முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!

முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!



 
முத்தம் – 22
 
“வாட் ஏ.எம் கன்சல்டிங் உங்களோடதா..?” என நம்ப முடியாத அதிர்ச்சியில் கேட்டாள் மிருணாளினி. 

இத்தனை நாட்கள் அவள் பல திட்டங்களை கேட்டு முடிவெடுப்பதும் ஏ.எம் கன்சல்டிங்கிடம்தானே..!
 விழிகளோ பெரிதாய் விரிந்தன.

“ம்ம் என்னோடதுதான் மிரு.” மீண்டும் அதே இலகுவான குரலில் கூறினான் அவன். 

அவளே எத்தனை முறை இந்தக் கம்பனியை தொடர்பு கொண்டிருக்கிறாள்.  திட்டங்களை சீர்பட வகுத்து பல யுக்திகளை புகுத்தி வெற்றியை சேர்ப்பிப்பதில் இவனுக்கு நிகர் இவன்தான் போலும்.

‘அன்னைக்கு கூட நான் என்ன பண்ணலாம்னு குழம்பித் தவிச்சப்போ ‘கப்பலை சினிமா ஷூட்டிங்கு விடு. என பட்டென கூறினானே… இத்தனை திறமைகளை வைத்துக் கொண்டு ஏன் எல்லோரிடமும் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறான்.?’

அவளுக்கோ தாளவில்லை. 

“அபூ நான் உங்களை ரொம்ப குறைச்சு மதிப்பிட்டுட்டேன்… இவ்ளோ டேலன்டட் பர்ஷனா நீங்க இரூப்பீங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை.” என்றாள் அவள்.

“உன்னை விட திறமை கம்மிதான் மிரு.” என்றான் அவன்.

“ம்க்கும்… நானே எத்தனை தடவை உங்ககிட்ட ஐடியா கேட்டுருக்கேன். நேத்து கூட ஏ.எம் கன்சல்டிங்கு மெயில் அனுப்பியிருந்தேன். பக்கத்துலையே ஒரு ஜீனியஸ்ஸை வெச்சிகிட்டு இவ்ளோ நாளா வேஸ்ட் பண்ணிட்டேனே.” என அலுத்துக் கொண்டாள் அவள்.

“ஹா… ஹா… உன்னோட மெயில் எனக்கு எப்பவுமே ஸ்பெஷல்தான் மிரு. ஆல்ரெடி உனக்கு ப்ளு ப்ரின்ட்டோட பதில் போட்டுட்டேன்.” என்றான் அவன்.

“ஏன் அபூ இதை யார்கிட்டேயும் சொல்லலை.? எல்லாரும் உங்களை தண்டச்சோறுன்னு சொல்றாங்க.? ஏன் அமைதியா இருக்கீங்க.?” என வருத்தத்தோடு கேட்டாள் அவள்.

“இந்த பிஸ்னஸ்ஸை நான் ஆரம்பிக்கிறதுக்காகத்தான் ஏழு கோடி பணம் தேவைப் பட்டுச்சு மிரு. எனக்குன்னு ஒரு லட்சியம் இருந்திச்சு.. அதை ஒரு அழகான கனவுன்னே சொல்லலாம்.” என்றவன் உடல் சிலிர்த்தான்.

“என்னோட கம்பனி எப்படி இருக்கணும்னு நானே டிசைன் பண்ணினேன். ஒவ்வொரு இடமும் எப்படி இருக்கணும்கிறது வரைக்கும் பக்காவா திங் பண்ணி வெச்சிருந்தேன். அதை கட்டி எழுப்பி பெரிய பில்டிங்கா பார்க்கணும்கிறதுதான் என்னோட ஆசை மிரு…” என்றவன் தான் ஆசைப்பட்ட கட்டிடத்தின் பிரம்மாண்டமான வடிவத்தை அவனுடைய லேப்டாப்பில் காண்பித்தான்.

“வாவ்…. சூப்பரா இருக்கு அபூ.” என்றவள் மலைத்துப் போய் பார்த்தாள்.
 அவளுடைய மலைப்பான பார்வை மெல்ல மெல்ல ரசனைப் பார்வையாக மாறத் தொடங்கியது.

அவன் தேர்வு செய்த நிறங்கள் முதற் கொண்டு அலங்காரம் வரை மிகவும் நேர்த்தியாக இருப்பதைக் கண்டு அவனை பார்வையால் மெச்சிக் கொண்டாள் அவள்.

“இந்தக் கம்பனியை கட்டுறதுக்காகத்தான் டாடிகிட்ட பணம் கேட்டேன். அவருக்கு நான் அவரோட பிஸ்னஸ்ஸை பார்க்கணும்னுதான் ஆசை. இருந்தாலும் நான் கேட்டதுக்காக பணத்தை எனக்கு கொடுத்தாரு. பட் அந்த டைம்ல எனக்கு அண்ணாதான் ரொம்ப சப்போர்ட் பண்ணினான்.

பட் கடைசி நேரத்துல அந்தப் பணம் மொத்தமாக தொலைஞ்சு போச்சு.. வெண்ணை திரண்டு வர்ற நேரத்துல பானை உடைஞ்ச கதை மாதிரி ஆகிருச்சு என்னோட லட்சியம். 

நான் ரொம்ப உடைஞ்சு போய்ட்டேன் மிரு. என்னால அதை தாங்கிக்கவே முடியல. எனக்கு அப்போ என்னோட பேமிலியோட சப்போர்ட் தேவை பட்டுச்சு. பட் பணத்தை எடுத்து ஏதோ நானே செலவு பண்ணின மாதிரி எங்க அண்ணா என்னை நம்பாம திட்டினான்.
 அப்பா அவரோட ஆபிஸ்ல வெச்சு அத்தனை பேரு முன்னாடியும் என்னை ரொம்ப அசிங்கமா திட்டிட்டாரு மிரு. அன்னைக்கே செத்துட்டேன் நான்.. என்னோட தலைல பெரிய இடியே விழுந்த மாதிரி இருந்திச்சு. பணம் எவ்ளோ முக்கியம்னு எனக்கு அன்னைக்குத்தான் தெரிஞ்சுது. அதுல இருந்து நான் மீண்டு வர்றதுக்குள்ள எங்க அண்ணாவும் அப்பாவும் மாறி மாறி என்னை வார்த்தைகளாலையே பாதி கொன்னுட்டாங்க மிரு.” என்றான் அவன்.

அவன் பட்ட துயரங்கள் அவளுக்குப் புரிந்தது. அவனுடைய விழிகள் வெளிப்படுத்தும் வலியை மௌனமாக உள் வாங்கிக் கொண்டிருந்தாள் மிருணா.

“என்னோட கனவு கலைஞ்சு போச்சுன்னு கவலைப் படுறதா இல்லை.. பணம் தொலைஞ்சு போச்சுன்னு கவலைப் படுறதான்னு சத்தியமா எனக்கு புரியல மிரு. என்னோட ஷேர்ஸ்ல இருந்து பணத்தை எடுத்து எப்படியாவது சரி பண்ணிடலாம்னு நினைச்சேன். பட் என்னை எங்க கம்பனில இருந்தே தூக்கிட்டாங்க. என்னோட எல்லா கார்ட்ஸ்ஸையும் எங்க அப்பா ப்ளாக் பண்ணிட்டாரு. அதுல என்னோட சேவிங்ஸ் மட்டுமே எழுபத்தைஞ்சு லட்சம் இருந்திச்சு. பட் கைல அஞ்சு பைசா இல்லாம நின்னேன். அழுகையை விட சிரிப்புத்தான் அதிகமா வந்திச்சு மிரு.” என்றவன் தன் தலையை அழுத்தமாக கோதிக் கொண்டான்.

“பணத்தை கொண்டு வந்து கொடு.. முடியலன்னா செத்துப் போயிருன்னு ஒரு தடவ அப்பா திட்டினாரு.” என்றதும் விக்கித்துப் போனாள் அவள்.

தன் விழிகளை இறுக மூடிக் கொண்டான் அபூர்வன். அவனுடைய கரத்தை மென்மையாக பற்றிக் கொண்டாள் மிரு.

“சூசைட் கூட ட்ரை பண்ணினேன்.” என்றதும் அவளுடைய உடல் ஒரு முறை தூக்கிப் போட்டது. சட்டென அவனை இறுக அணைத்துக் கொண்டாள் மிருணாளினி. 

எதில் இருந்தோ அவனைக் காப்பதைப் போல இருந்தது அவளுடைய செயல்.
அவளுடைய இறுகிய அணைப்பில் சுகமாய் நிம்மதியாய் ஆனந்தமாய் விழிகளை மூடிக் கொண்டான் அவன்.

தன் வயிற்றில் புதைந்த அவனுடைய முகத்தின் தொடுகையில் நெகிழ்ந்தவள் அவனுடைய தலையை கோதி விட்டாள்.

“அப்புறம் என்னாச்சு..?” கலங்கிய குரலில் கேட்டாள் அவள்.

“அப்புறம் என்ன குடிக்க ஆரம்பிச்சேன்.. கவலை மறக்க, துன்பம் தொலைய சதா குடிச்சுகிட்டே இருப்பேன். குடிச்சாதான் நிம்மதியான தூக்கமே வரும் மிரு.”

“ம்ம்….” 

“அப்போ இந்த பிஸ்னஸ் எப்போ ஆரம்பிச்சீங்க.?”

“ஒரு எட்டு மாசத்துக்கு முன்னால ஸ்டார்ட் பண்ணினேன். மூலதனமா பணம் வேணும்னு நினைச்சுட்டு இருந்தேன் பட் மூலதனமா என்னோட மூளை ஒன்னே போதும்னு தோணுச்சு. 
 பில்டிங் கட்ட என்கிட்ட பணம் இல்ல. சோ எனக்கான ப்ளாட்ஃபோர்மா நான் இன்டர்நெட்டை பயன்படுத்திக்கிட்டேன். ஆரம்பத்துல என்னை நம்பி யாருமே வரலை. பட் போகப் போக என்னோட ஐடியாஸ் பிடிச்சுப் போய் நிறைய பேர் வந்தாங்க. பைனலி கிட்டத்தட்ட என்னோட ஆசையை நிறைவேத்திட்டேன். இனி நான் ஆசைப்பட்ட மாதிரியே பில்டிங்கை கட்டினா ஓகே.” என்றான் அவன்.

“க்ரேட் அபூ… மூலதனமா மூளை இருந்தாலே போதும். இந்த எட்டு மாசத்துல இவ்ளோ பெரிய இடத்துக்கு வர்றது சாதாரண விஷயம் இல்ல.”

“ஹா ஹா ம்ம் எங்க டாடி கூட என்கிட்டதான் அட்வைஸ் கேட்பாரு  சாரி என்கிட்ட இல்ல ஏ.எம்கிட்ட.” என இமை சிமிட்டி சிரித்தான் அவன்.

“உங்க அப்பாகிட்ட அது நீங்கதான்னு சொல்லிருங்க அபூ. உங்க அருமை அவருக்கும் தெரியணும்.”  என்றாள் அவள்.

“நோ மிரு… இது வரைக்கும் நாலு கோடி சேர்த்து வெச்சிருக்கேன். இன்னும் மூணு கோடி சேர்த்து மொத்தமா அவங்ககிட்ட கொடுத்துட்டு அதுக்கப்புறமா சொல்லுவேன், ஐ ஆம் த ஓனர் ஆஃப் ஏ.எம் மேனேஜ்மென்ட் கன்சல்டிங் கம்பனின்னு.” என்றவனை பெருமிதமாக பார்த்தாள் மிருணா.

சிப்பிக்குள் மறைந்திருக்கும் முத்து அவன்..!!

குடத்துக்குள் ஒளிரும் விளக்கு அவன்..!!

பாசி மறைத்த நன்னீர் அவன்..!!

என எண்ணியவள் அவனுடைய திறமையை விரைவில் உலகறியச் செய்ய வேண்டுமென எண்ணிக் கொண்டாள். 

“அபூ நான் வேணும்னா மூணு கோடி தரவா.? உங்க அப்பாவோட பணத்தை கொடுத்திருங்க.” என்றாள் அவள்.

“இல்ல மிரு. நானே அதை திருப்பிக் கொடுத்தாத்தான் எனக்கு நிம்மதியா இருக்கும்.” என்றவன் சில மெயில்களை அனுப்பி விட்டு அவளைப் பார்த்தான்.

அந்த ஆழ்ந்த பார்வையில் இமை தாழ்த்திக் கொண்டாள் அவள்.

“எ… என்ன ?”

“எனக்கு ஏன் மூணு கோடி தர்றேன்னு சொன்ன.?” எனக் கேட்டான் அவன்.

“உங்களுக்காக ஏதாவது பண்ணணும் போல இருந்திச்சு. அதனாலதான் அப்படி சொன்னேன்.” என்றாள் அவள்.

“நான் என்ன கேட்டாலும் எனக்காக பண்ணுவியா.?” எனக் கேட்டான் அபூர்வன்.

“ம்ம் கண்டிப்பா பண்றேன்.” என புன்னகைத்தாள் அவள்.

“ஷ்யூர்…?”

“ஷ்யூர் ஷ்யூர்..” என்றவளின் நீல விழிகளை ஆழ்ந்து பார்த்தவன்,

“கிஸ் மீ….” என்றவாறு தன் உதட்டை தொட்டுக் காண்பிக்க உறைந்து போனாள் மிருணா.

💜💙💙💜
 

முத்தம் – 23
 
மிருணாவின் மனதில் இருந்த சிறு உறுத்தலும் தேஜஸ்வினின் செயலில் காணாமல் போயிருந்தது. 

அபூர்வன் தன்னை ஏமாற்றி திருமணம் செய்தது கூட அவளுக்கு இப்போது பெரிதாக தெரியவில்லை. தேஜனைப் போன்ற கயவனிடம் மாட்டிக் கொள்ளாது அபூன்வனின் கை சேர்ந்ததே அவளுக்கு பெரும் நிம்மதியாக இருந்தது. 

தேஜஸ்வின் நல்லவன் எனவும் அபூர்வன் கடைந்தெடுத்த கயவன் எனவும் எண்ணியிருந்த தன் மடமையை எண்ணி நொந்துதான் போனாள் அவள்.

உண்மைதானே..!!

இங்கே இப்படித்தான் சிலர் நாகரிக தோற்றத்தில் பெரும் பதவியில் நல்லவர் வேடத்தில் சுற்றித் திரிகின்றனர்.
 அவர்களுக்குள்ளே இருக்கும் அழுக்கு வெளியே இருப்பவர்களுக்கு தெரிவதே இல்லை. 

வெளியே குடி சிகரெட் உருப்படாதவன் என அனைவரிடமும் திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் அபூர்வனின் மனதோ பளிங்கு போல தூய்மையானது. அவனின் அழகான மறு பக்கத்தை அறிந்து கொண்டாள் மிருணா.

அதை விட அவன் தன் மேல் காட்டும் அக்கறையையும் அன்பையும் அவள் தன் பெற்றோர்களிடம் கூட உணர்ந்தது இல்லையே..

அனைத்திற்கும் மேலாக அவன் பார்க்கும் பார்வை…!!

உயிரை உருக்கி அல்லவா வைக்கிறது. அந்த பார்வையின் அர்த்தம் புரியாது அவள் உள்ளுக்குள் மருகுவது அவள் மட்டுமே அறிந்த உண்மை.

இன்று தேஜஸ்வின் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதும் அவள் அபூர்வனை அழைத்த மறு நொடி அவளுக்காக ஓடி வந்து நின்றானே அவன்.

அவள் சற்று முன் அவனை ஏமாற்றி விட்டதாக அவ்வளவு திட்டியும் கூட அதை கிஞ்சித்தும் மனதில் வைத்து வஞ்சம் காட்டாது அவளுக்காக மூச்சிறைக்க ஓடி வந்து அணைத்துக் கொண்ட ஆண் மகனை எந்த பெண்ணுக்குத்தான் பிடிக்காது..?

அவளுக்கும் பிடித்தது…!!

மெல்ல அவள் மனதில் முதல் அடியை எடுத்து வைத்திருந்தான் அபூர்வன்.

அவனுடைய முதுகுக் காயத்துக்கு மருந்திட வந்தவளுக்கு அவனுடைய தொழில் பற்றி தெரிந்ததும் தூக்கி வாரித்தான் போட்டது. 

அவனுடைய திறமையும் சாதூரியமும் உழைப்பும் புரிய பிரம்மித்துப் போனாள் அவள்.

சொந்தத் தந்தையிடம் அவன் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுப்பதற்காக அவன் கஷ்டப்படுவது புரிய, தன்னால் இயன்ற உதவியை அவனுக்குச் செய்திட அவள் மனம் துடித்தது.

ஆதலால்தான் அவன் எனக்காக எது வேணும்னாலும் பண்ணுவியா எனக் கேட்டதும் உடனே ஆம் என்றிருந்தாள்.

ஆனால் அந்தக் கள்ளன் இதழ் முத்தத்தை அல்லவா அவளிடம் வேண்டி நிற்கிறான். அவனுடைய விருப்பத்தை செவிமடுத்தவளோ உறைந்து போய் நிற்க,

அவளை மேலும் நெருங்கியவன், “கிஸ் மீ மிரு….” என்றான்.

“ஹாங்…?” என திகைத்து விழித்தவளின் முகமோ சிவந்து போனது.

“ஒரே ஒரு கிஸ்தான் மிரு…” என கிசுகிசுத்தவனின் கரங்கள் உயர்ந்து அவளுடைய கன்னத்தை வருட, தேகம் சிலிர்த்தது அவளுக்கு.

சட்டென பின்னால் நகர்ந்து விலகி நின்றவளை மேலும் நெருங்கி வந்தான் அவன்.

“க்கி… கிட்ட வராதீங்க அபூ….” என மேலும் தடுமாறி பின்னால் நகர்ந்தவளை மையல் பொங்கப் பார்த்தவன்,

“நீ அபூன்னு கூப்பிடுற ஒவ்வொரு தடவையும் என்னோட ஹார்ட் பீட் எகிறுது மிரு.” என்றான்.

அதிர்ந்து போனாள் அவள்.. 

இதற்கு என்ன பதிலைச் சொல்வது..? பார்வையால் கொல்லும் அவனை எப்படி எதிர் கொள்வது…? 

அவனோ அவளுடைய கரத்தை பற்றியவன், “அபூன்னு சொல்லிப் பாரேன்.” என ஆழ்ந்த குரல் கூறினான்.

“ம்ஹூம் மாட்டேன்.” எனக் கையை உருவிக் கொள்ள முயன்றவளை பார்த்து புன்னகைத்தவன் மீண்டும், “அபூன்னு சொல்லேன்.” என்றான்.

இவ்வளவு நேரமும் அவனை இலகுவாக அபூ என அழைத்தவளுக்கு அவன் கேட்டதும் இதழ்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டதைப் போல பேச்சு வராமல் சதி செய்தது. 

“மிரு….”

“ம்ம்…?”

“அபூ சொல்லேன்…” 

“அ… அ…….” திணறினாள் அவள்.

“என்னடி அ… ஆ… இ… ஈ… சொல்லிப் பழகிறியா.?” என கேலி செய்தான் அவன்.

“உங்களைஐஐஐ…” என அவனை முறைத்தாள் அவள்.

“ஹா… ஹா…. சரி அபூன்னு சொல்லு.”

“நீங்க ஏன் இப்படி பார்க்கிறீங்க…? எனக்கு ஒரு மாதிரி இருக்கு..” படபடத்தாள் அவள்.

“ஆஹாங்… என் பார்வையே அப்படித்தான்…” என சிரித்தவனின் கண்களை தன் கரத்தால் மூடியவள், மெல்லிய குரலில் “அபூ….” என அழைத்தாள்.

சட்டென அவளுடைய கரத்தை எடுத்து தன் வெற்று மார்பில் பதிக்க, வேக வேகமாக துடித்த அவனுடைய இதயத்தின் துடிப்பை அவளுடைய உள்ளங் கை உணர்ந்து கொண்டது.

“எ… என்ன இப்படித் துடிக்குது…?” என விழிகளை விரித்தாள் அவள்.

“நீ ஒவ்வொரு முறையும் அபூன்னு சொல்லும் போது எனக்குள்ள இப்படித்தான் படபடன்னு இருக்குடி.” என்றான் அவன்.

வேகமாக துடித்த அவன் இதயத்தை மெல்ல வருடினாள் அவள்.

விழிகளை மூடிக் கொண்டான் அபூர்வன். அவளுடைய கரம் அவனுடைய வெற்று மார்பில் ஊர்ந்து வருடி, அவனுடைய படிக்கட்டுத் தேகத்தையும் வயிற்றையும் ஆவலோடு தொட்டுப் பார்க்க, தன் விழிகளை மூடிக் கொண்டான் அவன்.

விழிகள் மூடி இருந்தாலும் அவனுடைய ஒவ்வொரு அங்கமும் அவளை உணர்ந்து கொண்டுதான் இருந்தன.

அவளுடைய மூச்சுக் காற்று தன்னை தீண்டுவதை உணர்ந்தான்..!!

அவளுடைய கரம் மயிலிறகாய் தன்னை வருடுவதை உணர்ந்தான்..!!

அவள் மேனியில் இருந்து வெளிப்பட்ட நறுமணம் தன் நாசியை வந்தடைவதை உணர்ந்தான்..!!

ரசித்தான்…!!

கிறங்கினான்…!!

மயங்கினான்…!!

சட்டென விழிகளைத் திறந்து அவளை பார்வையால் அள்ளிப் பருகினான்..!!

அவன் விழிகளைத் திறந்ததும் சட்டென தன் கையை இழுத்துக் கொண்டாள் நங்கை.

“சரி தூங்குங்க… குட் நைட்…” என்றவாறு செல்ல முயன்றவளின் கரத்தை பற்றி தடுத்தவன்,

“நீ இன்னும் கிஸ் கொடுக்கலை மிரு.” என்றான்.

“ம்ஹூம் கொடுக்க மாட்டேன்.”

“நான் என்ன கேட்டாலும் பண்ணுவேன்னு சொன்னேல்ல.” 

“ம்ம்… ஆ… ஆமா…. ஆனா இது பண்ண மாட்டேன்.. வேற ஏதும் கேளுங்க.” என்றாள் அவள்.

“ஓகே…. கிஸ் பண்ண முடியாதுன்னா நைட் முழுக்க என்னை ஹக் பண்ணித் தூங்குறியா..?” என்றதும் விழிகளை விரித்தவள் தன் விரலை நீட்டி பத்திரம் என்றாள்.

“ஹா….. ஹா….” 

“அபூ ப்ளீஸ்…” என விழிகளை சுருக்கி கெஞ்சியவளின் கூந்தலை சரி செய்தவன்,

“சரி போய்த் தூங்கு மிரு.” என்றான்.
அவளுடைய பூனைக் குட்டியோ பாலைக் குடித்து விட்டு சமத்தாக சோபாவில் உறங்குவதைப் பார்த்தவள் அதனை நெருங்கி அதனைத் தொட்டு தன் இதழ்களில் ஒற்றி கொஞ்சிக் கொள்ள,
 அவளையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தான் அபூர்வன்.

உடல் குறுகுறுக்க அவனைத் திரும்பிப் பார்த்தவள் அவனுடைய ஏக்கப் பார்வையை கண்டு திகைத்தவளாய் நின்றாள்.

பின் அமைதியாக சென்று படுக்கையில் படுத்துக் கொள்ள, அவனும் மின் விளக்கை அணைத்து விட்டு படுக்கையின் மறு பக்கம் படுத்துக் கொண்டான்.

மனதில் இருந்த பாரம் நீங்கி மயிலிறகாய் மனம் இலேசானது போன்ற உணர்வில் மகிழ்ச்சியாக விழிகளை மூடிக் கொண்டான் அபூர்வன்.

அவன் இமை மூடிய அடுத்த நொடியே அவனை முத்தமிட வேண்டும் போல இருந்தது அவளுக்கு.

அவன் ஏக்கமாக பார்த்தது வேறு இவளை இம்சிக்க, புரண்டு புரண்டு படுத்தாள் அவள்.

“என்னம்மா…?” எனக் கேட்டான் அவன்.

“எனக்கு தூக்கம் வரலை அபூ.” என்றாள் அவள். 

“என் பக்கத்துல வா மிரும்மா…” என்றவன் அவளை இழுத்து தன் மார்பின் மீது போட்டுக் கொண்டான்.

அவனுடைய கரங்கள் அவளுடைய கூந்தலை வருட, அவனுடைய இதழ்களோ அவளுக்காக பாடத் தொடங்கின.

“ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு நேர் இவளோ…!!

தாயான தாய் இவளோ தங்க ரத தேர் இவளோ…!!” என அவன் பாட, அவளுடைய விழிகளில் நீர் நிறைந்தது.

மீண்டும் குழந்தைப் பருவத்திற்கே சென்றதைப் போல உணர்ந்தவள் விழிகளில் பொங்கிய நீருடன் விழிகளை இறுக மூடி அவன் மார்பில் புதைந்தாள்.

“மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்..!!

நிழலுபட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்…!!

தூங்காமணி விளக்கே தூங்காம தூங்கு கண்ணே..!!

ஆச அகல் விளக்கே அசையாமல் தூங்கு கண்ணே..!!

ஆராரோ ஆரிரரோ…. ஆரிரோ ஆரிரரோ….

ஆராரோ ஆரிரரோ…. ஓஓஓ… 
ஓஓஓ…. ஆரிரோ ஆரிரரோ….” என்ற அவனுடைய தாலாட்டில் இத்தனை நாள் அவள் ஏங்கிய தாய்ப் பாசம் கிட்டிவிட,
 தேம்பித் தேம்பி அழுதவாறே அவனுடைய மார்பில் குழந்தையாகி உறங்கிப் போனாள் மிருணாளினி. 

எல்லா காதலனும் தன் காதலியை குழந்தையாக நினைப்பானா எனத் தெரியவில்லை. 

ஆனால் நம் அபூர்வனுக்கு அவளுடைய  மிரு என்றும் ஓர் குழந்தைதான்.

********** 

மதுராக் குடியிருப்பில் “வீல்….” எனக் கேட்டது வீணாவின் அலறல்.
பிரசவ வலியில் துடித்தவளை  அவளுடைய தோழி பவித்திராவோ அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்த்தாள்.

வலியில் துடித்தவளை நெருங்கி, “அம்மாடி உன் புருஷன் பேரென்ன.? அவருக்குத் தகவல் சொல்லணும்.” என்றார் தாதி.

மறுப்பாக தலை அசைத்து கூற முடியாது என்றவளின் கரத்தை இறுகப் பற்றிய வீணாவின் தோழி பவியோ, “நான் சொல்றேன் அவரோட பேரு அபூர்வன். மாறன் சாரோட மகன்.” என்றாள்.

“அவரை வரச் சொல்லுங்க.” என்றவாறு தாதி வீணாவுடன் பிரசவ அறைக்குள் சென்று விட, பவியோ அபூர்வனைத் தேடி அவனின் இல்லத்திற்குச் செல்லத் தொடங்கினாள். 

அமைதியாக செல்லும் மிருவின் வாழ்க்கையில் புயல் வீசுமோ..? 
 
💜💙💜

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *