இது காதல் காலமடி சகியே14

This entry is part 15 of 35 in the series இது காதல் காலமடி சகியே

இது காதல் காலமடி சகியே

இது காதல் காலமடி  சகியே

இது காதல் காலமடி சகியே

இது காதல் காலமடி  சகியே1

இது காதல் காலமடி சகியே1

இது காதல் காலமடி  சகியே2

இது காதல் காலமடி சகியே2

இது காதல் காலமடி  சகியே3

இது காதல் காலமடி சகியே3

இது காதல் காலமடி  சகியே4

இது காதல் காலமடி சகியே4

இது காதல் காலமடி  சகியே5

இது காதல் காலமடி சகியே5

இது காதல் காலமடி  சகியே6

இது காதல் காலமடி சகியே6

இது காதல் காலமடி  சகியே7

இது காதல் காலமடி சகியே7

இது காதல் காலமடி  சகியே8

இது காதல் காலமடி சகியே8

இது காதல் காலமடி  சகியே9

இது காதல் காலமடி சகியே9

இது காதல் காலமடி  சகியே10

இது காதல் காலமடி சகியே10

இது காதல் காலமடி  சகியே11

இது காதல் காலமடி சகியே11

இது காதல் காலமடி  சகியே12

இது காதல் காலமடி சகியே12

இது காதல் காலமடி  சகியே13

இது காதல் காலமடி சகியே13

இது காதல் காலமடி  சகியே14

இது காதல் காலமடி சகியே14

இது காதல் காலமடி  சகியே15

இது காதல் காலமடி சகியே15

இது காதல் காலமடி  சகியே16

இது காதல் காலமடி சகியே16

இது காதல் காலமடி  சகியே17

இது காதல் காலமடி சகியே17

இது காதல் காலமடி  சகியே18

இது காதல் காலமடி சகியே18

இது காதல் காலமடி  சகியே19

இது காதல் காலமடி சகியே19

இது காதல் காலமடி  சகியே20

இது காதல் காலமடி சகியே20

இது காதல் காலமடி  சகியே21

இது காதல் காலமடி சகியே21

இது காதல் காலமடி  சகியே22

இது காதல் காலமடி சகியே22

இது காதல் காலமடி  சகியே23

இது காதல் காலமடி சகியே23

இது காதல் காலமடி  சகியே24

இது காதல் காலமடி சகியே24

இது காதல் காலமடி  சகியே25

இது காதல் காலமடி சகியே25

இது காதல் காலமடி  சகியே26

இது காதல் காலமடி சகியே26

இது காதல் காலமடி  சகியே27

இது காதல் காலமடி சகியே27

இது காதல் காலமடி  சகியே28

இது காதல் காலமடி சகியே28

இது காதல் காலமடி  சகியே29

இது காதல் காலமடி சகியே29

இது காதல் காலமடி  சகியே30

இது காதல் காலமடி சகியே30

இது காதல் காலமடி  சகியே31

இது காதல் காலமடி சகியே31

இது காதல் காலமடி  சகியே32

இது காதல் காலமடி சகியே32

இது காதல் காலமடி  சகியே33

இது காதல் காலமடி சகியே33

இது காதல் காலமடி  சகியே34

இது காதல் காலமடி சகியே34

அத்தியாயம் 14

அகில் தனது அலுவலக அறைக்குள் ..தனது உணர்ச்சிகளுடன் போராடிக் கொண்டே ..தன் மூச்சடைக்கும் குற்ற உணர்வில் இருந்து தப்பிக்க அவன் எடுத்திருந்த விடிமுறையால் விட்டுப்போன வேலைகளை மின்னல் வேகத்தில் செய்து கொண்டிருந்தான். ..அந்த வெறித்தனமான வேகத்திலும் அவன் சிறு தவறு கூட செய்ய வில்லை..

அங்கே தாத்தாவின் அறையில் அகிலின் சிறு வயது சேட்டைகள்,எழிலின் சேட்டைகள் என கதை கேட்டவர்கள். ..சிறிது நேரத்தில் எழில் தூங்கி விட.. இன்டர்காமில் முருகனை அழைத்து..

“முருகா தம்பியை தூக்கி கொண்டு சின்னம்மா கூட அவங்க அறை வரையிலும் போய் படுக்கையில் விட்டு விட்டு வா”. என தாத்தா கூற ,,,

“சரிங்க ஐயா “. என்றவன் சிறிது நேரத்தில் வர,,,…

“போம்மா நீயும் போய் ஓய்வெடுத்து கொள்… உன்னையும் சேர்த்து நாளைக்கு அலைக்களிக்கப் போகிறேன் என்கிறான், அகில்… ஒரு இரண்டு நாட்கள் பொறு என்றால் கேட்கிறானா” என்க…

மகிழி , முறுவலித்துக் கொண்டே “ அதெல்லாம் ஒன்றுமில்லை தாத்தா …எனக்கும் சோம்பி இருக்க பிடிக்காது. ..அதோடு ஹோட்டல் பாதுகாப்பு தொடர்புடைய வேலை ஆதலால் தாமதிக்க முடியாது….இன்னொரு சீக்ரெட் நாங்கள் நேற்றே இங்கு வந்து விட்டோம்…நேற்று முழுவதும் ஓய்வு தான்“ என்க…

“ அதானே அதற்குள் அவனுக்கு ஒத்து ஊத ஆரம்பித்து விட்டாயா .?!!! இந்த அகில் உன் விஷயத்தில் மிகவும் கொடுத்து வைத்தவன்… நீ தூய்மையான வைரமாக தான் எனது கண்களுக்கு தெரிகிறாய் “. என…

மகிழி, ” போதும் போதும் தாத்தா இதற்கு மேல் தாங்காது ஜன்னி வந்து விடும்” என்று குளிரில் நடுங்குவது போல் பாவனை செய்ய..

“ அடி போக்கிரி ” என தாத்தா சிரிக்க…

பார்த்துக் கொண்டிருந்த முருகனுக்கு, இவர்கள் இருவரும் இன்று தான் சந்தித்து கொண்டார்கள் என்பதை நம்பவே முடியவில்லை … அதிலும் தாத்தாவின் சிரிப்பு, அவன் அனுபத்தில் பார்த்திராதது…

சில வேளைகளில் மனது விசித்திரமாக சிலரை நொடியில் ஏற்றுக் கொண்டு விடும். …சிலரை வருடங்களானாலும் ஏற்பதில்லை . ,,,….

தனது அறைக்கு வந்த மகிழியுடன் எழிலைத் துக்கிக் கொண்டு வந்த முருகன்.. அவனை அவனுக்கான குட்டி படுக்கையில்கொண்டு படுக்க வைக்க நர்சரி நோக்கி போனவனை தடுத்தவள்…

” இல்லை, அவனை இந்த படுக்கையிலேயே படுக்க வையுங்கள்” என்றாள். ..

அகில் அந்த படுக்கை அறையுடன் சேர்ந்திருந்த அலுவலக அறையில் வேலை செய்து கொண்டிருப்பதை கதவிடுக்கின் வழி கேட்ட … அவன் உரத்த குரல் போன் உரையாடல் மூலம் அறிந்து கொண்டவள். …

‘சரி நாமாவது ஓய்வெடுப்போம்’ என படுத்து விட்டாள் எழிலின் அருகிலேயே. ,,

சிறிது நேரத்தில் கனவுகளின் மடியில் ஓர் ஆழ்ந்த உறக்கம் மகிழிக்கு.. .

அங்கு எழிலை விட்டு விட்டு கீழே சென்ற முருகன் தாத்தாவிடம், கதவை தட்டி “ஐயா வரலாமுங்களா . என அனுமதி வேண்டி நிற்க. ..

அவர், “ வாப்பா ,என்ன விசயம் “.

“ வந்துங்க, நம்ம அகில் ஐயா பெண்டாட்டி அப்புறம் புள்ளை பேரு என்னங்க?… . எனக்கு மட்டுமில்லை யாருக்குமே தெரிலிங்க.. அதான் சின்னவரை எப்படி கூப்புடறதுன்னு சொல்லுங்க.” என…தலை சொரிய…

“நானும் அகிலும் காலையில் போனில் பேசும் போதே, பேத்தியும், எழிலும் வந்தவுடன் அறிமுகப் படுத்த வேண்டும் என பேசிக் கொண்டோம். ..

இருவரையும் நேரில் பார்த்த மகிழ்வில் மறந்து போனேன்….ஒன்றும் பிரச்சினை இல்லை முருகா… மாலை சிற்றுண்டி வேளையில் நானே வருகிறேன்… சரி கொஞ்சம் சாய்ந்து படுக்க உதவி செய். .. மாலை 5 மணிக்கு என்னை எழுப்பி விட மறந்து விடாதே”… என. ..

அவருக்கு உதவி விட்டு முருகன் அகல, தாத்தாவும் உறக்கத்தில். ..

சிறிது நேரம் கழித்து, கமலா ,விஜயனிடம், “வாங்க நான் பேசிய பிறகு … அவன் என்ன செய்கிறான் பார்க்கலாம்.நான் பேசியது வேலை செய்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும்..” என்க. ..

போய் பார்த்தது, ஏதோ தீவிரமாக இவர்கள் கதவை திறப்பதைக் கூட கண்டு கொள்ளாமல் வேலை செய்த அகிலைத் தான்…

“கமலா உன் யோசனை அருமை.. அப்படியே ஸ்ருதி இறந்த புதிதில் இருந்தது போலவே இருக்கிறான்..பைத்தியம் மாதிரி கிடைப்பவர்களிடம் எல்லாம் கத்திக் கொண்டு…வேகவேகமாக லேப்டாப்பை தட்டிக் கொண்டு… “ என மெச்சிக் கொண்டே சென்றனர்…

மாலை கண் விழித்த எழில்,” அம்மா, வாங்க நாம தோட்டத்தில் போய் விளையாடலாம்.” என மகிழியை இழுத்துக்கொண்டுபோனான். ..

அங்கு அதற்குள் பள்ளி முடிந்து வந்த அனிலின் மகன் ஜீவன் ,மற்றும் அனிலாவின் மகன்கள் ராகுல், கோகுல் இணைந்து விளையாடிக் கொண்டிருந்தனர்…

சிறுவர்களை பார்த்ததும் உற்சாகமான மகிழி, “ஹாய் குட்டீஸ்” என பேச முயல…

அதற்குள் முருகன் உதவியுடன் தாத்தா அங்கு வந்து சேர்ந்து விடடார். ..அவர், “குட்டி பசங்களா எல்லாரும் இங்க தான் இருக்கீங்களா. “என்றபடியே வந்தவர்.,,

முருகனிடம்,” நீ போய் அனைத்து. வேலையாட்கள் டிரைவர்களையும் வர சொல்லு. “ , என அவனை அனுப்பி வைத்தவர்….

“ ஜீவன், ராகுல், கோகுல் இது தான் உங்க பெரியம்மா அகில் பெரியப்பா மனைவி “என…

ராகுல்,” ஐயோ தாத்தா எனக்கும் கோகுலுக்கும் பெரியம்மா இல்லை அத்தை .” என வாயாடினான்…

உடனே தாத்தாவும், “சரிடி பெரிய மனுஷா திருத்திக் கொள்கிறேன். “என்று சிரிக்க.. .

அவர்களே போய் மகிழியிடம்,” ஹாய் பெரியம்மா “,”ஹாய் அத்தை.” என.. .

மகிழியும்,” ஹாய் “சொல்ல…

கோகுல் முன் வந்து, “இது ஜீவன் அண்ணா, இது ராகுல் அண்ணா அப்புறம் நான் கோகுல் …என்னை யாரும் அண்ணன்னு கூப்பிடமாட்டாங்க .”என வருத்தமாக சொல்ல…

மகிழியின் பின்னால் ஒளிந்திருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த எழிலை இழுத்து முன்னிருத்தியவள்.. .” இவன் உன்னை அண்ணான்னு கூப்பிடுவான் கோகுல்… இவன் பெயர் எழிலன்…அப்புறம் நான் உங்க மகிழினி அத்தை. ஜீவனுக்கு மகிழினி பெரியம்மா” என்க…

தாத்தா,” இவன் உங்க அகில் மாமா பையன். “என்க…

அனைவரும் எழிலை இழுத்துக்கொண்டு, ஒவ்வெருத்தர் பெயராக சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டே..,

ராகுல், மகிழியிடம் “அத்தை எழிலை நாங்கள் விளையாட கூட்டிப் போகிறோம் .”…

என தோட்டத்தில் சற்று தள்ளி விளையாட அழைத்துச்சென்று விட்டனர்…

அவர்கள் ஓடி விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த தாத்தா, ஒரு ஏக்கப் பெருமூச்சோடு ,” இதோ இவர்களைப் போல் எனது பேரப்பிள்ளைகள் விளையாடி பார்க்க மிகவும் ஆசைப்பட்டேன் .ஆனால் நடக்கவில்லை …

அகில் கூப்பிட்டாலும் அனிலும், அனிலாவும் அவன் கூட விளையாட மறுத்து விடுவர். ..

ஏன் இட்டையர்கள் ஆனாலும் அனிலும் ,அனிலாவுமே கூட சேர்ந்து விளையாடியதோ ஒத்து போனதோ இல்லை…

என் ஆசையை எனது கொள்ளுப்பேரன்கள் தான் நிறைவேற்றி இருக்கிறார்கள்… எப்படியோ இதைவிட எனக்கு என்ன வேண்டும் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன்.” என கண் கலங்கினார்…

சிறிது நேரத்தில் அனைத்து வேலை ஆட்களையும் அழைத்து கொண்டு அங்கு வந்து சேர்ந்தார் முருகன். ..

அனைவரையும் பார்த்தவுடன் தாத்தா தொண்டையை சரிசெய்து கொண்டே, “பாருங்கப்பா, இவள் மகிழினி நமது அகிலின் மனைவி. அப்புறம் எழில் இங்கே வா. எல்லாருக்கும் வணக்கம் சொல் “என்று விட்டு…

“ இது எழிலன். அகிலின் மகன்… இவர்கள் இருவருக்கும் எதாவது மரியாதை குறைவு ஏற்படும் படியாக நீங்கள் யாராவது நடந்துகொண்டால்… அவர்களுக்கு இந்த வீட்டில் இடம் இல்லை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்… இனி இவள் தான் உங்க சின்னம்மா சரியா… போய் வேலையைப் பாருங்கள்” என்று அனுப்பி வைத்தார்…

அஸ்தமன சூரியனை பார்த்த தாத்தாவின் முகத்தில் அவ்வளவு நிறைவு…

சிறிது நேரத்தில் அங்கயே சிற்றுண்டி முடித்து சிறுவர்கள் டியூசன் ஆசிரியர் வந்து விடுவார் என ஓட…

“ அம்மா நானும் அண்ணா கூட போகணும்”. என்று எழில் ஒரே அடம்…

தாத்தாவே, “இவனையும் அவர்களுடன் அனுப்பி விடு மகிழி “,என…

“ சரி தாத்தா”. என்னும் போதே…

ஜீவன், “பெரிம்மா எழிலும் எங்க கூட ஒன்றாக ஸ்கூலுக்கு வருவானா”. என…

“தெரிய வில்லை ஜீவன், பெரியப்பா அவனை நம் ஹோட்டல் அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க போவதாகச் சொன்னார் “என…

“அது வந்து அத்தை நாங்கள் எல்லொரும் படித்த பிரீஸ்கூல். ஒன்றாவது வகுப்பில் தான் நாங்கள் இப்போது படிக்கும் பள்ளியில் சேர்ப்பார்கள் போல…” என…

“ஓ அப்படியா ,அப்போ ஒன்றாவது வகுப்பில் இருந்து உங்களுடனேயே வருவான்”.என உறுதி கூறி..

“ சரி எல்லோரும் போய் உடம்பு கழுவி உடை மாற்றி வாருங்கள்.” என …

அனைவரும் அவரவர் பகுதிக்கு செல்ல, மகிழி எழிலைக் கூட்டிக் கொண்டு போய் உடல் கழுவ உதவி செய்து.. உடை மாற்றி ஸ்டடிரூமில் ஏற்கனவே வந்திருந்த ஆசிரியரிடம் ..சொல்லி ஒப்படைத்து விட்டு வந்தவள்…

குளிக்க எத்தனிக்க… அகில் அவளது நீண்ட குளியல் பற்றி கேலி செய்தது நினைவு வந்து… தனாகவே நகைத்துக் கொண்டாள்… பிறகு தான் அவன் மதிய உணவிற்கு பின் அலுவலக அறையில் நுழைந்தவன் இன்னும் வெளிவரவில்லை என்பது நினைவில் வர வேகமாக போய் அந்த அறை கதவை தட்ட பதில் இல்லை…

சத்தமாக தட்டி ,”அகில், அகில்” என அழைக்க. சத்தமில்லை …

எனவே கதவை தள்ளி உள்ளே போய் பார்க்க… அகில் புருவம் சுருக்கி ஏதோ யோசிக்கும் பாவனையில் அலுவலக பைல்கள் பார்த்துக் கொண்டிருந்தான்…

“ அகில்” என திரும்பவும் அழைத்துப் பார்க்க…

‘யாரது’ என எண்ணிக் கொண்டே, சற்று எரிச்சலுடன் “ என்ன வேண்டும்.” என நிமிர்ந்து பார்க்காமலே கேட்டான்…

“ இல்லை அகில். நீங்க வெளியே வரவே இல்லை. இரவுணவு இங்கவே வர வைக்க வா. இல்லை கீழே வருகிறீர்களா.?” என…

‘ இன்று கண்டிப்பாக கீழே போக வேண்டுமா’, என யேசித்தவன்…

‘ மகிழிக்கும், எழிலுக்கும் நான் மட்டும்தான் பழக்கம் என்ன தான் தாத்தா நன்றாகப் பேசினாலும் அவர் புதியவரே… அதனால் இவர்களுக்காகவாவது நாம் கீழே போக வேண்டும்.’ என்று முடிவு செய்தவன்…

“ நானும் உன்னுடன் கீழே வருகிறேன்.” என்று பதில் சொன்னவன்..

“ எழில் எங்கேமா” என…
“ அவன் நம் ஜீவன், ராகுல், கோகுலடன் நன்கு ஒட்டிக்கொண்டான் அவர்களுடன் தான் டியூசன் போய் இருக்கிறான்.” என்று மலர்ந்த முகத்துடன் கூற…

ஏனோ அவ்வளவு நேரம் ஆட்டிப் படைத்த ஸ்ருதி நினைவுகள்.. இவள் வாசனையில் நீர்த்துப் போகும் உணர்வு …

அப்பொழுது தான் குளித்து , துலக்கி வைத்த வெண்கல குத்து விளக்குப் போல் பளீரிட்டவளை கை வளைவில் நிறுத்தி அவள் கூந்தலில் வாசம் பிடித்து தன் கவலை குழப்பங்கள் சொல்ல அப்படியொரு ஆவல்…

ஸ்ருதியின் நினைவுகள், அவனுள் தனிமை தீயை தூண்டி விட்டிருக்க அந்த நெருப்பு மோகமாக மகிழியை கேட்டது இரையாக…

தன்னை மீட்டுக் கொள்ள நினைத்து ,” ஒரு நிமிடம் மகிழி. நீ தாத்தா வருகிறாரா கேள், அப்புறம் உன்னையும் எழிலையும் அனைத்து வேலையாட்களுக்கும் அறிமுகப்படுத்த வேலையில் மூழ்கி மறந்து போனேன்.” என குற்ற உணர்வில் கூற…

மகிழி,” நம்ம தாத்தாவே அருமையான அறிமுகம் கொடுத்தார் மாலை நேரத்தில் .”என. ..

மகிழியின் “ நம்” என்ற வார்த்தை ‘நீயும் நானும் ஒன்று’ என உணர்வு கொடுக்க.. .

தன் குடும்பத்தை நேசிக்கும் மகிழியை இன்னும் பிடித்தது அகிலிற்கு… தன் உணர்வுகளின் கொண்டை ஊசிப்பயணம் ,அபாய சங்கு ஊத.” இதோ வருகிறேன்.”..

“ நீ போய் தாத்தாவை பார் .”என குளியலறையில் பதுங்கினான்…

இவள் ஏதோ வசியம் வைத்திருக்கிறாள் எனவே தோன்றியது…

பல வேளைகளில் தனது பிசினஸ் பங்குதாரர்களுடன் தவிர்க்க முடியாமல் போன ஸ்டிரிப்டீஸ் கிளப்புகளாகட்டும், உடல் உரசி ஆடும் பப்புகளாகட்டும்…

அவன் உணர்வுகளை மகிழியின் ஆடையினுள் பொதிந்த உடல் அளவு தூண்டவில்லை …

அவளது அறியாமையும், அக்கறையும், சிறு பிள்ளைத் தனமும் , தலை கிறக்கும் போதை நொடியில் தந்தது…

ஏனோ அடக்கி வைத்த உணர்வுகள் அடி வயிற்றில் வலி தர,” ஏன் இப்படி” என வியந்தான்…

கடைசியில்,” உறவு தந்த உரிமை தான் காரணம்.” என மனதை தேற்றினான்… .

இனி போராடாமல் உணர்வுகளையும், வாழ்க்கையையும் அதன் போக்கில் போய் ஒரு கை பார்த்து விடலாம் என முடிவு செய்து வெளியே வந்தவன்… மகிழி அங்கிருக்க, “என்ன” என்றான்….

“தாத்தா உணவை அவங்க அறைக்கே கொண்டு வர சொல்லி உணவருந்தி விட்டார்… வாருங்கள் நாம் எல்லா பசங்களையும் கூட்டிட்டு போகலாம்.” என முழு உற்சாகத்தில் மகிழி…

“ சரி” என மகிழியின் முகத்தில் பார்வை பதித்து ரசித்தான் அகில்…

இங்கு சோகக் கட்டு உடைத்து, மோகக் கட்டில் அகில் கட்டுண்டு இருக்க…

அங்கே அனிலா ,”அம்மா இப்போ நைட்டே பேசிடறேன் அகிலிடம். அந்த இடம் விற்பனை பற்றி .இப்போ அவன் சோகமாக இருக்கும் போது பேசினால் தான் அதிகம் யோசிக்காமல் சரி என்பான் .”என பேசிக்கொண்டு இருந்தாள்…

மோகமும் சோகத்தின் மருந்தே.. சரியான உறவினடத்தில்..சரியான வேளையில் வந்தால்…

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *