7—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

1---உயிரின் உயிரே காத்திருக்கிறேன்

1—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

1—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

2—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

2—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

3—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

3—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

4–உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

4–உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

5—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

5—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

6–உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

6–உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

7—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

7—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

8___உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

8___உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

9—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

9—உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!

ஓம் சாய் ராம்!!! 

உயிரே *****7

“என்னங்க! நம்ம மகாலட்சுமியை பார்த்துட்டு வந்திடலாங்க… அவள் எப்படி இருக்கிறாளோ? சாப்பிட்டாலோ என்னவோ?” என்று…சக தாய்மார்களை போன்று … மகளை நினைத்து, ஈஸ்வருடன் போராடி கொண்டிருந்தாள் உமா. 

“உன்னோடு ஓரே ரோதனையாக போச்சு… அவளுக்கு என்ன ராணியாட்டம் இருப்பாள்! என்று தொலைபேசியை எடுத்து, தன் இளைய அக்காவான…சங்கரிக்கு போன் செய்தார்!.. சிறிது… நிமிடங்களில் வாடிக்கையாளர்… உங்களது அழைப்பை எற்கவில்லை! என்று தெரிவித்தது. 

சரி! மாப்பிள்ளைக்கு… அழைத்து பார்ப்போம் என்று ராஜாவிற்கு அழைக்கவும்…’நோ ரெஸ்பான்ஸ்’ என்று வந்தது. பிறகு லேன்லைன், ஆபிஸ் நம்பர் என அனைத்துமே யாரும் எடுத்து பதில் பேசவில்லை என்றதும் ஈஸ்வர் யோசிக்கலானார். 

“என்னங்க…! என்ன ஆச்சு? எப்பொழுது, மகாவை மாப்பிள்ளை கூட்டிட்டு வருவார். அக்கம்…பக்கத்தில் எல்லாம் கேட்கிறார்கள்? மகாவிற்கு கல்யாணம் ஆனதை… இன்னும் யாரிடமும் தெரியப்படுத்த வில்லை. என் வீட்டிற்கு கூட சொல்ல வில்லை. ரிஷப்ஷன் வேறு வைக்கனும்!..” என உமா பிதற்றவும்..

“எதற்கும் நேரில் சென்று பார்த்து விட்டு… அவர்களை கையோடு அழைத்திட்டு வரலாம்….” என்று இருவரும் சங்கரியின் வீட்டினை அடைந்தார்கள்… 

அங்கே… பூக்களால் அலங்காரம் செய்ய பட்டு கல்யாண கலையுடன் வீடு காட்சியளிக்க,… ஆளும் பேரும்…வந்திருப்பார்கள். அதனால், தான் யாரும் போனை எடுக்க வில்லை போலும்… “பார்த்தாயா? உன் மகள் எப்படி பட்ட வாழ்க்கையை வாழ்கிறாள்?” என்று பெருமை பேசியபடி வீட்டிற்குள் நுழைந்தார் ஈஸ்வர். 

தன் தம்பியை விடவா! ராஜா… மகாவை நன்றாக பார்த்துக் கொள்ள போகிறான்? என மனதிற்குள் குமறிய படி… அவரின் பின்னே உமாவும் சென்றாள். 

அங்கு ஐயர்…..” ராஜா இன்டஸ்ட்ரீஸ் அதிபர் திரு. ராஜாவிற்கும்…. ராணி இன்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் 
திருநிறை செல்வி, தாரணிக்கும்… பெரியவர்களால் நிச்சயக்கபட்டு, திருமணம் முடிவாகி உள்ளது.. இரு வீட்டாரும் தட்டை மாற்றுங்கோ!” என குரல் கொடுக்க… 

அவ்விருவரின் முன்பு… தாம்பூல தட்டை மாற்றினர்கள். வேகமாக சென்று அந்த தட்டினை ஈஸ்வர் தட்டி விடவும்.. தாரணியின் தந்தை, ஈஸ்வரின் சட்டையினை பிடித்தார். 

“யாருடா! நீ… எங்கு வந்து, என்ன செய்கிறாய்! நான் யாரென்று தெரியாமல்…. என்னை அவமான படுத்தி விட்டாய்” என்று, தாரணியின் தந்தை… சிற்றம்பலம் M.P. கூறினார். 

“நீ யாராக வேண்டுமானாலும் இருந்திட்டு போ! என் பெண்ணிற்கும்… ராஜாவிற்கும் இரண்டு நாட்கள் முன்பு திருமணம் முடிந்துவிட்டது. அது தெரியாமல், நீ  சம்மந்தம் பேசி கொண்டு இருக்கிறாய்! என ஈஸ்வர் வெகுண்டார். 

“மாப்பிள்ளை சொன்னார்! அந்த ஓடி போன பெண்ணை பெத்தவன் நீ தானா?” என்று அங்குள்ளவர்கள் முன்பு கேலியாக சிரிக்கவும், ஈஸ்வர் கோபத்தில் அவரது சட்டையினை பிடிக்க,… சிற்றம்பலத்தின் உதவியாளர்கள் அவரை கீழே தள்ளிவிட்டனர். 

“என்னங்க! எழுந்திரிங்க…” என்று கூறிய உமாவின் உதவியுடன் அவர் எழுந்து நின்றார். “என்ன சொன்ன? என் மகள் அப்படி பட்டவளில்லை. அவளை என்னடா செய்தாய்!” என அங்கு நின்று கொண்டிருந்த ராஜாவை அடிக்க கை ஓங்கிய, மறுகனம் அவரது கையை பிடித்து நிறுத்தினான். 

“சொந்த மாமாவின் மகாளாச்சே… வாழ்க்கை பிச்சை போடலான்னு கல்யாணம் கட்டிக்கிட்டேன். ஓடு காலி மகளை பெற்ற உனக்கெல்லாம் என்னை அடிக்கும் தைரியம் வந்துவிட்டதா! உன் மகள் யாருடன் ஓடி போனாளோ? கல்யாணம் ஆன அன்றிரவே ஓடி போனாள்… இன்னும் வரவில்லை…சும்மாவே வசீகரனின் பின்னால் சுற்றினாள்… இப்போது யாருடன் இருக்கிறாளோ? அங்கு போய் கேளு?… இனி அவள் திரும்பி வந்தாலும்.. நான் ஏற்றுக் கொள்வதாக இல்லை… “என வேறு பக்கம் திரும்பிக் கொண்டான். 

“டேய்! உன்ன நல்லவன்னு நம்பி என் மகளை கட்டிக் கொடுத்தேனே!… நான் பாவி டா! அய்யோ… என் மகளை என்னடா பண்ணிங்க? அவளுக்கு ஓடுகாலின்னு பட்டம் வேறு கொடுக்குறீங்களே!.. உன்ன நம்பி தானே மகாவை அனுப்பினேன்.. “என புலம்பியவர், அங்கு நின்று கொண்டிருந்த சங்கரியின் அருகில் வந்தார். 

“அக்கா! நீயாவது சொல்லு? என்னுடைய மகள் எங்கு 

இருக்கிறாள்?.. “என அவரது கையினை பிடித்து கெஞ்சினார். 

“என் மகன் சொல்லுவது தான் உண்மை,… கல்யாணம் ஆன அன்றே… இங்கிருந்து சென்றவள்… நேராக உங்கள் வீட்டிற்கு தான் வந்திருப்பாள் என நினைத்தேன்…. ம்… அவள் வேறு எங்கு சென்றாளோ ?” என சங்கரி பொடி வைத்து பேசவும் 

“ஏய்! உங்களையெல்லாம் கொன்றால் தான் என் ஆத்திரம் அடங்கும்… “என சங்கரியின் கழுத்தை நெறித்தார்.

“அய்யோ ! இது சரியான பைத்தியம் போல” என்று.. காவலுக்கு வந்திருந்த காவலர்களை ஏவி,… அவரை மன நல காப்பகத்தில் அனுமதிக்கும் படி பணித்தார் சிற்றம்பலம். 

“அய்யோ… அவர விட சொல்லுங்க அண்ணி! என் மகள் எங்கே…நான் அவளை எங்களுடன் அழைத்து செல்கிறேன்…” என சங்கரியிடம்… உமா கெஞ்சி கேட்டு கொண்டிருந்த நேரம், ஈஸ்வரை பிடித்து காவலர்கள் மனநல காப்பகத்திற்கு விரைந்தனர். உமாவும் அவர்களது பின்னால் கண்ணீருடன் ஓடினாள். 

மனநல காப்பகத்தில், ஈஸ்வரை அங்குள்ள ஒரு அறையில் அடைத்தனர். எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்தார். கதவின் வெளியே அவரை பார்த்து அழுது கொண்டிருந்த உமாவிற்கு சட்டென்று வசீகரன் நினைவு வரவும், அங்குள்ளவர்களிடம் அனுமதி கேட்டு, அவனுக்கு போன் செய்தாள் உமா. 

“ஹாலே! என்றதும்… என்னக்கா? எங்கிருக்கிறாய்!” என வசீ கேட்டான். தன் குரலை வைத்தே! தன்னை இனம் காணும்… வசீயை நினைத்து… அழுத வண்ணமாக இருந்தவளுக்கு பேச்சு வரவில்லை… , 

“இப்போது நீ பேச போகிறாயா இல்லையா? இரண்டு நாட்களாக உங்களை தான் தேடிக் கொண்டிருக்கிறேன். எங்கிருக்கிறாய்?… என்ன பிரச்சனை?” என அவன் கோபம் கொண்டு பேசியதெல்லாம்… எப்படியாவது… உமாவின் இருப்பிடம் தெரிந்து கொள்ளதான்! 

“வசீ… மாமாவை… மாமாவை..” என திக்கி கொண்டிருக்க.. 

“மாமாவிற்கு என்ன ஆச்சுகா? என்றதும்…” எப்படி சொல்வேன்? நாங்க மோசம் போயிட்டோம்..” பின்னர்.. அவர் மனநல காப்பகத்தில் அனுமதிக்க பட்டிருப்பதை கூறினாள் உமா. 

அதன் முகவரியை தெரிந்து கொண்டவன், ஒரு மணி நேரத்தில் அங்கு வந்தான். அவன் உள்ளே நுழைந்ததும், அங்குள்ள வேலையாட்கள் அவனை தடுக்க முயன்றார்கள். தன் முதுகிற்கு பின்னால் மறைத்து வைத்திருந்த தூப்பாக்கியினை எடுத்து, வேலையாள் ஒருவனின் நெற்றியில் வைத்தான் வசீகரன். 

துப்பாக்கியை பார்த்ததும்… அவனிடம் யாரும் நெருங்க பயந்தனர். “இங்கு யாருடா! உங்க டீன்… இங்க இப்போது வர சொல்லு!” என்று கர்ஜித்தான். அவனது கர்ஜனையால் பயத்தில் அலறி அடித்து கொண்டு… டீனை அழைத்து வந்தனர். 

“ஹாலே,… நான் தான் வசீகரன். மிஸ்டர் ஈஸ்வரின் மாப்பிள்ளை” என்று அவன் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான். 

“சார்! அவருடைய மாப்பிள்ளை தான்… இவரை இங்கு அனுமதிக்கும் படி போனில் என்னை தொடர்ப்பு கொண்டார். நீங்க… என இழுக்கவும்…” 

“நீங்களாம் மருந்துவர் தானா? ஆரோக்கியமாக இருக்கும் ஒருவரை மனநலம் பாதிக்கப்பட்டதாக எப்படி?…. நீங்கள்… அனுமதிக்கலாம். அவர் மேல் ஏதும் கை வைத்தீர்களா? அப்படி ஏதாவது இருந்தால்.. உங்களை!” என்று கைகளை மடக்கி தன் உணர்வுகளை கட்டு படுத்தி கொண்டான்.

அவனது வருகையால் ஹாஸ்பிட்டலில்… ஓரே பரபரப்பாக ஆட்கள்… அங்கும்…மிங்கும் கசகசவென பேசிக் கொண்டிருக்க, என்னவாக இருக்கும்? என்று அழுத கண்களை துடைத்து விட்டு,… ரிஷப்சனுக்கு விரைந்தாள். அங்குள்ளவர்களை வசீகரன் கேள்வி கேட்ட படி நிற்க…ஓடி வந்து அவனது மார்ப்பில் தஞ்சம் புகுந்தாள் உமா. அவனது இரண்டாவது தாய்!!!! 

“வசீ உங்க மாமா!” என்று கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த உமாவின் கண்களில் வழிந்த கண்ணீரைத் தன் விரல் கொண்டு துடைத்தான். 

“சொல்லுங்க! நான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரல?” என்று உமாவை ஒரு கையால் தாங்கிய படி.. நின்றான். 

பதில் ஏதும் வராததால்.. மீண்டும் தூப்பாக்கியை எடுத்து டீன் எதிரே நீட்டவும்…. பயத்தில் அனைத்தையும்… ஒன்றுவிடாது சொல்ல தொடங்கினார். 

“சார்! எனக்கு எதுவும் தெரியாது, விஜய் சாரும், சிற்றம்பலம் ஐயாவும்… தான் இவரை இங்கு வைத்திருக்கும்படி சொன்னார்கள். கொஞ்ச நாளில் பைத்தியமாக்க வேண்டும்! என்று என்னை மிரட்டினார்கள் சார். மத்தபடி நான் ஒரு தப்பும் செய்யவில்லை சார்…அவர்களை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கு இன்னும் அட்மிஷன் கூட போடவில்லை சார்!… அதனால் நீங்கள் அழைத்திட்டு செல்லலாம்” என ஈஸ்வர் இருந்த அறைக்கு… அவர்களை அழைத்து செல்ல, அங்கு மற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மத்தியில் தலை குணிந்தபடி அமர்ந்திருந்தார் ஈஸ்வர்.

“ஏ!!! புது பைத்தியம், என் கூட பேச மாட்டியா?” என அவரது முன்பு நான்கு பேர் கூடி… அவரை தோல் தொட்டு, தலை முடி கலைத்து விளையாடி கொண்டிருந்தனர். 

ஓடிச்சென்று அவரை எழுப்பி, தன் நெஞ்சில் சாய்த்து கொள்ள அவரிடம் அசைவேதுமில்லை. மகா! மகா! என்ற வார்த்தைகளை மட்டுமே ஜெபித்தார். உமாவும் வசீகரனின் முதுபக்கம் சாய்ந்த படி.. தன் கனவரது முகத்தை பார்த்து அழுதாள். 

“மகாவிற்கு ஒன்றுமில்லை மாமா!” என வசீகரன் சொல்லியவுடன், உயிர்ப்பு பெற்றவராக… 

“என் மகள் எங்கு இருக்கிறாள்? அவள் நன்றாக இருக்கிறாளா?” என்று வசீகரனின் கையை பிடித்தவரின் கண்களிலிருந்து…
அடக்கி வைக்க பட்டிருந்த கண்ணீர் துளிகள் வசீயின் கையை நனைத்தது. 

“உண்மையாக வா வசீ! மகா எங்கிருக்கிறாள்….? ஏன் வீட்டிற்கு வரவில்லை!” என்ற உமாவின் கேள்விக்கு , வசீகரனின் பதில் மெளனமே! அவனது மெளனத்தில் பயந்திருந்தவர்களின் கையை ஆதரவாக பற்றி கொண்டான். 

“முதலில் இங்கிருந்து கிளம்பலாம்…” என்று அவர்களை அவ்விடத்தை விட்டு அழைத்து சென்றவன்… நேராக…தன் மருத்துவமனையின் முன்பு காரை நிறுத்தினான். 

“இங்கு எதற்கு வந்திருக்கிறோம் வசீ?” என இருவரும் பயந்து நடுங்க, “மகாவிற்கு என்னவாயிற்று?” என கேள்வி கேட்ட படி அவனை பின் தொடர்ந்து லிப்டினுள் சென்றனர். 

பலத்த மெளனத்துடன் நின்றிருந்த வசீயின் கண்களில் கண்ணீர் வந்தது… அவர்கள் அறியா வண்ணம் அதனை மறைத்தவன், லிப்டிலிருந்து முதல் ஆளாக வெளியேறினான்.

ஐசியு வில்… கை, கால்கள் ஆங்காங்கே கன்றி சிவந்து, தலை முடியெல்லாம் கலைந்து,.. கையில் ட்ரிப்ஸ் ஏறி கொண்டிருந்தது… கண்களை மூடிய படி… வாடி வதங்கிய பூவாட்டம் படுக்கையில் கிடந்தாள் மகா…

அதனை பார்த்த ஈஸ்வர், தன் நெஞ்சில் கை வைத்த வண்ணம் தரையில் சரிந்தார். அவரை அதே மருத்துவமனையில் வேறு ஒரு அறையில்… அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சையில்..
அனுமதிக்கப்பட்டார்… ஒரு பக்கம் மகாவிற்கு…இன்னும்..

நினைவு திரும்ப வில்லை. அதற்குள் ஈஸ்வரின் நிலை கவலைக்கிடமாக இருக்கவும்… உமா….. உலகில் உள்ள அனைத்து தெய்வங்களிடம் வேண்டிக் கொண்டாள். உமாவிற்கு உறுதுணையாக… கடவுள் மாதிரி வசீகரன் இருந்தான். இரண்டு நாட்களாக இருவரின் உடல் நிலையில் எந்த முன்னேற்றம் இல்லை.

“டாக்டர்! இப்போது… என் கணவருக்கு எப்படி இருக்கு? அவருக்கு என்னாச்சு? என அறையை விட்டு… வெளியில் வந்த வசீயின் நண்பன் மற்றும் மருத்துவரான பவித்ரனிடம் … உமா கேட்கவும்…. வசீகரனும் அவர்களது அருகில் வந்து நின்றான்.

“அவருடைய உடம்பில் விஷம் பரவி இருக்கு…யாரோ அவருக்கு ஸ்லோ பாய்சன்… கொடுத்திருக்காங்க… எனவும்…” “வசீ…. உங்க மாமா!!!…” என வார்த்தைகள் வராமல் தவித்தாள். 

“இப்போது… எந்த பிரச்சினையும் இல்லை. நல்லவேளை விஷம்…அவரது ரத்தத்தில் கலக்க வில்லை. அவர் கண் விழித்து விட்டார். நீங்கள் போய் பார்க்கலாம். நான் கொடுக்குற மருந்து மட்டும் சரியாக சாப்பிட வேண்டும் என்று… ஈஸ்வரை பார்க்க அனுமதி கொடுத்தான் பவித்ரன். இருவரும்… அவரது அறைக்குள் நுழைந்தார்கள். 

“மாமா!…” என அவரின் கை பிடித்து… அருகில் அமர்ந்து கொண்டான் வசீகரன்…

” மகா! மகா! எப்படி இருக்கிறாள்?” என ஈஸ்வர் கேட்கவும்… உமா… திரு திருவென முழித்தாள்.

“அவள்… நல்லா இருக்கிறாள். அவளுக்கு இப்போது ஒன்றுமில்லை!…”என வசீகரன் அவரை சமாதானப்படுத்தவும்… உமாவும் தலையாட்டினாள்.

“ஆமாங்க…! இனி எந்த பிரச்சினையும் இல்லை என பொய் வாக்குறுதி கூறவும்… நிம்மதியானார். அதன் விளைவாக இரண்டே நாளில் எழுந்து நடமாட ஆரம்பித்தார். எழுந்து நடக்க ஆரம்பித்ததும்.. முதல் வேலையாக… மகாவின் அறைக்கு சென்றார். 

“இன்னும் மகா…எழுந்து கொள்ளவில்லையா? உண்மையிலே மகாவிற்கு என்னாச்சு?” என அவர் கேட்கவும்..

“மகாவிற்கு ஒன்றும் இல்லை மாமா. இரண்டு நாள்… சரியாக சாப்பிடாமல் இருந்ததனால் ஏற்பட்ட மயக்கம் தான்!” என்று ஈஸ்வருக்கு… சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது மருத்துவர் அழைக்கிறார்! என்று நர்ஸ் அவர்களிடம் தெரிவித்தாள்.

“நான் சென்றுவிட்டு வருகிறேன்!” என்ற வசீகரனின் வார்த்தையை அவர்கள் ஏற்காமல்,…. நாங்களும் வருகிறோம்…! என அடம்பிடித்தனர். மூன்று பேரும் மருத்துவரை அணுகினார்கள்.

“ஹாலே டாக்டர்..!” என்ற வசீகரனின் அழைப்பிற்கு…
“வாடா! மாப்பிள்ளை…. இதலாம் என்ன பார்மாலிட்டிஸ்…?” என மருத்துவரான வசீயின் நண்பன் பவித்ரன் அவனை கடிந்தான்.

“உன்னுடைய மருத்துவமனைக்கு நீயே அனுமதி கேட்கலாமா? உட்காருங்கள்!!!” என்று மகாவை பற்றி அவர்களிடம் பேச ஆரம்பித்தான். 

“மகாவிற்கு உடம்பில் எந்த பிரச்சினையும் இல்லை. சாப்பிடாததால் ஏற்பட்ட மயக்கம் தான். ஆனால்… மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் இன்னும் நினைவு திரும்பாமல் இருக்கிறது.” என்று மகாவின் நிலையை அவர்களுக்கு எடுத்து கூறினான்.

குற்ற உணர்வு தாங்க முடியாமல், “என்னால் தான் என் மகள்!… இந்த நிலையில் இருக்கிறாள்! அவளுக்கு பிடிக்காத இந்த திருமணத்தை நடத்தி வைத்தேனே…. நான் பாவி..! அந்த படுபாவிங்க!… என்ன பாடு படுத்தியிருந்தால் இன்னும் அவளுக்கு நினைவு திரும்பாமல் இருக்கிறது ?” என்று பேசியபடி கைகளால் தன் தலையில் அடித்து கொண்டார் ஈஸ்வர்.

வசீகரனிற்கு மனதில் தீ ஜவாலையாக எரிந்து கொண்டிருந்தது… அதனை அணைக்க வேண்டியவளோ! அவனிடம் இன்னும் பேசாது, மயங்கி கிடக்கிறாள். 

மீண்டும் பவித்ரன் தொடர்ந்தான். “இருக்கலாம்.. நீங்கள் மகாவிற்கு பிடித்த நபரை… அவளிடம் பேச வைக்க முயற்சி செய்யுங்கள்!” இதனால் நினைவு திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது” என்றவுடன் தலை குணிந்திருந்த ஈஸ்வர்.. வசீயின் முகத்தை பார்த்தார். 

வசீயின் அருகில் வந்து “உன்னால் தான் என் மகளை… உன் மகாவை காப்பாற்ற முடியும். அவளை நீ… ஏற்று கொள்வாயா?” என அவனின் காலில் விழ முயற்சி செய்த, அவரை அணைத்து கொண்டு, 

“என்ன மாமா!.. என் இரண்டாவது அப்பா நீங்கள்…. என்னிடம் வேண்டி கொள்வதா?” என அவரை கட்டி தழுவினான் வசீகரன். 

“வாழ்க்கையில் எல்லோருக்கும் தடுமாற்றம் வரும், அது தான் உங்களுக்கும்… இப்போது ஏற்பட்டிருக்கிறது. உங்கள் மகளுக்கு, மாப்பிள்ளையை தேர்வு செய்யும் உரிமை உங்களுக்கு இல்லாததா? குற்ற உணர்வில் தவிக்காமல், மீண்டும் நீங்கள் பழைய ஈஸ்வராக மாற வேண்டும் மாமா!…” 

“உங்கள் மகளுக்கு இழைத்த அநீதிகாக,… நீங்கள் அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டாமா?… என் மகாவை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த அவன்களுக்கு நானும்,… நீங்களும் சேர்ந்து தான்… தண்டனை கொடுக்க வேண்டும்..” என உற்சாகத்துடனும், அதே சமயம் கொலைவெறியை மனதிற்குள் மறைத்து கொண்டும் பேசினான். 

வசீயின் தோலில்.. மெல்லியதாக கை வைத்து… அழுத்தம் கொடுத்தவன்…கேள்வியாக நோக்க… ஆமாம்…! என தன் கண்களால் பவித்ரனுக்கு சைகை செய்தான். 

வசீயின் தோழன் என்ற முறையில், பவித்ரனிடம் தன் காதலை தெரிவித்தவன்….. தன் காதலி மகா தான் ! என்பதை சொல்லவில்லை. 

அப்படி பட்டு கிடந்த… அவனது மகாவிற்கு, என்னென்ன துன்பம் கொடுத்தார்கள் என்று தெரிந்தால்… அவர்களை எளிதில் விட்டு விடுவானோ? இந்த ருத்திரமூர்த்தி… ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்ததில் இருந்து…மகா கண் விழிப்பிற்காக ..எங்கும் சொல்லாது… அவளது அருகில் காத்திருந்தான் வசீகரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *