மோக மந்திரப் பூவே

This entry is part 14 of 28 in the series மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

அத்தியாயம் 14

“தேனு..” என்ற காமாட்சியின் குரலை கேட்டதும், தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்த தேன் மொழி வீட்டின் உள்ளே ஒடி வந்தாள். 

“சொல்லுங்க.. அத்தை..” என்றவாறு அருகில் வந்து நின்றவளின் கையைப் பிடித்து சோஃபாவில் அமர வைத்தவர், 

“இந்தா இங்கப் பாரு.. இந்த நகை புடவை எல்லாம் நல்லாருக்கா?” என்றவாறே  அங்கு மேஜையில் இருக்கும் பட்டுப்புடவையையும் நகைகளையும் காமாட்சியம்மா காட்ட, 

“எதுக்கு அத்தை இதெல்லாம்?” என்று வெட்கப்பட்ட தேன்மொழியின் முகத்தாடையை பிடித்து நிமிர்த்தியவர்,

“இன்னைக்கு ஆதியோட பர்த் டே பார்ட்டி மட்டுமில்ல.. உங்க ரெண்டு பேருக்கும் எங்கேஜ்மெண்ட் பிக்ஸ் பண்ணிருக்கோம்.. என் பையன் ராஜான்னு ஊருக்கே தெரியும்.. அவனுக்கேத்த மகாராணியா.. என் மருமக தெரிய வேணாம்? அதுக்கு தான் இதெல்லாம்.. நான் தூக்கி வளர்த்த புள்ளடா நீ.. எங்க வீட்டுக்கு வரப்போற ராஜகுமாரிடா.. அப்படியே தகதகதகன்னு ஜொலிக்க வேணாமா? போ.. உன் அறைக்கு போய் ரெடியாகு.. இன்னும் கொஞ்ச நேரத்துல ப்யூட்டி பார்லர்ல இருந்து வந்துடுவாங்க.. நான் அதுக்குள்ள அந்த அரேண்ஜ்மெண்ட்ஸ் எல்லாம் முடிஞ்சுடுச்சான்னு.. ஒரு பார்வை பார்த்துட்டு வந்துடுறேன்..” என்றவர் ஆதித்தனின் மாளிகைக்கும் வேதாந்தத்தின் மாளிகைக்கும் இடையே இருந்த தோட்டத்தில் விழாவிற்கு ஏற்பாடு செய்து கொண்டிருப்பதை பார்வையிட சென்றார். 

இங்கே ஆதித்தனின் மாளிகையில், அவனது அலுவலக அறையில், 

“ம்ம்.. இது நல்லால்ல.. ம்ம்.. இதுவும் நல்லால்ல.. வேற ஏதாவது இருக்கா?” என்று அலுச்சாட்டியம் செய்து கொண்டிருந்த சிவன்யாவை கொலைவெறியோடு பார்த்திருந்தார் அந்த ஆடை வடிவமைப்பாளர். இதோடு ஆதித்தனுக்காக வடிவமைத்த பத்தாவது ஆடையை நிராகரித்திருந்தாள். பொறுமையிழந்த அடைவடிவமைப்பாளர்,

“அப்போ நீயே இதுல ஏதாவது ஒன்றை செலக்ட் பண்ணிக்கோ..” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறி செல்ல, ஆதித்தனுக்காக கரும் நீல நிறத்தில் கோர்ட்‌டும், வெள்ளை நிற சட்டையையும் தேர்ந்தெடுத்தாள் சிவன்யா. 

“அப்படியே வெல்வெட்ல சைனிங்கா இருக்கு.. இது தான் பெர்ஃவெக்ட்..” என்றவள் சிவப்பு நிற டையையும் தேர்ந்தெடுக்க, அறைக்குள் நுழைந்தான் ஆதித்தன். அவனுக்காக தேர்ந்தெடுத்த ஆடைகளை எடுத்துக் கொண்டு திரும்பியவளின் வயிறு, அங்கே போடப் பட்டிருந்த நாற்காலியில் கடித்துக் கொள்ள, “ஸ்ஸ்ஸ்அஆஆஆ..” என்று கத்த, பதறிப் போனான் ஆதித்தன். 

“ப்ச்.. இடிச்சுக்கிட்டியா? அப்படியென்ன அவசரம் உனக்கு?” என்றவன், அவளை சட்டென தன் கைகளில் ஏந்திக் கொண்டு, தனது அறைக்கு செல்ல, அதனை பார்த்த அசோக் குமாரோ, தன் கையில் இருந்த கோப்பினால் முகத்தை மூடிக் கொண்டு அலுவலக அறைக்குள் நுழைந்தான். 

“இன்னைக்கு இவருக்கு தேன்மொழியோட நிச்சயதார்த்தம்னு குடும்பமே ஒன்னு கூடி அந்த வீட்டுல  கும்மியடிக்குது.. ஆனா.. இவர் அதைப் பத்தி கொஞ்சங்கூட கவலைப்படாம.. இங்க இந்த பொண்ணு கூட கூத்தடிச்சுட்டு இருக்காரு.. இன்னைக்கு என்ன நடக்கப் போகுதோ? கடைசில குடும்பம் மொத்தமும் ஒன்னு சேர்ந்து என்னைய ரவுண்ட் கட்டி அடிக்கப்போறாங்க.. கடவுளே.. என்னைய இந்த கொலைகார குடும்பத்துல இருந்து காப்பாத்துப்பா..” என்று வாய்விட்டு புலம்பிக் கொண்டிருந்தவனின் கைப்பேசி அழைக்க, அதனை எடுத்து காதில் வைத்தவனிடம்,

“அசோக்.. அந்த ட்ரெஸை எடுத்துட்டு வந்து ட்ரெஸ்ஸிங் ரூம்ல வை..” என்று ஆதித்தன் கட்டளையிட, 

“என் பொழப்பு இன்னைக்கு சிரிப்பா.. பிரிக்கப் போகுது..” என்று புலம்பியவாறே ஆதித்தனின் ஆடையை எடுத்துச் செல்ல, மீண்டும் அசோக் குமாருக்கு கைப்பேசியில் அழைத்த ஆதித்தன், 

“நான் சொன்ன மாதிரி எல்லாம் ரெடியா இருக்கணும்..” என்று கூற, 

“அப்போ இன்னைக்கு சிறப்பா.. ஒரு சம்பவம் இருக்கு..” என்று புலம்பியவாறே, ஆதித்தன் கூறியவற்றை ஏற்பாடு செய்யத் தொடங்கினான். இங்கு அறைக்குள் தூக்கி வந்து கட்டிலில் அமர வைத்திருந்தவன், 

“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? இப்படித்தான் கேர்லெஸா இருப்பியா?” என்றவன், சட்டென அவளது மேலாடையை வயிறு வரை தூக்கி அங்கு அடியேதும் பட்டிருக்கின்றதா? என்று ஆராய, அதிர்ந்து போய் இருந்தவள், பட்டென மேலாடையை கீழே இறக்கியிருந்தாள்.  

“என்ன.. என்னப் பண்ணுறீங்க? நீங்க? விடுங்க..”

“ஏன்? எங்க அடிபட்டுச்சுன்னு பார்க்குறேன்.. இதுல என்ன இருக்கு?”

“அதெல்லாம் எங்கேயும் அடிபடல.. சும்மா லேசா இடிச்சதுக்கு ஏன் இப்படி டென்ஷன் ஆகுறீங்க?”

“பின்ன.. உள்ள இருக்குறது என்னோட ஜுனியர்.. ஆமா.. எதுக்கு நீ இன்னைக்கு இவ்வளோ டென்ஷனாகுற? இதுக்கு முன்னாடி உன்னை நான் இப்படி பார்த்தேயில்லயா? என்னமோ புதுசா.. விலகுற.. ஒன்னை மட்டும் நல்லா ஞாபகம் வைச்சுக்கோ.. என் புள்ளைக்கும் எனக்கும் இடைல வரலாம்னு மட்டும் நினைக்காத.. புரிஞ்சுதா? நான் புள்ளகூட பேசுவேன்.. கொஞ்சுவேன்.. டூயட் கூட பாடுவேன்.. நீ என் கண்ணுல இருந்து அவனை மறைக்க பார்க்காத..”

“க்கும்.. இந்த புள்ளயப் பத்தி உங்க வீட்டு ஆளுங்களுக்கு தெரிஞ்சா.. அப்படியே ஏத்துப்பாங்ளான்னு யோசிச்சு பார்த்தீங்களா? நான் உங்க வீட்டுல வேலைக்குன்னு வந்தவ.. எனக்கு பிறக்கப் போற உங்க குழந்தையை அவங்க எப்ப ஏத்துப்பாங்க?”

“அதெல்லாம் பத்தி நீ கவலைப்பட வேண்டிய அவசியமேயில்ல..என் குழந்தைய எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும்.. யாரும் என் குழந்தைய பார்த்துக்க தேவையில்ல..” என்ற ஆதித்தன், தனது அலமாரியை திறந்து, அதில் இருந்து அழகான பட்டுப்புடவையையும், சில நகைகளையும் எடுத்து அவள் முன் நீட்டினான். அதனை கண்கள் விரிய பார்த்தாள் சிவன்யா. 

“என்னதிது?”

“பார்த்தா தெரியல? இது புடவை.. இது காதுக்கு கழுத்துக்கு அப்புறம் கைக்கு போடுற நகைங்க..”

“அதெல்லாம் தெரியுது.. ஆனா.. எனக்கு எதுக்கு கொடுக்குறீங்க?”

“ம்ம்.. நான் இதெல்லாம் போட்டுக்குறதில்ல.. அதான் உனக்கு கொடுக்குறேன்..”

“சும்மா கேலி பண்ணாதீங்க.. எதுக்குன்னு சொல்லுங்க?”

“என்னையவே கேள்வி கேட்குற அளவுக்கு வந்துட்டியா?”

“இல்ல.. அப்படியில்ல..”

“நான் சொல்றதை மட்டும் செய் போதும்.. இன்னைக்கு என்னோட பர்த் டே பார்ட்டிக்கு நீ இதையெல்லாம் போட்டுட்டு வர்ற.. உன்னையே கூட்டிட்டு போக அசோக் வருவான்.. புரியுதா?”

“ம்ம்ம்..”

“வெரிகுட்.. இதே மாதிரி நான் என்ன பண்ணாலும்.. தலையை மட்டும் ஆட்டணும்.. எதுக்காகவாவது ம்ஹூம்.. சொன்ன? உன்னைய என்ன பண்ணுவேன்னே தெரியாது..” என்றவன் அங்கிருந்து வெளியேற, 

“அய்யோ.. இவர் பேசுவதை பார்த்தா.. இன்னைக்கு எதுவோ ஃப்ளான் பண்ண மாதியிருக்கே.. அதுக்குள்ள ஏதாவது பண்ணி, இந்த கப்போர்டை ஓப்பன் பண்ணணுமே.. அதுல இருக்குற நகையை எடுத்துட்டு எப்படியாவது எஸ்ஸாகணும்..” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே, அவன் திறக்கக் கூடாது என்று கட்டளையிட்ட அலமாரியினை திறக்க முயன்றாள் சிவன்யா. அவள் அலமாரியை திறக்க முயன்ற அதே நேரம், ஆதித்தனின் கைப்பேசியில் அலாரம் அடித்தது. அந்த அலமாரியின் சாவியை அவளது கண்ணில் படுமாறு வைத்தவனே ஆதித்தன் தான் என்பதை உணராது போன சிவன்யாவோ, அதனை திறந்து, அதில் இருந்த கோப்புகளை எடுத்து, இப்படியும் அப்படியுமாக பார்க்க, அதை அலமாரியில் பதிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கேமரா தன்னால் படம் பிடிக்க ஆரம்பித்திருந்தது. அங்கு நடப்பதை  தனது கைப்பேசியில் நேரடி நிகழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தவனின் கைகளும் முகமும் இறுகி போயின. 

அத்தியாயம் 15

“கடைசில நீயும் எனக்கு துரோகம் பண்ணிட்ட.. என்னோட பிஸ்னஸ் சீக்ரெட் ஃபைல்ஸை திருடத் தானே வந்துருக்க? உன்னை என்னப் பண்ணுறேன்னு பாரு..” என்றவன் கர்ஜிக்கும் நேரம், அவள் எடுத்த ரகசிய கோப்புகளை ஒரு ஓரமாக வைத்தவள், வேறு எதையோ தேடிக் கொண்டிருந்தாள். அதனை பார்த்தவனுக்கு இன்னும் குழப்பமாக, மேற்கொண்டு அவள் செய்வதை உண்ணிப்பாக கவனிக்க ஆரம்பித்தான் ஆதித்தன். இறுதியில், அதனுள் இருந்த அத்தனை கோப்புகளையும் எடுத்து வெளியே போட்டவள், அறையில் மூலையில் இருந்த துடைப்பத்தை எடுத்து வந்து அவ்வலமாரியை சுத்தம் செய்தாள். அதிலிருந்து தூசி தான் வந்ததே தவிர நகை இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால், எப்படி கோப்புகளை வெளியே எடுத்தாளோ, அதே போல் உள்ளே அடுக்கி வைப்பதை பார்த்தவனின் இதழில் சிறு புன்னகை தவழ்ந்தது. சிவன்யாவை முழுமையாக மனதார நம்ப ஆரம்பித்திருந்தான் ஆதித்தன். 

***************************************************

“வாங்க.. வாங்க.. மிஸஸ் ராஜேந்தர்..” 

“என்ன மிஸஸ் அனந்த கிருஷ்ணன்.. உங்க பெரிய பையனோட இந்த வருஷ பர்த் டே பார்ட்டிய அப்படியே தெறிக்கவிடுறீங்க?”   

“இன்னைக்கு என் பையனோட பர்த் டேவோட சேர்த்து இன்னொரு சர்ப்ரைஸும் இருக்கு.. அதுக்கு தான் இந்த ஏற்பாடெல்லாம்..”

“ஓ! அப்படியென்ன சர்ப்ரைஸ்? என்கிட்டக் கூட சொல்லவேயில்ல..”

“அதான் சர்ப்ரைஸ்னு சொல்லிட்டேனே.. இன்னும் கொஞ்ச நேரத்தில தெரிஞ்சுடும்..” என்றவர் கூற,

“ஐம் வெயிட்டிங்..” என்று கூறியவாறே உள்ளே சென்றவரை கவனித்துக் கொள்ளுமாறு வேலையாட்களுக்கு உத்தரவிட்டவரை தேடி வந்தார் கலாவதி. 

“காமாட்சி.. எங்க இன்னும் ஆதிய காணோம்?” 

“இல்லத்தை.. ஏதோ சின்ன பிஸ்னஸ் மீட்டிங் ஆன் லைன்ல இருக்காம்..  இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்னு.. அவனோட பி. ஏ ஃபோன் பண்ணி சொன்னான்..” 

“ஓ! அவன்கிட்ட தேன்மொழியை பத்தி பேசுனியா?”

“இல்லத்தை.. அவன்கிட்ட இதை பத்தி பேசவே பயமாயிருக்கு.. இருந்தாலும் உங்க பேச்சை மீற மாட்டாங்குற நம்பிக்கைல நிச்சயதார்த்த வேலையெல்லாம் பண்ணிருக்கேன்..”

“எனக்கென்னமோ நாம் அவசரப்படுறோமோன்னு தோணுது.. எதுக்கும் கொஞ்சம் ஆறப்போட்டு பண்ணலாமே.. எனக்கு அவன்கிட்ட கொஞ்சம் பேசணும்..”

“இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் சூட்டோட சூட்டா முடிச்சுடணும் அத்தை.. அதுக்கப்புறம் அவனை பிடிக்க முடியாது.. அதுவுமில்லாம அவனோட ஜாதகப்படி, இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் பண்ணணுமாம்.. அப்படியில்லன்னா இன்னும் அஞ்சு வருஷங்கழிச்சு தான் கல்யாணயோகம் வருமாம்.. நம்ம ஜோசியர் சொன்னாரு.. நீங்க மட்டும் அவனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சுடுங்க அத்தை.. அது போதும் எனக்கு..” என்ற காமாட்சியை பார்த்த கலாவதி, 

‘நீ வேற நிலைமை புரியாம பேசிட்டிருக்கியே காமாட்சி.. நீ உன் புள்ளைக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ற.. ஆனா உன் பையன் சீமந்தத்துக்குல ஏற்பாடு பண்ணி வைச்சுருக்கான்.. இந்த உண்மைய நான் சொன்னா.. நீ தாங்குவியா?’ என்று தனது மனதுக்குள் நினைத்துக் கொள்ள, 

“அத்தை இந்த அஸ்வத்தை எங்கேயாவது பார்த்தீங்களா? காலைல ப்ராஜெக்ட் விஷயமா போறேன்னு சொல்லிட்டு கிளம்பினான்.. இன்னும் வரல..” என்று காமாட்சி கேட்க,

“ரவீந்திரனும் லெட்சுமியும் ஏர்போர்ட்டுக்கு வந்துருப்பாங்க.. அவங்களை கூட்டிட்டு வர போயிருப்பான்.. நீ ஆதித்தனுக்கு போன் போட்டு வரச்சொல்லு..” என்ற கலாவதி பாட்டியின் முகத்தில் இனம் புரியாத பயமே தெரிந்தது. ஆதித்தனை அழைக்கவென காமாட்சி தனது கைபேசியை எடுக்க, அதே நேரத்தில் கருநீல நிறத்தில் கோர்ட்டில் அட்டகாசமாக வந்தவனை  வைத்த கண்மாறாது பார்த்திருந்தனர் அங்கிருந்த அனைவரும். அவன் பின்னால் இளம் ரோஜாப்பூ வண்ண க்ளாஸ் புடவையில் வைர நகைகள் கழுத்திலும் காதிலும் மின்ன, எவ்வித முகஒப்பனையும் இல்லாது பன்னீர் ரோஜாவாக சிவன்யா வந்து கொண்டிருக்க, சிவப்பு நிற பட்டுப் புடவையில் அழகுக்கலை நிபுணரின் கைவண்ணத்தில் மின்னிய தேன்மொழி,

“அத்தான்..” என்றவனை நெருங்கும் போது, “சிறு புன்னகையோடு அவளை அலட்சியப்படுத்தி விட்டு அங்கிருந்து அகன்றான் ஆதித்தன். காமாட்சியின் பெரிய அண்ணன் மற்றும் சின்ன அண்ணன் என அவர்களது குடும்பத்தினர் அனைவரும் வந்திருக்க, அவர்கள் முன்னிலையில் தேன்மொழியை ஆதித்தன் அலட்சியப்படுத்த, கோபத்தில் இருப்பவர்களை சமாதானப்படுத்தினார் காமாட்சி. மேடையில் சிவன்யாவை தன் அருகிலேயே நிறுத்திக் கொண்டான்.  ஆதித்தன் வந்ததும் ஆளுயர பிறந்த நாள் கேக்கை கொண்டு வரச் சொல்லி நிறுத்தியிருந்தார் காமாட்சி. அனைவரும் பிறந்த நாள் பாட்டுப்பாட, தனது பிறந்த நாள் கேக்கை வெட்டினான் ஆதித்தன். வெட்டிய கேக்கை முதலில் வேதாந்தத்திற்கும் கலாவதி பாட்டிக்கும் ஊட்டியவன், அடுத்த பாதியை எடுத்து சிவன்யாவின் வாயின் அருகில் கொண்டு செல்ல, அனைவரும் அவனை கேள்வியாக பார்த்தார். ஆனால் யாரைப் பற்றியும் கவலைப்படாத ஆதித்தனோ, தனது செயல்களின் மூலம், சிவன்யா தனக்கு மிகவும் நெருக்கமானவள் என்பதை உணர வைத்தான். நிலைமை கை மீறிச் போவதை உணர்ந்த கலாவதி பாட்டி, மேடையில் இருந்த மைக்கை எடுத்து, ஆதித்தனின் கையையும் தேன்மொழியின் கையையையும் இணைத்து பிடித்தவாறே,

“இன்னைக்கு ஒரு முக்கியமான சர்ப்ரைஸ் நியூஸ் உங்களுக்கு சொல்லப் போறோம்..” என்றவர், தன் கைகளை அவரிடம் இருந்து உறுவ முயன்ற ஆதித்தனை யாருக்கும் தெரியாமல் அடக்கியவாறே,

“என் பேரன் ஆதிக்கும் பேத்தி தேன்மொழிக்கும் அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் பண்ண முடிவு பண்ணிருக்கோம்..” என்று கூறும் போது, அவரது கையை உதறியிருந்தான் ஆதித்தன். அதே சமயம், வேலைக்காரன் வேடமிட்டிருந்த ஒருத்தனின் கையில் துப்பாக்கியைப் பார்த்தாள் சிவன்யா. தான் கொண்டு வந்திருந்த உணவுதட்டின் அடியில் யாருக்கும் தெரியாமல் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தவன், ஆதித்தனைப் பார்த்து குறி வைத்து கொண்டிருக்க, அதனைப் பார்த்த சிவன்யா அதிர்ந்து போனாள். என்ன செய்வதென்று அறியாது,  ஆதித்தனை மறைத்தவாறு செல்ல, அதே நேரம் துப்பாக்கி வைத்து சுடும் நிலையில் இருந்தவனின் முதுகில் யாரோ தெரியாது இடித்துவிட, ஆதித்தனின் நெஞ்சிற்கு குறி வைத்த குண்டு, குறி தவறி சிவன்யாவின் பாதத்தில் பட்டிருந்தது. 

“ஆஆஆஆ.. அம்மாஆஆஆ..” என்று துடித்து கீழே விழுந்தவளை கைகளில் தாங்கிக் கொண்டவாறே, சுட்டவனை அசோக்கிற்கு கண்களால் அடையாளம் காட்டிவிட்டு, சிவன்யாவை தன் கைகளில் ஏந்திக் கொண்டான். குண்டடி பட்டவளை விட அவனுக்கு அதிகம் வலித்தது. இரு இதயங்கள் இணைந்தால் வலி கூட பொது தானோ? தன் கையில் இருந்தவளை கலாவதி பாட்டியின் அறைக்கு தூக்கிச் சென்றவன், விநோத்தை அழைக்க, அதனை பார்த்த கலாவதி பாட்டி,

“லேடி டாக்டரை வரச் சொல்லு ஆதி.. குழந்தைக்கு ஏதாவது ஆகிறப் போகுது..” என்று கூற, காலில் சுட்டுபட்ட அடியின் வலியை விட, தனது தில்லுமுல்லு வெளியே தெரிந்து விடுமோ என்ற பயமே சிவன்யாவிற்கு அதிகமாக இருந்தது. 

“இல்ல.. பரவால்ல.. சின்ன அடிதான்.. விநோத் சாரே.. கட்டுப் போட்டு விடட்டும்..” என்ற  சிவன்யாவை பார்த்து கலாவதி பாட்டி,

“காலுக்கு கட்டுப்போடுறதை விட, குழந்தைக்கு ஒன்னும் ஆகக்கூடாது.. அது தான் இப்போ ரொம்ப முக்கியம்..” என்று கூற,

“ஸ்டாபிட் பாட்டி.. இப்போ அவளுக்கு பர்ஸ்ட்டெய்ட் பண்ணணும்.. அது தான் ரொம்ப முக்கியம்..” என்றவன் தன்னருகே நின்றிருந்த விநோத்தை அழைத்து, சிவன்யாவிற்கு வைத்தியம் பார்க்கச் சொல்ல, அவளின் பாதத்தை ஆராய்ந்து பார்த்தவன்,

“குண்டு மேல் தோலை தான் உரசிட்டு போயிருக்கு.. சோ.. நோ ப்ராப்ளம்.. ஆனா, இரத்தம் நிறைய போயிருக்கு..” என்று கூறியவாறே, அவளது காயத்தை சுத்தம் செய்து கட்டு போட்டுவிட்டு எழுந்து கொள்ள,

“இங்க என்ன நடக்குது? என்ன குழந்தை? யாரோட குழந்தை?” என்று காமாட்சி கேட்க, “அது வந்து.. அது வந்து காமாட்சி..” என்று இழுத்த கலாவதி பாட்டியை,  நாராயண மூர்த்தி மற்றும் அவரது அண்ணன் விநாயக மூர்த்தி இருவரும் கவனமாக பார்த்து கொண்டிருந்தனர். 

“சொல்லுங்க.. எனக்கு இப்ப உண்மை தெரிஞ்சாகணும்.. யாரோட குழந்தைக்கு ஒன்னும் ஆகிடக்கூடாதுன்னு இவ்வளவு கவலைப்படுறீங்க அத்தை?” என்று காமாட்சி குரல் உயர்த்த,

“ஒன்னுமில்ல காமாட்சி.. நீ பதட்டப்படாமல்.. நான் சொல்றதை கேட்கணும்..” என்று கலாவதி பாட்டி பேசிக் கொண்டிருக்க,

“அது என் குழந்தையை பத்தி தான் சொல்றாங்க..” என்ற ஆதித்தனை அனைவரும் அதிர்ந்து போய் பார்த்திருந்தார். 

“என்னது? உன்.. உன்.. உன்.. குழந்தையா? இவ வயித்துலயா? என்னடா நடக்குது இங்க? எனக்கு தலையெல்லாம் சுத்துதே.. அத்தை.. அத்தை.. இவன் சொல்வதெல்லாம் உண்மையா? இவ.. இவ.. வயித்துல நம்ம குடும்பத்தோட வாரிசு.. வளருதா? சொல்லுங்க அத்தை.. சொல்லுங்க..”

“அவங்கக்கிட்ட ஏன் கேட்குறீங்க? என்கிட்ட கேளுங்க.. நானே சொல்றேன்.. எல்லோரும் கவனமா கேட்டுகோங்க.. அப்புறம் இன்னொரு தடவை என்னால சொல்ல முடியாது.. இவ பேரு சிவன்யா.. நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்.. கல்யாணம் பண்ணிக்க போறோம்.. அந்த தைரியத்துல கொஞ்சம் எல்லை மீறிட்டோம்.. இப்ப அவ என் குழந்தைக்கு அம்மாவாகப் போறா.. சோ, பெரியவங்க எல்லோரும் எங்களை மன்னிச்சு.. எங்க ரெண்டு பேரோட கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க..” என்ற ஆதித்தன், மெல்ல நடந்து வந்து சிவன்யாவின் பாதத்தை எடுத்து தன் மடி மேல் வைத்து, அதனை மெல்ல வருடியவாறே,

“ரொம்ப வலிக்குதா பேபி?” என்று கேட்க, கண்களில் நீர் தழும்ப, இல்லையென தலையசைத்தாள் சிவன்யா. 

“அதெப்படி.. இவ உங்களால் தான் கர்ப்பமானான்னு என்ன நிச்சயம்?” என்று தேன்மொழி கேட்க, 

“அதானே? முதல்ல இவ உண்மையிலேயே கர்ப்பமா இருக்காளான்னு செக் பண்ணுங்க..” என்றாள் வானதி. அவர்கள் இருவரையும் தீப்பார்வை பார்த்த ஆதித்தன்,

“இது என்னோட குழந்தையா? இல்லையான்னு உங்க ரெண்டு பேரையும் நான் பட்டிமன்றம் நடத்த சொல்லலையே? மோர் ஓவர்.. என்னோட பர்சனல் லைஃப்ல தலையிட என்னோட பேரெண்ட்ஸ்கே ரைட்ஸில்ல.. நீங்க யார் என்னைய கேள்வி கேட்க?” என்ற ஆதித்தனின் முன்னால் வந்து நின்றார் அனந்த கிருஷ்ணன். 

“இந்த மாதிரி விஷத்துல விளையாடாத ஆதி.. உனக்கு என்னைய பழிவாங்கணும்னு தோணுச்சுன்னா.. என்னைய என்ன வேணா பண்ணிக்கோ ஆதி.. ஆனா.. இப்படி கண்டவளையும் கூட்டிட்டு வந்து.. இவளைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லி வீம்பு பிடிக்காதப்பா..” என்றவர் கூற,

“மைண்ட் யுவர் வேர்ட்ஸ் மிஸ்டர் அனந்த கிருஷ்ணன்.. என்னைய இன்னும் ப்ளஸ் டூ படிக்கும்.. எதுவுமே தெரியாத ஆதித்தன்னு நினைச்சீங்களா? உங்க இஷ்டத்துக்கு பேச.. நீங்க ஒரு காலத்துல எனக்கு அப்பாவா இருந்தீங்க.. எப்போ ஒரு பொண்ணுக்காக நீங்க என்னைய நம்பலையோ..அப்பவே அந்த பந்தமெல்லாம் செத்துடுச்சு.. சோ, என்னோட பொண்டாட்டிய பார்த்து கண்டவன்னு பேசுவதை விட்டுடுங்க.. ஓகே? அது தான் பெரிய மனுஷனுக்கு அழகு..” என்ற ஆதித்தனின் கன்னத்தில் காமாட்சி அறைய முற்பட, சட்டென ஆதித்தனை அணைத்தாள் போல் சாய்ந்து கொண்டாள் சிவன்யா. ஆதித்தனின் கன்னத்தில் விழ வேண்டிய அடி, சிவன்யாவின் தோளில் விழ, பதறிப் போய் விலகினார் காமாட்சி. காமாட்சி அடிக்க வருவதை முன்னே யூகித்த சிவன்யா, தனது அடிபட்ட காலை மடக்கி, அவனை அணைத்தாற் போல் சாய்ந்திருக்க, அவளது காலில் இருந்து ரத்தம் கசிந்தது. அதனைப் பார்த்த ஆதித்தன்,

“கடைசில நீங்களும் இவர் மாதிரி  தான் நிரூபிச்சுட்டீங்கல்ல? இப்போ உங்களுக்கெல்லாம் என்ன சந்தேகம்? சிவன்யா கர்ப்பமா இருக்காளா? இல்லையான்னு தெரியணும்.. அவ்வளவு தானே?” என்று காமாட்சி மற்றும் அங்கிருந்த அனைவரையும் பார்த்து கூறியவன்,

“விநோத்.. நம்ம ஃபேமிலி லேடி டாக்டரை வரச் சொல்லு.. அப்படியே உன்னோட ஹாஸ்பிடல்ல இருக்குற ஸ்கேனிங் மிஷனையும் கொண்டு வரச் சொல்லு.. இவங்க எல்லோர் முன்னாடியும் ஸ்கேனிங் பண்ணி காட்டட்டும்.. அப்போவாவது இவளைப் பத்தி தப்பா பேசுவதை நிறுத்துறாங்களான்னு பார்க்கலாம்.. அது மட்டுங்கிடையாது.. என்னோட பேபி.. இந்த நிலைமைல ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக வேணாம்.. சோ, நான் சொன்னபடி ஏற்பாடு பண்ணு..” என்று விநோத்திடம் கூறிவிட்டு, மேஜையின் மேல் இருந்த ஜக்கில் இருந்து தண்ணீரை டம்ளரில் ஊற்றி, சிவன்யாவிற்கு கொடுத்த ஆதித்தன்,

“டோண்ட் ஒர்ரி பேபி.. நம்ம பேபிக்கு ஒன்னும் ஆகாது.. நான் ஆகவும் விடமாட்டேன்..” என்றவன், அசோக் குமாரை கைபேசியில் அழைத்து, 

“அந்த நாயை பிடிச்சுட்டியா?” என்று கேட்டவன், எதிர் முனையில் என்ன பதில் அளிக்கப்பட்டதோ,

“அவனை நம்ம குடோனுக்கு தூக்கி வாங்க.. என் மேல கை வைக்க நினைச்சு, என் பேபியை காயப்படுத்துனவனோட கையை நான் தான் உடைக்கணும்.. அப்புறம் என்ன டார்ச்சர் வேணா பண்ணுங்க.. இதுக்கு காரணமானவன் யாருன்னு எனக்கு தெரியணும்..” என்று கர்ஜித்த ஆதித்தனின் முகத்தை வெளிறிய முகத்துடன் பார்த்திருந்தாள் சிவன்யா. அவளது பொய் கர்ப்பம் தெரிந்தால், அவளை என்ன செய்வானோ?

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *