மோகத்தில் முக்குளிக்க வா அழகே
மோகம் 14:
வான்மதி தன் தாயிடம் “நான் கிளம்புறேன்…… தயவு செஞ்சு சென்னைக்கு போய் அசிங்கப்பட்டு வராதா…… ஏன்னா நீ கண்டிப்பா சும்மா இருக்க மாட்டேன்னு மாமாக்கு தெரிஞ்சிருக்கும்…….. அதனால் உன் வேலையெல்லாம் அங்கபோய் காட்டாத……. அப்புறம் பின்னாடி வருத்தப்படுவ…….”
சொல்லிக்கொண்டிருந்தவள்
தன் தாயை நெருங்கி கைகளைப் பிடித்துக் கொண்டு ” ம்மா அக்கா பாவம் மா….. உன்கூட இருந்தவரைக்கும் அவள் நிம்மதியா இல்ல…… சரி உனக்கு தொந்தரவா இருந்தா, சுமையா இருந்தா என்று நீ நினைச்சாலும் அவ இங்க இருக்கிற வரைக்கும் மாடு மாதிரி உழைச்சிருக்கா……. நீ அப்பொழுதும் அவளை அடிச்சிருக்க…… திட்டிருக்க …… ஆனால் அவள் ஒன்னுமே பேசுனது இல்லை….. ப்ளீஸ் மா….. அவள் இப்போ இங்க இல்லை….. உனக்கு எந்த வேலையும் வைக்காம மாமா வந்து கூட்டிட்டு போய்ட்டாரு…….”
“சரி டி …. சொன்னதே எத்தனை தரம் திரும்ப திரும்ப சொல்லுவ …..இப்படியே இருந்த உன்ன கட்டிக்கப் போறவன் காதுல பஞ்ச வச்சுட்டுதான் சுத்துவான்…….”
“அந்த பாவப்பட்ட பிறவி எங்க இருக்கோ யாருக்கு தெரியும்……..”
(எனக்கு தெரியும் அந்த பாவப்பட்ட பிறவி லண்டன் ல இருக்கு)
“சரி நான் கிளம்புறேன்…..”
“சரி போய்ட்டு போன் போடு…..”
………………………………………………………………………..
ஒரு வாரம் ஓடியிருந்தது…..
மித்ரன் மதியிடம் சொல்லிக்கொண்டு ஆபிஸ்க்கு கிளம்பிவிட்டான்.
கிருஷ்ணா புறப்பட்டதும் சனா, மதியிடம் “கோயிலுக்கு வரியாடா போய்ட்டு வரலாம்…….”
“இல்லை அத்தை… எனக்கு கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்கு……நான் வீட்டுலயே இருக்க வா…..”
“சரிடா டேப்லட் தரேன் வா போட்டுட்டு படு….. “.
“ஹிம்ம் …..”
“மித்ரன் கிட்ட சொன்னியா….. “
“இல்லை அத்தை சொல்லியிருந்தா விட்டுட்டு போயிருக்க மாட்டாங்க…… ஏதோ மீட்டிங் இருக்குன்னு சொன்னாங்க……. அதான் எதும் சொல்லல……”
“ஹிம்ம் ….ஆமாம் டா ஜெர்மனில இருந்து ஏதோ ஒரு ப்ரோஜெக்ட் பத்தி பேச வரதா உங்க மாமா கூட சொல்லிட்டு இருந்தார்…..”
“ஹ்ம்ம்…. ஆமாம் அத்தை அத்தானும் அதான் சொன்னாங்க…..”
“சரிடா நான் ரமேஷ கூட்டிட்டு கிளம்புறேன் ……நீ ரூம்க்கு போ…..”
“சரி அத்தை……” என்று தன் அறைக்கு வந்தவள் மாத்திரையை போட்டு சிறிது நேரம் தூங்கினாள்.
ஒரு மணி நேரம் கழித்து மதிய சமையலுக்கு மெனு சொல்ல கீழிறங்கியவளை ,கர்னக் கொடூரமான ஒரு குரல் அழைத்தது.
(வெண்கலப்பானையை உருட்டினா ஒரு சத்தம் வருமே அதவிட மோசமா)
“ஏய் இங்க வா….. “
(மித்ரன் இருக்கும் போது சொல்லி பாரு வாய ஒடைச்சுட்டு தான் மறுவேலை பார்ப்பான்….)
“பிச்சைக் காரியை வீட்டுல வச்சா இப்படிதான்……நல்ல தூக்க மா……”
“மித்ரன் யாருக்கும் சொல்லாம கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டான்னு சொன்னப்போ …..சரி பொண்ணு அழகா இருப்பா…… சொத்து சொகமா இருப்பான்னு நினைச்சேன்…….”
“இங்க வந்து பாத்தால்ல தெரியுது….. கருப்பா இருக்க……
அப்படி என்னடி உன்கிட்ட இருக்கு…… மித்ரன் உன்கிட்ட மயங்க……” என்று கேவலமாக பேசினாள்.
“நல்லா பணக்காரனா பாத்து வலச்சுப் போடுன்னு உங்க ஆத்தாக்காரி சொன்னாளா……” என்றதும் மதிக்கு பொல பொலவென கண்ணீர் கொட்டியது.
அவள் அழுததை பார்த்திருந்தால் வேறொருவராக இருந்தால் எதும் சொல்லாமல் போயிருப்பார்கள்.
ஆனால் இந்த பூதம் அவளை விடவில்லை
“மித்ரன் எவ்வளவு பெரிய பணக்காரன்னு தெரியுமாடி உனக்கு……. அவனுக்கு பொண்ணு குடுக்க க்யுல பணக் காரங்க வரிசைக் கட்டி நிக்கிராங்க……”
“அவனையும் உன்னையும் சேர்த்து கண்ணாடில பார்த்துருக்கியா……. என் அண்ணன் மகன் கால் தூசிக்குப் பெறமாட்ட நீயெல்லாம் அவனோட பொண்டாட்டி……”
மதி மனதிற்குள் “அத்தான் ……வாங்க அத்தான்…… ப்ளீஸ் இந்தம்மா என்னென்னமோ பேசுறாங்க…… என்னால தாங்க முடியலை…..” என்று மனதோடு அவனிடம் பேசியவள் அழுதுகொண்டே இருந்தாள்.
“இப்போ கூட ஆயிரம் கோடி பெருமானமுள்ள ஒரு ப்ரொஜெக்ட் சைன் பண்ண தான் போயிருக்கான்…..”
“ஆயிரம் கோடிக்கு எத்தனை ஜீரோன்னு உனக்கு தெரியுமாடி……”
“இந்த அண்ணன் அண்ணிக்கு புத்தி எங்க போச்சு…..” என்று பேசிக்கொண்டிருந்தவர்
“போதும் நிறுத்து வசந்தா……” என்ற குரலில் திரும்பிப் பார்த்தாள்.
“என் வீட்டுக்கு வந்து என் மருமகளை திட்டுறதுக்கு உனக்கு எந்த ரைட்சும் இல்லை……”
“மித்ரன் அவளை கல்யாணம் பண்ணினா அது அவனோட விருப்பம்……
அதுல நாம யாரும் தலையிட முடியாது……”
என்று கூறினார் .
வேறு யாராக இருக்க முடியும் ராதாகிருஷ்ணன்தான்
“அதில்லைண்ணா ஒரு அன்றாடங்காட்சியைப் போய்……” என்று சொல்ல வருவதற்குள் தன் கைகளை காட்டி அவள் பேச்சை நிறுத்தியவர்
“மதுமதி இப்போ மித்ரனோட பொண்டாட்டி…… அவள் முன்னாடி யாரா வேணா இருந்துட்டு போகட்டும் …… ஆனால் இப்போ பிஸ்னஸ் கிங் ராதாகிருஷ்ணனோட மூத்த மருமகள்…… இந்த சொத்த ஆளப் போறதே அவள் தான்…… உன்னை இதுவரைக்கும் நிக்க வச்சு பேசிட்டு இருக்குறதே என் தங்கை என்கிறதால தான்……. இது மித்ரனுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் உண்டில்லைன்னு பண்ணிட்டுதான் மறுவேலை பார்ப்பான் …….அவன் வருவதற்குள் இடத்தை காலி பண்ணு…..” என்று வாயிலைக்காட்டினார்.
“இல்லை அண்ணா….. நம்ம அந்தஸ்து என்ன…..” என்று திரும்ப ஆரம்பிக்க அப்பொழுதுதான் வந்த சனா “பணம், அந்தஸ்து எல்லாம் நாம பிறக்கும் போதேவா வருது……பணம் பணம் என்று ஓடி தான் என் மித்துவ தொலைச்சிட்டு நிக்குறேன்……” என்றார்.
“என் மருமகள் போல நல்ல குணம் கொண்ட ஒருத்தர் இந்த அந்தஸ்து, பணம் என்று இருக்குறவங்கள்ல்ல பார்க்க முடியுமா……”
“இதுக்கு மேலே நான் பேச விரும்பல…..” என்று வாசல் பக்கம் கையை காட்டினார்.
வசந்தா அதற்குமேல் அங்கு இருப்பாரா…?
அழுது கொண்டிருந்தவளை “மதி அழாத….. மித்ரன் இப்போ வந்துருவான்….. அவன் இப்படி உன்னை பார்த்தா வருத்தப் படுவான்டா……”என்று அவள் கண்களைத் துடைத்துவிட்டார்.
“உன் ரூம்க்கு போ….. காலையிலேயே தலைவலிக்குதுன்னு சொன்ன….. ரெஸ்ட் எடு என்று அனுப்பிவைத்தார்.
மித்ரனுக்கு தன் மதி அழுவது தெரிந்தால்…..?
