விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

விழிகளில் பேசு காதல் மொழி

அத்தியாயம் 16

வசுந்தராவை தங்களது அறைக்கு அழைத்துச் செல்லும்போதே சாந்தா, வசுந்தராவின் காதினருகே சென்று, “வசு! எங்க ரூம்ல நாங்க பேசுறதெல்லாம் கேக்குற மாதிரி செட் பண்ணிருக்கா வசு. முதல்ல அத ரிமூவ் பண்ணு.” எனக் கூறியதும், 

“ஓ….” எனப் புருவங்கள் உயர வியந்துப் பார்த்தார் வசுந்தரா.

அறைக்குள் நுழைந்ததும், தனது ஹேன்ட்பேக்கில் இருந்து ஒரு பேனாவை எடுத்து, “அப்பா! இது அர்நவ் எனக்கு ப்ரசன்ட் பண்ணது. இத நா உங்களுக்கு கிஃப்ட் பண்றேன்.” என சொல்லிக் கொண்டே, அந்த ஜேமரை ஆன் செய்தார்.

வசுந்தரா அங்கு ஜேமரை ஆன் செய்ததும், இங்கே பிரபாவதிக்கு, தன்முன் இருந்த பெரிய திரையில் சாந்தா மற்றும் ருத்ரமூர்த்தியின் அறையில் இருந்த டூ வே காமிராவின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

கண்கள் இடுங்கிய வண்ணம், தொடர்பு துண்டிக்கப்பட்ட திரையைப் பார்த்திருந்த பிரபாவதி, “அப்போ நா நெனச்ச மாதிரி, ஏதோ ஒன்னு மிச்சமிருக்கு. பாத்துக்றேன்” என சொல்லிக்கொண்டே, தன் தந்தை பல்லவராஜனுக்கு கால் செய்தார்.

பல்லவராஜனின் மொபைல், தொடர்பெல்லைக்கு அப்பாற்பட்டுள்ளதாக செய்தி வரவும், “ச்சே….. இப்போ என்னப் பண்றது..” என சற்றே சலித்துக் கொண்டவர், “இத்தனை வருஷமும் நா நெனச்சது தானே நடந்துச்சு… எங்கப் போயிடப் போறாங்க?! பாத்துக்கலாம்..” எனக் கர்வத்தோடு தூங்கச் சென்றார் பிரபாவதி.

“ம்மா… இனிமே இங்க ரெக்கார்ட் பண்ற டிவைஸ் எது இருந்தாலும் ஒர்க் ஆகாது. சொல்லுங்கம்மா.. என்ன விஷயம்?” எனக் கேட்ட வசுந்தராவிடம், 

“வசு.. உண்மைய சொல்லு. யாரவள்?” என்று நிதானமாகக் கேட்ட தன் தாயைப் பார்த்து வியந்த படி,

“அம்மா…அவ.” என ஏதோ சொல்லி சமாளிக்கப் பார்த்தார் வசுந்தரா.

“வசு…… மொசப்பிடிக்கிற நாய் மூஞ்சப் பாத்தா தெரியாது…?! ரெண்டு பேரப் பெத்துருக்கேன். எனக்குத் தெரியாதா… அவ கர்ப்பமா இருக்காளா… இல்லையான்னு..” என மெல்ல சிரித்துக் கொண்டே சாந்தா கூறவும்,

சமாளிக்கும் முகபாவம் மறைந்து வசுந்தராவும் சேர்ந்து தன் தாயுடன் சிரித்தார். ஆனால் ருத்ரமூர்த்திக்குத் தான் அதிர்ச்சியாக இருந்தது. 

“அப்போ ஆராதனா கர்ப்பமா இல்லையா?” எனக் கேட்டுவிட்டு முறைத்தார் தன் மகளை.

“ஆராதனா இல்லப்பா….. ஆதர்ஷினி!!!” எனப் புன்னகையுடன் கூறிய வசுந்தராவை, கோபம் மறைந்து, கண்கள் மெல்ல மெல்ல மலர, “என்னம்மா சொல்ற… அப்போ என் உள்மனசு சொன்னது சரி தா. சாந்தா…. நா நெனச்சேன் சாந்தா. அது ஆதர்ஷினியோன்னு. அப்டியே ஜானகி ஜாடை இருந்தது… ஏம்மா… ஜானகியும் உயிரோட..” எனக் கேட்டுவிட்டு குரல் நடுங்க நிறுத்திக் கொண்டார் ருத்ரமூர்த்தி.

“அண்ணி மட்டுமில்லப்பா.. அண்ணியோட சேர்த்து உங்க பேரனுங்களும் உயிரோட தா இருக்காங்க.” என வசுந்தரா மகிழ்ச்சியுடன்  கூறியதும், இருவரும், “பேரங்களா..?” எனக் கேட்டுவிட்டு விழித்தனர்.

“ஆமாம்பா..” எனக் கூறி, வசுந்தரா அனைத்து தகவல்களையும் தனது பெற்றோருடன் பகிர்ந்தார்.

ஒவ்வொரு தகவலும் இருப் பெரியவர்கள் மனதிலும், அதீத‌ ரௌத்திரத்தையும், துயரையும் ஒருசேரப் பரிசளித்துக் கொண்டிருந்தது.

எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, சற்று நேரம் அமைதியாக இருந்தார் வசுந்தரா. நெஞ்சைப் பிடித்த வண்ணம் கண்கள் கலங்கியபடி, “இனிமே பண்றதுக்கு என்னம்மா இருக்கு?! அதா எல்லார் வாழ்க்கையையும் நாசம் பண்ணிட்டாளே..” என ஆதங்கப்பட்ட சாந்தாவை,

“என்ன முடிஞ்சு போச்சு?! நாளைலருந்து தா அந்த பிரபாவதி, இந்த ருத்ரமூர்த்தி யாருன்னு தெரிஞ்சுப்பா..” என உறுமியவர்,

“வசுந்தரா… சுரேஷ்ஷையும் தாராவையும் இங்க வர சொல்லு. நாளைக்கு காலைல அவுங்க இங்க இருக்கணும். நா அவுங்களப் பாக்கணும். அதோட அவுங்க இனிமே இங்கதா இருக்கணும். புரியுதா?!” என சொல்லிவிட்டு ரெஸ்ட் ரூம் சென்று கதவடைத்துக் கொண்டார் ருத்ரமூர்த்தி.

“அப்பா… அப்பா.. ப்ளீஸ்.. நா சொல்றதக் கொஞ்சம் கேளுங்கப்பா…” என சொல்லியதைக் கேளாமல் தன் தந்தை செல்வதைப் பார்த்த வசுந்தரா, 

மெல்ல தன் தாயிடம் திரும்பி,

“அம்மா… இல்லம்மா… நிலைமை இப்போ..” என ஆரம்பித்த வசுந்தராவின் கையை அழுத்தி, “வசு…! சில விஷயங்கள்ல உங்கப்பா சொல்றத அப்படியே நா கேட்பேன். ஏன் தெரியுமா?! நெனச்சத நடத்துற வீரியம் அவர்கிட்ட இருக்கும். இப்போ அதே வீரியத்த நா அவர்கிட்ட பாக்குறேன். அவர் சொல்ற மாதிரி செய்டா. அதான் எனக்கும் சரியாப் படுது” எனப் பரிவுடன் அறிவுரைக் கூறினார் சாந்தா.

ஒரு பெருமூச்சுடன் ‘சரி’ என மௌனமாக தலையசைத்தவர், தன் புதல்வனை எப்படி சமாளிப்பது என யோசித்தபடி தன் மொபைலை எடுத்துக் குறுஞ்செய்தி அனுப்பினார் அனைவரும் இங்கே கிளம்பி வருமாறு.

                         ********

தனது அறையின் கதவைத் திறந்து கொண்டு, சமையலறையை நோக்கி மெல்ல நடந்து வந்தபடி, “மருதம்மா! பால் வாங்கிட்டு வந்தாச்சா….” எனக் கேட்டுக் கொண்டே வந்தார் சாந்தா.

அப்போது காலிங் பெல் அடிக்கவும், ‘காலங்கார்த்தால யாரா இருக்கும்….?’ என யோசித்துக் கொண்டே வாசல் கதவைத் திறந்தார்.

அங்கே சுரேஷ் மற்றும் தாராவுடன் நண்பர் பட்டாளமும் கொட்டாவி விட்டபடியே நின்றனர். நேற்றிரவு வசுந்தரா தனது மொபைலில் காட்டிய தனது பேரனை நேரில் கண்டதும், 

வசுந்தரா சொல்லிய அனைத்தும் தனது காதில் மீண்டும் அசரீரியாக “அம்மா… எக்காரணம் கொண்டும் அவந்தா உங்கப் பேரன்னு நீங்க வெளியக் காட்டிக்கக்கூடாது. அது அவனோட உயிருக்கே ஆபத்தா முடியலாம்.” என ஒலித்தது.

முகத்தை சரிசெய்த வண்ணம், “யாரப்பா நீங்க.….?” எனக் கேட்டதற்கு, “நாங்க அர்நவ், ஆதர்ஷினியோட ப்ரண்ட்ஸ்” என்று பிரபு சொன்னதும்,

“ஓ.. அப்டியா..?!” என விழி மலர்ந்தவர், தன்னையும் மீறி மெல்ல முன்வந்து கண்களிலிருந்து கண்ணீர் மளமளவென கொட்ட, சுரேஷின் முகத்தை மட்டும் கைகளால் தொட்டு திருஷ்டி கழித்தார் சாந்தா ஆனந்தத்துடன்.

தன்னை மகிழ்ச்சியுடன் தொட்டுப் பார்ப்பதை வினோதச் சிரிப்புடன் சுரேஷ் பார்த்துக் கொண்டிருக்க,

கண்களை அகல விரித்து, “ஹாங்….‌ ஏன்டா… நாமளும் ப்ரண்ட்ஸ் தானடா.. அதென்ன அவனுக்கு மட்டும் திருஷ்டி கழிக்கிறாங்க..?!” என பிரபுவின் பின்னால் நின்றுகொண்டு அவனது தோள்பட்டையில் தனது தாடையை வைத்து சாய்ந்தபடி கேட்ட மாதேஷ், அப்படியே பிரபுவின் தோளை கடித்துவிட்டான்.

“ஆ…. டேய் நாயே.. நாயே.. கொஞ்சம் பேசாம இருடா.” என தனது தோளிலிருந்து மாதேஷைத் தள்ளிவிட்டவாறு அடிக்குரலில் சீறினான் பிரபு.

அவர்களின் சேட்டையில் முகம் மலர்ந்த சாந்தா, “உள்ள வாங்கப்பா.” என அழைத்துச் சென்றார்.

“முதல்ல போய் எல்லாரும் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க. அப்பறம் எல்லாம் பேசுவோம். இப்டி மேல போனிங்கன்னா, ரைட் சைடுல  ரூம்ஸ் இருக்கு.” என அவர்களை அனுப்பி வைத்தார்.

இரவு முழுவதும் தூங்காமல் ஆடிய தாம்பத்யக் கபடியினால், ஆதர்ஷினிக்கு, காலையில் எழுவதற்கு சற்று நேரமாகிவிட்டது. போர்வையை மட்டுமே ஆடையாகக் கொண்டு துயின்றவள், கண் திறவாமல் மெல்ல கைகளைக் கொண்டு தனக்கருகிலிருக்கும் தன் கணவனைத் துலாவினாள்.

அங்கே கசங்கிய போர்வை மட்டுமே இருக்க, மெல்ல கண் மலர்ந்து எழ எத்தனித்தபோது தான் புரிந்தது தற்போதைய தன்னிலைப் பற்றி. ‘ஆனாலும் இவர் ரொம்ப மோசம்’ என முணங்கியவாறே, மெல்லிய செந்நிற பட்டுத் துணியாலான போர்வையையே தனது ஆடையாக மார்பு வரை எடுத்துக் கட்டியவள், மெல்ல எழுந்து சென்று குளியலறை நோக்கி நடந்தாள்.

அப்போது கழுத்தில் டை கட்டிக் கொண்டு, “பரவால்லயே. மேடம் நைட் ஃப்புல்லா ஒர்க்கவுட் பண்ணாலும் முழிச்சுட்டீங்க..” என விஷமமாக சிரித்தபடி ஆதர்ஷினியின் அருகில் வந்தான் அவளது ஆருயிர் கணவன்.

தன் கணவன் அருகில் வர வர, தன் மார்பில் கட்டியிருந்த போர்வை முடிச்சை இறுகப் பற்றிக் கொண்டு, “வேணா தேவ்… நைட் ஃப்புல்லா இன்னிங்ஸ் ஆடியாச்சு.. போதும்..” என முகம் சிவந்தவாறே பின்நோக்கி நடந்தாள் ஆதர்ஷினி.

அவள் சொல்வதைக் கேட்டு நின்றுவிடுவானா நம் கதாநாயகன்?! ப்ளாக் கோர்ட் ஷூட்டுடன் நடந்து வந்தவனின் முகத்தில் வழக்கத்திற்கு மாறான புத்துணர்ச்சி ததும்பியது. பாந்தமாக ஜெல் கொண்டு அடக்கிய சிகையும், சவரம் செய்யப்பட்ட கன்னங்களும், இரவினாட்டத்தில் அவனது சற்றே வீங்கி சிவந்திருந்த இதழ்களும், ஆதர்ஷினியை விட்டு எங்கும் நகலாத அவனது தீட்சண்யக் கண்களும், பெர்ஃப்யூம் உடன் அவனது ப்ரத்யேக வாசனையும் கலந்து வர, ஆதர்ஷினிக்குத் தான் தடுமாற்றம் அதீதமாக இருந்தது.

ஒருக்கட்டத்தில் வார்ட் ரோப்பில் வந்து முட்டி நின்றவளின் இருப்பக்கமும் கைகளை வைத்து ஊன்றியபடி, அவளையே மநதகாசப்புன்னகையுடன் பார்த்தான் அர்நவ் தேவ்.

அவனது பார்வை வீரியத்தை தாங்க இயலாமல் தனது விழித்திரையை கீழ்நோக்கித் தாழ்த்திக் கொண்டாள் ஆதர்ஷினி. தனது முகத்துடன் சேர்ந்து தன் மேனியும் சிவப்பது போன்ற உணர்வை அனுபவித்தபடி, அவனது கைகளுக்கு கீழே இறங்கி மெல்ல நெளிந்தபடி நகர முயன்றாள்.

குறும்புடன் அர்நவ்வும் தனது கைகளைக் கீழே இறக்கவும், செல்ல முறைப்புடன் இருபுறமும் செல்வதற்கு முயன்று தனது கணவனின் கைகளை மெல்லத் தள்ளினாள் இதழில் புன்னகையுடன்.

அசையாமல் கைகளை அழுந்த ஊன்றியிருந்தவனிடம், “என்னங்க… நான் போணும்.” எனச் செல்லமாக சிணுங்கியவளைப் பார்த்ததும் வசீகரமாக சிரித்துக்கொண்டே, “ஓ மை.. லவ்லி ஸ்வீட் ஹார்ட்..” என அவளது கன்னங்களை இருக்கைகளால் பற்றி இழுத்து இதழமுதை பருக ஆரம்பித்தான் மோகத்துடன்.

மீண்டும் அவன் ஆதர்ஷினியை தன்னிதழிலிருந்து விடுவித்தபோது, மூச்சிற்காக பெரிதும் போராடினாள். பெரிய பெரிய மூச்சுகளை எடுத்துவிட்ட வண்ணம் வார்ட் ரோப்பில் அயர்வுடன் சாய்ந்து அர்நவ்வை முறைத்தவளிடம்,

தனது டையை சரிசெய்தவாறே, “இன்னைக்கு எனக்கு ரொம்ப முக்கியமான வேலை இருக்கு. சோ வீட்லருக்ற எல்லாரும் உன் பொறுப்பு. அவசரப்பட்டு எங்கயும் வாயத் தொறந்துராத. அன்ட் பீ கேர்ஃபுல்.” எனக் கூறிக் கொண்டே அவளது பிறைநெற்றியில் மென்மையாக முத்தமிட்டபடி கூறியவன், தனது மொபைலை எடுத்துப் பார்த்துக் கொண்டே, “சீ யு லேட்டர் ஹனி” என வேகமாக நடந்து விடைபெற்றான் அர்நவ் தேவ்.

கண்களில் சிரிப்புடன் அவன் செல்லும்வரை பார்த்திருந்தவள், பின் குளியலறை நாடிச் சென்று, ஷவரைத் திறந்து விட்டாள். இரவு ஆடியக் களியாட்டத்தின் நினைவுகளை, ஆங்காங்கே நீர் பட்டதும் எறிந்த மெல்லியக்கீறலாலும் பற்தடங்களாலும் ஏற்பட்ட காயங்கள் இன்பமாய் நியாபகப்படுத்த, தனக்குள்ளேயே சிரித்தபடி நீராடத் தொடங்கினாள் ஆதர்ஷினி.

நீராடிவிட்டு வெளிவந்தவள், கண்ணாடியில் தனது டவல் சுற்றிய மேனியின் பிம்பத்தைப் பார்த்தவள், “ம்ஹூம்… கழுத்துல காயம் அப்பட்டமாத் தெரியுது. சோ… கண்டிப்பா சேலைக் கட்ட முடியாது. அய்யோ… வந்த முதல்நாள்ளயே நெக் கவர் டாப் போட வச்சுட்டானே…. இவன…” என வெளிப்படையாகப் புலம்பிக் கொண்டிருந்தவளை, 

‘அவன ஒன்னும் பண்ண முடியாதே…..’ என தனது மனமே தனக்கு வக்கனைக் காட்டியவாறு கிண்டலடித்ததை மெல்லியப் புன்னகையுடன் ரசித்தபடி உடை மாற்றினாள்.

கூந்தலை நன்கு உலர வைத்தபடி, பால்கனிக்கு வந்து வீட்டின் அமைப்பை நோட்டமிடலானாள் ஆதர்ஷினி.

அப்போது தோட்டத்தில் சுரேஷுடன் தனது நண்பர் பட்டாளம் அமர்ந்து, சாந்தா மற்றும் ருத்ரமூர்த்தியுடன் அரட்டையடித்து சிரிப்பதைக் கண்டு விழி விரித்து பார்த்தாள். 

‘இவர்களெப்படி இங்கே…’ என ஒருபுறம் சந்தோஷமும் மறுபுறம் எச்சரிக்கையுணர்வும் மேலோங்க யோசித்தவள், அவதி அவதியாக தனது கூந்தலை ஹேர் கிளிப்பினால் மொத்தமாக அடக்கியவாறு தடபுடவென கீழே இறங்கித் தோட்டத்தை நோக்கி ஓடினாள் ஆதர்ஷினி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *