கைத்தலம் பற்றவா கண்மணி
14
கைத்தலம் பற்றவா கண்மணி
ஜியா ஜானவி ❤️
மொத்த கோபத்தையும் ஒத்த முத்தத்தில் காட்டிக் கொண்டிருந்தான் நீரஜ்..
வன்மையாய்..
மிகு வலியாய்..
அதி கோபமாய்..
சற்றே மூர்க்கமாய்..
பெரு ஆதங்கமாய்..
துளி தாபமாய்..
பல உணர்வுகளையும் ஒற்றை முத்தத்தில் காட்டி கரை புரண்ட வெள்ளமாய் திரண்டு நிற்கும் தன் காதலை அவளுக்கு உணர்த்தி விட துடித்தான்.
தன்னுள் ஏற்பட்ட அந்த காதல் இத்தனை நாட்களில் அவளிடம் ஏன் ஏற்படவில்லை? என் காதலை நான் சரிவர புரிய வைக்கவில்லையா? என் போல தேடல் ஏன் அவளிடம் இல்லை?
இல்லை.. என் காதலின் கணம் அவளுக்கு புரிகிறது.. என் காதலின் வலி தெரிகிறது.. அதைவிட காதலின் வெளிப்பாடாய் என் முத்தத்திற்கு உள்ளே உருகி நிற்கிறாள்.
பின்னே ஏன் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறாள் என்று புரியாமல் தவித்தவன், அத்தனையும் அவளின் இதழ்களில் கொட்டிக் கொண்டுயிருந்தான்.
“விடுங்க.. விடுங்க..” என்ற அவளின் அனைத்து மறுப்புகளும் அவன் இதழ்களுக்குள்ளே சென்று மறைந்து கொண்டிருந்தது.
நீரஜோ முரட்டுத்தனமாய் மாறி இருந்தான்.
தன்னை விட்டு ஒரேயடியாக செல்ல துணிகிறாளே என்ற அவனின் ஒட்டு மொத்த உணர்வுகளையும் அவளின் இந்த ஸ்பரிசத்தில் கரைத்துக் கொண்டிருந்தான். ஆனால்.. அவளின் அந்த ஸ்பரிசமோ இன்னும் இன்னும் வேண்டும் என்பதாய்..
ஒரு கட்டத்தில் அவள் துவண்டு விழ..
வாசலில் நின்றப்படியே அவளை மடித்தாங்கினான் பயந்து போய்.. மூச்சுக்காற்றுக்கு ஏங்கி பின் சமாளித்து ஏறி இறங்கிய பெரு மூச்சோடு அவளின் நெஞ்சு விம்மித் தணிய.. அவளை அப்படியே அள்ளியவன் அந்த ஒற்றை படுக்கையறை கொண்ட வீட்டின் ஹாலின் சோஃபாவில் அமர வைத்து, முதுகை நீவி, சுற்றும்முற்றும் பார்த்தவனின் சமையலறை தென்பட்டது அவன் கண்களில்.
அங்கே சென்றவன் இருளில் ஸ்விட்ச் தெரியாமல் உருட்ட.. ஏற்கனவே பெண் சென்று இன்னும் காணலையே என்று பார்க்க வந்த வானதி, யாரோ சமையலறையில் உருட்டும் சத்தம் கேட்டு அங்கே பதட்டத்துடன் சென்று பார்க்க, இருளில் ஒரு உருவம் தென்பட
“யாரு.. யாரு நீ” என்றார் அச்சத்துடன்..
அதற்குள் ஸ்விட்ச் கண்டுபிடித்து விளக்கை போட்ட அந்த காதல் கள்வனோ புன்னகை முகத்துடன் அவரை பார்த்து, “ஹாய் ஆன்ட்டி..
ஹவ் வாஸ் த டே?” என்க..
“என்னது ஆன்ட்டியா?” என்பதிலே பதறியவர்,
அடுத்த நிமிடம் “யாரு.. யாருடா நீ? எங்கே என் பொண்ணு?” என்று விழிகளால் தேடியவர், சோஃபாவில் சோர்ந்து அமர்ந்திருந்தவளை பார்த்து, “என்னடா பண்ணினே என் பொண்ணை? அவ ஏன் அப்படி இருக்கிறா?” என்று பயத்தில் கேட்க.. அவனோ வெகு கூலாக, “ஆன்ட்டி.. அவளுக்கு இன்னைக்கு ஷாக் மேல ஷாக்.. அதான் சூடா பால் காய்ச்ச போறேன்” என்ற அந்த நல்லவனோ வெகு இயல்பாக அந்த வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜை திறந்து உள்ளே இருந்த பால் பாக்கெட்டை எடுத்து நிதானமாக காய்ச்சி கொண்டிருந்தான்.
அவரோ அவனை அதிர்ச்சியாக பார்க்க.. “அவனோ நீங்க போய் ஹாலில் இருங்க ஆன்ட்டி.. நான் பால் உங்களுக்கும் சேர்த்து எடுத்திட்டு வரேன்” என்றான்.
அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே ஹாலில் மகளின் எதிரே அமர்ந்தார்.
திரும்பி மகளை பார்க்க அவளோ சமையலறையில் இருக்கும் நீரஜை தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
என்னடா நடக்குது இங்க? யாரிவன்? இவள் ஏன் இப்படி எண்ணெய் சட்டியில் இருப்பவள் போல் கொதித்து கொண்டு இருக்குகிறாள்? என்று புரியாமல் இருந்தாலும்.. ஏதோ நல்லது நடந்தால் சரி தான் என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டார்.
சிறிது நேரத்தில் கையில் மூன்று பால் கிளாஸூடன் வந்தவன், வானதியிடம் ஒரு கிளாஸை கொடுத்துவிட்டு அவளிடம் நீட்டினான். அவளோ முகத்தை திருப்பிக் கொள்ள.. “கண்ணம்மா.. அப்புறம்…” என்று அவன் இழுக்க.. அவனின் கண்ணம்மாவில் இவள் அதிர்ந்து அன்னையை பார்க்க.. அவருக்கு குடித்த பால் புரை ஏறியது..
“அச்சோ.. சாரி ஆன்ட்டி. ஆனாலும் கண்ணம்மானு கூப்பிடுறது அவ்வளோ அந்தரங்க பேரு இல்லையே உங்களுக்கு புரை ஏறும் அளவு?” என்று வெளிப்படையாக யோசித்துக் கொண்டான்.
நிகாவோ இவனின் ஒவ்வொரு செயலுக்கும் அதிர தான் முடிந்தது. அம்மாக்கிட்ட நல்லா மாட்டி விடுறான்.. என்று நல்ல நல்ல வார்த்தைகளால் அவனை அர்ச்சித்தாள்.
அவள் பாலை எடுக்காமல் கையை இறுக கட்டி கொண்டு அமர்ந்திருக்க.. அவள் முன்னே ட்ரேயை நீட்டியவன், மெல்ல குனிந்து “இப்போ நீ குடிக்கலைன்னா நானே ஊட்டிவிடுவேன்.. கையால இல்ல.. என் உதட்டால்..” என்று நாவினால் உதட்டை ஈரமாக்கி காட்ட..
பாவி.. செய்ஞ்சாலும் செய்வான் என்று நினைத்து அவசரமாக ஒரு பால் கிளாஸை எடுக்க.. “ஹே.. ஹே.. அது எனக்கு.. உன்னால மதியத்தில் இருந்து சாப்பிடல.. சோ எனக்கு தான் பெரிய கிளாஸ். நீதான் அம்மா கையில நல்லா சாப்பிட்டுட்டு தானே இருந்திருக்க..” என்றவனை அவள் முறைக்க..
“முறைச்சா பொய் ஆகிடுமா? அடை கூட எங்க கேரளா ஸ்பெஷல் அவியல் சாப்பிட்டு இருக்க.. ஆல் டீடெய்லஸ் ஐ க்நோ” என்றவன் தன் காலரை தூக்கி விட்டுக் கொண்டே அவள் அருகில் அமர்ந்தான்.
“டேய்.. பக்கத்துல அம்மா இருக்காங்க டா.. என்னமோ மறு வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை போல இப்படி என்னை உரசிக்கிட்டு உட்கார்ந்து இருக்க.. எழுந்திரு முதல்ல.. இல்ல” என்று மரியாதை எல்லாம் அதப்பாதாளத்தில் போக அடிக்குரலில் அவள் சீற..
“என்னது டா வா?” என்று அதிர்ந்தவன், “ஆன்ட்டி.. உங்க பொண்ணுக்கு வாய்
கொழுப்பு ரொம்ப ஜாஸ்தியாடிச்சு.. ஹோ நோ.. உங்க கிட்ட என்னை இன்னும் ப்ராப்பரா இன்ட்ரோ பண்ணலைல.. சாரி ஆன்ட்டி.. இவ பண்ணுன வேலைல மறந்திட்டேன்.. பை த பை.. நான் நீரஜ் ஜித்தேஷ் வர்மா.. உங்க வருங்கால மருமகன்” என்று நிகா வானதி இருவரில் யார் அதிகமாக அதிர்ந்தார்கள் என்று சொல்லுவதற்கில்லை இவனின் அறிமுகத்தில்..
அன்னை அறியாமல் அவனின் கையை நிகா கிள்ள.. வலிக்காத அந்த கிள்ளுக்கு துள்ளி குதித்து ஏக நடிப்பை வெளிப்படுத்தி “ஆன்ட்டி உங்க பொண்ணு இப்போவே என்னை கொடுமை படுத்த ஆரம்பிச்சிட்டா!! இதெல்லாம் நீங்க கேட்டமாட்டீங்களா?” என்று அவள் கிள்ளிய இடத்தை நன்றாக ஊதி ஊதி தேய்த்து கொண்டே வானதியிடம் நியாயம் கேட்க..
அதுவரை ஏதோ அறியாத தெரியாதவன் என்று நினைத்து இருந்தவர், இவனின் இந்த உரிமை கலந்த பேச்சு நடவடிக்கைகளில் இருவரும் ஊடல் கொண்ட காதலர்கள் என்று புரிந்து சிரித்துக் கொண்டார் அழகாக..
அன்னையின் சிரிப்பை நெடுநாள் பிறகு கண்டவளுக்கு உள்ளம் நெகிழ்ந்தது. அதே நேரம் இதை வலுக்க விடக்கூடாது என்று எண்ணி.. “அம்மா.. நீரஜ்.. ” என்று அவள் பேசும் முன், “ஆமாம் ஆன்ட்டி.. எங்க இரண்டு பேருக்குள்ள கொஞ்சம் டிஸூம் டிஸூம்” என்று இரு உள்ளங்கை குவித்து புறங்கையால் முட்டிக் காட்ட.. அவரோ கலகலவென சிரித்தார்.
மகளின் வாழ்க்கையை எண்ணி பல நாட்கள் வருந்தியவர், இன்று கண் முன்னால் அவர்களின் இந்த செல்ல சண்டை.. சீண்டலை பார்க்க அவருக்கு அப்படியொரு நிம்மதியாக இருந்தது. “இந்த ஊடலால் தான் நீ கனடா செல்ல முடிவு எடுத்தியா மித்து? எதா இருந்தாலும் முதல்ல நீங்க இரண்டு பேரும் பேசி முடிங்க.. அப்புறம் இரண்டு பேரும் சேர்ந்தே வேலைக்கு போகலாம் கனடா.. அமெரிக்கான்னு” என்று நீரஜின் உயரம் அறியாமல்.. தங்களையும் அறியாமல் பேசும் அன்னையை காண அவளுக்கு ஆற்றாமையாக இருந்தது. கூடவே இவரின் இந்த யாரையும் நொடியில் நம்பும்தன்மையை நினைத்து மலைப்பாக இருந்தது. எவ்வளவு வலிக்க அடிப்பட்டாலும் இன்னும் மாறவே இல்லையே அன்னை என்று விரக்தி புன்னகை அவள் முகத்தில்..
அதை கண்ட நீரஜ் வானதியிடம் “ஆன்ட்டி.. நீங்க தப்பா நினைக்காதீங்க.. நான் நிகா கூட இப்போ பேசனும். அதுக்கு உங்க அனுமதி..” என்று அவரை பார்க்க..
“இப்போ வா? நடு இராத்திரிலையா? ரெஸ்ட் எடுத்துட்டு காலைல பேசலாமே?” என்று தயக்கத்துடன் இருவரையும் பார்த்துக் கொண்டே கூற..
“இல்ல ஆன்ட்டி.. இந்த கேடிய நம்ப முடியாது. காலையில் கம்பிய நீட்டிட்டாலும் நீட்டிடுவா?”
என்று கண்கள் கோபத்தில் மின்ன பற்கள் நறநறக்க நிகாவை பார்த்து அழுத்தத்துடன் கூறினான். அதில் வானதி சற்று மிரள, அவனின் கண்ணம்மாவோ அசராமல் அமர்ந்து இருந்தாள்.
நொடியில் முக பாவனையை மாற்றியவன் “என் மேல் நம்பிக்கை வைச்சு பர்மிஷன் கொடுங்க” என்றான் பவ்யமாக..
அதில் கரைந்த வானதி, “சரிப்பா..” என்று அவன் கேசத்தை களைத்து விட்டு, மகளின் கன்னத்தை வருடி விட்டு சென்றார்.
“ஆன்ட்டி.. சோ ஸ்வீட்டி” என்றான் செல்பவரை பார்த்து கொண்டு.. அதிசயமாக நிகாவும் ஆமோதித்தாள் நீரஜை..
இவனுமே ஆச்சிரியமாக அவளை பார்த்தான். அவள் புறம் நன்றாக திரும்பி அமர்ந்தான் நீரஜ். “ம்ம்ம்.. சொல்லுங்க மேடம்.. எப்போ கனடா போறதா உத்தேசம்? கல்யாணம் பண்ணிக்கிட்டா இல்லை இரண்டு குழந்தைகள பெத்துக்கிட்டா.. இல்லன்னா அங்கே போய்…” என்று இலகுவாகப் பேசியவனை பார்த்தவளுக்கு ஆயாசமாக இருந்தது.
“இங்க பாருங்க நீரஜ்.. நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் பார்த்த உடனேயும்.. பார்க்க பார்க்கவும் இந்த காதல் எனக்கு உங்க மேல எல்லாம் வராது.. இப்ப மட்டுமில்ல இனி எத்தனை வருஷம் என் பின்னாடி சுத்துனாலும் என்னோட பதில் இதுதான்” என்று அவனைப் பார்த்து தீர்க்கமாக உரைத்தாள் நிகா. அவனோ காதுகளை குடைந்தப்படி அமர்ந்திருந்தான்.
“நான் சொல்லுறதை நல்லா புரிஞ்சுக்கோங்க. எனக்கு கல்யாண லைஃப்.. குழந்தைங்க இதெல்லாம் செட் ஆகாது. உங்க பேரண்ட்ஸூக்கு நீங்க ஒரே பையன். என்னை கல்யாணம் பண்ணிட்டு நீங்க கஷ்டப்படுறதை எல்லாம் அவங்களால பார்க்க முடியாது. தயவுசெய்து போய்டுங்க இங்கிருந்து.. என்னை விட்டு. அது தான் உங்களுக்கும் நல்லது.. அவங்களுக்கும் நல்லது.. என் லைஃப்ல நடந்த சில விஷயங்கள் என் மனசுல ஆழமா பதிஞ்சு இருக்கு.. என்னால அதிலிருந்து மீண்டு வரவும் முடியாது… அதை மறக்கவும் என்னால முடியாது.. முடியும்னு எனக்கு தோனல.. பெட்டர் சூஸ் சம் ஒன் யுவர் பெட்டர் ஹாஃப்.. ப்ளீஸ் நீரஜ்” என்று கோபமாக அழுத்தமாக கொட்டிய வார்த்தைகள் கடைசியில் கெஞ்சலில் வந்து முடிந்தது.
அப்போதும் அவளை அழுத்தமாக பார்த்தபடி அமர்ந்திருந்தானே ஒழிய ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை..
“இப்படியே பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்? இவ்வளவு சொல்றேன் இல்ல.. கொஞ்சமாவது காதில் ஏறுச்சா? இல்லையா?” என்று அவள் கேட்க..
“காதல் தான் ஏறுச்சு கண்ணம்மா உன்மேல் இன்னும் இன்னும்.. மேரேஜ் எப்படி வைச்சுக்கலாம்? உங்க வழக்கப்படியா? எங்க வழக்கப்படியா?” அதி முக்கிய கேள்வியை அப்போது அவன் கேட்க..
“நான் சொல்றத கேளுங்க.. புரிஞ்சு விலகிப் போங்க” என்று ஒற்றை விரல் நீட்டி அவள் கூற..
“இரண்டு முறையிலும் வைச்சுக்கலாம்.. இரண்டு முறை கல்யாணம் கட்டிக்கலாம் எப்படி?” என்று கண்ணடித்து அவன் சிரிக்க..
“இது ஒன்னும் அவ்வளவு ரசிக்கல” என்று முகம் சுளித்தாள் அவள்.
“ஹனிமூனுக்கு உங்க அம்மா சொன்ன மாதிரி கனடா அமெரிக்கா எல்லாம் ஒத்துவராது கண்ணம்மா.. நல்ல குளிர் பிரதேசங்களுக்கு தான் போகனும். அப்போதான் அங்க சுத்தி பார்க்கனும் இங்க பார்க்கனும் சொல்லாம ரூமை விட்டு வெளிய வராம இருக்கலாம்” என்று கல்யாணம் முடித்து அடுத்து அவன் ஹனிமூன் செல்ல…
‘நாம இவ்வளவு நேரம் சொல்லி கொண்டு இருக்கிறோம்.. அதை எல்லாம் விடுத்து இவன் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறானே’ என்று அதுவரை பிடித்து வந்த நிதானம் எல்லாம் பறந்து போக…
(என்னது நிதானமா!!
நீ எப்பமா அவன் கிட்ட நிதானமா இருந்த? எப்பவும் கண்ணுல ஃபயர் ஸ்டேஷனை வைத்து எரிச்சிட்டு தானே இருப்ப..)
சோஃபாவின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தவள் ஒரே பாய்ச்சலில் அவனருகே சென்று, அதிலேயே முட்டிபோட்டு எக்கி அவன் தலைமுடியை இரு கைகளாலும் பிடித்து ஆட்டு கல்லில் மாவாட்டுவது போல பிடித்து ஆட்ட தொடங்கினாள்.
“நானும் நல்ல பிள்ளையா.. அமைதியா.. பொறுமையா இருக்கனும்ன்னு பாக்குறேன்.. ஆனால் நீ என்னை அப்படியிருக்கவே விட மாட்டேங்குற.. ஏன்டா? என்னை போட்டு இப்படி படுத்துற” மீண்டும் அவன் தலையைப் போட்டு உலுக்க, அந்த கேடியோ அதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் தன் கண்ணெதிரே குலுங்கும் அவளின் மென்மைகளிலேயே கண்களை பதித்திருந்தான்.
“கண்ணம்மா போதும்டி.. இப்படி செய்யாதே, என்னை வதைக்காதே” என்று அவன் கிறக்கமாக கெஞ்ச..
அவன் பேச்சின் பேதம் புரியாமல், “விட முடியாது டா.. எவ்ளோ தைரியம் இருந்தா அர்த்த ராத்திரியிலே வீட்டுக்குள்ள நுழைந்ததும் இல்லாம என்னை கிஸ் பண்ணிட்டு, ரொம்ப கூலா ஒன்னுமே நடக்காத மாதிரி எனக்கே பாலை காய்ச்சி கொடுக்கிற.. போதாக்குறைக்கு எங்க அம்மாகிட்ட வருங்கால மருமகன் வேற சொல்லுற.. என்னா திமிர் இருக்கணும் உனக்கு?” என்று அவள் மாவாட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாக.. ச்சே.. டங் சிலிப்பிங் கையும் கருத்துமாக இருக்க..
நீரஜ் தான் கண்ணும் கருத்துமாக இருந்தான்.
“என்னை பாருடி.. கடைசியா உனக்கு சொல்றேன். தயவு செய்து கை எடுத்துடுடி. அதற்கு பின் வர சேதாரத்திற்கு கொஞ்சமும் நான் பொறுப்பு கிடையாது. பொறுப்பு துறப்பு.. நீ சொன்ன மாதிரி தான்.. நானும் நல்லவனா இருக்கலாம்னு பார்க்கிறேன். நீ என்னை இருக்க விட மாட்டேங்குறடி கண்ணம்மா..” என்று அவளைப் போலவே இவனும் ராகம் இழுத்துக்கூற…
“அப்படி என்னடா நீ பெரிய நல்லவனா இருந்த.. பார்க்கிற நேரமெல்லாம் ஒன்னு என் வாயிலிருந்து பபுள்கம்மை பிடிங்கிடுவ இல்லை உன் வாயிலிருந்து எனக்கு அதை மாத்திவிடுவ.. இதுல நீ நல்லவனா இருந்தியா? எப்போ டா?” என்றவள் தன் செயலை விடாது தொடர.. இவனும் தன் செயலை விடாது தொடர்ந்தான்.. அதாங்க சைட் அடிக்கிறது.
அதற்கு மேல் தாங்காதவனாக அவள் இடுப்புக்கு சற்று மேலே பிடித்து தன் முகத்தை இரு மென்மைகளுக்கு இடையே வைத்து அவன் அழுத்தமாக புதைய.. அப்பொழுது தான் அவன் சொன்ன அந்த நல்லவன் என்பதற்கான அர்த்தம் புரிய.. தீச்சுட்டார் போல அவனைப் பிடித்து தள்ளிவிட்டாள் நிகா.
ஒரு நொடியில் நிகழ்ந்துவிட்ட இந்த நிகழ்வில் அவளது உடம்பெல்லாம் நடுங்க.. அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவனை கண்டவளுக்கே இன்னும் கோபம் பொங்க “என்னடா தெரியும்.. உனக்கு என்னை பத்தி என்ன தெரியும்? எதுக்குடா என் பின்னாடி லவ் பண்றேன் லவ் பண்றேன்னு சொல்லி உயிர் எடுக்குற.. எதுக்கு இந்த உடம்புக்கு தானே?” என்று அவள் கேட்க…
அதுவரை மட்டுப்பட்டு இருந்த கோபம் அவனுக்கு பொங்கி எழ பளார் என்று அவள் கன்னத்தில் அறைந்தான். அவனின் இந்த கோபத்தை இதுவரை பார்த்திராதவள் சோஃபாவோடு ஒடுங்கி அமர்ந்தாள். அவள் கன்னம் வலியில் தகித்தது.
“உன் கிட்ட மட்டும் தான் என் பொறுமை இருக்கும்னு உன் பிரண்டு கிட்ட சொல்லிட்டு வந்தேன். அதை என்னை தகர்க்க வைக்கிறடி” என்றவனுக்கு கோபம் மட்டுபடவில்லை.
“இதோ பார்.. நீ என்ன சொன்னாலும் சரி இந்த ஜென்மத்துல என் பொண்டாட்டி நீ தான்… அந்த நீ என்கிறது உன் மனசு மட்டும் கிடையாது.. இந்த ஐந்தரை அடி உடம்பும் தான். எனக்கு இது ரெண்டுமே தான் வேணும். என்னடி தப்பு? பொண்டாட்டி கிட்ட பொறுக்கியா இருக்கிறதுல என்ன தப்பு இருக்கு சொல்லுடி..” என்று அவள் கண்களைப் பார்த்து ஆவேசமாகப் பேசியவனை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் நடுங்கியது.
“ப்ளீஸ் நீரஜ்..” என்று அவள் கெஞ்ச.. அப்பவும் விறைத்துக்கொண்டு நின்றவனது கைகளைப்பற்றி சோஃபாவில் அமர வைத்தவள் “என்னை பற்றி சொல்லியாக வேண்டும் உனக்கு அப்போது தான் புரியும்.
எங்களுக்கு சொந்த ஊரு தமிழ்நாட்டில் உள்ள மலைக்கோட்டை நகரான திருச்சி தான்.. எங்க அப்பாவோட சின்ன வயசுலேயே என் தாத்தா மும்பைக்கு புலம்பெயர்ந்து வந்துட்டார். அது முதல் எங்களுக்கு சொந்த ஊரு மும்பைனு ஆயிடுச்சு”
“அன்னைக்கு சொன்னியே.. நான் ரொம்ப இந்த துறையில் அதீத அறிவு ஆர்வத்தோடு இருக்கிறேனு.. என்னோட இந்த அறிவு ஆராய்ச்சி திறமை இதெல்லாம் எங்கே இருந்து வந்தது தெரியுமா? என் அப்பா கிட்ட இருந்து…
நான் ஒரு அப்பா செல்லம். எங்க அப்பா அம்மா நான் என் தம்பி.. எங்க குடும்பம் குருவி கூடு மாதிரி அழகாக தான் இருந்திச்சு. அம்மாவோட அன்பு.. அப்பாவோட அரவணைப்பு.. தம்பியோட செல்ல சண்டையென சந்தோஷமாக வாழ்ந்த தருணங்கள் அது..
ஆனா.. இப்போ என் தம்பி.. என் தம்பி..” என்று அழுதவளின் கண்கள் எதிரில் சுவற்றில் மாலையோடு மாட்டப்பட்டு இருந்த போட்டோவில் பதிந்தது..
என் தம்பி மித்ரேஷ்வரன்..”
கைப்பற்றுவாளா….
