மோகத்தில் முக்குளிக்க வா அழகே
மோகம் 25:
மறுநாள் மித்ரன் தன் ஆபிஸ்க்கு கிளம்பிக் கொண்டிருக்கும் போது மதி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் .
அவள் பார்வையாலே தன்னை கபளிகரம் செய்வதைப் பார்த்து “என்ன மதுக்குட்டி பார்வையாலே என்னை சாப்பிட்டுவ போல…….”
“என்ன ஆச்சு மதுக்குட்டிக்கு காலையிலேயே…… “என்று அவள் தோள் மேல் கைப்போட்டுத் தன்னை நோக்கி இழுத்தான்.
“நீங்க எனக்கே எனக்கு மட்டுமேவா அத்தான்…….” என்று அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்.
“அதிலென்ன சந்தேகம் உனக்கு…… நான் உனக்கே உனக்கு மட்டும் தான்…… அதே போல நீயும் எனக்கு மட்டும் தான்…….”என்று கண்ணடித்தான்.
“இப்போ விட்டாக் கூட உன்ன அப்படியே கடிச்சு சாப்ட்டுடுவேன்…….”
“ஆனா கடவுள் என் வாழ்க்கையில் இப்படி விளையாடுவாருன்னு நான் எதிர்ப்பார்க்கலை…….” என்று வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.
அவன் அப்படி சொல்லவும் மது பதறி “என்ன அத்தான் இப்படி பேசுறீங்க…என்ன ஆச்சு….”என்று பதறினாள்.
அவள் பதறுவதை ரசித்துக்கொண்டே வெளியே சோகமாக “பின்ன என்ன மதி இன்னும் கொஞ்சநாள் லிமிட்டெட் மீல்ஸ் உனக்கு போதும் …….கல்யாணம் முடிஞ்சு தான் புல் மீல்ஸ்னு சொல்லிட்டீங்க……… நான் அதுவரைக்கும் லிமிட்டெட் மீல்ஸ் தானே சாப்டாகனும்……… இதுக்கெல்லாம் அந்த கடவுள் தானே காரணம் …….”
என்றான் பாவமாக.
அவன் விளையாடுவது புரியாமல் “இல்லையே நீங்க நைட் நல்லா தானே சாப்டீங்க …….”என்றாள்.
வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “அட ராமா……” என்று மனதுக்குள் சிரித்தவன் .
அவளைப் பார்த்து “அதில்லை மதுக்குட்டி இப்போ திராட்சைப்பழம் மட்டும் தானே சாப்பிடுறேன்……. இன்னும் ஒரு வாரத்துல உன்னையே மொத்தமா சாப்டுவேன்ல அதை சொன்னேன்……”என்று அவளைக் கடித்து சாப்பிடுவது போல் சைகை செய்தான்.
“அய்யோ அத்தான்……. உங்களுக்கு எப்போதும் அதே நினைப்பு தானா……”
“ஓ…… அப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை திங்கிற மாதிரி பார்த்தியே அது யாரு……”
“அது…. அது….அது வந்து….. எதாவது பேய் பிசாசா இருக்கும்……”என்று தன்னை கண்டு கொண்டானே என்ற பதட்டத்தில் உளறினாள்.
“மதி உங்க ஊருள பேய் பிசாசு இவ்ளோ அழகா இருக்குமா…… “என்று அவள் முகவடிவை அளந்தான்.
“அத்தான்…..”
“ம்ம் …..”
“நான் உங்களுக்கு ஏத்த மாதிரி இருக்கேனா…….”
“எதுக்கு இப்படி கேக்குற…… நான் இதுக்கு ஏற்கனவே உன்கிட்ட பதில் சொல்லிட்டேன் மது…….”என்றான் கடுமையாக.
அவள் அவனைப் பயத்துடன் பார்க்க அந்த பார்வையில் கனிந்தவன் அவளைக் கண்ணாடி முன்பு தன்னுடன் நிறுத்தி “இப்போ பார்த்து சொல்லு மதி……”என்றான்.
அவள் கண்ணாடியை நிமிர்ந்து பார்க்காமல் தலையை மட்டும் ஆட்டினாள்.
அவள் காதின் ஓரம் குனிந்து காது மடலை உரசியவாறு “நான் சொல்லட்டுமா மதிக்குட்டி…….” என்றவன் “முன்ன இருந்தத விட இப்போ நல்லா வெள்ளையா கும்முன்னு இருக்க…….. அப்படியே பார்த்தாலே கடிச்சு சாப்படனும் போல இருக்கு……. அதுவும் திராட்சைப்பழம் இருக்கே நல்லா பலப்பலன்னு கைக்குள்ள அடங்காம…….”என்று இன்னும் ஏதோ சொல்லப் போனவனை தடுத்து நிறுத்தினாள் தன் இதழ் கொண்டு.
அவன் பேசப்பேச தன்னுள் பல மின்னல்கள் வெடித்துச் சிதறுவதைப் பேதையவள் உணர்ந்தாள்.
அவனிடம் இருந்து விலகியவள் அவனை சந்திக்க முடியாமல் திணறியவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
அவளை அணைத்தவன் “நைட் வந்து மத்ததை சொல்றேன் மதுக்குட்டி…….” என்றான்.
அவள் நிமிரவே இல்லை.
“சரி நான் கிளம்புறேன்……” என்றவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு கிளம்பினான்.
……………………………………………………………………….
மதி தோட்டத்தில் தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தாள் .
அப்பொழுது ரமேஷ் அங்கே வந்து ஏதோ எடுப்பதற்காக குனிந்தவன் அவளை உரசி விட்டுச் சென்றான்.
இதை மது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்பு ” நான் தண்ணீர் காட்டுறேன்….. குடுங்க சின்னம்மா……” என்று அவளை நெருங்கி நின்று தண்ணீர் நிறைந்த குவலையை வாங்கும் போது கைகள் உரசவாங்கினான்.
மதிக்கு இப்போது தான் தப்பாக தோன்றியது. அவனை பார்க்கவும் ஒரு மார்கமாக சிரித்தான்.
அதற்குமேல் அவள் அங்கு நிற்கவில்லை. பயமாகவும் ,பதட்டமாகவும் இருந்தது. அதில் தன் கணவன் வந்ததை கவனிக்க மறந்தாள்.
தன் அறைக்கு வந்து “அத்தான் அப்போவே சொன்னாங்க யாரையும் நம்ப கூடாதுன்னு……. நான்தான் லூசு மாதிரி நடந்து கிட்டேன்…….. சே..அண்ணா…….தான்னே கூப்பிட்டேன்……. எப்படி இப்படி இருக்காங்க……”
மித்ரன் வந்தவன் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.
முத்துவிடம் சொல்லி அடிக்கடி ரமேஷை கண்காணிக்க சொன்னான். இப்பொழுது முத்து தான் மித்ரனுக்கு கால் பண்ணி அழைத்தான்.
முன்பு நிவேதாவின் அம்மா வந்து மதியைத் திட்டிய அன்று முத்துவிடம் “இங்கு என்ன நடந்தாலும் எங்கிட்ட சொல்லுங்க……” என்று கூறியிருந்தான்.
அதுப் போலத்தான் அன்று சிவகாமி வந்தபோதும் “சார் ஒரு ஐயா மட்டும்தான் வருவாருன்னு சொன்னீங்க…… ஆனால் ஒரு அம்மாவும் வந்துருக்காங்க……” என்று முத்து தகவல் சொல்லியதும் தான் மித்ரன் அன்று வந்தான்.
மித்ரன் தன்னறைக்கு எதுவும் தெரியாதது போல வந்தான். மதுவிற்கு பயத்தில் படப்படவென வந்தது .
அப்போழுது தன் கணவனைக் கண்டதும் தாவி அணைத்துக்கொண்டாள்.
பயத்தில் அவள் உடம்பு நடுங்குவதை மித்ரன் உணர்ந்தவன்”என்ன ஆச்சு மது……” என்றான்.
“ஒன்னும் இல்லை அத்தான்……. சும்மா உங்களைத் திடீர்ன்னு பார்க்கவும்…… கட்டிப் பிடிக்கனும்னு தோணுச்சு……”
மது தான் இப்பொழுது ரமேஷைப் பற்றி கூறினால் அடிப்பானோ என்று நினைத்து கொண்டு நம்ம இனி அவங்க இருக்க இடத்துக்குப் போகக்கூடாது என்று நினைத்தாள்.
அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் “அத்தான் நீங்க சொன்னது உண்மைதான் அத்தான்……… யாரையும் நம்பிக் கூடாது……….” என்றாள்.
“ஹிம்ம் சரிடா…… எனக்கு கொஞ்சம் தலைவலிக்கிற மாதிரி இருக்கு காஃபி போட்டு எடுத்துட்டு வாடா மதி……..” என்று அவளை அனுப்பி வைத்தவன், தன் கைப்பேசியை எடுத்து விக்கிக்கு அழைத்தான்.
