மோகத்தில் முக்குளிக்க வா அழகே
மோகம்- 13:
“மதுமதி” என்று கோபமாக அழைத்த மித்ரனை கண்டு, ” ஏன் கோபப்படுறாங்க…. என்னாச்சு…… “என்று நினைக்கும் போதே அவளை நெருங்கி அவள் கையைப் பிடித்து தங்கள் அறைக்கு இழுத்துக் கொண்டு போனான்.
அறைக்கு வந்ததும் “என்ன ஆச்சு அத்தான்….. ஏன் இவ்வளவு கோபம் …… உனக்கு அறிவு இருக்கா மது……” என்று ஆத்திரமாக கேட்டான்.
“ஏன் அத்தான்…..”
“என்ன ஏன் அத்தான்……. நீ எதுக்கு வேலை செய்ற…… நீ வேலை செய்ய சொன்னா ஆயிரம் ஆளுங்க இருக்கும்போது நீ ஏன்டா மதும்மா வேர்த்து விறுவிறுக்க வேலை செய்யனும்…… என்றதும் அவளுக்கு உருகிப்போயிற்று”
“அதுமில்லாம வேலையாட்கள் கூட அதிகமா பேச்சு வச்சுக்க கூடாதுடா……”
“இல்ல அத்தான்…… அந்த அண்ணா தான் உதவி பண்றேன்னு சொன்னாங்க…..” என்று வெகுளியாக சொன்னாள்.
“அதில்லடா மதுக்குட்டி யாரு எப்படினு நமக்கு என்ன தெரியும்….. அதுமில்லாம வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்கிற ஆளு நீ ……அதான்டா மது தெரியாதவங்ககிட்ட அதிகமாக பேச்சு வச்சுக்க கூடாது……. சரியா……”
“ஹிம்ம் சரி அத்தான்…..”
“அதுமில்லாம நீ எந்த தப்பான எண்ணத்தோடும் பேச மாட்ட……ஆனால் உன்கிட்ட பேசுறவங்களும் அப்படி இருக்கணும்ல…… அவங்க தப்பான நோக்கத்தோடு பேசினா நமக்கு எப்படி தெரியும் ……அப்புறம் வெளிய இருந்து பாக்குறங்களுக்கும் அது தப்பா தான் தெரியும் …..சரியா……” என்று சின்ன குழந்தைக்கு சொல்வதுபோல் சொன்னான்.
“சரி அத்தான்……”என்று சொன்னவள் தன் மேல் அக்கறை காட்ட தன் அத்தான் இருக்கின்றான் என்ற சந்தோஷத்தில் அவனை இழுத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
“என்ன மதுக்குட்டி கன்னத்துல குடுக்குற……. எனக்கு இங்க வேணும்……”
“போங்க அத்தான்……” என்று அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளினாள்.
“அய்யோ அத்தான் உங்க சட்டையில் மண் ஒட்டிடுச்சு அச்சோ…..”என்று சொல்லி அதே கையால் துடைத்து விட்டாள்.
“மது நீ கறையை தொடைக்கிறேன்னு இன்னும் அழுக்காக்குற….. ” என்று சிரித்தான்.
“அய்யயோ …..”என்று அவளும் சிரித்துக்கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
“மது….. ரெண்டுபேரும் சேர்ந்து குளிப்போமா ……”
“அதெல்லாம் வேண்டாம் அத்தான்…… “
அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அலேக்காக தூக்கியவன் குளியலறையில் இறக்கிவிட்டு ஷவரைத் திறந்துவிட்டான்.
“அத்தான் நீங்க வெளியே இருங்க…… நான் குளிச்சிட்டு வரேன்……” அவள் சொல்லும் போதே சேலையை உருவிப் போட்டிருந்தான்.
“அத்தான் …….ப்ளீஸ் அத்தான்…… ” என்று சுவற்றுபக்கம் திரும்பி நின்றுகொண்டாள் வெறும் பாவாடை ரவிக்கையுடன்.
அப்படியே அவள் மீது சாய்ந்து சுவற்றோடு அழுத்தியவன் “மதும்மா திரும்பிடி……” என்று அவள் பின் கழுத்தில் முத்தமிட்டான் கூச்சம் தாங்காமல் திரும்பியவள் பேரம் பேச ஆரம்பித்தாள்.
“அத்தான் இப்போ வெளியே போனா நைட் ரெண்டு திராட்சைப்பழமும் தருவேன்…… “
அவளைப் பார்த்து சிரித்தவன் “நீ தர வேண்டாம் நானே எடுத்துப்பேன் ……” என்று அவள் நெஞ்சில் முட்டினான் பின்பு அவள் கெஞ்சவும்
“சரி இரு நான் குளிச்சிட்டு போறேன்…..”
“அய்யோ வேண்டாம் அத்தான்…… “
“நான் உன்னை போல வெக்கமெல்லாம் பட மாட்டேன் மதுக்குட்டி…..” என்று அவன் சட்டையை கழட்டினான்.
அவன் சட்டையை கழட்டவும் இவள் திரும்பி நின்றுகொண்டாள்.
பின்பு எந்த சத்தமும் வரவில்லை என்றதும் ஓரக்கண்ணால் பார்த்தாள்.
“ஓய் கள்ளி இங்க என்ன பார்வை……” என்று அவளை பின்னால் இருந்து அணைத்தவன் “குளிச்சிட்டு வா….. நான் போறேன்…..” என்று முத்தமிட்டு விட்டு சென்றான்.
அவன் வெளியே சென்றதும் பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டாள்.
பின்பு அவள் குளித்து முடித்து டவலுடன் வெளியே வந்தாள் ,அங்கேயே நின்றிருந்திருப்பான் போல ,வந்து அள்ளிக்கொண்டான்.
“அத்தான்…. என்ன அத்தான்….. இப்படி பண்றீங்க……”
“எப்படி பண்றேன் …..என் பொண்டாட்டிய நான் தூக்கினது தப்பா……இதென்னடா மித்ரனுக்கு வந்த சோதனை…… ஏதோ வேற யாரையோ தூக்கின மாதிரி சொல்ற…….”
“ஓ ……என்ன தவிர வேற யாரையும் தொட கூடாது அத்தான்……. எனக்கு நீங்க மட்டும்தான் இருக்கீங்க…… நீங்களும் என்னைவிட்டு போய்ட்டா நான் என்ன பண்ணுவேன்…….”
இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை தான் அவனை பார்த்து , ஆனால் இனி அவன் இல்லாமல் இருக்க முடியாது என்று தோன்றியது.
அன்பு காட்ட யாருமே இல்லாமல் அன்புக்காக ஏங்கி தவித்தவள் அன்பின் மொத்த உருவமாய் , “உனக்கெனவே நான்” என்று வந்து நின்றவனை அப்படியே பிடித்துக்கொண்டாள்.
“உன்னை விட்டுட்டு எங்கும் போக மாட்டேன்டா…….” என்று அனைத்துகொண்டான்.
“சரி சாரி கட்டலையா…… இப்படியே அணைச்சுக்கிட்டே எவ்வளவு நேரம் இருக்குறது…….”
“திராட்சைபழம் சாப்பிடலையா…..” என்று இவளே கேட்க “சூப்பர் மதுக்குட்டி நல்ல முன்னேற்றம் ……”என்று அவளை சிலாகித்தவன் தன் வேலையே ஆரம்பித்தான்.
அப்புறம் என்ன…… இன்னொரு திராட்சைப் பழமும் பெருசாயிடுச்சுன்னு புகார் வாசித்தாள்……
ஆனால் இந்த சந்தோஷம் நாளை நிலைக்குமா……
