9—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

1---உயிரின் உயிரே காத்திருக்கிறேன்

1—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

1—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

2—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

2—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

3—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

3—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

4–உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

4–உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

5—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

5—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

6–உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

6–உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

7—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

7—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

8___உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

8___உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

9—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

9—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!


உயிரே***9

“ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாய் ப்ரசோதயாத்” என்ற சாய்பாபாவின் காயத்ரி மந்திரத்தை… மகா கண் விழிப்பிற்காக மனதிற்குள் நம்பிக்கையுடன் உச்சரித்துக் கொண்டிருந்தாள் உமா. அவளது அருகில்… ஈஸ்வர்… சுந்தரம்… மற்றும் மாரியம்மாளும்… மருத்துவமனையில் படுத்த படுக்கையாக கிடக்கும் மகாலட்சுமி… கண் விழிப்பதற்காக, தவமாய் காத்து அவளது அருகில் கொண்டிருந்தனர்.

வசீ!… “நீ ஏதாவது பேசு! மகாவின் மனதில் உள்ள நினைவுகளை தட்டி எழுப்பும் படியாக செய்…” என்று, பவித்ரன்…. ஒரு மருத்துவராகவும், சக மனிதராகவும்… மனிதர்களின் மனதை அறிந்தவனாய்… அவள் மனதில் உள்ள ஏக்கங்களை தெரிந்துக் கொண்டான். “வாங்க… எல்லாரும் கொஞ்சம் வெளியே இருப்போம்… “என்று பவித்ரன் அவர்களை அழைத்து  செல்லவும்….. மகாவின் பக்கத்தில் வந்தமர்ந்தான் வசீகரன்.

அவளது தலையினை வருடியவனின் இதழ்கள் நெற்றியில் முத்தம் இட்டன. பிறகு கன்னங்களின் இருபக்கமும் முத்தமிட்டு.. அவளது வெண்டைக்காய் போன்ற… பிஞ்சு விரல்களை பிடித்து… தன் கன்னங்களில் வைத்துக் கொள்ள… கண்களில் கண்ணீர் உற்பத்தியானது.

“மகா!… ஏன்டி.. இன்னும் என்னை பார்க்க மாட்டேன் என்கிறாய்? உன் குரலை கேட்டு ஒரு வாரம் ஆச்சு டி!….” என்று அவளது பூ போன்ற கைகளில், முகம் புதைத்து கொண்டான்..

தீராத சோகத்தை ஜீரணிக்க முடியாமல்… இமை மூடி கவலைகளில் மூழ்கி… ஆழ்ந்த உறக்கத்தில் சஞ்சரித்து கொண்டிருந்தாள். வசீயின் தொடுதல், உருக்கமான பேச்சு
இவையெல்லாம்….மகாவிற்கு இழந்த நினைவை மீட்டு கொண்டு வந்தது. அதனை அறியாமல் அவளுடன் பேசி கொண்டிருந்தான் வசீகரன்.

“என் அருகில் நீ வேண்டும் டி!… நீயில்லாமல் நான் இல்லை என்பதை… இந்த ஒரு வாரத்தில் நான் உணர்ந்தேன். என் உயிர் என்னிடம் இல்லை… பைத்தியம் போல உன்னை தேடி அலைந்தேன்….” என்ற வார்த்தைகள்.. அவனுடைய துயரங்களை அவளுக்கு பறைசாற்றியது.

“யார்… என்ன சொன்னாலும் பரவாயில்லை. நீ என்னருகில் வேண்டும். நீ என் மனைவி…. எனக்கானவள் மட்டும் தான்…வேறு யாரையும் நான் பங்கு போட விடமாாட்டேன். இனி அந்த ராஜா… என்ன செய்து விடுவான் என்று நானும் பார்க்கிறேன்…?” என்றதும்…. கனவாகி போன தன்னுடைய வாழ்வு மீண்டதை எண்ணி….


நிம்மதியாக மூச்சு விட்டாள்… அடுத்து அவனுடைய வார்த்தையால் உயிர் கூட பறி போய் விடும் நிலைமை தெரியாமல்… மகிழ்ச்சியாக கண் திறக்க முயன்றாள்.

“உன்னை…. அந்த கோலத்தில் சத்தியமாக நான் எதிர்பார்க்கல டி!. எனக்கு வந்த கோபத்திற்கு அந்த விஐய்யை… அங்கேயே கொலை பண்ணிருப்பேன். உனக்கு என்னவானது…? என்ற கவலையில், அவனை அடித்துபோட்டு விட்டு…..
அங்கிருந்து உன்னை தூக்கி வந்துவிட்டேன்…” என்று ஆதங்கத்துடன் அவன் பேசி கொண்டிருக்க.. அவளது நெஞ்சை யாரோ…. இரண்டாக கூறு போடுவது போன்றிருந்தது.

ஒருவேளை, அந்த ராஸ்கல் என்னை… என் அனுமதியின்றி என் உயிரிலும் மேலான…என் மாம்ஸ்காக இவ்வளவு நாள் பாதுகாத்த பெண்மையை அவரின் உதிரத்துடன்… ஒரு அழகான குழந்தையை எங்களின் காதலின் சின்னமாக பெற்று எடுக்கலாம் என்ற கனவை.. அந்த பாவி… எ… எ… என்னை கெடுத்துவிட்டானா?

மாம்ஸ் மாதிரி.. அப்படியே… குறைந்தது ஐந்து குழந்தையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்றிருந்தேனே!… எதை இழக்க கூடாதோ?… அதை இழந்திட்டேனே! இனி எப்படி நான் மாமாவுடன் வாழ முடியும்.. என அவளது கண்களிலிருந்து கண்ணீர் கரைந்தேடியது… எதார்த்தமாக நிமிர்ந்து அவளது முகத்தை கண்டவன்… அடைந்த ஆனந்ததிற்கு எல்லையே இல்லை…

‘மகா! மகா!’ என வட்டமாக இருந்த நிலவு முகத்தை மென்மையாக பற்றியவன்… “கண்ணை திறந்து என்னை பாருடி!…” என கெஞ்சினான்.

மாட்டேன்…. உங்கள் முகத்தில் முழிக்கும், அருகதையை கூட நான் இழந்துவிட்டேன். இனி எக் காலத்திலும், உங்களுடன் நான் சேர முடியாது… ஆயிரம் குறைகளுடன் கூட…. நான் தான் முக்கியம் என நீங்கள் ஏற்றுக் கொண்டாலும்… என்னால் முடியாது. அதனால் என்னை மன்னித்து விடுங்கள். என்ற முடிவுடன்…. அப்பா…. அப்பா… என்று தாமரை மொட்டு போன்றிருந்த பூவிதழை அசைத்தாள். 

அவள்…. எப்போது கண் விழிப்பாள். எப்போது அவளது குரலை கேட்போம் என ….ஏங்கி தவித்த மனதிற்கு… பூவிதழ் திறந்து சிறு வார்த்தை அசைத்து.. அவள் உச்சரிக்க, இளையராஜாவின் இசை மழையில் நனைந்த திருப்தி அவனுள் இருந்தது.

மகாவிற்கு நினைவு திரும்பி விட்டது.. அவள் பேசி விட்டாள் என்றதும்… மகா!… மகா! என்று கைகளை பற்றி…. தொடர்ந்து முத்தம் கொடுத்தான். அவள் மீண்டும்…. அப்பா! என்றாள்…

பற்றிய கையை பிடித்த படி, “தன்னை அழைக்காமல் அவளுடைய தந்தையை அழைத்தது….. அவனது சிந்தையில் உனக்காக நான் ஏங்கும்… ஏக்கம் தெரியவில்லையா” என்று கண்களால் அவளிடம் பேசினான்.

வெளியில் உள்ளவர்களை அழைக்க… ‘அப்பா…’ என்று கண்களில் கண்ணீருடன் படுத்திருந்த.. மகாவை கண்டதும்…

“என்ன மன்னிச்சுடு மா! அப்பா உன்னை நரகத்தில் தள்ளிவிட்டேன். உனக்கு மட்டும் ஏதாவது என்றால்… என்னால் உயிருடன் இருந்திருக்க முடியாது..” என ஈஸ்வர்… கவலையுடன் பேசினார்.

“அவர்களை போலீஸில் பிடிச்சு கொடுக்கனும்… மாப்பிள்ளை..” என சுந்தரம் சொன்னவுடன்… …

‘வேண்டாம்’என மறுத்துவிட்டான். அந்த வீட்டில்,  இக்கட்டான சூழ்நிலையில் அவளை  காப்பாற்றியது நினைவு வர, வெளியில் சென்றுவிட்டான் வசீகரன்….

“அப்பா!…. உங்களுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்திருக்காங்க,. அதனை காரணமாக காட்டி… எ… என்னை மிரட்டி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்தான்…. அந்த ராஜா… அவன் என்னை..” என்றவுடன் 

“வேண்டாமா!… விட்டுவிடு அப்பாவிற்கு  ஒன்றுமில்லை..  அதற்கான ட்ரீட்மெண்ட் நடந்து கொண்டிருக்கிறது, இரண்டு நாளுக்கு முன்பு தான் அதனை கண்டுபிடித்தோம்…. என மகாலட்சுமிக்கு  ஆறுதல் கூறினாள்… உமா.

அந்த சமயம் மீண்டும்  தன்னை சமன் செய்து கொண்டு, உள்ளே நுழைந்தான் வசீகரன். அவளது வார்த்தைகளை கேட்க… தவறி விட்டான்.

அவள் சம்மதித்து, தான் இந்த திருமணம் நடந்தது என்று கேள்வி பட்டும், அவனுடைய  மனமோ???…. அதனை ஏற்க மறுத்தது. அவளுக்கு ஏதோ ஆபத்து என்ற எண்ணம் மட்டும் தோன்றிக் கொண்டிருக்க…
எப்படியே…அலைந்து திரிந்து.. தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கில்… தீயாய்… செயல்பட்டு, அவளை அங்கிருந்து காப்பாற்றினான் வசீகரன். 

“மகா!… கூடிய சீக்கிரம் உனக்கும், வசீக்கும் திருமணம். நாங்கள் எல்லாம் முடிவு செய்துள்ளோம்.. நீ ஆசை பட்ட வாழ்க்கையை நீ வாழ வேண்டும்மா..” என ஈஸ்வர் மகிழ்ச்சியுடன் அவளது தலை கோதினார்.

“எனக்கு மறுபடியும் கல்யாணம் வேண்டாம் மா? நான் இப்படியே… என அவள் கண்ணீரில் கரைய தன் தலையில் இடி விழுந்தது போல.. மனதிற்குள்  மருகி கொண்டிருந்தான். ஆண் பிள்ளை ஆழக் கூடாது என்பதற்காக தன் உணர்வுகளை கட்டு படுத்தி கொண்டிருந்தான்…

அவளுக்கு பிடித்தமான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தால் சீக்கிரம் … ஆரோக்கியமாகி விடுவாள் என்ற எண்ணத்தில்… பேசினால்… அவள் கல்யாணமே… வேண்டாம் என்று மறுத்து விடவும் ஈஸ்வர்… அதிர்ச்சியானார்.

“என்ன?… மகா கண்ணு, ஆச்சி உன்னை நல்லா  பார்த்துக்கிறேன்டி…. நீ வாடி.. வீட்டுக்கு போலாம்…” என்றார் மாரியம்மாள்.

“இல்ல மாரியம்மா, உன் பையனுக்கு நல்லா பெண்ணா பார்த்து கட்டி வை…” என்றவளை, எல்லோரும் கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தனர்.

“அப்போ.. அந்த அயோக்கியனை நினைச்சுட்டு, உன் வாழ்க்கையை நீ பாழாக்க போகிறாயா?…” என்று உமா வெகுண்டாள்…

“என் தலைவிதி… அது தான் என்றால் யாரால் மாற்ற முடியும்? எனக்கு கல்யாணமே இனி வேண்டாம். நான் மேற் கொண்டு படிக்க போகிறேன்.. என அவள் தன் முடிவை தெரிவித்தாள். எப்படி… அவளை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைப்பது என்று யோசித்து கொண்டிருந்தனர்…

“அம்மா!… இனி யாரும் மகாவை தொந்தரவு செய்ய வேண்டாம். அவள் ஒன்றும் சின்ன பிள்ளை கிடையாது. அவளது வாழ்க்கையை முடிவெடுக்கும் தகுதியும்… உரிமையும் அவளுக்கு உண்டு. அவள்…. சொன்னபடி, நீங்கள் எனக்கு வேறு ஒரு பெண்ணை பாருங்க!…. என்று வேக மூச்சுடன் அந்த  அறையினை விட்டு வெளியேறினான் வசீகரன்.

“வேறு ஒரு பொண்ணு, என் மாம்ஸ் பக்கத்திலா….. அத பார்க்கும் சக்தி எனக்கிருக்கிறதா?
என்னால் அது முடியாது..” என்று உள்ளூக்குள் தவித்த படி… கைகளை தலைக்கு கொடுத்து, மறு பக்கம் திரும்பி…தன் வேதனையை கண்ணீராய் வெளி படுத்தினாள் மகா.

“உன்னை தவிர வேறு, ஒரு பெண் எனக்கா? நமக்கு குழந்தை பிறந்தாலும்… நீ மட்டும் தான்டி. என் உயிர். இப்போதும்… எப்போதும் என அவன் ஒரு பக்கம் தன் மனதிற்குள் பேசிக் கொண்டிருந்தான்…

இருவரது உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்த.. மாரியம்மாளும், உமாவும் எதுவும் சொல்லாது…. மெளனமாக அறையிலிருந்த வெளியில் வர, அவர்களின் பின்னால் சுந்தரமும், ஈஸ்வரும் வெளியில் வந்தனர்.

“என்னமா? வசீ…. இப்படி சொல்லிட்டு போறான். அப்போ என் பெண்ணோட வாழ்க்கை?…
எதிர்பாரத விதமாக இத்தனை கஷ்டங்களையும்… அவள் அனுபவித்து விட்டாள். இனி மேலாவது…அவள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று தானே… இன்னும், என் உயிரை கையில் படித்துக் கொண்டு இருக்கிறேன்” என உமா கதறி அழ… வாட்பாய் ஒருவன்… மகாவின் அறைக்குள் நுழைந்தான்.

“என்னடி மகா ராணி…. என்னிடம் இருந்து தப்பி விட்டதாய் நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால்…… உன் வாழ்வும், சாவும் என் கையில் மட்டும் தாண்டி….
உனக்கு, இனிமேல் என் நினைவை தவிர வேறு…. எந்த நினைவும் இருக்காது. புரியவில்லையா? என தன் கையில் கொண்டு வந்த, மருந்தை சிரஞ்சின் மூலம்… அவள் கையில் ஏறிக் கொண்டிருந்த… ட்ரிப்ஸில் செலுத்தினான் ராஜா.

“வேண்டாம்… அ… அம்.. அப்பா…” என கத்த முயன்ற அவளது வாயை மூடினான்….

எதற்கும்… நம்ம ஜோசியர் கிட்ட ஒரு வார்த்தை கேட்போம்…. நம்மால் சரி செய்ய முடியாத சில பிரச்சனைகளை எல்லாம், விதியின் வழியில் தான் வெல்ல முடியும்…. என்று வசீகரன் வந்தவுடன்…. அவன் வசம் மகாவை பார்த்து கொள்ளும் படி, கூறிவிட்டு, நால்வரும் கிளம்பிச் சென்றனர்.

ஒரு வாரம் கழித்து.. இன்று தான் அவள் வாய் திறந்து,.. பேசியிருக்கிறாள்.. எந்த மாதிரி வேதனையை அவள் அனுபவித்திருந்தால்… என்னையே வேண்டாம் என்று சொல்லுகிறாள். மகாவின் முகம் பார்க்க… மனம் ஏங்கியதால்… கதவை திறந்து உள்ளே செல்ல… அங்கு… அவளின் வாய் மூடின படி நின்றான் விஜய். அவனை தடுத்து அடித்த வசீகரனை தள்ளிவிட்டு… வெளியில் ஓடினான் ….

மூச்சு தினறலுடன்… உயிர்க்கு போராடிக் கொண்டிருந்தவளை, காப்பாற்ற வேண்டி… டாக்டரை அழைக்க… உடனடியாக சிகிச்சை மேற் கொள்ள பட்டன. அரை மணி நேர… போராட்டத்திற்கு பிறகு.. மீண்டும் இயல்பானாள். அவளின் அருகில் அமர்ந்திருந்த வசீகரனின் தோலில் கை வைத்தான் பவித்ரன்.

“போலீஸ் கம்பெளண்ட் கொடுக்கலாம்? … அவனை சும்மா விட கூடாது… வசீ..” என பவித்ரன் ஆதங்க படவும்…

“என்னவென்று கொடுப்பாய்…. வீணாக மகாவிற்கு தான் சங்கடம். அதற்காக…. நான் அவனை சும்மா விடமாட்டேன் பவி….” என கண்ணீல் அனல் பறக்க… வார்த்தைகளை கடிந்து துப்பினான்.

“நினைவிழக்க… செய்யணும்னு இதனை மகாவின் உடலில் செலுத்தியிருக்கான் வசீ… என்று அதனை வசீகரன் கையில் கொடுத்தான் பவித்ரன்.

இதை வைத்து, இனி நான் போடுற ஆட்டத்தை பாரு.. இந்த விஷயம்… நம்மை தவிர வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் பவி….தெரிந்தால் அவர்கள் கஷ்டபடுவார்கள்.. என கேட்டுக் கொண்டதால் பவித்ரனும்.. நடந்த விஷயத்தை மூடி மறைந்தான்.

பெரியவர்கள் நால்வரும்… ஜோசியர் வீட்டை அடைந்தனர். முதலில் மகாவின் ஜாதகத்தை கொடுக்க.. அதனை வைத்து… ஆராய தொடங்கினார்.

“இந்த பெண்ணின் பிறப்பு… அந்த சீதாதேவியே தான். பதிவிரதை, ஆனால் இவளுடைய கல்யாண வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் வரும்..” என்ற ஜோசியர் கணிப்பால்…. நால்வர் முகத்திலும் சோகம் எட்டி பார்த்தது… மீண்டும் தொடர்ந்தார்.

“இந்த, பெண்ணிற்கு இரட்டை தாரமிருக்கு….. முதல் தாரம் நிலைக்காது. இரண்டாவது தாரம் தான் நிலைக்கும்ன்னு… ஏற்கனவே…. நான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன். முதலில் அணிவித்த…. அந்த தாலியை கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்திவிட்டு, மூன்று மாதத்திற்கு பிறகு…. மீண்டும் ஓர் நல்ல நாளில்… மறு தாலியை அணிவிக்கலாம்..” என்றவுடன் தான் நால்வர் மனதும் நிறைந்தது.

“பார்த்து…. பக்குவமாக தான் இதனை செய்ய வேண்டும். ஏனெனில், இந்த பெண்ணிற்கு ஆபத்து நேரிட வாய்ப்புள்ளது…” என்றார் ஜோசியர்.

பிறகு, வசீகரனின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்ததில்… “இது ராமருடைய ஜாதக அம்சம். இவன்… நாளைய உலகையே ஆள்வான் என்றவர். மகா தான் இவனுடைய பதிவிரதை… இருவருக்கும் தான் திருமணம் முடியும். அதில் நிறைய சிக்கல் உள்ளது. திருமணம் நடக்காவிட்டால்…. இந்த பெண்ணிற்கு மரணம் நேரிடலாம்..” என்றார்.

“என்ன ஜோசியரே!. நீங்களே… இப்படி சொல்லுறீங்க?…” என்று சுந்தரம் கேட்க…

“விதியை மதியால் வெல்ல முடியும். அதை பற்றி…. நீங்கள் கேட்டதுண்டு அல்லவா?…” இது தான் விதி. நல்லபடியாக கல்யாணத்தை நடத்துங்கள்…” என்று உத்தரவு கொடுத்தார். அவருக்கு வேண்டியதை தாம்பூல தட்டில்… பூ, பழங்களுடன் ரூபாயையும் வைத்து கொடுத்து விட்டு… விடை பெற்றனர்.

“மாமா! என்னை மன்னிச்சுடுங்க. என்னால் தான் மகாவின் வாழ்க்கையில் மட்டுமல்லாது… உங்களுக்கும்…. பெரிய அவமானத்தையும் நான் ஏற்படுத்திவிட்டேன்…” என்று தன் மகளின் கல்யாணத்தில் உள்ள சிக்கலை நினைத்து வருத்த பட்டார்…. ஈஸ்வர்

“எங்கள் மகன்…. தவறு ஏதும் செய்திருந்தால், நாங்கள் அதனை மன்னிக்க மாட்டோமா? அவ்வளவு இறுமாப்பாக இருந்து இந்த உலகை ஆள வில்லையென்றால் தான் என்ன?..” என்ற மாரியம்மாளின் கூற்றை ஒத்து கொள்வதாக தன் தலையை ஆட்டினார் சுந்தரம்.

“அதெல்லாம் நினைத்து… நீங்க வருத்தபடாதீங்க. இப்போது பிள்ளைங்க கல்யாணத்தை எப்படி நடத்துவது என்று தான் யோசிக்கணும்..” என்ற சுந்தரத்தின் வார்த்தைக்கு முன்னால்…தூசியாகி போனார் அவர்கள்… என்னதான் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டாளும், ஈஸ்வரின் மனசாட்சியே… தினமும் அவருக்கு தண்டனையை வழங்கி கொண்டிருந்தது…

“அட என்னடி, கண்ணீர் வடிச்சிட்டு இருக்க….. இதுவும் கடந்து போகும்டி.. இதுகளை ஒண்ணு சேர்க்க… இரண்டு பேரை வர வழைக்கிறேன்…” என்ற மாரியம்மாளின் தைரியமான பேச்சு.. சுந்தரத்திற்கு பொறி தட்டியது.

“உமா… உங்கம்மா ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டா?…. மாப்பிள்ள நீங்க கவலைய விடுங்க. பொம்பளைங்க ஆட்டத்தை ஆரம்பித்து விட்டால்….. அதில் ஆனையை பூனையாக்குவாங்க… பூனையை, யானை ஆக்குவாங்க…” என்று சுந்தரம் சொல்லி சிரிக்க…. அனைவர் முகத்திலும் சிரிப்பு தொடர்ந்தது. அதன் முதல் வேலையாக தன் கை போனை எடுத்தார் மாரியம்மாள்.

“அண்ணி… எப்படியிருக்கீங்க? நான் நல்லா இருக்கேன்.. வீட்டுல அண்ணா… பசங்க செளக்கியமா? என்று தன் மூத்த அண்ணிக்கு அழைத்து விட்டார்…. மாரியம்மாள்.

“நான் நல்லாயிருக்கேன் அண்ணி. உமா… வசீலாம் எப்படி இருக்காங்க? என்று நலம் விசாரித்தார்….. மூத்த அண்ணி ராஜசேகரின் மனைவி கற்பகம்.

“என்ன அண்ணி… என்ன விஷயமாக போன் செய்தீங்க? காரியமில்லாமல், நீங்க காயை நகற்ற மாட்டீங்களே! என்ற கற்பகத்தின் சரியான கணிப்பால்.. மாரியம்மாளுக்கு திக் என்றது.

“அதெல்லாம் இல்லை… நம்ம கோவில் திருவிழா வருகிறது அல்லவா? அதற்காக தான்…. உங்களை முதலில் அழைத்து விட்டு… பிறகு மங்கை அண்ணிக்கு தெரிவிக்கலாம் என்றிருந்தேன்…” என கற்பகத்தின் தலையில் ஐஸை வைத்தார். அதில் உருகி போய், நாலு நாளுக்கு முன்னமே… நான் வந்து விடுகிறேன் என்று போனை வைத்து விட்டார்.

அடுத்து, இரண்டாவது அண்ணியான… மங்கைக்கு கால் செய்தார். “அண்ணி நலமா? அண்ணா எங்க இருக்காங்க. என்ற மருமக… உள் நாட்டிலா? இல்லை வெளி நாட்டிலா?..” என்ற மாரியம்மாளின் கேள்விக்கு,

“இந்த வாரம் வந்திடுவா அண்ணி. அவள் வந்ததும்… கையோடு அழைத்திட்டு வந்துவிடுகிறேன்.. ” என சிரித்தாள் மங்கை.

“நீங்க எல்லாரும் திருவிழாவிற்கு, நம்ம வீட்டிற்கு வந்திடணும்… கற்பகம் அண்ணியும் வராங்க.. ” என்று சொன்னதும்…. நான் ஒரு வாரம் முன்பே வந்து விடுவேன் அண்ணி! என்று போனை வைத்தார் மங்கை.

இனி நல்ல படியாக வசீ, மகா.. கல்யாணத்தை நடத்திடலாம்
என மாரியம்மாள் உறுதியுடன் கூறினார்….

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *