உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
பரந்து விரிந்த அந்த பஞ்சவன காட்டில் இருள் சூழ்ந்த குகையில் துஷ்ட்ட ஆத்மாக்களை ஆவாகனம் செய்து கொண்டிருந்தான் ஒருவன். நீண்டு வளர்ந்த ஜடா முடி.உடலில் எங்கும் மந்திர உருவேற்றிய தாயத்துகள். இரத்த சாயம் பூசிய கண்கள்.தலைச்சம் பிள்ளைகளின் கபாலத்தை மாலையாக கோர்த்து கழுத்தில் தரித்திருந்தது அந்த இராட்சத உருவம்.
அந்த நேரம் குகை வாயிலில் வந்து நின்றது கருப்பு நிற BMW கார் ஒன்று . அதில் இருந்து இறங்கினர் நடுத்தர வயதுடைய இரு ஆண்கள்.அந்த துஷ்டனை காண வந்திருப்பார்கள் போல.
இருவரும் குகைக்குள் பழக்கப்பட்ட இடத்தினை போல செல்லலாயினர். மூலை முடுக்கு எங்கிலும் மண்டை ஓடுகளும் எலும்புகளும் குவிந்து கிடந்தன.அவற்றை நோக்கிய வண்ணமே வந்தவர்கள் துஷ்டனை காண அவர்களை அமருமாரு கண் ஜாடை செய்தவன் அவர்கள் ஆரம்பிக்கும் முன்பு அவனே கேள்வி கணைகளை தொடுத்தான்.
இத்தனை வருஷம் கழிச்சு இப்போ எதுக்கு வந்துருக்கிங்க ரெண்டு பேரும். தொழில்ல ஏதாவது நஷ்டம் வந்துருச்சா என்ன என்று தன் கம்பீர குரலில் வினாவினான்.
அவர்கள் இருவரும் அதிர்ந்து அவனை நோக்கினர் ஏனென்றால் பலவருடங்களின் முன்பு இவனை காணும் போது ஒரு சிறுவனாக இருந்தவன் எப்படி தங்களை கண்டு கொண்டான்.இவர்களுக்கு உதவியது இவனின் தந்தையே.மீண்டும் அவனே தொடர்ந்தான் அப்பா இறந்து போய் பல வருசம் ஆச்சு சாகும் போதும் உங்கள பத்தி எல்லாம் சொல்லிட்டு தான் செத்தாரு.எனக்கு உங்கள பத்தி எல்லாம் தெரியும் நேரம் கடத்தாம வந்த விஷயத்த சொல்லுங்க தனக்கே உரிய திமிருடன் உரைத்தான் துஷ்டனவன்.
இருபது வருஷத்துக்கு முன்னாடி விட்ட குறை தொட்ட குறை ஒன்னு பாக்கி இருக்கு அத மொத்தமா முடிச்சிட்டா இனி எங்களுக்கு கவலை இல்ல நிம்மதியா இருப்போம் நீங்க தான் அதுக்கு உதவி பண்ணனும்.
இருவரையும் கூர்ந்து நோக்கியவன் சரி அதுக்கு தேவையானதை கொண்டு வந்து இருக்கிங்களா கொண்டு வந்திருந்தா அத இங்க வச்சிட்டு திரும்பி பார்க்காம போங்க என்றான்.
சரிங்க சாமி என்றவாறே அவன் முன்னால் ஒரு பையை வைத்து விட்டு வந்த வழியே இருவரும் திரும்பிச் சென்றனர்.
அவர்கள் சென்றவுடன் அந்த பையிலிருந்தவற்றை வெளியே எடுத்தான் அவன். தாவணித்துண்டொன்று ,பாதம் பட்ட பிடி மண் கொஞ்சம், ஒரு பிடி முடிக்கற்றை , குருதி பதிந்த துணித்துண்டொன்று அத்துடன் ஒரு புகைப்படமும்.
புகைப்படத்தை கையில் எடுத்தவனின் கண்களில் ஒருநொடி துளி கண்ணீர் துளிர்விட்டது ஒரு நொடி தான் அடுத்த நொடி புகைப்படத்தில் உள்ள பாவையை வெறிக்க ஆரம்பித்தான் அசுரனவன்.
அதே முகம் எத்தனை பிறவி கொண்டாலும் காண காண திகட்டாத பால்வண்ண முகம் அவளை பிய்த்து திண்ண கூறி மனதும் மூளையும் பேயாட்டம் போட்டது. அவனை கட்டுப்படுத்திக் கொள்ள அவனாலேயே முடியவில்லை. நேற்று சாவித்திரனால் சவமாய் அனுப்பப்பட்டவளின் உடலை தன் கூறிய நகங்களால் குத்திக் கிழித்து வெறி கொண்டு பிய்த்து தின்றான். பிணத்தை திண்றும் வெறி அடங்கவில்லை அவனுக்கு.
புகைப்படத்தை பார்த்து கொக்கரித்தான் ஆஆஆ… உன்ன விட மாட்டேன்டி உன்ன விடவே மாட்டேன் என் வாழ்க்கைய நரகமா மாத்துன உன்ன விடவே மாட்டேன்டி உன் ஆத்மாவ சாத்தான்களுக்கு காணிக்கையாக்கி உன் உடம்ப இதே மாதிரி பிச்சு திண்ணு ஏப்பம் விடுவேன்.இனி என்னோட விஸ்வரூபத்த பார்ப்ப ஆஆஆஆ… குகை அதிர கர்ஜித்தான் அவன்.
என் உடல் தீண்டிடா
உன் பொண் தேகம்தனை
வேறொருவன் தீண்டிட
அனுமதியேன் என் கண்மணியே
இத்தனை கர்ஜனையிலும் அவன் கைகளில் புகைப்படமாக பச்சை வர்ண தாவணியில் புன்னகை முகமாக நின்றிருந்தாள் அகன்யா தேவியின் அன்புத் தங்கை அபிஸ்ரீ சுஜித்தா.
இங்கு தனக்கு வரப்போகும் ஆபத்தை அறியா பேதையவளோ தாயை பின் தொடர்ந்து கொண்டிருந்தாள்.காரில் சென்று கொண்டிருந்த ரீவா நிறுத்தினார் கரை ஒரு சிவன் கோயிலின் முன்பாக.வேகமாக கேரியருடன் இறங்கிய ரீவா காரை லாக் செய்து விட்டு ஒரு ஆட்டோவில் ஏறினார்.தாயை புருவ முடிச்சுடன் நோக்கிய சுஜியும் அவரைப் பொலவே ஒரு ஆட்டோவில் ஏறி தன் ரீவா மம்மியை பின் தொடர்ந்தாள்.
சிறிது நிமிடத்திலேயே தான் வரவேண்டிய இடத்திற்கு முன்பாக இறங்கி சேலைத் தலைப்பால் தன் முகத்தை மறைத்த வண்ணம் நடக்க தொடங்கி விட்டார் ரீவா.பின் யாரேனும் தன்னை கவணிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் நோக்கி விட்டு திடீரென ஒரு வீட்டின் கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்று விட்டார்.
தாயை பின் தொடர்ந்து வந்த சுஜிக்குத்தான் தாயின் செயலில் தூக்கிவாரிப்போட்டது. சோற்றுக்காக தன் தாயை பின் தொடர்ந்து வந்த முளையை எந்த செருப்பால் அடித்தால் தகும் என்றிருந்தது.
திரும்பிச் செல்ல எண்ணமிருந்தாலும் தாயை விட்டுச் செல்ல மனது கேட்கவில்லை தைரியத்தை வரவழைத்து கொண்டு பூனைப்போல் பதுங்கி பதுங்கி வீட்டிற்குள் நுழைந்தவளின் கால்கள் ஆணி அடித்தாற் போல நின்றன.
அங்கு தன் ரீவா மம்மி அன்பு அக்கா அகன்யாவிற்கு உணவு ஊட்டிவிடும் காட்சிதனை கண்டு விழி பிதுங்கி நின்றாள் சுஜித்தா.
ஆம் ரீவா வந்திருந்தது சாவித்திரனின் பேய் வீட்டிற்கு தான் இதை கண்டுதான் சுஜி பயந்து நடுங்கினாள்.
ஓடிச்சென்று தன் அக்காவை வாரி அணைத்துக் கொண்டாள்.சுஜியை அங்கு எதிர்பாராத அகன்யா அதிர்ச்சியாக ரீவாவோ மகளை அர்ச்சிக்க ஆரம்பித்தார்.
ஏய் நீ இங்க என்னடி பண்ற உன்ன யார் இங்க வர சொன்னது.எப்படி இந்த இடத்தை கண்டு புடிச்ச என்று பொறிந்து தள்ள
ஹாங் கூகிள் மேப்ல கண்டு புடிச்சி வந்தேன் போ மம்மி நீ வேற நீ வீட்ல சோற மூட்டை கட்டுறத பார்த்துட்டு உன்ன ஃபோளாவ் பண்ணிட்டு வந்தேன் நா ஃபோளாவ் பண்றது கூட தெரியாம நீ வந்துட்டு என்னையே கேள்வி கேக்குற.
அக்காவ தான் பார்க்க போறேனு சொல்லியிருந்தா நானும் உன்கூடவே வந்திருப்பேன் என்று தாயுடன் வம்பிற்கு நிற்க அகன்யா தான் தங்கையை அடக்கினாள்.
சித்திகிட்ட சண்டை போடாத சுஜி நான் தான் சித்திய யார்கிட்டேயும் சொல்ல வேண்டானு சொன்னேன் நீ கோவிச்சிக்காத. சரி வா ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று தங்கையை அழைக்க.
சுஜி மறுத்தாள் வேணாக்கா மம்மி உனக்கும் மாவுக்கும் மட்டும் தான் சாப்பாடு கொண்டு வந்துருப்பாங்க நா வீட்டுக்கு போய்ட்டே சாப்பிட்டுக்குறேன்.
இல்ல சுஜி உங்க மாமா நைட் சிப்ட் செஞ்சிட்டு வந்து தூங்குறான். இப்போதைக்கு எழும்ப மாட்டான். நீ வந்து சாப்பிடு நா அவனுக்கு அப்பறமா சமைச்சி குடுக்குறேன் என்று வாய்க்கு வந்த பொய்யையெல்லாம் அடித்து விட்டாள் அகன்யா.
சுஜி எவ்வளவு மறுத்தும் அகன்யா பிடிவாதம் பிடிக்க இருவருக்கும் உணவை ஊட்டி விட்டார் ரீவா.
உண்டு முடித்து விட்டு சுஜி சாவித்திரனை காண அடம்பிடிக்க அகன்யா மறுத்து விட்டாள்.அவன் நைட் டியூட்டி பார்த்துட்டு வந்து தூங்குறான் இப்போ நாம எழுப்புனா கழுத்த கடிச்சி வச்சிருவான் வேற ஒருநாள் நீ அவன பாரு என்று பாதி பொய்யும் பாதி உண்மையும் கலந்து அகன்யா சொல்லி வைக்க சுஜியும் விளையாட்டாக நம்பிவிட்டாள்.
பின்னர் அக்கா தங்கை இருவரும் சிரித்து பேசி மகிழ ரீவா தான் இவர்கள் ஒற்றுமையில் மெய்யுருகி போனார் மனதிற்குள்ளேயே அவசரமாக கடவுளிடம் ஒரு கோரிக்கை மனுவையும் அனுப்பினார்.
கடவுளே சீக்கிரமா எல்லாம் சரியாகனும் என் ரெண்டு பொண்ணுங்களும் இப்ப போலவே நூறு வருஷம் இணைபிரியாம வாழனும்.ஆனால் ரீவாவின் கோரிக்கை மனு கடவுளை சென்றடையும் முன்னமே அதை விதி பறித்துக்கொண்டது தான் பரிதாபம்.
பின்பு அகன்யாவிடம் அடிக்கடி இங்கு வரமுடியாது அப்படி வந்தால் அவிரன் கண்டு பிடித்து விடுவான் என்று தான் பெறாத மகளை உச்சி முகர்ந்து சுஜியையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார் ராகவர்த்தினி ரீவா.
இருவரும் அரண்மனை செல்ல பேரதிர்ச்சி.ஒரு வாரமாய் அறையிலேயே முடங்கி கிடந்த அவிரன் கால்மேல் கால் போட்டு ராஜ தோரணையில் கம்பீரமாக நடு ஹாலில் அமர்ந்திருந்தான்.
அவிரன் வாய் திறக்கும் முன்னர் ரீவா அவன் அருகில் சென்று கோவில் பிரசாதத்தை வழங்கினார்.சுஜியை கூர் பார்வை பார்த்துக்கொண்டே பிரசாதத்தை ஏற்றுக்கொண்டவன் கேட்டான் அத்தையிடம் சுஜியும் உங்க கூட கோவிலுக்கு வந்தாளா அத்த.
ஒரு கணம் திரும்பி மகளை பார்த்த ரீவா மருமகனிடம் இவ என்னைக்கு கண்ணா கோவிலுக்கு வந்துருக்கா.வீட்டிலயே ஒழுங்கா சாமி கும்பிட மாட்டா இவளா கோவிலுக்கு வந்து கும்பிட போறா என்று போற போக்கில் மகளின் தலையில் இடியை இறக்கிவிட்டு சென்றார்.
சற்றும் பார்வையை மாற்றாமல் சுஜியை நெருங்கிய அவிரனை கண்டு சுஜியின் மூளையில் எங்கோ சாவு மணி அடிக்கும் ஓசை கேட்டது.
அகன்யாவின் ஆரோன் தொடர்வான்🧛♂️🧛♂️…….
தர்ஷி
ஹாய் ஃபிரண்ட்ஸ் படிச்சிட்டு மறக்காம கமன்ட் பண்ணுங்க🤗🤗🤗உங்க கமன்ட் தான் என்னோட எனர்ஜி பூஸ்ட்🥤🥤🥤 அப்போதான் என்னால உற்சாகமா தொடர்ந்து எழுத முடியும்🥰🥰🥰🥰
