இது காதல் காலமடி சகியே1

This entry is part 2 of 35 in the series இது காதல் காலமடி சகியே

இது காதல் காலமடி சகியே

இது காதல் காலமடி  சகியே

இது காதல் காலமடி சகியே

இது காதல் காலமடி  சகியே1

இது காதல் காலமடி சகியே1

இது காதல் காலமடி  சகியே2

இது காதல் காலமடி சகியே2

இது காதல் காலமடி  சகியே3

இது காதல் காலமடி சகியே3

இது காதல் காலமடி  சகியே4

இது காதல் காலமடி சகியே4

இது காதல் காலமடி  சகியே5

இது காதல் காலமடி சகியே5

இது காதல் காலமடி  சகியே6

இது காதல் காலமடி சகியே6

இது காதல் காலமடி  சகியே7

இது காதல் காலமடி சகியே7

இது காதல் காலமடி  சகியே8

இது காதல் காலமடி சகியே8

இது காதல் காலமடி  சகியே9

இது காதல் காலமடி சகியே9

இது காதல் காலமடி  சகியே10

இது காதல் காலமடி சகியே10

இது காதல் காலமடி  சகியே11

இது காதல் காலமடி சகியே11

இது காதல் காலமடி  சகியே12

இது காதல் காலமடி சகியே12

இது காதல் காலமடி  சகியே13

இது காதல் காலமடி சகியே13

இது காதல் காலமடி  சகியே14

இது காதல் காலமடி சகியே14

இது காதல் காலமடி  சகியே15

இது காதல் காலமடி சகியே15

இது காதல் காலமடி  சகியே16

இது காதல் காலமடி சகியே16

இது காதல் காலமடி  சகியே17

இது காதல் காலமடி சகியே17

இது காதல் காலமடி  சகியே18

இது காதல் காலமடி சகியே18

இது காதல் காலமடி  சகியே19

இது காதல் காலமடி சகியே19

இது காதல் காலமடி  சகியே20

இது காதல் காலமடி சகியே20

இது காதல் காலமடி  சகியே21

இது காதல் காலமடி சகியே21

இது காதல் காலமடி  சகியே22

இது காதல் காலமடி சகியே22

இது காதல் காலமடி  சகியே23

இது காதல் காலமடி சகியே23

இது காதல் காலமடி  சகியே24

இது காதல் காலமடி சகியே24

இது காதல் காலமடி  சகியே25

இது காதல் காலமடி சகியே25

இது காதல் காலமடி  சகியே26

இது காதல் காலமடி சகியே26

இது காதல் காலமடி  சகியே27

இது காதல் காலமடி சகியே27

இது காதல் காலமடி  சகியே28

இது காதல் காலமடி சகியே28

இது காதல் காலமடி  சகியே29

இது காதல் காலமடி சகியே29

இது காதல் காலமடி  சகியே30

இது காதல் காலமடி சகியே30

இது காதல் காலமடி  சகியே31

இது காதல் காலமடி சகியே31

இது காதல் காலமடி  சகியே32

இது காதல் காலமடி சகியே32

இது காதல் காலமடி  சகியே33

இது காதல் காலமடி சகியே33

இது காதல் காலமடி  சகியே34

இது காதல் காலமடி சகியே34

இது காதல் காலமடி சகியே
சில்வியா ராயன்

 

அத்தியாயம் 1

ஐப்பானில் ஒசாக்கா உலகின் கோஸ்டலியஸ்ட் சிட்டிகளில் ஒன்று …அங்கு,கந்தா ஸ்டேஷன் பக்கத்தில் ஒரு ஒற்றைப் படுக்கை அறை அப்பார்ட்மெண்ட்ல்…

காலை ஊசி என துளைக்கும் குளிரில் …பரபரப்பாக கிளம்பிக் கொண்டு இருந்தாள் மகிழினி …..

மர கட்டைகளினால் தரை அமைந்த அந்த குடி இருப்பில்..இயற்கையாகவே சூடு ஏற தரையில் மர அமைப்புகளினிடையே, வெந்நீர் ஓடினாலும்,இவள் மெல்லிய மேனி குளிரவே தன் ஓவர் கோட்டை இறுக்கிக் கொண்டாள்.

இன்று ஏனோ பெற்றோர் நினைவு அதிகமாக வந்தது… மனம் முழுதும் ஒரு பரபரப்பு… ,
டெலிவரிக்கு இன்னும் இரண்டு வாரம் இருக்கும் தைரியத்தில் ,இன்னும் லீவு போடாத தன் மட தனத்தை நொந்து கொண்டாள்… இன்றோடு ஜப்பான் வந்து முழுதாக ஆறு மாதங்கள் ஆயிற்று..

இந்த நாடும் ,மக்களும் பாசத்தையும் அன்பையும் நிறைய கொடுத்தாலும்… மனம் சென்னையின் புழுதி ரோட்டுக்கும் ,பரபரப்புக்கும் ஏங்கியது…

இப்போ சென்னை போனா அங்க இருக்கும் ஆயாக்களை கூட தேவதையாக நினைத்து ஊல்ல்லா பாட ஆசை வந்தது. …

வயிற்றினுள் கால்பந்து ஆட ஆரம்பித்தான் அவள் மகன்…ஆம் மகன் தான் இந்த நாட்டில் ஸ்கேனிலேயே ஆணா பெண்ணா என்று தெரிந்து கொள்ள தடையில்லை எனவே இவளும் தெரிந்து கொண்டாள் ….

இங்கு அடித்து பிடித்து ஆபிஸ் போக தேவையில்லை.. மிகவும் அமைதியான அக்கறையான மக்கள்….

அதனாலேயே அவர்கள் ஒரு (bug) அதாங்க சிறு தவறு இவள் செய்து கொடுத்தத்த வேலையில் என்று சொல்லவும்.. மறுக்க மனமின்றி ஞாயிறு என்றும் பாராது கிளம்பி விட்டாள்…

மோனோ ரயிலில் அவள் ஆபிசினை வந்தடைய,அங்கு அவளுக்கு முன் ஆபிஸ் என்டரன்சிலேயே காத்திருந்தான் நிஷிமுரா . …சிரித்துக் கொண்டாள் ….

“என்ன நிஷிமுராசான் ,இன்றைக்கு எதும் வெளியே சுத்துற ஐடியா இல்லையா ??? வீக் என்ட் சுமிரேவை தனியாக விட்டு எப்படி வந்தீங்க …’,என்று கேலியாக கேட்டாள். ..

“மகிஷான் ,அவள் தான் என்னை அனுப்பி வைத்தாள்.. ஒருவேளை என் உதவி உங்களுக்கு தேவைப்படும் என்று .நீங்க தான் எங்க கூடவும் வந்து தங்க மாட்டேன்னு சொல்லிட்டீங்க. என் பெற்றோர், சுமிரே பெற்றோர் கூடவும் வர மாட்டேன்னு சொல்லிட்டீங்க நாங்க எப்படி உங்களை தனியா விட்டுட்டு நிம்மதியா இருப்பது..அதான் கிளம்பி வந்து விட்டேன்.” என்று சொல்லி கள்ளமில்லாமல் சிரித்தான்…

மகிழிக்கு ,’முற்பிறவி பயன் தான் இவன் என் தோழனாக கிடைத்திருக்கிறான்’என்ற உணர்வு…”இது ஓவர் … நான் உங்கள் பக்கத்து அப்பார்ட்மண்ட்ல் தானே இருக்கிறேன்… அப்புறம் என்னவாம்… “என்க

அவன்,”சரி உங்களை ஒன்றும் சொல்லவில்லை..பிளிஸ் ரிலாக்ஸ்…”என்று கைகளை சரண்டைவது போல உயர்த்திக்காட்டினான்…..

ஆம் நிஷிமுராக்கு தமிழ் சரளமாக வரும்.. இரு வருடம் சென்னையில் ப்ராஜெக்ட் விஷயமாக தங்கி இருந்த போது கற்றுக் கொண்டான்…

ஜப்பானியர்களின் கலாச்சாரம் நம்மை போலவே ஒழுக்கத்திற்கும், மரியாதைக்கும் பிரசித்தி ….குழந்தைகளை கூட பெயரின் பின் கூட சான் என்று சொல்லி மரியாதையாக பேசுவார்கள்…சான் என்னும் வார்த்தை நாம் வாங்க சொல்வது போல் மரியாதை பன்மை.

குடும்பம் போற்றி ,குழந்தை பேணி மிகவும் நேர்த்தியாக …நேரத்தை மதிக்கவும் சிறு வயதிலேயே கற்று கொடுத்து விடுவார்கள்….

இன்று லீவு நாளாக இருந்தும் ,தனக்காக வந்து காத்திருந்த நண்பனை மனதினுள் நன்றியுடன் நினைத்துக் கொண்டே தன் வேலையை முடித்தவள், வேலை செய்யும் போது வயிற்றினுள் தெரிந்த அசௌகரியத்தை,முதுகு வலியை கண்டு கொள்ளாமல்.

தனக்கு கொடுக்கப் பட்ட வேலையை கச்சிதமாக முடித்தாள்…அப்
பொழுது நேரம் பார்க்க மாலை 4 மணி…,’சரி கிளம்பலாம்..’ என்று கைப்பையோடு வந்தவள்..அங்கு தனக்கு முன்னரே காத்திருந்த தன் நண்பன் நிஷிமுரா காரோடு நிற்பதைப் பார்த்து சிரித்துக் கொண்டாள்…

“ஏன் நிஷி சான் எனக்காக காத்திருக்கிறீர்கள்.நான் தான் தனியாக கேப் புக் பண்ணி வாரேன் என்று சொன்னேனே.”என்று உதடு உரைத்தாலும் மனம் நிம்மதி ஆனது காரணமின்றி..

அவன்,”ஷ் சத்தம் மூச் ஒழுங்காக வந்து காரில் ஏறுங்கள்”,என

அவள் நெகிழ்ச்சியுடன் காரில் ஏற.இருவரும் ஒன்றாக காரில் பயணக்க ஆரம்பித்தார்கள்.. திடீரென்று சிறு வலிபோன்று …இடுப்பில் கிடுக்கி போட்டு நெறிப்பது போல் தோன்ற…

பயந்து போனவள்,வலி தாங்க இயலாமல்… நிஷி முராவை திரும்பிப் பார்த்து ,”நிஷிமுராசான் ஆஸ்பிட்டல் போகலாமா “,என்று வேக மூச்சுக்களை கட்டுப் படுத்தியவாறே மெல்லிய குரலில் கேட்க …அவன் பதறிப் போனான் …

ஆம்.. அவள் உதடு சொல்லாவிடினும்.. இந்தக் குளிரிலும் அவள் முகத்தில் வழியும் வேர்வை அருவியும் …குங்குமமாய் சிவந்திருந்த முகமும்..அவள் அழுந்த கடித்த இதழ்களும் காட்டிக் கொடுத்தது ..அவள் வலியின் அளவை. …

பதறியவனின்… கைகளில் கார் சற்றே தடுமாற.. அடுத்த லேனில் வந்து கொண்டிருந்த.. அந்த விலை உயர்ந்த சொகுசு காரில் உராய்ந்தது இவன் கார்….அந்த காரின் ஆபத்து கால அலாரம் சத்தம் போட.

எப்படியோ பிரேக் போட்டு தன் காரை நிறுத்தியவன்… . அப்பொழுதும் மகிழி நிலையை மனதில் கொண்டு நிற்க நேரமில்லை என நினைத்தவன் காரை ஸ்டார்ட் பண்ண முயற்சிக்க..

அது ஸ்டார்ட் ஆகவில்லை .. ,அருகில் மகிழி பயத்திலும், தாங்கமுடியாத வலியிலும் மூர்ச்சையாகி இருக்க.. என்ன செய்வது என்று பதறி …கன்னத்தில் தட்டி எழுப்பி பார்க்க…

அவள் விழி திறக்கவில்லை…தன் நடுங்கும் கரங்களை அவள் நாசியில் வைத்து அவள் மூச்சினை பரிசோதித்தவன்.. அவளின் விட்டு விட்டு வந்த மூச்சினால் நிம்மதியானவனாய்.வேகவேகமாக கீழே இறங்கியவன்.. பக்கத்தில் இதைப் போலவே நின்றுபோன அந்த இன்னொரு காரை நோக்கி ஓடினான் நிஷிமுரா ..

அங்கு ஒரு நெடியவன், எங்கோ வெறித்துப் பார்த்து …தன் ஆண்மை த்தும்பும் முகம் உணர்ச்சிகளை காட்டாது…அந்த காரை கிளப்பும் எண்ணமே இல்லாதவனாய்… காதை பிளக்கும் அலாரம் சத்தத்தை கூட கருத்தில் கொள்ளாமல் அமர்ந்து இருக்க.. ,அவசரகதியாக அவனுக்கு என்னவோ ஏதோ என பார்வையாலேயே ஆராய்ந்தவன். நெடியவனுக்கு ஒன்றும் இல்லை என்றதும்,ஜன்னலை தட்டி “ ஹெல்ப் ,ஹெல்ப் “என கத்தினான்.

அந்த அசைவில் தன்னை மீட்டுக் கொண்டவன், என்ன..என்று கேட்டவாறே தன் காரின் கண்ணாடியை கீழே இறக்கியவன்… அலாரத்தையும் நிறுத்தினான் ..

நிஷிமுரா அவனுக்கு தெரிந்த அறை குறை ஆங்கிலத்தில்.. ஜப்பனிங்கிலிஷ் (அதாங்க நம்ம தங்க்லீசு)மாதிரி தன் தோழியின் நிலையை உளறிக் கொட்ட..

அவனின் சைகைகள் மூலம்,’ யாரோ அந்த காரில் உடம்பு சரியில்லாமல் இருக்கிறார்கள்..’ என புரிந்தவன் விரைந்து செயல்பட்டு.. தன் கார் கதவை திறந்து கீழேஇறங்கினான்…

அவனின் அசாத்திய உயரத்தில்.. நிஷி ஒரு நிமிடம் அந்த சூழ்நிலையிலும் திகைத்தான்..

அந்த நெடியவன்.. காரினுள் மயங்கி இருந்த மகிழினியை பார்த்ததும் ,நொடியும் தாமதிக்காது அந்த காரின் கதவை திறந்து சீட்பெல்டை கழற்றி வெளியே அவளை அள்ளி அனணத்தவாறே ஒரு கண்ணாடி பாத்திரத்தை கையாள்வதைப் போல பத்திரமாக தன் கரங்களில் தூக்கினான்…

அப்பொழுது அவனின் கைகளில் பட்ட …அவள் கால்களுக்கு அருகில் இருந்த உடை ஈரமாய் பிசுபிசுக்க.. அப்பொழுது தான் உணர்ந்தான்,’ இந்த உலகிற்கு வருகை தர ஓர் உயிர் ஆயத்தமாக இருப்பதை’.

அவனும், நிஷி முராவும் விரைந்து.. அவளை தூக்கிகொண்டு வந்து..அந்த நெடியவன் வந்த காரில் அவளை ஏற்றி.. மருத்துவ மனை நோக்கி துரிதமாக செல்ல ,அங்கே சிறிதும் தாமதிக்காமல் அட்மிஷன் ஃபார்ம்ல் எல்லா தகவல்களும் நிரப்பிய நிஷி முரா..அவளுக்கு வலி வந்துவிட்டதையும்.. மயக்கம் தெளிந்து விட்டதையும் அறிந்து.. மனைவியிடம் பேசி சேதி சொல்ல காரிடார் நோக்கி நகர்ந்தான்..

அங்கு அந்த நெடியவனை கண்டதும் “ தேங்க்யூ”, சொல்லி

“நீங்கள் இந்தியனா “,என்று கேட்க ,

”ஆம் “எனவும் ,

”தமிழ் தெரியுமா “,என்று நிஷிமுரா கேட்க..

அவன் முகத்தில் ஆசுவாச முறுவல்.., “தெரியும்”, என்று சொல்லி.
ஏனெனில் ஜப்பானியர்களின் ஆங்கில புலமை மோசம்.அவர்களின் ஆங்கிலமும் கூட நமக்கு ஜப்பானிய மொழி போலவே ஒலிக்கும்…அவர்கள் எல்லா புத்தகங்களும் ஜப்பானிய மொழியிலேயே இருப்பதால்..

அவர்களுக்கு ஆங்கலம் படிக்க தேவையில்லை …நம்ம திருக்குறளை கூட ஜப்பான் மொழியில் மொழிபெயர்த்து வைத்து இருக்கிறார்கள் …. இருவரும் பேச ஆரம்பித்ததும்,நிஷிமுராவின் செல்போன் சிணுங்க..

நிஷிமுரா “ஒரு நிமிடம் இங்க வெயிட் பண்ணுங்க இதோ வரேன் “,என்று சொல்லி விட்டு,மனைவியின் போன் கால் பேசப் போனான்…

அந்த நெடியவன் நிஷிமுரா மணமானவன் என்று சொன்னதையும், மகிழிக்காக பதறியதையும் பார்த்து.. அவளை அவன் மனைவி என்று எண்ணியது.. விதியின் விளையாட்டு என்பதா ?!…

இல்லை ,அதன் பிறகு சிறுதுநேரத்தில் அங்கு வந்த நர்ஸ் இவனிடம் ,மேல் சைல்ட்”, என்று சொல்லி குழந்தையைக் கொடுக்க ,..அந்த குழந்தையை,முதன் முதலில் தொட்டு வாங்கியவன்.. உடல் சிலிர்க்க.. உள்ளம் பரவசமாக நிற்க…

அந்த நர்ஸ்ன் அறை குறை ஆங்கிலத்தில், மகிழியின் கணவன் இவன் என நினைத்து கொண்டு ,”உன் பெயர் என்ன “,என்று கேட்க..

இவன் இருந்த மோன நிலையில், “என் பெயர் அகில்நந்தன் “ என ஏன் கேட்கிறார்கள் என யோசியாமல் சொல்ல, நிசிமுரா வால் நிரப்பப் பாடாத குழந்தையின் தகப்பன் என்ற இடத்தில் அகில்நந்தன் என நிரப்பப்பட்டது விதியின் செயலா ?!..

இல்லை ,தன் குழந்தைதான் இது..தன் உதிரத்தில் உதித்த கிளை நதி இது… என தெரியாமலேயே ….இவன் உள்ளுணர்வுகள் விழித்து கொண்டு இவன் மனதை பிசைய…அந்த உயிரோவியத்தை தொட்டு ,அதன் ஸபரிஸங்களில் தன் மனம் நெகிழ்ந்து …அவன் கொண்ட மனசஞ்சலங்கள் விலகி ஓட,உலகை மறந்த அவன் மனமயக்கத்தை விதி என்பதா?.

மழலையின் ஸ்பரிசத்தில் ஊன் உருகி…அதன் சிணுங்கலில் லயித்து வேறு ஒலி கேட்காமல் கேட்க பிடிக்காமல் இருந்த அகில்,

மனைவியிடம் மகிக்கு குழந்தைபிறந்ததை சொல்லிவிட்டு.. தான் வீடு திரும்ப தாமதமாகும். என்பதால் கவனமாக இருக்க சொல்லி விட்டு.. திரும்பிய நிஷியின் வருகையில் கூட தான் பூண்டு இருந்த தவக் கோலம் கலயவில்லை .

நிஷி அருகில் வந்து , ‘வாவ் விட்டில் பிதின்ஸ் அதை வட்டு ‘,என்க

‘என்ன சொல்கிறான்..’, என குழம்பிய அகில்

அவன் ‘அதில்’ என இவனை அழைக்க..

இவன் தெரிந்து கொண்டான் அது ஜப்பானிய மொழியின் தாக்கத்தால் விளைந்த பிழை என்பதை .

அவன் திரும்பி வந்த பிறகும், அந்த குழந்தையை நிஷியின் கையில் கொடுக்க மனமின்றி.. எங்கே நிஷி குழந்தையை வாங்கிக்கொள்வானோ என்று தயங்கி தன் இத்தனை வருட வாழ்வில் ஒருவருக்கு பயந்து நின்றான் அகில் என்றால் அது அந்தகணம் தான்… .நிஷியோ இவன் கையில் இருக்கும் குழந்தையுடன்.. அவன் தாய் மொழியான ஜப்பானிஸில் உரையாட,கொஞ்ச தொடங்கி விட்டான்.

மயங்கி நின்ற அகிலை அவனது செல் சிணுங்கி கலைத்தது…போனை அட்டன்ட் பண்ணவேண்டி, மனமின்றி குழந்தையை நிஷியிடம் தந்து விட்டு… நகர்ந்து போனை தன் காதுக்கு கொடுக்க, அது அவன் பி ஏ வின் கோல்..,

“ஈவ்னிங் சார்…சார் உங்க பிளைட்டுக்கு நேரம் ஆகிஙிட்டது… ரிமைண்ட் பண்ண சொல்லி இருந்தீங்களே “என்று அவன் பவ்யமாக சொல்ல…

”ஓ சரி நான் வர்றேன் “,என ஒரே வார்த்தையில் பேசி வைத்து விட்டு,

அந்த சின்னஞ்சிறு குழந்தையின் உச்சி முகர்ந்து முத்தமிட்டு ,” எப்பொழுதும் நன்றாக,வளமாக இரு “என மனமார வாழ்த்தி…பிரிய மனமின்றி கிளம்பினான், நிஷியிடம் விடை பெற்று.மருத்துவமனை வாயில் வரை வந்தவன் அந்த முகமறியா மயக்கத்தில் தன் கைகளில் அடைக்கலமாகி இருந்த பெண்ணின் நியாபகம் வர பெற்றவனாய்.

ரிசப்சனில் ஆங்கிலத்தில் அவள் நலம் விசாரிக்க .அவள் பத்திரமாக இருக்கிறாள் என்றதும் நிம்மதியாக கிளம்பினான்..

காரில் விமான நிலையம் நோக்கி பயணமானவன் மனதினுள் அந்த ரிசப்சனிஸ்ட் பெண்ணின் பேச்சே ரீங்காரமிட்டது ,” சார் அது உங்கள் ரிலேடிவ்வா . தாங்க முடியாத வலியில் சிறு சத்தம் கூட எழுப்பாமல் அவ்வளவு அழகாக பிரசவத்திற்கு ஒத்துழைத்தார்கள். விநோதமான பெண் சார் வலி தாங்க முடியாமல் மூர்ச்சையாகியும்… ஆபரேசனுக்கு ஒத்துக் கொள்ள வில்லை.இந்த சின்ன வயதிலேயே என்ன ஒரு பொறுமை…”

தன் தலையை அசைத்தவன் “ஏன் நான் அந்த பெண்ணை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என தன் சிந்தனைகளை மீட்டு எடுத்தான்.

நிஷி தான் ,மகிழி நார்மல் வார்டுக்கு வரும் வரை குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அவனுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை ஆனால், ஜப்பானில் ஒரு குழந்தைக்கு பள்ளி கட்டணம் என்பது மிகவும் அதிகம்.. மற்றும் அங்கே நம் நாடு போல் பெற்றோர் கடன் வாங்கியோ ..தம் சேமிப்பில் இருந்தோ ..தம் மக்களுக்கு திருமணம் செய்வதில்லை ..

மாறாக பிள்ளைகளே, தங்கள் திருமணத்திற்கா பணம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இப்போது தான் தனது மற்றும் சுமிரேவின் சேமிப்பு முழுவதையும் கரைத்து திருமணம் செய்து இருந்தனர்.. அதனால் குழந்தைக்காக, கொஞ்சம் காத்திருக்க முடிவு செய்து இருந்தனர்…

தனது அறைக்கு வந்த மகிழி, முதலில் பார்த்தது நிஷி குழந்தையிடம் கொஞ்சிக் கொண்டு இருந்ததை தான்..

ஒரு நிமிடம் குழந்தை பிறப்பினால் நெகிழ்ந்திருந்த மனதிற்கு.. அவள் ஹார் மோன்களின் சதிராட்டத்தினால் விளைந்த உணர்ச்சி போராட்டத்திற்கு.. அவன் அவள் தாயின் மறுபிறப்பாகவே தெரிந்தான்…பெண்களின் மூட் ஸ்விங்ஸ் பத்தி கேலி செய்யும் ஊடகங்கள்.. அவர்களின் உடற்கூறு அவற்றின் விளைவுகள் பற்றிக் கூற மறந்து விடுகின்றன .

பருவ வயதில் எப்பொழுது முதன் முதலில் முதிர்ச்சி அடைகிறாளோ.. அன்றில் இருந்து ஒவ்வொரு மாதமும், அவள் உடலில் நடக்கும் மாற்றங்கள் வலிகளைக் கூட பேசும் உச்சுக் கொட்டும் கூட்டம்..

அந்த வலிகளினால் விளையும் உணர்வுப் போராட்டங்களைப் பற்றியும்.. ஹார்மோன்களின் உந்துதலினால் காரணமின்றி கோபமும், அழுகையும் அடுத்த சில நிமிடங்களில் ஹார்மோன்களின் அதிகப்படி சுரப்பினால் விளையும் சிரிப்பும் என..

ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் உளவியல் போராட்டங்களைப் பற்றி, பேச மறந்து.. இப்பொழுதெல்லாம் 10 வயதிலேயே பூப்படைந்து..

பின்னர் மாதா மாதம் ,படிப்பு ,வலி ,மூட் ஸ்விங்ஸ் என குழம்பி தவிக்கும் சிறுமலர்களை தட்டி கொடுக்க ..தேற்ற.. தவறி விடுகிறோம்.

தாய் வீட்டில் இருக்கும் வரை பெற்றோரால் கொண்டாடப்பட்டு..பின்னர் வேரோடு பிடுங்கப் பட்ட மரம் போல வேரூன்றவே சிரமப் படும் அவள் மசக்கை முழுவதும் மூட் ஸ்விங்ஸ்.. அதன் பிறகு குழந்தை பிறந்த பின்பும் மூட் ஸ்விங்ஸ்.. அதனோடு சேர்ந்த புதிய உடற்கூறு மாற்றங்கள்,

இன்றய ஊடகங்களின் கைங்கர்யத்தால்.,’ தான் அழகில்லை.’ என தன் அழகினை உணர மறந்த பெண்கள் நிலை பரிதாபமே .

அந்த நிலைகளில், நம் உடலினை பற்றிய தெளிவான புரிதல்களே.. நமக்கு மீண்டு வர கை கொடுக்கும். நாம் புரிந்து …நம் பெண் பிள்ளைகளுக்கும் புரிதலை கற்றுக் கொடுப்போம். ..

தன் மகனை பார்த்த கணம் கன்னங்களில் கண்ணீர் வழிய சோர்வாக புன்னகைத்தவள்….”நான் தனியாகவே இருக்கிறேன்….என எனக்காகவே கடவுள் உன்னை துணைக்கு அனுப்பினாராடா…”,என்றவள்…

“நான் இனி அநாதை இல்லை ..நிஷி சான்…. பாருங்கள் எனக்கு என் மகன் இருக்கிறான் “..என பிதற்ற…

“ஆமாம் மகி சான் …” என்றவன் விழி ஓரம் துளிர்த்த நீரை உள்ளிழுத்துக் கொண்டே..

“இதோ வருகிறேன் “, என அவளுக்கு தனிமை கொடுத்து வெளியே சென்றான்..

தன் மகனை தொட்டுக் தூக்கி, அவனை கைகளில் ஏந்த பயந்து திணறியவளுக்கு… நர்ஸ் வழி முறை சொல்லித்தர…அவனுக்கு அமுதூட்டிய நொடி, தன் கவலைகள் மறந்து ..கடந்த காலம் மறந்து.. புதிதாக பிறந்தாள் மகிழினி ..தன்னை நம்பி ஒரு ஜீவன்…தனக்கு தாயாக புது அடையாளம் தந்தவன்..என்ற எண்ணம் தனி நம்பிக்கை தர…தன் மகனுக்கு அமுதூட்டிய நொடி ,ஏதோ ஜென்ம சாபல்யம் அடைந்ததாகவே நினைத்தாள்…

குழந்தையின் பெயர் என்னவென்று எழுத என மருத்துவமனையில் கேட்க…தான் ஏற்கனவே யோசித்து வைத்தாற் போல…தன் வாழ்வை எழிலாக்க வந்தவனுக்கு ,”எழிலன்”, என பெயர் சூட்டி மகிழ்ந்தாள். பிறக்கும் போதே தாயை தந்தையை சந்திக்க வைத்த எழிலன்.

‘இன்னும் பார் என்னால் உன் வாழ்வு எப்படி மாறப் போகிறது என பார்..’, என்று எண்ணி தான் அப்படி முறுவலிக்கிறானோ.. எல்லா பிறந்த குழந்தைகளையும் போல அழுகை ,பசி,தூக்கம் என இருந்த எழிலனை கண்களில் உயிரை தேக்கி அவள் பார்க்கும் பார்வைகள்…சமயங்களில் அவன் அழுதால் எப்படி தேற்ற வேண்டும் என தெரியாமல் இவளும் தனது வயதிற்கேற்ப அழுவது..என அவள் கோலம் எல்லோர் மனதையும் பிசைந்தாலும்,

ஏன் இப்படி.. அவன் மட்டுமே தன் உயிர் மூச்சாக இவள் நினைக்கிறாள் என அனைவருக்குமே காரணம் தெரிந்ததால்,அவள் ஏகாந்தத்தை யாரும் கலைப்பதில்லை…மகிழிக்கு குழந்தையை குளிக்க வைக்க …அவனுக்கு விளையாட்டு காட்ட என மொத்த நிஷிமுரா குடும்பமும் அங்கு திரண்டு விட…’உறவே இல்லா உறவுகள் பெற…தன் மகன் கொடுத்து வைத்தவன் …”, என எண்ணிக் கொள்வாள் மகிழி…

சுமிரே முதல் மூன்று மாதங்கள் மகிழி என்ன சொல்லியும் கேட்காமல் அவள் கூடவே இருந்து சமையல்,குழந்தைக்கும் இவளுக்குமான மருந்துகள் என சிறு குறைவில்லாமல் பார்த்துக் கொள்ள….மகிழியின் மகிழிச்சிக்கு அளவில்லை…எழிலனின் வரவு மகிழியின் வாழ்வில் வரமாக அமைந்தது .சைல்ட் கேர் லீவு ஒரு வருடத்திற்கு எடுத்து மகனை கண்களில் வைத்து பார்த்துக் கொண்டாள்.

அவள் வேலை செய்யும் Embedded கம்பெனியில். ஒரு வருடத்திற்கு பிறகு தனது விடுப்பு முடிய, மகனை விட இவள் அதிகமாக அழுதுகொண்டே போய் அவனை டே கேர்ல் விட்டுவிட்டு கிளம்பினாள்.

ஜப்பானியர்களின் வாழ்வு முறைகளில் மகிழியும், எழிலும் பாந்தமாக பொருந்திப் போயினர்,அவர்கள் வாழ்வு சலனமில்லாமல் சீராக போய்க்கொண்டிருந்தது .இப்பொழுது எழிலுக்கு 5 வயது ஆகி பள்ளியிலும் சேர்த்தாகி விட்டது. அதிலும் அவனுக்கு 1 வயதில் டே கேர்ல் சேர்ப்பதற்காக பிறப்புச் சான்றிதழ் கொடுக்க அவளுக்கு முதல் அதிர்ச்சி .

அந்த ஆசிரியை எழிலனை மாஸ்டர் அகில் நந்தன் என்க …மகிழியின் அதிர்ச்சியில் அந்த ஜப்பானிய பெண் அரண்டு போனாள் .

இவள் பிறப்புச் சான்றிதழ் வாங்கி திரும்ப திரும்ப சரி பார்க்க அங்கு மிகத் தெளிவாக , குழந்தையின் தந்தை என அகில் நந்தன் பெயர் எழுதி இருந்தது.

பார்த்த உடனே இவள் நிஷி முராவை கூப்பிட்டு விவரம் கேட்க, அவன்” நான் அப்படி பெயர் குடுக்க வில்லையே. எப்படி இப்படி அவர்களாகவே நிரப்பினார்கள் “, என வியக்க

இவளோ விரக்தியாய், ‘தந்தை பேர் தெரியாமல் இருப்பதற்கு இது மேல். இவனை வயிற்றில் தாங்கிய நேரம் நான் பட்ட அவமானங்களில் கொஞ்சம் கூட இவன் அனுபவிக்க விடமாட்டேன்.இந்த பெயரால் அவனுக்கு மரியாதையும்,அங்கிகாரமும் கிடைக்குமானால் … இருந்துவிட்டு போகட்டும்…
‘என மனதை தேற்றிக் கொண்டாள். திடீரென்று அதுவும் ஒரு சங்கடமான சூழ்நிலையில் அறிமுகமான அகிலின் பெயர் அவன் நினைவில் இல்லை.அந்த நாளின் பல நினைவுகளில் இதை மறந்திருந்தான்.

எழிலன் day care ல்அனைவரையும் தன் சுண்டு விரலில் ஆட்டி வைத்தான். நாட்கள் செல்ல செல்ல, எழில் முழு ஜப்பானிய குழந்தையாகவே மாறிப் போனான். காரணம் நிஷியும், சுமிரேவும் தான் .

அவர்கள் பாசத்தை கொட்டி வளர்த்ததோடு, இவன் எங்கள் நாட்டு குடிமகன் .அதனால் அவன் எங்கள் ஜப்பானிய கலாச்சாரம் படித்தே ஆகவேண்டும் என அடம் பிடித்து,

கலாச்சார பள்ளியில் சேர்த்து விட்டு ஒரே கொஞ்சல், “கொன்னி ச்சிவா( hi baby ) “,என சுமிரேசத்தம் கேட்டால் போதும், அவனை அதன் பிறகு கட்டுப்படுத்த முடியாது.

இப்போது தான் சுமிரேவுக்கு முதல் குழந்தை உண்டாகி இருக்கிறது.உபயம்,அவர்கள் 5 ஆண்டு திட்டம்,இதுவரையும் சுமிரே வீட்டில் இருப்பதால் அவள் தான் எழிலை பார்த்துக்கொண்டது, டே கேர் போக மீதி நேரம்…..இருவரும் அடுத்தடுத்த அப்பார்ட்மெண்ட்ல் தான் குடி இருக்கின்றனர்.

அகிலின் தானமும், தர்மமும் அவன் மகன் அயல்நாட்டிலும் சுகமாக வாழ அவனறியாமலே வழி செய்தது ,அந்த புண்ணியம் தான் நிஷியை மகிழிக்கு அறிமுகம் செய்து வைத்ததோ?!

நாம் செய்யும், தர்மங்கள் தான் நம் பிள்ளைகளின் கேடயங்கள் .என்பது சத்தியமான உண்மை.

இரு அன்னையரின் வளர்ப்பிலும், நிஷியின் தந்தை உருவகத்திலும் எழில் நிறைவாக வளர்ந்தான்..Morighuchi (மொரிகுச்சியின் )shinchan என்ற செல்ல பெயரோடு.

மகிழி கலங்கும் நேரம் என்றால் அது சொற்பமே,அதில் முக்கியமான நாள், ஜப்பானியர்களின் ஹனாமி பண்டிகை. அன்று குடும்பமாக picnic சென்று Osaka castle (ஒசாகா அரண்மனை)லில் cherry blossom பார்ப்பது அவர்கள் வழக்கம் அதை பார்க்கும் போதெல்லாம், ‘எனக்கு எப்பொழுதுமே இப்படி ஒரு குடும்பம் அமையாது..’, என தவித்து போவாள்.

அத்தனையும், சுமிரேவையும் , நிஷியையும் பார்த்தவுடன் மறைந்து போகும்.
நிஷியை தன் தந்தையாகவே பார்க்கத் தொடங்கி விட்டாள். சுமிரேவை தன் தாயின் மறுபிறப்பு எனக் கொண்டாள்.
ஞாயிற்று கிழமைகளில் , மோனோ ரயிலில் எழிலுக்காக tsurumi riokuchi park (க்ஷருமி ரியொகுச்சி)போகும் போது, அங்கு வரும் தந்தை குழந்தைகளை கண்டு,’ எழிலுக்கு இப்படி ஒரு வாழ்வு என்றுமே கிடைக்காது..’, என மனம் நொந்து விடுவாள்.
yodo gawa( யோடா நதியின் )கரையில் இருவரும் walking போனால் அங்கு cycling(சைக்கிள் ஓட்டும்) பண்ணும் குழந்தைகள் ,தந்தைகளைக் கண்டு தன் தந்தையை தேடுவாள்

ஒருவாறு வாழ்கை கடினமில்லாமல் செல்ல ..எழிலின் 5 வது பிறந்த நாள் விழா கொண்டாட பிரபலமான உணவகம் சென்றனர் . 5 வது பிறந்த நாள் cakeல் மெழுகுதிரிகளை. அணைத்த எழில் ஒன்றுமே கேட்கவில்லை எனினும், இறைவன் அவன் தந்தையை அவனுக்கு பரிசாக அனுப்பி வைத்தார்.

ஒரு மனிதனின் அகிலம் அவன் மனையாளும், மக்களும் தான் ,அகிலின் அகிலம் அவனுக்கு கிடைக்குமா பார்ப்போம்..

அகிலின் அகிலம் மறுக்கப் பட்டால்.. அவன் ஆடப் போகும் ருத்ர தாண்டவத்தில் இருந்து அந்த Amaterasu( ஐப்பானியரின் முதன்மை கடவுள் சூரிய தேவதை அமாத்திரேசு) வால் கூட மகிழியை அவனிடமிருந்து காப்பாற்ற முடியாது…

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *