அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

கனவுகள் – 10
அது மார்கழி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் என்று வரும் பௌத்தர்களின் இரவு ஊர்வலம்!! 
சிங்கள மொழியில் ‘ஊர்வலம்’ என்று பொருள் தரக்கூடிய ‘பெரஹெர’ என்று சிங்கள மக்களால் அழைக்கப்படும்.. மாதத்தின் ஒவ்வொரு முழுமதி நாட்களிலும் அனுஷ்டிக்கப்படும் கொண்டாட்ட நாள் அது!! 
‘புத்த மதத்திற்கும், புத்த பிக்குகளுக்கும் ஆங்கிலேயே ஆட்சியே ஆனாலும் கூட.. புத்தமதம் ‘அரச மதமாக’ கருதப்பட்டு முதலிடம் கொடுக்கப்படும்’ என்ற ஒப்பந்தம், ஆங்கிலேயே பிரதானிகளுக்கும், 
சிங்கள பிரதானிகளுக்கும் இடையில்.. கைச்சாத்திடப்பட்டதால்..
 இலங்கையின் ‘உடரட்ட’ (மலையகம்) என்றழைக்கப்படும் ‘கண்டி இராசதானி’ தவிர்த்து அனைத்துமே ஆங்கிலேயர் வசமாக்கப்பட்டிருந்த அந்தக் காலத்தில் தான்… 
ஆங்கிலேயர்களின் முழு அனுசரணையுடன்.. மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும் “உந்துவப் முழுமதி நாள்” கொண்டாட்ட ஊர்வலம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது தலைநகரான கொழும்பில்!! 
(வரலாறு – கி. பி ஆயிரத்து எண்ணூற்றுப் பதினைந்தாம் ஆண்டு..பங்குனி மாதம் மூன்றாம் திகதி 1815.03.03 முழு இலங்கையும்… கண்டி இராசதானியின் வீழ்ச்சியினை அடுத்து.. மன்னர் ஆங்கிலேயர் வசம் பிடிக்கைதியாக ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து..முழுவதுமாக ஆங்கிலேயர் வசமானது இலங்கை. 
அதற்கு முன்னைய காலப்பகுதியில் இலங்கையின் கரையோரப்பகுதிகளும்,’கண்டி’ என்னும் மலையகம் தவிர்த்த இடங்கள் அத்தனையும் ஆங்கிலேயேர் வசம் ஏற்கனவே உரித்தானதால்.. பெரும்பாலான பகுதிகள் உடையவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு… கதைக்காக ஆளுநரைச் சுட்ட ‘முழுநாட்டின் ஏகாதிபதி’ என்ற பதம் ஆங்காங்கே எடுத்தாளப்படுகின்றது என்பதை நினைவில் கொள்க. ) 
“உந்துவப் பூரணை பண்டிகை தினம்”. மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை… இந்தியாவின் மௌரிய பேரரசின் அப்போதைய ஆட்சியாளர் அசோக குப்த மௌரியரின்.. புத்த பிக்குனி மகளான.. சங்கமித்தை.. ஓர் கப்பலில்.. கிமு இருநூற்று எண்பதளவில்.. புனித வெள்ளரசு மரத்தின் கிளையோடு வந்து இறங்கிய நாளே அன்று!! 
அதனை நினைவுப்படுத்த கொண்டாடுவதே… ‘உந்துவப்’ பூரணை தினமாக இருக்கையில்.. அதற்காக விசேடமான ஓர் குழு அமைந்த இரவு பவனி ஊர்வலமும்.. பௌத்த விகாரையை நோக்கி நடத்தப்படுவதுண்டு. 
அந்த ஊர்வலத்தைக் காண.. ஜாதி, மதம் என்னும் பேதத்தை மறந்து.. சகல இலங்கையருமே.. கொழும்பின் பிரதான வழி சாலையோரம் நிறைந்திருக்க.. அங்கே தான் தன் கூட்டத்தோடு கூட்டமாக.. தன் தோழியோடு நின்றிருந்தாள்.. அந்த ஜிப்சி நடனக்காரி லொவீனாவும். 
அப்போது தான் சுடச்சுட அவித்த சோள விற்பனை… அந்த ஏகாந்த இரவில்.. சின்ன தள்ளுவண்டிக் கடையில்.. சிமிலி விளக்கின் உதவியுடன்.. அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்க.. 
தானும் ஒரு அவித்த சோளக்கற்றையை வாங்கிக் கொண்டவள்.. அதன் விதைகளை ஒவ்வொரு மணிமணியாக கடித்துச் சுவைத்துக் கொண்டே… அந்த புத்த இரவு பவனியைப் பார்ப்பது அத்தனை அலாதி இன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது அவளுக்கு. 
அந்தப் ‘பெரஹெர’வின் ஆரம்பத்தில்… கைகளில் அநாயசமாக சுற்றிச் சுழற்றும்.. தீபங்கள் ஏற்றி வைத்த சுழல்கம்பங்களை.. அசாதாரணமாக… சுழற்றிக் கொண்டே… கால்சராய் போல வேஷ்டி அணிந்த ஆண்கள்..
கால்களில் சலங்கையுடனும், தலையில் வெள்ளை முண்டாசும் கட்டிக் கொண்டு.. நான்கைந்து தீப்பந்து சுழற்சியாளர்கள் செல்ல… அவர்கள் கையில் அந்தத் தீப்பந்தம் புரண்டு விழாமல் இருப்பதை.. எத்தனையோ முறை ஆச்சரியக் கண்களுடன் பார்க்கும் லொவீனா… இன்றும் கூட அதிசயத்துடன் தான் பார்த்திருக்கலானாள். 
அப்போது தான் இரவின் இரண்டாம் பாகம் ஆரம்பமாகியிருந்த போதிலும் கூட.. அங்கே அந்தத் தீப்பந்தல்காரர்களிடம் இருந்த தீபங்களின் ஒளியில்…அவ்விடமே..செந்தணல் உலகமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது அத்தனை இரம்மியம்!! 
அவர்களின் வரிசையினைத் தொடர்ந்து.. வாளேந்தியவாறு.. போருக்குச் செல்லும் போர்வீரர்கள் போல முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாது.. அணிவகுத்துச் செல்லும் வாள்வீரர்கள்.. தலையில் இரும்புக் கவசம் அணிந்தபடி.. ஒரே சீராகச் செல்ல… அதனைத் தொடர்ந்து வந்தது ஊர்வலத்தில்  வரும் யானைகளுக்கு எல்லாம் தலைமையேற்கும் அண்ணல் யானை!! 
அதன் தலை முதல்.. அப்படியே தும்பிக்கை வரை… வெல்வட் துணியில் பலவகை முத்து வேலைப்பாடுகளாலான.. துணி போர்த்தப்பட்டிருக்க.. அதன் முதுகின் மீது அமைக்கப்பட்டிருந்த உயர்ரக இருக்கையில்.. பொருத்தப்பட்டிருந்தது.. அந்தக்கால அரசர்கள் எல்லாம் நகர் ஊர்வலத்தின் போது உபயோகித்த வெண்கொற்றக்குடை!! 
அதிலே… இலங்கையின் இராஜாக்கள் உடுத்தும்.. முத்துமணிகள் பதிக்கப்பெற்ற தலைப்பாகை, மற்றும் உயர்ந்த வகையறாவை சேர்ந்த சட்டை, பட்டு வேஷ்டி அணிந்த.. ஊர்வலத்திற்கு தலைமை தாங்கும், ‘கஜநாயக்க நிலமே’ என்ற குடும்பத்தைச் சார்ந்த ஆண்வாரிசு. 
அந்த யானை.. மெல்ல மெல்ல ஆடியசைந்து அசைந்து நகரவாரம்பிக்க, அதனைத் தொடர்ந்து.. மண்ணெண்ணெய்யை உள்ளுக்குள் எடுத்து.. தீப்பந்தத்தால் ஊதி.. நெருப்பினை புகை போல வெளியேற்றும் தீ வித்தைக்காரர்களின் அணிவரிசை. 
அது காற்றில் மண்ணெண்ணெய் பயணிக்கும் வழி..தீயும் பற்றியெரிந்து அணையும் என்ற சாதாரண அறிவு கூட அற்ற.. இலங்கையின் புராதன சுதேசிகளும், தன் தோழி காவ்யாவும்.. அதனை ஏதோ காணாத காட்சியைக் கண்டது போல.. மூக்கின் மேல் விரல் வைத்து.. வியந்து பார்த்த வண்ணம் இருக்க.. அதைப்பார்த்த சுட்டிப்பெண் லொவீனாவுக்கோ.. கிளுக்கென சிரிப்பு முளைத்தாலும்.. 
தோழி தன்னை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடும் என்பதற்காக.. வாயில் சோளமணிகளைத் திணித்தவளாக.. சிரிப்பை அடக்கிக் கொள்ள ஆவன செய்து கொள்ளத் தலைப்பட்டாள் யௌவனமங்கை. 
அதனைத் தொடர்ந்து நன்கு அலங்கரிக்கப்பட்ட நான்கு சமஅளவான உயரம், பருமன் கொண்ட.. சுளகு போன்ற பாரிய காதுகள் கொண்ட யானைகள்… தன்னருகே அங்குசத்தோடு யானைப்பாகன் நடந்து வர,
தன் தும்புக்கொண்டை போன்ற வாலையும், காதுகளையும் ஆட்டி ஆட்டி.. ஒய்யாரமாக நடந்து சென்று கொண்டிருந்தன அவை. 
அந்த யானையின் நிரல் வரிசை நடையைத் தொடர்ந்து.. கைகளில் தென்னம்பூக்களை ஏந்திய நடனக்காரர்களும், கைளையும், கால்களையும் மேளதாளத்துக்கு ஏற்ப அசைத்து ஆடும் கண்டிய நடனக்காரர்களும் செல்ல.. அவர்களைத் தொடர்ந்து…. ஆலவட்டம் ஏந்தியவர்களாக வெள்ளை உடையணிந்த.. சாதாரண மாந்தர்கள், 
“சாஆஆஆது சாஆஆது சாஆத்!!”என்று ஸ்ரீ கௌதம சித்தார்த்தரின் நாமம் பாடிக் கொண்டு செல்லலாயினர்.. அனைவருமே விகாரையை நோக்கி. 
தீப்பந்தங்களின் ஜொலிஜொலிப்பில்.. அத்தனைக் கவர்ச்சிகரமானதாகச் சென்று கொண்டிருந்த ஊர்வலத்தில் ஓர் கண்ணும், கூடவே ஜனநெரிசலுக்குள் நின்றிருக்கும் வாட்டசாட்டமான ஆடவர்களின் முகத்தைத்.. துலாவி.. அது தான் தேடிடும்.. ஆண்டனியின் ஆசை முகம் அல்ல என்பது அறிந்ததும் ஏமாற்றம் கொப்புளிக்கும் மறுகண்ணும் என… பார்த்துக் கொண்டிருந்தாள் தோழி காவ்யா. 
அவளையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த லொவீனாவுக்கோ.. சிந்தனை அந்த அழகிய ஊர்வலத்தை விட்டும் வேறெங்கோ தான் செல்லலானது. 
சுமார் இரு வாரங்களுக்கு முன்பு.. இந்தக் கொடூர ஏகாதிபதி.. கப்பலில் இலங்கை வந்திறங்கிய.. அவளது முறைப்பையனான ஆண்டனியிடம் வாங்கிய அத்தனைப் பளுவான வேலையில்..டோனி.. இடுப்பைப் பிடித்த வண்ணம்… இடுப்பு உளைச்சலுடன் வந்து நின்ற போது.. 
தோழி காவ்யா.. திடுதிப்பென்று சமையலறை ஓடிச்சென்று.. வெந்நீர் நிறைந்த கலத்துடன்.. அவனுக்கு ஒத்தடம் கொடுப்பதற்காக விரைந்து பப்பரப்பா பரபரப்பாக வந்தது ஞாபகம் வந்து போனது  லொவீனாவுக்கு. 
அது தான் லொவீனாவின் வெள்ளந்தி மனதில் பதிந்த முதல் பலத்த சந்தேகம். 
அது போக… இடையில் கழிந்த பதினைந்து நாட்களிலும்… ஆண்டனி வீடு தேடி வரும்போதெல்லாம்.. முகமோ.. கொள்ளை பிரகாசமாக.. பூச்சூடி அலங்கரித்த வதனமாக நிற்கும் காவ்யாவின் செய்கைகள் இரண்டாவதாக எழுந்த சந்தேகம்!! 
இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்த போது.. தோழி தன் மைத்துணனுடன் கண்டதும் காதல் வலையில் வீழ்ந்தே விட்டாளோ என்ற ஐயப்பாடு எழத்தான் செய்தது நடன மாதுவுக்கு!! 
அதிலும் இன்றைய ஊர்வலத்தில்… காவ்யா.. யாரையோ தன் உயிரின் ஆழத்திலிருந்து.. கண்களில் காத்திருப்பும், எதிர்பார்ப்பும் மல்க மல்கத்.. தேடித் தேடிச் சோர்வது புரிய… 
அதனை இப்போது.. இந்த இரவுப்பொழுதில் ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளும் எண்ணம் பிறந்தது தலைவிக்கு. 
அதனால் வேண்டுமென்றே.. பாதையின் மறுமுனையில் நின்றிருந்த ஜனநெரிசலுக்குள் சட்டென்று சுட்டுவிரல் காட்டியவள், மலரும் உற்சாகப் புன்னகையுடன், “ஹேய் அங்கே பாரு டோனி..”என்று சொன்னது மட்டும் தான் தாமதம்.. இத்தனை நேரம் சோர்ந்து நின்ற காவ்யாவின்.. உடலிலுள்ள ஒட்டுமொத்த செல்களும்.. செயல்படத் தொடங்கியது போல… காவ்யாவின் கண்களில் வந்து போனது ஓர் பளிச்சிடல்!! 
கூடவே… குரலில் ஓர் சந்தோஷம் குமிழியிட.. தோழி காட்டிய திசையில் கண்கள் அலைபாய தன் மணாளனைத் தேடிய காவ்யாவோ, நீட்டிய லொவீனாவின் கைகளைப் பற்றிக் கொண்டு, “எங்கே எங்கே..??”என்று எம்பி எம்பிக் கேட்கலானாள். 
அங்கணம் லொவீனாவின் மனமோ, ‘ரைட்டு.. காவ்யாவுக்குள்ளேயும் லவ் வேவ்… ஓடுது.. அதுவும் அந்த லவ் வேவ் நம்ம டோனி மேலே தான் பாயுது’என்று எண்ணி.. நக்கல் சிரிப்பை உதிர்க்கவும் செய்தது. 
காவ்யாவோ.. கூட்டத்தில் இல்லாத தன் ஒருதலைக் காதலனை இன்னும் கூட.. ஆவலுடன் துலாவிக் கொண்டிருக்க.. அதைக் கண்டு கிளுக்கி நகைத்த நடன மங்கையோ, 
“ஹஹஹா.. சும்மா சொன்னேன்.. டோனியை நான் இன்னைக்கு பார்க்கக் கூட இல்லையே!!”என்றது மட்டும் தான் தாமதம்.. நிமிடத்துள் காவ்யாவின் நாசிநுனியோ.. சீற்றத்தில் செர்ரிப்பழம் போல சிவந்து போயிற்று.
உள்ளுக்குள் கனன்ற எதிர்பார்ப்பு தந்த ஏமாற்றம்.. வெளிப்படைக் கோபமாகக் கனல, தன் தோழியை நோக்கி, “எதில் விளையாடணும்னு உனக்கு விவஸ்தையே இல்லையா?”என்று கேட்டவளுக்கு கண்ணிலே கண்ணீர் கூட மல்கி வழியத் தான் பார்த்தது. 
மேற்கொண்டு கூட்டத்தில் நிற்கப் பிடிக்காமல்.. மனிதர்களைக் கையால் தள்ளி.. கூட்டத்தைப் பிளந்து கொண்டு திரும்பி நடக்கத் தொடங்கினாள் காதல் பித்து நோயில்.. தனிமையில் நிதமும் உழன்றுத் தவிக்கும் காவ்யா. 
தோழி கோபித்துச் செல்வதைத் தாளமாட்டாமல், அவளோடு தொடர்ந்து நடந்தவள், காவ்யாவின் தோள்கள் இரண்டையும் பற்றித் தேற்றியவளாக, “ஹேய்?? இது சின்ன விஷயம் இதுக்குப் போய் ஏன் கோபிச்சுக்குறே.. உண்மையை சொல்லு.. உனக்கு டோனி மேல இஸ்க்கு இஸ்க்கு..?”என்று அவள் காதலை வினோதமான முறையில் கேட்க, உள்ளுக்குள் அசடுவழிந்தாலும்… 
பட்டென்று தலையாட்டி மறுக்க முனைந்த காவ்யாவோ, “ச்சே அப்படியெல்லாம் இல்லை” என்றவளை, ‘இதை என்னை நம்பச் சொல்றீயா?’ என்பது போல காவ்யாவையே ஒருசில கணங்களுக்கு ஏதும் பேசாமல் கூர்ந்து கவனிக்கலானாள் லொவீனா. 
லொவீனாவின் பார்வை வீச்சைத் தாங்காமல் தவித்தவளின் பார்வையோ பொய் சொன்ன குற்றவுணர்வில் தலைகுனிய, மிக மிக மிருதுவான குரலில், “ஆமா..”என்றாள் காவ்யா. 
“அப்போ.. உன் காதலை சொல்ல எது தடுக்குது? ..”-தோழியின் கைச்சந்தினை மெல்லப் பற்றித் தடவிக் கொடுத்த வண்ணம் கேட்டாள் அந்த ஜிப்சி நடனக்காரி. 
இந்துப் பெண் காவ்யாவோ, காதல் வலியினால் விழைந்த ஓர் பெரும் மூச்சினை வெளியேற்றிக் கொண்டு, “அவன் உன்னை மணக்க நாடுறப்போ… நான் எப்படி டோனியை நெருங்குறது..??”என்று கேட்க.. லொவீனாவின் அழகிய நயனங்கள் அதிர்ச்சியில் இன்னும் கொஞ்சம் அகல விரியத் தான் செய்தது. 
“என்ன??.. டோனியையா நானா??”- கேட்டது துறுதுறுப்பெண் லொவீனாவே தான். 
தலையை இடம்வலமாக ஆட்டி காவ்யாவின் கூற்றை மறுதலித்தவள்,என்றவள் அந்நொடி தன் உள்ளத்திலிருந்து தான் பேசினாள்.
அவள் அதனை எந்த டோனியை நினைத்துச் சொல்லலானாள்? 
அவளை மணக்க நாடும் புராதன டோனிக்கா? இல்லை அவளின் வருங்கால கணவனாக பெற்றோரால் நியமிக்கப்பட்ட நவீன டோனிக்கா? 
யாருக்காக இருந்தாலும்.. இருவரையும் அவள் பார்க்கும் கண்ணோட்டம் ஒன்றாகவே இருக்க.. டோனியை புராதனமானவன்.. நவீனமானவன் என்று பிரித்துப் பார்க்க முடியவில்லை அவளால். 
ஆனாலும் உறுதி நிறைந்த குரலில், “ம்ஹூஹூம்.. உன் நினைப்புல தீயை வைக்க.. நல்லா கேட்டுக்க என் லூசு ஃப்ரண்டு காவ்யாவே… இது என் அப்பா பேசுன வரன்றதுக்காக.. அதுக்கு மதிப்பு கொடுத்து.. இதை ஏத்துக்கிட்டு அமைதியா இருக்கேனே ஒழிய.. என்னைக்குமே எனக்கு டோனி மேலே ஈர்ப்பு இருந்தது கிடையாது..’என்று சொல்ல.. ஆளியைத் தட்டினதும் இருளடைந்த வீடு ஒளிர்வது போன்று பளிச்சென்று மலர்ந்தது காவ்யாவின் மொத்த முகமும்!! 
அவளுள் ஓர் நம்பிக்கை. டோனிக்கு உரியவள் என்று ஊராரால் சொல்லப்படுபவளே.. இப்படிச்சொல்ல.. இது தனக்கான அரிய வாய்ப்பு.. அதனை சீராக உபயோகித்துக் கொண்டால்.. நிச்சயம் அவள் உன்னதக் காதல் கைகூடும் என்பது அவளுள் திண்ணிய எண்ணமாக வலுப்பெறலானது. 
அடுத்த நொடி  மீண்டும் பியூஸ் போனது போல அவள் வதனம் கறுத்து வாடுவதைக் கண்ட லொவீனாவோ, இடுங்கிய விழிகளுடன், “இப்போ என்ன?”என்று கேட்க, காவ்யாவும் தட்டுத் தடுமாறிய குரலில், 
“நான் இந்து.. அவரு.. கிறிஸ்தவர்.. இ.. இது எல்லாம் கரெக்ட்டா வருமான்னு பயமா இருக்கு?”என்று சொல்ல.. மற்றவளிடமிருந்து திடும்மென ஓர் ஆசுவாசப் பெருமூச்சு. 
“ஃபூ இவ்வளவு தானா? நான் வேற என்னமோ? ஏதோன்னு பயந்துட்டேன்..”என்றவள்.. தோழியின் கைச்சந்துக்கு இலேசாக வலிக்காமல் ஓர் அடி அடித்து.. அதட்டும் குரலில், “ஹேய் லூசு.. ஜாதி மதம் கடந்து வர்றது தான் காதல்… உன்னது உண்மையான காதல்னா.. ஜாதி என்ன? மதம் என்ன?? பல யுகங்கள் போனாலும்.. பல ஜென்மங்கள் ஆனாலும் அந்தக் காதலே உங்களை சேர்த்து வைக்கும்.. அத்தனை சக்தியிருக்கு காதலுக்கு”என்று கூறியவளின் கண்களில் மிளிர்ந்த ஓர் சக்தியைக் கண்ணுற்ற தோழி காவ்யாவுக்கு… புதுத் துணிவு வந்தது காதலுக்காக அனைத்தையும் தியாகம் செய்ய. 
இப்படி தலைவியும், சேடியும்… காதலைப் பற்றி தத்தம் கருத்தைப் பற்றிப் பரிமாறிக் கொண்டிருந்த ஊர்வல பூமியில் தான்… தன் வெள்ளைக்கார பணியாளர்கள் அறுவருடனும்… சுதேசப் பணியாளர்கள் நால்வருடனும் நின்றிருந்தான் இலங்கையின் ஏகாதிபதி அந்த காயாம்பூக் கண்ணழகன் ‘தாமஸ்’!!! 
என்று.. ஏகாதிபதி குடியிருக்கும் கடலோர மாளிகையில் சுதேச சுதந்திரப் போராட்ட வீரர்கள் புகுந்து… அவ்வீட்டில் இருக்கும் அனைவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு.. ஏகாதிபதியையும் கொலைசெய்வதற்கான முயற்சிகள் நடந்தேறலானதோ.. 
அன்றிலிருந்து அவன் கூட.. மெய்க்காவற்கலையில் நன்கு தேர்ந்த வெள்ளைக்கார பணியாளர்களும், ஏகாதிபத்தியத்துக்கு மிக மிக நெருக்கமான விசுவாசிகளான சுதேசப் பணியாளர்களும் மெய்க்காப்பாளர்களாக காத்து நிற்கத் தான்.. அந்த ஊர்வலத்தில் நின்றிருந்தான் தமஸ். 
அந்த இரவில்..கடும்நீல நிற வண்ணத்தில்.. பின்னாடி வால் போன்ற அமைப்புள்ள கோட்டில் சின்னச் சின்ன மடிப்புக்கள்.. அலங்காரமாக வந்திருக்க.. ‘டபிள் ப்ரெஸ்டட் கோட்டும்’, கருநிறத்தில் பேன்ட்டும், கால்களிலே பளபளவென ஜொலிக்கும் பாதணிகளும் அணிந்து… 
தன் மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு நின்று.. அந்த ஊர்வலத்தை.. தன் கண்காணிப்பில் நடத்திக் கொண்டிருந்தவனின்  ஒவ்வொரு மெய்ந்நிலையிலும் மிளிர்ந்து கொண்டிருந்தது ஆளும் வர்க்கத்தினருக்கே உரிய ஆளுமை. 
அந்தப் புத்த ஊர்வலத்தைத் தலைமை தாங்கி செல்லும், “கஜநாயக்க நிலமே” கூட.. அவனருகாமை வழியாக விரையும் போது.. யானையின் மீது அமர்ந்த படியே சிரம் தாழ்த்தி, கை கூப்பி வணங்கியது கூட.. இலங்கை ஏகாதிபதிக்கு கொடுக்கும் ஏகபோக மரியாதையாகவே கொள்ளப்பட்டது. 
அந்த மரியாதை நிமித்தம் கும்பிடுதலை சின்னத் தலையசைவுடன் ஏற்றுக் கொண்ட.. அவனது மிடுக்கு நிறைந்த வதனத்தின் அழகுக்கு அழகு சேர்க்கும்…. நீலக்கண்களில் ஒளிர்ந்து கொண்டிருந்தது…. ஊர்வலத்தில் செல்லும் தீப்பந்தங்களின் செந்நிற ஜூவாலை. 
அதனால் செந்நிற மணிகளாக பரிணமித்த அவன் கண்களோ.. ஒருவிதத் தகிப்புடன்..தனக்கு நேரெதிரே இருந்த  பாதையோரம்.. கூட்டத்தோடு கூட்டமாக நின்று.. தன் இந்துத் தோழியுடன் சின்னஞ்சிறு கதைகள் சிரித்துச் சிரித்துப் பேசியவளாக… 
சோளத்தின் மணிகளைக் கடித்துச் சாப்பிடும் அவள் மேலேயே ஒரு புதுமையான உணர்வோட பார்த்திருக்கலானது. 
ஒரு கையினை தோழியின் தோள்மீது வைத்து.. தோள் மீது வைத்த உள்ளங்கையிலேயே.. சோளம் ஏந்தியவாறு.. அவள் உரையாற்றிய போது.. ஆடிய அவளது கருமணிகள்… அவ்விரவிலும் அவனுக்கொரு உன்மத்தமான மனநிலையைத் தூண்டுவதாகவே இருந்தது. 
அன்றென்று பார்த்து.. அவளோ.. எப்போதும் இல்லாமல்… நடுவகிடெடுத்து… தன் கூந்தலை தளர விட்டிருந்த தினுசில்.. இடைவரை தாண்டி… ஆலம் விழுதுகள் போல சுருண்டு சுருண்டு விழுந்திருந்தமையானது அத்தனை அழகு!! 
அதிலும் காலர் வைத்த.. நீண்ட கை ப்ளவுஸ் அணிந்து.. அவள் அணிந்திருந்த.. தனிப்பச்சை நிற சேலையின் நேர்த்தி… அவளின் அங்க வளைவுகளை இன்னும் அழகாக்கிக் காட்ட… தோழியின் தோள் மீது கைவைத்த வேளை.. சற்றே.. சேலை விலகித் தெரிந்த… 
வளைவான வெண்சந்தன நிற இடை.. அவனை ஒரு தவநிலைக்குத் தான் தள்ளியிருந்தது. 
முதுகுக்குப் பின் கைக்கட்டிக் கொண்டு.. வெளியே விறைப்புப் பேர்வழி போல நின்றிருந்த ஏகாதிபதியின் உள்ளமோ.. கன்னி அவளின் வெறியேற்றும் அழகில் உள்ளே கரைந்து கொண்டிருந்தது.. அவன் மட்டுமே அறிந்த உண்மை. 
இந்த அழகி.. “உலகியல் செல்வங்களை எல்லாம் உன்காலடியில் கொட்டுகிறேன்.. உன் காதல் தா” என்று அவன் வழியக் கேட்ட இலங்கை அழகி.. அவன் காதலை நிராகரித்த கோபம்.. அவன் இறுகிய முகம் வழியாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. 
கூட்டத்தில் ஓர் ஆங்கிலேயன்.. அதுவும் ஆங்கிலேயர்களுக்கெல்லாம் தலைமை வகிப்பவன்.. தன்னையே வைத்த கண்வாங்காமல் பார்த்திருப்பது அறியாது.. அவள் நின்றிருந்த கணம் தான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தேறலானது. 
அவளையே தான் அவனது தீட்சண்யமான விழிகள் மேய்ந்து கொண்டிருந்த கணம்..முன்னாடி வரிசையில் முதன்மையாளர்களாக போய்க் கொண்டிருந்த சுழலும் தீப்பந்தல் ஏந்தியிருப்பவர்களின் ஒருவன்.. 
இசைக்கப்பட்ட மேள தாளத்துக்கு ஏற்ப.. அந்த சுழலும் நெருப்பு வளையத்தை.. அந்தரத்தில் தூக்கிப் போட்டு மீண்டும் பிடிக்கும் தருணமும் வந்தது. 
அந்தத் தருணத்திலே.. அந்தரத்தில்… உயரத் தூக்கிப் போட்ட கம்பு வளையம்.. அதைத் தூக்கிப் போட்டவனின் கை இடறியதில்… விசிறப்பட்டுப் போன நெருப்பு வளையம்  போய் விழலானது.. 
பின்னாடி ஆடியசைந்து வந்து கொண்டிருந்த தலைமை யானையின் மீதிருக்கும் வெண்கொற்றக்குடையின் மீது!! 
பற்பல முத்து ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த.. ஓலை கொண்டு ஆக்கப்பட்டருந்த வெண்கொற்றக்குடையோ.. கண்ணிமைப்பதற்குள் தீப்பற்றி எரியவாரம்பித்து..எரிந்த ஓலைத்துகள்கள் எல்லாம்.. யானையின் முன்னும், பின்னும் காற்றிலே பறந்து வந்து நிலத்தில் விழவும் செய்யலானது. 
சும்மாவே சாதுவான யானைக்கோ.. பொதுவாக நெருப்பு, வெடிச்சத்தம் ஆகியவை அருகாமையில் கேட்டால்.. அச்சத்தில்.. மதம் பிடிக்கக் கூடியதாக இருக்க… அந்தோ பரிதாபம் அங்குள்ள மக்களின் நிலை!! 
அங்கு நின்றிருந்த தலைமை யானைக்கோ… மதம் பிடிக்கலானது எக்குத்தப்பான நேரத்தில். 
தன் பாரிய மரக்கட்டை போன்ற.. தும்பிக்கை உயர்த்தி.. தன் இரு முன்னங்கால்களையும் கூடவே உயர்த்தி.. இரு பின்னங்கால்களை மட்டும் நிலத்தில் ஊன்றியவாறு.. அந்த இடமே அதிரும் அளவுக்குப் பிளிறிய யானை.. தன் முதுகில் இருந்த  இராஜ உடை தரித்த ‘கஜநாயக்க நிலமே’வையும், பற்றியெரியும் வெண்கொற்றக்குடையையும்.. தள்ளி விட்டுக் கொண்டே.. கூட்டத்திற்குள் தறிகெட்டு ஓடலானது மதம் பிடித்த யானை!! 
இதர யானைகளின் யானைப்பாகர்களோ… தத்தம் யானைகளும் குழம்பாதிருக்கும் பொருட்டு, யானைகளுக்கு புரியும் யானைப்பாக மொழியில், “நில்”என்று அங்குசத்தால் காதுமுனையோரம் அதட்டிச் சொன்னது தான் தாமதம்.. பாகன் சொல்லுக்கு.. மந்திரம் போல கட்டுண்ட இராட்சத யானைகள்.. சிலை போல நிற்கலானது. 
யானைகள் பயப்படாமல் இருக்க… சட்டென அதை திசை திருப்பி.. பாதையின் ஓரமாக இருந்த மரங்கள் அடர்ந்த இருட்டுப்பகுதியில் அவற்றைச் செலுத்திக் கொண்டு செல்ல.. இங்கே ஊர்வலம் பார்க்கத் திரண்டிருந்த மக்களின் நிலை தான் பரிதாபத்துக்குரியதாக முடிந்தது.
யானையோ தன் பருத்த உடலைத் தூக்கிக் கொண்டு.. வேக வேகமாக ஓடியவாறு.. தன் எதிரே தென்பட்ட அனைவரையும் தந்தத்தினால் முட்டி மோதி.. தூக்கியெறிந்து கொண்டே.. அனைத்தையும் துவம்சம் பண்ணிக் கொண்டிருந்தது அது. 
அங்கே லொவீனாவோ.. தன் இனிய தோழியுடன் சூழலையும் மறந்து பேசிக்கொண்டிருந்த கால்… கூட்டத்தில் இருந்த மக்கள் எல்லாம் தலைதெறிக்க ஓடுவதைக் கண்டு.. கண்களில் ஓர் புரியாதத் தன்மையுடன் பார்த்திருக்கலானாள். 
அந்த கணம் தான்.. அவள் வாழ்வில் உயிர்ப்பயம் என்றால் என்னவென்பதையும் சுகித்துப் பார்க்கும் அந்த நொடி.. உதயமானது. 
அப்போது.. அந்த இடத்திற்கு அடியில் உள்ள புவித்தகடுகளில் நடந்த சின்ன அசைவில்.. நில அதிர்வு தான் ஏற்படுகின்றதோ என்று அஞ்சத்தக்களவு நிலம் “தொம்.. தொம்”என்று அதிர… தரையில் பார்வை பதித்த பெண்.. மெல்ல நிமிர்ந்து தன்னெதிரே பார்த்த போது.. அங்கே.. தன் தும்பிக்கையை நீட்டிக் கொண்டு.. ஓர் யானை தன்னை நோக்கி ஓடிவருவது புரிய.. உடலெல்லாம் வெடவெடத்துப் போய்.. ஸ்தம்பித்துத் தான் நிற்கலானாள் லொவீனா. 
அவள் கையிலிருந்த சோளமோ.. பட்டென்று.. நிலத்தில் தொப்பென்று விழ… கைகால்களில் எல்லாம் துணுக்கம் விரவிப் பரவ.. யானையையே.. உடல் செயலற்றது போலப் பார்த்தபடியே நின்றிருந்தாள் மங்கை. 
சுய உணர்வு வரப்பெற்று.. யானை தாக்காமல் தப்பி.. ஓடிக்கொண்டிருந்த தோழி காவ்யாவோ, “ஹேஏஏஏய்… லொவ்வீஈஈனாஆஆ… ஓடூடீஈஈ.. ஓடூஊஊஊ”என்று கத்தியதெல்லாம்.. லொவீனாவின் மூளைக்குள் சென்றாலும்.. கால்கள் செயற்படத் தான் மறுத்தது. 
அவளை நோக்கி.. மதவெறியுடன் ஓடி வந்த யானையோ.. தன் தும்பிக்கை உயர்த்தி.. அகோரமான அதிர்வலைகளை நெஞ்சிலை எழுப்பும் வண்ணம்.. நாராசமாகப் பிளிற.. அவ்வொலியில் தான் ஸ்மரணை வரப்பெற்று..ஓட எத்தனித்தவளுக்கு.. அந்த நேரம் பார்த்தா காலும் இடற வேண்டும்?? 
தடுமாறி நிலத்தில் வீழ்ந்தவள்.. தன்னை நோக்கி வரும் யானையை.. அச்ச விழிகளுடன் பார்த்துக் கொண்டே.. தன் பிருட்டத்தால் நகர்ந்து நகர்ந்து பின்னே செல்ல முனைந்தவளை… நோக்கி அசுர எட்டுக்கள் எடுத்து வைத்து வந்த யானையோ.. 
தன் உலக்கை போன்ற வலது முன்னங்காலைத் தூக்கி… அவளை மிதிக்கப் போன கணம்.. லொவீனா இது தன் இறுதி கணப்பொழுதுகள் என்பதை உணர்ந்து கொள்ளலானாள். 
தன் சாவு நேர்வதை தன் கண்களாலேயே பார்க்க முடியாது திண்டாடியவள்.. தன் முழங்கைகள் உயர்த்தி.. முகத்தை மறைத்துக் கொண்ட வேளை.. அவள் இதயத்தின் இறுதித் துடிப்பு.. அவளுக்கே கேட்டுக் கொண்டிருக்கலானது. 
யானையின் பாரம் தான் தன் மேல் அழுத்திப் படர்கிறது போலும் என்றெண்ணிக் கொண்டு.. லொவீனா.. கண்களை இறுக்கி மூடிக் கொண்டிருந்த வேளை.. அவளது மென்மையான தனங்களோடு அழுந்துப்பட்டது இரும்புக் கேடயம் அணிந்தாற் போன்ற உரமேறிய மார்புகள்!! 
அவளது சிற்றிடுப்போடு.. கைவிட்டு வளைத்துக் கொண்டன.. வன்மையான இரு உள்ளங்கைகள்!! 
அவள் கால்களோடு கால்களாக பின்னிப் பிணைந்தன… ஓர் நெடிய வாளிப்பான முறுக்கேறிப் போன தொடைத்தசைகள் கொண்ட கால்கள்!! 
அப்படியே அவளை அலேக்காக… தாய்ப்பறவை.. குஞ்சினை சிறகினுள் புதைத்துப் காப்பது போல… தன் இராட்சதக் கைகளால் அள்ளி எடுத்து.. அவள் மதிமுகத்தை தன் நெஞ்சாங்கூட்டில் புதைத்தவனாக… உருண்டு உருண்டு.. யானையின் கால்களுக்குள் சிக்குறாமல் தடுத்தவனின் குரல்.. என்ன நடந்தது என்றே தெரியாமல் இறுகக் கண்மூடியிருக்கும் அவள் காதோரம் கேட்கலானது. 
கூடவே, மிக மிக உறுதியான குரலில், “என் உயிர் உள்ளவரை.. உனக்கு ஒண்ணும் ஆக விட மாட்டேன் வீணா” என்ற அவளுக்கு மிக மிகப் பரிச்சயமான ஆண்குரல்!! 
அவளை ‘வீணா’ என்றழைக்கும் ஒரே ஆடவனின் ஆண்மை ததும்பும் குரல்!! 
பெண்ணின் இறுக மூடிய இமைபோர்த்திய விழிகள் மெல்ல திறந்து கொண்ட வேளை.. அவள் கண்களுக்குள் அழிக்க முடியாத விம்பமாக விழுந்தது அவன் முகம் !! 
தன்னுயிரைக் கூடத் துச்சமாக மதித்து.. அவள் இன்னுயிர் காக்க வேண்டும் என்பதற்காக… யானையின் கால்களால் நசுங்க இருந்தவளின்  மீது கவிழ்ந்து படுத்து… அந்த இக்கட்டான சூழ்நிலையை தன்னுள் வாங்கிக் கொண்டிருந்த தாமஸின் விழிகளில்.. மரணபயம் என்பதை அவள் கிஞ்சித்தும் உணரவேயில்லை. 
 அவன் கண்கள் அவளைத்தான் வாஞ்சையுடன் ஆராய.. அவன் உடல் ‘அவளுக்கு ஏதாவது காயம்பட்டிருக்குமோ?’
என்றஞ்சியவனாக.. துணுக்கம் எய்திக் கொண்டிருந்ததை அவதானித்தது லொவீனாவின் மென்மையான உடல். 
அவன் கைகளோ…. சேயைக் காக்க முனையும் தாய்.. குழந்தையை விடாது இறுகப்பற்றியிருப்பது போல அத்தனை இறுக்கமாக.. இன்னும் விடாது பற்றிக் கொண்டிருந்தது. 
அந்தத் தருணம் இன்னும் சில நிகழ்வுகளும் பரபரப்பாக நடந்தேறத்தான் செய்தது..
அவன் கூடவே நின்ற மெய்க்காப்பாளர்களும்.. ஓர் சுதேசிப் பெண்ணுக்காக.. தங்கள் ஏகாதிபதி உயிரையும் கூட துச்சமாக மதித்து.. அவளுயிர் காக்க.. தானே களத்தில் குதிக்கக் கூடும் என்று கனவா கண்டனர்?? 
பெண்ணுக்காக.. யானையின் காலடி நசுக்கவிருந்த நொடியில் புகுந்த ஏகாதிபதியைக் காக்க, சட்டுப்புட்டென்று யானையின் பக்கம் நெருங்கியவர்கள்.. யானையை நோக்கி.. தங்களின் நீண்ட இரும்புத் துப்பாக்கியைக் குறிபார்த்து நிற்கலாயினர். 
ஆனால் யானைகளுக்கே உரிய ஓர் புத்தியுண்டு. அது யாதெனில்.. எப்போதுமே மதமேறிய யானை.. தன் கண்ணில் படும் குறிப்பொருளை.. அது இறந்து மடிந்து போகும் வரை.. விடாமல் திரும்பத் திரும்ப விரட்டிக் கொண்டே தான் இருக்கும். 
அது போலவே இந்த யானையும்.. தன்னால் தப்பித்த லொவீனாவோடு.. அந்த ஆடவனையும் துவம்சம் செய்ய நாடி.. இதயங்கள் சகலமும் அதிரும் வண்ணம் பிளிறிக் கொண்டே.. அவர்களை நாடி ஓடி வர… தட்டுத் தடுமாறி அப்போது தான் எழுந்து கொள்ளலாயினர் நிலத்தில் உருண்ட இரு ஜீவராசிகளும்!! 
அவளின் முன்னங்கையைப் பற்றிக் கொண்டவன், காதல் தடுமாற்றம் மீதூற.. அவளை உச்சாதி பாதம் வரை ஆராய்ந்தவனாக, “ஆர் யூ ஆல்ரைட்?”என்று கேட்க,அவள் அவனை அதிசயக் கண்களுடன் பார்த்திருக்கலானாள். 
தார் வீதியில்.. அவன் உருண்ட தினுசில்.. அவன் கை, கால்கள் உராய்ந்து.. நிச்சயமாக உள்க்காயங்கள் அவனுக்கு ஏற்பட்டிருக்கத் தான் வேண்டும். 
அப்படியிருக்க.. அவள் நலமா என்று கேட்பவன் என்ன மாதிரியான மனிதப்பிறவி?? 
யானை திரும்ப.. அவர்களை நாடி ஓடி வர, தன் இடுப்பு பெல்ட்பட்டியோடு இணைந்து இருக்கும் துப்பாக்கி முனையை.. அவன் கையில் ஏந்தி.. ஐந்தறிவு கொண்ட இராட்சத மிருகத்தினை நோக்கிக் குறிபார்க்க.. லொவீனாவுக்கோ அவன் செய்கையில் திக்கென்றானது. 
மதமேறி கொலைவெறியுடன் திரியும் யானையாக இருந்த போதிலும் கூட.. இயல்பாகவே மென்மை உள்ளம் கொண்டவளுக்கு, ஏனோ அதைக் கொல்லும் எண்ணம் வராமல் போனது. 
அதனால் யானையை நோக்கிக் குறிபார்த்து நீளும்.. அவன் கையைப் பிடித்தவள், கலங்கிய விழிகளுடன், “வே.. வேண்டாம் தாமஸ்”என்று சொல்ல… மனதளவில் வன்மையாளனான ஆங்கிலேயனுக்கும் ஏனோ அந்த யானையைக் கொல்ல மனம் வராமல் போனது. 
நொடி நேரத்தில்.. துப்பாக்கி ஏந்தி நிற்கும் தன் பணியாளர்களையும் நோக்கி .. தன் ஆளுமை சிந்தும் விழிகளால், ‘வேண்டாம்’ என்பது போல தலையாட்டிப் பணித்தவன், அடுத்து மின்னலெனத் தான் செயற்பட்டான். 
அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு… சுற்றுமுற்றும் துலாவியவன்.. ஒளிந்து கொள்ள ஓர் மறைவிடத்தை நாடியவனுக்குத் தென்பட்டது.. குதிரைகள் இல்லாமல் வெறுமனே இருந்த பலகையிலான சாரட்டு வண்டி!! 
அங்கே விரைவாக விரைந்தவன்.. அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டு.. அதன் பக்கவாட்டில் குனிந்து அமர்ந்து கொண்டவனின் கைகள்.. அவள் தலையை அணைத்துப் பிடித்து.. தன் நெஞ்சாங்கூட்டில் தான் அடைக்கலமாக்கியிருந்தது. 
அவள் விழிகளோ.. முதன்முறையாக.. தன்னை காக்கும் தாமஸின் விழிகளை.. அவன் இதயப்பக்கத்தில் தலை வைத்த வண்ணமே.. அண்ணாந்து பார்க்க…அன்று அந்நொடி அவள் கண்களுக்கு தாமஸ் வித்தியாசமானவனாகத் தான் தெரியலானான். 
 அவனோ ஒளிந்து நின்று யானையின் செய்கைகளையே தான் நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். 
அந்த வண்டியை நாடி.. தொம் தொம் என்று நிலத்தை அதிர வைத்துக் கொண்டு ஓடி வந்த யானையோ… தன் தும்பிக்கையால் வண்டியைத் தூக்கி நிலத்தில் அடிக்க முனைந்த வேளை… 
சாமர்த்தியமாக செயல்பட்ட வெள்ளைக்கார பணியாளர்களில் ஒருவன்.. தன் துப்பாக்கியில்.. இருந்த தோட்டாக்களைக் கழற்றி விட்டு.. தன் சட்டைப்பையில் இருந்த பிரத்தியேக மயக்கமருந்து தோட்டாக்களை உட்புகுத்தி..யானையின் வயிற்றுக்கு குறிபார்த்து அடித்தது தான் தாமதம். 
பெரும் பிளிறலுடன்.. மயக்க ஊசி உடலைத் தைக்க.. விம்பங்கள் எல்லாம் இரண்டிரண்டாகத் தெரிய… பெரிய இரும்புக்குண்டு நிலத்தில் வீழ்ந்தது போன்ற அதிர்ச்சியில் நிலத்தில் படாரென்று வீழ்ந்தது யானை!! 
ஆபத்து நிலைமை ஓய்ந்த பின்னரும் கூட… அவன் கைகள் இன்னும் அவளையே காப்பது போல அணைத்துப் பிடித்திருக்க… அவன் கை தந்த பாதுகாப்பு.. அவளுக்குள் ஒரு மனோநிம்மதியைக் கொடுக்கலானது. 
காலன் வந்தாலும் கொண்டு போக முடியாத ஓர் சிறை.. அவனது கைச்சிறை!! 
கூடவே.. அவன் கண்களில் உச்சபட்ச களேபரத்துடனும், பதற்றத்துடனும்.. கண்களோரம் இலேசாக நீர்த்துளி ததும்பி நிற்க, அவளையே காதலுடன் பார்த்திருக்கும் அவன் பார்வை அவளை ஏதோ செய்யும் போல இருந்தது. 
நிலவரம் சுமூகமாக மாறத்தொடங்கியதும்.. தோழியை நாடி வந்த காவ்யாவோ.. அவளை அணைத்தவாறு அழைத்துச் செல்ல.. நின்ற இடத்தில் நின்று.. அவளையே பார்க்கும் அவனைத் தான்.. உணர்ச்சிகள் மல்க திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே போனாள் லொவீனா. 
கனவுகள்-11
அதே இரவின்.. மூன்றாம் பாகம் ஆரம்பமாகி விட்டிருந்த பொழுதினிலே.. தன் வீட்டு மேல்தளத்தில்.. அவள் அறையோடு இருந்த.. பாரிய வட்டவடிவான கண்ணாடிச் சாளரம் அமைந்திருக்கும் திட்டில்… தன்னிரு முழங்கால்களையும் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த லொவீனாவின் விழிகளோ… 
மேல்த்தளம் வழியாகத் தெரியும்.. கொழும்பின் புற அழகினையே இலக்கேயற்றுப் பார்த்த வண்ணம் இருந்தது. 
ஆயிரத்து எண்ணூறாம் ஆண்டைய சூழலில்…. கொழும்பு வானுயர்ந்த கட்டிடங்களைக் கொண்டிராவிட்டாலும் கூட.. வானுயர்ந்த தென்னைமரச் சோலகளையும்.. ஓட்டுக்கூரைகளையும்.. அப்போது தான் புதிதாகக் கட்டப்பட்ட.. மணிக்கோபுரத்தையும் கொண்டு விளங்குவதாகவே இருந்தது. 
அன்றைய மூன்றாம் ஜாமத்தின் நேரம்.. இது வரை  சாதாரண அளவில் வட்ட வடிவாக இருந்த முழுமதி நிலவோ.. இப்போது ஒரு பெரிய சூரியப்பந்தின் அளவுக்கு மிகப்பிரம்மாண்டமானதாக.. தன்னைச் சூழ வானவில் பிரதிபலிப்புக்களைக் கொண்டு காட்சி தந்து கொண்டிருந்தது மனதுக்கு அத்தனை மனோ இரம்மியம்!! 
அன்றிரவு.. ஓர் மிகப்பெரும் எமகண்டத்திலிருந்து வெளி வந்திருந்தவளுக்கு.. ஏனோ தூக்கம் விழிகளைத் தழுவ மறுக்க.. நினைவெங்கிலும் அந்தக் கொடூர சம்பவமே நினைவில் வந்து வந்து போய்க் கொண்டேயிருக்கலானது. 
அது அவளது இறுதி நொடிகள் என்று நினைத்திருந்த வேளையில்.. அவள் மேனியில் கவிழ்ந்து படுத்து.. யானைக்கு தன்னுயிரை துச்சமாக மதித்து.. தன்னைத் தானே இரையாக்கிய அவன் செய்கையே திரும்பத் திரும்ப.. மனக்கண் முன் வந்து உருப்பெற்றது. 
இது நாள் வரை.. அவன் ‘காதல் காதல்’என்று நாமம் சூடிக் கொண்டு பின்னால் வந்த போதினிலே.. அது வெறும் இனக்கவர்ச்சி.. உடல்கவர்ச்சி என்று தானே நினைத்திருந்தாள் அவள்!! 
அன்று அவனுடைய பிறந்தநாள் விருந்தின் போது.. அவள் ஆடிய ஆட்டத்தில்.. அவள் அங்கங்கள் காட்டிய லாவண்யத்தில் சித்தம் கலங்கிப் போய் நின்றிருந்தவனுக்கு.. அவள் மேல் ஓர் காமத்தேவை என்று தானே.. அவன் அவளை அணுகும் போதெல்லாம் நினைத்திருந்தாள்?? 
அதைப் பறைசாற்றும் முகமாகத் தானே .. அவளுக்கும், அவனுக்கும் இடையில் நடந்தேறிய சம்பவங்களும் இடம்பெற்றன?? 
அவள்.. அன்றைய விருந்தில்.. ஆட்டத்தை முடிக்கும் முன்னர்.. அவளைக் கற்றையாகத் தூக்கிச் சென்று.. மஞ்சத்தில் கிடத்தி.. அவளை சூறையாட முயன்றதுவும் சரி… 
அன்றொரு நாள் இரவில்.. முத்துக்கள் வந்து கரைதட்டி நின்ற ஆழிக்கரையோரம்.. அவள் மறுக்க மறுக்க.. திணறத் திணற நின்ற போது.. இதழ்களைக் கவ்வி அவன் உறிஞ்ச முற்பட்டதுவும் சரி… 
எல்லாமே அவனுள்.. அவளுக்காக கிளர்ந்தெழுந்த காமத்தைத் தானே சான்று பகர்கின்றது?? 
ஆனால் காமம் மட்டும் பூத்துக் கிடப்பவன்.. இப்படி மதமேறிய யானைக்கு தன்னைத் தீனி போட்டாவது.. அவளுயிரைக் காப்பாற்ற நாடுவானா?? 
.
காமம் என்பது மலரில் இருக்கும் தேன் முற்றிலும் உறிஞ்சப்பட்டதும் அடுத்த மலருக்குத் தாவும் பட்டாம்பூச்சி போல. 
ஆனால் காதல் என்பது? தீபத்தை நோக்கி ஈர்க்கப்பட்டு.. ஒளி தீர்ந்ததும்.. தன் உயிரையும் தீர்த்துக் கொள்ளும் விட்டில் பூச்சி போல. 
தாமஸ்!! இலங்கையின் ஏகாதிபதி.. அதில் எந்த வகையறா? 
அவன் மலர் விட்டு மலர் தாவும் பட்டாம்பூச்சியா? இல்லை ஒளி தீர்ந்ததும் உயிர் தீர்த்துக் கொள்ளும் விட்டில் பூச்சியா?? 
யார் அவன்?? 
அவன் பட்டாம்பூச்சியானால்… அவள் உயிரைக்காக்க அவன்.. அங்கணம் வந்திருக்கவும் கூடுமோ? அந்த பட்டாம்பூச்சிக்கு உலகில் இல்லாத மலர்களா? 
அவன் இந்நாட்டின் ஏகாதிபதி.. அவன் உயிருக்கு.. அவள் உயிரை விடவும் பகுமானமும் அதிகம்;வெகுமானமும் அதிகம்!! 
அப்படியிருக்க…அவன் காத்தானே அவள் உயிரை?? இறுதியாக தோழி காவ்யா அவளை அழைத்து வர எத்தனித்த போது.. தன் தோள்புஜங்கள் வலிமையாக உயர்ந்து தாழத் தாழ.. பெருமூச்சுக்கள் விட்டவனின் கண்கள்.. அவளையே தானே ஆதுரத்துடன் ஆராயவும் செய்தது. 
அந்த விட்டில்பூச்சிக்கு.. இந்த மலர்  மீது காமம் அல்ல!! காதல்!! உயிரையும் கூட துணிந்து தியாகம் செய்யும் அளவுக்கு.. பித்தாக்கும் காதல்!! 
காதலை காட்டத் தெரியாதவன்.. காதலை காட்டும் ஓர் உத்தி தான் இந்த உடல்தேவையைக் காட்டும் காமமாக.. அவள் கண்களில் தெரிந்திருக்கிறது. 
பாவம்.. அந்தச் சிறு மதலைக்கு காதலைக் காண்பிக்கும் வழிவகைத் தெரியவில்லை என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட… அவன் பால்.. அதிமிதமான அன்பு கனியத் தொடங்கியது அவளுக்குள். 
இப்போதே இந்நொடியே அவனைப் பார்த்து விட வேண்டும் என்று நாடி நரம்பெங்கிலும் ஒரு உணர்வு… அவளுள் பெரிதும் எழுந்து தாக்க… தன் கருநிற நீளப் போர்வை போன்ற அங்கியை.. தன் முதுகின் மீது போட்டு.. கேசாதி தாள் வரை.. போர்த்திக் கொண்டு.. 
அறையிலிருந்த அரிக்கன் விளக்கை கைகளில் எடுத்தவாறு.. வீட்டில் இருக்கும் யாரும் அறியாத வண்ணம்.. அவனைத் தேடித் தான் போனாள் அவள். 
அவள்.. அவன் குடியிருக்கும் ஆளுநர் மாளிகைக்கு.. ஒரே ஒரு தரம் தான் சென்று வந்திருந்தாலும் கூட… அவன் வீட்டுக்கு செல்லும் வழி.. கொழும்பிலேயே பிறந்து வளர்ந்திருந்தவளுக்குப் பரிச்சயப்பட்டிருக்க… அந்த நடுஜாம இருட்டில்… ஆளுநரின் மாளிகை நோக்கி பயணப்பட்டாள் நடனமாது. 
****
அன்று அந்த சுதேசித் தீவிரவாதிகள்.. அவனைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு வந்து.. அவனைக் காயப்படுத்திய வேளை.. கருங்கற்பாறைகள் குவிந்து கிடந்த கடலோரம் வழியாகத் தான் இறங்கி வந்தாளில்லையா? 
அதே பாதை வழியாக..ஒரு கையால் அரிக்கன் விளக்கு ஏந்திக் கொண்டு… மறுகையால் தன் சேலை பாதங்களில் தடுக்குப்படாத வண்ணம் தூக்கிப் பிடித்துக் கொண்டு…. அந்தக் கருங்கற்பாறை முகட்டைத் தாண்டி. ஏகாதிபதி மாளிகையின் பின்புற வாயில் வழியாக உள்ளே நுழைந்து… உள்ளே போனாள் அவள்!!! 
அந்த மாளிகை.. அன்று அவள் முதன்முறையாக வந்ததிலும் பார்க்க நிசப்தத்தில் உறைந்து போயிருப்பது போல வித்தியாசம் தென்படலாயிற்று அவளுக்கு. 
அவளோ.. அந்தப் பிரம்மாண்டமான வெள்ளை மாளிகையில்.. புத்தக இராக்ககைள் விரிந்து கிடக்கும் பலகை மீது அரிக்கன் விளக்கினை வைத்து விட்டு … அவனிருக்கும் அறை நோக்கி.. சாளரங்கள் தாண்டி குதித்து உள்ளே நுழைந்த வேளை… அந்த பாரிய அறை… எந்தவிதமான ஒளிவிளக்கும் இன்றி.. அத்தனை பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டு தானிருந்தது. 
வெளிச்சாளரம் வழியாக.. அதன் மீதிருந்த திரைச்சீலைகள் விலகியிருக்க.. முழுமதி நிலவின் வெள்ளிக்கிரணங்கள்… அவ்வறை முழுவதும் நிறைத்திருக்க… நிர்ச்சலனமான உடலுடன்.. ஒருசீராக மூச்செடுத்துக் கொண்டு… கண்கள் மூடிப் படுத்திருந்தான் தாமஸ். 
அவனோ… தன் இரவு உடையில்… தாய்ப்பால் பருகி விட்டு உறங்கும் குழந்தை போன்ற வெள்ளந்தி முகத்துடன் உறங்க… தாமஸையே… விரிந்த நயனங்களுடன் பார்த்திருக்கலானாள் லொவீனா. 
அவனுடைய ஒரு திண்மையான அவன் வயிற்றில் அடைக்கலமாகியிருக்க… மற்றோர் கையோ.. அவனது தலைக்கு அடியில் சென்று பிடரி மயிரை ஏந்திப் பிடித்திருந்த தினுசில்.. முறுக்கேறித் தெரிந்த கைத்தசைகளின் திரட்சி.. அவளை சற்றே மலைக்கத் தான் வைத்தது. 
அவனை நோக்கி.. அவள் இன்னோர் எட்டு எடுத்து வைத்தது தான் தாமதம்… அங்கே.. இருந்த மிகவும் கலைநுணுக்கத்துடன் செய்யப்பட்டிருந்த சோபாவின் கால்களில்.. அவள் தொடை போய் இடித்துக் கொண்ட தினுசில்.. நிலத்தில் மெல்ல உராய்ந்தது சோபாவின் கால்கள். 
அதில் கிறீச்சிடும் ஒருவகையான நாராசமான ஒலி பிறக்க.. அடுத்த நொடி.. அந்த நுண்மையான ஒலிக்கும் பட்டென்று விழித்துக் கொண்டவனின் கைகளோ.. தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில், 
தலையணைக்கு அடியில் புகுந்து.. அங்கேயிருக்கும் தன் துப்பாக்கியை அழுத்திப் பிடித்துக் கொள்ள, கண்களோ… இருட்டில் நின்று கொண்டிருக்கும் அந்த உருவத்தைத் தீவிரமாகப் பார்க்க, 
மிக மிகத் தீர்க்கமான குரலில், “யாரங்கே??”என்று கேட்க, அந்தக் குரலின் உறுதியில் உடல் நடுக்குற்றுத் தான் நின்றாள் லொவீனா. 
தன்னைச் சூழ நிலாவின் ஒளிவட்டம் வீசினாலும் கூட, அந்த உருவமோ.. நிலவொளி படாத இருட்டில் நின்றிருக்க.. அவனால் வந்திருப்பது யாரென்று பார்க்க முடியாது தான் போனது. 
அதனால் அவனது இடது ஒற்றைப்புருவம் மாத்திரம் மெல்ல மேலுயர, “நான் தான் சொல்றேன்ல? ய்யாரதூஊஊ?? வ்வெளியே வ்வா..”என்று அவன் அந்த மாளிகையே.. ஒளிவெள்ளத்தில் மூழ்கிப் போகும்படிக் கத்த… அவன் கத்தி காரியத்தையே கெடுத்து விடுவானோ என்ற அச்சத்தில், 
தன் போர்வையைக் கழற்றித் தரையில் போட்டு விட்டு, “உஷ்ஷ்.. உஷ்ஷ்!! கத்தாதே.. கத்தாதே நான் தான் தாமஸ்”என்றபடி தடதடவென அவனை நோக்கி ஓடி வந்து அவன் மஞ்சத்தில் ஒருக்களித்து அமர்ந்து கொள்ள.. தன் கனவுகளுக்குச் சொந்தக்காரி வந்திருப்பது கண்டு.. இன்ப அதிர்ச்சிக்குள்ளாகித் தான் போனான் அவன். 
“நீயாஆ? அதுவும் இந்த நேரத்திலா? இந்த நேரத்தில் என்னை தேடி வர வேண்டிய அவசியம் என்ன?”என்று அவன் தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தியது கூட.. பெருங்குரலாக அமைய.. 
இவன் கத்தும் கத்தலில்.. வெள்ளைக்கார பணியாளர்கள் அனைவரும்… அறைக்குள் நுழையக்கூடுமோ என்ற பயம் எழுந்தது அவளுக்குள். 
அதனால் அவனின் முரட்டு அதரங்களைத் தன் மென்மையான உள்ளங்கையால் பற்றிக் கொண்டவன், “ஐய்யோ கத்தாதே”என்று மீண்டும் ஒரு கோரிக்கையை முன்வைக்க, அவள் கையைத் தன்னிலிருந்தும் எடுக்கப் பார்த்தவனாக அவன் கத்த விளைந்த நேரம்.. 
அவனின் வாயடைக்க வழி தெரியாது கைகளைப் பிசைந்து கொண்டு திகைத்த மங்கை.. அதிரடியாக  அவன் உதடுகளில் தன் இதழ்களை.. இறுக மூடியக் கண்களுடன் பொருத்தியிருந்தாள் மென்மையாக. 
அவ்வாண்மகனின் முரட்டு அதரத்தில் இழையோடிய அந்த மென்மையில்.. அவனுக்கும் கண்களில் ஒரு தாப மயக்கம் குடிகொள்ளத் தான் செய்தது.
கண்கள் தாபத்தில் சிவக்க.. அந்த செம்மை அவளையும் கூட தாக்கும் போல இருக்க.. அவனது வலிமையான கழுத்து வளைவுகளின் ஊடு.. கைகளையிட்டு மென்மையாகத் தடவியவள், 
பின்னங்கழுத்து தடவி.. அப்படியே மெல்ல மெல்ல மேலேறிய விரல்கள் அவனது சிகைக்காட்டையும் அளைய… அவனுக்கு அவள் கை தந்த சுகமே சுவர்க்கத்துக்கு கூட்டிப்போவது போல இருக்க.. மெல்ல வழிவிட்டது இத்தனை நேரம் இணைந்திருந்த அவனது வன்மையான இதழ்கள். 
அந்த இதழ்களின் பிளவில் தன்.. உதடுகளை இட்டவள்.. அவனே உன்மத்த நிலைமைக்குத் தள்ளப்பட்டு கிறங்கிப் போகும் வண்ணம்… அவன் இதழ்களைக் கவ்வி.. அதில் அதிரசம் பருகிக் கொண்டிருந்தாள் நடன மங்கை லொவீனா. 
அவன் மீது காதலா? தெரியவில்லை!! 
பின் காமமா? ம்ஹூஹூம் இல்லவேயில்லை!! 
அப்படியானால் அவள் செய்து கொண்டிருப்பதன் பேர் தான் என்ன? சர்வ நிச்சயமாக அவள் மனதிடம் ஓர் நிலையான பதில் இல்லை தான். 
இருப்பினும்.. தன்னுயிரைத் துச்சமாகப் பணயம் வைத்து.. அவளைக் காத்தவனின்.. கடல் அளவு ஆழ அன்புக்கு.. அவள் செய்யும் கைம்மாறு இது. 
எவனிடம்  ஒரு பெண் பாதுகாப்பையும் , அன்பையும் ஒருசேர உணர்கிறானோ.. அத்தகையவனிடம் அவள் கொடுக்க விழையும் ஓர் உன்னதப் பரிசாகவே பெண் அவளைக் கருதுவாள்.
பெண் கொடுக்கும் உயர்ந்த பரிசு.. அவள் தரும் போதை இன்பம்!
அதை அவள் மனம் விரும்புபவனுக்கு கொடுக்கத் தான் அவளுமே விருப்பங்கொண்டாள். 
அதைத் தான் அவளும் அந்த கணம் தன் உயிரைக்காப்பாற்றியதுக்கு சன்மானமாக.. அவன் விரும்பிக் கேட்குமொன்றை கொடுக்கவும் விரும்பினாள் அவள். 
அவன் அவளிடம் விழிகளாலும், மொழிகளாலும் யாசிக்கும் ஒன்றினை அவனிடமே உவந்தளிக்க  நாடினாள் அவள். 
தாமஸோ.. இது என்ன கவனா? நனவா என்று தெரியாத மனநிலையில் திகைப்பூண்டை மிதித்தாற் போன்று இன்பக் கனவிலிருந்து விலகி… அவள் எச்சில் துளிர்த்த தன் இதழ்களுடன் அவள் விழிகளைப் பார்த்து.. ஏதோ கேட்க நாட, அவள் அதற்கு இடங்கொடுக்கவேயில்லை. 
அவன் கால்களின் இருபுறமும் தன் கால்களையிட்டு.. மடிமீது அமர்ந்து அவன் கழுத்த கைகளில் மாலை போல கோர்த்துக் கொண்டவள், அவன் இதழ் மீது சுட்டுவிரலைக் கேடயம் போல வைத்து, மந்தகாசமான குரலில், “உஷ்ஷ்.. டேக் மீ.. டேக் மீ ஏஸ் யூ வோன்ட்”என்று சொன்னவளின் கைகளில் மற்றையது.. அவனது சட்டைப்பட்டன்களை மெல்லக் கழற்றி… அதற்குள் கையிட்டு.. அவனது திண்ணிய மார்பினைக் காம்போடு பற்றித் தடவ.. அவன் கருமணிகள் மேல் சொருகி.. கண்களில் வந்து போனது ஒருசிறிய தாப மயக்கம். 
அடுத்த நொடி மயக்கம் கலைந்தாற் போன்று.. தன் மார்பு தடவும் அவள் கையைப் பிடித்துத் தடுத்தவன், “உன் காதலன் டோனிக்கு செய்ற துரோகமாக நீ இதை நெனக்கலயா?”என்று சொன்ன மறுநிமிடம்.. அவள் கண்களில் இருந்த விரகதாபமும் சட்டென்று வழியலானது. 
விழிகள் விரிய குழப்பத்துடன் அவனைப் பார்த்தவள், “டோனியா? என்.. காதலனா? நான் எப்போ சொன்னேன்?”என்று சொல்ல.. அவன் முகம் இலேசாக இறுகி வாடலானது. 
“நீ வாய்திறந்து சொல்லலைன்னாலும் உன் காதலனை என்னால கண்டுபிடிக்க முடியாதா என்ன? டோனி.. உன் முறைப்பையன்.. ஃபியான்சின்னு விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்…அப்போ அவன் தானே நீ அன்னைக்கு சொன்ன உன்னோட புனிதக் காதலனா இருக்க முடியும்?”என்று கேட்டவனின் குரலில் இருந்த வலியை அவன் எத்தனை முயன்றும் கட்டுப்படுத்த முடியாது போனது. 
ஓ.. இவன் டோனியை அவளது காதலன் என்று தப்புக்கணக்கு போட்டு வைத்திருக்கிறானா என்ன? 
அதே சமயம் இதழ்கள் அழகாக குவிய, ஏதோ ஒரு விடயம் புரிப்பட்டாற் போன்று அவனை நோக்கி, “ஓ… அந்த கோபத்துல தான்.. அவனை மாடு மாதிரி வேலை வாங்கினீங்களா என்ன?”என்று சொல்ல.. குற்றவுணர்வில் மெல்ல தாழ்ந்தது அவன் விழிகள். 
லொவீனா சொல்வது உண்மை தானே?அதற்காகத் தானே அவன் வந்து இறங்கிய அன்றே.. தூங்க விடாமல் இடுப்பொடிய ஒடிய.. விடிய விடிய வேலை வாங்கினான் அவன். உண்மையை மறுக்கத் தோன்றவில்லை ஏகாதிபதிக்கு. 
அவளோ, அவள் அறியாமலேயே அவன் மனம் குளிரும் வண்ணம், “அவன் .. அத்தைப்பையன் மட்டும் தான் வேறே எதுவும் இல்லை..”என்று சொன்னதும் தான் தாமதம்.. தன் முத்துமூரல்கள் தெரிய ஓர் புன்முறுவல் வந்து போகலானது அவன் முகத்தில். 
அவள் இடையூடு தன் கையைத் தவழ விட்டவன்.. அவளை அப்படியே முரட்டுத்தனமாக மஞ்சத்தில் புரட்டிப் போட்டு.. அவள் உடலுக்கு மத்தியில்.. கைகளால் அணைக்கட்டி நின்று.. அவன் உஷ்ணமூச்சோடு.. அவள் மூச்சு நுரையீரலைத் தீண்டும் வண்ணம் நெருங்கி நின்றவன், 
“அப்போ உன் காதலன்..?? அப்படி நீ சொன்னது எல்லாம் பொய்யா?”என்று விழிகளில் பளபளப்புடன் கேட்டான் தாமஸ். 
அவளோ அவசரமாக மறுப்பாகத் தலையாட்டி, “ இல்லையில்லை… நான் ஒருத்தரைக் காதலிக்குறது உண்மை தான்.. ஆனால் அவரை நான் இதுவரைப் பார்த்ததேயில்லை..”என்று சொல்லவும் அவன் புருவங்கள் இரண்டும் பட்டென்று இடுங்கலானது. 
“பார்க்காமலேயே காதலா..?”என்று ஆச்சரியமும், வலியும் மீதுற அவன் சொல்ல, இவளும் கிசுகிசுப்பான குரலில், “ம் ஆமா.. முகத்தை மட்டும் பார்த்ததில்ல.” என்றவளுக்கு… இத்தனை நாளாக கனவில் வந்து தொல்லை கொடுக்காமல்.. ஒதுங்கி நிற்கும் அந்த அழகிய திராட்சை இரசக் கனவுகளுக்குச் சொந்தக்காரனின் ஞாபகம் திடும்மென்று வந்து போகலானது அவளுக்குள். 
முகத்தைப் பார்க்காமலேயே காதலா? அவனுக்குள் சிறு கேள்வி மீதூற, “அப்போ எப்படி அவனை தெரியும்?”என்று கேட்க, கண்களில் காதல் இழையோட சொன்னாள் மாது, 
“கனவில”
அதைக் கேட்டு அவன் கண்கள் இலேசாக விரிய, அவளில் இருந்தும் எழுந்து கொண்டவன், “கனவில் கண்டதிலிருந்து காதலா?.. அது எப்படி சாத்தியம்..?”என்று கேட்க, அவனைத் தொடர்ந்து தானும் எழுந்தமர்ந்தவள் உணர்ச்சி மல்கச் சொன்னாள், 
“அது வித்தியாசமான கனவுகள்.. தொடந்து எனை எரிக்கும் ஈரக்கனவுகள்..”என்று. 
அவனோ.. தன்னவள் வேற்றாடவனுக்காக காதல் சுமந்து நிற்கும் விழிகளைக் காணப் பிரியப்படாதவனாக.. மஞ்சத்தில், புறமுதுகிட்டு நிற்க, “அதை விடு தாமஸ்…”என்றவளாக..அவனது தோள்வளைவில் கை வைத்து.. மெல்ல மெல்ல தன் தடவல்களைத் தொடர்ந்து தன் கூடல் பரிசுக்கு அழைப்பு விடுக்க நாடி.. அதற்கு குட்டிக் குட்டி முத்தங்களும் வைக்க நாடினாள் அவள். 
அவள் வைத்த முத்தத்தில் எல்லாம் அவன் உடல் சிறுகச் சிறுக விறைக்கவாரம்பிக்க, தன்னிலிருந்தும் அவள் கையை அப்புறப்படுத்திக்  கொண்டவன் வலி மீதூறச் சொன்னான், 
“ம்ஹூஹூம்.. நீ என் காதலை தப்பா புரிஞ்சுக்கிட்ட.. இதயத்தில் இருந்து வர்றது தான் காதல்.. உடல்தேவைக்காக வர்றது இல்லை..”என்று.
பின் அவளை நோக்கி முற்றாகத் திரும்பி.. அவள் வதனத்தை நேருக்கு நேராகப் பார்த்து, “நீ எனக்கு..உன்னைக் காப்பாத்தினதுக்கு  வெகுமானமாக.. தரலாம் ஆனால் நான்.. நான் உன்னை எடுத்துக்கும் போது.. நெஞ்சு முழுக்க காதலை சுமந்திக்கிட்டு நீ உன்னைத் தரணும்னு தான் ஆசைப்பட்டேனே ஒழிய..இதையில்லை”என்று சொல்ல.. அவளோ இதயத்தில் ஓர் வேர்.. அவள் பாறாங்கல் இதயத்தில் நெக்குவிட்டது போல.. அவனையே தான் ஆடாது அசையாது பார்த்திருக்கலானாள். 
அவன் விரும்பும் பெண்ணே வந்து..அவளை விரும்பித் தருகிறாள்? இப்படிப்பட்ட வாய்ப்பையும் வேண்டாம் என்பவன் என்ன மாதிரியான ஆண்மகன்?? 
அவனோ தொடர்ந்து சொன்னான். 
“உன்னைக் கண்டதும்…. உன் ஆட்டத்தில் மயங்கி.. காமம் கொண்டது உண்மை தான் .. ஆனால் இது நீ  என் உயிரை.. அந்த சுதேசத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாத்தும் வரை தான்..
என் கிட்டேயிருந்து தப்பிச்சுப் போக உனக்கு சான்ஸ் கிடைச்சும்.. என்னை விட்டு நீ போகலை… அட் தேட் மொமண்ட்  ஐ ஃபெல் இன் லவ் வித் யூ… 
குதிரையை ஓட்டிக்கிட்டே.. என்னை நொடிக்கொரு தரம்.. ‘எனக்கு என்னாச்சோ? என்னாச்சோ?’ன்னு பதறிப் பதறிப் பார்த்த அந்த விழிகள்ல விழுந்தேன்.. உண்மையா காதல் கொண்டேன்”என்றவன் உணர்ச்சி வழிய அவள் கைகளைப்  பிடித்துக் கொண்டான். 
இவளோ தனக்குள் எழுத்தில் வரிக்க முடியாத உணர்ச்சிகள் கிளர்ந்தெழுவதைத் தாங்க மாட்டாது நிற்க, 
அவனோ, மனம் மயக்கும் ஹஸ்கி குரலில், “யூ நோ சம்திங்… என் நாட்டை நேசிக்குற அதேயளவு உன்னை நான் நேசிக்குறேன் லொவீனா… உன்னால என்னை திருப்திப்படுத்த முடியாத நிலையில் நீ இருந்தாலும்.. எனக்காக வாரிசு தர முடியாத நிலையில் நீ இருந்தாலும்.. எனக்கு உன்மேல வந்த காதல் தீராது.. இது வேண்டாம்.. இந்த காமம் வேண்டாம்.. அன்பா ஒரு பார்வை பாரு.. பாசமா சின்ன தலைகோதல் செய்… இந்தக் காதல் போதும் எனக்கு”என்று அவன் சொல்ல, 
அன்றிரவு… அவள் விழிகளுக்கு புதுமையானவனாகத் தெரிந்த ஆஜானுபாகுவான உடல் கொண்ட தாமஸையே.. திகைப்பூண்டை மிதித்தாற் போல பார்த்த  வண்ணம்.. ஜர்க்காகி நின்றாள் அவள். 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *