என்னை தீண்டாதே என் ஜீவனே?
தீண்டாதே 20🔥
‘கமலா கலாசா
அபுனா அபுனா
அய்யாயோ கலாட்டா
அபுனா கமலா..’
என்ற பாடலை வாயுக்குள்ளே முனுமுனுத்தவாறு டைனிங் டேபிளில் ஆதியின் எதிரில் அனா அமர
அவளை நிமிர்ந்து பார்த்த ஆதி அவள் முகத்தை சற்று கூர்ந்து பார்த்து விட்டு,
“அது என்ன மா உன் புருவத்துல ஒரு வெட்டு.. வித்தியாசமா இருக்கு.. ” என்று கேட்க,
சாப்பாட்டை எடுத்து தட்டில் வைத்துக் கொண்டிருந்தவள் சாப்பாட்டில் கண்ணை வைத்தவாறே,
“ஆ.. அதுவா.. பெருசா ஒன்னுஇல்ல.. இதுவும் சம் கைன்ட் ஓஃப் ஸ்டைலு தான் பா.. ஹிஹிஹி.. ” என்று இழித்து வைக்க,
“என்ன மா நீ.. என்ன ஸ்டைலோ.. உன் அம்மா அந்த பக்கம் எல்லாம் போகவே மாட்டா.. இதுக்கு முன்னாடி எவ்வளவு அழகா இருந்துச்சி அப்படியே என்னது மாதிரி..” என தன் தகப்பன் பேசியதில் விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தவள் சினுங்கிக் கொண்டே,
“அப்பா என்னப்பா நீங்க.. உங்கள மாதிரி இருக்க போய் தான் முன்னாடி என் ஃப்ரென்ட்ஸ் எல்லாம் கண்ணுக்கு மேல இரண்டு மீசை வச்சிருக்கேன்னு கிண்டல் பன்னாங்க.. ” என்று சொல்ல அவள் பக்கத்தில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த தேவ்விற்கு அவள் பதிலில் சிரிப்பு வர புரையேறி விட்டது.
தன் மகளின் மொக்கை காரணத்தில் அவளை முறைத்து பார்த்த ஆதி இதில் தேவ் வேறு வாய்விட்டு சிரித்ததில் கடுப்பாகி இட்லியை பிசைந்தவாறு,
“என்ன மாப்ள அங்க சத்தம்..” என்று கேட்க,
தன் மாமாவின் மிரட்டல் தொனியில் மிரண்டவன்,
“சாப்பிட்டுகிட்டு இருக்கேன் மாமா..” என்று தேவ் கூறிய பாவனையில் இப்போது சிரிப்பது அனாவின் முறையானது.
அப்போது மித்ராவும் ஓஃபீஸ் கிளம்பி ரெடி ஆகி வந்திருக்க ஹோல் சோஃபாவில் தியா கொலேஜ் செல்ல ரெடி ஆகி அனாவுக்காக காத்துக் கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு தன் தங்கையுடன் பேச ஆசை மேலெழ அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
கன்னத்தில் கை வைத்து முகத்தை உம்மென்று வைத்திருந்தவள் தன் அருகில் அரவம் உணர்ந்து கன்னத்தில் கை வைத்தவாறே பக்கவாட்டாக திரும்பி பார்க்க தன் பக்கத்தில் சோஃபாவில் சாய்ந்தவாறு மித்ரா தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்தவளுக்கோ குஷி ஆக, சட்டென நிமிர்ந்து அமர்ந்தவள்,
“அக்கா சாப்பிட்டியா..” என்று அக்கறையாக கேட்க,
அவள் அக்கறையில் நெகிழ்ந்தவள்,
“இல்ல தியாமா.. சேர்ந்து சாப்பிடலாமா..” என்று மித்ரா கேட்டதில் தியாவின் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து கொண்டது. தன் அக்கா முதன் முறையாக இப்பிடி கேட்டதில் மனது குத்தாட்டம் போட தலையை எல்லா பக்கமும் ஆட்டியவள் தன் அக்காவை இழுத்துக் கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.
“குட் மோர்னிங் மித்ராக்கா..” என அனாவும் சாப்பிட்டவாறே புன்னகையுடன் சொல்ல,
சாப்பாட்டை தன் தங்கைக்கு பரிமாறியவாறே,
“ஹேப்பி மோர்னிங் அனா..” என புன்னகையுடன் கூறிய மித்ராவை பார்த்த அங்கிருந்த எல்லாருக்குமே ஆச்சரியம் தான்.
“மித்ரா மா.. நாளைக்கு தியாவோட பர்த்டே.. நியாபகம் இருக்கா டா..” என்று கயல் கேட்க,
கயலை நிமிர்ந்து பார்த்தவள்,
“என் தங்கச்சி பர்த்டே அ நா எப்பிடி மறப்பேன் ஆன்ட்டி..” என்று மித்ரா கூற தியாவுக்கோ அளவுகடந்த சந்தோஷம். மித்ரா அமெரிக்காவில் இருந்த போது இத்தனை வருடங்களில் தியாவுடன் பேசியதில்லை.. ஒரு தடவை தியாவின் பத்தாவது பிறந்தநாளன்று பேசியது அப்போதும் ஏதோ ஒட்டுதல் இல்லாமல் பேசி இரண்டு நிமிடங்கள் கூட இருக்காது அழைப்பை துண்டித்திருந்தாள்.. தன் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் தன் அக்காவின் ஒரு வாழ்த்துக்காக தியா ஏங்கிய ஏக்கம் அவளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று..
தன் அக்கா தன் பிறந்தநாளை மறந்திருப்பாள் என்று தியா நினைத்திருக்க மித்ரா உரிமையாக சொன்ன பதிலில் அவள் உச்சி குளிரத் தான் செய்தது.
“அப்போ வீட்ல சின்ன பார்ட்டி அர்ரேன்ஜ் பன்னலாமா..” என்று சித்து கேட்க,
“எதுக்கு அன்கிள் சின்ன பார்ட்டி.. ஹோட்டல்ல க்ரான்டாவே செலப்ரேட் பன்னலாம்.. ” என்று மித்ரா சொல்ல சுற்றி இருந்தவர்கள் விழிவிரித்து தான் அவளை பார்த்தனர்.
மித்ராவுக்கு இது போன்ற கொண்டாட்டங்களில் விருப்பம் இருக்காது என்று அவர்கள் நினைத்திருக்க இவள் இப்பிடி சொன்னால் அதிர்ச்சியாகாமல் என்ன செய்வார்கள்.. ஆனாலும் மித்ரா பழைய மாதிரி மாறுவதில் ஒரு சின்ன சந்தோஷம் மனதின் ஓரத்தில் துளிரத் தான் செய்தது.
“அப்படியே பன்னலாம் மா.. ஒன்னும் பிரச்சினை இல்ல.. எல்லா அர்ரேன்ஜ்மென்ட்ஸையும் அரவிந்த்தும் தேவ்வுவ் பார்த்துப்பாங்க.. நமக்கு ரொம்ப நெருங்கினவங்கள மட்டும் இன்வைட் பன்னிக்கலாம்.. நாளைக்குள்ள எல்லாம் பர்ஃபெக்ட் ஆ பன்னிரலாம்.. ” என ஆதிரா பேசிக் கொண்டே போக,
“ஆமா.. ஆமா.. இந்த தடவை தியாக்குட்டி பர்த்டே அ ஜமாய்ச்சிரலாம்.. மித்ரா சொல்ற மாதிரி..” என அரவிந்த் சைட்டு கேப்பில் கடாய் வெட்ட வேலுவோ கண்கள் சிவக்க அரவிந்த்தை கம்ப்ளைன்ட் பன்ன தேவ்வின் புறம் திரும்பியதில் தேவ்வோ ஒருபடி மேலே போய் வேலுவை பார்த்து ரொமேன்ட்டிக்காக ஒற்றை கண்ணை சிமிட்டியதில் ‘அடி ஆத்தீதீ…’ என குனிந்து கொண்டாள் வேலு..
“ஹேய்ய்ய் சூப்பர்.. நா என் ஃப்ரென்ட்ஸ் எல்லா இன்வைட் பன்னுவேன்.. ஜாலியா இருக்கும்..” என்று அனா குதூகலிக்க ஒருநொடி தியாவின் மனக்கண்ணில் அனிருத்தின் முகம் தான் வந்து போனது.
சிறிது நேரம் யோசித்த தியா ஒருவித தயக்கத்துடன்,
“அக்கா எதுக்கு ஹோட்டல்ல எல்லா.. வீட்லயே சின்னதா பன்னிரலாமே..” என்று மறுக்க,
அவளை அழுத்தமாக பார்த்த மித்ரா,
“இத்தனை வருஷம் நா உன் பக்கத்துல இல்லை.. இப்போ நா பக்கத்துல இருக்கும் போது என் தங்கச்சியோட பர்த்டே அ செலப்ரேட் பன்னனும்னு ஆசைப்படுறேன்.. அதுல உனக்கு என்ன பிரச்சினை..” என்று மிரட்டும் தொனியில் கேட்க,
தன் அக்கா மீண்டும் அந்நியனாக மாறுவதில் பதறியவள்,
“அச்சோ அக்கா உனக்கு என்ன தோனுதோ அப்படியே பன்னிரலாம்.. ” என்று சட்டென தியா சொல்லியதில் திருப்தியாக முகத்தை வைத்த மித்ரா சாப்பிட ஆரம்பிக்க,
துர்காவோ,
“அப்போ இன்னைக்கு ஈவ்னிங் எல்லாரும் ஷோப்பிங் பன்ன போகலாம்.. இந்த தடவையும் அம்மா செலக்ட் பன்ற ட்ரெஸ்ஸ தான் என் தியாகுட்டி போட்டுப்பா..” என புன்னகையுடன் சொல்ல ,
அதில் முகம் இறுகிய மித்ரா பார்வையை நிமிர்த்தாமலே,
“நானே மதியம் ஓஃபீஸ் விட்டு வந்து கொலேஜ்ல இருந்து தியாவ ஷோப்பிங் கூட்டிட்டு போறேன்.. என் தங்கச்சிக்கு நானே செலக்ட் பன்றேன்.. இதுல யாரும் தலையிட வேணாம்..” என்று இறுகிய குரலில் இது தான் முடிவு என்பது போல் சொல்ல துர்காவுக்கோ கண்கள் கலங்கி விட்டது.
தியாவோ துர்காவை எப்பிடி சமாதானம் செய்வது என தெரியாது தன் அக்காவையும் தன்னை வளர்த்த அம்மாவையும் மாறி மாறி பார்க்க சித்துவோ கண்களாலே தன்னவளை சமாதானப்படுத்தினான்.
“இன்னைக்குள்ள யார இன்வைட் பன்னனுமோ இன்வைட் பன்னிருங்க.. நாளைக்கு பார்ட்டில எதுவும் சொதப்ப கூடாது.. தேவ் அதுக்கு நீ தான் பொறுப்பு..” என்று சொல்லி விட்டு கை கழுவ செல்வதற்கு நகர, வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு எழுந்திருக்க கூட முடியாது கதிரையில் சாய்ந்து அமர்ந்திருந்த தேவ் அவள் சொன்னதை கேட்டு சத்தமாக ஒரு ஏப்பம் விட அந்த சத்தத்தில் அவனை திரும்பி மேலும் கீழும் ஒரு முறைப்புடன் உதட்டை சுழித்து பார்த்து விட்டு மித்ரா சென்றதும்,
தேவ்வோ போகும் அவளையே தன் வயிற்றை தடவியவாறு பார்த்துக் கொண்டு,
“பெரிய சண்டி ராணி எனக்கே கம்மான்ட்(command) பன்னிட்டு போறா.. இவ சொன்னா கேட்டுறுவோமா.. தியாகுட்டி இந்த மாமா உன் பார்ட்டிய சூப்பரா அர்ரேன்ஜ் பன்றேன் டா.. நீ துகி அத்தை கொடுக்குற ட்டெஸ்ஸ தான் போட்டுக்குற.. அவள நா சமாளிச்சிக்கிறேன்.. அவ கிடக்குறா கிறுக்கி..” என்று மித்ராவை வறுக்க,
“இது மட்டும் அவ காதுல விழுந்திச்சு நீ செத்த டா மகனே..” என்று அபி வாய்விட்டே புலம்ப இதுவரை மித்ரா பேசியதில் இறுகிய முகத்தோடு இருந்தவர்களுக்கு கூட அப்பா மகனின் பேச்சில் இதழில் லேசாக புன்னகை அரும்பியது.
அதன் பிறகு தியாவும் மித்ராவிடம் சொல்லி விட்டு கொலேஜ் சென்று விட தியாவுக்கோ பாடத்தில் கவனம் செலுத்தவே முடியவில்லை.. முதன்முறை தன் அக்காவுடன் வெளியே செல்வதில் அவள் உற்சாகமாக இருக்க அது அவள் முகத்தில் கூட வெளிப்படையாக பிரதிபலித்தது.
இதை அனிருத்தும் கவனித்துக் கொண்டிருக்க கண்களாலே புருவத்தை உயர்த்தி ‘என்ன’ என்று கேட்டவனிடம் கண்களை சிமிட்டி ‘ஒன்றும்இல்லை’ என்று தலையாட்டிய தியாவை பார்த்தவனுக்கு அவள் செய்கை அவளை மேலும் ரசிக்க தான் வைத்தது.
மதியமே அனாவும் தியாவும் அனுமதி கேட்டு கொலேஜிலிருந்து வெளியேறியிருக்க அனிருத்தும் ஏதேதோ காரணங்களை கூறி அவர்களுடனே வெளியேறியிருந்தான்.
எப்போதும் போல் அனா தன் நண்பர்கள் பட்டாளத்துடன் வெளியே போக எத்தனித்து,
“ஏய் தியா மித்ரா அக்கா கேட்டாங்கன்னா நா எப்போவோ வீட்டுக்கு போயிட்டேன்னு சொல்லு.. என்னை போட்டு கொடுத்துராத பரட்ட..” என்று சொல்லி விட்டு செல்ல இதை பார்த்த தியாவுவ் அனிருத்தும் ஒருசேர தலையிலே அடித்துக் கொண்டனர்.
சட்டென திரும்பியவள் அப்போது தான் தன் பக்கத்தில் அனிருத் இருப்பதை பார்த்து,
“ஆமா ரித்து நீ ஏன் வந்த.. க்ளாஸ்ல இருந்திருக்கலாம்ல.. உனக்கும் எதாச்சும் வெளில வேலை இருக்கா..” என்று கேட்க,
அவன் புன்னகையுடன் ஆமாவென தலையாட்ட தியாவோ அவனை புரியாமல் பார்த்தாள்..
“நாளைக்கு எனக்கு புடிச்சு பொண்ணோட பர்த்டே அதான் இன்னைக்கு அவள லன்ச்சுக்கு வெளில வெளில கூட்டிட்டு போலாமேன்னு.. வெயிட் பன்னிகிட்டு இருக்கேன்..” என்று சொல்ல,
அவன் தன்னை தான் சொல்கிறான் என்பதை புரிந்து கொண்டவள்,
“அது வந்து.. ரித்து.. இன்னைக்கு என் அக்கா கூட வெளில போறேனே..” என்று சொன்னவள் அதில் அவன் முகம் வாடியதில் பொறுக்க முடியாமல்,
“வெயிட் ரித்து..” என்று கூறியவாறு மித்ராவுக்கு அழைப்பை எடுத்தாள்.
மறுமுனையில் மித்ரா அழைப்பை ஏற்க,
“அக்கா எப்போ வருவ..” என்று தியா கேட்டதற்கு மித்ரா கூறிய பதிலில் அவள் இதழ்கள் புன்னகைக்க,
“சரிக்கா..” என்று சந்தோஷமாக அழைப்பை துண்டித்தவள் அனிருத்திடம் “அக்கா வன் அவர்ல(one hour) வரேன்னு சொன்னாங்க..” என்று சொல்ல அதில் குஷியாகி விட்டான் அவள் ரித்து.
“அதான் உன் அக்கா வர இன்னும் நேரம் இருக்கே.. இங்க பக்கத்துல இருக்க ஹோட்டல் தான்.. அவங்க வரதுக்குள்ள சீக்கிரம் சாப்பிட்டுட்டு வந்துரலாமே ப்ளீஸ் ஏன்ஜல்..” என்று அனி கெஞ்ச, தியாவுக்கோ அவனை மறுக்கவே தோன்றவில்லை.. ஏன் என்று தெரியாத இனம் புரியாத சந்தோஷம் வேறு..
சரி என தியா சம்மதமாக தலையாட்ட உற்சாகத்தில் “யாஹூ..” என்று தாவி குதித்தவன் “வெயிட் ஏன்ஜல்.. ஜஸ்ட் வன் மினிட்..” என்று சிரிப்புடனே சொல்லி விட்டு ஓடிச் சென்று தன் பைக்கை அவள் முன் அடுத்த நொடி நிறுத்தியிருக்க அவன் உற்சாகத்தில் வாய்விட்டே சிரித்தவள் அவன் பைக்கை நிறுத்தியதும் முதன் முறை பைக்கில் ஏறுவதில் எப்படி ஏறுவது என்று தெரியாது முழித்துக் கொண்டிருந்தாள்.
அவள் முகபாவனையில் சிரித்தவன்,
“என் தோளை பிடிச்சி ஏறி உட்காரு ஏன்ஜல்..” என்று சொல்ல ஒருவித தயக்கத்துடனே அவனை பிடித்து ஏறி அமர்ந்தாள் தியா.
அவன் பைக்கை ஸ்டார்ட் செய்யவும் பயத்தில் அவனை அவள் இறுக்கமாக பிடித்து கொள்ள முதன் முதலில் ஒரு ஆணின் நெருக்கத்தில் அவளுக்கு வெட்கம் பிடிங்கி தின்ன அனிருத்திற்கோ வானத்தில் பறப்பது போன்றே இருந்தது.
அதே சமயம்,
மித்ரா ஓஃபீஸில்,
வேலையில் மும்முரமாக இருந்துக் கொண்டிருந்தவள் தனது கைக்கடிகாரத்தை எதேர்ச்சையாக பார்க்க ,
“தியாவ வேற ஷோப்பிங் கூட்டிட்டு போகனும்.. என்ன பன்றது..” என யோசித்தவள் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு தனது தொலைப்பேசியை எடுத்து வெளியேற எத்தனிக்க சரியாக அவள் தொலைப்பேசி ஒலித்ததில் திரையில் தெரிந்த பெயரை பார்த்ததும் முகம் அஷ்டகோணலாக மாறியது.. வேறு யாரு நம் நாயகன் தான்..
‘இவன் வேற நேரம் காலம் தெரியாம.. நம்ம மூட்ட ஸ்பொய்ல் பன்றதுக்குன்னே இருக்கான்..’ என முனுமுனுத்தவாறு அழைப்பை ஏற்று காதில் வைத்தாள். ஏற்காவிட்டாள் தான் அவன் தன்னவளை ஒருவழிப்படுத்தி விடுவானே..
அழைப்பை ஏற்று மித்ரா காதில் வைத்ததும் தான் தாமதம் மறுமுனையில் ஹர்ஷாவோ,
“மது சீக்கிரம் வெளில வாடி.. ஒரு முக்கியமான விஷயம்.. சீக்கிரம்.. சீக்கிரம்..” என்று பதட்டமாக பேச,
அதில் பதறிய மித்ரா,
“ஏன் இப்பிடி பதட்டமாக இருக்க.. என்னாச்சு..” என்று இவளும் பதட்டமாக கேட்க,
“அச்சோ பேபி என்னால முடியல.. நீ மொதல்ல வாயேன்.. ப்ளீஸ்..” என்று அவன் அவசரப்படுத்த, என்னமோ ஏதோ என்று பதறியபடி வெளியில் ஓடி வந்து தன்னவனை தேடி சுற்றி முற்றி பார்க்க,
அவளவனோ காதில் ஹெட்செட்டை போட்டுக் கொண்டு தலையையும் அங்கும் இங்கும் ஆட்டியவாறு காரில் ஒற்றை காலை மடக்கி சாய்ந்து நின்று பாட்டுக் கேட்டுக் கொண்டு இருந்தவன் தன்னவளை கண்டதும் ஹாயாக ஹாய் காட்டியதில் வெகுண்டெழுந்து விட்டாள் மித்ரா.
விறுவிறுவென அவன் அருகில் வந்தவள்,
” ஹவ் டேர் யு..” என கத்தியவாறு ஹர்ஷாவின் சட்டை கோலரை பிடித்து உலுக்க,
“என்ன செல்லம் பயந்துட்டியா.. சும்மா லுல்லுயாக்கு.. ” என நாக்கை துருத்தி அவன் சொன்ன விதத்தில்,
“யு.. யு.. என்கிட்டயே விளையாடுறியா.. என்னை பார்த்தா உனக்கு எப்பிடி டா தெரியுது..” என கத்த,
நிதானமாக அவள் கையை அவன் சட்டையிலிருந்து எடுத்து விட்டவன் தலையை லேசாக சரித்து புருவத்தை சுருக்கி அவளை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தவாறு , “சூப்பர் ஃபிகர் டி..” என்று சொல்ல அதில் அவன் முடியை கொத்தாக பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி விட்டாள் மித்ரா.
சுற்றி இருந்தவர்களோ ‘என்ன டா நடக்குது இங்க.. நம்ம எம்.டியா தானா இது..’ என்ற ரீதியில் விழிவிரித்து பார்க்க, அதை கவனித்த ஹர்ஷாவோ,
“அடியே மோகினி என்னை விடு டி.. உன் ஸ்டாஃப்ஸ் எல்லா நம்மள தான் டி குறுகுறுன்னு பார்க்குறாங்க..” என்று அலற,
அப்போது தான் சுற்றுபுறம் உணர்ந்து அவனை விட்டவள் ‘ச்சே..’ என்று சலித்தவாறு விலகி செல்ல, அவள் கையை பிடித்து தடுத்தவன் அவள் கதற கதற காருக்குள் ஏற்றி அவள் இறங்குவதற்குள் தன் சீட்டில் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்திருந்தான்.
“டேய் விடு டா என்னை.. என்ன பன்னிகிட்டு இருக்கன்னு புரிஞ்சி தான் பன்றியா.. ரொம்ப ஓவரா போற ஹர்ஷா..” என்று மித்ரா கத்த,
அவளை பொறுமையாக திரும்பி பார்த்தவன்,
“பேபி செம்ம பசி டா.. உன்கிட்ட வம்பு பன்னா இருக்குற கொஞ்ச நஞ்ச எனர்ஜியும் மொத்தமா போயிரும்.. சோ.. ப்ளீஸ் மது..” என்று கண்களை சுருக்கி கெஞ்சுவது போல் சொல்ல அவன் செய்கையில் அவனை ரசிக்க தூண்டிய மனதையும் பார்க்க தூண்டிய கண்ணையும் அடக்க பெரும்பாடுபட்டாள் மித்ரா என்று தான் சொல்ல வேண்டும்..
“எனக்கு என்ன வேண்டுதலா உன்கிட்ட வம்பு பன்ன.. என்னை இறக்கி விட போறியா இல்லையா.. ” என்று மீண்டும் கோபமாக கேட்டாலும் அவள் குரலில் ஒரு தடுமாற்றம் இருக்கத் தான் செய்தது ஆனால் அதெல்லாம் அவளவனின் காதில் விழுந்தால் தானே..
ஹர்ஷாவோ அவளை கண்டுக்காது பாதையிலே பார்வையை பதித்திருக்க “ஆண்டவா.. என்னை காப்பாத்து..” என்று வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்டு கதறியவள் அவன் பிடிவாதம் அறிந்து ‘உஃப்ப்ப்..’ என பெருமூச்சு விட்டு,
“இப்போ என்ன.. எதாவது ஹோட்டலுக்கு தானே கொட்டிக்க போற.. அப்போ SR மியூசிக் கொலேஜ்க்கு பக்கத்துல இருக்க ஹோட்டலுக்கு போ..” என்று சொல்ல,
அவளை திரும்பி ஆச்சரியமாக பார்த்தவன்,
“பரவாயில்லையே.. என் மோகினி என் வழிக்கு வர்றா..” என கூறியவாறு அங்கேயே வண்டியை செலுத்தினான்.
இங்கு ஹோட்டலிலோ,
ஒரு டேபிளில் அனிருத்தும், தியாவும் அமர்ந்திருக்க சாப்பாட்டை ஓர்டர் செய்தவர்கள் சிறிது நேரம் எதுவும் பேசாது அமைதியாகவே இருக்க தியாவே மௌனத்தையே கலைத்தாள்..
“இது தான் ஃபர்ஸ்ட் டைம் ஒரு பையன் கூட தனியா வெளில வந்திருக்கேன்..” என்று சொல்ல,
அவளை விசித்தரமாக பார்த்தவன்,
“ரியலி.. அப்போ இதுக்கு முன்னாடி எந்த பையன் கூடவும் ஏஸ் அ ஃப்ரென்ட்டா வெளில மீட் பன்னதே இல்லையா.. இல்ல.. உனக்கு பசங்க ஃப்ரென்ட்ஸ்ஸே இல்லையா.. ” என்று ஆச்சரிய குரலில் கேட்க,
“உண்மைய சொல்லனும்னா நா இவ்வளவு க்ளோஸ்ஸ பழகின முதல் பையன் நீ தான் ரித்து..” என்று சொல்லியதில் புன்னகைத்தவன்,
“நீயும் அனாவும் சின்ன வயசுல இருந்து ஒன்னா இருக்கீங்க.. ஆனாலும் உனக்கும் அனாக்கும் ஏகப்பட்ட டிஃபரன்ட்ஸ்..” என்று அனிருத் சொல்ல,
“அவ எல்லாரோடையும் ஈஸியா எட்டேச் ஆகிறுவா.. பட் என்னால அப்படி யார்கூடவும் க்ளோசா நெருங்க முடியல..” என அவள் மெல்லிய குரலில் சொல்ல
அவள் பேச பேச அவளை ரசித்தவன்,
‘பட் உன்னோட தயக்கம் கூட ஒருவித அழகு தான் ஏன்ஜல்..’ என மனதிற்குள் சொல்லிக் கொண்டவன் வெளியில், “ஓகே ஏன்ஜல் ஜஸ்ட் வெயிட்.. வோஷ்ரூம் போயிட்டு வரேன்..” என்று சொல்லி அவன் தனது ஃபோனையும் பர்ஸையும் டேபிளில் வைத்துவிட்டு பர்ஸ் கீழே விழுந்ததை கூட கவனியாது செல்ல அதை கவனித்த தியா பர்ஸ்ஸை எடுத்து வைத்த அடுத்த சில நொடிகளில் அவள் முகத்தில் முன்பிருந்த உற்சாகமே சுத்தமாக இல்லை..
பார்வையை தரையில் பதித்து முகம் நிறைந்த சோக ரேகைகளுடன் அவள் அமர்ந்திருக்க அடுத்த ஐந்து நிமிடத்தில் தியாவிடம் வந்த அனிருத்திற்கு அவள் கலக்கமான முகம் குழப்பத்தையே கொடுத்தது.
“ஏன் ஒரு மாதிரி இருக்க ஏன்ஜல்..” என அனிருத் கேட்க,
“ஒன்னுஇல்ல ரித்து..” என்று அவள் சொல்ல அவனுக்கோ அவள் குரலிலிருந்த மாற்றம் நன்றாகவே புரிந்தது.
அவளை நெருங்கி அமர்ந்தவன் அவள் கையை அழுத்தமாக பிடித்து மறுகையால் அவள் கன்னத்தை தாங்கி தன்னை நோக்கி திருப்பியவன்,
“என்னாச்சு ஆரா.. என் மேல ஏதாச்சும் கோபமா.. ஏன் இப்பிடி இருக்க..” என்று குரல் கமற கேட்க,
“நா தான் சொல்றேன்ல எதுவும் இல்லைன்னு.. ப்ளீஸ் விடு ரித்து..” என்று சொன்ன தியா அவன் கண்ணை பார்க்காது வேறுபுறம் பார்வையை பதித்திருந்தாலும் அவனிடமிருந்து விலகாமல் அப்படியே தான் இருந்தாள்.
தியாவோ வேறுபுறம் தன் பார்வையை திருப்பி தரையையே வெறித்தவாறே இருக்க அனிருத்தோ அவள் முகத்தையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். சுற்றும் முற்றும் மறந்து இருவரும் விலகாமல் அப்படியே அதே போஸில் இருக்க “அனிருத்துஉஉ..” “தியா..” என்ற இருவேறுபட்ட குரலில் சுயவுணர்வு பெற்று சட்டென விலகியவர்கள் ஒருசேர திரும்பி பார்க்க, தங்களுக்கு எதிரே இருந்தவர்களை பார்த்து “அக்கா..” , “ப்ரோ..” என்று அலறி விட்டனர்.
அவர்களுக்கு எதிரே நின்றிருந்தவர்களோ இருவேறு விதமான பார்வையை அவர்கள் மேல் பதித்திருந்தனர். ஹர்ஷாவோ ‘டேய்ய்.. அனிருத்து இதான் உன் ஆளா..’ என்ற ரீதியில் கண்ணை சிமிட்டி குறும்புப் புன்னகையுடன் பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டவாறு சுவாரஸ்யமாக பார்க்க, மித்ராவோ மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு தியாவை ‘என்ன இது..’ என்ற ரீதியில் ஒற்றை புருவத்தை தூக்கி உக்கிரமாக முறைத்துக் கொண்டிருந்தாள்.
தொடரும்..🔥
————————————————————–
எங்கய்யா அந்த Silent readers கொஞ்சம் வந்து commentsல தலைய காட்டிட்டு போங்கய்யா..😄😄😄
THANKS FOR UR SUPPORT GUYS..💛✌
-ZAKI🔥
