டெவிலின் டேரிமில்க்

This entry is part 20 of 21 in the series டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

😈 டெவிலின் டேரிமில்க் 😇 1️⃣9️⃣
” ரிகா…. நம்பளுக்கு இன்னைக்கு தற்காப்பு கலை க்ளாஸ் இருக்கு…. இந்த க்ளாஸ் வந்தா தான் நம்ப அந்த சிடுமூஞ்சி க்ளாஸ் ல இருந்து தப்பிக்க முடியும்…. அய்யோ எனக்கு ஜாலியா இருக்கு ” உற்சாகத்துடன் இதன்யா கூற அவள் அருகில் இருந்த ரௌத்ரிகா அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு மீண்டும் தன் போனை நோண்ட ஆரம்பித்தாள்….
” நீ எப்பபாரு ஃபோனே பாத்துட்டு இருக்க ரிகா… கொஞ்ச நேரம் என் கூட பேசேன் ” இதன்யா அவளைப் போட்டு உலுக்க ” ஸ்டாப் யுவர் நான் சென்ஸ் இதன்யா…. நான் ஒன்னும் உன்ன மாறி கிடையாது… நான் இப்படி தான்… முடிஞ்சா கூட இரு இல்லயா கிளம்பி போய்ட்டே இரு…. சும்மா என்ன தொல்ல பண்ணிட்டு இருக்காத… அப்பறம் நீ என் இன்னோரு முகத்த பாக்க வேண்டியது வரும்… மைன்ட் இட்” என்றாள் சாம்பல் நிற விழிகளில் சிவக்க….
அவளின் முகத்தை பார்த்ததும் இதன்யாவிற்கு உடல் நடுங்க ஆரம்பித்தது… அவளை பயத்துடன் நோக்க ரௌத்ரிகாவிற்கு இதன்யாவின் வெளிறிய முகத்தை பார்த்து மனம் ஏதோ போல் ஆனாலும் வெளியில் அதை காட்டிக் கொள்ளவில்லை அரக்கி….
” சாரி ரிகா… இனிமே இப்டி பண்ண மாட்டேன்… அதுக்கு போய் இப்படிலாம் பேசாத ரிகா…. இட்ஸ் ஹர்ட்டிங் மீ டூ மச் ” கண்கள் கலங்கிவிட்டது இதன்யாவிற்கு…
அந்த கண்ணீரை பார்த்து கலங்காத கல்நெஞ்சக்காரி அவளை அழைத்து கொண்டு அவர்களின் நண்பர்களை நோக்கி சென்றாள்….
” ஹே தனு என்ன ஆச்சு… ஏன் கண்ணுலாம் கலங்கி இருக்கு…யாராவது எதாச்சும் சொன்னாங்கலா…. இல்ல வேற ஏதாச்சும் நடந்துச்சா….சொல்லு தனு ” ஹர்திக் இதன்யாவின் கைகளை மென்மையாக பிடித்து அவளை சமாதானம் செய்தான்…
” அதுலாம் ஒன்னும் இல்ல ஹது… எப்பவும் போல வீட்டுல தான் ” என்றாள் கண்களை துடைத்த வண்ணம்….
” அந்த ஆளுக்கு வேற வேலையே இல்லையா…. எப்ப பாரு உன்ன எதாவது சொல்லிட்டே இருக்கான் பரதேசி…‌ இன்னைக்கு அவன ஒரு கை பாக்காம விட மாட்டேன் ” சடாரென எழுந்து நின்றான் அஸ்வின்….
” அஸ்வி… அப்படிலாம் பண்ணிடா பா… ப்ளீஸ் எனக்காக விடேன் ” இதன்யாவின் கெஞ்சலான குரலில் மனம் கலங்கிய அஸ்வின் அவள் அருகில் அமர அவளும் அவன் கைகளை பிடித்து கொண்டாள்….
இங்கு இவ்வளவு நடக்க தனக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் அவர்கள் அருகில் ஃபோனை பார்த்துக் கொண்டு இருந்தாள் ரௌத்ரிகா….
” ஹே ஸ்வீட்டி…. நீ எப்போ வந்த…. நான் பாக்கவே இல்லயே ” என்ற ஹர்திக் இதன்யாவிடம் இருந்து ரௌத்ரிகாவின் அருகில் தாவினான்…
ஹர்திக் அவள் அருகில் அமரவும் ரௌத்ரிகா அவனை தன் சாம்பல் விழிகளால் சுட்டெரித்து கொண்டிருந்தாள்…. அவள் விழியின் வெப்பத்தில் திணறிய ஹர்திக் அவளை எச்சில் விழுங்கி பார்த்தான்….
” எப்பாடியோ…. என்ன பவரு அந்த க்ரே ஐஸ்ஸுக்கு… பார்வையாலேயே நம்மள இப்டி பொசுக்குறாளே…. டேய் ஹர்திகக்கே… கொஞ்சம் உசாரா இருடா…. நம்பளுக்கு உயிர் தான் முதல ” மனதில் நினைத்துக் கொண்ட ஹர்திக் கொஞ்சம் தள்ளி அமர்ந்தான்….
”  ஹேலோ காய்ஸ்… எல்லாரும் வாங்க… க்ளாஸ் ஸ்டார்ட் ஆகப் போகுது ” என்றான் அவர்களின் வகுப்பு மாணவன்….
” சரி வாங்க போகலாம் ” என்ற ஸ்ரீநிதி அப்போது தான் ரௌத்ரிகா இன்னும் எழாமல் இருப்பதை கவனித்தாள்….
” ரிகாஆ…‌ நீயும் வா… போலாம்” 
” நான் வரல ” 
” ஏன்” 
” வரலனா வரல ” சற்று அழுத்தி கூறினாள் ரௌத்ரிகா…
” அப்போ நீங்க போங்க பா… நான் ஸ்வீட்டிக்கு கம்பனி கொடுக்குறேன் ” அவள் அருகில் அமர்ந்து கொண்டே ஹர்திக் கூற ரௌத்ரிகா சட்டென எழுந்து இதன்யாவின் கையை பிடித்துக் கொண்டு தரதரவென அவளை இழுத்து சென்றாள் தற்காப்பு கலை கூடத்திற்கு….
” டேய் மச்சான் எப்புறா ” அக்ஷயா ஹர்திக்கை அதிசயித்து பார்க்க ” அதுக்குளாம் திறமை வேணும் மச்சி ” என்றான் சட்டை காலரை தூக்கி….
பின்னர் மீதி இருந்தவர்களும் அந்தப் கூடத்தை நோக்கி சென்றனர்….
அந்த கூட்டத்தில் மாணவர்கள் அனைவரும் வெள்ளை சட்டை கருப்பு நிற பேன்ட் அணிந்து வருசையாக தரையில் அமர்ந்திருந்தனர்….
ஹர்திக், அஸ்வின், ஸ்ரீநிதி, அக்ஷயா நால்வரும் உடையை மாற்றிவிட்டு வந்தவர்கள் இதன்யாவை அந்த கூட்டத்தில் எப்படியோ கண்டு பிடித்து அவள் அருகில் அமர ஹர்திக் எப்போதும் போல‌ ரௌத்ரிகாவின் அருகில் அமர்ந்தான்….
ரௌத்ரிகா ஹர்திக்கை முறைத்துதள்ள அவன் கண்டு கொள்ளாது போல தற்காப்பு கலை ஆசிரியரை கவனித்துக் கொண்டு இருந்தான்…
அவர்களின் எதிரில் பாக்ஸிங் ரிங் இருக்க அதில் தற்காப்பு கலை ஆசிரியர் ஒருவனை வைத்து எப்படி அடிக்க வேண்டும் என்பதை விளக்கினார்….
அந்த ரிங் முழுக்க மெத்தையில் இருப்பதால் கீழே விழுபவர்களுக்கு காயம் ஏதும் நிகழவில்லை….
” ஓகே பசங்களா… இப்போ நான் சொல்லி குடுத்தேன்ல… அதே மாறி இப்போ இங்க ரிங்குல வந்து  டெமோ காட்டுங்க பா… ஆப்போசீட் ஆள நீங்களே ச்சூஸ் பண்ணலாம் ” என்ற ஆசிரியர் ரிங் அருகில் இருந்த நாற்காலியில் அமர போனவர் பிறகு என்ன நினைத்தாறோ 
” அப்பறம் பசங்களா… இது கிட்டத்தட்ட ஒரு போட்டி மாறி தான்… யாரு ஜெயிச்சாங்கலோ அவங்க அடுத்து வரவங்க கூட ஃபைட் பண்ணுவாங்க…. அடுத்து வரவங்கள நான் தான் ச்சூஸ் பண்ணுவேன்… முதல் டைம் வரும்போது மட்டும் நீங்க ச்சூஸ் பண்ணலாம் ” என்றவர் தன் இருக்கையில் அமர்ந்தார்….
முதலில் வந்த ஒரு ஆண் பெண் நன்றாக சண்டை போட்டனர்… அதில் அந்த பெண் ஜெயிக்க அதன் பிறகு அவளுடன் சண்டை போட ஒரு மாணவியை ஆசிரியர் தேர்வு செய்தார்….
இப்படியே போட்டி நடக்க ஒரு மலைமாடு வந்து ரௌத்ரிகாவின் அருகில் நின்றது….
” வில் யூ ஃபைட் வித் மீ பேபி ” அந்த மலைமாடு குழைந்து பேச ரௌத்ரிகா அவனை ஏளனமாகப் பார்த்தாள்….
” வை நாட்… ஐயம் கம்மிங் ” என்றவளின் இதழில் டெவில் முறுவல்… ஆனால் அதை சட்டென மறைத்து கொண்டாள் திருடி….
” ரிகாஆ… நீ போக வேணாம் ” சற்று காட்டமாகவே குரல் வந்தது ஹர்திக்கிடம் இருந்து….
” அது என் இஷ்டம்” என்றவள் அந்த மலைமாடுடன் ரிங்கிற்கு சென்றாள்…
அந்த மலைமாடுக்கு ஒரே குஷி….இரை தானாக வந்து சிக்கியதில்… ஆனால் சிக்கியது அவள் இல்லை அவன் தான் என்பதை அந்த மலைமாடு அறியவில்லை…
” டேய் அந்த பொண்ணு புதுசு போலயே… நீ வேற ஆள ச்சூஸ் பண்ணு போ ” என்று ஆசிரியர் சொல்ல ” நான் தான் இவர ச்சூஸ் பண்ணேன்” என்றாள் ரௌத்ரிகா…
பின்னர் இருவரும் ரிங்கில் ஏறினர்… அந்த மலைமாடுக்கு ஒருபக்கம் கோசம் எழ ரௌத்ரிகாவிற்காக கோசம் எழுப்பினர் அவளின் நண்பர்கள் அணி….
ஒரு நொடி அங்கு என்ன நடந்ததென்று யாராலும் யூகிக்க இயலவில்லை…. ரிங்கில் அந்த மலைமாடு குப்புற விழுந்து கிடந்தான்…அவனை தன் அக்மார்க் டெவில் முறுவலுடன் நோக்கினாள் ரௌத்ரிகா….
” அந்த பொண்ணு சைஸீல தம்மாத்தூண்டு இருக்கே மச்சான்… அப்பறம் எப்டி அந்த மண்டயன அசால்ட்டா தூக்கி போட்டுட்டா ” அந்த மலைமாடுக்கு கோசம் எழுப்பியவன் பயத்தோடும் வியப்போடும் அவன் நண்பனிடம் வினவ ” அதான் டா எனக்கும் ஒன்னும் புரியல…. இதுல வேற இவன் மேல பெட்டு கட்டிட்டேன் டா… போச்சு… என் காசுயெல்லாம் போச்சு ” புலம்பினான் அவன்….
இங்கு இப்படி இருக்க ரௌத்ரிகாவின் கூட்டணி எல்லாம் வாயை பிளந்து அவளை பார்த்துக் கொண்டு இருந்தனர்….
” டேய் ஹர்திக்கே… நீ செத்தடா அவ கைல…. அந்த மலைமாட தூக்கி போட்டவளுக்கு நீயெல்லாம் தூசி… ” என்றான் அஸ்வின் அதிர்ச்சி குறையாமல்….
ஹர்திக்கிற்கு இங்கு வயிறு கலக்க ஆரம்பித்து விட்டது…. அதுவும் அவளின் டெவில் முறுவலை பார்த்த பின் அவன் முகம் வெளிறிப் போய் வியர்வை பூத்திருந்தது….
” இவ்ளோ நாள் பண்ணதுக்குலாம் சேத்துவச்சு உன்ன ஒரு வழி பண்ண போறா… முடிஞ்சா தப்பிச்சிக்கோ மகராசா ” இது அவன் மனசாட்சி….
” எம்மாஆ… இது நான் சொல்லி குடுத்த டெக்னிக்கே இல்லயே… இது வேற மாறி இருக்கே.. இது என்ன கலை ” அந்த ஆசியர் கேக்க ” அடிமுறை ” என்றாள் கர்வத்துடன்…
” ஹே தீப்பு… அப்டினா என்ன ” அக்ஷயா இதன்யாவிடம் ஆர்வத்தோடு கேட்டாள்….
” அது நம்ப தமிழர்களோட மரபுக் கலை டி…. இதுல வர்மகலையும் அடங்கும்… ஆனா இத கத்துக்க யாரும் அவ்ளோ இன்ட்ரஸ்ட் காட்ட மாட்டாங்க… பட் எப்டி இது ரிகாக்கு தெரியும்ன்னு தான் எனக்கு தெரியல… ஆனா ரிகாக்கு பாக்ஸிங் அன்ட் கும்ஃவூ தெரியும்ன்னு எனக்கு தெரியும் ” என்றாள் இதன்யா…
” இந்த பட்டாஸு படத்துல காட்டுவாங்கலே அதான ” ரௌத்ரிகாவை கலவரத்துடன் பார்த்துக் கொண்டே ஹர்திக் கேக்க ” அதே தான் ” என்றாள் ஸ்ரீநிதி…
” எப்டி மா இவ்ளோ சின்ன வயசுல கத்து வச்சு இருக்க ” ஆசிரியர் புரியாமல் கேட்க ” இதுல நான் எல்லாம் கோசும் முடிச்சிட்டேன் ” என்ற ரௌத்ரிகா மீண்டும் அந்த மலைமாடை நோக்கினாள்….
” டேய் நாயே… இனிமே பொண்ணுங்கள கேவலமா நினைப்ப ” கீழே விழுந்து இருந்த மலைமாடை காதை திருகி எழுப்ப ” இனிமே பண்ண மாட்டேன் காஆஆஆ… என்ன விட்டுடு காஆஆஆ.. நான் பச்ச பிள்ளை காஆஆஆ… ப்ளீஸ் காஆஆஆ ” அழுதே விட்டான் அந்த மலைமாடு…அவனை பார்த்து சிரித்தனர் கூடத்தில் இருந்தவர்கள்…
” சரி அடுத்து யார வரச்சொல்லலாம் ” என்று யோசித்த ஆசிரியர் ” டேய் நீ வா ” நைசாக பூனை போல் பதுங்க நினைத்தவனை கண்டு கொண்ட ஆசிரியர் அவனை அழைக்க அவன் பயத்தோடு அங்கு வந்தான்… அவன் தான் அன்று தார்மிகாவிடம் வம்பு இழுத்தவனும் கூட….
இன்று வசமாக சிக்கிக் கொள்ள அவனை தன் டெவில் முறுவலுடன் நோக்கினாள் ரௌத்ரிகா….
” சார் நேக்கு ஜொரம் சார் ” அவன் மழுப்ப பார்க்க ” ச்சைய் போ ” என்றவர் அவனை ரிங்கில் தள்ளிவிட்டார்…
ரிங்கில் நுழைந்தவன் அவளை எச்சில் விழுங்கி கொண்டு ஏறிட இரையை வேட்டையாடும் சிறுத்தையின் வெறி அந்த கண்களில்… அதுவும் அந்த முறுவல்… அவனை இன்னும் பயம் கொள்ள செய்தது…
” சிக்குனாயா சிக்கன் பீஸு ” ஹர்திக் கவுண்டர் கொடுக்க அவனுடன் சேர்ந்து அவனை கலாய்த்து கொண்டிருந்தனர் அவனின் நண்பர்கள்….
” இனிமே நீ பொண்ணுங்க பக்கமே தலை வச்சு படுக்க கூடாது ” அவனை நெருங்கி ரௌத்ரிகா கூற ” எக்கா ப்ளீஸ் கா ஆஆஆஆ விட்டுடு ” என்றவன் கெஞ்ச விடுவாளா நம் கில்லர் டெவில்…
அடுத்த நொடி அவள் விரல் செய்த ஜாலத்தால் கீழே விழுந்தான் அவன்…. மீண்டும் கடினப்பட்டு எழுந்தவன் தான் ஆண் பிள்ளை என்பதை நிரூபிக்க அவள் மேல் பாய போக அடுத்த நொடி அவனை தூக்கி தங்கல் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் போடுவது போல தூக்கி போட அவன் எலும்பு முறிந்த சத்தம் அவனுக்கே கேட்டது…
” அடுத்து நீதான் ஹது ” அவனை சீண்டினாள் அக்ஷயா…  
ஹர்திக்கிற்கும் அவன் நிலையை பார்த்து பயம் கவ்விக் கொண்டது…தன்னை ஒருநொடி அவன் நிலையில் வைத்து பார்க்க இப்போதே அவனுக்கு எலும்பு முறிந்தது போல் இருந்தது….
” பொண்ணுங்க நினைச்சா எதையும் செய்வோம்… ஆம்பள னு திமிருல சுத்திட்டு இருந்தல… இனிமே சுத்திப்பாரு டா ” என்ற ரௌத்ரிகா அவன் காலை குச்சியை உடைப்பது போல் மடக்க மீண்டும் கேட்டது நொறுங்கும் சத்தம்….
டெவிலின் ஆட்டம் தொடரும் 😈😈😈….
படித்துவிட்டு மறக்காமல் கமெண்ட்ல சொல்லிட்டு போங்கோ 💭💭💭
பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நண்பர்களே 📢📢📢
நன்றி வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
_ஐது ஸ்ரீ யாழ்நிதி 💜💚

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *