் கொண்டிருந்த அவளுடைய உள்ளத்தை சாந்தப் படுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தது பால் நிலா.
அவளுக்கு முன்னே ஓம குண்டம் அமைக்கப்பட்டிருக்க, அதனை பார்த்த கணம் சரேலென வழிந்தது கண்ணீர்.
“வ்வேணாம் ஆதி. ப்ளீஸ்…. இப்படி வேணாம். இது கல்யாணமே இல்ல.” என அழுதவளை அலட்சியமாக பார்த்தவன் “எனக்கு இதுதான் கல்யாணம்.” என்றான்.
அவனோ தனக்குப் பின் பக்கமாக இருந்த ரிமோட்டை எடுத்து எதையோ அழுத்த அடுத்த நொடியே மேள, தாள இசை அங்கே சங்கீதமாக முழங்கத் தொடங்கின.
அந்தனரின் மந்திரம் கூட மியூசிக் பிளேயரில் துல்லியமாக ஒலிக்க தன்மயாவோ ஆடித்தான் போனாள்.
இப்படி ஒரு திருமணத்தை அவள் திரைப் படங்களில் கூட கண்டது இல்லையே.
நள்ளிரவு நேர கூதல் காற்று உடலைத் துளைக்க, தன் கரங்களை தன் உடலுக்கு குறுக்காக சுற்றிப் போட்டவள் முழங்கால்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டு கதறி அழத் தொடங்கினாள்.
எந்தப் பெண்ணால்தான் பிடிக்காத ஒருவனை கணவனாக ஏற்க முடியும்.? வேத காலத்தில் இருந்த எட்டு வகையான திருமண முறைகளை பற்றி தெரிந்து வைத்திருந்தவளுக்கு ஆதியின் திருமண முறையோ மூச்சடைக்க வைத்தது.
தோளில் இருந்து வழிந்த பட்டுப் புடவையை சட்டென கரத்தால் பிடித்துக் கொண்டவள் மீண்டும் தன் மேல் அதனை போர்த்திக் கொண்டாள்.
“புடவையை கட்டச் சொல்லித்தானே கொடுத்தேன். பெட்சீட் மாதிரி போர்த்திகிட்டு வந்திருக்க.?” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் “என்னை விட்ரு ஆதி ப்ளீஸ்.” என்றாள்.
அவனோ அவளை நெருங்கியவன் அவளுடைய கன்னத்தில் தன் பெரு விரலால் வருடினான்.
அவளோ அவனுடைய கரத்தை தட்டி விட்டாள்.
“கல்யாணம்னா என்னன்னு தெரியுமா ஆதி.?”
“நல்லாவே தெரியுமே குயின்.”
“கல்யாணம் ஆயிரங்காலத்துப் பயிர்.”
“மன்னாங்கட்டி. எங்க அம்மா அப்பாவோட கல்யாணம் இருபது வருஷம் கூட நிலைக்கலை.”
“ஐயோஓஓ சரி. சரி. கல்யாணத்தை விடுங்க. பிடிக்காத ஒருத்தரை எப்படிக் கல்யாணம் பண்ணிக்க முடியும்.? முதல்ல நாம எதுக்காக கல்யாணம் பண்ணிக்கணும்.? நாம இப்போ வரைக்கும் ஒன்னா இருக்கிறதுக்கு காரணமே என் வயித்துல வளர்ற உன்னோட குழந்தைக்காக மட்டும்தான்.
இதை உன் கைல கொடுத்திட்டு நான் எங்கேயாவது போய்த் தொலைஞ்சிருவேன் ஆதி.” என அழுகுரலில் கூறி முடித்தாள்.
“உன்னை கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளணும்னு ஆசை பட்டேன் குயின். பட் அதுக்கு சான்ஸ் கிடைக்காது போலயே.” என சிரித்தவனை அடியோடு வெறுத்தாள் தன்மயா.
“சே நீ மனுஷனே கிடையாது. இரக்கமே இல்லாத மிருகம். டெவில்.” என திட்டியவளுக்கு தலை சுற்றுவதைப் போல இருந்தது.
“ப்ச்…. டைம் டுவெல் ஆகப் போகுது. கல்யாணம் பண்ணி முடிச்சப் பிறகு சண்டை போட்டுக்கலாம் குயின்.” என்றவன் விஸ்டேரியா மலர்களால் கட்டப்பட்ட அழகிய மாலையை அவளுடைய கழுத்தில் அணிவித்தான்.
அவனது விரல்கள் அவளுடைய கழுத்தை தீண்டி விட்டு மாலையை அணிவிக்க, அவளுக்கோ உள்ளுக்குள் நடுங்கத் தொடங்கியது.
“இந்த மாலையை என் கழுத்துல போடு குயின். என்கூட தாலி கட்டாம வாழுறதுதை விட இருக்கும் வரைக்கும் என்னோட மனைவியா இருந்துட்டுப் போ.” என்றவனின் குரலில் சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
‘எல்லாம் முடிந்த பின்பு இந்த வெளி வேஷம் தேவைதானா.?’ அவள் மனம் முரண்டியது.
எந்த முடிவும் எடுக்க முடியாது தடுமாறியவள் இறுதியில் நடுங்கிய கரங்களுடன் அவனுடைய கழுத்தில் அந்த மாலையை அணிவித்தாள்.
“நாட் பேட்.” என்றவனின் முகத்தில் வெற்றிக் களிப்பு மிகையாக வெளிப்பட்டது.
திருமணமே வேண்டாம் என அழுது கரைந்தவள் இறுதியில் மனம் மாறியதை எண்ணி களிப்படைந்தவன் அவள் சூடிய மாலையை ஏற்றுக் கொண்டான்.
மியூசிக் பிளேயரில் தொடர்ந்து மந்திரங்கள் ஒலிக்கத் தொடங்க, அவன் வாங்கிய தங்கத் தாலியை எடுத்து அவளுடைய கழுத்தருகே கொண்டு வந்தவன் “ரெடியா குயின்.?” எனக் கேட்டான்.
“ம்ம்….” என விழிகள் கலங்க கூறியவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
அவனோ தங்கத் தாலி கோர்த்திருந்த மஞ்சள் கயிற்றை அவளுடைய கழுத்திலே மீண்டும் வைத்தவன் மூன்று முடிச்சுக்களில் ஒரு முடிச்சைக் கூடப் போடாது அப்படியே அந்த தரையில் சரிந்து படுத்தான்.
அவளுடைய கழுத்தில் அவன் வைத்த தாலியோ சரிந்து அவளுடைய மடி மீது விழுந்தது.
தன் மடி மீது விழுந்த தாலியைக் கண்டு பதறியவள் அதனைத் தன் கரங்களில் எடுத்துக் கொண்டு அவனைப் பார்க்க, அவனோ படுத்திருந்தவாறு தான் போட்டிருந்த பட்டால் ஆன சட்டையை கழற்றினான்.
“எ…. என்ன பண்றீங்க ஆதி.? ஏ….? ஏன் இப்படி? தா…. தாலியை கட்டுங்க.” என்றாள் அவள்.
“அட ஆமால்ல. கல்யாணம் இன்னும் முடியலை. சோ நீயே அந்தத் தாலியை எடுத்து உன் கழுத்துல கட்டிரு குயின்.
எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு. ஐ வான்ட் டு ல்லீப் நவ்.” என்றவன் அந்த மியூசிக் பிளேயரை ஆஃப் செய்து விட்டு எழுந்து வந்து அந்த ரோஜா இதழ்கள் தூவிய இடத்தில் காலுக்கு மேல் மற்றைய காலைப் போட்டவாறு படுத்தே விட்டான்.
தன்மயாவுக்கோ தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதே புரியாத நிலை. சில நொடிகளில் சுய நினைவை அடைந்தவள் விக்கித்துப் போனாள்.
அவள் கனவு ஏதேனும் காண்கிறாளா….? இல்லை கண் முன் நடந்த அத்தனையும் பொய்யா….?
‘கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். என்று சொல்வார்களே. அப்போ நான் கண்ணால் பார்த்துட்டு இருக்கிறதும் பொய்தானா….?’
அவன்தானே திருமணம் என்றான். அவன்தானே வற்புறுத்தினான். அவன்தானே இத்தனை அலங்காரங்களையும் செய்தான். அவன்தான் இந்த தாலி தொடக்கம் புடவை வரை வாங்கி வந்தான்.
இத்தனை ஏற்பாடுகளைச் செய்தது மட்டும் அல்லாமல் திருமணம் வேண்டாம் என்ற முடிவோடு இருந்த என்னுடைய மனதை மாற்றி சம்மதிக்கவும் வைத்தானே.
இத்தனையையும் செய்துவிட்டு கழுத்து வரை தாலியையும் கொண்டு வந்து வைத்துவிட்டு இப்போது தனக்கும் இந்த திருமணத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என நிம்மதியாக படுத்திருப்பவனைப் பார்த்து அவளுள்ளம் துடித்துப் போனது.
மண மேடையில் பைத்தியம் போல அசையாது அமர்ந்திருந்தாள் தன்மயா. எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ அவளே அறியாள்.
ஒருவரை உச்ச கட்ட அதிர்ச்சி தாக்கும் போது அவருடைய மனோநிலை எப்படி இருக்கும்.?
நிஜத்திற்கும் நிழலுக்கும் இடையே சிக்கித் தவித்து நொறுங்கிப் போனதைப் போல உள்ளம் சிதறுண்டு போயிருக்கும் அல்லவா.?
அதே நிலையில்தான் தன்மயாவும் தற்போது காணப்பட்டாள். அவளுக்கோ உடலும் உள்ளமும் ஒரு சேர மரத்துப் போனதைப் போல இருந்தது.
கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து அவளுடைய சங்குக் கழுத்தை நனைக்க, அவனை நோக்கி அவளுடைய மீன் விழிகள் அம்பெனப் பாய்ந்தன.
“ஆ…. ஆதி.????”
“வாட்….?”
“இ…. இங்க என்ன நடக்குது. எ…. எனக்கு சத்தியமா பு…. பு…. புரியலை.” என திணறியவாறே கேட்டாள் மாது.
“ஏன் தமிழ்ல தானே சொன்னேன். ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா.? ஓகே லீவ் இட். எனக்கு டயர்டா இருக்கு. சோ நீயே அந்த தாலியை உன்னோட கழுத்துல கட்டிரு.” என்றதும் விதிர்விதிர்த்துப் போனாள் மாது.
“நா…. நானா….?” என அதிர்ச்சியில் இருந்து வெளி வர முடியாது கேட்டவளை திரும்பி அழுத்தமாகப் பார்த்தவன் “எஸ் நீயேதான்.” என உறுதியான குரலில் கூறினான்.
அவளுடைய கரங்களோ தளர்ந்து தரையோடு மோதின.
“ஹேய் இப்போ எதுக்கு நீ இவ்ளோ டென்ஷன் ஆகுற.? தாலி இல்லாம குழந்தையை சுமந்தா இந்த உலகம் தப்பா பேசும்னு நீதானே சொன்ன. சோ உன்னோட கழுத்துல தாலி இருந்தா சரிதானே. அந்தத் தாலியை நான் கட்டினா என்ன.? நீ கட்டினா என்ன.?” என சாதாரணமாகக் கூறியவன் அவளைப் பார்த்து இமை சிமிட்டிச் சிரித்தான்.
அவளுக்கோ மீண்டும் ஆதி எனும் அரக்கன் தன்னை ஏமாற்றி விட்டான் என்பது புரிந்து போக, தன் கழுத்தில் இருந்த மலர் மாலையை பிய்த்து எறிந்தவள் தன் கரத்தில் இருந்த தாலியை வெறித்துப் பார்த்தாள்.
இதை விட ஒரு பெண்ணை யாராலும் அவமானப் படுத்த முடியுமா என்ன.?
அவளுடைய துயர் வழிந்த முகத்தைக் கண்டு தானும் துயர் கொண்ட பால் நிலவு கூட மேகம் எனும் தலையணையில் தன் முகத்தைப் புதைத்து கண்ணீர் வடித்தது.
இயற்கை கூட இரக்கப்படும் வேளையில் அவளுடைய வதனத்தில் வெளிப்படும் உணர்வுகளை ரசித்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்.
அவனுடைய ரசனைப் பார்வை அவளுடைய மொத்த உடலையும் தீப்பற்ற வைத்தது.
அடுத்த நொடி எதைப் பற்றியும் சிந்திக்காது தன் கரத்தோடு சேர்த்து தாலியையும் ஓம குண்டத்தின் தீயினுள் நுழைக்க, அந்த மஞ்சள் கயிற்றோடு சேர்த்து அவளது வெண்ணிற வளைக் கரமும் கருகத் தொடங்க,
“தனூஊஊஊஊஊஊ நோஓஓஓ.” என அலறினான் ஆதி.
ட்ராமா குயின் என்ற அழைப்பு தனுவாக மாறிப் போனதை அவனும் அறியவில்லை.
அந்த அழகியும் அவனுடைய அழைப்பை செவிமடுக்கவில்லை.
💜💙காதல் வேட்டை தொடரும்💙💜
ஆதி நிஜமாவே டெவில்தான் கண்மணீஸ்…..
இவனை எழுதும் போது எனக்கே ஸ்ட்ரெஸ் ஆகுது.
பட் நான் எப்படி கொண்டு வர நினைத்தேனோ அதே மாதிரியே ஆதியோட கேரக்டர் வெளிப்படும்.
இவன் வேற மாதிரி. 🔥🔥🔥
