மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

அத்தியாயம் 7

எண்ட செல்லக்குட்டி.. புஜ்ஜுக்குட்டி அம்முக்குட்டி.. பட்டுக்குட்டி என வித விதமாக கொஞ்சி.. ஒவ்வொரு வார்த்தைக்கும் முத்தத்தால் அர்ச்சித்த.. வசீகரனையே கோபமும் பொறாமையும் வழிய பார்த்துக்கொண்டிருந்தாள் தீபாஞ்சலி.. 

இன்னும் வசீகரன் மீதான அவள் கோபம் தீரவில்லை.. வந்த நாள் முதல் அவனும் அவளிடத்தில் கெஞ்சிக்கொண்டுதான் இருக்கிறான்.. ஆனால் அவனவள் கண்டுகொள்ளவில்லை.. 

தீபாஞ்சலியின் கோபம் நியாயமானது என வசீகரனுக்கும் புரிந்ததால் அவளின் பாராமுகத்தையும் கோபத்தையும் தாங்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் தன்னவளிடத்தில் மண்டியிட்டுக் கொண்டிருந்தான்… 

ஆனால் அவனின் முறுக்கேறிய தேகம் மட்டும் இரவு அவனை வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது.. கைக்கு அருகில் மோகன ஓவியமாய் தன்னவள் இருந்தாலும் சுவைக்கவும் அள்ளி அணைத்திடவும் இயலாமல் தவித்துக் கொண்டிருந்தது அவனது ஆண்மை..

அவனின் முறுக்கேறிய ஆண்மைக்கு முழு விருந்து கிடைக்காவிட்டாலும்.. பெண்ணவளின் சிறு ஸ்பரிசம் போதும்.. அதனையே உயிர் பொருளாய் கொண்டு, அவளிடத்தில் வரும் சுகந்தத்தை நுரையீரலுக்குள் நிரப்பி இரவை கழித்துவிடலாம் என யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு.. அவனின் உயிரணுவில் உருவான சூலே ஓர் வழியை வித்திட்டது.. 

தீபா கொச்சின் வந்த மூன்றாம் நாள்.. அவளையே ஏக்கம் சுமந்த விழிகளால் வருடியவனின் பார்வை எதேச்சையாக புடவை விலகிய அவளின் மணிவயிற்றை பார்த்தது.. அப்பொழுது சட்டென்று அவன் மூளையில் மின்னலடிக்க நொடியும் தாமதியாது தீபாவின் வயிற்றை நோக்கி தாவியவன்.. இச்சு இச்சு என முத்தங்களை வாரியிறைத்து நாவால் வருடி.. அதரம் கொண்டு கவ்வியிழுக்க.. தீபாவினுள் உணர்ச்சிக்கொந்தளிப்புகள்.. 

கணவனின் இந்த திடிர் செய்கையை எதிர்பாராதவள்.. தன்னவனின் ஈரப்பதம் நிறைந்த முத்தத்தில் மயங்கி விழி மூடினாள்.. ஆஆ… என்ன பண்ரெள்.. விடுங்கோ என ஹஸ்கியாய் ஒலித்த நங்கையின் குரல்.. ஆடவனுக்கு போதையேற்ற.. அவனின் முகம் வயிற்றுப்பகுதியிலிருந்து கீழே இறங்கியது.. 

இதற்கு மேல் சென்றால்.. தன்னிலைமை இன்னும் மோசமாகும் என அறிந்த தீபா கணவனின் சிகை இழுத்து தள்ளியவள்.. குரலில் கோபத்தை முயன்று வருவித்து… என்ன பன்ரேள்.. நான்தான் உங்ககிட்ட என்னையத் தொடக்கூடாதுனு சொல்லியிருக்கேன்ல.. அப்படி இருக்கிறச்ச எப்படி நீங்க இந்த மாதிரி பண்ணலாம் என தன் வெட்கசிவப்பை கோபச்சிவப்பாக காண்பித்து கேட்டாள்.. 

அப்பாவியாக விழித்த வசீகரனோ.. அஞ்சு ஞான் எண்ட பிள்ளையைத்தானே கொஞ்சுனேன்.. வேறேதும் பண்ணலையே என அப்பாவியாய் ( அடப்பாவியாய் ) கூற.. 

பே வென விழித்தவள்.. கள்வனின் கள்ளம் புரியாது என்ன சொல்றேள்.. என்று அப்பாவியாய் கேட்க.. அதனைக் கண்டு உள்ளுக்குள் சிரித்தவன்.. வெளியே முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு.. நீதானே சொன்ன உன்னை தொடக்கூடாதுன்னு அதான் ஞான் உன் வயித்துக்குள்ள இருக்க எண்ட பிள்ளையை தொட்டேன்.. கொஞ்சுனேன்.. முத்தம் கொடுத்தேன் என்று கூறியதும்.. கணவனின் கபடம் புரிய.. தீயாய் முறைத்தாள்.. 

அதற்க்கெல்லாம் அசராத ஆண்சிங்கம்.. அவள் வயிற்றுக்குள் இருக்கும் தன் குழந்தையை கொஞ்ச வேண்டுமாம்.. தினமும் முத்தம் கொடுக்க வேண்டுமாம் கைக்குள் அடக்கிக் கொள்ள வேண்டுமாம் என சில பல வேண்டுமாம்களை போட்டு அவள் வயிற்றுப்பகுதியை தனக்கு பட்டா போட்டு வாங்கிக்கொண்டான்.. அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் இரவும் அவள் வயிற்றை தடவி முத்தமிட்டு மீசை ரோமங்களால் உரசி.. சதைப்பகுதிகளை கவ்வி இழுத்து.. தன் மனைவியை இன்பச் சித்ரவதை பண்ணிக்கொண்டிருந்தான்.. இரவுதான் அப்படியென்றால் பகலிலும் சிலநேரம் வருபவன் அவள் வயிற்றில் முகத்தை அழுத்தி ஆழ்ந்த முத்தமிட்டு செல்வான்.. 

இவையனைத்துமே அவனின் ஆண்மைக்கு போதவில்லைதான்.. யானைப்பசிக்கு சோளப்பொரி கொடுப்பது போல்தான்.. இருந்தும் தன்னவளின் கோபத்திற்கு மதிப்பு கொடுத்து.. அவளின் சம்மதத்திற்க்காக காத்திருக்கிறான்.. 

இன்றும் அதே போல் அவனின் கொஞ்சல்கள் முத்தங்கள் அனைத்தும் முடிந்து அவள் வயிற்றை கட்டிக்கொண்டே அவன் உறங்க.. பெண்ணவள் உறக்கம் மறந்து.. தன்னவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.. கரங்களோ.. அவளறியாது அவனின் அலை அலையான சிகையை வருடத் தொடங்கியது.. 

கரங்கள் சிகையை வருட.. நினைவுகள் தன்னவனை முதன் முதலாய் சந்தித்த நிகழ்வுகளை நோக்கி பயணமாகியது.. மாறன் ஓமனா திருமண பேச்சு முடிந்து அனைவரும் விருந்திற்கு தயாராக தீபாஞ்சலி சிறிது நேரம் உலாவலாம் என வெளியே வந்தவளை.. அங்கு விரவியிருந்த இயற்கை மகள் ஈர்த்துக்கொள்ள.. அதனை ரசித்தவாறு பின் பக்கம் வந்தாள்.. 

அப்பொழுது அங்கு அழகுற அமைக்கப்பட்டிருந்த குளம்.. பாவையவளின் விழிகளை கவர.. அதில் கால் நனைக்கும் ஆசையோடு அவற்றை நெருங்கினாள்.. நார்த்திசைகளிலும் படிக்கட்டுகள் அமைத்து.. அதன் இருபுறமும் சிறு சாய்வு படிக்கட்டுகளுடன் அமைந்திருந்தது.. 

ஆசைக்கு இருகால்களையும் நனைத்துவிட்டு திரும்ப.. ஈரக்கால்கள் படிகளில் வலுக்கிவிட்டது.. ஆஆ என அலறியவாறு விழுந்தவளை பிடிக்க முயன்ற வலுவான கரத்தின் கால்களும் வழுக்கிவிட பெண்ணவள் விழுந்த அதே இடத்தில்.. அக்கரத்திற்கு உரியவனான வசீகரனும் வீழ்ந்தான்.. 

இருவரும் நீருக்குள் மூழ்கி வெளியே வந்தனர்.. திடிரென்று தண்ணீருக்குள் விழுந்து எழுந்திரித்ததில் பெண்ணவளின் உடல் நடுக்கம் கொள்ள.. வசீகரன் அவளை சமாதானம் படுத்தினான்.. இருந்தும் அவள் நடுக்கம் குறையாமல் இருக்க.. அவளை இழுத்து நெஞ்சுக்குள் அடக்குவது போல் இறுக்கியனைக்க.. சிறிது சிறிதாக அவளின் நடுக்கம் குறைய ஆரம்பித்தது..

முற்றிலும் பயமும் தெளிய மெல்ல சுயநினைவு கொண்டவள் அப்பொழுது தான் மாற்றான் ஒருவனை அனைத்திருப்பதைக் கண்டு.. சட்டென்று அவனை விட்டு விலகியவள்.. தன்நிலை கண்டு அதிர்ச்சியடைந்தாள்.. 

தண்ணீரில் விழுந்த வேகத்தின் காரணமாக மார்போடு தழுவியிருக்க வேண்டிய மாராப்பு நழுவியிருக்க.. வசீகரன் மேலே விழுந்து அவளை எக்குத்தப்பாய் தூக்கி விட்டதனால் முன்புற மேலாடையின் ஒரு பகுதியைக் காணவில்லை.. அதனால் மீண்டும் தண்ணீருக்குள் அடங்கினாள்.. 

வசீகரன் முதன் முதலாக ஓர் பெண்ணை இந்நிலையில் கண்ட அதிர்ச்சியில் பிரமித்து நின்றிருந்தான்.. அதுவும் அவளின் ஒருபக்க வெண்ணெய் கட்டிகள் அவனுக்குள் ஆணுக்குரிய கிளர்ச்சியை ஏற்படுத்தின.. இருபத்தியெட்டு வயதுவரைக்கும் சன்னியாசி போல் வாழ்ந்து வந்தவனை தன் இளமையின் செழுமையில் கட்டிவைத்ததறியாது.. மங்கை ஆடவனின் முகம் பார்க்க முடியாது தலை குனிந்திருந்தாள்.. 

மீன்களின் குறுகுறுப்பில் இயல்பு திரும்பியவன்.. சட்டென்று மறுப்பக்கம் திரும்பி.. நீங்கள் பின் வாசல் வழியா வீட்டுக்கு போங்க.. என்றவன்.. அவளை மறுபடியும் பார்க்க துடிக்கும் விழிகளுக்கு கடிவாளமிட்டு.. வேக வேகமாக மேலே சென்றான்.. 

அவன் சென்றதை அறிந்து தலையை நிமிர்த்தியவளின் முகத்தில் வெட்கம், கூச்சம், சங்கோஜம், அழுகை என பல உணர்வுகள் பிரதிபலித்தது.. முந்தானைக் கொண்டு தன் முன்னழகை மறைத்தவள்.. யாரின் முகமும் காணாது.. கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறி உள்ளே சென்றாள்.. 

அங்கு இருந்தவரை வசி பார்க்காத பொழுது இவள் பார்ப்பதும்.. இவள் பார்க்காத பொழுது அவன் பார்ப்பதும் என இருவருக்குள்ளும் கண்ணாமூச்சி ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.. திறப்பு விழாவிலும் அப்படியே.. இருவருக்குள்ளும் மெல்லிய சலனங்கள் தோன்றி நீரு பூத்த நெருப்பாய் மனதின் ஓரத்தில் தகித்துக் கொண்டிருந்தது.. 

இதுவரை வீட்டு ஆண்களைத் தவிர.. வேறொருவரிடம் நின்றுக் கூட பேசியிராத தீபாஞ்சலியும்.. அம்மா தங்கைகளைத் தவிர வேறு பெண்களிடத்தில் உணர்ச்சியற்ற முகத்தை மட்டுமே காண்பிக்கும் வசீகரனும் தங்களின் இயல்பு மாறி நடந்துக்கொண்டிருந்தனர்.. 

இரவு மாத்திரை கலந்த இளநீரைப் பருகிய பின்பு.. தேகம் முறுக்கேறிய நிலையிலும்.. தீபாவை விட அழகான வெளிநாட்டு அழகிகள் அரைகுறை ஆடையில் சுற்றித் திரிந்தாலும்.. அவனின் விழிகளுக்கு தீபா மட்டுமே தெரிந்தாள்..

அவளைக் காண காண வசீகரனின் உணர்வுகள் பேயாட்டம் போட.. இனி அவளைப் பார்த்தால் தன்நிலை மோசமாகும் என்றறிந்தவன்.. மாறனிடம் அறைக்கு போகலாம் என்றான்.. ஆனால் அவனின் இளமையின் சோதனைக்காலம் இனிதான் என வசீகரனுக்கு தெரியவில்லை.. 

அந்த போதையேறிய நிலையிலும் ஓமனா அறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றியதை பார்த்தவன்.. அடுத்த அறைக்குள் புகுந்த தீபாஞ்சலியை பார்க்க தவறினான்.. அதன் விளைவு அவனும் அந்த அறையினுள் நுழைந்து மெத்தையில் துவண்டிருந்த கொடிமேனியவளின் மேல் பரவிப்படர்ந்தது அவளை தனதாட்க்கிக் கொண்டான்… 

மெத்தையில் வீழ்ந்து அங்குமிங்குமாய் புரளும் போது.. பஞ்சினும் மெலிதான பொதிமூட்டையின் மேல் சாய்ந்தவன்.. அதன் மென்மையில் ஈர்க்கப்பட்டு மேலும் மேலும் உரச.. பெண்ணவள் முனங்க ஆரம்பித்தாள்.. அதில் சற்று வித்தியாசம் உணர்ந்து விழி திறந்தவன்.. மெல்லிய லைட்லேம்பின் ஒளியில் தன்னவளின் முகத்தைக் கண்டு பரவசமடைந்தான்.. 

இருவரின் மனதிற்குள்ளும் நீரு பூத்த நெருப்பாய் இருந்த இளமையின் உணர்வுகள்.. இப்பொழுது உடல் முழுக்க பரவி.. அவர்கள் இருவருக்கும் மோகத்தீயைப் பற்ற வைத்தது.. 

மெல்ல மெல்ல மன்மதனின் காதல் ஓவியங்கள் அரங்கேற்றப்பட்டன.. இதுவரை  அவன் கரங்கள் அறியாத மென்மையை தொட்டு தடவி பரவசமடைந்து.. மேலும் மேலும் தன்னவளுக்குள் இருக்கும் பொக்கிஷப்பேழைகளை அறிய ஆவல் கொண்டான்.. மங்கைக்கு ஆடவனின் இதழ் ஜாலங்கள்.. விரல் ஜாலங்கள்.. அனைத்தும் புதுமையாய் இருந்தது.. அவள் உட்கொண்ட மாத்திரை அவளின் ஹார்மோனை அதிகரிக்க செய்து.. அவனையும் அவளையும் விடுத்து அனைத்தையும் மறக்க செய்தது.. இதுவரை மன்மதக்கலையில் பாலபாடம் கூட அறியாத இருவரும் தங்களை வைத்தே அனைத்தையும் கற்றுக்கொண்டனர்.. 

இரு தேகங்களும் மோகச் காய்ச்சல் கொண்டிருக்க.. காமம் எனும் மருந்து கொண்டு அவர்களின் காய்ச்சலைக் குணப்படுத்திக் கொண்டிருந்தனர்.. காதலெனும் சொல்லை விழியால் கூட பகிராத இரு உள்ளங்களும்.. அதையும் தாண்டிய அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டனர்.. 

விடிகாலை வேளை.. விட்டதை வெறித்தவாறு வசீகரன் படுத்திருக்க.. அவனின் வலப்பக்க மார்பில் தீபாஞ்சலி படுத்திருந்தாள்.. அவள் விழி சிவந்து முகம் வீங்கியிருந்தது.. அவை இரவு முழுக்க விளையாடிய விளையாட்டின் விளைவா அல்லது சற்று முன் அழுத அழுகையின் விளைவா என தெரியவில்லை… 

வசீகரன்.. இடது கரத்தை தலைக்கு மேல் வைத்திருந்தவன்.. வலது கரத்தால் அவளின் முதுகை வருடிக்கொண்டிருந்தான்.. அஞ்சுகுட்டி ஓமனா கல்யாணம் முடிஞ்சவுடனேயே.. நம்ம கல்யாணத்தை பத்தி நான் பேசுறேன்.. நீ கவலைப்படாத.. இனிமேல் உன் கண்ணுல இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரக்கூடாது… அப்படி வந்தா என் மேல உனக்கு நம்பிக்கையில்லைன்னு அர்த்தம் என அவள் முகம் தாங்கி கூறியவன்.. அவளின் கண்ணீர்த்தடங்களை துடைத்தான்.. 

பெண்ணவளின் மனமும் சமாதானமாக.. அவனின் கன்னத்தில் முத்தம் வைத்து தன் நம்பிக்கையை கூறினாள்.. பின் யாரும் அறியாது தன்னறைக்கு அவள் செல்ல.. வசீகரனின் மனம் அவனவளை நினைத்து தளும்பிக்கிடந்தது.. 

அடுத்து இருவரும் சந்தித்துக் கொண்டது மாறன் ஓமனா ரிஷப்ஷனில் தான்.. இந்த ஒன்றறை மாதம் காலமும் தினமும் போனில் மணிக்கணக்காக பேசி தங்களின் நேசத்தை வளர்த்தாலும் நேரில் பார்ப்பது போல் வராது அல்லவா.. அதனால் இருவரும் ஒருவரையொருவர் பார்வையால் விழுங்கிக்கொண்டிருந்தனர்…. 

அப்பொழுது தேவகி அன்னத்தை அழைத்துவர சொல்லி இவளையனுப்ப.. தீபாவும் அங்கு தனக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல் அவர்கள் அறைக்கு சென்றாள்.. 

ஏண்ணா இந்த வசி பிள்ளையாண்டான் எவ்வளவு பொறுப்பு பார்த்தேளா.. அப்பா இல்லாத குறையே தெரியாம எல்லாத்தையும் நம்ம மாட்டுப்பொண்ணுக்கு செஞ்சுருக்கான்.. ரொம்ப நல்லவனாவும் தெரியுறான்.. பேசாம தீபாவ அவனுக்கு பேசுனா என்ன.. என தன் கணவனிடம் கேட்டார்.. 

அதைக்கேட்டு வெளியில் நின்றிருந்த தீபாவின் முகத்தில் ஆயிரம் மத்தாப்புகளின் ஒளி.. ஆனால் அடுத்து புருஷோத்தமன் பேசியத்தைக் கேட்டு அவள் முகம் ஒளியிழந்து வெளிறியது… 

நம்மாத்துக்கு ஒரு களங்கம் போதும்டி.. இன்னொன்னு வேணாம்.. அதான் நான் தீபாவுக்கு என் சினேகிதன் ராமமூர்த்தி பேரன் வெங்கட்ட பேசலாம்னு இருக்கேன்.. மாறன் கல்யாணம் முடிஞ்ச ரெண்டு மாசத்துல தீபா கல்யாணத்தை கோலாகலமா நடத்தனும்.. அப்போதான் போன குடும்ப மானம் கொஞ்சமாவது திரும்ப வரும் என கத்த அன்னம் வாயை மூடிக்கொண்டார்.. 

தீபாவோ மனதிற்குள் பயந்துக் கொண்டிருந்தாள்.. வசீகரனை விடுத்து மற்றொரு ஆண்மகனை.. பேச்சுக்காக கூட அவளுடன் இணைத்துப் பேசியது அவளுக்கு அப்படியொரு அருவருப்பைக் கொடுக்க.. அறைக்குள் ஓங்கரித்துக் கொண்டிருந்தாள்.. வயிற்றில் உள்ளது அனைத்தும் வாய்வழியே வந்துவிட்டது.. 

ரிஷப்ஷன் நல்ல படியாய் முடிய.. முக்கிய உறவினர்கள் குடும்பத்தினர்கள் அனைவரும் மண்டபத்திலையே தங்கிவிட்டனர்.. இரவு அங்கொரு இங்கொருவருமாய் பேசிக்கொண்டிருக்க.. யாரும் அறியாது தீபாவும் வசீகரனும் ஓர் அறையினுள் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டியிருந்தனர்.. 

என்ன சொல்ற அஞ்சு.. 

இன்னும் என்ன சொல்ல சொல்றேள்.. இப்போவே என்னைய எங்கயாவது கூட்டிப்போய் கல்யாணம் பண்ணிக்கோங்கோ.. இல்லன்னா தாத்தா உங்களையும் என்னையும் பிரிச்சுடுவார் என தீபா வந்ததிலிருந்து கூறியதையே கூற.. மாறனின் முகம் கோபத்தை தத்தெடுத்து.. 

புரிஞ்சுத்தான் பேசுறியா… நான் மட்டும் உன்ன இப்போ அழைச்சுட்டு போயிட்டேன்னா.. நாளைக்கு ஓமனா கல்யாணம் நின்னுடும்.. 

அச்சோ ஏன் நான் சொல்றத புரிஞ்சுக்க மாட்டேங்குறேள்.. எங்கண்ணன் அப்படியொன்னும் உங்க தங்கச்சிய கைவிடமாட்டார்.. ஆனா நாம இப்போ ஒன்னுசேரலன்னா.. இனி எப்போதும் சேர முடியாம போயிடும் என அவனை அணைத்தவாறு மன்றாடிக்கொண்டிருக்க.. வசீகரன் ஒன்றும் புரியாது.. அவளை சமாதானம் படுத்திக்கொண்டிருந்தான்.. அப்பொழுது அவர்கள் எதிர்பாராவிதமாய் அறையின் கதவு சட்டென்று திறக்கப்பட.. இருபக்க குடும்பத்தினர் உறவினர்கள் அனைவரும் வாசலில் நின்றிருந்தனர்.. 

அய்யோ அய்யோ.. இந்த அநியாயம் எங்கயாவது நடக்குமா.. ஒரு பொண்ணும் பையனும் இந்த நேரத்துல தனியான அறையில கட்டிபிடிச்சிண்டு நிக்குறாளே.. என ஒரு பழங்காலத்து மாமி தொண்டை கிழிய கத்த.. மற்றவர்களும் கண் காது மூக்கு வைத்து பேச ஆரம்பித்தனர்.. 

கோபவெறியில் புருஷோத்தமன் வசீகரனை அடிக்க முன்னேவர ஏற்கனவே பயத்தில் இருந்த தீபாஞ்சலி.. புருஷோத்தமனின் கோபத்தில் ஜொலித்த முகத்தை கண்டு வெலவெலத்து போனாள்.. எங்கே வசீகரனை தன்னை விட்டு பிரித்து விடுவார்களோ என்று அஞ்சியவள்..

நாங்க ரெண்டு பேரும் காதலிக்கிறோம் தாத்தா.. எங்கள பிரிச்சிராதிங்க.. இவர் இல்லைன்னா நான் செத்துடுவேன்.. நீங்க என் கல்யாண விஷயமா பேசுனதெல்லாம் நான் கேட்டேன்.. அதான் இவர என்னை உடனே கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டுட்டிருந்தேன்.. என அழுகையுடன் அலற.. மொத்த கூச்சலும் அடங்க… அனைவரும் தீபாஞ்சலியையே அதிர்ச்சியுடன் பார்த்திருந்தனர்.. வசீகரனுக்கும் அப்பொழுது தான் தன்னவளின் மனநிலை புரிய.. யாரையும் பார்க்காது அவளை தன் தோளில் இறுக்கிக் கொண்டான்… 

பிறகு அங்கு மறுபடியும் சண்டைகள் கத்தல்கள் என அணைத்தும் முடிந்து.. காலையில் அவர்களின் திருமணத்தையும் வைத்து விடுமாறு உறவுகள் ஆலோசனை கூற.. இரு குடும்பத்து பெரியவர்களுக்கும் கையை கட்டிய நிலை.. இப்படி பல அதிர்ச்சியான சம்பவங்களுடன் இருவரின் திருமணமும் நடைப்பெற்றது… 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *