கைத்தலம் பற்றவா கண்மணி
7
கைத்தலம் பற்றவா கண்மணி
ஜியா ஜானவி ❤️
அதிரடியாய் தன்னை பார்க்கும் நேரம் முழுதும் வாய் அடைக்க செய்யும் நீரஜை பார்த்து அயர்ந்து தான் போனாள் நிகா..
‘அப்படி எந்த இடமாக இருக்கும் கொசு போகாத இடம்?’ என்று யோசித்தவளுக்கு விடை எக்கு தப்பாக வர.. தன் இருக்கையில் இருந்து துள்ளி எழுந்து அமர்ந்தாள்.
“க்கும்ம் இது சரி வராது.. அவனை நினைக்க கூடாது.. அதிலும் அதி முக்கியமாக அவன் பேச்சை நினைக்கவே கூடாது” என்று முடிவு எடித்தவளின் முடிவு காலாவதியாகி போக போவது என்னவோ உண்மை!!
அதன் பின்.. மனதின் எண்ண ஓட்டங்களை எல்லாம் சமன் செய்ய முயன்று அதில் வெற்றி கண்டு தூங்கி போனாள் வெகு நாள் பழக்கமாக…
அதிகாலையிலேயே நிகாக்கு விழிப்பு வர.. தாலாட்டும் ரயில் பயணமும்.. ஏசி காற்றும்.. நிம்மதியான தூக்கமும் புத்துணர்ச்சியாக விடிந்தது நிகாவுக்கு.
தன் கூபேயில் இருந்த மோனலை பார்க்க, அவளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
எழுந்தவள் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு, வெளிக்காற்றை சுவாசிக்க வேண்டி அந்த கம்பார்ட்மென்ட் கதவைத் திறக்க.. சிலுசிலுவென ஈரக்காற்று அவள் முகத்தில் மோத கண்களை மூடி முகத்தை சற்று மேலே தூக்கி அதை ஆழ்ந்து அனுபவித்தாள். நுரையீரலில் நிறைந்த அந்த புது காற்று அவளக்கு இன்னும் இன்னும் வேண்டுமானதாய் இருக்க சற்று நேரம் அதை அனுபவித்தவாறு படியின் ஓரத்திலேயே பயணித்துக் கொண்டிருந்தாள் நிகா.
“இந்த மாதிரி அனுபவம் எல்லாம் பிளைட்ல போனால் கிடைக்காது” என்று ஆழ்ந்த குரல், அவள் காற்று வாங்கும் ஆனந்தத்திற்கு இடையூறாய் வந்து கேட்க.. கண்களைத் திறந்து முகத்தை மட்டும் திருப்பி பின் பக்கம் பார்த்தாள். அங்கே கம்பார்ட்மெண்ட் சுவரில் சாய்ந்தபடி ஒரு கையை பாக்கெட்டில் விட்டபடி மறுகையால் காற்றில் அலையும் தன் சிகையை கோதியபடி நின்றிருந்தான் நீரஜ்..
அவனின் முகத்தில் எப்போதும் இருக்கும் கர்வம் கலந்த அழுத்தமான பார்வை இப்போது மிஸ்ஸிங்.. நிர்மலமாக இருந்தது. இந்த ஏகாந்தத்தை அனுபவிக்கிறான் என்றவாறு மென்மையை தத்தெடுத்து இருந்தது அவனது முகம்.
நேற்று தன் மனதில் நினைத்தது இவனுக்கு எப்படி தெரிந்தது என்று வில்லெனும் புருவங்கள் முடிச்சிட அவனையே யோசனையோடு பார்த்தாள் நிகா..
அவளின் யோசனையை பார்த்தவன் எப்பொழுதும் யாருக்கும் பதில் அளிக்காதவன், அவனையும் மறந்து பதில் அளித்துக் கொண்டுதான் இருந்தான் நிகாவிற்கு..
“பிளைட்ல போன இங்கிருந்து 2 ஹவர்ஸ் ஜெர்னி தான். ஆனால் இறங்கின உடனே, டிப்பார்சர் வொர்க்.. ஜெர்னி டயர்ட் இப்படியா அடுத்த நம்ம செய்யப் போற வேலை ஒரே டென்ஷனா பரபரப்பாக இருக்குமே ஒழிய.. இந்த மாதிரி ஒரு லைட்டான ஃபீலிங் இருக்கவே இருக்காது” என்றான் அவளைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே..
அவளுக்குமே புரிந்து தான் இருந்தது நேற்று இரவு ஆழ்ந்த தூக்கம், புத்துணர்வோடு விடியல் இந்த ரயில் பயணம் கூட ஒருவித சுகமாகத் தான் இருந்தது.
“பணத்திற்காக இந்த டிரிப்பை ஏற்பாடு செய்யல.. பணத்துக்குப் பின்னாடியோ.. வேலை பளுவின் காரணமாகவோ நாம இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் நம்முடைய வாழ்க்கையிலே தவற விட்டுக் கொண்டே இருக்கிறோம். அவ்வப்போது இந்த மாதிரி விஷயங்கள் தான், நம்மை புத்துணர்வோடும் மனதை ஒருவித ரிலாக்ஸான தன்மையுடன் வைக்க உதவும்” என்று கூற.. நீரஜ் இந்த முகம் அவளுக்கு மிகவும் வித்தியாசமானது.. புதிதானது.
‘இப்படி கூட இவனுக்கு யோசிக்க தெரியுமா?’ என்று அவனை தான் ஆச்சர்யத்துடன் தன்னை மறந்து சற்றே வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். பணத்தின் பின்னே ஓடும் பல தொழிலதிபர்கள் மத்தியில், இவனுக்கு இருக்கும் இம்மாதிரியான வித்தியாசமான குணங்களை எண்ணி அவளுக்கு சற்றே அவன் மீது நன்மதிப்பு ஏற்பட்டது.
ஆனால் அதுவும் கூட இன்னும் சிறிது நேரத்திற்கு கூட இல்லை என்று அவள் அறியவில்லை..
“கண்டுபிடிச்சிட்டியா?” என்று திடுமென அவன் கேட்க..
வெளியில் அனைவருக்கும் முன் பன்மையில் பேசுபவன், இவளிடம் தனியாக இருக்கும்போது காட்டும் இந்த உரிமை கலந்த ஒருமை விளித்தலை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.. அவன் இந்த இருமுக தன்மைக்கு என்ன காரணம் என்று புரியாமல் அவனையே நோக்கிக்கொண்டு இருக்க…
“புரியலையா இல்ல தெரியலையா?” என்று ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி அவன் கேட்க..
“நீங்க என்ன கேட்டீங்கனு எனக்கு புரியல” என்று அவள் பதில் கூற..
“அதுதான் கொசு கடிக்காத.. போகாத இடம்” என்று அவன் கேட்க.. அவளுக்கு மனது திக் என்றானது நேற்று அவள் செய்த கற்பனையின் வீரியத்தால்.. அதிலும் இவன் இப்படி நேரடியாக கேட்டு வைப்பான் என்று அறிந்திறாதவள் அவனைத் திரும்பிப் பார்க்க எத்தனிக்க.. சட்டென்று கால்கள் தடுமாறியது அவளுக்கு.. அதுவும் கம்பார்ட்மெண்டில் வாயில் ஓரம் கதவைப் பிடித்துக்கொண்டு அவள் நின்றிருந்த தினுசில் சட்டென்று சரிந்து விழுத்தான் போனாள். அதிவேகமாக செல்லும் ரயில்.. படியில் பயணம்.. கரணம் தப்பினால் மரணம் என்று நிலையில் விழுந்து வைத்தால், ஒற்றை எலும்பு கூட மிஞ்சாது.. என்ற நினைப்பே பயமுறுத்த.. தலை சுற்ற தொடங்கியது நிகாவுக்கு.
நேற்றுப் போல தன் முரட்டு கரத்தால் அவள் இடையைப் பிடித்து தன்னோடு இழுத்தவன்.. “எப்ப பாரு விழுறதே உனக்கு வேலையா போச்சு.. நான் என்ன ஸ்பைடர்மேனா? நீ விழும் போதெல்லாம் பாஞ்சு பாஞ்சு வந்து பிடிக்க” என்று அவன் கடிய..
அவளும் சற்று நேரத்தில் நேரவிருந்த விபத்தை விபத்து எண்ணி அவள் நடுங்கிப் போய் இருக்க.. தன் இரு கரங்களாலும் அவனது டீசர்ட்டை தான் இறுக்கமாக பற்றி, அவன் மார்பிலேயே கண் மூடி சாய்ந்து இருந்தாள். அவளது இதயமோ அதிவேக ரயிலுக்கு இணையாக அதுவும் தடதடவென்று வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.
கண்கள் இறுக்க மூடி உதடுகள் துடிக்க பயத்தில் வெளிறிய முகத்துடன் தன் மார்பின் மேல் சாய்ந்திருந்தவளை தான் விளங்காத பார்வையுடன் பார்த்தான். பெரும் பருந்திடமிருந்து தப்பித்து வந்து சிறு கோழிக்குஞ்சு போல் நடுங்கிக் கொண்டிருந்த நிகாவை பார்த்ததும் நீரஜின் மனதிற்குள் சம்திங் ஹேப்பெண்ட்… ஆனால் அந்த சம்திங் என்னவென்று அவன் அறிந்து இருப்பானா? இல்லை இந்த சம்திங் ஹேப்பெண்டுக்கு காரணமானவள் தான் வருங்காலத்தில் தனக்கு எவரிதிங் என்று புரிந்து இருப்பானா?
அவள் மனநிலையை மாற்ற வேண்டி மெதுவாக அவள் காதோரம் குனிய.. கற்றை மீசையின் உரசலில் நிகாவின் காதுக்குள் புது ரத்தம் பாய்ந்தது போலவே இருக்க.. சட்டென்று அவள் முகத்தை நிமிர்த்த, அவளின் துடிக்கும் அதரங்கள் குனிந்த ஆணின் முரட்டு அதரங்களுடன் ஒட்டி நின்றது.
பெபிஃகால் இல்லாமலே இறுக்கமாக ஒட்டுக் கொண்ட இரு இதழ்களையும் பிரிக்கும் எண்ணம் இல்லாமல் அவ்விருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வழக்கமாக இதழ்கள் கவ்விக் கொள்ளும் நேரத்தில் கண்களிரண்டும் அந்த சுகத்தில் லயித்து மூடிக்கொண்டோ இல்லை ஒன்றை ஒன்று உரசிக் கொண்டு நிற்கும். ஆனால் இங்கேயோ.. இதழ்கள் இரண்டும் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டு நிற்க.. கண்கள் நான்கும் கவ்விக் கொள்ள, ஒருவரில் ஒருவர் மூழ்கி திளைத்து நின்றிருந்தனர், நேரத்தை அறியாமல்..
இங்கே இதழ்கள் இணைந்தது அறியாமல் கண்கள் வழியே காதல் காவியம் ஒன்று நடந்தேறிக் கொண்டிருந்ததோ?!
அவர்களின் அந்த மோன நிலை எவ்வளவு நேரம் நீடித்ததோ.. காலை நேரத்தில் “சாயா சாயா” என்று ரயில் ஊழியன் ஒருவன் கூவிக் கொண்டே வர.. அந்த சத்தத்தில் இருவரும் தன்னிலை உணர்ந்து ஒருவரையொருவர் பிரிந்து நின்றனர்.
அவன் டீ ஷர்டை இருந்து இவளும் கையெடுத்தாள் இல்லை.. அவள் இடைப்பற்றிய அவன் கரமும் நகரும் எண்ணம் இல்லை..
என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான் என்று தனக்குள்ளே கடிந்து கொண்டு அவள் விலக எத்தனிக்க.. அவளை நகர விடாமல் இடை பிரதேசத்தை ஆக்கிரமித்திருந்த கைகளை பார்த்து அவனை இவள் முறைக்க..
அந்தக் கள்வனோ கீழுதட்டை மடித்து மேற் பற்களால் கடித்தவாறு சிரிக்க.. அவளோ அதை புரியாமல் நோக்க.. அவன் விழி சென்ற இடத்தை பார்த்தவளுக்கு கோபம் போய் கூச்சம் கொண்டது அவளது வதனம்.
அப்பொழுதும் அவள் கைகள் அவனது திண்ணென்ற மார்போடு இணைந்து டீசர்டை தான் மிக இறுக்கமாக பற்றி இருந்தது. அடுத்த நொடி கையை எடுத்தவள் அவனிடமிருந்து விலகி தன் கூபேவை நோக்கி ஓடியே சென்றாள்.
அவள் ஓடியதை கண்டவன் சிறு சிரிப்புடன் தனது இடப்பக்க புருவத்தை நீவி கொண்டே வெளியில் தெரிந்த காட்சிகளை பார்த்துக் கொண்டு நின்றான்.
ராஜஸ்தான் மாநிலம்..
ஆரவல்லி மலைத்தொடர்.. தார் பாலைவனம் என குறிஞ்சி மற்றும் பாலை நிலங்களை தன்னகத்தே கொண்டுள்ளதால்.. இம்மக்கள் வறண்ட நில தாவர திணைகளை பயிரிடுதல் தான் முதன்மை தொழிலாக இருந்தாலும், பகற்சூறையாடுதலும் அன்று முதல் இன்று வரை அங்காங்கே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இம்மக்களின் முக்கிய தொழிலான மூலிகை மருத்துகளை கண்டறிந்து, பயன்களை அறிந்து வழிவழியாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் பெரும்பாலான இடத்தில் இது வழக்கொழிந்து வருகிறது இந்நாளில் புதுப்புது அலோபதிக் மருந்துகளின் தாக்கத்தால்..
ஆங்கிலேயர்கள் படையெடுப்பில் வழக்கொழிந்து போன நம் பாரம்பரியம், தனித்துவம் போல தான் இந்த பாரம்பரிய மூலிகை மருத்துவமும் அதன் மகத்துவமும்.
காலை வேளையில் ராஜஸ்தானின் ஜெய்பூர் ஸ்டேஷனில் இவர்கள் குழு வந்து இறங்க.. சுற்றுமுற்றும் அவ்வூர் மக்களை பார்த்துக் கொண்டிருந்தாள் நிகா.. பலவித மக்கள் பலவிதமான மொழியில் பேசிக் கொண்டிருந்தாலும் அங்கு இராஜஸ்தானி, மார்வாரி, பஞ்சாபி, உருது, ஹிந்தி ஆகியன இங்கு பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழிகள் ஆகும். ஜெய்ப்பூர் இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகும், இவர்களின் முதல் சர்வே இடம். இது சிவப்பு நகரம் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது.
வர்மா’ஸ் குழுவோடு நீரஜூம் சேர்ந்து கொள்ள அங்கிருந்த வண்டியில் அனைவரும் ஏறிக்கொண்டு முன்பதிவு செய்திருந்த ஹோட்டலுக்கு சென்றனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரும் தயாராகி, இவர்கள் சர்வேக்கு என்று தேர்ந்தெடுத்த காலேஜ் மாணவர்கள் குழுமி இருந்த இடத்திற்கு சென்றனர்.
“ஹாய் ஸ்டூடண்ட்ஸ்.. ஐ அம் நீரஜ்.. எம் டி ஆஃப் வர்மா’ஸ் குரூப்ஸ். ஆல்ரெடி உங்க எல்லாருக்கும் நீங்க என்ன மாதிரி சர்வே எடுக்க போறீங்கன்னு சொல்லி இருப்பாங்க.. உங்க பேராசிரியர்கள் எப்படின்னு விளக்கமும் சொல்லி இருப்பாங்க.. நாங்களும் ஒரு ப்ரீப் இன்ட்ரோடெக்சன் கொடுக்கிறோம்” என்று சரளமான ஹிந்தியில் பேசியவன் தன்னருகே நின்றிருந்த நிகாவைப் பார்க்க.. அவன் சொல்ல வந்ததன் அர்த்தம் புரிந்தவள், அவனிடம் தலையசைத்துவிட்டு அங்கு நின்ற மாணவர்கள் முன்னால் பேச தொடங்கினாள்.
“இந்த காலகட்டத்தில் ஏற்படுகிற நிறைய வியாதிகளுக்கு நம்மளோட உணவு வகைகளும் ஒரு காரணம்.. நம்ம முன்னோர்கள் எல்லாம் உணவே மருந்து.. மருந்தே உணவு என்ற கொள்கையை கடைப்பிடித்து வந்தனால அதிக நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ்ந்தாங்க. ஆனா இப்போ இருக்கிற நம்ம ஜன்ரேஷன் அவர்களுடைய பழக்கவழக்கத்தை மறந்துட்டு கானல் நீர் போல இல்லாததை தேடி ஓடி நம்மளோட உடம்பின் ஆரோக்கியத்தை தொலைச்சிட்டு நிற்கிறோம். அவங்க செய்து ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஒரு அறிவியல் சார்ந்த உண்மை கண்டிப்பா இருக்கு. அவங்களோட அந்த டிரடிஷனல் பழக்கவழக்கம்.. உணவுமுறை.. இதனை தெரிந்துக்க தான் ஒரு புது ஆய்வு எங்க கம்பெனி மேற்கொள்து. அதுக்கு பைலட் பேட்ச் உங்க பேட்ச் தான் நாங்க செலக்ட் பண்ணி இருக்கோம். முதல் மாநிலம் ராஜஸ்தான் தான். உங்களோட கோ-ஆப்ரேஷன் எங்களுக்கு ரொம்ப முக்கியம். நீங்க கலெக்ட் பண்ண போற ஒவ்வொரு விஷயத்திலும் உங்களுக்கு பல புதிய தகவல்களும் உண்மைகளும் தெரியவரும். அதை வைத்து உங்களோட பிராஜெக்ட்டை நீங்களும் செய்துக்கலாம். ரெடி கைஸ்” என்று அவர்களை பார்த்து தம்ஸ் போல கைகளை தூக்கி நிகா கேட்க..
அவர்களும் சந்தோஷம் கலந்த ஆர்வத்துடன் ரெடி என்று கூறினர்.
அதற்குப் பின் அங்குள்ள மாணவர்கள் பத்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் தலைவராக இந்த குழுவை சேர்ந்த 10 நபர்கள் நியமிக்கப்பட்டு.. கூடவே அவர்களுக்கு வழிகாட்டி செல்ல ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு கெய்டும், அவர்கள் பாதுகாப்பிற்கு என்று ஒரு செக்யூரிட்டி மொத்தம் 12 பேர் அடங்கிய குழு தயாரானது சர்வேக்கு..
இவர்கள் தயாரித்த வினா மாதிரி அனைவருக்கும் இனிய வழங்கப்பட, அதை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு குழுவும் ஜெய்ப்பூரில் முக்கியமான இடங்களை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கி சென்றனர் சர்வேக்கு.. மாலை குறிப்பிட்ட நேரத்தில் மீண்டும் இதே ஹாலில் கூடிவிட வேண்டும் என்பது அவர்களுக்கு முன்பே கூறி விட்டான் நீரஜ்.
ஒவ்வொரு குழுவுக்கும் முதல் நாள் என்பதால் வாழ்த்தி விடை கொடுத்தவன், நிகாவின் கைகளை சற்று அழுத்தமாகவே பிடித்து குலுக்கி விடுவித்தான். பின் அவனது வேலையாக அவனுக்கு என்று பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட காரில் ஏறிச் சென்றுவிட்டான்.
தன்னுடன் வந்து அந்தப் பத்து மாணவர்களுடன் கலகலப்பாக பேசிக்கொண்டே ஆய்வை நடத்திக் கொண்டிருந்தாள் நிகா. அவர்களின் உற்சாகமான, சந்தோசமான, கலாட்டாவான பேச்சில் அவளுக்கும் தன் கல்லூரி நாட்களுக்கு சென்று விட்டது போன்ற ஒரு உணர்வு வர அவர்களுக்கு ஈடாக இவளும் துள்ளலுடன் நடந்து கொண்டாள்.
எப்போதுமே மாணவர்களுக்கு கண்டிப்பு காட்டும் ஆசிரியர்களை விட இலகுவாக தோழமையாக அதேநேரம் கண்டிப்புடன் பழகும் ஆசிரியர்கள் தான் மிகவும் பிடிக்கும். நிகாவின் இலகுவான அலட்டலில்லாத அணுகுமுறையால் அந்த மாணவர்களும் அவள் எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் ஆகினர்.
முதல்நாள் இவர்கள் ஆய்வு முடித்து மீண்டும் அந்த ஹாலுக்கு வந்து மாணவர்களுக்கு விடை கொடுத்துவிட்டு தங்கள் ஹோட்டலை நோக்கி சென்று விட்டனர். அடுத்து மூன்று நாள் இதே போல ஜெய்ப்பூரின் ஒவ்வொரு இடமாக அந்த குழு சென்று ஆய்வு நடத்தினர். அதில் நகரம் சார்ந்த இடங்கள் மட்டும் அல்லாமல் உள்ளுக்குள் போகும்படியான சில கிராமங்கள் குக்கிராமங்கள் அதில் அடங்கும். முதல் நாள் மட்டுமே நிரஜ் வந்திருந்தான். அதற்கு அடுத்த இரண்டு நாட்களும் இந்தப் பக்கம் கூட வரவில்லை.. இன்றுடன் மூன்று நாட்கள் முடியப்போகிறது. இதற்கு அடுத்து அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்து ஊருக்கு செல்ல வேண்டும்.
மூன்று நாட்கள் தங்களுடன் பழகிய மாணவர்களுக்கு பிரியா விடை கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு தங்கள் அறைக்கு வர, அனைவரையும் அடுத்த அரை மணி நேரத்தில் பார்க்கிங் வருமாறு நீரஜ் இடமிருந்து கட்டளை வந்திருந்தது.
ஏற்கனவே களைப்பில் இருந்தவள் இவன் வேற அடுத்து எங்கோ கூப்பிடுறானோ என்று சலித்தபடியே கிளம்பி கொண்டிருக்க மோனல் முகத்திலும் அதே..
ஒய் பிளட் சேம் பிளட் என்ற நினைத்துக்கொண்டே தயாராகி இவள் வர.. மற்றவர்களும் வர.. இவர்களை சுமந்து கொண்டு சென்ற வண்டி நின்றதை பார்த்தவர்களுக்கு கண்கள் வியப்பில் விரிந்தது.
அது ஜல் மஹால்.. ஜெய்ப்பூர் நகரத்தின் மன் சாகர் ஏரியின் நடுவில் அமைந்த அழகிய அரண்மனை ஆகும். ஜல் மகாலை ஜெய்பூர் இராச்சியமன்னர் இரண்டாம் ஜெய்சிங் 18ம் நூற்றாண்டில் நிறுவினார்.
ஜல் என்றால் நீர் என்பது பொருள்.. இது நீர் அரண்மனை என்றும் அங்குள்ள மக்களால் அழைக்கப்படுகிறது. ஏரிக்கு நடுவே ஐந்து அடுக்குகளைக் கொண்டு அலங்கார விளக்குகளால் ஜொலித்தப்படி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தது அந்த ஜல் மஹால்..
அனைவரும் கரையில் இருந்தபடி அந்த ஜல் மஹாலின் அழகை ரசித்து தங்களுக்குள் பாராட்டி புகழ்ந்து கொண்டே.. தங்கள் செல்போனில் பதிவு செய்து கொண்டிருக்க.. “ஹாய் கைஸ்” என்று வசீகர சிரிப்புடன் அங்கே வந்தான் நீரஜ்..
எதற்கு இங்கே அழைத்து வந்து இருக்கிறான் என்று புரியாமல் அவர்கள் அனைவரும் ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டிருக்க.. “இந்த மூணு நாள் நீங்க செஞ்ச கடின உழைப்புக்காக ஒரு சின்ன ட்ரீட் உங்களுக்காக.. இந்த அழகிய ஜல் மஹால் அருகே டின்னர் ஏற்பாடு பண்ணி இருக்கேன்” என்று கூறி அவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினான்.
‘நல்லவேளை டின்னர் மட்டும் சொன்னான். நீங்க எடுத்த சர்வே லிஸ்ட் எல்லாம் கொடுங்க.. அதுல இதுவரை என்ன செய்து இருக்கீங்க என்று தோண்டி துரிவாமல் இருந்தானே’ என்று அங்குள்ள அனைவருமே ஒருவித நிம்மதியோடு ஜல் மஹால் எதிரே உள்ள ரெஸ்டாரண்டில் இவர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.
அங்கிருந்து அந்த அழகிய நிலவொளியில் அலங்கார விளக்குகளால் ஜொலிக்கும் அந்த நீர் அரண்மனையை பார்த்தவாரே இவர்களது இரவு விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.
நீரஜ் முதன்மையாக அமர்ந்திருக்க அவனை சுற்றி மற்ற இரு பக்கமும் ஐந்து பேராக அமர்ந்து உணவை உண்டு கொண்டிருந்தனர். நீரஜ் அருகில் லலித்.. ரவி அடுத்தது நிகா அமர்ந்திருக்க.. இங்கிருந்தபடியே நிகாவை பார்த்து இவன் சர்வே பற்றிய சில கேள்விகளை கேட்க..
அங்கிருந்து எட்டி எட்டி இவனுடைய ஒவ்வொரு கேள்விகளுக்கும் அவள் பதில் அளிக்க.. சட்டென்று லலித் சிங்கை இவன் பார்த்தான். அவன் பார்வை பொருளுணர்ந்து லலித் எழுந்து நிகாவின் இடத்தில் அமர்ந்து கொண்டு அவளை நீரஜ் அருகில் அமர வைத்தான்.
“அப்புறம்.. அன்னைக்கு ஓடிட்ட.. கண்டுபிடிச்சிட்டியா இல்லையா?” என்று அதுவரை ஹிந்தியில் பொதுவாக பேசிக் கொண்டிருந்தவன் அவளருகே அமர்ந்ததும் தமிழுக்கு மாற..
அவனின் இந்த அதீத ஒருமையில், உரிமையில் இவள் முறைத்து பார்க்க… “ராஜஸ்தான் ஒரே ஹாட்டா இருக்கு இல்ல கைய்ஸ்” என்று அங்கே இல்லாத வெப்பத்தை இவன் கூற, மற்றவர்கள் ஒன்றும் புரியவில்லை என்றாலும் ஆமாம் என்று தலையை ஆட்டி வைத்தனர்.
செம்மறி ஆட்டுக் கூட்டம் என்று அவர்களை திட்டியவள்.. நீரஜை திரும்பி பார்த்து “நீங்க உங்க எல்லைய மீறுறீங்க” என்று கண்களில் அனல் கக்க முகத்தில் புன்னகை தவழ கூறியவள் எழுந்து செல்ல முயல.. அவள் எழ முடியாதபடி அவளது கைகளை இருக்கப் பிடித்து இருந்தான் யாரும் அறியாவண்ணம் மேஜைக்கு அடியில்..
அவள் சுற்றும் முற்றும் பார்த்து மற்றவர்கள் அனைவரும் சாப்பாட்டிலும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க..
“என்னை ஜெயிக்க உன்னால் முடியாது.. என்னை மீறி செல்லவே முடியாது!!” என்று கண்களில் அவன் செய்தி கூற..
அடுத்த கணம் “மோனல் அந்த சாலட்டை என் பக்கம் தள்ளுங்க” என்றவாறு அவள் எழ சட்டென்று அவளது கையை விட்டவனை பார்த்து புருவத்தை உயர்த்தினாள் நிகா..
இவர்கள் தங்களுக்குள் காதலா? மோதலா? என்று தெரியாமல் ஒரு யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்க…
இவர்கள் அறியாமல், இவர்களை தாக்க ஒரு குழு முன்னரே ராஜஸ்தான் வந்து வேட்டை நாயாக இவர்களை தொடர்ந்து கொண்டிருந்தது.
சற்றுமுன் மோனலிடம் கேட்ட சாலட்டை சுவைத்துக் கொண்டிருந்தாள் ஒரு வெற்றிப் பார்வையுடன் நீரஜை நோக்கி.. அடுத்த கணம் அவன் மேலே சரிந்து விழுந்தாள்..
கைப்பற்றுவானா…
