என்னை தீண்டாதே என் ஜீவனே?
மித்ராவை ஆறுதலாக ஹர்ஷா அணைத்திருக்க திடீரென வந்த தொலைப்பேசி அழைப்பில் சுயவுணர்வுக்கு வந்தவன் மித்ராவை அணைத்தவாறே தொலைப்பேசியை எடுத்து திரையை பார்க்க அதில் தெரிந்த பெயரில் ஒருகணம் தன்னவளை பார்த்தவன் அவளிடமிருந்து விலகி அறையிலிருந்து வெளியே சென்று அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
மறுமுனையில் ராஜ்தீப்போ,
“அந்த லேடி இப்போ எப்பிடி இருக்காங்க ஹர்ஷா.. இதுக்கு யாரு காரணம்னு கண்டுபிடிச்சியா..” என்று அவர் தன் கேள்விகளை அடுக்க,
“அந்த ஆள் யாரு பன்ன சொன்னாங்கன்னு வாயே திறக்க மாட்டேங்குறான் டாட்.. என்ட் அந்த அம்மாவோட கன்டிஷன் இன்னும் க்ரிடிக்கல்லா தான் இருக்கு..” என்று ஹர்ஷா சமாளித்து விட்டு அந்த அம்மாவுடைய நிலைமையையும் சொல்ல,
“பிஸ்னஸ்ல இருக்க என் நேம்ம டேமேஜ் பன்றதுக்குன்னே எவனோ பன்னிருக்கான்.. ச்சே எவ்வளவு லொஸ்ட்.. இன்ஷ்யூரன்ஸ் பணமும் கிடைக்கும்னு நம்பிக்கையே இல்லை.. இதை நாதான் பன்ன சொன்னேன்னு வேற கதை கட்டிவிட்டுட்டான்..” என்று ஆவேசமாக கத்தியவர் பின், “அந்த லேடியோட ஃபேமிலிக்கு ஏதாவது செட்ல் பன்னிரு கண்ணா.. இந்த விஷயத்தை நா ஹேன்டில் பன்னிக்கிறேன்..” என்று ராஜ்தீப் சொல்ல,
“ஓகே..” என்று ஒற்றை வார்த்தையில் அழைப்பை துண்டித்தவன் ‘உஃப்ப்..’ என்று பெருமூச்சுவிட்டவாறு அறையில் வந்து மித்ராவை பார்க்க அவளோ அங்கிருந்தால் தானே..
சற்று பதறியவன் சுற்றி சுற்றி பார்த்துவிட்டு அந்த ஐசியு அறையை நோக்கி செல்ல அங்கே மித்ராவோ அம்மா அம்மா என்று கதறிக் கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளையே வாயை கையால் பொத்தி அழுகையை கட்டுப்படுத்தியவாறு பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த ஹர்ஷாவுக்கே பரிதாபமாகத் தான் இருந்தது.
தன் தந்தையை பழிவாங்கும் ஆத்திரத்தில் செய்தவள் நிச்சயம் தப்பு செய்யாத உயிருக்கு பாதிப்பு வந்தால் என்ன என்று அலட்சியமாக நினைத்திருக்க மாட்டாள் என்பது அவனுக்கு நல்லாவே தெரியும்.. இப்போது அவள் அழுகும் அழுகையிலும் அவள் குற்றவுணர்ச்சி அப்பட்டமாக தெரிய மேலும் பேசி அவளை காயப்படுத்த விரும்பாது தன்னவளை நெருங்கியவன் அவள் தோளில் கை வைக்க வெடக்கென திரும்பி அவன் மார்பில் கன்னத்தை வைத்து அழ ஆரம்பித்து விட்டாள் மித்ரா.
“நா ரொம்ப பெரிய தப்பு பன்னிட்டேன்.. எல்லாரையும் ரொம்ப காயப்படுத்துறேன்.. என்னை கொன்னுறு மித்து.. எனக்கே என்னை நினைச்சா ரொம்ப பயமா இருக்கு.. முதல்ல தேவ் அப்றம் உன்னை இப்போ இந்த அம்மாவ.. நா பன்ன காரியத்தால அவங்களுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும் மித்து.. பாவம் அந்த குழந்தைங்க.. அம்மா அம்மான்னு அழுக போல எனக்கு ரொம்ப வலிக்குது டா.. என்னால முடியல.. மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதி இல்லை..” என்று மித்ரா கதறி அழ,
ஹர்ஷாவோ எதுவும் போது அவளை தாங்கிக் கொண்டு வெளியில் அழைத்து வந்தவன் காரின் பின்சீட்டில் அமர்த்தி காரிலிருந்த தண்ணீர் போத்தலை அவளிடம் நீட்ட அவளோ போத்தலையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.
அவள் பார்வையிலேயே அவளுடைய மனதை படித்தவன் வந்த சிரிப்பை இதழ்களுக்குள் அடக்கியவாறு தன்னவளை தன் தோளில் சாய்த்து நீரை புகட்ட அவளும் வாகாக சாய்ந்தவாறு நீரை பருகினாள். அவனிடமிருந்து விலகியவள் மீண்டும் சீட்டில் முழங்கால்களை கட்டிக்கொண்டு அதில் முகம் புதைத்து விம்மி விம்மி அழ
‘இதற்கு மேல் முடியாது.’ என அவளை இழுத்து இறுக்கமாக அணைத்திருந்தான் அவளவன்.
“ரிலாக்ஸ் பேபி.. ரிலாக்ஸ்.. ஒன்னும் ஆகாது.. நீ வேணும்னு பன்னல டா ஐ க்னோ.. அந்த அம்மா அவங்க திங்க்ஸ்ஸ விட்டுட்டு போயிட்டாங்கன்னு மறுபடியும் கடைக்குள்ள வந்திருக்காங்க.. நீ செய்ய சொன்ன ஆளும் வர்க்கர்ஸ் வெளில போறதை மட்டும் தான் கவனிச்சிருக்கான்.. இவங்க திரும்பி வந்ததை அவன் கவனிக்கல்ல.. என் மதுவுக்கு ஒரு உயிரோட மதிப்பு தெரியும்ல.. இப்பிடி நடக்கும்னு நீயும் எதிர்ப்பார்க்கலல்ல.. மொதல்ல அழுகையை நிறுத்து.. அந்த அம்மாவுக்கு ஒன்னும் இல்ல.. அவங்க ஃபேமிலிய இனி நாம பார்த்துக்கலாம்.. அவங்களுக்கு சீக்கிரம் சரி ஆகிறும்.. ஜஸ்ட் ரிலாக்ஸ் மது..” என தனக்கெதிராக தான் அவள் செயற்பட்டாள் என்பதையும் மறந்து தன்னால் முயன்ற ஆறுதல் வார்த்தைகளை கொண்டு தன்னவளை ஹர்ஷா தேற்ற முயல,
அவன் வார்த்தையிலும் அவன் வருடலிலும் தன் அழுகையை மட்டுப்படுத்தியவள் அழுத களைப்பில் தன்னவனை அணைத்தவாறு அவன் மார்பிலே சாய்ந்தவாறு உறங்கிப் போக அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன் சீட்டில் அவளை சரியாக படுக்க வைத்து காரை செலுத்தி நிறுத்தியது என்னவோ மித்ராவின் வீட்டு வாசலில் தான்.
அவளை கைகளில் ஏந்தியவாறு ஹர்ஷா வீட்டினுள் நுழைய அப்போது ஹோலில் இருந்த கயல், ஆதிரா, துர்கா, ரியா தான் அதை பார்த்து வாயைப் பிளந்து விட்டனர்.
அவர்களை பார்த்தவன் அவர்கள் தன்னையே அதிர்ச்சியாக பார்ப்பதை கண்டுக்கொண்டாலும் எதுவும் பேசாது தன்னவளை அவளது அறைக்கு ஏந்திச் சென்று மெத்தையில் படுக்க வைத்து அவள் நெற்றியில் அழுந்த முத்தம் பதித்து விட்டு வெளியேற தற்போது அவர்களை பார்க்க அவனுக்குமே ஒருவித சங்கடமாகத் தான் இருந்தது.
அவர்கள் அருகில் வந்தவன் ஒருவித சங்கடத்துடன்,
“அது.. அது வந்து.. மது நல்லா தூங்கிட்டு இருக்கா.. எழுப்ப வேணாம்.. காலைல இருந்து அவ எதுவுமே சாப்பிடலன்னு நினைக்கிறேன்.. எழுந்ததுக்கு அப்றம் சாப்பிட ஏதாவது கொடுங்க மா.. அப்போ நா வரேன்..” என தான் பேச வேண்டியதை தட்டுத்தடுமாறி பேசி விட்டு ஹர்ஷா அவன் பாட்டுக்கு நகர்ந்து செல்ல அவர்கள் தான் ஒருவரையொருவர் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
———————————————————-
அடுத்த நாள்,
ஆசிரமத்தில்,
கிளுக்கி சிரித்துக்கொண்டு மண்ணில் உருண்டு பிரண்டு குட்டி குட்டி மலர்கள் அவள் கண்முன் விளையாட தானும் சிறுமியாகவே இருந்திருக்க கூடாதா என்ற ஏக்கப்பார்வையோடு அவர்களையே அந்த பெரிய மரத்தின் கீழ் உள்ள பென்ச்சில் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு அமர்ந்து இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.
“ஆர் யு ஓகே பேபி..” என்ற குரலில் சட்டென திரும்பியவள் தன் பக்கத்தில் முட்டியில் கைகளை கோர்த்து சற்று சாய்ந்தவாறு பார்வையை தன் புறம் திருப்பாமல் குழந்தைகளையே பார்த்தவாறு கேட்ட தன்னவனை கண்டவள் அவன் தன் பக்கத்தில் அமர்ந்திருப்பதை கூட உணராத தன் நிலையை மானசீகமாக கடிந்தவாறு வேறுபுறம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“ஷீ இஸ் ஃபைன்.. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.. உடம்புல காயம் மட்டும் தான்.. அதுவும் சரியான ட்ரீட்மென்ட் எடுத்தா சீக்கிரம் சரியாகும்னு டொக்டெர் சொல்லிட்டாங்க.. ” என்று ஹர்ஷா தன்னவளின் முகத்தை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவாறு சொல்ல அதைக் கேட்டவளுக்கோ மனது லேசாக அதன் பிரதிபலிப்பாக அவள் இதழில் தோன்றிய புன்னகை அவனையும் தொற்றிக் கொண்டது போல் அவன் இதழிலும் புன்னகை கீற்றாக அரும்பியது.
சற்று நேரம் இருவருமே எதுவும் பேசாது அமர்ந்திருக்க திடீரென மித்ராவின் காதில் கேட்ட “பொம்முகுட்டி..” என்ற அழைப்பில் ஹர்ஷாவின் புறம் திரும்பியவள் அவனை கூர்ந்து நோக்க,
ஹர்ஷாவோ சாதாரணமாக முகத்தை வைத்துக்கொண்டு அங்கு விளையாடிக் கொண்டிருந்த குட்டிச்சிறுமியை “பொம்முகுட்டி..” என்று மீண்டும் அழைக்க அந்த சின்னவண்டு அருகில் வந்ததும் அச்சிறுமியின் கன்னத்தில் முத்தத்தை பதித்து தான் கொண்டு வந்திருந்த சாக்லெட் பாக்ஸ்ஸை அவளிடம் நீட்டி மற்ற சிறுவர்களுடன் பகிர்ந்து உண்ணுமாறு சொல்லி அனுப்ப மித்ரா தான் ஹர்ஷாவையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள்புறம் திரும்பியவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி “என்ன..” என்று கேட்க, இருபக்கமும் ‘இல்லை’ என்று தலையாட்டியவள் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாலும் தன் தந்தையின் அழைப்பு அவள் காதில் ஒலித்துக் கொண்டே இருக்க மித்ராவால் நிலை கொள்ளவே முடியவில்லை.
ஹர்ஷாவோ அவள் மனநிலையை மாற்ற எண்ணி,
“எப்போ நம்ம கல்யாணத்தை வச்சிக்கலாம் மது..” என்று குறும்பாக கேட்க,
அவனை திரும்பி முறைத்தவள்,
“உனக்கு எப்பிடி நா இங்க இருக்குறது தெரியும்..” என்று சீற,
“சத்தியமா தேவ் என்கிட்ட சொல்லல்ல செல்லம்..” என்று பக்காவா நம் தேஸு பயலை போட்டுக் கொடுத்தவன் அப்பாவி போல் முகத்தை வைத்திருக்க,
“அவன.. இருடா வரேன்..” என்று உறுமியவள் விறுவிறுவெற தன் காரை நோக்கி செல்ல, “மது..” என்ற ஹர்ஷாவின் கத்தலில் சற்று நின்று திரும்பி அவனை மித்ரா முறைத்து பார்க்க,
ஹர்ஷாவோ , “பாவம் பையன்.. பார்த்து ஹேன்டல் பன்னு மது..” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கத்த, ‘ச்சே..’ என்று சலித்தவள் தன் காரை மின்னல் வேகத்தில் பறக்கவிட்டு வீட்டு வாசலில் காரை நிறுத்தியிருந்தாள்.
ஹோலில் தேவ் அரவிந்தோடு ஒரு க்ளைன்ட் தொடர்பாக மும்முரமாக பேசிக் கொண்டிருக்க புயல் போல் உள்ளே விறுவிறுவென வந்தவள் ஹோலில் தேவ்வை கண்டதும் ரியா தன்னை கூப்பிடுவதை கூட காதில் வாங்காமல் மின்னல் வேகத்தில் அவனை நெருங்கி அவன் ஸ்பைக்(spike) விட்ட கேசத்தை கொத்தாக பற்றி ஒரு சுற்று சுற்றிவிட்டாள்.
“அடியே.. விடு டி என்னை.. வலிக்குது டி..” என்று தேவ் அலற அரவிந்த் உட்பட வீட்டில் இருந்தவர்களோ அவர்களையே ‘என்னடா நடக்குது இங்க..’ என்ற ரீதியில் மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ஹவ் டேர் யு.. அவன்கிட்ட நா இருக்குற இடத்தை எப்பிடி டா நீ சொல்லலாம்.. உன்ன..” என்று தன் முழங்கையால் அவன் முதுகில் நாலு போடு போட்டவள் அவனை புரட்டி எடுக்க
“விடுடி சண்டி ராணி..” என்று தேவ் மித்ராவை செல்லமாக அழைக்கும் பெயரால் அழைத்து கதற,
“என்னையா டா சண்டி ராணின்னு சொல்ற கருவாப்பயலே..” என்று அவன் வாயிலேயே பட்டு பட்டு என அடி வைத்தாள் மித்ரா.
“மித்ரா என்னாச்சு அவன விடு.. டேய் என்னடா பன்னி தொலைச்ச.. ” என அரவிந்த் இருவரையும் விலக்க முயல, அவளோ அதை எல்லாம் கண்டு கொண்டால் தானே.. அவனை கோபம் தீரும் அளவுக்கு அடி வெளுத்தவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பத்ரகாளி போல் நிற்க,
அவள் அடியில் ஷார்ட் பட்டன்கள் திறந்து கசங்கி பரட்டை தலையுடனான தோற்றத்தில் இருந்தாலும்,
‘என்ன நடந்தாலும் அசராம இருப்பான் டா இந்த ஏகாம்பரம்’ என்ற ரீதியில் கெத்தாக அப்போதும் பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டுக்கொண்டு நின்றவாறு,
“வந்த வேலை முடிஞ்சதுல்ல கிளம்பு..” என்று தேவ் அசால்ட்டாக சொல்ல,
அவன் நடு மண்டையில் நங்கென்று கொட்டியவள், “இனிமே என்னை பத்தி அவன்கிட்ட ஏதாச்சும் சொன்ன..” என்று ஒற்றை விரலை நீட்டி எச்சரித்து விட்டு சில அடிகள் தேவ்வை தாண்டி நடந்தவள் பின் ஏதோ யோசித்து அப்படியே யுடர்ன் அடித்து டீபாயின் மேல் இருந்த தேவ்வின் ஃபோனை கையில் எடுத்து ஆதிராவின் அருகில் சென்று,
” த்ரீ, வன், ஃபோர், நைன்.. இதான் அவன் பாஸ்வர்ட்..” என்று சொல்லி விட்டு தேவ்வை நக்கலாக பார்த்தவாறு மித்ரா நகர தேவ்விற்கு தான் தூக்கி வாரிப்போட்டது.. அதில் தான் தேவ் பையா நாடு நாடாக கரெக்ட் பன்னி வைத்திருந்த கேர்ள் ஃப்ரென்ட்ஸ் ஒரு கூட்டமே இருக்கிறாங்களே..
“அடி பாதகத்தி.. உன் புத்திய காமிச்சிட்டல்ல..” என்று வாய்விட்டே புலம்பியவாறு அரவிந்திடம் “டேய் மடையா என் ஃபோனை புடுங்குடா..” என்று கத்தியவாறு தன் அம்மாவின் கையிலுள்ள தன் தொலைப்பேசியை பறிக்க அவன் ஓட அரவிந்த் ஒருபக்கம் ஓட ஆதிராவோ அதை கொடுக்காமல் விளையாட்டு காட்ட என அன்று வீடே ரணகளமானது தான் மிச்சம்..
————————————————————
அடுத்த நாள் காலை,
ஆதி, ஹரி, சித்து, அபி சோஃபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அப்போது ஓஃபீஸ் செல்வதற்கு ரெடி ஆகி வந்த தேவ்வையும் அரவிந்தையும் பார்த்த அபியோ,
“டேய் பசங்களா.. கொஞ்சம் இங்க வந்து உட்காருங்க..” என சொல்ல,
தன் தந்தையின் எதிரே அமர்ந்த தேவ் கிண்டலாக,
“சொல்லுங்கள் டேடி சொல்லுங்கள்..” என்று கேலியாக சொல்ல அரவிந்தோ “இவன் அடங்க மாட்டான்..” என்று வாய்விட்டு சொல்லி சலித்தவாறு சித்துவின் அருகில் அமர்ந்துக் கொண்டான்.
“பசங்களா இப்போ ஒரு ட்ரக்(drug) கேஸ் தான் நாங்க ஹேன்டல் பன்றோம்.. ஆளுங்கள சந்தேகத்துல விசாரனை பன்னா எவனுமே வாய திறக்கவே மாட்டேங்குறானுங்க.. இதுல இந்த மிரட்டல் கோல்ஸ் வேற ரொம்ப தொல்லை கொடுக்குறானுங்க.. இப்போ நீங்க என்ன பன்னனும்னா..” என்று சித்து ஏதோ சொல்ல வர,
“என்ன பன்னனும்னு தெரிஞ்சிருச்சி மாமா..” என்று அரவிந்த் சொல்ல,
தேவ்வோ, “அந்த கேஸ் பத்தின டீடெய்ல்ஸ் மட்டும் கொடுங்க.. இதையெல்லாம் யாரு பன்றாங்கன்னு இரண்டே நாள்ல நாங்க சொல்றோம்..” என்று சொல்ல இருவரையும் மெச்சுதலாக ஒரு பார்வை பார்த்தனர் நம்ம ஓல்ட் ஹுரோஸ்.
என்ன தான் தேவ்வும் அரவிந்தும் விளையாட்டாக இருந்தாலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரங்க மாதிரி என்று அவர்களுக்கு தெரிந்த விடயம் தானே.. அப்போது சரியாக தன் சீனியர் ஓஃபீஸரோடு அழைப்பில் பேசிக் கொண்டு வந்த வேல் அழைப்பை துண்டித்து ஹரியின் அருகில் அமர்ந்தவாறு,
“அப்பா நேத்து நைட் என்கிட்ட ஏதோ பேசனும்னு சொன்னீங்க.. என்ன விஷயம்..” என்று கேட்க,
“நல்லவேள நியாபகப்படுத்தின நாச்சிமா.. டேய் ஆதி, சித்து, அபி நம்ம நாச்சிமாக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு டா.. பையன் என் ஃப்ரென்ட்டோட மகன் தான்.. பெரிய பிஸ்னஸ் மாக்னெட்.. சுனில் க்ரூப் ஆஃப் கம்பனீஸ்ஸோட சிஇஓ..” என்று உற்சாகமாக சொல்ல இத்தனை நேரமாக ஃபோனை நோண்டிக் கொண்டிருந்த அரவிந்த் சட்டென நிமிர்ந்து வேலுவை பார்க்க தேவ்வோ அரவிந்த்தின் ரியாக்ஷனை தான் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான்.
“வாவ்வ் சூப்பர் டா.. அப்போ பேசி முடிச்சிரலாம் தான்.. இது நம்ம வீட்டு சிங்கப்பெண்களுக்கு தெரியுமா டா..” என்று அபி நக்கலாக கேட்க,
“அதெல்லால் முன்னாடியே ரீ அவங்ககிட்ட சொல்லிட்டா.. எல்லாருக்கும் சம்மதம் தான்.. என் பொண்ணு ஒரு வார்த்தை அவ சம்மதத்தை சொன்னா வேலைய ஆரம்பிச்சிற வேண்டியது தான்..” என்று ஹரி புன்னகையுடன் கூறிவிட்டு வேலுவின் பதிலுக்கு அவளின் முகத்தை பார்க்க,
“வேலுமா உனக்கு ஓகேவா.. யாராச்சும் லவ் பன்றன்னா கூட சொல்லிரு.. நாங்க ஒன்னும் லவ்வுக்கு எதிரி இல்ல.. அது நாங்க சொல்லி உனக்கு தெரிய வேண்டியதும் இல்ல..” என்று ஆதி சொல்ல,
வேலுவோ சட்டென அரவிந்தை தான் நோக்கினாள்.அவனும் அவளை தான் இமையாது பார்த்துக் கொண்டிருக்க அவன் மனமோ, ‘சம்மதம் இல்லைன்னு சொல்லு நச்சு..’ என்று அவனையும் மீறி ஓலமிட அவன் பார்வையும் அதை தான் உணர்த்தியது.
வேலுவோ அவன் கண்களை பார்த்தவாறே,
“எனக்கு சம்மதம்ப்பா..” என்று சொல்ல,
“ஆர் யு ஷுவர் நாச்சிமா..” என்று ஹரி அவளை சந்தேகமாக பார்த்தவாறே கேட்டான். பொலிஸ்துரையில் இத்தனை ஆண்டுகள் இருப்பவனுக்கு தன் மகளின் பார்வை மாற்றத்தினை கூடவா உணர்ந்து கொள்ள முடியாது.
“ஷுவர் பா..” என்று வேலு அரவிந்திடமிருந்து பார்வையை திருப்பி தரையை வெறித்தவாறே சொல்ல அரவிந்திற்கோ என்ன உணர்கிறோம் என்றே தெரியவில்லை. ஏதோ அவன் தொண்டைகுழியில் அடைக்க மனதில் ஏதோ பாரத்தை ஏற்றி வைத்தது போன்று கனத்தது அரவிந்திற்கு.
அதற்கு மேலும் அங்கிருக்க முடியாமல் அவன் எழுந்து விறுவிறுவென சென்றிருக்க வேலுவோ தேவ்வை தயக்கமாக பார்த்ததில் அவனோ அர்த்தமான புன்னகையுடன் “கன்ங்கிராட்ஸ் வேலு குட்டி..” என்று
சொல்லி விட்டு நகர,
ஹரியும் “சரிம்மா அப்போ சீக்கிரம் என் ஃப்ரென்ட்டோட பேசுறேன்.. மித்ரா கல்யாணத்தோடயே உன் கல்யாணத்தையும் வச்சிரலாம்..” என சந்தோஷமாக சொல்ல வேலுவிற்கோ மனது வெடித்து சிதறிவிடும் அளவிற்கு வலித்தது.
தொடரும்..🔥
—————————————————————-
THANK U SO MUCH NATPUS FOR UR SUPPORT..✌
AND KEEP MOTIVATING ME..😍
-ZAKI🔥
