இது காதல் காலமடி சகியே27

This entry is part 28 of 35 in the series இது காதல் காலமடி சகியே

இது காதல் காலமடி சகியே

இது காதல் காலமடி  சகியே

இது காதல் காலமடி சகியே

இது காதல் காலமடி  சகியே1

இது காதல் காலமடி சகியே1

இது காதல் காலமடி  சகியே2

இது காதல் காலமடி சகியே2

இது காதல் காலமடி  சகியே3

இது காதல் காலமடி சகியே3

இது காதல் காலமடி  சகியே4

இது காதல் காலமடி சகியே4

இது காதல் காலமடி  சகியே5

இது காதல் காலமடி சகியே5

இது காதல் காலமடி  சகியே6

இது காதல் காலமடி சகியே6

இது காதல் காலமடி  சகியே7

இது காதல் காலமடி சகியே7

இது காதல் காலமடி  சகியே8

இது காதல் காலமடி சகியே8

இது காதல் காலமடி  சகியே9

இது காதல் காலமடி சகியே9

இது காதல் காலமடி  சகியே10

இது காதல் காலமடி சகியே10

இது காதல் காலமடி  சகியே11

இது காதல் காலமடி சகியே11

இது காதல் காலமடி  சகியே12

இது காதல் காலமடி சகியே12

இது காதல் காலமடி  சகியே13

இது காதல் காலமடி சகியே13

இது காதல் காலமடி  சகியே14

இது காதல் காலமடி சகியே14

இது காதல் காலமடி  சகியே15

இது காதல் காலமடி சகியே15

இது காதல் காலமடி  சகியே16

இது காதல் காலமடி சகியே16

இது காதல் காலமடி  சகியே17

இது காதல் காலமடி சகியே17

இது காதல் காலமடி  சகியே18

இது காதல் காலமடி சகியே18

இது காதல் காலமடி  சகியே19

இது காதல் காலமடி சகியே19

இது காதல் காலமடி  சகியே20

இது காதல் காலமடி சகியே20

இது காதல் காலமடி  சகியே21

இது காதல் காலமடி சகியே21

இது காதல் காலமடி  சகியே22

இது காதல் காலமடி சகியே22

இது காதல் காலமடி  சகியே23

இது காதல் காலமடி சகியே23

இது காதல் காலமடி  சகியே24

இது காதல் காலமடி சகியே24

இது காதல் காலமடி  சகியே25

இது காதல் காலமடி சகியே25

இது காதல் காலமடி  சகியே26

இது காதல் காலமடி சகியே26

இது காதல் காலமடி  சகியே27

இது காதல் காலமடி சகியே27

இது காதல் காலமடி  சகியே28

இது காதல் காலமடி சகியே28

இது காதல் காலமடி  சகியே29

இது காதல் காலமடி சகியே29

இது காதல் காலமடி  சகியே30

இது காதல் காலமடி சகியே30

இது காதல் காலமடி  சகியே31

இது காதல் காலமடி சகியே31

இது காதல் காலமடி  சகியே32

இது காதல் காலமடி சகியே32

இது காதல் காலமடி  சகியே33

இது காதல் காலமடி சகியே33

இது காதல் காலமடி  சகியே34

இது காதல் காலமடி சகியே34

அத்தியாயம் 27

குழந்தைகள் வளர வளர ,ஸ்ருதி காது படவே ,”என் மகன் தான் அகிலுக்கு வாரிசு.”

“இல்லை என் மகன் தான்.!?”என…அனிலாவும் ,லக்ஷ்மியும் சண்டையிட …உடைந்து போனது என்னவோ ஸ்ருதி தான்…

யாராவது அக்கறையாக குழந்தை இல்லாதது பற்றி கேட்டால் கூட ,வருந்த ஆரம்பித்தாள்…சமயங்களில்,’ என்னிடம் தான் குறை இருக்குமோ ?!!!அனிலா சொல்வது போல் நான் பெண்ணே இல்லையோ!!!!?’, என தோன்ற வாடி வதங்கி போனாள்….

அம்மாவிடம் போகவும் பயம்.,’ ஒரு வேளை தன்னிடம் தான் குறை .என அவர் சொல்லிவிட்டால்?!!’ என பல்வேறு விதமாக தவறாகவே யோசித்து குழம்பிக் கொண்டாள் ஸ்ருதி…

அவ்வளவு யோசித்தவள், ஒரு முறையாவது நமக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் கூட அம்மா மூலமாக நல்ல மருத்துவரைப் பார்த்து சரி செய்து கொள்ளலாம் .என ஒழுங்காக யோசனை செய்யவில்லை ..

இப்படியே ஒரு வருடம் ஓட ,லக்ஷ்மியின் தங்கை வசுமதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு ,ஆண்டு விடுமுறையில் வந்தாள் இவர்கள் வீட்டிற்கு ..

“பாப்பா வருகிறாள்…’ எனவும் சிறுமி என எண்ணி இருந்தாள் ஸ்ருதி.

இப்பொழுது இரெண்டும் கெட்டான் வயதில், கண்களில் முதல் முறை அந்த மாளிகை நிகர் வீட்டை சுற்றிப் பார்த்து ,அலைப்புறும் கண்களுமாய் வந்தவளைப் பார்க்க.

ஏனோ நல்லவிதமாய் தோன்றவில்லை .பிடித்தமின்மையை வெளிப்படையாக அவள் முகம் பிரதிபலிக்க …

‘ஸ்ருதிக்கு அவளை பிடிக்கவில்லை.!’ என்ற தகுதியே அவளை அந்த வீட்டில் கமலா, விஜயன், அனில், அனிலா என அனைவருக்கும் பிடித்தம் ஆக்கியது.

அவளிடம் ,”உட்கரும்மா வசுகுட்டி ..ஸ்ருதி ..நீ பாப்பாவுக்கு ஜூஸ் எடுத்துட்டு வா ..”என கமலா அனுப்ப

அங்கு அலுவலகம் போக, புல் பார்மலில் கிளம்பி வந்த அகிலை பார்த்தவள் கண்களில் கிறக்கம் .

ஆவென வாய் திறந்தவளை கண்ட அனிலா. “சீ ….என்ன பெண் இவள்…அடுத்தவர் கணவனை ரசித்துக் கொண்டு…” என மனதில் எண்ணிக் கொண்டே. அங்கு ஸ்ருதி வருவதை பார்த்தவள், தன் மகனை பார்க்க கிளம்பிவிட்டாள்.

கமலா வலிய அகிலை அழைத்து ,”அகில் இது நம்ம வசுகுட்டி… இப்பொழுது தான் பிளஸ் டூ முடித்து இருக்கிறாள் ..நம் லக்ஷ்மியின் தங்கை ..”என

அகிலிற்கு அவளை உற்று பார்க்க கூட நேரமில்லை.

“ஓ அப்படியா?!! ஹாய் வசு!!! பீல் அட் ஹோம் ..”என்றவன். அங்கு நின்றிருந்த ஸ்ருதியை பார்த்து தலை அசைத்து விட்டு சென்றுவிட்டான் .

ஸ்ருதியும் தலை அசைத்து விடை கொடுத்தவள் .நேற்றைய அவனுடனான உரையாடலை எண்ணிக் கொண்டாள் .

“இப்பொழுதெல்லாம் நான் ஏன் அடிக்கடி இரண்டு, மூன்று நாள் வெளி நாடு போகிறேன்?!! என ஏன் நீ கேட்கவே இல்லை??” என்று அகில் ஸ்ருதி விழிபார்த்து கேட்க .

“அது, நீங்கள் வேலை விஷயமாக போய் வரும்பொழுது…அப்படி கேட்டால் அபசகுணம் மாதிரி ஆகி விடுமோ??!!என்று தான்..” என

அகில் ,”அப்படியெல்லாம் ஆகாது .ஆனால் உன்னிடம் , இந்த மூன்று வருடங்களில் நிறைய மாறுதல்கள் வந்து விட்டது மா ..மிகவும் அமைதியாகி விட்டாய் ..

இன்னொரு முக்கியமான விஷயம்,ஏன் இப்பொழுதெல்லாம் நீ ஆர்வமே இல்லாமல் இருக்கிறாய்… உனக்கு உடல்நிலை ஏதும் சரியில்லையா ..”என

“ஐயோ அப்படியெல்லாம் இல்லை அகில்…”என வேகமாக பதில் சொன்னாள்… தன் பயங்களை உள்ளூர மறைத்துக்கொண்டு.

“நமக்கு குழந்தை இல்லையே!!!!!????என வருந்துகிறாயா ??அப்படி எல்லாம் கவலைப்பட அவசியமில்லை !!!இப்பொழுது எல்லாவற்றிற்குமே தீர்வு இருக்கிறது ..நமக்கும் ஒன்றும் பெரியதாக வயதாகி விடவில்லை..”என

“தெரியும் அத்தான்… நான் அதற்கெல்லாம் வருந்தவில்லை…சும்மா தான் …”

என மழுப்பினாலும் ,அவன் வார்த்தைகள் மனதில் நம்பிக்கை விதைகளை ஆழ ஊன்றியது.

அகில்,” நாம் இருவரும் கணவன் மனைவி …இருவரும் சரிபாதி….எப்பொழுதும் நான் மட்டுமே உன்னை அழைப்பது, என்பது .ஒரு மாதிரி உறுத்தலாக இருக்கிறது மா …உனக்கு என் மேல் ஆசையே இல்லையா ?!! எனக்கு அவ்வளவு வேலை இருந்தாலும், படுக்கை அறை வரும் பொழுது அவை அனைத்தையும் வாயிலோடவே விட்டு விடுவேன்..

நீயும் அதையே செய்…தாம்பத்திய பந்தம் வயது ஏறும் பொழுது உறுதி பட வேண்டும் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் ….நானே உன்னை திரும்ப திரும்ப அழைப்பது ,ஏதோ விருப்பமில்லாத பெண்ணை வலிய பணியவைப்பது போன்ற தோற்றம் தருகிறது எனக்கு …

அதனாலேயே சில சமயங்களில் உன்னை நெருங்க முடிவதில்லை …”என மனம் திறக்க

அவன் கண்களில் வழிந்த அடிபட்ட உணர்வு கண்டு ,’ச்சே என்ன வாழ்வு வாழ்கிறோம் இவனையும் வருத்தி நாமும் வருந்தி…

இனிமேல் இவனை இப்படி அற்ப விஷயங்களுக்காக வருந்த விடுவதில்லை ..”என்ற உறுதி கொண்டவள் ..மெல்ல அவனை நாட..

அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை…

“நான் இவ்வளவு பேசியும், நீ அமைதியாக அருகில் வருவது. என்னவோ ,எனக்காக பரிதாபம் கொண்டு வருவது போல் தோன்றுகிறது …எனக்கு உன் காதல் மட்டும் தான் வேண்டும்.. உனக்கு முடியவில்லை ,பிடிக்கவில்லை என்றால் மறுக்கவும் தயங்காதே ..”என

ஸ்ருதி,” அப்படி எல்லாம் இல்லைங்க ..எனக்கும் விருப்பம் தான் …”என.

தன் முகத்தை உள்ளூர எழுந்த உறுதியோடு மலர்வாக வைத்து கொண்டு ,கூற …

இது சரியா ?இது சரியா ?!என சிறு பிள்ளைகள் விளையாட்டு போல, அங்கு அகில் நடத்தும் காதல் விளையாட்டுகளில் ஸ்ருதிக்கு வெட்கம் தாளவில்லை …

இவள் பதில் சொல்லும் வரை அவன் இவளை விடவும் இல்லை..அன்றைய சங்கமம் இருவருக்கும் தித்திப்பாய்..

அதுவே அவர்களின் இறுதி கூடல் என அறியாதவர்களாய் இன்புற்று மகிழ்ந்தனர். ..

அனைத்தும் முடிந்து, இருவரும் முகம் பார்த்து, விழித்து இருக்க ..

அகில்,” ஸ்ருதிமா நான் இன்னும் ஒரு வாரத்தில் சிங்கப்பூர் போக வேண்டும்மா ..அதன் பிறகு குறைந்தது ஒரு வருடமாவது தங்க வேண்டும்.. அதனால் உனக்கும் வீசா வாங்க ஏற்கனவே ஓபிஸில் சொல்லி விட்டேன்.. என் பிஏ எல்லாம் கவனித்துக் கொள்வான் ..

ஆனால் உன்னை என் கூடவே கூட்டிப் போக முடியாது.. சிறிது நாள் கழித்து நீ வர வேண்டி இருக்கும்.”என

“சரிங்க.” என்றாள்…

பிறகும் அவள் முகம் ஏதோ யோசனையிலேயே இருக்க..

 

அகில்,” என்ன ஏதோ யோசித்துக் கொண்டே இருக்கிறாய் ?!!எதுவாக இருந்தாலும் பட்டென்று கேட்டு விடு ..”என.

“எதற்காக இத்தனை தடவை சிங்கப்பூர் போகிறீர்கள்?!!! ஹோட்டல் பார்க்க ஒரு தடவை ..அதன்பிறகு கையெழுத்திட ஒரு முறை போனால் போதா தா?!!” என.

அவள் பேசியது கேட்டு நகைத்தவன் ..,”உனக்கு சவுத் வெஸட் ஏர்லைன்ஸ் தெரியுமா ?!!”என

“ஆம் தெரியும் அது கூட நேரம் தவறாமைக்கு பெயர் வாங்கிய நிறுவனமாயிற்றே என

“ஆம்…ஆனால் அவர்களுக்கு அந்த பெயர் எளிதாக கிடைக்கவில்லை. தொடக்கத்தில் அமெரிக்காவில் சில இடங்களில் பருவ நிலை ,ஒத்துழைக்காததால் சரியான நேரத்திற்கு தங்கள் பயணிகளை அவர்களால் கொண்டு சேர்க்க முடியவில்லை ..

அவர்கள் நேரம் தவறாமை சந்தேகத்திற்கு உள்ளாகவே …அங்கெல்லாம் தங்கள் சேவைகளை நிறுத்திக் கொண்டார்கள் .,

அதனால் தான் அவர்களது ‘நேரம் தவறாதவர்கள் .’என்ற பெயரினை தக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் ..நம் தொழிலிலும் ,சில முக்கிய முடிவுகள் .மற்றும் ஆரம்ப கால குழப்பங்கள் தீர்க்க நான் உடனிருந்தால் தான் நல்லது ..சில சிக்கலான முடிவுகளும் எடுக்க முடியும் ..

மற்றும் நம் இந்திய உணவுகளை குறிப்பாக தமிழரின் பாரம்பரிய உணவுகளை ,பிரிசர்வேட்டிவ் கலந்த ரெடிமேட் மசாலாக்கள் ,சாஸ்கள் ,எண்ணை அதிகம் சேர்தது சுவை மாற்றி விடுகிறார்கள் ..உணவின் தரமும் கெடுத்து விடுகிறார்கள்..அங்கு உள்ள செப்கள் எனவே அவர்களுக்கு தட்டிக் கொடுத்து ,ஊக்குவிக்கவும் ,கருத்து சொல்லவும் ,நான் அங்கு அவசியம் இருந்தாக வேண்டிய சூழல் மா !”,என.

“சரி அத்தான்…” என தலை அசைத்தவளை

“நீ என்னுடன் வரும்வரை உன் அம்மா வீட்டில் இருக்கிறாயா?!! அவர்களை நீ பர்த்தே நிறைய நாட்கள் ஆகி விட்டதே” என கேட்க..

சமத்தாக தலை அசைத்து சம்மதித்தாள்…

அகிலுக்கு என்ன தெரியும் ..அவள் தன் தாயும், தன்னிடம் குழந்தை இன்மை பற்றி கேட்க தொடங்கி விட்டதால் தான் ஸ்ருதி அவரிடம் பேசவில்லை என…

அகிலும் ,”ஒன்றை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்…இனிமேல் நம் இருவரிடையே எந்த கரணம் கொண்டும் ஒளிவு மறைவே வரக் கூடாது …”என இரட்டை அர்த்தத்தில் முடித்தவன். தன் செயல்களால் விளக்கம் சொல்லி வளைத்தான் இவளை.

அந்த பொழுது மனதில் உலா வர, கண்கள் சொக்கி இவள் நின்றது .

கண்டு கமலாவுக்கு சரியான வயிற்று எரிச்சல் .,’இப்படி மயங்கி நின்று நின்று .கடைசியில் எங்களை இப்படி ஒரு பைசா செலவழிக்க வழி இல்லாமல். கையை கட்டி விட்டாளே …

அகிலிடம் பணம் வாங்கி இவளும் செலவு செய்ய மாட்டாள் …நம்மையும் விட மாட்டாள் தத்தி ..’என உள்ளுக்குள் குமைய

“அங்க என்னமா?!! வாசலையே உற்று பார்த்துக் கொண்டு இருக்கிறாய் …

ஜூஸை இங்கே கொண்டுவாம்மா ..”என்றவர்.

அவள் கையில் இருந்ததை, பிடிங்கி வசுவிடம் கொடுக்க ..அவளும் அவள் வயதிற்கு அகில் போல வசதியான ,கம்பீரமான ஆண்மகனை கண்டிராதவள் மயக்கத்திலேயே சுவை உணராமல் குடித்து விட.

அந்த அன்னாசி சாறு ஒவ்வாமை கொண்டவளுக்கு ,உடலில் சிவப்பு தடிமன்கள் தோன்ற ..

“ஆ அம்மா…” என கத்தி ஊரை கூட்டினாள் வசுமதி.அவள் சற்று நேரத்தில் ஹோஸ்பிட்டால், கமலாவோடு சென்றுவிட…
 

இங்கே காரணம் கிடைத்த மிதப்பில் ,ஸ்ருதியை ஒரு வழி செய்து கொண்டிருந்தாள் லக்ஷ்மி..

“ஏங்க்கா எங்க வசு மேல் உங்களுக்கு என்ன பொறாமை?!!! உங்களை விட ரொம்ப சின்னவள்…ஆங் அவள் உங்களை விட அழகா இருக்காளேன்னா கோபம் ?!!!இப்படி அவள் உடலை புண்ணாக்கி விட்டீர்களே” என விளாசித் தள்ளிவிட்டாள்.

ஸ்ருதி கூற வந்த ,”வசு அவளுக்கு அலர்ஜீ இருக்கிறதை சொல்லவே இல்லை …பிறகு எப்படி எனக்கு தெரியும்…”என்பதை யாரும் கவனிக்க தயாராக இல்லை …

அவளை ஒரு வழி ஆக்கி விட்டனர்….

அனிலும் அவன் பங்குக்கு ,”அண்ணி வசு மேல் உங்களுக்கு காழ்ப்புணர்வு ????அதானே இப்படி செய்தீர்கள் !!!”என பேச

ஸ்ருதியை பேசவே யாரும் விடவில்லை ..கண்ணீரை கட்டுப் படுத்த முடியாத ஸ்ருதி ..தன் அறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டாள்..

வசுவுக்கு வந்த ஒவ்வாமையை, ஏதோ பெரிய உயிர் கொல்லி நோய் வந்தாற் போல நாடகம் ஆடி… அகில் ஓபிஸ் வரை வசுவை கூட்டிச் சென்று ..

அவள் உடலில் இருந்த சிவப்பு தடிமன்களை காட்டி விட்டே அவளை ஹாஸ்பிட்டால் கூட்டி சென்றார் கமலா..

“உன் மனைவிக்கு என்ன ஆயிற்று? அகில் !இப்படி செய்து வைத்து விட்டாளே?… இந்த பிள்ளைக்கு ஏதாவது என்றால் .நான் இவள் தாய், தந்தைக்கு எப்படி பதில் சொல்வேன் ???நம்மை நம்பித் தானே அனுப்பி வைத்தார்கள்..”என முகத்தை மூடி குரலை ஏற்றி இறக்கி கமலா ஒரே ஆர்ப்பாட்டம் ..

“இப்பொழுது ஏன்மா மருத்துவமனை போகாமல் இங்கே வந்தீங்க?!” என அகில் கேட்க…

“வெளியே சொன்னா வெட்கம்… இந்த மாதிரி ஆத்திர அவசரத்திற்கு கூட கையில் ஒரு பைசா இல்லாமல், எப்படி மருத்துவமனைக்கு தைரியமாக போவது …”என நயமாக பேச.

அகில் சில போன் கோல்கள் பேசியவன் ,”வாங்கம்மா..” என இருவரையும் மருத்துவமனை அழைத்துச்சென்றான் ..

அங்கே வசு யாரென சரியாக சொல்லாது ,”என் மருமகள் “என அவளால் அகிலை தன் வழிக்கு கொண்டு வந்த மகிழ்ச்சியில்… வேண்டுமென்றே கமலா மொட்டையாக அறிமுகம் செய்து வைக்க..

அனைவரும் வசுவின் வயதிற்கு மீறிய உடலமைப்பினால் ,ஸ்ருதியை திருமணத்தோடு மட்டுமே பார்த்து இருந்தவர்கள்..

வசுவை அவன் மனைவி என்றே எண்ணி மிஸஸ் அகிலன் என என்ட்ரி போட்டு வைத்தியம் பார்த்தனர்…அகில் போன் கோல் அட்டன் பண்ண போயிருக்க…

மிசஸ் அகிலன் என வசுவை அழைத்து. சென்று ராஜ வைத்தியம் பார்த்தவர்கள்…… உங்கள் கணவர் எவ்வளவு திறமைசாலி நல்லவர் வல்லவர் என புகழ்ந்து தள்ளி எங்கள் மருத்துவமனைக்கு பண உதவி எல்லாம் செய்திருக்கிறார் என அந்த நர்ஸ் உளறி கொட்ட வசுவின் கண்களில் ஒரு வெறி……..

பக்கத்தில் வேடிக்கை பார்த்த கமலாவுக்கு இந்த யோசனை நன்றாக இருக்கிறதே என நச்சு எண்ணம்..

வைத்தியம் முடித்து இருவரையும் அகிலே அவர்களை வீட்டிற்கு கூட்டி கொண்டுவர.. நிரம்ப மகிழ்வு கமலாவுக்கு..

வசுவுக்கு அகிலின் உருவத்தை விட ,அவன் குணத்தை விட,அவன் செல்வாக்கு அவன் வைத்திருந்த கார் ,அவன் வீடு, ஹோட்டல்கள் , மற்ற சொத்துக்கள் கண்டு மயக்கம் ..

இவனை மணந்தால் எப்படி ராணி போல் வாழலாம் என கற்பனை ..கண் கொள்ளாமல் …

வீட்டுற்கு வந்தவன் ,அனைவரையும் கூட்டி வரச் சொல்லி முருகனை அனுப்ப..
அனைவரும் அனிலா உட்பட ,ஹாலில் கூடினர்..“ எல்லோருக்கும் எதிர்பாராத செலவுகள் வருவது இயற்கை என எனக்கு புரிகிறது ..

அதனால் நாளை உங்கள் அனைவருக்கும் கிரெடிட் கார்ட் வந்துவிடும் …அதை வைத்து அத்தியாவசிய தேவைகளை கவனித்து கொள்ளுங்கள்…என

அவனது பிஏ இவன் சட்டென கிளம்பி விடவும் என்ன வகையான கார்ட் எவ்வளவு உச்ச வரம்பு என கேட்க ,இவன் இல்லாததால் தாத்தாவிடம் கேட்க போனான்…

அவர் அகிலின் முட்டாள் தனத்தை பல்லை கடித்து பொறுத்து கொண்டு, உச்ச வரம்பாக மாதம் 50,000. என போட்டு அனைவருக்கும் கிரடிட் கார்டு வாங்க சொன்னார்.அனைவரும் கார்டு கிடைக்க போகும் மிதப்பில் இருக்க ,

கமலாவுக்கோ ,’அப்படியானால் அகில் மனைவியை குறை சொன்னால் ..இன்னும் நிறைய கிடைக்குமோ ?!!!”என்ற அதிமேதாவித்தனமான சிந்தனை ஓட்டம் …

அகில் ஸ்ருதியை தனியாக அழைத்தவன் ,”ஏன் கவனக்குறைவாக இருந்தாய் ?!!!வசுவிற்கு ஏதாவது என்றால் நம்மேல் அல்லவா பழி வரும் ?!!!”என .

அவன் தன்னை விசாரிக்காமல் வார்த்தைகளை விட்டதால் வந்த கோபம் ,அவனது ,’நம்மேல் பழி வரும்’ என்று தனது சிறு தவறில் அவனையும் இணைத்துக் கொண்டதால் தெறித்து ஓடியது…’

அவனது அன்பில் நெகிழ்ந்து அவனை கட்டிக் கொண்டாள்….

அடுத்து தன் தாய் வீட்டிற்கு பெட்டியுடன் கிளம்பும் நாள் வரும் .என எதிர் பாராமல் அந்த தருணத்தில் அதீத மகிழ்வுடன் ஸ்ருதி….

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *