இது காதல் காலமடி சகியே
அத்தியாயம் 31
அழுது கரைந்த ஸ்ருதியிடம், முழு உண்மைகளும் கேட்டு அறிந்த வசந்தாவிற்கு அவ்வளவு ஆத்திரம்….
‘என் மகளை ….இப்படி தற்கொலைக்கு முயலும் கோழையாக மாற்றி விட்டார்களே …’என எண்ணியவர் ….அவளை தேற்ற முயல, அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை….அழுது ஓய்ந்து ,அயர்வில் ஸ்ருதி அவர் மடியிலேயே உறங்கி விட…
மகளை மடி தாங்கியவர்… நிறைய யோசித்தார் ..தற்செயலாக மகள் கொண்டு வந்திருந்த பெட்டிகளின் எண்ணிக்கையை கவனித்தவர் …
தன் மகள் மேல் மூண்ட கோபத்தை அடக்கினார்..,’ ஏன் அவர்கள் அப்படி சொன்னதும்.. இவளும், இவளது எல்லா பொருட்களையும் எடுத்துக் கொண்டு வந்து விடுவாளாமா ???ஏன் இப்படி ,முதுகெலும்பில்லாத புழு போல் இருக்கிறாள்!!!!’ என நினைத்தார்….
அந்த நாளின் இரவில் தூங்காமல் நிறைய யோசித்தார்…தன் மகளை தேற்ற ,தேவையான கவுன்சிலிங் ,தியானங்கள் என நிறைய திட்டங்கள் வகுத்தவர்….
தன் மருமகனை எண்ணிக் கொண்டார் …அகில் சிங்கப்பூர் செல்வதற்கு சில நாட்களுக்கு முன் இவரை வந்து பார்த்தவன்…
“ஸ்ருதி ரொம்ப கவலையாக தெரிகிறாள் அத்தை.. குழந்தை இல்லை என மிகவும் வருந்துகிறாள் போல தெரிகிறது …அவளை உங்களிடம் டிரீட்மெண்ட் கூட்டி வந்தால் ,
அவளுக்கு குறை இருந்தால் கூட ,எனக்கு இருப்பதாக சொல்லுங்கள் ..அவளுக்கு குறை என்றால், அவள் தாங்க மாட்டாள் …நான் இப்பொழுது சிங்கப்பூர் போனால் திரும்பி வர குறைந்தது ஒரு வருடம் ஆகும் …
இவளும் சிங்கப்பூர் வந்து ,பிறகு நாங்கள் அங்கிருந்து திரும்பும் பொழுது…. கைகளில் குழந்தையுடன் தான் திரும்பி வர வேண்டும் ….எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை…ஸ்ருதி நிம்மதியாக இருக்க வேண்டும்…
இப்பொழுது எதற்கும், என்னை முழு பரிசோதனை செய்து விடுகிறீர்களா ?!!!”,என்று கேட்டான் ….
வசந்தா ,”என் ஹாஸ்பிட்டலைவிட ,என் தோழியின் மருத்துவமனை இதற்கென்று பிரத்யேகமானது …அங்கு இதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் இருக்கின்றன …”என்றவர்
“உங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்றால் ,வாருங்கள்…” என்றவர் பாண்டிச்சேரியில் இருந்த அந்த மருத்துவமனை கூட்டிப் போனார்…
அங்கு அனைத்து பரிசோதனைகளுக்கும் ஒத்துழைத்தவன், இறுதியாக உயிர் நீரும் வழங்கி சென்றான் …அதை வாங்கி, தங்கள் வங்கியில் உறைய வைத்தனர் அந்த ஹாஸ்பிட்டல் நிர்வாகத்தினர்…
சற்று நேரத்தில் அகில் கிளம்பிவிட, அது வரை ரவுண்ட்ஸ் சென்றிருந்த வசந்தாவின் தோழி அப்பொழுது தான் வந்து சேர்ந்தார்….
“என்ன வசந்தா இது!!! உன் பெண்ணை தான் கண்ணிலேயே நீ காட்டுவதில்லை… இங்கு வரும்பொழுது எல்லாம், நீ மட்டும் வந்து போகிறாய் என்று பார்த்தால் ….இன்று உன் மருமகனையும் கண்ணில் காட்டாமல் அனுப்பி விட்டாயே….!!!!”, என…
வசந்தா ,”அப்படி எல்லாம் இல்லை …நாம் மருத்துவர்கள் ஆகையால் நமக்கு நேரங்கள் ஒத்துப் போவதில்லை…அகிலுக்கு அவசரமாக ஒரு வேலை அதான் கிளம்பி விட்டார்…..
பாரேன் நீ கூட ஸ்ருதி திருமணத்திற்கு தயாராகி இருந்தவள் ,கடைசி நேர விபத்து கேசினால் வர இயலாமல் போய்விட வில்லையா ….???!!!”,என…
“ஆமாம் …”,என ஒத்துக் கொண்டவர் ….
அடுத்து வசந்தா ,”என் மருமகன் கொடுத்த சாம்பிளுக்கு எப்பொழுது முடிவு சொல்வீர்கள்?!!” என….
“அவசரம் இல்லை வசந்தா… உன் மகளை கூட்டி வா ,அவளையும் முழு பரி சோதனை செய்து விடலாம்..
இன்னும் என்ன யோசனை வசந்தா, உன் மருமகன் சாம்பிளில் இப்பொழுது டெஸ்ட்க்கு அனுப்பியது போக மீதியை உறைய வைக்க சொல்லி இருக்கிறேன்… எந்த பிரச்சினை என்றாலும் பார்த்துக் கொள்ளலாம்…
சரி டா கொஞ்சம் அவசரம், ஒரு பிரசவ கேஸ் சரியாக டைலூட் ஆகவில்லை …நேரமாகும் என தோன்றவும் இடையில் உன்னை பார்க்க வந்தேன்…மகளை கூட்டி வா பார்க்கலாம் ….”என விடை பெற்றார்
‘மருமகன் தனது குடும்ப சூழ்நிலையை உணராதிருந்தும், மகள் மேல் அதிக அன்புடன் இருக்கிறார் …..அது போதும் …இவளை சரி செய்து ….அப்படியே இவர்களுக்கு ஒரு குழந்தையும் வந்து விட்டால் நல்லது …’என நினைத்தார் …
அடுத்த நளில் இருந்து ,தன் மருத்துவமனையை தன் ஜூனியர் மருத்துவர் வசம் ஒப்படைத்து விட்டு…… ஸ்ருதியை கூட்டி சென்று, அனைத்து வழிகளையும் முயற்சித்து பார்த்தார்….
ஆனால் அவள் நிலையோ ,சாண் ஏறி முழம் சறுக்கியது… எங்கு போனாலும், அங்கு ஒரு குழந்தையை பார்த்தால்…,” எனக்கு ,இப்படி ஒரு குழந்தை பிறக்காதா அம்மா ?”,என்றவள்…
பெண்களை பார்த்தாலே ,அந்த பெண்ணின் அழகை சுட்டி காட்டி…,” என்னிடம் இவ்வளவு அழகு இல்லை,அப்படி தானே மா”.., என புலம்பினாள்….
மாதங்கள் உருண்டோட, இவள் நிலை கண்டு அகிலிடம் ஸ்ருதியை வைத்தே ,சில மாதங்கள் கழித்து சிங்கப்பூர் வருவதாக சொல்ல வைத்தார்…
இவள் நிலை முன்னேறாமல் இருப்பதை கண்டு கோபம் மிக ,அகில் தாத்தாவிடம் சென்று முறையிட்டார்…. அவருக்கு இவரின் பதவிசான, மேலோட்டமான, ஸ்ருதி நிலை பற்றிய விளக்கம் சுத்தமாக புரியவில்லை….
அவரது பதில் பட்டும் படாமல் இருக்கவே …வீடு வந்தவருக்கு தோன்றியது ,’கண்டிப்பாக இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு …தன் மகள் குழந்தை உண்டாவது தான்
அதற்காக யோசனை செய்தவர் ,தான் ஸ்ருதியின் திருமணத்திற்கு முன்பே அவளுக்கு செய்திருந்த முழு உடல் பரிசோதனையில் அனைத்தும் நார்மல் என இருந்ததை நினைவு கூர்ந்தார்….
விவரிக்க படாத மலட்டு தன்மை ,அதாவது unexplained infertility இருப்பவர்களுக்கான டிரீட்மண்ட் ஆன IUI ….’ஏன் நம் மகளுக்கு செய்ய கூடாது என யோசித்தார்….?!!’…
இந்த முறையில் ,உறைய வைக்கபட்ட அல்லது …அந்த நேரத்தில் புதியதாக பெறப்பட்ட உயிர் நீர், சுத்திகரிக்கப்பட்டு ஒரு குழாயின் மூலம் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படும் …மிக மெல்லிய வலி மட்டுமே உள்ள இந்த முறை 20% வெற்றி வாய்ப்பு மட்டுமே கொண்டது.ஆனால் எளிய முறை…
தன் பெண் இருக்கும் மனநிலையில் மற்ற மாற்று முறைகளான ,ஐ.வி.எப் IVF , ஐ.சி.எஸ்.ஐ ICSI முறைகளில் தரப்படும் ஹார்மோன் மாத்திரைகள் மற்றும் ஊசிகளை எப்படி எதிர் கொள்வாள் என பயந்தார்…
அதனால் முதலில் ,தன் தோழியை தொடர்பு கொண்டவர் ,தன் நிலையையும் தன் மகளின் சூழ்நிலையையும் மனமார தயக்கம் இன்றி தன் தோழியிடம் விளக்கியவர் … அவரிடமே ,’எப்படி சமாளிப்பது…’ என கேட்க …
அவர் ,”உன் மகளுக்கு உடலளவில் எந்த பிரச்சினையும் இல்லை என்கிற நிலையில், அவள் மன அழுத்தத்தில் இருப்பது தான் அவள் இயற்கையாக கருத்தரிக்காமல் இருப்பதற்கு காரணம் என நினைக்கிறேன்….
உனக்கு சொல்ல வேண்டிய தேவை இல்லை.. நோயாளியின் மன திடம் ஊக்குவிக்கும் ஹார்மோன்கள் சுரப்பிற்கு ஈடான மருந்தும் ,மருத்துவ முறைகளும் ஏது??!!!
சரி, இப்பொழுது அவளிடம் ஏதும் சொல்லி பயமுறுத்தாதே…. புரொசிடருக்கு முந்தைய நாள் மெதுவாக சொல்லிக் கொள் …இல்லை, நீங்கள் இருவரும் ஹாஸ்பிட்டல் வர வேண்டாம் …அருகில் உள்ள ரிசார்ட்டில் தங்கி கொள்ளுங்கள்…
நான் தற்செயலாக அங்கு வருவது போல் வந்து, நான் சொல்லி புரிய வைக்கிறேன்… அப்படியே அங்கயே புரோசிடர் முடிச்சிக்கலாம் …”என ஐடியா சொல்லித் தந்தார் …
அவரிடம் பேசி முடித்த வசந்தா , சற்று நிம்மதியானார்… அங்கு போக வேண்டிய நாளிற்கு முந்தைய நாள்,“ பாண்டிச்சேரி போகலாம் வா ….”என
“வரவே மாட்டேன் …”என மறுத்த ஸ்ருதியை
சமாதானப்படுத்தி ,எவ்வளவோ பேசி பார்த்தவர் ….அவள் சம்மதிக்கவில்லை எனவும்… வேறு வழியின்றி ,
“உனக்காக தான் மா… இந்த ஏற்பாடே …நீயே வரவில்லை என்றால் எப்படி மா,” என உளறி விட…அவரிடம் என்ன ,என்ன என்று துளைத்து….முழுவதும் கேட்ட ஸ்ருதியோ …
“இதை ஏன்மா நீங்க முதலிலேயே சொல்லவில்லை…” என்றவள் குழந்தை என்றதும் ,எதையும் செய்ய தயார் எனவும்…
“இன்றே போய், இந்த ஐ.யூ.ஐ மெத்தடை விட ,அதிக பலன் தரக்கூடிய ஐ.வி.எப் கான செக்கப் செய்வோமா ….?கொஞ்சம் வலி மட்டும் தாங்கிக் கொள்வாயா ?”,என வசந்தா கேட்க
ஆர்வமாக அவள் “சரி “என்கவும்
அன்றே மகளை தன் மருத்துவமனை கூட்டிப் போய் ,அதற்கு அடிப்படை தேவையான பிளட் டெஸ்ட் பண்ண… அவர்கள் எதிர் பாராத இடி வந்து சேர்ந்தது…. ஸ்ருதிக்கு இரத்த புற்று நோய் என…
அதன் பிறகு, இடிந்து போன இருவரும் தாத்தாவின் துணையை நாட…. அவர் அவர்களை சீக்கிரமே சிங்கப்பூர் அனுப்பி விட்டார்…
சொல்லி முடித்தவர்,…..” அந்த அதிர்ச்சியில் மறுநாள் புரோசிடர் இருந்தது எங்கள் நினைவில் இல்லை ….போனையும் எங்கேயோ போட்டு விட்டேன் ….
ஆனால் சிங்கப்பூர் போய் ஆறு மாதங்கள் கழித்து ,என் தோழி போன் செய்து,” என்ன வசந்தா ஸ்ருதி குழந்தை உண்டானாளா ,இல்லையா… அன்று புரொசிடர் ஏன் நீங்கள் வரவில்லை…???” என கேட்கவும் தான் …
அவளிடம் நடந்ததை சொல்லி, மன்னிப்பு வேண்டினேன் …”என்றவர்
“அதன் பிறகு ,இரண்டு மாதங்களில் அவள் இறந்ததும் …நீங்கள் உடைந்து போகவும், உங்களை தாத்தா சில நாட்கள் கழித்து உங்களை ஜப்பான் சுற்றுலா அனுப்பியது…. அனைத்தும் உங்களுக்கு தெரிந்தது தானே….
இத்தனை வருடங்கள் ,எவ்வளவோ நானும் தாத்தாவும் முயற்சித்தும் ,நீங்கள்
மணமுடிக்காத போது ,
ஸ்ருதி மோலான அந்த அன்புக்கு, நான் உனக்கு தெரியாமல் செயற்கை கருவூட்டல் முயற்சித்தது பெரிய பாரமாக மனதை அழுத்தி, நான் உன்னை போய் ஏமாற்ற பார்த்தேனே…. என குற்ற உணர்வு கொடுத்தது….
வருடங்கள் கழித்து, நீங்கள் இருவரும் எழிலனோடு வரவும்… அந்த செயற்கை கருவூட்டல் முறை, அன்று நடந்தேறி இருக்கிறது என புரிந்து கொண்டேன்…
அதை தாத்தாவிடம் சொல்லி ,உன்னிடமும் சொல்ல போகிறேன் என சொல்ல …அவர் தான் ,”இல்லை அதற்கு இப்பொழுது அவசரம் இல்லை …அவர்கள் இணை பிரியாமல் வாழ தொடங்கியதும் சொல்லலாம் …”என்றார் …”என முடித்தார் வசந்தா…
அவர் தேம்பி அழவும் ,சமாதானம் செய்வித்த அகில்…,” இதற்கு ஏன் அழுகிறீர்கள்?!!! எனக்கு நல்லது நடக்க வேண்டும் என்று தானே இத்தனையும் செய்தீர்கள் …அப்படியானால் அது எப்படி துரோகம் ஆகும் ….நீங்கள் எனக்கு செய்ய நினைத்தது உதவி தான் …”என தேற்ற…
தாத்தா ,”எல்லாம் சரி …இந்த சிக்கலில் மகிழி எப்படி வந்தாள்???”, என கேட்க…
மகிழி பதில் சொன்னாள்,” நான் கடைசி வருட பரிட்சைகள் முடிந்ததும் ….கலேஜில் சிஸ்டர்கள் கூட ,எல்லோரும் டிரிப் கிளம்பினோம் ….
கடைசியாக பாண்டிச்சேரி தேவாலயங்களை பார்க்க ….என்று பாண்டிச்சேரி வந்தோம்….
எனக்கு அன்று, முந்தைய நாள் கடல் மீன் அதிக காரத்தில் பொரித்து சாப்பிட்டது…சேராமல் வாந்தி,வயிற்று வலி, என இருக்கவே….
மேரி சிஸ்டரிடம் சொல்லி விட்டு, அன்று முழுவதும் ரூமில் தூங்கலாம் ….என்று நினைத்தேன்…
ரூமிற்கு போய், பர்ஸ்ட் எயிட் கிட்டில் மாத்திரை தேட… அது அங்கு இல்லை எனவே ரிசப்ஷன் போய் அங்கிருந்தவனிடம் …”என அன்றைய நாளைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தாள்…..
மகிழி பார்ப்பதற்கு, மெழுகு பொம்மை போல் அவள் கன்னத்தில் இருக்கும் ரோஜா வர்ண பருக்கள் கூட …ருஜ் தடவினார் போல மின்ன….
அந்த கன்னிகாஸ்திரிகளுடன், வந்திருந்த தேவதை பெண்ணை… கண் கொட்டாமல் அங்கு இருக்கும் செக்யூரிட்டி கேமிராக்களின் வழியே ரசித்திருந்தான் அந்த விடலை பையன் ….புதியதாக டிகிரி முடித்து அந்த செக்யூரிட்டி வேலையில் அவன் சேர்ந்தே கொஞ்ச நாட்கள் தான் ஆகி இருந்தது….
அவன் கண்களை ,அவளை விட்டு அகற்ற முடியாமல் ரசித்திருந்தவன் …அவள் ரிசப்சன் நோக்கி போகவும் …அவளிடம் பேசிவிடும் ஆவலில், வலிய சென்று …தன்னை அறிமுகம் செய்து கொண்டு …,”உங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா மேடம் ..”என கேட்டான் …
அழகான பெண்ணை, அருகில் இருந்து ரசிக்கும் ஆர்வம் மட்டுமே அவனிடம்….
அவனைப் பார்க்க, தீயவன் போல் தெரியவில்லை …அதனோடு கூட அவன் அணிந்திருந்த ஹோட்டல் செக்யூரிட்டி பணியாளர்களுக்கான பேட்ஜ்ம் …நம்பிக்கை தரவே,
“ சார் எனக்கு சீ புட் ஒத்துக் கொள்ளவில்லை …நேற்றிலிருந்து வாந்தி ,வயிற்று வலி …ஹோட்டல் மருத்துவர் இருக்கிறாரா ??!!!இல்லை… மாத்திரை ஏதாவது கிடைக்குமா ??”என கேட்க
அந்த ஹோட்டலின் ரெகுலர் கஸ்டமரான ,ஒரு அமெரிக்கர் தனக்கு அப்படிட் சிம்யூலேஷனுக்கான( appetite stimulant) டாக்டர் பரிந்துரைத்திருந்த மாத்திரையை,தனக்கு தெரிந்த தமிழில் வயிற்று வலி மாத்திரை என சொல்லி, பிரஸ்கிரிப்ஷன் கொடுத்து இவனை வாங்கி வர சொல்லி இருந்தார்….
அரைகுறை ஆங்கிலம் கற்ற இவன் ,’அப்படிட் என்றால், உணவு சம்பந்தமான மாத்திரை தானே !!’என்று எண்ணியவன் ….
அந்த மாத்திரை எக்ஸ்டாராவாக ஒன்று வாங்கிய ,தன் திறமையை மெச்சிக் கொண்டே… அந்த மாத்திரையை மகிழியிடம் தர…. அவளும் அந்த ஒற்றை மாத்திரையை கைகளில் வாங்கியவள் ,அங்கயே வெந்நீர் வரவழைத்து விழுங்கினாள் ….
அங்கிருந்து மெல்ல நடந்து, தன் அறைக்குப் போனவள் …அறைக் கதவினை சாற்ற கூட மறந்து, கால்கள் தடுமாற ….
ஹாலுசினேஷன் எனப்படும், ஒரு வித மாய தோற்றத்தை அனுபவித்தாள் …அதில் தன் அன்னையை ,தந்தையை நேரில் பார்ப்பது போல் பார்த்து உரையாடி ….வாய் குளறி மெதுவான குரலில் உளறிக் கொண்டிருந்தாள் ….
அந்த வெளிநாட்டவரிடம் ,இவன் வாங்கி வந்த மாத்திரை தரவும்….அந்த மாத்திரையை ,வேகமாக விழுங்கியவர் …ஐந்து நிமிடத்தில் அதிக உற்சாகமாக பேச …
“என்ன மாத்திரை பாஸ் இது?…” என சிறு சந்தேகத்துடன் வினவினான்….
அவரோ ,”அதான் சொன்னேன் அல்லவா ?!!!வயிற்று பிரச்சினைக்கான மாத்திரை “என்றவரிடம்….
‘அப்படியானால் நாம் சரியாக தான் அந்த பெண்ணிற்கு மாத்திரை கொடுத்திருக்குறோம்’என நிம்மதியானவன்…
“ அப்படியா?!!!” என்றான்….
ஆர்வ மிகுதியால் ,”அப்படியானால் ,ஒரு அட்டை மாத்திரை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா …”என
சத்தமிட்டு சிரித்தவர் ….
அந்த மாத்திரையை பற்றி விளக்க ஆரம்பித்தார்….,” மெடிக்கல் மரிஜூனா பற்றி தெரியுமா உனக்கு….
தாங்க முடியாத வலி வருட கணக்கில் அனுபவிப்பவர்கள் …,அந்த வலியை தாங்குவதற்காக மாத்திரை வடிவில் மரிஜூனா தருவார்கள் ….
அந்த மாத்திரைகள் ,எனக்கு எயிட்ஸ் இருப்பதால் ….பசிக்காக தருகிறார்கள் …
அது போதை மாத்திரை வகையறா ஆகையால் ,அதிகம் ஸ்டாக் வைக்க இந்தியாவில் அலொவ்ட் இல்லை ….
அந்த மாத்திரையால் சிறிது நேரம் மட்டுமே ரிலீப் கிடைக்கும்.,,,ஆனால் அதன் பக்க விளைவுகள் கொடூரமானது …எனவே இந்திய மருத்துவர்கள் அதை பரிந்துரை செய்வதில்லை….”எனவும்…
திடுக்கிட்டவன், தான் ஏதோ பெரிய தவறு செய்துவிட்டது …புரிந்து கொண்டவனாய் …,”இதோ வருகிறேன்….”, என்றவன் மகிழி அறை நோக்கி ஓடினான்….
அங்கு அவள் பைத்தியம் போல் ,உளறிக் கொண்டு கதவை மூடாமல் கட்டிலில் அமர்ந்திருப்பது பார்த்தவன்..,,
தன்னால் தானே ,இந்த பெண்ணுக்கு இந்த நிலை என பதறியவன் ,…
தன்னை பற்றியோ ,தன் வேலையை பற்றி நினைக்கவில்லை …’இவளை எப்படி சரி செய்வது ….’என யோசித்தவன் …
அவளிடம் போய்,” மேடம் யார் வந்து பேசினாலும் …நான் பேசுகிற மூடில் இல்லை என்று மட்டும் சொல்லுங்கள்… நான் டாக்டரை கூப்பிட்டு வருகிறேன் …”என்றவன்…
அவள் அறை கதவை சாற்றி விட்டு,அருகில் இருந்த வசந்தாவின் தோழி மருத்துவமனைக்கு கோல் செய்து ….,
“டாக்டர் இங்கே ரிசார்ட்டில் ஒரு பொண்ணிற்கு வயிற்று பிரச்சினை ….வர முடியுமா??!!”என….
கோல் அட்டன் செய்த நர்ஸ்,”நான் டாக்டர் இல்லை…அவரை வர சொல்கிறேன் ..”என சொல்லி வைத்தார்….
டாக்டரிடம்,” டாக்டர் அந்த ஹோட்டலில் உங்களை தேடுகிறார்கள் ….”என மொட்டையாக கூற ….
அது வரை தன் தோழியின் செல் போனுக்கு முயற்சித்தவர் ….அவர் கோல் எடுக்கவில்லை என்றதும்… அவர் மருத்துவமனைக்கு கோல் செய்து,
“ வசந்தா எங்கே..” என ..
அங்கிருந்தோர் ,அவர்களுக்கு தெரிந்த மட்டில்,”அவங்களும் ,அவங்க பொண்ணும் ஒரு அவசரமாக வெளியே கிளம்பினாங்க…” என
அதை தன் மருத்துவமனக்கு தான் வந்திருப்பதாக புரிந்து கொண்டார் …
இப்பொழுது ,’தன் ,பிளான் படி ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள் …’,என நினைத்தவர் ..,தேவையான உபகரணங்களோடு அங்கு சென்றார் …
அங்கு வரவேற்பில் நின்ற பெண்ணிடம் ,மருத்துவர் வந்தால். …..அறை எண் 302 விற்கு அனுப்பு …என்றவன் …அந்த மாத்திரையின் பெயரை உபயோகித்து அதன் விவரங்களை பற்றி நெட்டில் தேட போனான்…
வரவேற்பு பெண், சொல்லியவாறு அந்த அறைக்கு போனவர் ….கதவை தட்ட,அது திறந்து கொண்டது….மகிழி அந்த கட்டிலில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்திருக்க…
அவள் ஏதோ வருத்தத்தில் அப்படி ஓய்ந்து அமர்ந்திருப்பதாக நினைத்தார் ….வசந்தாவின் தோழி ….“அம்மா எங்கே மா …”என …
காது ,மூளை மந்தமாகி இருந்த அந்த நேரம் ….,”அவங்களா வெளியே போய் இருக்கிறார்கள்..” என்றாள் மகிழி …
“சரி மா..” என ஆரம்பித்தவர்…
அவளை சமாதானம் செய்வதாக எண்ணி ,அரை மணிக்கும் மேலாக பேசிக் கொண்டிருந்தார்….அவளும் உம் கொட்ட ….,’அமைதியான பெண் ..’என நினைத்துக் கொண்டார்….
“ சரிமா, சிகிச்சை தொடங்கலாமா …”என அவர் கேட்க …
வயிற்று வலிக்கான சிகிச்சை, என மங்கலாக நினைவு வர ….,”சரி ..”,என்றாள் ….
அவர் சொன்னபடி எல்லாம் கேட்டவள் ….சிறு வலியை கூட முகம் மாறாமல் உதடை மட்டும் சுழித்தாள் ….
“சரிமா எல்லாம் முடிந்தது ….அம்மா வந்தவுடன் என்னை பார்க்க வரச் சொல் …”என்றவர்
“எனக்கு ஒரு ஆப்பரேஷன் இருக்குமா ….வருகிறேன் ….நீ ரெஸ்ட் எடு …”என கிளம்பினார் ….
அதற்குள் மாத்திரையை பற்றி படித்தவன் ,மருத்துவர் வந்தது அறிந்து… அங்கு வந்து சேர்ந்தவன்…,” என் தவறு தான் மேடம் இந்த ********* மாத்திரையை மாற்றிக் கொடுத்துவிட்டேன் ….இவங்களுக்கு ஒன்றும் ஆகாதே…”
பயந்து போய் கேட்க ….அப்பொழுது தான் தன் தவறு உணர்ந்தார் மருத்துவர் ….
“ஒரு நிமிடம் ….”என அவனை காத்திருக்க சொல்லி விட்டு …. அவனை விட்டு சற்று தள்ளிப் போய்…மருத்துவமனைக்கு கோல் செய்தவர் …
கருக்கலைப்பு மாத்திரை வரவழைத்து, ‘இவனிடம் முழு உண்மை சொல்லி குழப்ப வேண்டாம்….’ என நினைத்து….
அந்த மாத்திரையை அவன் கையில் கொடுத்து ,”இன்னும் ஆறு மணி நேரத்தில் அதாவது மாலை மூன்று மணி சுமாருக்கு ,அவள் விழித்ததும் இந்த மாத்திரை கொடு …சரியாகிவிடும் …”என அங்கிருந்து அகன்று விட்டார்….
மூன்று மணிக்கு விழித்த மகிழி, தன் வயிற்று வலி சரியாகி விட்டிருக்க… அவன் கொடுத்த மாத்திரையை உட்கொள்ள வில்லை…போதாததற்கு அந்த மாத்திரையின் விளைவால், அப்பொழுது நடந்தவை அனைத்தும் மறந்திருக்க ,….
மாத்திரை போட்டு தூங்கியதும், வயிற்று வலி சரியாகியதாக ….நினைத்து …,”உங்கள் மாத்திரை நன்கு வேலை செய்தது… என் வலி எல்லாம் ஓடிப் போய்விட்டது…”என்க
அவனுக்கும் அவளிடம் உண்மை சொல்லி ,பயமுறுத்த மனமில்லை….
மகிழி தன் பாதையில் போக ,அவன் அந்த வேலையை விட்டு விட்டு கப்பலில் வேலைக்கு சேர்ந்து விட்டான் ….
ஜப்பானில் சுமிரே மகளை பார்த்தவர்கள் ,பிறகு கப்பல் பயணமாக சிங்கப்பூர் போக ….அந்த கப்பலில் மகிழியை பார்த்தவுடன் ஒளிந்தவனை…. சந்தேகித்து அகில் பிடித்து விசாரிக்க, அவன் அனைத்தையும் விளக்கி விட்டு….
“நான் முதலும் கடைசியுமாக ரசித்த பெண் சார் மேடம் அன்று நடந்த அந்த கலவரத்திற்கு பிறகு நான் சைட் கூட அடிப்பதில்லை….
அவங்களை பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டேன்…மறக்குற முகமா சார் அது….அதுவும் என்னால் ஒரு பெண்ணிற்கு ஆபத்து வர பார்த்தது என்பதால் அந்த நாளையும் மறக்க முடியவில்லை…பாண்டிச்சேரி பக்கமே அதன் பிறகு நான் போகவில்லை சார்…”என
பாண்டிச்சேரி என்றதும் மூளையில் மணி அடிக்க….
அகில் வசந்தாவிடம் விசாரிக்க ,உடனே அடுத்த பிளைட்டில் இந்தியா கிளம்பி விட்டான்…. எழிலனை தங்கம்மாவிடம் விளையாட விட்டு வசந்தாவை தேடி வந்ததாக கூறவும்….
தாத்தாவுக்கும், வசந்தாவுக்கும் இந்த விதியின் விளையாட்டு ஆச்சரியமளித்தது …இவ்வாறு கொஞ்சம் ,கொஞ்சமாக இவர்கள் நார்மலாக…கையில் ஒரு பத்திரத்துடன் ,அங்கு வந்து நின்று….,
” இது என்வீடு …இனிமேல் உங்களுக்கு இங்கு இடமில்லை …”என இரைந்தாள் வசு…..
