இது காதல் காலமடி சகியே34

This entry is part 35 of 35 in the series இது காதல் காலமடி சகியே

இது காதல் காலமடி சகியே

இது காதல் காலமடி  சகியே

இது காதல் காலமடி சகியே

இது காதல் காலமடி  சகியே1

இது காதல் காலமடி சகியே1

இது காதல் காலமடி  சகியே2

இது காதல் காலமடி சகியே2

இது காதல் காலமடி  சகியே3

இது காதல் காலமடி சகியே3

இது காதல் காலமடி  சகியே4

இது காதல் காலமடி சகியே4

இது காதல் காலமடி  சகியே5

இது காதல் காலமடி சகியே5

இது காதல் காலமடி  சகியே6

இது காதல் காலமடி சகியே6

இது காதல் காலமடி  சகியே7

இது காதல் காலமடி சகியே7

இது காதல் காலமடி  சகியே8

இது காதல் காலமடி சகியே8

இது காதல் காலமடி  சகியே9

இது காதல் காலமடி சகியே9

இது காதல் காலமடி  சகியே10

இது காதல் காலமடி சகியே10

இது காதல் காலமடி  சகியே11

இது காதல் காலமடி சகியே11

இது காதல் காலமடி  சகியே12

இது காதல் காலமடி சகியே12

இது காதல் காலமடி  சகியே13

இது காதல் காலமடி சகியே13

இது காதல் காலமடி  சகியே14

இது காதல் காலமடி சகியே14

இது காதல் காலமடி  சகியே15

இது காதல் காலமடி சகியே15

இது காதல் காலமடி  சகியே16

இது காதல் காலமடி சகியே16

இது காதல் காலமடி  சகியே17

இது காதல் காலமடி சகியே17

இது காதல் காலமடி  சகியே18

இது காதல் காலமடி சகியே18

இது காதல் காலமடி  சகியே19

இது காதல் காலமடி சகியே19

இது காதல் காலமடி  சகியே20

இது காதல் காலமடி சகியே20

இது காதல் காலமடி  சகியே21

இது காதல் காலமடி சகியே21

இது காதல் காலமடி  சகியே22

இது காதல் காலமடி சகியே22

இது காதல் காலமடி  சகியே23

இது காதல் காலமடி சகியே23

இது காதல் காலமடி  சகியே24

இது காதல் காலமடி சகியே24

இது காதல் காலமடி  சகியே25

இது காதல் காலமடி சகியே25

இது காதல் காலமடி  சகியே26

இது காதல் காலமடி சகியே26

இது காதல் காலமடி  சகியே27

இது காதல் காலமடி சகியே27

இது காதல் காலமடி  சகியே28

இது காதல் காலமடி சகியே28

இது காதல் காலமடி  சகியே29

இது காதல் காலமடி சகியே29

இது காதல் காலமடி  சகியே30

இது காதல் காலமடி சகியே30

இது காதல் காலமடி  சகியே31

இது காதல் காலமடி சகியே31

இது காதல் காலமடி  சகியே32

இது காதல் காலமடி சகியே32

இது காதல் காலமடி  சகியே33

இது காதல் காலமடி சகியே33

இது காதல் காலமடி  சகியே34

இது காதல் காலமடி சகியே34

அத்தியாயம் 34

ஜீவன் அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் வநது போக வீடு களை கட்டியது ..

நாட்கள் உருண்டோட ,அகில் மற்ற விஷயங்களில் ரொம்ப சாதாரணமாக இருக்கவே மகிழிக்கு தன் தவறு புரியவில்லை …

அகில் உள்ளே கொழுந்துவிட்டு எரியும் தீக்கங்காக தன் கோபத்தை மறைத்து வைத்திருந்தான் ….

மாதங்கள் உருண்டோட மகிழியின் வயிறும் ,குழந்தைகளும் வளர அகிலின் கோபமும் வளர்ந்தது ….

குழந்தைகள் துடிப்பு, ஸ்கேன்,முதுகு வலிக்கு என அவள் இவனை கொஞ்சம் கொஞ்சமாக நாட…. காதல் வயப்பட்ட அகில் மனதிற்கு இந்த மாற்றங்கள் போதவில்லை .. வார்த்தைகளில் சொல்லப்படாத அவர்கள் காதலே அவர்களிடையில் திரையாக.

மகிழிக்கு அவன் விலகல் மருத்துவ காரணங்களுக்காக . என தவறான புரிதல் அதை தன் சிறிய தயக்கங்கங்கள் உடைத்து கேட்டால் தான் சொல்வேன் என அகிலின் காயம்பட்ட மனதின் நியாயமான அடம் என நாட்கள் ஓட ..

ஒரு நல்ல நாளில் ..மகிழிக்கு ,ஹோட்டலில் அகில் அருகில் ஒரு தவிர்க்க முடியாத ஷேர் ஹோல்டர்ஸ் மீட்டிங் நடக்கும் போது …வலி வர ..

தன் எப்பொழுதைய வழக்கமாய் ..தன் வலிகளை காட்டிக் கொள்ளாது உதடு கடித்து பொறுத்துக் கொள்ள ..பேசிக் கொண்டிருந்த அகில் தற்செயலாக திரும்பி பார்த்தவன்.. அவள் வலியை நொடியில் புரிந்தவன் ..அதே அளவு கோபமும் கொண்டான் மனதினுள் .. “இப்பொழுது கூட வலியை பகிர மாட்டாயா ??”என

அவசரமாக மீட்டிங்கை நிறுத்தியவன் ……தன் மனைவியை கைகளில் ஏந்தி தன் பாதையை கண்ணீர் மறைக்க படிகளில் ஓடினான் மருத்துவமனைக்கு போக காரை நோக்கி

அகிலின் கண்ணீர் நில்லாமல் வழிய ,சிறு சத்தமோ ….கூச்சலோ இல்லாமல் மகிழி குழந்தைகள் பெற்றெடுக்க ……

இவர்களது காதல் காவியமாய் அந்த மருத்துவ மனை முழுவதும் பேசப்பட ,அவர்களை தவிர உலகத்திற்கே வெட்ட வெளிச்சமாய் அவர்கள் காதல் ……

தன் கரங்களில் பிள்ளைகளை ஏந்தியவன் …. ரோஜாவின் வர்ணத்தில் கண் திறவாமல் கை கால்கள் அசைத்து கத்தி அழுது கொண்டிருந்த தன் பிள்ளைகளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை. தன் மகியை அப்படியே அச்சில் வார்த்தாற் போல இருந்த மகளை பார்க்க பார்க்க மகிழியை மனது தேட.

விரைந்து வந்த வசந்தியிடமும் ,தாத்தாவிடமும் பிள்ளைகளை கொடுத்து விட்டு மனைவியின் மருத்துவ அறையை கதவடைத்தான்..

மகிழி கண்களை சும்மா மூடி இருக்க ,அவள் தன் உணர்வில் இல்லை என எண்ணிக் கொண்டவன் ….

“ஏன்டி என்ன இப்படி படுத்துற ….நான் உன்கிட்ட என்ன எதிர்பார்க்கிறேன் ???உன் கவலைகளையும் ,கஷ்டங்களையும் கூட நீ என் கூட ஷேர் பண்ணனும்னு தானே ….அது ஒரு தவறா ஆங் ……”என

தன் கண்கள் திறந்தவள் ….கணவன் வருந்துவது தன் பிரசவ வலிக்காக என அனுமானத்தில் ….”நீங்க எனக்காக இவ்வளவு வருந்தும் போது ….எப்படி நான் உங்களை வருத்தப் படுத்துற மாதிரி என் வலிகளை காட்டுவேன் ….”என

தன் கோபத்தில் கொஞ்சம் தணிந்தான் ….அடுத்து அனைவரும் குழந்தைகளுடன் அங்கு வரவே….

தங்கள் மோன நிலை கலைந்து மகிழ்ச்சியாகவே இருந்தனர் ….ஜீவனும் ,எழிலும் சேர்ந்து தன் குட்டி தங்கைக்கும் ,தம்பிக்கும் பாக்கெட் மணியில் இருந்து டிரஸ் வாங்கி வர.. அவ்வளவு சந்தோசமும் மொத்தமாக அவர்கள் இல்லத்தில் ….

அகில் தன் பெற்றோருக்கு சொல்லாவிடினும் ….மகிழி அவன் பெற்றோர் என்பதற்காக போன் போட்டு விவரம் சொல்ல ….

கமலா “என்ன இதுக்கு நாங்க கொண்டாடனும் என்று எதிர் பார்க்கிறாயா ……ஆங்…. முடிந்தால் வருகிறேன் ….”என்றவர் எட்டியும் பார்க்கவில்லை ….

தங்கள் சுக போக வாழ்வை மகிழி தட்டி பறித்த்தாகவே நம்புகின்றனர் ….

தன் மனைவி மகன்களுடன் வந்த ராஜூவிற்கு அழகான அந்த பெண் குழந்தையை விட்டு பிரிய மனமில்லை. அனிலாவும் குட்டி ஸ்ருதியிடம் மயங்கியது தான் அதிசயம்.

அகில் தன் பிள்ளைகள் மனைவி என நேரம் செலவழித்தாலும் ….மனதின் ஓரத்தில் அந்த ஏமாற்றம் நிலைத்துவிட ..அவனால் அவளை நெருங்க முடியவில்லை ..

நாட்கள் நகர்ந்து ..குழந்தைகள் பிறந்து கிட்டதட்ட நான்கு மாதங்கள் ஆகி விட ..

‘மகிழியின் உடல் நிலை சரியாகட்டும் ‘,என அதுவரை காத்திருந்த தாத்தாவும் ,வசந்தியும் குழந்தைகள் பெயர் சூட்டும் விழாவிற்கு நாள் குறிக்க..

குழந்தைகள் பிறந்த போது நிஷிமுரா மட்டுமே வந்து போயிருக்க.. இம்முறை சுமிரேவும் வருவதாய் பிளான் செய்யப்பட.. அவர்களுக்காய் ஆவலாய் காத்திருந்தாள் மகிழி..

சுமிரே வந்திரங்கியதும்.. தங்கள் கதைகள், குழந்தைகள் என பேசி நேரம் நகர ..

குழந்தைகள் பெயர் வைக்கும் தருணம் வரவே.. தங்கள் அறையில் சுமிரேவுடன் பேசிக் கொண்டே உடை மாற்றிக் கொண்டிருந்த மகிழி ..

அகில் சட்டென கதவை திறந்து வரவும் பதறி தன் உடலை மறைக்க…. அவனோ சாண் ஏறி முழம் சறுக்கும் நிலையில் ..திரும்ப தன் கோபத்தை மீட்டெடுத்தவனாய் ..

“கதவை மூடினால் என்ன??? திறந்து போட்டுக் கொண்டே எல்லா வேலையும் பார்..” என கடுமையாகவே.. சுமிரே அங்கு இருந்த்தை கவனியாமல் சொல்லி விட்டு போக..

சுமிரே தற்பொழுது ஒரளவு தமிழ் கற்றுக் கொண்டபடியால்.. அகிலின் கோபம் புரியவே,” மகி சான்.. அகில் சானுக்கு உங்க மேல் என்ன கோபம்??? நீங்க இரண்டு பேரும் கணவன் ,மனைவி தானே ..அப்புறம் ஏன் அப்படி பதறினாய் மகி சான் ..”என

அவள் ,”உனக்கு தெரியாத்தா சுமிரே சான்…. பிரக்ன்ன்சி ….அதன் பிறகு டெலிவரி ஹீலிங் டைம்…. என நானும் அவரும் தள்ளி இருக்கிறோம் ….அதனால் கூச்சம் வந்து விட்டது ….”என

அவள் தன் வாயை மூடிக் கொண்டவளாய் ,”என்ன உளறுகிறாய்…. அப்படி எல்லாம் ஒன்றும் தள்ளி இருக்க தேவையே இல்லையே “….என

மகிழி ,”எனக்கு டிவின்ஸ்.சுமிரே சான் ….அது கூட காரணமாக இருக்கலாம் ….”

அவள் “சான்ஸ் லெஸ் மகி சான் ….ஒன்று அவர் வேறு ரிலேசன் ஷிப்பில் இருக்க வேண்டும் ……இல்லை அவருக்கு உங்கள் உறவில் திருப்தி இல்லாமல் இருக்க வேண்டும் …. அதான் தள்ளி இருக்கிறார் ….மற்றபடி உனக்கு நார்மல் டெலிவரி ….நீ சரி ஆக நாற்பது நாட்களே போதும் ….”என

குழம்பியவள் ….தற்செயலாக கணவன் விட்டு போன அவன் பெர்சனல் செல்லில் மெசேஜ் வர ….அகில் ஏதோ ஒரு அக்கவுண்ட்க்கு பணம் அனுப்பிய ரிசிப்ட் வர ….அந்த மெசேஜை ஸ்க்ரோல் செய்து பார்க்க ….அகில் மாதா மாதம் அந்த அக்கவுண்டிற்கு பணம் அனுப்பி இருக்க….

கடந்த மாதங்கள் அவன் நடந்து கொண்ட விதம் ….தான் பாலூட்டும் போது கூட வேறு புறம் திரும்பி கொள்ளும் அவன் முகம் ….என அனைத்தும் நினைத்துப் பார்த்தவள் ….

சுமிரே சொன்னதை உண்மை என நம்பியவள் ….தான் பின் குத்த மறந்த முந்தாணையை அள்ளி சொருகியவளாக ….தன் கணவனை தேடி போனாள் காளி தேவியின் மறு பிறப்பாக ….

அகில் ,அவன் அலுவலக அறைக்குள் நுழைவதைப் பார்த்தவள் ….பின்னாலேயே நுழைந்தவள் அவன் சுதாரிப்பதற்குள் கதவை சாற்றியவளாய் ……அவன் சட்டையை எட்டிப் பிடித்தவள் ….

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ….உங்க மனசுல ….ஆங் யார் அவள் ….”என

அவன் முதன் முறையாக ….தன் மனைவியின் உரிமை கத்தலில் ….கண்களில் சுவாரசியம் குடியேற பார்க்க ….

அவள் அவன் அமைதியை ஒப்புதலாக பார்த்தவள் ,”ஏன் அமைதியாகிட்டீங்க ….யார் அந்த வாசுகி ஆங் ….மாதாமாதம் பணம் அனுப்பரீங்க ….”என

அவள் தன்னை பற்றி தவறாக நினைத்தவுடன் ,’அவள் வழக்கமாக ….ஓடிப் போகாமல் தன்னிடமே வந்து நியாயம் கேட்டதில் ….அவன் பழைய மனக் குறைகள் மறைய ….’அவள் இழுத்து சொருகிய சேலையில் தெரிந்த அந்த இடையில் தன் பார்வையை பதித்துக் கொண்டே ….

அனிலை பற்றி விவரிக்க….

தான் எதிர் பார்த்த அளவுக்கு அவன் தவறு செய்ய வில்லை என்றதும்…. மனமிளகியவள் “அப்படினா ஏன் தள்ளி இருந்தீங்க “என….

அவள் பக்கம் இருந்த தவறை விளக்கினான் ….அவள் தன் தவறை உணர்ந்தவளாய் தலை குனிய….

அகில் “நீ தலை குனியாதே மகி ….என் நிலை உனக்கு புரிகிறதல்லவா ….அத்தனைக்கும் காரணம் என் அளவில்லாத காதலே ..99நான் உன்னை மனமார காதலிக்கிறேன் மகிழினி ….உன்னை பார்த்தவுடன் நான் அனுபவித்த மயக்கம் ….அது என் வாழ்நாளில் நான் அனுபவித்திராதது ….

உன்னை ,உன் பண்புகளை மிகவும் விரும்பினேன் ….எழிலுக்காக உன் மேல் என் மரியாதையும் காதலும் கூடியதே தவிர ….எப்பொழுதும் என் காதல் குறைய நீ வாய்ப்பளிக்கவே இல்லை ….அதனாலேயே நீ எதற்கும் என்னை தேட வேண்டும் என விரும்பினேன் ….

நான் இருக்கும் பொழுது நீ ஆறுதலுக்காக என்னிடம் தானே வந்திருக்க வேண்டும் ….ஏன் விட்டு விட்டு போனாய் ….என்ற கோபம் தான் என் பலவீனம் மகிழி…. உன்னை பார்த்த பின்பு எனக்கு எப்பொழுதுமே காதல் காலம் தான்….” என

மகிழி ,”அகில் ….”என ஓடி வந்து அவனை கட்டிக் கொண்டவள்

“ஐ லவ் யூ அகில் ….அப்போ உங்களை பிரிந்து போனதற்கும் ….இப்போ திரும்பி வந்த்தற்கும் ஒரே காரணம் தான் அகில் ….உங்க மேல இருந்த பொச்சிவினெஸ் தான்…. அது உங்களை இவ்வளவு காயப்படுத்தும்னு தெரியாமல் போச்சு ….சாரி அகில் ….”என

இருவரும் கட்டிக் கொள்ள ….அலுவலக அறை முதலிரவு அறையாகியது ….தன் குழந்தைகள் கொடுத்த தழும்புகளை ரசித்து அவன் முத்தமிட ….மூன்றாம் உலகத்தில் இருவரும்….

அதற்குள் சுமிரே அறை குறையாக புரிந்து ….எல்லோரிடமும் “அகிலுக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு ….அதனால் மகிழி நியாயம கேட்க போனாள் ….”என

அனைவரும் அகிலின் அலுவலக அறை வெளியே கூடி இருக்க ….உள்ளே இருந்து கேட்ட மகிழியின் அனத்தல்கள் ….அவள் அடி வாங்குவதாய் திரித்து சொல்லப்பட ….கதவை நிஷி முராவும் ….ராஜீவும் தட்டோ தட்டென்று தட்ட ….

வழக்கம் போல அசடு வழிந்தவாறு அகிலும் ,மகிழியும் வர ….அவர்கள் கலைந்த தோற்றம் ….ஏதேதோ கதை சொல்ல ….இப்பொழுது அசடு வழிவது அனைவரின் முறை ஆயிற்று ….

நிஷி முரா சுமிரேவின் தலையில் நங்கென்று கொட்டு வைக்க…. வசந்தா “ஏய் பிள்ளையை அடிக்காத டா “என

அடுத்து பெயர் வைக்கும் விழா இனிதே நடந்தது ….மகளுக்கு ஸ்ருதி விசாலாட்சி என ஸ்ருதி பெயரும் மகியின் அம்மா பெயரும் சேர்த்து வைக்க வசந்தி நெகிழ்ந்து போனார்….

மகனுக்கு விஜய ராஜன் என பாட்டி பெயரும் ….மகியின் தந்தை பெயரும் சேர்த்து வைக்க ….தாத்தா மனம் நிறைந்து போனார்….

அன்று வசுவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்க ….அதை சாக்கிட்டு அனில் குடும்பத்தினர் வரவில்லை….

மகிழியை ஏற்றுக் கொள்ளாத அனிலா ….தன் மருமகளை நேசிப்பதும் கீழே விடாமல் திரிவதும் விசித்திரமே.

அகிலுக்கும் ,மகிழிக்கும் இது காதல் காலமடி சகியே……

——————-/————-/——/
இருபத்து மூன்று வருடங்கள் கழித்து….

வசந்தா தனது ,மருத்துவமனையை தன் உதவி மருத்துவர்கள் மூலம் நடத்திக் கொண்டு ….இங்கே பேரப் பிள்ளைகள் வளர்ப்பதில், முழு மனதுடன் ஈடுபடலானார் ….

இப்பொழுது அவர் மருத்துவமனையை ,அவர் மூத்த பேரன் எழிலன் பார்த்துக் கொண்டு இருக்கிறான்…. தனது நூற்றுக்கணக்கான இதர மருத்துவமனைகளோடு சேர்த்து….

அகிலிற்கு தொழிலில் உதவியாகவும்… வீட்டில் நல்ல குடும்ப தலைவியாகவும் மகிழி செயல்பட….விஜய ராஐன் அவன் பெற்றவர்களை பின்பற்றி ,குடும்ப தொழில்களை நடத்துகிறான்….

தாத்தா ஒரு வருடத்திற்கு முன் …வயதின் தள்ளாமையில் ,தன் தூக்கத்திலேயே,இதழில் பெருமித சிரிப்புடன்… இறைவனடி சேர…

அவர் இறப்பிற்கு, அவர் ஆசைப்படி அகில் அனைத்து கடமைகளும் செய்ய …..அகிலின் பெற்றோர் எட்டி நின்று யாரோ போல கலந்து கொண்டனர்….
சிலர் அப்படித் தான்…. வீண் பிடிவாதங்கள் ,கொள்கைகள் மூலம் வாழ்வை தொலைத்து விடுகின்றனர்….தொலைந்தது பற்றி உணர்வது கூட இல்லை….

அனிலாவும் ,ராஜீவும் மட்டும் அகிலோடு அனைத்து சம்பிரதாயங்களும் செய்தனர்….ராஜீவினால் ,அவன் அனிலாவின் வாயை கட்டி வைத்திருப்பதால் …

அனிலுக்கு அவன் மனைவியரை சமாளிக்கவே நேரம் சரியாக இருக்க அவன் வரவில்லை.

அகில் பிள்ளைகளுக்கு, அத்தை மாமா ,அத்தான்கள் என அவர்கள் உறவு மட்டும் நிலைத்தது…..வசந்தாவின் கவனிப்பிலும், மகிழினி ,அகிலின் கண்டிப்பிலும் பிள்ளைகள் மூவரும் வைரமாய் ஜொலித்தனர்….

அகில் தொழிலிலும், சிகரங்கள் தொட்டு …வெற்றி தமிழனாய் வலம் வர ….அவன் பின்னிருந்து அவன் முதுகெலும்பாய் …அவன் மனைவி அவனை ஆட்டுவிக்க ….

அகிலை கண்டு பொறாமை படாதவர்களே இல்லை….ராஜீவ் தகுந்த நேரத்தில் விழித்து எழுந்ததால், தன் வாழ்வை காப்பாற்றிக் கொண்டான்….

அவன் மதிப்பு அனிலா உணர்ந்து விட்டதால் ….குறைவில்லா மகிழ்ச்சி அவர்கள் இல்லத்தில்… அவர்கள் இரு மகன்களையும், ராஜீவின் பெற்றோர் அவனைப் போலவே தங்க குணத்துடன் வளர்த்து விட்டிருக்க….

அவர்கள் இருவரும் இப்பொழுது …அப்பாவின் தொழிலை கையிலெடுத்து….திறம்பட நடத்து கின்றனர்….

அனில் மட்டுமே இன்றும் கரும் புள்ளியாய்….

அவன் மகன்கள் இருவரையும் ஹாஸ்டலில் சேர்த்து விட்டிருந்தான்…. அதனால் அவர்கள் ஒழுங்காக வளர ….பெற்றொருக்கு தெரியாமல் பெரியப்பா, பெரியம்மா வழி காட்டலில் அவர்களும் பண்பட்ட நிலமாக வளர்ந்திருந்தனர்….

லக்ஷ்மியின் மகன் ஐ ஏ எஸ் பாஸ் பண்ணி இருக்க ,வசுவின் மகன் எழிலனின் கீழ் பயிற்சி மருத்துவராய் இருக்கிறான் ……

அனிலின் இரு மனைவிகள் பிக்கல் பிடுங்கலில்…. அவன் அடிக்கடி ஒவ்வொரு ஆசிரமம் ஆசிரமமாக துறவு மேற்கொண்டு ,செல்வதும் …..அவர்கள் இருவரும்,அனிலை கண்டு பிடித்து ……கூட்டி வந்து பேசியே சாகடிப்பதும்…. உலகறிந்த வரலாறு….

இன்று ஸ்ருதி விசாலாட்சிக்கு திருமணம் …..அனைவரும் மனமார மகிழ்ந்து ,வாழ்த்த நடந்தேறியது ….

வசந்தாவை கட்டிக் கொண்டு, புகுந்த வீடு போகும் முன் ….அவள் அழுத அழுகையில், அவர் தான் பெண்ணின் அம்மாவா?!!!…. என கேட்கும் வண்ணம் அங்கு பாசப் போராட்டம்

நான்கு அண்ணன்கள் ,இரண்டு அத்தை பையன்கள் …என மொத்த குடும்பத்தின் ஒரே பெண் வாரிசான அவளின் திருமணத்தை பார்த்தவர்களுக்கு அவ்வளவு ஆச்சரியம் ….

ஆறு ஆண் பிள்ளைகளும் தங்கள் குட்டி தேவதைக்காக ஓடி ,ஓடி தங்கள் பதவி …கெத்து…விட்டு வேலை செய்ய…அகிலும் ,மகிழியும் எட்டி நின்று பார்த்து திருப்தி பட்டனர்…

மணமகனுக்கு தான் ஏக கலக்கம் ……

ஆறு ஆண் பிள்ளைகள், மொத்தமாக சேர்ந்து ….

“எங்கள் விசாலிக்கு… ஏதாவது என்றால் …அவ்வளவு தான்…”, என மிரட்ட ….தன் உள்ளம் கவர்ந்த ….

அந்த மாசற்ற பொன்னிற்காய் ,இந்தியப் பொண்ணிற்காய்…..தாங்கிக் கொண்டான்… கட்சூட்டோ நிஷிமுரா …..

அகில் ,மகிழிக்கு பரம திருப்தி ….தங்கள் பார்வையிலேயே வளர்ந்த செல்ல பையனாயிற்றே….

அவன் சுமிரே ,நிஷிமுராவின் தத்து பையன்…. நிஷிமுராவின் ஒன்று விட்ட அண்ணனின் மகன்…. அவர்கள் ஒரு விபத்தில் தவறிவிட…. நிஷிமுராவிடமும் சுமிரேவிடமும் வளர்ந்தவன்…

சிறு வயதிலேயே அவன் ஐ க் யூ லெவல் அதிகமாக இருப்பதை கண்டறிந்த ….சுமிரேவும், நிஷிமுராவும் அவனை சரியாக வழிநடத்த ….இன்று தனது சொந்த முயற்சியில் ,எலக்ட்ரிக் காரில் புது ரகம் கண்டறிந்து …..சொந்த கார் மேனு பேக்ச்யூரிங் கம்பனி நிறுவி…. அதன் மூலம் உலக கோடிஸ்வரனாகியவன் ….

ஒரே பார்வையில் …தன் நாட்டிற்கு படிக்க வந்த ….,தன் தங்கையின் உயிர் தோழியான ….

அந்த காம்பக்ட் சைஸ்…. குட்டி தேவதையிடம் விழுந்துவிட ….அகிலை ,மகிழியை விட அவன் பெற்றோரை கன்வின்ஸ் செய்வது தான் அவனுக்கு பெரும் பாடாகியது….இவ்வளவு தாண்டி… அவளை மணக்கிறான்….

பின்னே இருவருக்கும் வயது வித்தியாசம், ஏழு வருடங்கள் அல்லவா ….அவர்கள் நாட்டில்…. இது மிகப் பெரிய வயது வித்தியாசம்…தன்னை விட ஏழு வருடங்கள் சிறிய பெண்ணின் மேல் …அவன் காதல் இன்று திருமணமாய்….கனிந்தது….

இது மட்டுமல்ல ….எப்பொழுதும்…. மனமார நேசிப்பவர்களுக்கு….காதல் காலமடி சகியே….

முற்றும்…….

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *