இது காதல் காலமடி சகியே21

This entry is part 22 of 35 in the series இது காதல் காலமடி சகியே

இது காதல் காலமடி சகியே

இது காதல் காலமடி  சகியே

இது காதல் காலமடி சகியே

இது காதல் காலமடி  சகியே1

இது காதல் காலமடி சகியே1

இது காதல் காலமடி  சகியே2

இது காதல் காலமடி சகியே2

இது காதல் காலமடி  சகியே3

இது காதல் காலமடி சகியே3

இது காதல் காலமடி  சகியே4

இது காதல் காலமடி சகியே4

இது காதல் காலமடி  சகியே5

இது காதல் காலமடி சகியே5

இது காதல் காலமடி  சகியே6

இது காதல் காலமடி சகியே6

இது காதல் காலமடி  சகியே7

இது காதல் காலமடி சகியே7

இது காதல் காலமடி  சகியே8

இது காதல் காலமடி சகியே8

இது காதல் காலமடி  சகியே9

இது காதல் காலமடி சகியே9

இது காதல் காலமடி  சகியே10

இது காதல் காலமடி சகியே10

இது காதல் காலமடி  சகியே11

இது காதல் காலமடி சகியே11

இது காதல் காலமடி  சகியே12

இது காதல் காலமடி சகியே12

இது காதல் காலமடி  சகியே13

இது காதல் காலமடி சகியே13

இது காதல் காலமடி  சகியே14

இது காதல் காலமடி சகியே14

இது காதல் காலமடி  சகியே15

இது காதல் காலமடி சகியே15

இது காதல் காலமடி  சகியே16

இது காதல் காலமடி சகியே16

இது காதல் காலமடி  சகியே17

இது காதல் காலமடி சகியே17

இது காதல் காலமடி  சகியே18

இது காதல் காலமடி சகியே18

இது காதல் காலமடி  சகியே19

இது காதல் காலமடி சகியே19

இது காதல் காலமடி  சகியே20

இது காதல் காலமடி சகியே20

இது காதல் காலமடி  சகியே21

இது காதல் காலமடி சகியே21

இது காதல் காலமடி  சகியே22

இது காதல் காலமடி சகியே22

இது காதல் காலமடி  சகியே23

இது காதல் காலமடி சகியே23

இது காதல் காலமடி  சகியே24

இது காதல் காலமடி சகியே24

இது காதல் காலமடி  சகியே25

இது காதல் காலமடி சகியே25

இது காதல் காலமடி  சகியே26

இது காதல் காலமடி சகியே26

இது காதல் காலமடி  சகியே27

இது காதல் காலமடி சகியே27

இது காதல் காலமடி  சகியே28

இது காதல் காலமடி சகியே28

இது காதல் காலமடி  சகியே29

இது காதல் காலமடி சகியே29

இது காதல் காலமடி  சகியே30

இது காதல் காலமடி சகியே30

இது காதல் காலமடி  சகியே31

இது காதல் காலமடி சகியே31

இது காதல் காலமடி  சகியே32

இது காதல் காலமடி சகியே32

இது காதல் காலமடி  சகியே33

இது காதல் காலமடி சகியே33

இது காதல் காலமடி  சகியே34

இது காதல் காலமடி சகியே34

அத்தியாயம் 21

மாடிக்கு சென்ற மகிழி அகிலும், எழிலும் பாத் டப்பில் நீர் நிறைத்து சேர்ந்து விளையாடுவதை பார்க்க…,

தனக்கும் உற்சாகம் வர ஹேண்ட் ஷவரை எடுத்து அவர்கள் இருவர் மேலும் நீர் தெளித்து விளையாடினாள்…

நன்றாக? குளித்து பின் எழில் ,”நான் ஜீவன் அண்ணா கூட படிக்கப் போகிறேன் “.என ஓடி விட்டான். ..

அவன் நகர்ந்ததும் மகிழியை இழுத்து கட்டிலில் சாய்த்த அகில், “உனக்கு நிறைய பாடங்கள் சொன்னேன் அல்லவா .எங்கே குருதட்சணை” என, மகிழியை வம்பிழுக்க …

மகிழியோ, ” அதான் அப்பொழுதே புது டிரஸ் எல்லாம் என் செலவில் வங்கித் தந்தேனே . ..அது போகட்டும் எப்படி நீங்கள் இவ்வளவு கஞ்சமாக இருக்கிறீர்கள் ஆங் “.என..

” நானா, கஞ்சமா?! இது கடவுளுக்கே அடுக்காது அம்மா. நான் தான் எல்லாம் வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறேனே .”என ‘எல்லாம்’ என்பதை அழுத்திச் சொல்ல.. .

“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. ..ஒரு பூ அலங்காரம் இல்லாமல், சென்டட் கேண்டில்ஸ் கூட இல்லாமல். ..ஊதுவர்த்தி கூட இல்லாமல் ஏன் முதலிரவு வைத்தீர்கள் ….

ஆங் …நான் நம் முதலிரவு அறையில் ஒரு செல்பி எடுத்து போஸ்ட் கூட பண்ணவில்லை ….சுமிரே கூட நான் வைத்த பந்தயத்தில் தோற்றுப் போய்விட்டேன்.” என…

அகில்,” அது என்னடி பந்தயம்.. .பர்ஸ்ட் நைட் வைத்து மானம் கெட்ட பந்தயம்…” என..

வேகமாக தன் செல்போனை ஒப்பன் செய்தவள்,” இதோ பாருங்கள்.” என காட்ட…

ஒரு அழகான வெண்ணிற அறையில் ,மிதமான வெளிச்சத்தில் வாசனை மெழுகுதிரிகள் எரிந்து கொண்டிருக்க ,நடுவில் வெண்ணிற படுக்கையில் சிவப்பு ரோஜா இதழ்களில் அலங்காரம்… .

மெத்தையை சுற்றி மெல்லிய திரை என இருக்க …அறையின் ஒரு சுவர் முழுவதும் கண்ணாடியால் இருக்க அதன் வழி இரவு விளக்குகள் மின் மினியாய்…

நடுவில் சுமிரேவும் நிஷிமுராவும் வி வடிவத்தில் விரல் காட்டிக் கொண்டு இருந்தனர்…

“சுமிரே, பார்த்தாயா எங்கள் முதலிரவு அறையை என இதை காட்டி ரொம்ப கடுப்படித்தாள்… அதான் ஒரு உணர்ச்சி வேகத்தில் ,இதென்ன பிரமாதம் எங்கள் ஊரில் ஊதுபத்தி ,பழங்கள் ,பலகாரங்கள் வைத்து கட்டில் முழுதும் மல்லிகை ,முல்லை சரங்கள் நெருக்கமாக கட்டி தொங்கவிட்டு ,

படுக்கையில் முழுதும் மல்லிகை பரப்பி செய்வார்கள் பார் ஒரு அலங்காரம்… அப்பா அதில் ஒரு தடவை உருண்டால் போதும் நமக்கு வாசனை திரவியங்களே தேவையில்லை. ஒரு வாரத்திற்கு நம் குளிக்கவே தேவையில்லை .”என்று பேசினேனா என…

அகிலுக்கு காதல் காய்ச்சல் தெர்மாமீட்டர் வெடிக்கும் அளவுக்கு எகிறியது….

மகிழி முதலிரவு அறையை விவரித்த விதத்தில் அவனுக்கு அது கண்முன்னே காட்சியாக விரிந்து… அடுத்த கட்டமும் கனவில் வர விதிவிதிர்த்து போனான்…

இப்படி சொக்க வைக்கிறாளே, கணம் கூட என்னை சாதாரணமாக இருக்க விடுவதில்லை என….

செயல்களை விட.. வார்த்தைகளில் விரியும் கற்பனை சரசங்கள்.. நொடியில் உச்சமேற்றி விடும் மனித மனங்களின் அமைப்பு அப்படி…

அந்த மயக்கத்திலேயே அடுத்த கேள்விக் கேட்டான் ,”அலங்காரமெல்லாம் ஒகே நீ திரைபடங்களில் பார்த்தாருப்பாய்… உருண்டால் வாசனை வரும் என்பது தான் எப்படி உறுதியாக சொல்கிறாய் .”என..

“ஓ அதுவா நான் ஒரு 15 வயதில் இருக்கும் போது அப்பா நண்பர் வீட்டு திருமணத்திற்கு போனோமா.. .

அங்கே இரவு ஒரு அறையை அலங்காரம் செய்தார்களா .அங்கு எட்டி பார்த்தால் மிரட்டினார்கள் …அதனால் கோபத்தில், எல்லோரும் ரூமை பூட்டிக் போகும் வரை காத்திருந்து ..

மெல்ல அந்த அறைக்குள் போய்…”என இழுக்க

அகில்,”ம் அப்புறம்”என சுவாரசியமாக…

“அந்த கட்டிலில் நன்றாக உருண்டு பார்த்தேன்…

நல்ல வாசமாக இருந்தது…பின்பு எனக்கு பிடித்த இனிப்பு மட்டும் எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன் “.என..

சிரித்துக் கொண்டே,” சரியான ஆள் தான் நீ.. .சரி பந்தயம் எப்படி ம்.”என…

“நான் குடுத்த பில்டப்பில் கடுப்பானவள் …உடனே உன் முதலிரவு அறையை நீ சொன்னது மாறாமல் போட்டோ எடுத்து காட்டு நம்புகிறேன்.. .பதிலுக்கு உன் தேனிலவு செலவு என்னது. ..

என சொல்லி பந்தயம் கட்டினாள்…அப்படி இல்லை என்றால் நான் அவளுக்கு தேனிலவு ஏற்பாடு செய்ய வேண்டும்” என முகம் சுருக்க..

“ என்ன செய்ய மகிழ் …எனக்கு பொறுமை அவ்வளவு தான் .”என ..

ஒரே ஊடலும் கூடலுமாக அறை களை கட்டியது…

கீழே சாப்பிட போக வேண்டும் ,என எழிலை தேடிப் போனவர்கள் …அங்கே கண்ட காட்சியில் மனமுறுகி போயினர் வசந்தா தன் மடியில் எழிலை அமர வைத்து.. அருகில் ஜீவனை வைத்துக்கொண்டு கதை சொல்லிக் கொண்டிருந்தார்… .

இவர்கள் கதவை தட்டவும் நிமிர்ந்தவர் ,”நானே இருவருக்கும் ஊட்டி நானும் உண்டு விட்டேன்.. .நீங்கள் போய் சாப்பிடுங்கள்.. .இன்று என் அறையிலேயே இவர்கள் இருவரையும் படுக்க வைத்துக் கொள்கிறேனே.. .ப்ளீஸ் “.என

“அத்தை என்ன இது ப்ளீஸ் எல்லாம் கேட்டுக் கொண்டு. ஆங் நீங்களே இவர்கள் இருவரையும் இரவு உங்கள் கூடவே வைத்துக் கொள்ளுங்கள்.. .”என ..

மகிழியும்,” ஆமாம் அம்மா.. .இருவரும் உங்களிடமே இருக்கட்டும்.. .காலையில் பார்க்கலாம் எழில், ஜீவன் .பாய் “,என ..

அவர்கள் இருவரும் கை அசைக்க கவிதையாக அந்த பொழுது.. .

“சரி வறோம் மா.” என இருவரும் விடை பெற்று கீழே வர

தாத்தா முதல்… அனைவரும் ஒன்றாக கூடி இரவுணவை முடித்தவர்கள் ..அவரவர் அறை நோக்கி நடக்க முயல திடீரென ஒரு காட்டு கூச்சல் அங்கே.. .

என்ன விஷயம்?.. என அனைவரும் அங்கே விரைய …அங்கே ஒருவன் கத்திக் கொண்டு இருந்தான்…

“ஏன் நான் போக வேண்டும்… இன்று இந்த வீட்டில் உள்ளவர்களை பார்த்து நியாயம் கேட்காமல் போக மாட்டேன்.” என அடம் பிடித்துக் கொண்டு இருந்தான்…

அகில் முதலில் போய் ,”என்ன பிரச்சனை .ஏன் இப்படி கத்தி கொண்டு இருக்கிறாய் .”என..

“ஓ நீ தான் அவன் அண்ணனா ?எங்கே அவன் ?அந்த அனில் ஓடி ஒளிந்து கொண்டு இருக்கிறானா ?டேய் அனில் உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தால் என் பொண்டாட்டி கிட்டயே உன் வேலையை காட்டுவ.. .உன்னால தான் இப்பொழுது ஹாஸ்பிட்டலில் உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கா …அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு அப்புறம்இருக்கு உனக்கு .”என மிரட்ட …

அனில் ,”இவன் கிட்ட என்ன பேச்சு …எல்லோரும் உள்ள போங்க… ஏய் செக்யூரிட்டி ….இங்கே வா ,வந்து இவனை கழுத்துப் பிடிச்சு வெளியே தள்ளி கதவை சாற்று.. .”என கூடிய பஞ்சாயத்தை கலைக்க முயல ….

தாத்தாவின் கண்களுக்கு அனிலின் பதற்றம் பட ,’ஏதோ தவறு இவனிடம் உள்ளது ‘என புரிந்து விட்டது அவருக்கு…

தாத்தா ,”செக்யுரிட்டி நீ போப்பா …உனக்கு என்ன வேண்டும்?.. ஏன் இப்படி கத்திக் கொண்டு இருக்கிறாய் ?”என…

அனில் ,”இவனிடம் என்ன பேச்சு…. இவனை போக சொல்லுங்கள்.. .”என அவனை யாரும் பொருட்படுத்த வில்லை…

“இங்கே பாருங்கள் பெரியவரே. ..எனக்கு திருமணமாகி பத்து வருடங்கள் ஆகிறது. ..என் திருமணம் முடித்து அமெரிக்கா போனவர்கள்… ,இப்பொழுது தான் வந்தோம்….

நான் அங்கு ஒரு பெரிய மென்பொருள் கம்பெனியில் வேலை செய்கிறேன்… எனக்கு இரண்டு மகன்கள்….. இருவருக்கும் அந்த நாட்டு குடியுரிமைக்காக இந்தியா வராமல் …அங்கேயே தங்கி இருந்தோம் ….

இப்பெழுது தான் இருபது நாட்கள் மனைவி, பிள்ளைகளுடன் நிம்மதியாக சொந்த நாட்டில் இருந்து விட்டு போகலாம் என வந்தால்…

இந்த நாய் போனில் அலுமினி மீட்டிங்க் என்று மெசேஞ் அனுப்பி ,அவளை வரவழைத்து …எங்கள் திருமணத்திற்கு முன் இவர்கள் நெறுங்கிப் பழகியதை ..இவன் காதல் என்ற பெயரில் அப்பொழுது அளுடன் முறை தவறி சேர்ந்து இருந்ததை எல்லாம் வீடியோ வைத்திருப்பதாகவும் …

அவள் இவனுடன் ஒரு இரவாவது இருக்கவில்லை எனில்..

அதை என்னிடம் சொல்லி விடுவதாகவும் ,இணையத்தில் வெளியிடுவதாகவும் மிரட்டி….

திரும்ப அவளை படுக்கைக்கு அழைத்திருக்கிறான்… அவள் இவனுக்கு பயந்து மட்டி, மட்டி விஷம் குடித்து ஹாஸ்பிட்டலில் படுத்து விட்டாள்….

நானும் என் பிள்ளைகளும் அநாதை மாதிரி நிற்கிறோம். அவள் எழுதிய கடிதம் மூலம் விவரம் அறிந்தேன்….

அவளை இதற்காக இந்த தவறுக்காக விட்டு விட்டால் என் பிள்ளைகளின் கதி என்ன…

அடுத்து நான் மறுமணம் செய்தால் வருபவள் அம்மாவாக முடியுமா ?

அறிவு கெட்டவள் ..இந்த வெறி பிடித்தவனுக்காக சாக துணிந்து விட்டாள்….

எல்லாவற்றிற்கும் காரணம் இவன் தான் …இவனை கொன்றால் தான் என் ஆத்திரம் தீரும் .”என…

யாரும் எதிர்பாராத வேளை ,அனிலை இழுத்து நன்கு அடித்து …கீழே விழுந்தவனை மிதிக்க ,..

”ஐயோ விட்றா விட்றா. “என விஐயன் இடையில் பிடிக்க வர..

அவருக்கும் நாலு சாத்து விழ ….

இடையில் வந்த கமலா ,லக்ஷ்மி என அனைவருக்கும் அடி விழ …

தாத்தாவோ தடுக்க விரைந்த ,மகிழியின் கையை கட்டியாக பிடித்துக்கொண்டு ,”ஏம்மா உனக்கும் அடி வாங்க ஆசையா ?!”என கேட்டு ..

“விடு அகில் அனைத்தும் பார்த்துக் கொள்வான்…” என்றார்

அதன் படியே சடாரென அந்த புதியவன், பின்னே சென்ற அகில் அந்த ஆளை காரின் சீட் பெல்ட் போல கட்டி பிடித்துக் கொள்ள …

எட்ட நின்று பார்த்த மகிழிக்கு விசிலடிக்க வேண்டும் போல தோன்றியது …அகிலின் வேகமும் ,துல்லியமான அசைவுகளும்…

அப்படியே அகிலின் உடும்புப் பிடியில் ஆக்டோபஸை போல …அவன் திரண்ட கரங்களில் சிக்கியவனால் அசைய கூட முடியவில்லை…

அத்தனை பேரையும் அனாயசமாக சமாளித்தவனால் ,அகிலின் முறைப்படி களரி பயின்ற பிடியில் திமிரக் கூட முடியவில்லை…

இப்பொழுது அகிலின் பிடியில் இருந்தவனை ,விஜயன் ,கமலா ,அனில் ,லக்ஷ்மி என அடிக்க வர…

இப்பொழுது தடுத்தது அகில். “சும்மா இருக்க போகிறீர்களா இல்லையா…இவர் மேல் யார் கையாவது பட்டது நடப்பதே வேறு..” என்றவன் ..

புதியவனை நோக்கி ,“உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது …நீங்கள் சொல்வது உண்மையா என்று விசாரிக்க ஒரு பத்து நிமிடங்கள் மட்டும் கொடுங்கள் …

நீங்கள் சொல்வது மட்டும் பொய்யாக இருந்தால் “,என ஒரு விரல் காட்டி எச்சரித்தவன் …

“முருகா சாருக்கு ஜூஸ் கொடுத்து உட்கார வை. பத்து நிமிடங்களில் நான் வருகிறேன் .”என ..

விஜயன்,” இவனை ஏன் டா உட்கார வைத்து பேச வேண்டும் .அடித்து விரட்டு.” என

“ஆமாம் அகில்.” என கமலாவும் ..

“எவ்வளவு தைரியமாக நம் வீட்டுக்குள் நுழைந்து, நம் மேலேயே கை வைப்பார்.” என அவள் கணவன் அடி வாங்கியதை மொத்த குடும்பத்துக்கும் சேர்த்து சாமர்த்தியமாக லக்ஷ்மியும் பேச …

அனில்,” எல்லாமே சுத்த பொய் அண்ணா …”என

அகில் ,”எல்லோரும் அமைதியாய் இருங்கள் …பத்து நிமிடங்கள் அமைதியாய் இருங்கள் என சொன்னது உங்களுக்கும் சேர்த்து தான்.” என்று எச்சரித்தவன் ..

வேகமாக தன் அலுவலக அறைக்கு சென்று விட்டான். ..தன்பலத்தை உபயோகித்து அந்த புதியவன் சொல்வது சரியா ,என விசாரிக்க …

கீழே அனைவரும் ஆளுக்கு ஒரு ஓரத்தில் இருக்க…

அந்த புதியவனுக்கு அகில் அழுத்தி பிடித்த இடங்கள் தீயாய் எரிய உடம்பு தளர்ந்து ,ஏற்கனவே சாப்பிடாமல் இருந்தது வேறு பலவீனம் தர …அங்கு அவனுக்காக முருகன் வைத்து விட்டு போன நாற்காலியில் அமர்ந்து விட்டான்…

ஒரு பத்து நிமிடங்கள் கழித்து தாத்தா வெகு நேரம் நிற்பதை உணர்ந்தவளாய் மகிழி ,

“தாத்தா ரொம்ப நேரம் நின்னுட்டீங்க. உட்காருங்க .இல்லை ரூம் க்கு போறீங்களா .”என ..

லக்ஷ்மிக்கு வந்தது ஆங்காரம்,’இவள் புருஷன் ஆனால் வந்தவனை அடித்து விரட்டாமல் உட்கார வைத்து உபசாரம் செய்கிறான் … இவளுக்கு இந்த கிழவன் நிற்பது தான் உலக கவலை’என தோன்ற தன்னிலை மறந்தாள்….

” மகிழி என்ன பேசிக் கொண்டு இருக்கிறாய் .ஆங் “…என

“இல்லை அக்கா …தாத்தாவிற்கு கால் வலிக்கும் இல்லையா ,அதான் போகச் சொன்னேன் …இங்கு எல்லாவற்றையும் அகில் பார்த்துக் கொள்வார்.” என …

“அகிலத்தான் என்ன பார்க்குறது ?குடும்பத்தின் பெரியவர் மாமனாரோ இல்லை தாத்தாவோ பேசினால் சரி.. .உன் கணவர் ஏன் பேச வேண்டும்…” என …

‘உன் கணவர் ‘என்றதும் கோபம் கொண்டு மகிழ் பேச வர..

தாத்தா,” வாயை அடக்கி பேசு …லக்ஷ்மி”என தாத்தாவே பதில் பேசி விடவும் மகிழிஅமைதியானாள்….

“ஏன் என்னை சொல்கிறீர்கள் …அகிலத்தான் என்ன ஒரு வயது மட்டும் தானே அனிலை விட மூத்தவர் …” என மேலும் பேச …

மகிழி ,”ஒழுங்காக பேசுங்கள் அக்கா …உங்கள் கணவர் மேல் தான் பழி வந்திருக்கிறது …அதற்காக தான் இந்த பிரச்சனையே “என வார்த்தையை விட….

சும்மாவே ஆடிக் கொண்டிருந்தவள் ,”நீ எப்படி டீ பிள்ளை பெத்த ..?அகிலத்தான் மனைவி உயிரோடு இருக்கும் போது தான .?..உன் லட்சணம் எனக்கு தெரியாதா …வந்து விட்டாள் பெரிய மனுநீதி சோழன் இவள்….”என

அனைவரும் விக்கித்து நிற்க ,

”லக்ஷ்மி “என கோடை இடி போல் அந்த இரவு நேரத்தின் அமைதியில் கர்ஞ்சித்தான் அகில்…கேட்டவர்கள் அனைவருக்கும் உடல் அந்த ஒலி அலையின் தாக்கத்தால் அதிர்ந்து அடங்கியது…

“ என் மனைவி பற்றி பேச உனக்கு யார் உரிமை கொடுத்தது. ..ஆம் என் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது தான் மகிழ் குழந்தை உண்டானாள்…

ஆனால் முழு காரணம் நான் தான் ..நான் மட்டுமே தான் போதுமா ..சின்ன பெண் அவள் அப்பொழுது அவள் ஒழுக்கத்தை பற்றி பேசினீர்கள் அவ்வளவு தான்…”என இப்பொழுது அதிர்ந்து சிலையாகவே ஆகிவிட்டனர் அனைவரும் ….

“நான் என்மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என நைந்து இருந்தபோது ,வாழ்வை வெறுத்து அலைந்த போது, நான் தவறியதால் நடந்த பிழை இது…

நான் மணமானவன் என அறிந்ததும் இவள் பிரிந்து போய் விட்டாள்…முன்பின் யாரென்றே தெரியாத ஒருத்தியின் வாழ்வுக்காக ,தான் ஒழுக்கம் தவறியவள் என்ற பெயருடன் பிரிந்து சென்றாள். ” என ..

தன் தலை மேல் போட்டுக் கொள்ள ,அது வரையிலும் குழம்பி நின்ற மகிழி ,

‘ஓ இது நாம் ஏற்கனவே பேசி வைத்த கதை ‘,என தெளிந்தாள்…

கூச்சல் கேட்டு பிள்ளைகளை படுக்க வைத்து விட்டு வந்த வசந்தி ,’நல்ல வேளை நாம் பழையதை சொல்லி அகிலை குழப்பவில்லை அவன் மகிழியுடன் நன்கு இணக்கமாக தான் இருக்கிறான் .’என திருப்தியாகினார்…

பிறகு ஒரு நாள் ஏன் சொல்லாமல் விட்டோம் என வருந்த போவது தெரியாமல்…
அடுத்து அனில் நிலை?!…

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *