4–உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

1---உயிரின் உயிரே காத்திருக்கிறேன்

1—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

1—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

2—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

2—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

3—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

3—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

4–உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

4–உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

5—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

5—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

6–உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

6–உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

7—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

7—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

8___உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

8___உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

9—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

9—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!


உயிரே ***4
“மகா கண்ணு….. புடவ மாத்திட்டியாத்தா? சீக்கிரம் கதவைத் திறத்தா….. எவ்வளவு நேரமாச்சு… என்று பூட்டிய கதவை பார்த்து கெஞ்சிக் கொண்டிருந்தார். மாரியம்மாள்.

“ஒரு ஐந்து நிமிஷம்,…. இதோ வந்துடுறேன்…என அக்கதவின் உள்ளே இருந்து கூரல் கொடுத்தாள் மகா.

ஐந்து நிமிடங்கள் கடந்து விட்டது. அந்த சேலையை சுத்திகிட்டு வர…இந்த புள்ளைக்கு… எம்பூட்டு நேரமா! நீ வர தாமதமானால் உன் மாமன் மேல வந்திடபோறான்டி….. என மாரியம்மாள் சிரிக்கவும்… உமாவும்…சந்தோஷமாக சிரித்தாள்.

“சில நிமிடங்கள் கழித்து… மீண்டும் மகா! … கதவை திறமா.. அம்மாவும், பாட்டியும் தாண்டி நிற்கிறோம்! என உமா குரல் கொடுக்க,… அவளோ… கதவை திறப்பதாக இல்லை…

“நானே உடுத்திகிடுவேன் மா.. யாருடைய உதவியும் தேவையில்லை… என மீண்டும் அக்கதவின் பக்கமிருந்து… பேசினாள்.

“என்னடி,….. இவ இப்படி சிலுத்துகிறா? …. நாம பார்த்து வளர்த்த பொண்ணு, பெரிய படிப்பு எல்லாம் படிச்சு இருக்கு, இப்படி வெட்கபடுது… என பேத்தியை பார்க்க ஆவலாக நின்று கொண்டிருந்தார். அப்போது… கதவு திறக்கும் சத்தம் கேட்டு…இரு பெண்களும் ஆர்வமாக… நிற்க,

இதோ வந்துட்டேன்! என்று கெத்தாக நின்றாள் மகா… பட்டு புடவையில் உண்மையிலேயே அந்த மகாலட்சுமியே… நேரில் வந்தது போலிருந்தது… புடவைக்கு ஏற்ற நகையையும், கழுத்துவரை மல்லிகைப்பூ சாரத்தையும், தொங்கவிட்டிருந்தாள்.

ஐயோ என் கண்ணே! பட்டுவிடும் போலிருக்கே… என கைகளால் திருஷ்டி சுற்றினார்.. ஏட்டி.. உமா… உன் மகளுக்கு சுத்தி போடணும்…என மாரியம்மாள் கூறவும்,… ஏன்டி.. இவ்வளவு நேரமா? என்றாள் உமா.

ஏம்மா! திட்டுற… அதான் வந்துட்டேன்ல.. என்றவள்.. வேண்டுமென்றே… முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

என் பேத்திக்கு எவ்வளவு வெட்கம் பாறேன்… என மாரியம்மாள் கூற, அணல் பறக்கும் விழிகளுடன் சுத்தி கொண்டிருந்த சேலையின் முனைப்பை விடுத்து, அவரை பார்த்து முறைத்தாள்…மகா.

இதுக்கே…. இப்படி வெட்கபட்டால்…எப்படி? நாளைக்கு…. எம்புள்ள… கை பட்டாலும்…. கால் பட்டாலும் குத்தம்ன்னு சொல்லுவ போல..
உன்ன வச்சிக்கிட்டு… என் மகன் எப்படித்தான் குடும்பம் நடத்தப் போறானோ!!! என கவலை பட்டார்.

“மாரியம்மா! என்ன என்னன்னு நெனச்ச……உன் மகள் மாதிரி… ஒரே ஒரு பிள்ளையை பெத்துகிட மாட்டேன். வீட்டை அடைக்கிற மாதிரி நிறைய குழந்தைகளை பெத்துகுவேன். சமாளிக்க உனக்கு தெம்பு இருக்கா?” என்றவள்..

என் மாமனை தவிற வேறு யாரும் என்னை பார்க்ககூடாது! அதனால் தான் யாரையும் உள்ளே விடவில்லை என்று மனதிற்குள் வசீகரனை நினைத்து கொண்டாள் மகா.

“உன் மக அப்படியே! என்ன மாதிரியே வருவாட்டி..
நானும் அவ வயசுல…. இப்படி தான் இருந்தேன். என்றார் நமட்டு சிரிப்புடன் மாரியம்மாள்.

பாட்டியம்மா! என்ன மாதிரியே தான்…” நீயும் சுகுக்கு ரூட்டுவிட்டியா? என்று மகா….. சொன்னதும் பாட்டியம்மா வைக்கப்பட ஆரம்பித்தார். பாட்டி… வைக்கப்பட அதை பார்த்து பேத்தி கிண்டல் செய்ய… உமாவிற்கு கோபம் வந்துவிட்டது.

நேரமாச்சு மா… நீங்களும் இவ கூட நின்னு பேசிக்கிட்டு இருக்கீங்களே? ….. வந்திருக்கும் இரண்டு அண்ணிகளின் போக்கு சரியில்லை என்று உமாவிற்கு தோன்றியது.

“ஆமா நேரமாச்சு!…. நல்ல நேரம் முடியும் முன்பு வந்து நமஸ்காரம் பண்ணுதா! உன் மாமன், இன்னும் உன்ன காணாம தவிச்சுகிட்டு இருப்பான்…என்று மூவரும் பேசிக்கொண்டே மாடியிலிருந்து கீழே இறங்கினர்கள்.

நிச்சயம் முடிந்தால்… பாதி கல்யாணம் முடிந்த மாதிரி என்பார்கள்…ஆனால் இப்போதே மாம்ஸ்… !!!… என்னை பொண்டாட்டின்னு கூப்பிடுகிறார்…. நீண்டநாள் ஆசை என்று சொல்ல முடியாது. அவர்கள் இருவரும் பிறந்ததே இணைந்து வாழ்வதற்காக தான் என்று எண்ணினாள்… இவ்விழாவை சிறப்பாக கொண்டாட… இருவீட்டனரும் காசை தண்ணீராக செலவு செய்திருந்தனர்.

வசீயின் மனதில் மகாவை பற்றி தான் ஓடி கொண்டிருந்தது. அவள் பிறந்ததும்… ரோஜா குவியலாய் இருந்தவளை… “இவள் தான் உன் பொண்டாட்டி” … என்று கையில் கொடுக்கும் பொழுது….ஏற்பட்ட சந்தோஷத்தை விட… தனக்கே இன்று சொந்தமாக போகிறாள் என்ற சந்தோஷம்… ஆறாய் ஊற்றெடுத்தது….

“ஏற்கனவே இந்த பெண்ணு, பெயருக்கு ஏற்ப அழகாக இருக்கும்… இன்றைக்கு இன்னும் அழகாகல இருக்கு… என்று… ஊர் மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்ட… அங்கு.. கருப்பாயி மற்றும்… பேச்சியின் கண்களும் சந்தித்து கொண்டன.

ஊர் மக்கள் மற்றும் சொந்தங்கள் சூழந்திருக்க…மாப்பிள்ளையும், பெண்ணையும் ஊஞ்சலில் அமர வைத்தனர். அவனருகில் அமர்ந்திருப்பது…. “ஓலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில்… ஓடி… முதல் பரிசை வென்றது… போல இதயம் தடக் தடக்கென சந்தோஷத்தில் துடித்தது”.

ஐயர்… எழுந்து… அவர்களது கையில் நிச்சியதார்த்த மாலை கொடுக்க… நிறுத்துங்க!!!!… என்ற சத்தம் அந்த….. வீடே அதிரும் படி கேட்டது… இதயம் ஒரு நிமிடம் நின்று விட்டதை போல… துக்கம் தொண்டையை அடக்க,… தன்னை சமாளித்து முதலில் எழுந்து நின்றது வசீகரன் தான்….

என்ன மாப்பிள்ளை! என்னாச்சு, ஏன் இந்த நிச்சயதார்த்தை நிறுத்த சொல்லுறீங்க?… என வசீகரனின் தந்தை… சுந்தரம் அதிர்ச்சியுடன் கேட்டார். அனைவருக்கும் அதே எண்ணம் தான் ஆனால் கேட்க தான் வார்த்தை வராமல்… தொண்டையில் மாட்டிய முள்ளாட்டம் சிக்கியது. காரணம்.. சுந்தரத்தின் முன்பு… யாரும் வாய் திறக்க மாட்டார்கள்.

“நான் கொஞ்சம் யோசிக்கனும்! என என்றும் இல்லாத அளவிற்கு கோபத்தை தன் தலையில் தூக்கி வைத்த படி ஈஸ்வர் பேச….. அதனை கண்களில் வெற்றியுடன் வசீகரன் மற்றும் மகாவை பார்த்து… சிரித்தான் விஜய்….
“எதனால் மாமா… இப்படி நடந்துக் கொள்கிறார்? என அவன் யூகித்து கொண்டு… பெருமை காத்தான் வசீகரன்.

அன்பின் வடிமான சிவனை போன்று… இருக்கும் ஈஸ்வர்… இன்று…. சிவனின் மறுஉருவமான ருத்திர மூர்த்தியாய்… காட்சியளித்தார்… கோபத்தால் ஆக கூடியது என்ன? என கேட்கும் மனிதரா? .. இன்று இப்படி நடந்துக் கொள்வது என்று அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

ஏதுவாக இருந்தாலும்,… அப்புறம் பேசி கொள்ளலாம். நல்ல நேரத்தில் தட்டை மாத்திடலாங்க…என அவரின் கை பிடித்து கெஞ்சினாள் உமா… அவரிடம் அதற்கு பதில் ஏதுமில்லை… மகுடிக்கு… மயங்கும் பாம்பாட்டம் நின்றார்.

“என்னங்க! ஏன் இப்படி பேசுறீங்க, உங்களுக்கு என்ன ஆச்சு! என கேள்வியாக உமா நோக்க,

“நான் ஏமாந்தது போல… என் பொண்ணும் ஏமாறனுமா?…
உன் அப்பா… தானம், தர்மம் செய்ய… அவரின் சொத்துகளை பயன்படுத்தலாம்…. என் அம்மாவின் சொத்துகளையும்.. உனக்கென்று… சொத்து ஏதும் கொடுக்காமல்… இன்னும் அவர் தான் அனுபவித்து வருகிறார்” என்றதும்… ஊர் உள்ள மக்கள் அவ்வீட்டை விட்டு நகர்ந்தனர்.

என்னயா! சொத்தை பிரிச்சு கொடுத்துட்டு போங்கையா?.. என ஈஸ்வர் கை கட்டிக் கொண்டு நின்றார் வம்படியாக……”இந்த ஊருக்கே.. படி அளக்குற சாமிக்கிட்ட போய்… யாராவது கேள்வி கேட்க முடியுமா?…

சாமி!… ஏது செய்தாலும் நல்லதுக்கு தான் என்று நினைக்கனும்யா? என முதியவர் ஒருவர் கூற…நீங்களாம் போங்கையா? நாங்க இருக்கும் எங்க தம்பிக்கு! என மைதிலியும், சங்கரியும் என ஊர் மக்களை வசை பாடினர்.

இவங்ககிட்டலாம்.. பேசி நேரந்தை வீணாக்காமல்…. நேராக… மாமாவிடம் கேட்கலாமே? என தன் தம்பிக்கு மகுடியை ஊதினாள் சங்கரி…

என்ன மாமா? நாங்க பாட்டிற்கு பேசிட்டு இருக்கோம். நீங்க பாட்டிற்கு… என்ற மைதிலியை சுந்தரம் முறைத்த முறைப்பில் வாயை மூடினாள்.

நாளைக்கு வக்கீல் வீட்டிற்கு வருவார்? மாப்பிள்ளை… உமா நான் வரேன்மா… மகா… என தன் உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொண்டு அவளை பார்க்க.. ஓடி வந்து… அவரது மார்பினில் அடைக்கலமானாள் மகாலட்சுமி.

தாத்தா! நான் என்று சொல்ல வந்தவளிடம்,…. பொறுமையாக இருக்கனும்… எங்க வீட்டு மகாலட்சுமி ஆழ கூடாது! என சுந்தரத்தின் குரல் ஓங்கி ஒலித்தது… அதனால் அங்குள்ளவர்களுக்கு பயத்தை கொடுக்க…

சுந்தரத்தின் தங்கை மற்றும் அவளது கணவர் இறந்திட… அவர்களது பிள்ளைகளை தன் பிள்ளைகள் போன்று வளர்த்து…… நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்தார். பரம்பரை நிலத்தையும்… அவர்களது பெயருக்கும் மாற்றி கொடுத்தார்..

உமாவின் விருப்பதிற்காகவும்… சொந்தம் வீட்டு போய்விட கூடாது என்பதற்காகவும்.. தங்கை மகன் ஈஸ்வருக்கும்… உமாவிற்கும் திருமணம் செய்து வைத்தார்.

ஆரம்பத்தில் எல்லோரும் அரண்மனை வீட்டில் ஒன்றாக இருந்தனர்… அவர்களை எல்லாம் சுந்தரம் தான் ஆதரித்தார். மைதிலியும், சங்கரியும் தன் கணவருடன் வெளியூர் செல்ல.. அதே ஊரில் ஈஸ்வர் ஒரு புது வீட்டினை கட்டி கூடி புகுந்தார்…

ஏங்க! இப்படியெல்லாம் நடந்துகுறீங்க? என ஈஸ்வரின் கை பிடித்து அழுத உமாவின் கையினை ஊதறினார்.

எனக்கு என்ன செய்யனும் என்று தெரியும். உன் வேலை எதுவோ… அது மட்டும் பாரு….. என அழுது கொண்டு நின்றிருந்த மகாவின் தலையை தடவிய ஈஸ்வர்…

அப்பா! உன் நல்லதுக்கு தான் செய்வேன்…. நீ அந்த வசீகரனை மறந்திடுவது தான் நம்ம குடும்பத்திற்கு நல்லது என அவரது அறையில் சென்று கதவை சாத்தினார்….

கண்களில் உள்ள கண்ணீர் விழுகவா? என பளபளக்க
நிமர்வுடன் … நீ… எனக்கு தான்டி! என சைகை செய்தான் விஐய். அங்கிருக்க பிடிக்காமல் அறைக்கு சென்று படுக்கையில் விழுந்தாள்…. தலையனையில் தன் துக்கங்களை… முகம் புதைத்தாள்.

டிரஸ்ங் டேபிளில்…. வைத்திருந்த
அவர்களின்… சிறு வயது புகைப்படம்… அவளுக்கு ஆறுதல் அளிக்க…

ப்ளீஸ்… மாம்ஸ்… ” எனக்கு நீ வேண்டும்… நீ மட்டும் தான் வேண்டும்… என சிரித்த முகமாக நின்றிருந்த வசீயின் புகை படத்திற்கு முத்தம் இட்டாள் .
அதனை தன் மார்பின் அருகில் கொண்டு சென்றதும்… அவனது அருகாமை கிடைத்துவிட்டது போன்று அணைத்து கொண்டாள் மகா.
                         தொடரும்!!! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *