டெவிலின் டேரிமில்க்

This entry is part 8 of 21 in the series டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

😈 டெவிலின் டேரிமில்க் 😇 7️⃣
ஹார்லிக்ஸை சூடு செய்யப்போன ஹேமவர்தினி மீண்டும் ரௌத்ரிகாவின் அறைக்கு செல்ல அங்கு வெறும் அறையே அவரை வரவேற்றது….” எங்க போன இந்த வைரம்….ஒரு வேலை பாத்ரூம் போய் இருப்பாளோ ?? ” என்று யோசித்தவர் குளியல் அறையை திறக்க அங்கேயும் அவன் இல்லை….” எங்க போனா வைரம் ? ” என்று ஆழமாக யோசித்தவர் ” சரி முதல அவன் ரூமுக்கு போவோம் ” என முடிவு செய்துவிட்டு அந்த அறையை நோக்கி செல்ல தொடங்கினார்… இந்த அறை ரௌத்ரிகா அறைக்கு முன்பு இருந்த அறை… அதற்கும் முன்புதான் வீரசேனாவின் அறை உள்ளது…
அறைக்கதவை அடைந்த ஹேமவர்த்தினி ” டேய் பெரியவனே….பெரியவனே ” என்றவர் குரல் கொடுத்த படியே கதவை தட்டிக்கொண்டு இருக்க அந்த பக்கம் எந்த பதிலும் இல்லை…”என்ன பண்றான் இவன்…ஒரு வேலை தூங்குறானோ ?? சரி எதுக்கோ ஒரு எட்டு பாத்துட்டு போக முடியாது னு பாப்போம் ” என்று எண்ணியவர் கதவை திறக்க முயற்சிக்க கதவு திறந்து கொண்டது…
” ச்சே…இத முதலிலேயே பண்ணி இருக்கலாம் “என்று நினைத்தபடி தலையில் லேசாக அடித்துக் கொண்டவர் அறையில் நுழைந்தார்… அங்கே கண்ட காட்சியில் ஹேமவர்தினியின் இதழில் குறுநகை பிறந்தது….” இங்கதான் இருக்காங்களா ரெண்டு பேரும் ” என லேசாக சிரித்தபடியே முணுமுணுத்தவாறு மெத்தையை நோக்கி நடந்தார் நோக்கி நடந்தார்.. 
” டேய் பெரியவனே எழுந்திருடா…மணி என்ன ஆகுது இன்னும் தூங்கிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் ” என்றவர் அங்கு மெத்தையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஆடவனை எழுப்ப அவனிடம் எந்த அசைவும் தெரியவில்லை….” ஐயோ கடவுளே ” என பெருமூச்சு விட்ட ஹேமவர்தினி ” வைரம்…வைரம்…எழுந்திரு வைரம் ” என்றவர் அவனை குழந்தை போல அனைத்து படி உறங்கிக் கொண்டு இருந்த ரௌத்ரிகாவை எழுப்ப முயற்சிக்க ” இவளும் எழுந்திரிக்க மாட்டேங்குறாளே ” என்று சோர்ந்து போன ஹேமபர்த்தினி ” இந்திரசேனா….டேய் இந்திரசேனா… எழுந்திருடா ” என அவன் முதுகில் அடித்து எடுப்ப அவனோ மெதுவாக ஹேமவர்தினியின் புறம் திரும்பி ” என்னம்மா என்ன ஆச்சு ” என்றவன் கொட்டாவி விட்டபடியே கேட்க ” மணி ஆகுது டா பெரியவனே.‌‌..வைரத்துக்கு வேற நிறைய வேலை இருக்கு எழுப்புடா ” என்றவர் கூற ” சரி சரி எழுப்புறேன் ” என்று கூறியவன் ரௌத்ரிகாவின் புறம் திரும்பினான்…  
“பட்டுமாஆ…பட்டுமாஆ..எழுந்திருடா” என்றவன் குரலுக்கு வலிக்காத முறையில் மென்மையை கூட்டி அவளை எழுப்ப முயற்சிக்க ” முக்கிஇஇ….துக்க துக்கமா வருது முக்கி ” என்று தூக்கத்தில் சிணுங்கியவள் அவனை இன்னும் நெருங்கி உறங்க ஆரம்பிக்க ” இது சரிப்பட்டு வராது ” என்று நினைத்த ஹேமவர்தினி மெத்தையின் மறு புறம் சென்றார்…
” வைரம்…எழுந்திரு…நிறைய வேலை இருக்கு ல உனக்கு..எழுந்திருடா வைரம் ” என்றவர் அவளை லேசாக உலுக்க கண்களை கசக்கியவாறே எழுந்த ரௌத்ரிகா சோம்பல் முறிக்க அவள் பிரிந்ததும் எழுந்தமர்ந்தான் இந்திரசேனா…
” அண்ணன் ஆ பார்த்ததும் அவன் கூடயே ஒட்டிக்கிட்டு வந்துட்டியா ” என்று ஹேமவர்தினி குறும்புடன் கேட்க ” ஏன்….அதுக்கு என்ன இப்போ ” சற்று காட்டமாகவே குரல் வந்தது இந்திரசேனாவிடம் இருந்து…” டேய் நான் அவளை எதுவுமே சொல்லல டா…சும்மா கிண்டல் பண்ணேன் ” என்று கூறிய ஹேமவர்த்தனி ” வைரம்…லேட் ஆகிடுச்சு நீ போய் ரெடி ஆகும் நான் உனக்கு டிபன் எடுத்து வைக்கிறேன் ” என்று கூறியவர் இப்போது இந்திரசேனாவிடம் ” டேய் பெரியவனே நீயும் போய் குளிச்சிட்டு வா போ ” என்ற ஹேமவர்தினி ரௌத்ரிகாவை அனுப்பிவிட்டு சமையல் அறைக்கு செல்ல அவர் சென்றதும் இந்திரசேனாவும் குளிக்க சென்று விட்டான்….
இந்திரசேனா முகில்வாணன்…… மஹேந்திர வர்மன் ஹேமவர்தினி தம்பதிகளின் மூத்த மகன்…மஹேந்திர வர்மனின் குணமும் தோற்றமும் அப்படியே உரித்து வைத்திருப்பான்…ஆனால் தனக்கு பிடித்தவர்களிடம் மட்டும் ஹேமாவர்த்தினியின் குணம் வெளிப்படும்…ஹேமவர்த்தினிக்கு சில நேரத்தில் இந்திர சேனாவின் அழகையும் கம்பீரத்தையும் காணும் பொழுது மஹேந்திர வர்மனின் இளமை தோற்றமே கண்முன் தோன்றும்…
ஆண் அழகன்…தொழிலதிபர் மகள்களின் க்ரஷ் மெட்டீரியல்… அவன் தான் வேண்டும் அவனைத்தான் நான் மணப்பேன் என பிடிவாதமாக நிற்கும் மகள்களை சமாதானம் செய்ய முடியாமல் முழி பிதுங்கிப் போவர் அவர்களின் பெற்றோர்கள்…அந்த அளவிற்கு தன் வசீகரத்தால் அனைவரையும் காந்தம் போல இழுத்துக் கொள்வான் வசீகரன்…அவன் புன்னகைக்கு பல கோடிகள் கூட கொடுப்பார்கள் இளம் மங்கைகள்…அவன் சிரிப்பை பார்த்து விட்டால் அவ்வளவுதான்….எனக்கு மட்டுமே இந்த வரம் கிடைத்தது என ஊர் முழுவதும் பெருமையுடன் சொல்லிக் கொள்வார்கள்…அவன் சிரிப்பிற்கு எத்தனை லஞ்சம் கொடுத்தாலும் கிஞ்சிற்கும் சிரிக்க மாட்டான் யாரிடமும்..
பிசினஸ் துறையில் இவன் ஆர்டியோஸ் டிராகன் (AD) (வலிமையான டிராகன்)…கனவு நாயகனாய் கொண்ட பெண்களுக்கு இவன் ரெக்ஸ் ஆஃப் மெய்டன்ஸ் (ROM) (கன்னிகளை ஆளும் அரசன்)…
தன் ஆளுமையின் கீழ் அனைவரையும் கொண்டுவருவதில் பிசினஸ் ஜாம்பவான்…தன் கம்பெனியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சகல வசதியும் செய்து தருவதில் வள்ளல்….அவர்கள் நலமாக இருந்தால்தான் நாமும் நலமாக இருக்க முடியும் என்று எண்ணுபவன்.. 
தன்னை ஏமாற்ற நினைப்பவர்களை அவர்களுக்கே தெரியாமல் அவர்களை தன் வலையில் சிக்க வைத்து அவர்களுக்கு சிறப்பு தண்டனை தரும் ஸ்லேயர் பீஸ்ட் (SD)…
யாருக்கும் அடங்காதவன்…யாரையும் மதிக்காதவன்…அவனின் அன்னைக்கும் தங்கைக்கும் மட்டுமே கட்டுப்படுவான்…அவர்களின் மீது கடலளவு…..மலையளவு….ஏன் அதற்கும் ஒரு படி மேலே பாசம் கொண்டு இருக்கும் பாசக்காரன் அவன்… அவர்களின் கண்களை வைத்தே அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொண்டு அனைத்தையும் செய்து தருவான் அன்பான ராட்சசன்…
குளித்து முடித்த இந்திரசேனா கருப்பு நிற கோட் சூட் அணிந்து பின் இடது கையில் ரோலக்ஸ் கடிகாரம் அணிந்தவன் அவனுக்கு பிடித்த சாண்டல் அட்டர் வாசனை திரவத்தை போட்டுக்கொண்டு தயாராகியவன் ஹாலுக்கு சென்றான்… ஹாலுக்கு வந்தவன் இடதுபுறத்தில் உள்ள சமையலறையில் நுழைய அந்த மார்டன் சமையல் அறையில் வேலை ஆட்களுடன் சமைத்துக் கொண்டு இருந்தார் ஹேமவர்தினி…
” ம்மாஆஆஆ…என்ன பண்ணிட்டு இருக்க நீ ” என்றவன் வேகமாக அவர் அருகில் செல்ல ” வாடா பெரியவனே ” என்று அவரும் அவனை  புன்னகையோடு அழைத்தார்…” எதுக்கு நீ இப்போ சமைக்குற…உனக்குத்தான் கால் வலி இருக்குல்ல…அப்புறம் எதுக்கு சமைக்குற…உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா…உனக்கு அறிவு இருக்கா ? இல்லையா ? லூசு… அப்புறம் அம்மா தாயே கால் வலிக்குதே னு புலம்ப வேண்டியது ” எண்ணெயில் போட்ட கடுகாய் அவன் பொறிந்து கொள்ள ” டேய் டேய்…. போதும்டா…மூச்சு வாங்க போகுது ” என்றவர் சிரிப்போடு சொல்ல ” இங்க ஒருத்தன் கத்திட்டு இருக்கேன் உனக்கு சிரிப்பா இருக்கா ” என்றவன் அதற்கும் பொங்க ” சரிடா சரிடா… சிரிக்கல ” என்ற ஹேமவர்தினி சிரிப்பை அடக்கிக் கொண்டு ” சரி எதுக்கு இப்போ கடுகு மாறி பொறியுற ” என்றவர் பொறுமையாக கேக்க ” பின்ன…சொல்ல சொல்ல கேட்காம சமைச்சுட்டு இருக்கே நீ…டாக்டர் தான் சொல்லி இருக்காரு ல ரொம்ப நேரம் நிக்க கூடாதுன்னு… அப்பகூட கேட்க மாட்டியா நீ ? உன் இஷ்டத்துக்கு எல்லாத்தையும் செய் ” என்று கூறியவன் மீண்டும் அடுத்த பொறியலுக்கு தயாராக ” சரிடா திரும்பி பொறியா ஆரம்பிச்சுடாத… அப்புறம் யாரு உனக்கு சொன்னது நான் சமைக்குறேன் னு ”  என்று கேட்ட ஹேமவர்த்தினி அவனை குறுஞ்சிரிப்போடு நோக்க அவனோ இவர் கேட்டதில் புருவ முடிச்சோடு ” நான் தான் பாத்தேனே..‌நீ சமைக்குறத ” என்றவன் சொல்ல அவன் கூறியதில் கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தார் ஹேமவர்தினி…
” எதுக்கு இப்போ நம்ப மாத்தாஜி சந்திரமுகி ஜோதிகா மாறி சிரிக்குது ” என்று மனதில் நினைத்தவன் ” ம்மாஆ நிறுத்துயா மா உன் சந்திரமுகி சிரிப்ப ” என்றவன் உறக்க கத்தியபடி உறைக்க அதுவரை நன்றாக சிரித்துக் கொண்டு இருந்த ஹேமவர்தினி அவன் கூறியதில் இந்திரசேனாவை பாவமாக பார்க்க தொடங்கினார்…
” என்னடா பொசுக்கு னு இப்படி பெத்த தாய பாத்து சொல்லிட்ட ” என்றவாறு மூக்கை உறிய ” பின்ன…நீ சிரிச்ச சிரிப்புக்கு அப்படித் தான் சொல்ல முடியும்…..நீ ஒழுங்கா பதில் சொல்லு…யாரு குக் பண்றது ? ” என்றவன் கேட்க ” நான் ஒன்னும் குக் பண்ணல டா…. இன்ஸ்ட்ரெக்ஷன் தான் சொல்லிட்டு இருக்கேன்… ரொம்ப நாள் கழிச்சி எல்லாரும் வந்து இருக்காங்க ல அதான் சமையல் லாம் சரியா இருக்கா னு செக் பண்ணிட்டு இருக்கேன் ” என்று ஹேமவர்தினி நிதானமாக கூற ” ஏன்….அத உக்காந்துட்டு பாத்தா என்னவாம்” என்றவன் கண்களை சுருக்கியபடி கூற ” உப்பு காரம் பாக்க இப்போ தான் டா எழுந்தேன்…போதுமா ? ” என்றவர் நமட்டு சிரிப்போடு சொல்ல” சரி சரி…‌ரொம்ப நேரம் நிக்காம சீக்கிரம் சமைச்சுட்டு வா ” என்று கூறிய இந்திரசேனா அந்த சமையல் அறையில் இணைக்கப்பட்டு இருந்த மற்றொரு கதவை இருபதிற்கும் மேற்பட்டோர் ஒன்றாக உணவருந்தும் படி அமைக்கப்பட்டு இருந்த டைனிங் ரூம் கண்களுக்கு காட்சி தந்தது… 
அங்கு வேர்க்கணவே பிரியதேனு , தார்மிகா , வீரசேனா , மின், அவர் மடியில் மியா அனைவரும் அந்த நீண்ட டைனிங் டேபிளில் இடது புறத்தில் அமர்ந்திருக்க உள்ளே நுழைந்தவன் அவர்களுக்கு எதிர் புறத்தில் முதல் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டான்…
இந்திரசேனா வந்து அமர்ந்ததும் அவனை புன்முறுவலோடு வரவேற்க்க பிரியதேனுவும் மின்னும் மட்டும் அவனை யாரென தெரியாமல் அன்னிய பார்வையோடு நோக்கினர்…
தார்மிகாவிற்கும் வீரசேனாவிற்கும் புன்முறுவலை பதிலாக தந்தவன் பிரியதேனுவை பார்த்து புன்னகைக்க அவரோ அவனை பார்த்து மலங்க மலங்க விழித்துக் கொண்டு இருந்தார்….” என்ன மை லேடி… எப்படி இருக்க ” என்றவன் இளநகையோடு கேட்க ” யாரு நீ ” என தெரியாத நபர் போல கேட்டார் அவனைபார்த்து…
அவன் எதிர்ப்பார்த்தது தான் என்பதால் எந்த எதிர்வினையும் முகத்தில் காட்டாது அதே இளநகையோடு பிரியதேனுவை நோக்க மற்றவர்களோ அவரை அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டு இருந்தனர்….
” மீ… என்ன மீ…இது யாரு னு தெரியல ” என்று வீரசேனா பிரியதேனுவிடம் குழப்பமும் அதிர்ச்சியும் கலந்த குரலில் கேட்க ” இல்லை ” என தலையாட்டினார்… மீண்டும் ஏதோ கூற வந்த வீரசேனாவை சைகையால் தடுத்த இந்திரசேனா ” டியர் ” என்றவன் பிரிறதேனுவை அழைக்க அவரும் அவனை பார்த்தார்…
” இந்தர் குட்டி எப்பவுமே ” என்றவன் முடிப்பதற்குள் ” பிரியாவோட செல்லக்குட்டி ” என மீதியை முடித்து வைத்தார் பிரியதேனு…. இந்தர் குட்டி என்ற பெயரிலயே சட்டென அனைத்தும் மின்னல் வேகத்தில் நியாபகம் வந்தது…” இப்போ தெரியுதா ” என்றவன் குறுநகையோடு கேட்க ” ம்ம்” என உற்சாகத்தோடு தலையாட்டியபடி பிரியதேனு ராகத்தோடு சொல்ல இருவரும் எதிர் எதிரில் இருந்ததால் டைனிங் டேபிளில் இருந்து எக்ஙி ஹய் ஃபைய் அடித்துக் கொண்டனர்..
” இந்தர் குட்டி….எப்படி நீ இவ்ளோ ஹைட்டா வளந்த ” என்றவர் மழலையின் குரலில் ஆச்சரியத்தோடு கேட்க ” ஆமா….உன்னவிட ஹைட் ” என்று கூறினான் அவரை சீண்டிப் பார்க்கும் நோக்கத்துடன்….அவன் கூறியதில் கோவம் கொண்ட பிரியதேனு அவனை முறைத்தப்படியே  ” நானும் ஹைட் ஆவேன்” என்று சிறுப்பிள்ளை போல சபதம் செய்ய ” எப்படி ” என்று இந்திரசேனா குறும்போடு வினவினான்…” காம்ப்ளான் இருக்க பயமேன்” என்றவர் மழலையோடு சொல்ல அவர் கூறிய விதத்தில் அனைவருமே சிரித்தனர்….
எல்லோரும் பிரியதேனுவால் சிரித்துக் கொண்டு இருக்க தன் பூட்ஸ் ஷுவின் ஒலி எங்கும் ஒலிக்கும் படி உள்ளே நுழைந்தாள் ரௌத்ரிகா… ஹூடி வைத்து கோர்ட் மாடல் போல இருந்த அந்த கருப்பு நிற ஆடை அவளின் முழங்கால் வரை இருக்க அவள் அணிந்து இருந்த பூட்ஸ் அவளின் முழங்காலில் இருந்து ஆரம்பித்தது….
தனது பூட்ஸை அந்த கிரானைட் டைல்ஸின் மீது அழுத்தி நடந்து வந்தவள் இந்திரசேனாவின் அருகில் அடுத்ததாக உள்ள நாற்காலியில் அமர்ந்தாள்…ரௌத்ரிகா வந்து அமர்ந்த உடன் அவள் எதிரில் இருந்த அவளிடம் செல்ல மின் மடியில் இருந்து குதித்துக் கொண்டு இருந்தாள்…
இறுகிய முகத்துடன் இருந்த ரௌத்ரிகா மியா தன்னிடமிருந்த வருவதற்காக மின்னின் மடியில் இருந்து குதித்துக் கொண்டு இருப்பதை கண்டு முகநகை பூத்தவள் ” வாங்க என் மியாகுட்டி ” என அழைத்தவாறே கைகளை நீட்ட வீரசேனா மியாவை அவள் கைகளுக்கு கொடுத்தான்…
” என் செல்லத்துக்கு அவ்ளோ அவசரமா என் கிட்ட வர ” என்று கொஞ்சும் குரலில் மியாவிடம் கேட்க அந்த மலர் மொட்டோ அவளை பார்த்து தன் பொக்கை வாயை திறந்து சிரித்துக் கொண்டு இருந்தது…
மியாவை டேபிளில் பாதுகாப்பாக அமர்த்தி தன் கைவளைக்குள் கொண்டு வந்த ரௌத்ரிகா ” இங்க பாரு…..இங்க பாரு” என்று தேன் சிந்தும் குரலில் பேசியவள் மியாவிடம் இந்திரசேனாவை காட்டி ” மாமா சொல்லு மாமா சொல்லு…‌மாஆமா….எங்க சொல்லு ” என ரௌத்ரிகா கூற இநத்திரசேனாவும் மியாவை பார்த்து தன் அக்மார்க் புன்னகையை சிந்தினான்… அவன் முகிழ்நகையில் மயங்கிய குழந்தை இப்போது அவனிடம் செல்ல தாவிக் கொண்டு இருந்தாள்..
” டேய் முக்கி…‌என்னடா பண்ண என் செல்லத்த…இப்படி ஒரே சிரிப்புல என் குழந்தைய சாச்சுப்புட்டானே ” என்று ரௌத்ரிகா இந்திரசேனாவிடம் கடித்துக் கொண்டு இருக்க அதற்குள் மியா அவன் மடிக்கு இடம் மாறினாள்…
” ஹே க்யூட்டி….மாமா சிரிப்பு அவ்ளோ பிடிச்சி இருக்கா என்ன ” என்றவன் சிரித்தவாறே அவள் கைகளை பிடித்து விளையாட அவன் கைகளை எச்சில் செய்து இருந்தாள் அந்த வீட்டின் கன்னுக்குட்டி….
” அய்யோ க்யூட்டி என் விரல் பாவம்…அது என்ன பண்ணுச்சு… இப்படி கடிக்குற ” என்றவன் தன் கைக்குட்டையால் அவள் வாயில் வழிந்த உமிழ் நீரை துடைத்துவிட்டு தன் விரல்களையும் துடைத்துக் கொண்டான்…இந்திரசேனா அவளுக்கு துடைத்து விட்டது பிடிக்காமல் போக அவனை கன்னங்கள் உப்பியவாறு முறைத்துக் கொண்டு இருந்தாள்…
” பார்ராஆ‌‌….. என் க்யூட்டிக்கு முறைக்க கூட தெரியுமா ” என்ற இந்திரசேனா அவள் உப்பிய கன்னத்தை பிதுக்கியப்படி பிடித்துக் கொள்ள அதில் இன்னும் கோவமான மியா ” மாமு…உஉஉ” என கத்த ஆரம்பித்துவிட்டாள்…. அவளின் உப்பிய கன்னமும் அவள் கோவமான முகத்தையும் பார்த்த ரௌத்ரிகா பலமாக சிரிக்க தொடங்கினாள்… அவளின் சிரிப்பில் அனைவருக்குமே மனம் குளிர்ந்து போயினர்…
வீரசேனாவிற்கும் தார்மிகாவிற்கும் ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது…. இந்திரசேனாவிடம் இருந்தால் மட்டுமே ரௌத்ரிகா அவளாக இருக்கிறாள்…. மனம் விட்டு சிரிக்கிறாள்….
” நல்லா இருக்கு டா நீங்க பண்றது….சமத்தா இருந்த என் கன்னுக்குட்டி ஆ இப்படி கோவப்பட வச்சுட்டீங்களே டா ” என்று கூறியபடியே சிற்றுண்டி பாத்திரத்துடன் ஹேமவர்தினி அறையில் நுழைய அவருடன் உமா அக்காவும் இன்னும் ஒரு பெண்மணியும் உள்ளே நுழைந்தார்…
அவர் குரல் கேட்டதும் இப்போது அவரின் செல்ல இந்திரசேனாவின் மடியில் இருந்து குதித்துக் கொண்டு இருந்தாள் மியாகுட்டி…..
” வாடி வாடி என் செல்ல கன்னுக்குட்டி” என்றவாறே சிற்றுண்டி பாத்திரத்தை டைனிங் டேபிளில் வைத்து விட்டு மியாவை ஆசையோடு வாரி தழுவினார்…” பாட்டி ஆ பாத்ததும் அவ்ளோ குஷியா என் கன்னுக்குட்டி” என்று ஹேமவர்தினி மியாவின் தாடையை பிடித்தவாறு கொஞ்சிக் கொண்டு இருக்க ” ம்மாஆ….நீ வேணா தனியா போய் கொஞ்சிக்கோ….முதல எனக்கு யாராவது சோத்த போடுங்க பா பசி உயிர் போகுது ” என்று வீரசேனா காத்து கத்தல் கத்திக் கொண்டு இருக்க ” டேய் சோத்துக்கு செத்தவனே…. கொஞ்சம் நேரம் சும்மா இருக்கியா ??…சோறு சோறு னு அப்படியே பறக்குற…தண்டப்பைய ” என்று ஹேமவர்தினி குழந்தையை கொஞ்சிக் கொண்டு இருக்கும் போது தடுத்ததால் அவனை தீட்டி தீர்க்க ” நீ என்ன வேணா பண்ணு…ஆனா அத கொஞ்சம் சோத்த போட்டுட்டு பண்ணு தாய் குலமே ” என வெக்கமே இல்லாமல் வீரசேனா இளித்துக்கொண்டே கூற அனைவருமே ஒரு நிமிடம் அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு பின் ஒரே நேரத்தில் காரி துப்பினர்….
அவர்கள் காரி துப்பியதை கொஞ்சமும் பொருட்படுத்தாத வீரசேனா ” அரசியல் ல இதெல்லாம் சாதாரணமப்பா ” என்பதை போல் அவனை தட்டில் பொங்கல் கெட்டிச்சட்னி வைத்து உண்ண ஆரம்பிக்க ” வெக்கங்கெட்டவன் ” என மனதில் வசைப்பாடிய படி அனைவருக்கும் பரிமாற தொடங்க அவர் கையை பிடித்துக் கொண்ட ரௌத்ரிகா ” நீ ஒன்னும் அதெல்லாம் பண்ண வேணாம் வது பாப்ஸ்…. அதான் சர்வன்ட்ஸ் இருக்காங்க ல அவங்க பாத்துப்பாங்க ” என்று கூற அவளை மறத்து ஏதோ பேச வந்த ஹேமவர்தினி அவளும் இந்திரசேனாவும் முறைத்த முறைப்பில் கப்சிப் என வாயை மூடிக்கொண்டார்..‌‌.
” அக்கா நீங்க பரிமாறுங்க கா ” என்று அங்கு நின்றிருந்த உமா அக்காவிடம் சொல்ல அதற்காகவே காத்திருந்தவர்கள் போல சிறு சிரிப்போடு வந்து பரிமாற ஆரம்பித்தனர்…
மின்னிற்கும் மியாவிற்கும் மட்டும் கொரியன் நாட்டு உணவு பரிமாறப்பட்டது…. முதல் தடவை இப்படி வேறு நாடு வந்து இருப்பதால் நான் எங்கள் நாட்டு உணவையே சமைத்து உண்ணுகிறேன் என சமையல் அறைக்கு வந்து ஹேமவர்தினியிடம் சொல்ல ” இது உன் வீடு மா ….. நீ என்ன கேக்குறீயோ அதையே செஞ்சி தரப்போறேன்..‌.. இதுக்கு ஏன் நீ வந்து சமைக்கவா னு கேக்குற..‌இனிமே இப்டி சொன்ன அவ்ளோ தான் ” என ஆங்கிலத்தில் கறாராக மறுத்துவிட்டார் அவளிடம்…‌அவரின் அன்பில் நெகிழ்ந்த மின்னும் அவருக்கு சிறு புன்னகையை பதிலாக தந்தாள்…
அனைவரும் மனதார உணவு உண்டவர்கள் ஹாலில் சென்று சோஃபாவில் அமர்ந்துக் கொண்டனர்…
” இன்னைக்கு என்ன ப்ளான் ரௌத்ரா ” என்று வீரசேனா ரௌத்ரிகாவிடம் கேட்க ” மொதல்ல எம் சி பிரான்ச் கு போகனும்… அப்பறம் காலேஜ் போய் அன்மிஷன் வாங்கனும் அவ்ளோ தான் ” தன் அட்டவணைகளை கூறினாள் ரௌத்ரிகா….
” எம் சி ஓகே…. ஏன் காலேஜ் கு போகனும்….நீ போன் ல சொன்னாலே போதுமே ” என்று வீரசேனாவும் கேள்வியோடு வினவ ” போன் பண்ணா வேலை முடிஞ்சிடும் தான்…ஆனா இப்போ திடீர் னு போனா காலேஜ் ஆ செக் பண்ண மாறி இருக்கும் ல அதான் போறேன் ” என்று தன் விளக்கத்தை தந்தாள் ரௌத்ரிகா…..
இதே வீரசேனாவிற்கு அதிர்ச்சி… அவன் கேட்டு முதல் முறை விளக்கம் தந்து இருக்கிறாள்…‌இதுவே அவளின் மாற்றத்தின் முதல் படி என நம்பினான்…
” சரி போய்ட்டு வா டா ” என்றவன் கூற ” போறேன் இல்ல போறோம் ” என்றவள் கூற ” நான் ஏன் வரனும் ” என்று வீரசேனா கேட்க ” நொய் நொய் னு கேள்வி கேக்காம கோர்ட் சூட் போட்டுட்டு வா ” என்று ரௌத்ரிகா சிடுசிடுப்புடன் கூற ” போறேன் போறேன் ” என்று கூறியபடியே தனதறைக்கு சென்று உடை மாற்றி வந்தான் வீரசேனா….
அவன் உடை மாற்றி வந்ததும் ரௌத்ரிகா , தார்மிகா, இந்திரசேனா, வீரசேனா அனைவரும் ரௌத்ரிகாவின் ஜெனிஸ் ஜி 90 யில் எம் சி பிரான்சிற்க்கு சென்றனர்….
டெவிலின் ஆட்டம் தொடரும் 😈😈😈…..
படித்துவிட்டு மறக்காமல் கமெண்ட்ல சொல்லிட்டு போங்கோ 💭💭💭
பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நண்பர்களே 📢📢📢
கமெண்ட் செய்ய முடியாதவர்கள் ஸ்டிக்கர் கொடுக்கலாம் 🫂🫂🫂
நன்றி வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
_ஐது ஸ்ரீ யாழ்நிதி 💜💚

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *