பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்
பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்
ஜியா ஜானவி..
மச்சத்தை கண்டவுடன் வந்த கிறக்கம் எல்லாம், பூனையை மயக்க நிலையில் கண்டவுடன் விழுந்தடித்து கொண்டு ஓடியது.. பொங்கி வந்த பெருங்காதலும் அதல பாதாளத்தில்…
சிந்தனையுடன் நின்றவனை தன் தளிர் கரம் கொண்டு நிவா உலுக்க, மீண்டும் கிறங்க போன மனதை , மூளை ’ பீ கேர் ஃபுல்’ என்று எச்சரித்தது.
” வாங்க.. வாங்க சர்வா… சாப்பிடலாம்… “
” பேபி.. மீ சோ டயர்ட்.. ஃப்ரெஷ் பண்ணிட்டு வரேன்”
” நோ.. நோ.. வே… அப்புறம் சூடு ஆறி போய்டும்.. டேஸ்ட் போய்டும்”
” ஆனாலும் பேபி… உனக்கு மன தைரியம் ஜாஸ்தி தான்.. இரண்டு மியாவ் வும் விழுந்ததுலேயே தெரிய வேணாம்..”
” கரெக்ட்.. சர்வா.. பாருங்க ஃபுல் கட்டு கட்டிட்டு… எப்படி தூங்கிதுன்னு..”
” அது டெம்ரவரியா? இல்லை பர்மணன்ட் ஆன்னு நாளைக்கு தெரியும் பேபி”
“ம்ப்ச்.. இப்போ வர போறீங்களா? இல்லையா?”
” வரேன்.. வரேன்.. விதி வலியது பேபி”
” சோ.. ஸ்வீட்.. ” என்று கூறி சென்றவளை பார்த்து,’ இந்த கொஞ்சலுக்கும் பின் என்ன ஆபத்து இருக்கும்ன்னு தெரியலையே.. எதுக்கும் ஆம்புலன்ஸ் ரெடியா இருக்க சொல்லனும்’ என்று புலம்பிவாறு பின்னே சென்றான்.
மஞ்சள் கலரில் ஏதோ ஒரு வஸ்த்து உருண்டு கிடக்க, மற்றொரு பத்திரத்தில் கருகிய நிலையில் இன்னொன்று… ’ ஆண்டவா… ’ என்று அலறிய மனதை தேற்றிக்கொண்டு..
” நிவி பேபி… என்னடா இது?”
” சர்வா… இது நூடுல்ஸ் .. இதுகூட உங்களுக்கு தெரியலையா… ?”
இந்த மஞ்சள் வஸ்த்து நூடுல்ஸ்ஸா. இதை சீனாக்காரன் பார்த்தான் நூடுல்ஸ்ல தூக்கு மாட்டி செத்துடுவான்.. என்று மனதுக்குள் மட்டுமே நினைத்துக் கொண்டு வெளியில் இளித்து வைத்து, ” மார்வெல்லஸ்.. நெக்ஸ்ட் ஒன்”
” அது.. சீஸ் பிரெஞ்ச் டோஸ்ட்…” என்றாள்.
’ என்னடா.. பிரெஞ்ச்க்காரனுக்கு வந்த சோதனை.. உலகத்துலேயே ஈசியா செய்யுற ஒரே ஐட்டம் பிரெட் டோஸ்ட் தான்.. அதையே இப்படி செய்சு வைச்சு இருக்கா .. அம்மாடி என்னே உன் சமையல் அறிவு’ என்று வாய் பிளந்தான்.
இனி இவளை சமைக்க விட்டோம் , போட்டு தள்ள வெளியால் யாரும் வர வேண்டாம் … இவளே போதும் என்று நினைத்தவன்.. மெல்ல அவள் அருகில் வந்து,
அவள் இடையொடு அணைத்து, ” நிவி பேபி… உனக்கு செஃப் கெட் அப் நல்லாவே இல்ல டா… இந்த பாய் பிரண்டை மயக்க வேற டிரை பண்ணு..”
” என்னது.. மயக்கவா… போன போகுதுன்னு காலையில் இருந்து கஷ்டப்பட்டு சமைச்சு வச்சா.. என்னை நக்கல் பண்ணுறீங்க … போங்க..” என்று அவன் கை வளைவில் இருந்து வெளி வர போராட..
” ஓஹ்.. மை நிவி பேபி.. டோண்ட் ஆங்கர்.. என் மேல உள்ள உன் அக்கறை பார்த்து எனக்கு ஜிவ்வுன்னு இருக்கு.. ஓகே .. இனி நானும் வரேன்.. உனக்கு தெரியாததை சொல்லி கொடுக்க தான் நான் இருக்கேனே” வழக்கம் போல நாக்கை கன்ன சுவற்றுக்குள் குழைத்து…இரண்டு பேரும் சேர்ந்தே செய்யலாமா..”
” எதை..” என்றாள் வெகு ஜாக்கிரதையாக..
“சமையல் மா… சமையல்…” என்றான்
” நிஜமா..” என்று புருவம் ஏற்றி நம்பா பார்வை பார்த்தவளை…
நெற்றி முட்டி” நிஜமா… ” என்று கூறி அவளை கையுடன் தங்கள் அறைக்கு அழைத்து சென்று விட்டான் சர்வா… இதை கூட சமாளிக்க முடியவில்லை எனில் அவன் என்ன உலக புகழ் சி. இ.ஓ …
மறக்காமல் சென் னுக்கு ஃபோன் செய்து வெளியில் இருந்து சாப்பாடு வாங்கி வர சொன்னான்.. பின்னே சாப்பாடு .. அதானே எல்லாம்..
சொல்லை செயல் படுத்தவில்லை என்றால் அவன் சர்வா இல்லையே.. தினமும் காலையில் எழுந்து ஜாக் செய்து விட்டு வருபவன், தன் காதல் கிளி கும்பகர்ணியாக தூங்குவதை பார்த்து, தலையில் அடித்து கொள்வான். அவளை எழுப்பி ஃப்ரெஷ் செய்ய சொல்லி, கையுடனே சமையல் அறைக்கு அழைத்து செல்வான்.. இல்லையெனில் அவள் அடுத்த ரவுண்ட் தூக்கத்திற்கு ரெடி ஆகிவிடுவாள்..
சின்ன சீண்டல்கள், அவ்வபோது சில்மிஷங்கள் என்று சமையல் அறை அவர்களின் அந்தரங்க அறையாகி போனது .
சர்வாவின் அருகில் நிவா தன் கூட்டையை விட்டு வெளியே வந்து அவனுடன் சகஜமாக பழகுவாள். ஆனால் அவன் அருகாமை நீங்கியதும், பழைய குருடி.. கதவை திறடி கதை தான் நடக்கும்..
பெரும்பாலும் மாலை வருபவன், சில நேரங்களில் இரவு தான் வருவான்.. அவளின் முக குழப்பமே அவனுக்கு நிவாவின் நிலையை நன்கு உரைத்து விடும்…
இவளை இப்படியே விட கூடாது.. உள்ளதும் போய்விடும்.. என்று அதற்கு முதற் கட்ட வேலையை தொடங்கினான்.
மறுநாள் காலையில் தன் கழுத்து அருகே உணர்ந்த கூச்சத்தில் நெளிந்தாள் நிவா, மீண்டும் தூக்கத்தில், மீண்டும் மீண்டும் ஏற்பட்ட அதே கூச்சத்தில் மெல்ல கண் திறக்க, அவள் கண்ணில் பட்டது அடர்ந்த அலை அலை என சிகை… தன் போல கோத கை செல்ல, சட்டென்று கையை எடுத்துக் கொண்டாள்.
ஒன்றும் புரியாமல் எப்படி நகர்த்துவது என்று யோசனையை கலைத்தது , கழுத்தின் அவள் மச்சதின் அருகில் உணர்ந்த அந்த வெப்ப மூச்சு காற்று, அவளின் சுவாசம் எக்கு தப்பாக மாறியது.. இதை எதையும் அறியாமல் நன்றாக அவளின் கழுத்து வளைவில் தன் முகம் புதைத்து தூங்கி கொண்டிருந்தான் சர்வா.
உணர்வு குவியல்கள் கழுத்து அருகில் மிக மிக அதிகம்.. மிக எளிதாக தூண்டி விட முடியும் அப்பகுதியில் இருந்து… ஆனால் கத்து குட்டி நிவாவிற்கு எங்கே அதை எல்லாம் தெரிய போகுது, மெல்ல அவன் தலையை எடுத்து அருகில் தலையணையில் வைத்து விட்டு, ” ஸ்ஸ்ப்பா… எப்படி இப்படி இவரால் தூங்க முடியுது… ஆனா நமக்கு மட்டும் வயிற்றில் ஏதோ செய்யுதே… என்னவா இருக்கும்.. எதற்கும் பாத் ரூம் போட்டு வரலாம்” என்று சத்தமாக தனக்குத்தானே பேசி கொண்டு சென்றாள்.
அவளின் செயல்களை யாவையும் ரசித்து கொண்டே , கண்களை மூடி படுத்திருந்தான் அந்த கள்வன்.. நம் பிளான் ஒர்க் அவுட் ஆகிறது என்ற நினைப்பில்…
குளியலறையில் இருந்து வந்த நிவாவின் கண்கள் மெல்ல மூடப்பட, விழிகள் மூடப்பட்டாலும் உணர்வுகள் அவன் தான் என்று சொல்ல, ” என்ன சர்வா … என்ன விளையாட்டு” என்று சிணுங்கியவாறு கேட்க..
” ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் வா.. ” என்று அவளை அழைத்து கொண்டு, மாடியில் அவர்கள் அறையில் அருகில் இருந்த மற்றொரு அறைக்கு அவளை அழைத்து சென்றான். மெதுவாக அவள் கண்களை விலக்க, இருட்டில் இருந்து ஒளிக்கு பழகிய அவள் கண்கள் அறையை சுற்றி நோட்டம் விட… இன்னும் பெரிதாக விரித்தாள் அவள் கயல்விழிகளை…
அவ்வறை முழுவதும், அவளின் காலை பிரத்யேகமான சிண்ட்ரெல்லா வேளையில் தான் விரும்பி ஆடும் பெல்லி டான்ஸ் க்கு தேவையான, சவுண்ட் சிஸ்டம்ஸ், ஒரு ராக் முழுவதும் சிடி ஸ், மூன்று புறமும் கண்ணாடிகள் பதிக்கப்பட்டு அவளின் பிம்பங்களை பிரதிபலித்து கொண்டு ஒரு மாயா லோகம் அவள் கண் முன்னே விரிந்தது..
ஆச்சரியங்கள் மேவுற ஒவ்வொரு பொருட்கள் அருகிலும் சென்று அதனை மெதுவாக தடவியவாறு , கண்கள் மகிழ்ச்சியில் விகசிக்க, அந்த அறையை சுற்றி சுற்றி வந்து பார்த்தாள்.
அவளின் கண்களில் துள்ளும் மகிழ்ச்சியையும், முகத்தில் நொடிக்கு நொடி காட்டும் பாவனைகளையும் ரசித்து கொண்டே, இரு கைகளையும் குறுக்கே கட்டி கொண்டு, வாசல் கதவில் சாய்ந்தவாறு நின்று கொண்டு இருந்தான் சர்வா கண்களில் காதல் வழிய..
அவளின் அந்த சந்தோச மோனா நிலையை கலைக்கமால் கண்களால் நிவாவை பருகி கொண்டிருந்தான்.
நிவா அவள் மிக சாதாரணமாக தன் அறைக்குள் மட்டுமே ஆடும் ஒரு தேர்ந்த ரூம் டான்சர்..
சில நாட்கள் முறையாக அவள் பயிற்சி பெற்று வந்தாள் ஆனால் அவளின் அப்பாவிற்கு இது தெரிய வந்த போது, ” அது என்ன.. பொட்ட புள்ள போய் இந்த மாதிரி ஆட்டம் கத்துக்கிறது. வேணும்னா பரதம் கத்துக்கோ.. இது எல்லாம் நம் குடும்பத்துக்கு வேண்டாம்.. கூடாது..” என்று முடித்து விட, இவளும் மேற்கொண்டு அப்பயிற்சிக்கு செல்ல வில்லை. அப்பாவிற்கு பயந்து என்றால் ஆம்… ஆனால் அந்த பயம் அவளுக்கானது இல்லை.. இவளின் பயிற்சி ஆசிரியையை ஏதேனும் செய்ய வாய்ப்புகள் அதிகம் என்பதால்..
தன் விருப்பதை அவள் அன்னையிடம் சொல்ல முடிவதில்லை.. தந்தையை மீறி அவர் ஒன்றும் செய்ய மாட்டார்.. தனயனோ செய்ய இயலாது.. பின் சொல்லி என்ன பயன் என்று.. இவ்வாறு அவளுக்கு பிடித்த விஷயங்கள் அவள் தந்தையால் மறுக்கப்படும் போது, அவள் தன்னுள் அதை அடக்கி விடுவாள்.. அதற்கு பின் வீட்டில் உள்ளவர்களிடம் அதை காண்பிக்க , அவளின் நடைமுறை எல்லாம் முற்றிலுமாக மாறியது…
மேலும் அவர் இவளுக்கு பரதம் கத்து கொடுக்க வேண்டி வீட்டுலேயே வந்து சொல்லி கொடுக்க ஒருவரை நியமிக்க, அவரே நொந்து ஓடுமாறு செய்து விட்டாள், அப்பாவிற்கு மகள் சளைத்தவள் இல்லை என்று.. அவள் இஷ்டம் இல்லாமல் அவளை எதுவும் செய்விக்க முடியாது என்கிற விதமாய் மாறினாள்.
அன்று முதல் தன் நடனம் அவள் மட்டுமே ரசிக்க என்று தன் அறைக்குள்ளே ஆடுவாள். அந்த நேரத்தில் யாரும் வந்து தொந்தரவு செய்வது அவளுக்கு பிடிக்காது.. அவளுடைய சிண்ட்ரெல்லா நேரம்.
நிவாவின் ஆசை இப்போது அவள் கண் முன்னே… ஆனால் சர்வாவிற்கு எப்படி தெரியும்.. ஒரு முறை மட்டுமே அவளுடைய நடனத்தை பார்த்து இருக்கிறான். அதற்கு பிறகு அவள் அவன் எதிரே ஆடவில்லை.. அதன் பொருட்டே அதிக நேர தூக்கம்.. எப்படி இவன் கண்டுபிடித்தான் என்று ஆச்சரியம் பெண்ணவளுக்கு.
” சர்வா… தாங்க்ஸ்.. தாங்க்ஸ் ஏ லாட்” என்றாள் உணர்ச்சி மிகுதியில்..
” யாராவது பாய் ப்ரெண்ட்க்கு தாங்க்ஸ் சொல்லுவாங்க.. அப்படியே சொன்னாலும், இப்படியா பத்து அடி தள்ளி நின்று சொல்லுவாங்க… பேபி”
” கரெக்ட்…” என்றதும் , சர்வாவின் கண்கள் விரிய, அவளருகில் வந்து அவன் கை பிடித்து குலுக்கி , ” தாங்க் யூ வெரி மச்” என்றாள்.
” அதுக்கு நீ அங்கேயே நின்று சொல்லி இருக்கலாம்..” அவன் சலித்து கொள்ள..
” நீங்க தான்.. என்னை கேர்ள் ப்ரெண்ட்ன்னு சொல்லி கிட்டு இருக்கீங்க .. நான் எப்போ சொன்னேன். நான் சொல்லுற மாதிரி.. அதாவது என் மனதில் இருந்து சொல்லுற மாதிரி நீங்க இன்னும் இங்க வரல” என்று தன் நெஞ்சை தொட்டு காட்டினாள்.
ஒரு முறை அவன் கண்கள் அவள் மென்மைகளில் சென்று மீள, அவள் கை பற்றி ஒரு சுழட்டி சுழட்டினான், பின் அவள் இடுப்பில் தன் கைகள் கோர்த்து தன்னுடன் இணைத்து, ” சோ.. நான் இதுவரை உன்னை அட்டார்க்ட் பண்ணல… அட்மையர் பண்ணல.. ஓகே.. அப்போ பண்ண வச்சிடுவோம்” என்று கூறி அவள் நெற்றியில் முத்தம் வைத்து, ” வெயிட்டிங் ஃபார் மை ஆக்சன்ஸ் பேபி” மீண்டும் ஒரு சுழட்டில் அவளை விட்டு நகர்ந்து சென்று விட்டான்..
ஆபீஸ் நுழையும் போதே ஜென் மிக டென்ஷன் ஆக இருப்பதாக பட்டது சர்வாவிற்கு.. ஏனிந்த டென்ஷன், பதட்டம் சர்வா புரியாமல் அவரை நெருங்கி,
” ஜென்.. வாட் ஹேப்பெண்ட்?”
” சர்.. சர்.. என்று மென்று முழுங்கினான்..
” ஸ்பீக் அவுட் மேன்” என்று அவன் கத்த,
எச்சிலை விழுங்கி தொண்டையை சரி செய்து , ” சர் நாம செய்த டிசைன் இப்போ காம்படீட்டர் கையில்”
” வாட்.. கம் அகைன்” என்று கர்ஜித்தான்.
” எஸ் சர்.. சென் பர்செண்ட் ட்ரூ நியூஸ் சர்” என்றான் மெல்லிய குரலில்…
” ஹவ் குட் இட்ஸ் பாசிபிள்?” ஒன்னரை மாதங்கள் செய்த கடும் உழைப்பு.. எப்படி.. எப்படி.. என்று சிந்தனை முழுவதும் அறியாத அந்த எதிரி மேல்..
அவன் தேர்ந்தெடுத்த அவன் ஊழியர்கள் மேல் சந்தேகம் கொள்ளவும் வழியில்லை.. பின்… எப்படி . எங்கே.. எவ்வாறு தப்பு நிகழ்ந்தது… என்று அவன் யோசனையுடன் தன் அறையில் நடந்து கொண்டிருக்க.. அதை இரு கண்கள் மகிழ்வுடன் பார்த்து கொண்டிருந்தது..
நிவாவின் மனதை கொள்ளை கொள்ளுவானா காதலனாக?
முகம் தெரியா எதிரியை கண்டறிந்து வெற்றி கொள்வானா உலக புகழ் சி. இ. ஓ. வாக?
