கைத்தலம் பற்றவா கண்மணி

This entry is part 23 of 23 in the series கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

கைத்தலம் பற்றவா கண்மணி

22

கைத்தலம் பற்றவா கண்மணி
ஜியா ஜானவி ❤️
நீரஜ் ஜித்தேஷ் வர்மா வெட்ஸ் மித்ரநிவனிகா
“வர்மா’ஸ் குரூப் வெல்கம் யூ” என்று மிகப் பெரிய பேனர்கள் ஆங்காங்கே நீரஜ் மற்றும் நிகாவின் உருவப்படங்கள் தாங்கிக்கொண்டு அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தது.
அவர்களின் கேரள பாரம்பரிய வகையில் திருமண சாங்கியங்கள் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வெண்ணிற பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக தேஜஸூடன் அக்கால ராஜனோ என்று வியக்கும் வகையில் நீரஜ் மணமேடையில் அமர்ந்து இருக்க.. அவனுக்கும் சற்றும் குறையாத அழகுடன் தேவதையென அன்னநடையிட்டு வந்தவளை அங்குள்ளவர்கள் அனைவரும் அருமையான ஜோடி என்று பாராட்ட.. நீரஜோ வெண்ணிறப் பட்டில் அதற்கு ஏற்றவாறு வெண்ணிற மல்லிகை சூடி.. கேரள ஆண்டிக் டிசைன் நகைகள் பூண்டு அளவான ஒப்பனையுடன் அப்சரஸாய் வரும் தன்னவளைத்தான் விழி தட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
ராஜூவ் வர்மாவும் மோகினியும் விருந்தினர்களை வரவேற்று உபசரித்தவாரே அவ்வப்போது மணமேடையில் உள்ள தங்கள் பையனை பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.
“ஏட்டா.. மோனன்ட வதனத்தில் என்ன ஒரு சந்தோஷம் பார்த்திங்களா… இதே நீங்க பார்த்த பணக்கார பொண்ணா இருந்தா இவ்வளவு சந்தோஷம் கண்டிப்பா இருக்கவே இருக்காது.. ஏன் நீங்களும் என்னை லவ் பண்ணி தானே கல்யாணம் பண்ணுனீங்க உங்களுக்கு தெரியாதா என்ன?” என்று கணவனிடம் கூற..
மகனின் மகிழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பவருக்கு மனைவியின் வாக்கு உண்மை என்று தோன்றினாலும் அதை ஒத்துக்கொள்ள அவரது கௌரவம் குடும்ப பாரம்பரியம் மறுத்தது. அதே நேரம் மனைவி சொன்ன நீங்களும் லவ் தானே செய்து என்னை திருமணம் செய்தீர்கள் என்ற வார்த்தை அவருக்கு உள்ளுக்குள் நெருடியது.. ‘ஒருவேளை இவளும் தன் அத்தை பெண்ணாக இல்லாமல் போயிருந்தால் நாமும் இவ்வாறு தானே தன் தந்தையை எதிர்த்து திருமணம் செய்திருப்போம்’ என்று நினைத்தவர் மனைவியை பார்க்க.. அவரின் எண்ணவோட்டத்தை படித்தவர் “உங்க பிள்ளையும் உங்கள மாதிரிதான் பிடிவாதத்தில்.. ஆளுமையில்” என்று சத்தமாக கூறியவர், அவர்‌ அருகில் நெருங்கி “பாரியாள் மேலே காதலில்” என்றார் வெட்கத்துடன்.. முப்பாதாண்டு கால வாழ்வு என்னதான் ஈர் உடல் ஓர் உயிராக வாழ்ந்தாலும் மனைவியின் மேல் அவர் வைத்துள்ள அந்த காதல் இன்றும் சற்றும் குறைவில்லாதை தன் மனைவி வாயால் கேட்க, அவருக்கு சற்று கர்வம் பொங்க.. தன் மீசையை நன்றாக முறுக்கி விட்டுக் கொண்டு ஒரு கையால் மனைவியை அணைத்தவாறே மகனைப் பார்த்தார்.
அவனும் அருகில் அமர்ந்திருந்த தன் காதல் கிழத்தியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
முதல் இருக்கையில் அமர்ந்து வானதி பெண்ணின் மணக்கோலத்தை மனநிறைவுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
பெண்ணின் தோழியாகவும் மாப்பிள்ளையின் தங்கையாகவும் அங்கே நடந்த அனைத்து சடங்குகளிலும் பங்கேற்றாள் சுபாங்கி.
மங்கல வாத்தியங்கள் முழங்க அனைவரின் ஆசீர்வாதத்தோடு தன் காதல் பைங்கிளியை முறையாக அனைவர் முன்னிலையிலும் தன் சமதர்ம பத்தினியாக மங்கல நாணை பூட்டி ஏற்றுக்கொண்டான் நீரஜ். மங்கல நாணை அவள் அருகே எடுத்து சென்றவன் அவளை பார்க்க.. அவனை புரிந்தவள் போல அவளும் நிமிர்ந்து பார்க்க அவள் கண்களை பார்த்துக்கொண்டே பூட்டினான் நீரஜ் நிகாவின் சங்கு கழுத்தில். பின் தன் கையை அவள் புறமாக நீட்ட அவனின் கைத்தலம் பற்றினாள் காரிகை.. நீரஜின் கண்மணி..
மணமக்கள் அங்குள்ளவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க.. என்னதான் பிடிக்கவில்லை என்றாலும் மகன் நலமுடன் வாழ வாழ்த்தினார் ராஜூவ் வர்மா தன் மனைவியுடன்.. வானதி இருவரையும் வாழ்த்தி நெற்றியில் முத்தமிட்டு மகளை அணைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
அதன் பிறகு விருந்தினர்கள் விருந்து.. நண்பர்களின் கேலி கொண்டாட்டங்கள் என்று நேரம் கடந்து கொண்டே செல்ல.. பின் மணமக்கள் இருவரையும் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்று மற்ற சடங்குகளையும் செய்தனர்.
இரவுக்காக ஒருவித பயம் கலந்த எதிர்பார்ப்போடு இருந்தாள் நிகா. அவளின் படபடப்பை. அடிக்கடி நகத்தை கடித்துக் கொள்வதை.. புது பெண்களுக்கு ஆன அந்த டென்ஷனை கண்டுகொண்ட சுகி “என்ன நிகா பபிள்கம் வேணுமா?” என்று கேலியாக கேட்க.. அவளோ போடி என்றாள்.
“ஆமாமில்ல.. இனிமே பபிள்கம் எல்லாம் தேவைப்படாது இல்லை” என்று கூறி அவள் கண்ணடிக்க.. உதட்டை கடித்துக்கொண்டு வெட்கமாக சிரிக்கும் இந்த நிகா சுகிக்கு புதியவள்..
“ஏய் நீயா வெட்கப்பட்ட.. ஐயோ ஐயோ இந்த அரிய காட்சியை பார்க்க இப்ப எங்க அண்ணன் கூட இல்லையே.. நான் என்ன செய்வேன்? என்ன செய்வேன்? சொக்கா!! சொக்கா!!” என்று அவள் நாகேஷ் மாதிரி புலம்ப.. அதில் சிரித்த நிகா போக்கிரி என்று அவள் முதுகில் செல்லமாக அடித்தாள்.
“இப்போ டென்ஷன் எல்லாம் குறைந்து விட்டதா?” என்று சுகி கேட்க. மெல்ல தலையசைத்தாள் நிகா. 
“இது எல்லாருக்கும் வர டென்ஷன் தானே நீ ஒன்னும் பீல் பண்ணாத அண்ணா உன்னை பத்திரமா பாத்துப்பாங்க” என்று அவள் கூற நிகாவுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. சுகி இவர்கள் இருவரும் முதலிரவை கழிக்க இருப்பதாக நினைத்துக் கொள்ள.. அவர்களுக்கு இது இரண்டாவது இரவு அல்லவா!! ஆனால் அந்த முதல் உறவு.. முதல் இரவு அவர்களுக்கு இடையே உள்ள ரகசியம்!! அந்தரங்கம்!! அதை தோழியே ஆனாலும் அவளிடம் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை நிகா..
அதன் பின் சுகி அவளுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றுவிட மோகினி அழைக்க வந்தார் நிகாவை. வெளியே நீரஜ் நின்று கொண்டிருக்க என்ன இது புரியாமல் இவள் பார்க்க.. “உங்க ஹனிமூன் நம்ம பூர்வீக வீட்டுல” என்று கூறிய மோகினி அவளை கட்டி அணைத்து விடை கொடுத்தார். கண்களாலேயே பெற்றோரிடம் வெற்றி பெற்றவன் அடுத்த நொடி அவளை அழைத்துக் கொண்டு அவர்கள் கெஸ்ட் ஹவுஸ் நோக்கி பறந்தான் காரில்.
இறைவனின் இனிய இல்லம் என்று அழைக்கப்படும் கேரளாவின் அழகை சொல்ல வார்த்தைகளும் வேண்டுமா என்ன!! அதிலும் அவர்களுக்கு சொந்தமான அந்த கெஸ்ட் ஹவுஸ் இருந்த இடமோ மலைப்பாங்கான பகுதி.. சுற்றிலும் பசுமை தோல் போர்த்திய மலைகள் ஆங்காங்கே அழகுடன் வீற்றிருக்க காண காண தெவிட்டவில்லை கன்னியவளுக்கு..
“நீரஜ் இந்த இடம் ரொம்ப சூப்பரா இருக்கு பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே” என்று அழகில் லயித்து இவள் கூற..
அவனோ இவள் அழகை ரசித்துக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
அவர்கள் கெஸ்ட் ஹவுஸ் வந்துவிட அங்கே இவர்களுக்கான அறைக்கு சென்றவன், அடுத்த நொடி அவளை தன் கையிலும் அவளது கோவை செவ்விதழ்களை தன் இதழ்களுக்கும் சிறை படுத்திருந்தான்.
“விடுங்க நீரஜ்.. ” என்று சபக் என்ற சத்தத்துடன் அவளது உதடுகளை அவனிடம் இருந்து பிரித்து எடுத்தவள்.. அவனை சற்று தள்ளி நிறுத்தி தன் கைகள் இரண்டையும் மேல் உயர்த்தி சோம்பல் முறித்தாள். “நேற்றிலிருந்து பயங்கர டயர்டா இருக்கு நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க போறேன்” என்று அவள் கூற..
“என்னது ரெஸ்ட் ஆ? அதுவும் நாம ஓவர் டைம் பார்க்க வேண்டிய நேரத்துல ரெஸ்ட் பத்தி பேசவே கூடாது கண்ணம்மா” என்றவன் அவளை இடையோடு அணைத்தான்.
அடுத்த நொடி அவளை கைகளில் ஏந்தி மஞ்சத்தில் சரிக்க.. அங்கே மெத்தையில் அவனின் வெம்மையான தொடுதலிலும்.. உஷ்ண மூச்சு காற்றிலும்
மெழுகாய் அவள் கரைந்திட.. அந்தக் கணத்தின் ஏகாந்தத்தை இருவருமே கண்களை மூடி அனுபவித்தனர். சிறுசிறு தீண்டல்கள் கொஞ்சல்கள் என்று கூடலில்லா கூடலாக அது முடிய அவளை அணைத்தவாறே படுத்து இருந்தான் நீரஜ்.
அவள் கேட்ட அந்த சிறு ஓய்வு அளித்தவன் அடுத்த நொடி அவளை அவர்கள் கெஸ்ட் ஹவுஸின் பின்புறம் அழைத்து வந்தான்.
“எங்க கூட்டிட்டு போறிங்க நீரஜ்?” என்று சுற்றுப்புறம் அந்த ஏகாந்த தனிமையையும் இயற்கையின் அழகையும் ரசித்துக்கொண்டே அவன் முழங்கையோடு தன் கையை கோர்த்துக்கொண்டு அவன் தோள்களில் தன் தலையை சாய்த்துக் கொண்டு நடந்து வந்தாள் மாது.
அப்போது சலசலவென்று நீர் ஓடும் ஓசையும் ச்ச்சோ என்று நீர் விழும் பெரும் சத்தமும்‌ கேட்க சுற்றும் முற்றும் பார்த்தாள். அருகே இருந்த நீர்வீழ்ச்சியை கண்டு வியப்படைந்தாள். நீர்வீழ்ச்சியா? அருவியா? இங்கேயா? பொதுவாக எல்லோரும் பயன்படுத்தும் இடத்திலிருந்து பார்த்தவளுக்கு.. இவர்கள் வீட்டுக்கு என்று தனியாக இருக்கும் இந்த நீர்வீழ்ச்சி கண்டு ஆச்சரியத்துடன் நீரஜை பார்க்க.. 
“இது என் தாத்தாவுக்கு தாத்தா கட்டின வீடு.. அதை இப்ப நாங்க கொஞ்சம் மாற்றி அமைத்து இருக்கும்.. இந்த நீர்வீழ்ச்சி பார்த்து தான் இங்கே இந்த வீட்டை அவர் கட்டினார்” என்று நீரஜ் விளக்கம் கூற..
அவளோ வெள்ளியை கரைத்து ஊற்றியது போல மேலிருந்து கீழாக கொட்டும் அந்த நீர்வீழ்ச்சியை தான் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னால் வந்து அவளை இடையோடு இறுக்க அணைத்துக் கொண்டவள் அவள் தோளில் தன் தாடையை பிடித்து.. “பிடிச்சிருக்கா?” என்று அவள் காது உரசி காது மடலை கவ்வி கேட்க..
அதற்கு கிறங்கியவள் “ரொம்ப” என்றாள்.
“எது? நானா? அருவியா?” என்று கேட்க..
“இரண்டுமே” என்றவள் அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
“குளிப்போமா?” என்று அவன் கேட்க..
“இங்கேயா? இப்ப வா?” என்று சுற்றுமுற்றும் அவள் பார்க்க..
“இங்கே நம்மைத் தவிர யாரும் வரமாட்டாங்க.. வா போகலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு சில்லென்று இருக்கும் அந்த நீரில் இறங்கினான்.
நீரின் குளுமை அவளுக்கு வெட வெடக்க தன்னவனை இறுக அணைத்துக் கொண்டாள்.‌ “ஃபர்ஸ்ட் கொஞ்ச நேரம் ஜில்லென குளிரதான் செய்யும்.. அப்புறம் போகப் போக குளிர் எல்லாம் போக இதமா சுகமாய் இருக்கும்” என்று அவன் இரட்டை அர்த்தங்களில் பேச.. அவன் எதை குறிப்பிடுகிறான் என்று புரியாதவள் அல்லவே அவள்..
“யூ நாட்டி” என்று அடுத்த நிமிடம் அவனை அந்த தண்ணீருக்குள் அவள் தள்ளிவிட..
தண்ணீரில் ஒரு முக்கு முக்கி எழுந்தவன் அவளை அவளை நோக்கி தண்ணீரை வாரி இறைத்தான் கைகளால்..
அவளோ “நோ.. நீரு” என்று கூறிக்கொண்டே பின்னால் செல்ல.. 
“அது எப்படி டி என்னை நனைய வச்சுட்டு நீ மட்டும் நனையாமல் இருந்தா நல்லாவா இருக்கும்?” என்றவன் இரண்டே எட்டில் அவளைப் படித்து அவளுடன் அந்த நீரில் நீந்தினான். நிகாவுக்கு நீரஜ் அளவிற்கு லாவகமாக நீந்த எல்லாம் வராது. ஏதோ மூழ்காமல் தப்பிப்பதற்கு மட்டும் அறிந்து வைத்திருந்தாள்.
அவளை நீந்தியபடி அணைத்து கொண்டே கொட்டும் அருவியின் அருகில் அழைத்து சென்றான். ஆர்ப்பரித்து கொட்டும் நீருக்கு அடியில் தன்னவளை அணைத்துக் கொண்டு சிறிது நேரம் நின்று இருக்க.. அதற்குள் நிகாவுக்கு குளிர் எல்லாம் பறந்திருந்தது. அவளும் அந்த அருவி போல ஆர்ப்பரித்து 
துள்ளி துள்ளி விளையாட.. அதில் அவள் அங்கங்களின் துள்ளல்களில் காதல் மூழ்கி மோகம் பிறந்தது நீரஜிற்கு.
உடலை ஒட்டிய அவளின் டாப்சும்.. லெகின்ஸூம் அவளின் உடல் அங்கங்களை அவனுக்கு படையலிட்டு காட்ட.. நேற்று சாப்பிட்ட அவசர உணவை.. இன்று மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிட அவளை நெருங்கினான் நீரஜ்.
கோமகன் அவனின் நெருக்கத்தில் கோதை அவள் வெட்கத்தில் தலை குனிய.. ஒற்றை விரல் கொண்டு அவள் முகத்தை நிமிர்த்தினான். அப்பொழுது அருவியில் இருந்து அவள் முகத்தில் வழிந்த நீர் அவள் ஆடைக்குள் சரண் புக.. அதைக் கண்டவன் உள்ளமோ நீர்த் துளியாக மாறுவதை எண்ணம் கொண்டு அதை செயல் படுத்த தொடங்கினான். 
அவளின் அங்கங்களுக்கு அதிக பாரமாய் இருந்த ஆடைகளை அகற்றிட.. 
அங்கே பல்லவன் சிற்பமாய் அவள் மிளிரந்திட..  
நீரஜூம் அந்த அழகிய சிற்பத்தை செதுக்கும் சிற்பியாய் மாறிட..
இந்த சிற்பத்தை செதுக்கும் ஆயுதங்களாக அவனது விரல்களும் அதரங்களும் சென்றிட..
நீர்வீழ்ச்சியின் நீரோ இவர்கள் இருவருக்கும் புகுந்து ஓடிட..
அந்நீரை கண்ணன் அவனோ தன் நாவினால் சுவைத்திட..
காரிகையவளோ மன்னவனின் விளையாட்டில் கண்கள் மயங்கி கிறங்கிட..
அவள் இடைப்பற்றி இன்னும் இறுக்கமாக தன்னுடன் அவன் அணைத்திட..
அங்கே மோக ராகங்கள் தாப ஸ்வரங்களுக்குள் இசைத்திட..
மெல்ல மெல்ல அவளது பெண்மை மலர்ந்திட..
மன்னவன் ஆளுமையில் மங்கையவள் முயங்கி தள்ளாடிட..
கோமகன் காதலாட.. காதலாட..
கோதையவள் அதில் உணர்வுகள் எல்லாம் உச்சமாகி ஆனந்த கூச்சலிட..
அங்கே அழகிய தாம்பத்தியம் அரங்கேறியது.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தன்னவனை இரு கைகளாலும் அழுத்தமாக பிணைத்துக் கொண்டாள் நிகா. அவள் முகமும் அவர் மார்பின் ஓரம் சாய்ந்து கண்கள் மூடி இருக்க.. ஆனால் அவள் முகத்தில் பூரணத்துவம் மின்னியது. அதைக் கண்ட நீரஜ் கர்வ புன்னகையுடன் அவளது நெற்றியில் இதழ் பதித்தான்.
“இப்படி ஒரு ஃபர்ஸ்ட் நைட் யாருமே கொண்டிருக்க மாட்டாங்க?” என்று அவள் கூற..
“மிஸஸ் நீரஜ்.. ஒரு சின்ன திருத்தம் ஃபர்ஸ்ட் நைட் இல்ல செகண்ட் நைட்” என்று கூறியவனின் மார்பில் கடித்து வைத்தாள் கள்ளி..
“எனக்கு எப்பவும் வாங்கியதை வைச்சிக்கிற பழக்கமே இல்லை” என்று கூற முதலில் புரியாமல் விழித்தவள்.. அதன்பின் புரிந்தவுடன் “நோ.. நோ” என்று அவனை விட்டு விலகி ஓட எத்தனைக்க, அதற்குள் அவனது எண்ணத்தை செயலாக்கி இருந்தான் அந்தக் கள்வன்.
அதன் பின் அவளை தன் கைகளில் தூக்கிக் கொண்டு சென்றவனின் அதரங்களோ அவளது மது கிண்ணங்களில் இருந்து சற்றும் பிரியவில்லை. அங்கிருந்து புல்வெளியில் அவளை கிடத்தியவன் அருவிக்குள் நடத்திய அரங்கேற்றத்தை அங்கேயும் தொடங்க.. குளிரில்‌ விறைத்த அவளது தேகத்திற்கு சுடு போர்வையாக அவன் மாற… பெண்ணின் உடம்பில் உதடுகள் கொண்டு முத்தக் கோலம் போட்டான். மிக மிக சூடாக இறங்கியது அவனின் முத்தத்தின் ஈரம்.. குளிருக்கு இதமாய்.. பெண்ணவளின் முனகல் எல்லாம் ஆணவனுக்கு கிளர்ச்சி கூட்ட.. மென்மையாய் தொடங்கி வன்மையாக மாறிய கூடல் அரங்கேற்றதிலும்.. மோகன சினுங்கல்களிலும் அந்த இயற்கையையே வெட்கத்தில் ஆழ்த்தியது.
ஒரு வாரம் அவர்களின் தனிமையிலும்.. இனிமையிலும்.. மோகத்திலும்.. தாபத்திலும் காதலிலும் கரைந்து போக.. மும்பைக்கு சென்றனர் அந்த இளம் தம்பதிகள் வரவேற்புக்காக..
அரபிக் கடலோரம் இருந்த அந்த அழகிய ஹோட்டலின் கார்டன் பகுதியில் தான் இவர்களுக்கான வரவேற்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. தொழிற்முறையில் அனைவரும் அந்த வரவேற்புக்கு வந்திருந்தனர்.. சந்தோஷ் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் எப்படியும் நீரஜூடன் அவரது தொழில் நடக்கப்போகிறது என்பதை நினைத்து சந்தோஷமே..
முதலிலேயே சென்று வாழ்த்தி விட்டு வந்தவர் அருகிருந்த மற்ற நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.. 
அந்த திருமணத்திற்கு நித்தீஷ் தன்னுடைய மனைவியுடன் வந்திருந்தான். கூடவே அவனது தந்தையுமான ராஜேஷ் கபூர்.
“இந்த பொண்ணு உங்க கம்பெனியில வேலை பார்த்த பொண்ணு தானே சார்?” என்று யாரோ ஒருவர் சந்தோஷிடம் கேட்க..
“ஆமாம் சார்.. ஆனா செம டேலன்டான பொண்ணு சார்.. பாருங்க இல்லேன்னா அந்த ஹீமோபிலியாவுக்கு மருந்து கண்டுபிடித்து இருப்பாளா!!” என்று புகழ்ந்தார்.
“வாவ் கிரேட்!!” என்று அருகில் இருந்தவர்கள் எல்லாம் பாராட்ட.. 
“என்ன இருந்தாலும் அவள் நம்ம லெவலுக்கு எல்லாம் வர முடியுமா?” என்று நித்திஷின் தந்தை ராஜேஷ் கூற..
“என்னது நம்ம லெவலா? நம்மைவிட வேற‌ லெவல் நிகா” என்றார் சந்தோஷ்.
“நீரஜை கல்யாணம் பண்ணியதை வச்சு நீங்க சொல்றீங்களா?” என்று அவர் இன்னும் அவளை மட்டம் தட்ட..
“நீரஜிக்கே கொடுக்கும் அளவுக்கு அவள் நிலை உயரும். ஏன்னா.. இப்பவே பல பல நாட்டில் உள்ள பெரிய மருந்து கம்பெனிகள் நிகா கண்டுபிடிப்பை வாங்குறதுக்கு ரெடியா இருக்காங்க.. கூடவே இந்த பேட்டன்ட் அவளுக்கு கிடைத்து விட்டால் ராயல்டியை பணம் வந்து கொண்டே இருக்கும் அவளுக்கு.. என்னதான் பணம் மட்டும் நம்மகிட்ட இருந்தாலும் இந்த மாதிரி பெயர் புகழ் எல்லாம் சான்ஸே கிடையாது.. நீரஜ் ஜி ரொம்ப கொடுத்துவைத்தவர்” என்று சந்தோஷ் கூற மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.
நித்திஷோ தன் தந்தையை முறைத்து பார்த்தான் உங்களால் தான் எல்லாம் என்று!!
தாம் கல்லென்று தூக்கி போட்டவள் வைரக்கல் என்று தாமதமாகத்தான் உணர்ந்தார் ராஜேஷ் கபூர்..
வந்தவர்கள் அனைவரும் மணமக்களை பாராட்டி பரிசுகளை கொடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தவாறு சென்று கொண்டிருக்க அடுத்து மேடை ஏறியது ராஜேஷ் கபூரும் அவரது குடும்பமும்..
தன் காதல் கணவனுடனான நிறைவான காதலிலும் குடும்ப வாழ்விலும் இன்னும் தேஜஸ் கூடி கண்களைப் பறித்தாள் நிகா.. 
அன்று நித்திஷின் திருமணத்தின் போது அவன் சொன்ன அதே அபிஷியல் பிரண்டை இப்போது தன் கணவனிடம் கூறினாள் எந்தவித சங்கடமும் சஞ்சலமும் இல்லாமல் புன்னகை முகமாக..
ஆனால் ராஜேஷ் கபூரோ நீரஜை முறைத்த வண்ணமே நின்றிருந்தார். அவனோ அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் தன்னருகே இருந்த உதவியாளரை அழைத்து அவர்களின் கவனிக்குமாறு கீழே அனுப்பி வைத்தான்.
அதன்பின் மணமக்களுக்கு சற்று ஓய்வு கொடுக்க சுகி தன் கையிலிருந்த குளிர்பானத்தை அவளிடம் கொடுத்து குடிக்கச் சொல்லி கொண்டிருந்தாள். நீரஜிற்கு போன் வர அதை எடுத்து கொண்டு அருகில் சென்று பேசிக் கொண்டிருக்க அப்போது அவன் அருகில் வந்தார் ராஜேஷ் கபூர்.
“அன்று நீ ஏன் அப்படி சொன்னீங்க நீரஜ்?” என்று அவர் கேட்க..
“என்ன சொன்னேன்” என்றான் தோளை குலுக்கியவாறு..
“என் பையனுக்கு நவீந்தர் ஷர்மா பொண்ணு ப்ரபோசல் பண்றார் எங்க ரெண்டு பேரையும் சம்பந்தப்படுத்த சொன்னது நீங்கதான்.. அப்பவே என் பையனும் அந்த பொண்ணும் காதலிச்சது உங்களுக்கு தெரிஞ்சு தான் இப்படி பண்ணுனீங்களா?” என்று அவர் கோபமாக கேட்க..
கடகடவென்று சிரித்தான் நீரஜ். “இது என்ன அநியாயமா இருக்கு.. நவீந்தர் ஷர்மாவோட புரோபோசல் வந்தது அது உங்க கிட்ட சொன்னேன்.. அவரோட ஹோட்டல்கள் எல்லாம் எங்க எஸ்டேட்டில் இருந்து டீதூள் சப்ளை ஆகுது. அந்த முறையில் அவர் எனக்கு பழக்கம்.. நீங்க தானே விருப்பப்பட்டு உங்க பையனுக்கு பெரிய இடம் தான் வேணும்னு அந்த பொண்ணை கட்டி வச்சீங்க.. இப்போ வந்து இப்படியும் பழி சொல்றீங்களே சார்” என்று இலகுவாக கூறியவன் அவர் அருகே நெருங்கி நின்று.. “சீ இஸ் மைன். மிஸஸ் நீரஜ்” என்று அழுத்தமாகக் கூற அவரும் அந்த இடத்தை விட்டு உடனே அகன்றார்.
அன்றிரவு அவர்கள் அறைக்குள் அவன் நுழைய அவன் மனைவியோ முகம் சிவக்க வடநாட்டு காளியாய் அவதாரம் எடுத்து இருந்தாள்.
“கண்ணம்மா” என்று இவன் அழைக்க..
“நித்தீஷ் என்ன லவ் பண்றது தெரிஞ்சுதான் நீங்க அவனுக்கு வேறு இடத்தில் கல்யாணம் ஏற்பாடு செய்தீர்களா?” என்று அவள் கேட்க..
“ஆமாம்.. தெரியும் தெரிஞ்சுதான் செய்தேன்” என்றான் நிமிர்வாக.. திமிராக..
“ஏன்?” என்று அவள் கேட்க..
“உன்னை முதன் முதல்ல ஒரு மீட்டிங்ல பார்த்தேன். அப்போதிலிருந்து நீ இங்க தான்” என்று தன் இதயத்தைத் தொட்டுக் காட்டினான். “ஆனா கொஞ்சநாள்ல நீயும் நித்திஷூம் கல்யாணம் பண்ணிக்க போற விஷயம் என் காதுக்கு எட்டியது. அவன் உன்னை விரும்புவதை விட அவங்க அப்பா பணத்தையும் கம்பெனியும் தான் ஜாஸ்தியா விரும்பினான். அதுதான் லைட்டா விஷயத்தை மட்டும் சொன்னேன்.. அவங்க அப்பாவே எல்லாத்தையும் முடித்து விட்டார். அன்னைக்கு அவன் ரிசப்ஷனில் உன்னை பார்த்துக்கிட்டே தான் இருந்தேன். நீ ஏதாவது பீல் பண்றியானு? ஆனா நீ எதோ குழப்பத்துல என் வண்டியிலேயே ஆக்சிடெண்ட் ஆனது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அதுக்கு அப்புறம் தான் தெரிந்தது நீ அவனை காதலிக்கல அவன் தான் உனக்கு கல்யாண புரோபோசல் கொடுத்தான்.. அதான் அவனை பத்தி ரொம்ப யோசிக்க விடாம அவசரமாக உங்க சப்ப கம்பெனி கூட‌ எல்லாம் டீல் போட்டு உன்னை என் இடத்துக்கு வர வைச்சு.. உன் ஆராய்ச்சி மூளைக்கு தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டே இருந்தேன்.
கூடவே என் காதலையும் உன்னில் கொண்டு வந்தேன்” என்று அவன் காதலோடு‌ கூற..
“மாஸ்டர் பிளான்” என்று அவள் வாய் பிளந்து நிற்க.. அதை தன் இதழ் கொண்டு‌ அடைந்தான். தனக்காக.. தன் மீது உள்ள காதலுக்காக அவன் செய்திருந்த வேலைகள் கேட்டவள் பாய்ந்து அணைத்து இருந்தாள் மாயவனை.
இரண்டு ஆண்டுகள் கழித்து..
மித்ரன் மெமோரியல் ஹாஸ்பிடல்.. இந்த ஹாஸ்பிடலை இப்போதுள்ள மும்பை முதலமைச்சர் திறந்து வைக்க அருகில் தங்கள் ஒரு வயது மகன் மித்ரேஷ் வர்மாவுடன் நின்று கொண்டிருந்தனர் இந்த அழகிய தம்பதி.. கூடவே ராஜூவ், மோகினி, வானதி, சுகி அவளின்‌ கணவன் வைபவ்.
நிகா கண்டுபிடித்த மருந்து அவள் பெயரில் பேடண்ட் வாங்கி விட அதில் வந்த ராயல்டி பணத்தில் மித்ரன் பெயரில் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து இருந்தனர். 
இலவசம் என்று கூறினால் அதற்கு மதிப்பில்லாதது போகும்‌ என்று உணர்ந்து, குறைந்த செலவில் தரமான மருத்துவத்தை தரவே இந்த மருத்துவமனையை கட்டியிருந்தனர் இந்த தம்பதி..
இப்போது நிகா தன்னுடைய ஆராய்ச்சியில் மட்டுமல்லாமல் இந்தியாவில் டிரக் கண்ட்ரோல் அதிகாரிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டு இருந்தாள். உயிர் காக்கும் மருந்துகள் அனைத்தும் இவர்களின் கட்டுப்பாட்டில் கீழ் தரமானவை என சான்று அளித்த பின்னரே அவை சந்தைக்குள் செல்ல அனுமதிக்கப்படும். அந்த வகையில் மிக மிக மிக கண்டிப்பான அதிகாரியே மித்ரநிவனிகா..
அவ்வப்போது அவளது போஃபியா தலைவிரித்து ஆட.. அதையெல்லாம் தனது காதலாலும் அன்பாலும் ஆட்கொண்டு அரவணைத்து செல்வான் என்றும் காவிய காதலன் நீரஜ்..
மருத்துவமனையை திறந்து வைத்த முதலமைச்சரும் அவர் கூட வந்த மற்ற அதிகாரிகள் கூட ராஜூவ் வர்மாவும் மோகினியும் உள்ளே செல்ல.. தன் கைகளை நீட்டினான் தன்னவளை நோக்கி நீரஜ்..
கைத்தலம் பற்றி அவனோடு இணைந்து நடந்தாள் பெண்ணவள்.. முகம் கொள்ளா புன்னகையோடு.
வாழ்க்கை முழுவதும் அவர்கள் இதே காதலாக வாழ வாழ்த்தி விடை பெறுவோம்..
ஜியா ஜானவி ❤️
 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *