பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்

15
பெருங்காதல் வைத்து காத்திருந்தேன்
ஜியா ஜானவி ❤
சர்வா மற்றும் அவன் ஊழியர்களின் கடும் உழைப்பு காரணமாக அவர்கள் வடிவமைத்த புதிய டிசைன் எப்படி.. எதிரின் கையில்.. நினைக்க.. நினைக்க அவன் மனம் எரிந்தது.. அதுவும் எவ்வளவு முன் ஏற்பாடு, எத்தனை தூரம் வடிகட்டி ஊழியர்களை அவன் தேர்ந்தெடுத்தான்.. இருந்தும் அவர்களின் உழைப்பு திருடப்பட்டுவிட்டது.. தன்னை மீறி நடந்த ஒன்று தான் என்றாலும், தன் மீதும், தன் திறமையின் மீதும் நம்பிக்கை வைத்து அனுப்பிய கம்பனிக்கு என்ன பதில் சொல்ல… என்று தன்னுள் அவன் எண்ணியது எல்லாம் சிறிது நேரம் தான். 
இந்த எண்ணங்கள் தன்னை அடுத்த அடுத்த நடவடிக்கைகளை தடுக்க கூடும் என்று, ’ மிஸ்டேக் மேக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ்’ என்று தன்னுள் கூறிக்கொண்டு, சிரித்தபடியே தன் லாப் டேப்பில் தலையை நுழைத்தான். ஆனால் மனதின் அந்த வலி குறையவில்லை.. 
தன் டீம் மை அழைத்தவன், அவர்களிடம் தங்கள்  டிசைன் திருடப்பட்டது  பற்றிய உண்மைகளை
கூரிய உடன் அனைவருக்கும் மிக பெரிய அதிர்ச்சி… ஆனால் புன்னகை முகமாக இருக்கும் தங்கள் ஹெட் ஐ பார்த்து, அவர்களுக்கு அதை விட ஆச்சர்யம்.. 
அவர்களின் எண்ணங்களை படித்தவன், ” லீஸன் கைஸ்… இது பெரிய டிரா பேக் தான் நமக்கு.. இல்லையிண்ணு சொல்லல.. ஆனா.. அதுலேயே உழலுறது நம்ம முன்னேற்றத்தை கெடுக்கும்.. பீ பாஸீ்டிவ்  திங்க்.. வீ டிசைன் பெட்டர் ஒன் தான் லாஸ்ட் ஒன்.. வில் வீ,?”
சர்வாவின் அந்த உத்வேகம் அவர்களையும் தொற்றி கொள்ள, அவர்களும் உற்சாகத்துடன் ” எஸ் சர்” என்று கூறி மீண்டும் தங்கள் திறமையை காட்ட சென்றனர். போகும் அவர்களையே யோசனையுடன் பார்த்திருந்தான் சர்வா.
பின் தன் இருக்கையில் அமர்ந்து, தன் சுழல் நாற்காலியை ஆட்டி கொண்டே இருந்தவன் கண்கள் மூடி இருந்தாலும், புருவங்கள் முடிச்சிட்டு இருந்தது, அவன் ஆழ்ந்த யோசனையில் இருப்பதை காட்டியது.
மாலை வீடு வந்தவன் சற்று சோர்வாகவே இருந்தான். அகத்தின் சோர்வு, முகத்தில் பிரதிபலித்தது. டையை தளரவிட்டு, சோஃபாவில் கண் மூடி அதிலே தலையை சாய்த்து அமர்ந்தான் சர்வா.
எப்போதும் வீடு வந்தவுடன், தன்னை சீண்டுவான் அல்லது ஏதேனும் பேசி கொண்டே அவளையும் சேர்த்து பேச வைப்பான், ஆனால் ஏன் இன்று இவ்வளோ அமைதியா இருக்கான் என்று யோசனையுடன் அவனையே பார்த்துக் கொண்டு  இருந்தாள் நிவா, அவனை தொந்தரவு செய்ய மனமில்லாமல்..
கண்கள் மூடி இருந்தாலும், உணர்வுகள் விழித்து இருக்க, ” பேபி… கம் ஹெயர்” என்றான் கண்கள் மூடியபடியே…
மெல்ல அவன் அருகில் அமர்ந்தாள் நிவா. தலையை மட்டும் திருப்பி அவளை பார்த்தவன், ” கொஞ்சம் டயர்ட் பேபி.. நத்திங்..”
” டிரயர்ட் மட்டுமில்லை உங்க ஃபேஸ்ல சம்திங் மிஸ்ஸிங்… ” 
” ஆஹான்.. அவ்ளோ தெரிஞ்சு வைச்சு இருக்க என்னை… ம்ம்.. கிரேட் பேபி”
” ஏன்.. நான் சொன்னது கரெக்ட் தானே” 
” ஸ் பேபி.. ஆபீஸ் கொஞ்சம் இஸ்யூஸ்… என்று ஆபீஸில் நடந்தவற்றை கூற, அவள் அதிர்ச்சி அடைவாள் என்று அவளை பார்க்க… 
நிவா தன் இருக்கையில் இருந்து எழுந்து ஒரு குதி குதித்து, ” யாஹூ… அப்போ உங்களை உங்க கம்பனி ஊருக்கு அனுப்பிவாங்க இல்லை.. நாம நம்ம ஊருக்கு போய்டலாம்.. அப்பா.. இந்த சாப்பாடு பிரச்சனை ஓவர்” என்று கூறி மகிழ்ந்தாள்.
சர்வா அவளை விழி விரிய பார்த்து, ” என்ன டிசைன் டி நீயெல்லாம் ” என்றான்.
அவனை பார்த்து தன் ஒற்றை கண்ணை அடித்து, ” பீ பாஸிட்டிவ் திங்கிங் மேன்.. எந்த விசயம் நடந்தாலும் அதில் உள்ள நல்லதை மட்டும் நாம் எடுத்துக்கணும்” காலையில் அவன் தன் ஊழியர்களிடம் சொன்னதை நிவாவும் அவளுடைய பாணியில் சொல்ல, மெல்ல தலையை ஆட்டி சிரித்து கொண்டான் சர்வா.
எவ்வளவு தான் அவன் மற்றவர்களுக்கு சொன்னாலும், தன்னை் நம்பி ஒப்படைதத்து இதுவரை அவனுக்கு தவறாக போனது இல்லை.. முதல் முறை அது அவனுக்கு லேசான மன அழுத்தத்தை கொடுதத்து. அதை தவிர்க்கும் பொருட்டு, வழக்கம் போல இரவு உணவிற்கு பின், சர்வா நீச்சல் குளத்தை சரணைடந்தான்.
அரை மணி நேரம் தன் உடல் வருத்தி நீந்தியும் அவன் மனதில் முகம் தெரியா அந்த எதிரியின் மேல் இருந்த கோபம் மறைய காணோம். மெல்ல படியேறி தன் கால்களை நீரில் அலைந்தபடி அமர்ந்து இருந்தான் சர்வா. 
அவனை தேடி அங்கே வந்த நிவா, அவனை போலவே தானும் தண்ணீரில் கால் நனைத்தபடி அமர்ந்து கொண்டாள். மெல்ல சிரிப்புடன் அவளை பார்த்து கொண்டிருந்தான். சர்வாவின் இந்த அமைதி அவளுக்கு பிடிக்க வில்லை. தான் ஒடுங்கினாலும் தன்னை மாற்ற வம்பிளுக்கும் அந்த சர்வா தான் வேண்டுமென அவள் மனம் பிரண்டியது.. 
“என்ன.. என்னை சைட் அடிக்கிறீங்களா?” என்றாள் வம்பிலுக்கும் பொருட்டு..
” ஹ.. ஹ.. ஹ..  சைட் அடிக்கிற அளவு .. அப்படி என்ன பேபி இருக்கு உன்கிட்ட..” அவனும் அவளை புரிந்த வண்ணம் பதில் அளித்தான்.
” அட பாவி… ” என்று அவனை முறைத்து விட்டு, இதுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல், தன்னை ஒரு தரம் சுற்றி சுற்றி பார்த்தாள். அவளின் செயல்களை ரசித்தாலும், வெளியே காட்டி கொள்ளாமல் இறுக்கமாகவே இருந்தான்.
” என்ன இல்லை என்கிட்ட… சைட் அடிக்க என்ன தகுதி இருக்கணுமா… எல்லாமே இருக்கு, உங்களுக்கு தான் தெரியல சர்வா” என்று தன் புருவங்களில் நர்த்தனம் ஆடினாள்.
அவளின் புருவ நர்த்தனங்களில் அவனின் மனம் அவள் பால் மேலும் சரிய, அதை இழுத்து பிடித்து, ” என்ன எனக்கு தெரியல.. சைட் அடிக்கவா?.. ம்ம்.. மெல்ல அவளை தன் புறம் திருப்பி, அவள் கண்களுக்குள் ஆழ்ந்து நோக்கினான்.
ஆக்டோபஸ் போல ஆகிர்ஜித்து அவளை சுற்றி வளைத்து இழுக்கும் அந்த காந்த பார்வை வீச்சிலிருந்து தப்ப இயலாமல் அவள் சிக்கி தவித்தாள்.
அவன் பார்வை மேய்ச்சல் பார்வையாக கண பொழுதில் மாறி, அவளை மேய்ச்சல் நிலமாக மாற்றி மேய்ந்தது. அவனின் பார்வையில் லஜ்ஜையுற்றவளாக தன் பார்வையை அவள் திருப்ப, வெடித்து சிரித்தான் அவன்.
” என்ன பேபி.. அவ்ளோ தானா உன் வீரம் எல்லாம்.. ஒரு பார்வைக்கே பம்முற, நீ சைட் அடிக்கிறது பத்தி பேசுற… “
அவள் பதில் பேசாது,  மேல் பற்களால் தன் உதட்டை கடித்து, தன் முக சிவப்பை மறைத்தாள்.
” நான் தான் அப்போவே சொன்னேனே.. நிவி பேபி.. ஒன்லி அக்சன்ஸ் தான்னு.. நீயே வாய் கொடுத்து வாங்கிக்குற, ஆனாலும் இதுவும் நல்லா தான் இருக்கு.. ” 
” இந்த அளவு போதுமா.. பேபி.. இல்லை இன்னும்  கொஞ்சம் கூடுதலா பார்க்கவா”
 ” அப்பா சாமி… போதும் போதும்… ” என்று கூறி கை  கூப்ப..
” ஹ ஹ ஹ… அது அந்த பயம் இருக்கணும்” என்று கூறி, அவள் இடையை அணைத்து அடுத்த நொடி அவள் எதிர் பாரா வண்ணம் நீச்சல் குளத்தில் குதித்து இருந்தான் சர்வா..
ஏற்கனவே இப்படி ஒரு முறை அவன் செய்ததால்,    ஓரளவு  குதிக்கும் போதும்  சுதாரித்து மூச்சை அடக்கி அவனுடன் மேலே எழும்பினாள் நீவா.. 
அவ்வளவு பெரிய குளம் அல்ல..ஐந்தரை அடி ஆழம் மட்டுமே.. ஆனாலும், பெண்ணவளுக்கு மூழ்கும் படி இருந்தது.. மீண்டும் அவள் கீழே செல்ல, சர்வா அவள் முழங்க காலில் கையிட்டு வாகாக தூக்கி கொள்ள, இப்போது அவள் தலை சர்வா தலையோடு முட்டி நின்றது.
பெரும் சுவாசம் ஒன்றை இழுத்து விட்டு, அவன் கழுத்தில் தன் கைகளை கோர்த்து கொண்டு தன்னை நிலைப்படுத்தி கொண்டாள் நிவா.
நிலவின்றி வானம் இருளில் மூழ்கி இருக்க, மின்னும் நட்சத்திரங்கள் இவர்களை கண்டு தங்கள் ஒற்றை கண் அடித்து கிலுக்கி சிரித்து கொண்டிருந்தன..
இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று கவ்வி கொண்டு பிரிய மனமில்லாமல் பிண்ணி பிணைந்தன..
அவளை தன்னோடு இழுத்து இறுக்கமாக அணைத்தான்.. அவள் உடல் முழுவதும் அவனின் உடலில் சாய்ந்து கொண்டு இருக்க.. முதல் முதலில் இந்த முழு ஸ்பரிசத்தில் அவள் தன்னிலை மறந்து பலவீனமாக அவனின் கைகளில் தொய்ந்தாள்.. அவள் கண்கள் கிறக்கமாக பாதி விழி மூடி இருக்க.. மெல்ல அவன் அவள் முகத்தை தன்  நோக்கி இழுக்க அவள் மேலும் துவண்டாள்.
சர்வா அவள் முகம் தேடி நெருங்கிய போது அவள் தன் கண்களை முழுவதும் மூடி அவன் கன்னத்தில் தந்த முத்தத்தை அனுபவித்தாள். அவன் இதழ்கள் அவள் கன்னத்தில் அழுந்த புதைந்து மீள மனமின்றி கன்ற மென்மையில் சிக்குண்டது..
காதோரம் அவன் மீசை உரசி ” நிவி பேபி” என்று குழைவாக அழைத்தான். பெண்ணவளோ 
வேறு லோகத்தில் சஞ்சரிக்க எங்ஙனம் இந்த விளிப்பு காதில் ஏரும்..
இம்முறை கரகரப்பாக அவன் குரல் மீண்டும் அழைக்க, பதில் சொல்ல இயலவில்லை அவளுக்கு,.. அவளை தன்னுடன் இறுக்கி அணைத்து கொண்டு, மென் அதரங்களை நோக்கி முன்னேறி அழுந்த பற்றி கொண்டான் அவள் இதழ்களை.. கவர்ந்து கொண்ட அவன் இதழ்களில் தன் இதழ்களை  முழுவதுமாக ஒப்பு கொடுத்து விட்டு நின்றாள்.
ஏதோ சுழலில் மாட்டி சிக்கி கொண்ட உணர்வு.. ஆனால் சூழலை விட்டு வெளியே போக மனம் விரும்பவில்லை.. மீண்டும் மீண்டும்  அதிலே தொலைய தூண்டியது  மனது..
நீன்ட.. நெடிய இதழ் அணைப்பு.. இருவருக்கும் முதல் அணைப்பு வெகு நிதானமாகவே அவளை விடுவித்தான்.. அவள் முகம் பார்க்க.. அந்தி வானமாக சிவந்திருந்த வதனத்தில்.. மீண்டும் முத்தெடுக்க ஆசை வந்தது அவனுக்கு.. ஆனால் இப்போது இதுவே போதும் என மூளை எச்சரிக்க.. மெல்லியதாய் ஒரு ஒற்று ஒட்டு விட்டு, சிவந்த அவள் கன்னங்களை மெல்ல வருடினான்… 
அவன் வருடலில் சிலிர்த்தது அவள் மேனி.. மெல்ல அந்த கைகளை தன் வசம் படுத்திகொண்டாள் இறுக்கமாக… ” இப்போ.. சொல்லு பேபி… நான் உன்னை அட்ராக்ட் பண்ணலையா… கொஞ்சமே கொஞ்சம் கூட..” 
எவ்வாறு இல்லையென பொய் சொல்லுவது, தன் மனதை மறைத்து… பதில் மொழி கூறாமல்.. அவன் கையை விடுத்து கழுத்தில் மாலையென தன் கரங்களால் சுற்றி வளைத்து அதில் முகம் மறைத்தாள்.. அவளின் இந்த வெட்கத்தில் ” பேபி.. நீயா இது” என்று கூறி சிரித்தான் சர்வா..
மெல்ல மேலே அவளை ஏற்றி அவனும் ஏற, அவனை பார்க்க முடியாமல் , நாணம் கொண்டு ஓடி விட்டாள் தங்கள் அறையை நோக்கி.. 
அவளின் இந்த செயல் அவள் மனதை அச்சு பிசகாமல் படம் பிடித்து காட்ட.. தன்னவள் தன்னை சேரும் நாள் வெகு தூரம் இல்லை என்று நினைத்து அவனுக்கும் சந்தோசம் வழிந்தது.. தன் தலை கோதி தன்னை சமன் செய்து கொண்டான்..
இதுகாறும் மனதை போட்டு வறுத்த நினைவுகள் எல்லாம் தூரம் போக, தன் முழு உயரத்திற்கு உயர்ந்து நின்றான் அந்த முகம் அறியா எதிரியை சமர் செய்ய.. 
பெண்களில் அப்படி என்ன ஜாலம் தான் இருக்கிறது, அவனது இறுக்கத்தை எல்லாம் இளக்கி, முன்னை விட இன்னும் பலம் பெற்றவனாக மாற்ற செய்த விந்தை தான் என்னவோ.. ஒற்றை முத்தம் இதை சத்தியமாக்குமா… ஆக்கும் என்பான் சர்வ.. ஒரு ஆணின் வெற்றிக்கு பின் இருக்கும் பெண் உண்மையே… அது தன்னவள் என்பான் இன்னும் பெருமையாக… 
தன் சிந்தனையை விடுத்து தன் அறை நோக்கி சென்றான். அங்கு சென்று பார்க்க, தன் நிவி பேபி கும்பகர்ணி ஆகியதை கண்டு மென்னகை மட்டுமே அவனிடம். ஒரு குளியல் போட்டு, வேறு உடை மாற்றியவன், தன் லேப் டாப் எடுத்து கொண்டு, சென் னிடம் சென்றான்.
” சாரி.. சென்.. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா …” 
” நோ சர்.. இட்ஸ் அவர் டியூடி ஒன்லி” 
காலையில் நடந்த தன் அலுவல விசயங்களை பகிர்ந்து கொண்டவன், அவனிடம் சில தகவல்களை பெற்று கொண்டு, திரும்ப யோசனையில் ஆழ்ந்தான்.
 அவன் சென் னிடம் சில உத்தரவுகளை பிறப்பித்து விட்டு தன் அறைக்கு திரும்பினான்.
 அடுத்த ஒரு வாரமும் மிக மிக கடின நாட்கள் என்று தான் சொல்ல வேண்டும் சர்வாவிற்கு.. எதிரியை இம்முறை ஜெயிக்க விட கூடாது என்கிற பிடிவாதம் அவன் முகத்தில்.. அவனை பிரதிபலிப்பது போலவே அவனின் ஊழியர்களும் மிக மிக கவனமாக தங்கள் டிசைனை உருவாக்கி கொண்டிருந்தனர்.. 
ஏற்கனவே செய்த முறையில் சில பல மாறுதல்கள் கொண்டு வந்து முற்றிலும் புதிய ஒரு மாடலாக இருக்கும் வண்ணம் பார்த்து பார்த்து வடிவமைத்தனர்.. எதிரிக்கு கொஞ்சம் கூட துணுக்கு கிடைக்கா வண்ணம்… 
ஆபீஸில் நல்ல தலைவனாக இருப்பவன், தன் தலைவியிடமும் மிக சிறந்த தலைவனாக இருந்தான். அன்றைய இதழ் ஒற்றுக்கு பிறகு சர்வா,  அவளை அந்த  வகையில் நெருங்க வில்லை.. அவளில் ஏற்படும் பெருங்காதலுக்காக   காத்திருந்தான்.. வெறும் அட்ராக்சன் அவனுக்கு தேவை இல்லை.. 
காலையில் அவளுடன் சிறிது நேரம் சமைலயரையில் சேர்ந்து சமைப்பது, சீண்டலுடன் உண்பது.. பின் அலுவலகம்.. மாலையும் அது போலவே அவளுடன் சிறிது நேரம் வெளியே உலாத்துவது.. பின் இரவு உணவிற்கு சமைப்பது என்று மிக சிறந்த கணவனாக.. காதலனாக வலம் வந்தான் சர்வா .
நாளை அவர்கள் வடிவமைத்த புதிய மாடல் கார் தங்கள் இரு கம்பனி நிறுவன அதிகாரிகள் முன் செயல் வடிவம் கொடுக்கும் நாள்..
இம்முறை வெல்வது யாராக இருக்கும்? சர்வாவா? முகம் தெரியா எதிரியா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *