பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

 3
பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்
ஜியா ஜானவி
ஹாலில் அமர்ந்திருந்த அனைவரும் நிவா சர்வா சென்ற அறையை பார்த்த வண்ணமே அமர்ந்திருந்தார்கள். சிறிது நேரத்தில் வெளிவந்த சர்வா முகத்திலிருந்து எதையும் அறிய முடியவில்லை அவர்களால். அவனது முகம் சலனமற்று  நிர்மலமாக இருந்தது. 
வந்து அமர்ந்தவன் முகத்தையே அனைவரும் உற்று உற்று பார்த்துக் கொண்டிருக்க.. சுபி தன் கணவனிடம் “அப்பாடா முழுசா திரும்பி வந்துட்டார்” என கிசுகிசுத்தாள். நிரஞ்சன் அவளை முறைக்க அவள் கண்களில் உண்மை தானே சொன்னேன் என்ற பாவம்.
எல்லோரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவன் ” எனக்கு ஓகே தான்.. மீ” என்றான் பெற்றோரை பார்த்து.
நிவா வீட்டினர் அனைவருக்கும் இதுவரை அடைப்பட்டு இருந்த ஆக்சிசன் கிடைத்த சந்தோசம். சுசீந்திரன் மேலும் பேச்சை வளர்க்காமல் “அப்போ தட்டை மாற்றி.. ஒப்பு தாம்பூலம் செய்துகலாமா ” என வினவினார் காரியத்தில் கண்ணாக.  இதற்காகவே காத்து இருந்த ரேவதி சரி என்று கூறி தன் டிரைவரை அழைத்து காரில் உள்ள பொருட்களை எடுத்து வர சொன்னார் பின்னே மகனின் மனது மாறிவிட்டால்.
வெள்ளி தாம்பாளத்தில் பழங்கள்.. பூக்கள்.. உடன் தாமரை வண்ணத்தில் அழகிய பட்டு புடவையுடன் ரூபி செட் ஒளிர தட்டை சுசீந்திரன் தம்பதியரிடம் கொடுத்தார்கள் சர்வாவின் பெற்றோர்.
தட்டை சுபியிடன் கொடுத்த வித்யா “நிவாவை ரெடி பண்ணி  கூட்டிட்டு வா” என்றார். அவரை பாவமாக பார்த்த  சுபி மறுபடியும் முதல்ல இருந்தா என்று மனதுக்குள் கவுண்டர் கொடுத்துக்கொண்டே நிவா இருக்கும் அறையை நோக்கி சென்றாள்.  
சர்வா சென்றது கூட தெரியாமல் அதிர்ந்த நிலையிலேயே அமர்ந்திருந்தாள் நிவா. சர்வாவின் கோபத்தை எதிர்பார்த்திருந்த நிவா அவனின் இந்த நிதானத்தையும் அவன் கண்ணில் தெரிந்த கோபத்தையும் பதிலுக்கு பதில் அடிப்பான் என்று துளியும் எண்ணவில்லை.  சுபியின் பேச்சிலிருந்து சர்வா சற்று மென்மையானவன் என்றும் கொஞ்சம் அவனது தன்மானத்தை தீண்டினால் கோபம் கொண்டு தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லி சென்று விடுவான் என நினைத்தாள். ஆனால் அவளது கணிப்பை தவிடுபொடியாக்கி தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்ளும் சர்வாவைப்பற்றி அவள் அறியவில்லை. தன் போக்கில் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்க வெளியில் நடந்த ஒப்பு தாம்பூலம் அவளுக்கு தெரியவில்லை. அவளை தோளைத் தொட்டு “நிவா நிவா” என்று  உலுக்கிய சுபியின் பேச்சில் சிந்தனையிலிருந்து மீண்டாள். 
சர்வாவின் மீது இருந்த கோபத்தை அண்ணியிடம் திருப்பி என்ன என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டாள். சுபியின் கையிலிருந்த தாம்பாளத்தை பார்த்ததும் நெற்றி சுருங்க ஒரு நிமிடம் யோசித்தவள் விஷயம் புரிபட தாம்பளத்தை பிடிங்கி தூக்கியெறிய முயன்றாள். அவளது எண்ணத்தை யூகித்தவாறு அங்கு வந்த வித்யா அவள் கையை பிடித்து தடுத்து விட்டார்.
நிவா “வெளில உங்க அப்பா இருக்காங்க..  நீ பாட்டுக்கு இஷ்டத்துக்கு ஆடாதே. ஒழுங்காக புடவை கட்டிட்டு வர வழியை பாரு”  எனவும் அம்மாவை ஒரு முறை  முறைத்தவள் அண்ணியிடம் திரும்பி வெடுக்கென்று புடவை எடுத்துக்கொண்டு டிரெஸ்ஸிங் ரூம் நோக்கி சென்றாள்.
“ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பாபா….  இப்பவே கண்ண கட்டுதே  இன்னும் இவளை கல்யாணம் வரைக்கும் எப்படி கொண்டுவர போறேன்னு தெரியலையே” என்று சுபியை பார்த்து புலம்பினார்.
“அத்தை ஒண்ணு கவனிச்சீங்களா … இந்த நிவா மாப்பிள்ள கிட்ட என்னவோ சொல்லி இருக்கா போல, மாப்பிள்ளையும் திரும்ப பேசி இருக்கினும். நான் வரும் போது பேய் அடிச்ச மாதிரி உட்கார்ந்து இருந்தா.. நான் என்ன நினைக்கிறேனா மாப்ள நம்ம நினைச்ச அளவு ரொம்ப பொறுமையானவர் இல்ல போல”  மேவாயில் ஆள்காட்டி விரலை வைத்து யோசித்தவாறே சொன்னாள்.
“அப்படி இருக்குமோ.. ஆனா அந்த தம்பி பார்த்தா அப்படி தெரியலையே ” என்று வித்யா சொல்லிக் கொண்டிருக்கும்போதே நிவா புடவை மாற்றி வந்தாள்.
நிவாவுக்கு சர்வா வீட்டில் கொடுத்த ரூபி செட்டை அணிவித்த சுபி நிவாவை அழைத்துக்கொண்டு வித்யா முன்னே செல்ல பின் தொடர்ந்தாள்.
நிவா வந்தவுடன் அவளை பார்த்த அனைவருக்கும் பரம திருப்தி ரேவதி ஒருபடி மேலே போய்  நிவாவுக்கு திருஷ்டி கழித்தார்.
முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல் கண்ணில் சிறு ரசனையோடு பார்த்துக்கொண்டிருந்தான் சர்வா. தாமரை வண்ணப் புடவையில் அவன் கண்களுக்கு அவள் உயிருள்ள தாமரையாகவே தெரிந்தாள். 
“சர்வா இந்த  மோதிரத்தை மருமகளுக்கு போட்டுவிடு”  என்ற அன்னையின் அழைப்பில் எழுந்தவன், அதே ரசனை கண்ணோடு  நிவாவை நோக்கியவாறு சென்றான்.
“தம்பி சர்வா … மோதிரம் என்கிட்ட இருக்கு” என்ற தாயின் கிண்டலில்  மென்னகை புரிந்தவன் அன்னையிடமிருந்து வைர மோதிரத்தை வாங்கினான்.  அழுத்தமான காலடிகளுடன் தன்னை நோக்கி வரும் சர்வாவை பார்த்தவண்ணம் நின்றிருந்தாள் நிவா தன்னை மீறி நடக்கும் இந்த நிகழ்ச்சியை சற்றும் ஒத்துக் கொள்ள முடியாமல்.
ரசனையான பார்வை நிவாவின் அருகில் வந்ததும் சற்று கோபம் கலந்து உரிமை பார்வையாக மாறியது சர்வாவுக்கு. தன் கையை இறுக்க மூடி  நின்றிருந்த அவளது கைகளை இழுத்து சற்று வன்மையாக மோதிரத்தை அணிவித்தான். 
மோதிரத்தை அணிவித்தவன் அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு் நிவாவின் கையில் தன் இதழ்  முத்திரையை பதித்தான்.  “மை கேம் ஸ்டார்ட் பேபி.. முடிஞ்சா நீ தடுத்து பாரு.. ஐ அம் இகேர்லி வெயிட்டிங் ”  ஒற்றைக் கண்ணை அடித்தவாறு கூறினான். 
அவனை கண்களால் எரித்தவாறு “கண்டிப்பா பார்க்கத்தான் போற.. நீ” என்று விரல் நீட்டி கூறினாள். நீட்டிய அவள் விரலை தன் விரலால் பிடித்தவாறு “பார்க்க நான் இப்பவே ரெடி… ஆனால் நீ இப்போ பாதி பொண்டாட்டிதானாம்.. அதனால ஃபுல் பொண்டாட்டியா ஆன பிறகு பாத்துக்குறேன் பேபி..” என்றான் கிறக்கமாக.
அவனின் பேச்சில் பயந்தால் அவள் நம் சண்டி  ராணியே இல்லையே.  அவனை முறைத்தவாறு இதழை சுளித்து நக்கலாக சிரித்தாள் பொண்டாட்டி ஆன தானே என்ற செய்தி அதில் இருந்தது. அவளின் செய்தியை சரியாக படித்த சர்வா ” இந்த சர்வாவின் சரி பாதி நீயே தான்.. என்றவன். மெல்ல அவள் புறம் சற்று சரிந்து ,” இந்த டெரர் லுக் கொடுக்குற உன் கண்களை சீக்கிரம் ரொமான்டிக் லுக் விட  சொல்லி கொடு.. அப்புறம் முக்கியமான நேரத்தில் தெரியுமா நீ முழுக்க கூடாதுல..” என்றான் நக்கல் வழிந்த குரலில்.
சந்தர்ப்பம் அவனுக்கு சாதகமாக இருக்க அவளால் அவனை முறைக்க மட்டுமே முடிந்தது. மேலும் அவளை வம்பிழுக்க நினைத்து தன் இதழ் குவித்து பறக்கும் முத்தம்  ஒன்றை வீசினான்.
நிவாவை மறைத்த வண்ணம்  சர்வா நின்று இருக்க, அவர்களுக்கு நடந்த இந்த சேட்டையை  அனைவருக்கும் தெரியவில்லை என்றாலும் இவர்களையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்த  சுபி ஆவென வாய் பிளந்தாள்.
பின் அனைவரையும் விருந்து உண்ண அழைத்து செல்ல அந்த பிரம்மாண்டமான உணவு மேஜையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு இணையான உணவுகள் நிரம்பி வழிந்தன. நிரஞ்சன் கண் அசைவில் பணியாளர்கள் அனைவருக்கும் பரிமாற நிவாவின் அருகில் சுவாதீனமாக சென்று அமர்ந்தான். 
சர்வாவின் இந்த உரிமையில் உள்ளே அதிர்ந்தாலும் வெளியில் அலட்டிக்காமல் அமர்ந்து உணவு உண்டவளை நெற்றி சுருங்க பார்த்து வெறித்தவன் சற்றென்று முகபாவனை மாற்றி அவனும் உணவு உண்டான்.
இவர்களின் அன்னியோன்யம் தயானந்த தம்பதிக்கு நிறைவை  கொடுத்தது என்றால் நிவாவின் வீட்டினருக்கோ அவளின் எதிர்ப்பு இல்லாததே பெரிது   என்று பெரு மூச்சு விட வைத்தது. ஆனால் சுசீந்திரன் மட்டும் மகளை நம்பாத பார்வை பார்த்து கொண்டு இருந்தார் . அவரின் அரசியல் அனுபவமும் பெண்ணை பற்றி அறிந்தவர் ஆகையால். 
சர்வாவின் குடும்பம் சென்றதும் வழக்கம்போல சுசீந்திரன் வித்யாவை பார்த்து பார்த்துக்கோ என்று கூறியவர் தன் காரில் விரைந்து விட்டார் அந்த வீட்டிற்கு. அப்பாவின் அந்த செயலில் தோன்றிய அருவருப்பை அப்பட்டமாக முகத்தில் காட்டினாள். 
வீட்டில் உள்ளவர்களை ஒரு முறை கண்களால் எரித்தவள், பிறகு அலட்சியமான பாவனையுடன் தன் அறைக்கு சென்று கதவை அறைந்து சாத்தினாள்.
வித்யா நிரஞ்சன்  சுபி மூவரும் சற்று நேரம் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு தத்தம் வேலையை பார்க்க சென்றனர் இது வழக்கமாக நடப்பதுதான் என்பதை போல.
அறைக்குள் நுழைந்தவள் முதலில் சர்வா வீட்டில் கொடுத்த நகைகளை பிக்காத குறையாக கழட்டி மெத்தையில்  எறிந்தாள். அதேபோல் சேலையையும் உடனடியாக மாற்றியவள் அவளுடைய  வழக்கமான குர்தி  பிளாசோவுக்கு மாறினாள். அடுத்த நொடி அவளுடைய கை தன் காதலன் நம்பருக்கு முயன்று கொண்டிருந்தது. இவள் அழைப்பு விடுத்துக் கொண்டே இருக்க அந்த பக்கம் எடுத்த பாடுதான் இல்லை. ஒரு முடிவுக்கு வர இயலவில்லை பெண்ணால்.
ஆத்திரம் கோபம் அழுகை எல்லாம் ஒருங்கே வர மொபைலை தூக்கி எறிந்துவிட்டு மெத்தையில் படுத்து தூங்க ஆரம்பித்தாள். தூக்கமும் ஒரு வித ரிலாக்சேஷன் தானே. 
தங்கள் வீட்டிற்கு சென்றதும் தயானந்த தம்பதியினர்  மகனிடம் பேச செல்ல அவனோ தனக்கு முக்கியமான ஒரு வேலை இருப்பதால் சென்னை செல்வதாக கூறி  வீட்டிற்குள் நுழையாமல் விமான நிலையம் நோக்கி பறந்து விட்டான். அவனுக்கு தனியாக யோசிக்க வேண்டியிருந்தது நிவாவை பற்றி..
நள்ளிரவில் சென்னை வந்து இறங்கியதும் உதவியாளர் கொண்டுவந்த தன் ஆடியை எடுத்துக் கொண்டு பறந்தான்.
அவளிடம் இலகுவாக பேசிவிட்டு வந்தாலும் சர்வாவின் மனதுக்குள் நிவா பேசிய சொற்களே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. புத்தி கடிவாளம் இட்டாலும் மனது என்னவோ அவளிடம் பேசிய அந்த நொடியிலேயே நின்றது.
அந்த நள்ளிரவில் மிக வேகமாக காரை விரட்டி சென்றவன் போய் நின்றது நகரத்தைக் கடந்து  பல ஏக்கரில் இருந்த அவர்களுடைய பண்ணை வீட்டில். சுற்றிலும் பழ தோட்டங்களை கொண்டு அழகாக அமைதியாக  இருந்தது. பாதுகாப்பும்  நவீன வசதிக்கும் ஒரு குறைச்சல் இல்லாமல்.
தன் அறைக்கு சென்று தன் மனதை நிலை படுத்திக் கொள்ள  முடியாமல் அவளது வார்த்தையில் உழன்று கொண்டிருந்தவன் இதற்கு மேல் தாங்காது என்று நினைத்து நீச்சல் குளத்தில் இறங்கி நீந்த துவங்கினான். அரை மணி நேரத்திற்கு மேலாக நீந்தியவன் கரையேறி அங்கு இருந்த  சாய்வு நாற்காலியில் கண்மூடி சாய்ந்தான். இப்போது மனது சற்று ஆசுவாசப் பட்டிருந்தது. இது அவனது வழக்கமான ஒரு உத்தி மனம் கோபத்தில் இருந்தாலும் குழப்பத்தில் இருந்தாலும் நீச்சல் தான் அவனுக்கு  ரிலாக்சேஷன். நம் நிவாவுக்கு தூக்கத்தை போல.
கண்கள் மூடி இருந்தாலும் மனது அந்த நிகழ்ச்சியை கண்முன்னே கொண்டு வந்தது. அவனது வாயோ ” ஹவ் டேர் யூ ” என முணுமுணுத்தது.
தனியறையில் நிவாவின் செயல்களை ரசித்துக்கொண்டிருந்தவனிடம் அந்த வார்த்தையை விட்டாள் அவன் பாதி பொண்டாட்டி.
” ஆர் யூ ய வர்ஜீன்? ஏன்னா நீங்க வெளிநாட்டில் ரொம்ப நாளா இருந்ததா சொன்னாங்க. அதான் கேட்டேன். ” என்று அலட்சியமாக கேட்டாள்.
அவளின் கேள்வியில் அவனுக்கு கோபம் மிகுதியாக கிளர்ந்தது.. ஆனாலும் பல வருட அனுபவம் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவளிடம் சவால் விட்டு வந்து விட்டான்.
இப்போது நிதானமாக,  இவன் சென்றதிலிருந்து அவளின் செயல்களையும் கண்களின்  அலைபுறுதலையும் யோசித்துக் கொண்டிருந்தான் எங்கேயோ எதையோ மிஸ் செய்வதாக.
ஏனென்றால் நான் தனியாக பேச வேண்டும் என்று சொல்லும்போது அவள் கண்களில் தெரிந்த அந்த மினுமினுப்பு அவள் பெற்றோர்களிடமும் தெரிந்த அந்த படபடப்பு இன்னும் சற்று குழப்பம் செய்தது.
சட்டென்று அவன் மனதில் அந்த எண்ணம் ஒருவேளை அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்திருந்தால் … இதை நினைக்கையில்  சுணங்கிய மனதை கடிவளாமிட்டு் தன் எண்ணத்தை அவளின் மீது செலுத்தி யோசித்தான்.  
சட்டென்று ஒரு ஸ்பார்க் அவனிடம்.
இப்படி சொல்லி நம் தன்மானத்தை தூண்டி கோபம் கொண்டு திருமணத்தை நம்மை வைத்தே நிறுத்த திட்டம் செய்திருப்பாளோ..  ஆம் அதேதான் அதேதான்.. அவன் மனமும் புத்தியும் அடித்துச் சொன்னது. அவளின் அந்த திட்டத்தில் கோபம் வந்தாலும் அந்த புத்தி சாதுரியத்தில் புன்னகை கொண்டது அவனது வதனம்..
“வரேண்டி…  சண்டிராணி…  ” என்று வாய் விட்டு கத்தி சொன்னான் சர்வா.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *