1---உயிரின் உயிரே காத்திருக்கிறேன்
ஓம் சாய் ராம்…
உயிரின் உயிரே காத்திருக்கிறேன்!!!
உயிரே***1
அலங்காநல்லூர் கிராமம்… வயற்காட்டில் சுமார் ஆணும், பெண்ணுமாக இருநூறு பேர் குழுமியிருந்தனர். நாத்து நடுவதற்காக பூஜைகள் ஏற்பாடு செய்யபட்டிருந்தன. அப்பொழுது ஆடி கார் ஒன்று… சும்மா பந்தாவாக.. அவர்கள் மத்தியில் வந்து நின்றது. அக்காரிலிருந்து இறங்கியவர்களை பார்த்து,
“வணக்கம்மா! என அவ்வூர் மக்கள் மரியாதையுடன் கும்பிட.. அதனை சிரிப்புடன் ஏற்றுக் கொண்டார். பார்க்க தான் ஆள் கம்பிரமாக இருந்தாலும், கனிவான குணம் மாரியம்மாளுக்கு என அவ்வூர் மக்களால் பெயர் எடுத்தவர். வயது அறுபதாக…இருந்தாலும் தோற்றம்… என்னவோ.. நாற்பதாக காணப்பட்டது.
பூஜையை ஆரம்பிங்க! என அவர் குரல் கொடுத்ததும், அவரின் அருகில்..எலுமிச்சை நிறத்திற்கு ஏற்றாற் போல ஆகாய நீலகலரில் சேர்ட் அணிந்து, சாம்பல் நிறம் இடையே தெரிந்தும், தெரியாமலும் கலந்த ஜீன்ஸ் அணிந்து, பேண்ட் பாக்கெட்டில், கூலரை கழற்றி வைத்தான்.
மாரியம்மாள் அருகில் நின்றவனை… கண் இமைக்காமல் அங்கிருக்கும், இளம் பெண்களின் கூட்டம்… மொய்க்க தொடங்கியது.
ஆளை மயக்கும் கம்பீர அழகு.. கூர்மையான நாசி, ஈர்க்கும் பார்வை… முறுக்கேறிய கைகளும்.. உருண்ட திரண்ட புஐங்களுடன், பரந்த மார்பை.. மறைத்து, சட்டையால் மூடியிருந்தான். ஏ… ஆத்தி!… ஐயா… சீனிமாவில் வர மாதிரி,… ஹீரோவாட்டாம் இருக்கிறார்டி.. என பெண்களின் கூட்டத்திற்குள், இருந்து பேச்சுகுரல் கேட்டது…
இவன் வசீகரன். எம். பி.ஏ. விவசாயம், கட்டுமானம், ஜவுளி கடை, நகை கடை, டிபார்ட்மென்ட் ஸ்டோர், அடிதடி, கட்ட பஞ்சாயத்து, ஷேர்மார்கெட் என எண்ணற்ற தொழில்களை ஒற்றை ஆளாக கவனித்து கொள்ளும் பல வித்தைகளுக்கு சொந்தகாரன்.
பூஜைகள் முடிந்து… தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு மற்றும் சிறிது பூவுடன் நாத்து கீற்றையும் ஒரு தாம்பூல தட்டில் வைத்து வசீகரனிடம் நீட்டினார் பூசாரி. இதெல்லாம் மாரியம்மாள் ஏற்பாடு…
அவனோ! மாரியம்மாளை பார்த்தபடி நின்று கொண்டிருக்க, “வசீ! நீ தான்யா…. இனி மேல் இதலாம் பார்த்துக்கனும்! என மகனின் கண்ணம் பற்றி பேசினார்….. தன் குலம் காக்கும் ஒற்றை தெய்வம்…. தன் மகன் தான்…… என்று அவனது கம்பீரமான அழகில் பெரிமிதம் கொண்டார்.
பெண்கள் எல்லாம் குழவையிட தொடங்கினார்கள். “முதல் நாத்தை எடுத்து… தன் குல தெய்வமான சொரி முத்தையனாரை” மனதிற்குள் வணங்கி விட்டு, தங்க காப்பு அணிந்திருந்த, இரும்பு போன்ற வலது கைகளால் வெற்றிகரமாக முதல் நாத்தை நட்டு வைத்தவன், அந்த வரப்பு முழுவதும் ஐந்தே நிமிஷத்தில் நாத்தினை பரப்பிவிட்டு நிமிர்ந்தான் வசீகரன்.
அடியாத்தி! நம்ம ஐயா, வேகத்துக்கு நம்மளாள ஈடு கொடுக்க முடியுமா? என மையலுடன் ஒரு பைங்கிளி கூற,
அதானே! அவர் கால் தூசிக்கு நாம வருவோமா? என மற்றொருத்தி பெருமூச்சுவிட, அவர்களுக்கு கிடையே மாரியம்மாள் வந்தார்.
“அடியே! இவளுங்களா, அவனுக்கு ஈடு கொடுக்க, ஒருத்தி இப்போது வருவா! நகருங்கடின்னா.. இங்கொருத்தன் வாட்ட சாட்டமாக, இருக்க கூடாதே… வரிஞ்சி கட்டிகிட்டு வந்துருவாளுக,…. நீ சட்டையை போடு வசீ! என மாரியம்மாள் கூறவும், இளம் பெண்களிடையே சிரிப்பு சத்தம் எழுந்தது.
அப்பொழுது வசீகரன்… இளம் பெண்களின் கூட்டத்தை திரும்பி பார்க்க,… அவ்வளவு தான் அப்பெண்கள் அங்கேயே ஸ்பாட் அவுட், அவனது ஈர்க்கும் காந்த பார்வையால்….
இத்தனை நாள் ஏறெடுத்தும் பார்க்கதவன்… இப்போது பார்க்கிறான் என்றால்? அவனது பார்வை, அவர்களை கடந்து அவர்கள் பின்னால் வந்து கொண்டிருந்த மகாலட்சுமியிடம் மையல் கொண்டது.
அவனது பார்வையின் அர்த்தம் புரிந்த அங்குள்ள பெண்களின் கண்களுக்கு கூட, வசீகரன் எட்டாகணி என்பதால்… பெரு மூச்சுவிட்டதும் இல்லாமல் மகாலட்சுமியை கடிந்தனர்.
ஊருக்கே தெரியும் அவ்விருவருக்கும் தான் திருமணம் நடக்க போகிறது என்று… இந்த பெண்ணு முன்னாடி நாமலாம்… அவர் கண்ணுக்கு தெரிவோமா? மகாம்மா “அழகென்ன, படிப்பென்ன? ….. நம்மளுக்கு ஏதாவது முனியாண்டி, மாயாண்டி,…. தான்டி வந்து அமையுவான்க! என கருப்பாயி என்கிற பைங்கிளி வெளிப்படையாக புலம்பினாள்.
ஏன்டி,….. இப்படி என் நினைப்புல கொள்ளியை வைக்குற, அவர் வீட்டிற்கு நான் வேலைக்கு சேர்ந்ததே, அவரை பார்க்க தான்.. வாழ்ந்தாலும் அவருடன் ஒரு நாள் பொண்டாட்டியா…
வாழ நான் ரெடி! என வெட்கத்துடன் பேச்சி நெளிந்தாள்.
அடியே!… ஏதோ இந்த கூட்டத்திலேயே நீ கொஞ்சம் எழுத படிக்க தெரிஞ்சவ என்பதால்… பெரிய கனவெல்லாம் காணாதடி! என அறிவுரை வழங்க,…. அவளோ
“நான் பிடிச்ச முயலுக்கு மூணு காலு என்பது போல”
மீண்டும், “அவரு தான் என்னைய ஏறெடுத்தும் பார்க்க மாட்டிங்குறாரே…” அந்த மகாம்மா மேல தான… ஆசை வச்சுருக்கார்” என வருத்ததுடன் பேச்சி கூறினாள்….
அதை கேட்டவுடன்… பயந்தவள், சுற்றும் முற்றும் பார்த்தாள். பின்னர் மெதுவாக… சன்ன குரலில்… “நீ இப்படி பேசிகிட்டு திரியாத டி, அவுகளுக்கு தெரிஞ்சா.. உன் தோலை உரிச்சுருவாரு” என அவள் மேல் அக்கறையுடன் சக தோழியாய் கருப்பாயி எடுத்துரைத்தாள்.
அப்படியாவது ஐயா கை… “என் மேல் பட்டால் சரி தான்! என பேச்சிமயக்கத்துடன்…..வசீகரனை பார்த்தபடி பேசிக் கொண்டிருக்க,…. அவளை ‘பே’ என வியந்து பார்த்தாள் . ஒரு பெண் ஆசை படுவது நியாயம் தான்… எட்டாகணி என்று தெரிந்த பின்னர் வீண் முயற்சி எதற்கு? தேவையில்லாமல் இந்த பெண் மனதில் ஆசையை வளர்த்துக் கொள்கிறாளே? என எண்ணி வருத்த பட்டாள் கருப்பாயி.
அங்க என்ன கசகசன்னு பேச்சு? என்று, அங்கிருந்த இளம் பெண்களின் கூட்டத்தை பார்த்து மாரியம்மாள் கொடுத்த
குரலில்… அவ்விரு பெண்களும் அவசரமாக கூட்டத்துடன் கூட்டமாக கலைத்து சென்றனர். பின்னர், ஒவ்வொருவராக வயலில் இறங்கி நாத்து நடும் வேலையை ஆரம்பித்தனர்.
ஹாய்! பாட்டியம்மா என ஓடி வந்து மாரியம்மாளை கட்டி கொண்டு, கண்ணத்தில் முத்தம் பதித்தவள்…. நிமிர்ந்து பார்க்க, எதிரில் தன்னுடைய மீசையை தடவிய படி வசீகரன் அவளை வசீகரித்து கொண்டிருந்தான்.
ஈர்க்கும் கருவிழியுடன்.. திருத்தப்பட்ட அடர்த்தியான மீசையின் நடுவே சிரிக்கும் இதழ்களும்…. அவளின் வரவை கண்டும் காணாதது போல…. வசீகரன்…. அங்குள்ள பம்பு செட்டினை பார்வையிட கிளம்பினான். அவன் போவதையே பார்த்து கொண்டிருந்தவள் மகா என்கிற மகாலட்சுமி.
யோவ், மாம்ஸ்! என்னையா கண்டு கொள்ள மாட்டிங்கிறாய்! உனக்காக நான் தாவணியிலிருந்து முதன் முதலாக புடவைக்கு மாறினாக்க! “நீ என்னை கல்லையும், மண்ணையும் பார்ப்பது போல பார்த்து விட்டு செல்கிறாய்”… லவ் பன்னுறேன்னு…. சொன்ன மட்டும் போதாது.. கொஞ்சம் கொஞ்சனும்.. கெஞ்சனும், மிஞ்சனும்” …ம்…. இது கூட தெரியாத மக்கு மாம்ஸ் நீ.. என மானசிகமாக தன் மனதிற்குள், அவனை வதைத்து கொண்டிருந்தாள்.
அவளுடைய இன்னொரு மனமோ… ஏன் இதை,…. நீ உன் மாமனிடம் கேட்க வேண்டியது தானோ? என கேட்க… அய்யோ! மாமனிடமா? “அவுகள பார்த்து நேர்க்கு.. நேராக பேசவே, எனக்கு நாக்கு தண்டி அடிக்கும்” என மனதோடு பேசிக் கொண்டிருந்தாள் மகா.
அம்மா… லட்சுமி! அதிகாலையிலே கிளம்பி வயலுக்கு வந்தாச்சு! இந்த வரக்காப்பியை உன் மாமன்ட கொடுத்தா? என ஒரு டம்ளரை அவள் கையில் கொடுத்தனுப்பினார் மாரியம்மாள். சிங்கத்தின் குகைக்குள் தனியாக சென்றாள் இந்த மாண் குட்டி..
ம்… இந்த வரக்காப்பியை குடிச்சு, குடிச்சு தான் வறட்சியா இருக்கிறார். நாம தான் தண்ணீர் தெளித்து பசுமையாக்கனும் போல… கல்யாணம் முடியட்டும், அப்புறம் பார்த்துக்கலாம். வறட்சி மட்டுமா? வெறப்பாவும் தான் இருக்கிறார்! என தனக்குள் பேசியபடி சென்றாள். அவனது முகத்தை கண்டதும் ஒரு வித பயத்துடனும், பதட்டத்துடனும் நெஞ்சு படபடக்க..தலை குணிந்த படி டம்ளரை நீட்டினாள்.
அதனை வாங்கி கொண்டவனின் பார்வை அவளை இஞ்சு பை இஞ்சாக நோட்டமிட்டது
“வகுடு எடுத்த நெற்றி.. ஸ்டிக்கர் பொட்டு.. பனராஸ் பட்டு மற்றும் அதற்கு ஏற்ப நகையுடன் அழகாக மின்னியவளை கண்களால் திகட்ட திகட்ட பருகினான். மேலும் அவளது தேகத்தின் மீது கண்கள் வெட்கமே இல்லாமல் அலைபாய்ந்தது. இடுப்பின் மடிப்பில் மையம் கொள்ள… இதற்கு மேல் தாங்காது மனமே என்று… தாபத்துடன் அவளை சுவற்றில் சாய்த்தான் வசீகரன்.
அவனருகில் நிற்பது வரமே என்றாலும் “ஏதோ… எதிர்பார்ப்புடனும் கூடிய மகிழ்ச்சியில்… சொல்ல தெரியாத புதுவித உணர்வுடனும்.. கைகளை பிசைந்த படி.. மை தீட்டிய கண்களை அங்கிமிருங்கும் அசைத்து கொண்டிருந்தாள்
மகா… திடீரென அவனது அதிரடியான நடவடிக்கையில் முதலில் பயந்தாலும்… வியந்து அவனை பார்த்தாள்.
காபி டம்ளரை கொடுக்காமல், அதனை அங்குள்ள திண்டில் வைத்தவன்,…… அவளது இருபக்கமும் தன் கைகளால் சிறை எடுத்தான்.
என்ன டா! “இது காபி டம்ளரை கொடுக்காமல்… இப்படி சிறை பிடிக்கிறார். மேலும் அவனின் தாபம் கொண்ட கண்கள், அவனது மனநிலையை மகாவிற்கு உணர்த்த…
“அத்தி! நாம சத்த முன்னாடி நினைத்தது அவருக்கு தெரிந்துவிட்டதா என விழித்தாள்.
நதிகள், ஆறுகளை போன்று மேடு பள்ளம் நிறைந்த பெண்ணவளின் மேனி அருகே நெருங்கியவனின், சூடான மூச்சுக் காற்றுகள்… அவளை தொட்டு சென்றன.
அடியே!… பிக்குலு, “என்னை மயக்கவே… இப்படி புடவையில காரசாரமா கொள்ளுறடி.
அதான் உனக்கு ஊருகாய்ன்னு பெயரு வச்சேன். அதுக்கு பதிலா ஓயின்னு பெயர் வச்சுறுக்கனும்டி……. ஓரமா கூட்டிட்டு போய்,….. ஒரு கிஸ் அடிச்சேன்னு வை சரக்கு தேவைபடாதுடி! என அவளின் செறி உதட்டினை மெல்லியதாக வருடினான்”….
அவனது செயலில், மயங்க ஆரம்பித்த… அவளது தாபத்தையும், உணர்ச்சி பெருக்கெடுத்த முகத்தையும் ரசித்து… பார்த்தான்.
வழவழப்பான இடுப்பு பகுதியை பற்றி, அவளை தன் கை வளைக்குள் கொண்டு வந்தான். அவனது ஒவ்வொரு செயலிலும், தன்னை ஒப்படைக்க ஆயத்தமானாள்.
பிக்குலு… என்ன ஏன்டி இப்படி சாகடிக்குற?.. என்னால முடியலடா! என் போதைக்கு நீ தான் டி.. என் பிக்குலு!!! என கண்ணம் பற்றி இதழோடு இதழ் பொருத்தினான். அடிக்கிற வெயிலுக்கு இதமாக,….. கரும்புசாரு கூடித்தாற் போன்று அவளது இதழின் சுவையை உறிஞ்சி எடுத்தான். மூச்சு வாங்கும் பொருட்டு, அவளை தன் இதழிலிருந்து பிரித்தவனின் பார்வை, இதழில் மட்டுமே நிலைத்திருந்தது…. மயக்கம் குறைந்த பாடில்லை….
பிக்குலு! உன் உதடு எப்படி இருக்குது தெரியுமா? ஒரு தேன் மிட்டாய்டி,…… எவ்வளவு இனிப்பாக இருக்கிறது… என அவளது முகம் பார்க்க, கண்களை தாழ்த்தி கொண்டாள்.
அவளது நிலைமாற்றமும், அவனது கை பட்டு சிவந்த இடை மாற்றமும்,….. அவனது மனதினை மேலும் தடுமாற்றம் செய்ய,….. தன் நெஞ்சோடு இருக அனைத்து கொண்டான். அதனால் காற்று கூட அவர்களுக்கு இடையே வர முடியாமல் தோற்று போனது. இந்த நிமிடங்கள் இப்படியே நீடிக்க வேண்டும் என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் மகாலட்சுமி.
அவளின் பட்டு போன்ற, வளவளப்பான மேனியை மென்மையாக வருடினான். இவள் என்னவள்! என்ற உரிமையில்… எனக்காக பிறந்தவள் என்று பெருமிதம் அவனை ஆட் கொண்டது.
அவனின் கைகள் பட்ட இடம் சிலிர்க்க,…..மழைக்கு நடுங்கும் கோழிகுஞ்சாய் அவனிடம் அடைக்கலம் கொண்டாள்.
“பொண்டாட்டி!!!…என அவள் மீதியிருந்த வந்த பிரத்யேகமான நறுமணத்தில், காதோரம் மிசைகுறுகுறுக்க பேசினான். முட்கள் என்னும் மீசை.. ரோஜா பூ தேகத்தை துளைக்க,….. கைகளை அழுத்தமாக அவனது முதுகில் இன்னும் பதித்துக் கொண்டாள். மகா.
சிறிது நேரம் இருவரின் உடல்கள் அணைத்து கொண்டாலும், உள்ளத்தால் பிரிய மனமில்லாமல் அவளை தன் உடம்பிலிருந்து பிரித்தான் வசீகரன்.
இங்கேயே இருந்தா! ஏதாவது ஏடாகூடமாகிரும் என மெல்லியதாக சிரித்தவன். “முதலில் நீ போ… நான் பிறகு வருகிறேன் பிக்குலு! என ஒருவழியாக… மனமில்லாமல்… மகாவை அனுப்பிவைத்தான்.
பம்பு செட்டிலிருந்து வெளியில் வந்தவளின், “நிலை
நிலத்தை பார்த்தால், வானத்தை பார்த்தாற் போலவும்… வானத்தை பார்த்தால் நிலத்தை பார்த்தாற் போலவும் இருந்தது. மீண்டும் கண்களை நன்றாக துடைத்து விட்டு,….. வானை பார்க்க, அவன் மீசை முறுக்கி விடுவது போன்ற முகம் வந்து… மேலும் அவனை நினைவிற்கு கொண்டு வந்தது.
மாரியம்மா!!… எனக்கு என்னவோ ஆகிவிட்டது, என வேகமாக ஓடி வந்தவள்,….. தன் அன்னையின் அருகில் வந்து நின்றாள். அவளது நிலையை அறியாமல் வசை பாடினாள் உமா…. மகாலட்சுமியின் அன்னை!
ஏன்டி! புடவையை கட்டிகிட்டு இப்படி ஓடி வர……. மனசுல இன்னும்….. சின்ன பிள்ளைன்னு நினைப்பா? என உமா கடிந்துக் கொண்டிருக்க……. அவர்களது அருகில் வசீகரன் வந்தான்.
அக்கா!…… என் பொண்டாட்டிய திட்டாதக்க, அவள் இஷ்டம் போல…… இருக்கட்டும் என மகாவை பார்த்துக் கொண்டு
பேசினான். அவளது முக மாற்றுதலே சொல்லாமல் சொன்னது…… இந்நிலை தன்னால் தான் என நினைத்தான் வசீகரன்.
சரி… நீங்க வீட்டிற்கு கிளம்புங்க! வெயில் வந்திடும்… நான் இருந்து எல்லாம் பார்த்துக் கொள்கிறேன் என்றான். சரிப்பா… என்ன வேலையாக இருந்தாலும் மதிய சாப்பிட்டிற்கு வீட்டிற்கு வந்திடு வசீ…என மாரியம்மாள் உத்தரவிட்டு சென்றனர். காரில் கதவு அருகே அமர்ந்திருந்த மகா, வசீகரனை பார்த்தபடி கடந்து சென்றாள் .
தொடரும்…
