காதலே நீ??

This entry is part 3 of 7 in the series காதலே நீ??

காதலே நீ??

காதலே நீ??

காதலே நீ??

காதலே நீ??

காதலே நீ??

காதலே நீ??

காதலே நீ??

காதலே நீ??

காதலே நீ??

காதலே நீ??

காதலே நீ??

காதலே நீ??

காதலே நீ??

காதலே நீ??

காதலே நீ??

அக்ஷயோ தன் மனதிற்கு பிடித்தவள் அருகினில் இருக்க வேற என்ன வேணும் என்னும் விதமான ஒரு மனநிலையில் காரை ஓட்டிக்கொண்டு அத்தருணத்தை ரசித்துக்கொண்டு இருந்தான்.

(சிம்பிளா சொன்னா மனதிற்குள் “பூங்காற்றே பூங்காற்றே பூப் போல வந்தாயே நீ ”  BGM தான் அவனுக்கு கேட்டுக் கொண்டு இருந்தது. ) 

சுமிதாக்கோ இந்த தருணம் மட்டுமே போதும் என்னும் மனநிலைமை தான், எப்பிடியும் காதல் சொல்லி கை பிடித்து காதல் பறவைகளாக ஊர் சுற்ற முடியாது எனும் போது, 

இத் தருணம் அவளுக்கும் பொக்கிஷமான தருணம் அல்லவா, எனவே முடிந்த அளவு அவளும் மௌனமாக ரசித்தாள் அப்பயணத்தினை, 

இப்பிடி இருவரும் சந்தோசமான மனநிலையுடன் சைற்றுக்கு சென்று அங்கு வேலைகளை பார்வையிட்டனர், எல்லா வேலைகளும் சரியாகவே நடந்து கொண்டு இருந்தது, 

இவர்களும் அவற்றை பார்வையிட்டுக் கொண்டே  அருகருகாக நடந்து செல்லும் போது, சுமிதா கீழாக இருந்த இரும்புக் கம்பியை  கவனிக்காது அதன் மேலாக காலை வைத்து இடறி விழ போக,

அதை அவதானித்த அக்ஷய் அவளை முன்னோக்கி விழவிடாது வயிற்றில் ,பின்னிருந்து கை போட்டு தன்னை நோக்கி இழுக்க, 

அவளும் தடுமாறி அவன் மேலையே விழ அவனும் பாலன்ஸ் தடுமாறி கீழ விழ அவளும் அவன் மீதே விழுந்து அவனின் இதழ்களில்  தன் இதழ்களை பதித்தாள். 

இருவரும் எதிர்பாராமல் நடந்த விடயத்தில் யாரை குறை சொல்ல, அக்ஷயோ ஏதோ அவார்ட் கிடைத்தது போல கண்சிமிட்டாமல், அவளை பார்த்த வண்ணம் அவள் இடையை இன்னும் அவனுடன் சேர்த்து  நெருக்க,

அவளோ அப்போது தான் சட்டென்று உணர்வு வந்தவளாக அவசரமாக தன் உதட்டினை, அவன் உதட்டில் இருந்து பிரித்தெடுத்து அவனை முறைக்க,

அவனோ அவளை பார்த்து கண்சிமிட்டிட, 

அவளின் முகம் சட்டேன்று குங்கும நிறம் கொண்டது. அதோடு அவனின் பார்வையின் வீரியம் தாங்காது, அவள் தான் தன் பார்வையை  மாற்றிக்கொண்டு அவனை விலக்கி எழுந்து நின்றாள்.

அவள் எழும்பியதும் ஏதோ எழும்ப தெரியாதவன் போல் அவளை நோக்கி கை நீட்ட, அவளும் மறுக்க முடியாது அவள் கையை கொடுக்க , அதை பற்றிக்கொண்டே எழுந்து நின்று, மண்ணை உதறிக்கொள்ள, 

அவன் கையில் உள்ள மண்ணை கண்டு அங்கு உள்ளோர் அருகில் இருந்த தொட்டியை காட்டிட அவன் மண்ணை கழுவச்  சென்றான். 

அந்த நேரம் அங்கு வேலை செய்து கொண்டு இருந்த பெண்களில் சிலர், “பார்த்தியா அக்கா, பி.எ வேலை பார்த்துக்  கொண்டு இதுகள் அடிக்கிற கூத்தை, இவ விழ  முதல் அவர் பிடிக்கிறதும் கட்டி உருளுரதும் ஹ்ம்ம், அது சரி பணம் இருக்கிற பையன் பின்னாடி தானே எல்லாரும் போவாங்க, பணம் வருது என்றால் இப்போ உள்ள பொண்ணுங்களுக்கு எது என்றாலும் ஓகே தானே”, என்று,

“அந்த எது என்றாலும் என்ற வார்த்தையை அழுத்தி சொல்ல”, 

இவர்களின்  கதையை  எல்லாம்  கேட்டுக் கொண்டு இருந்த  சுமிதாக்கு அவங்க கடைசியாக சொன்னதைக் கேட்டதும், கண்ணில் கண்ணீர் திரண்டு விட்டது,,

அதே நேரம் அக்ஷய் அங்கே  வர எல்லோரும் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

அக்ஷய்க்கு அங்கே நடந்த எதுவும் கேட்கவில்லை, அவனுக்கு மனதுக்குள் அவ்ளோ சந்தோசம் கொஞ்ச நேரம் முன்னாடி அவளின் முகச் சிவப்பு  சொல்லிவிட்டதே , அவளின் அவன் மீதான பிரியத்தை.

வாயால் சொன்னால் தான் காதலா? என்ன, என அவன் தன் கனவுகளில் மூழ்கி இருக்க, அவளோ தனக்குள்ளையே ஒடுங்கி போய் நின்றாள். 

பின்பு இருவரும் அங்கு இருந்து புறப்பட்டு, காரில் ஏறிய பின்பும் மௌனமே காரில் ஆட்சி செய்தது.

அவளோ தனக்குள் சில முடிவுகளை எடுத்துக்கொண்டு அக்ஷயிடம் சொல்ல தக்க தருணம் பார்த்து
இருந்தாள். 

அவனோ மௌனமாக ஒருவித மோன நிலையில் இருக்க, ஒரு வழியாக மீட்டிங் நடக்கும் ஹோட்டலும் வந்து சேர, இருவரும் இறங்கி சென்று மீட்டிங் ஹாலில், தமக்காக காத்து இருந்த கிளைண்ட்டுடன், சேர்ந்து முக்கியமான விடயங்களை டிஸ்கஸ் பண்ணினர்.

அப்போது தான் அக்ஷய் கவனித்தான், சுமிதா முகம் காலையில் இருந்ததை விட டள்ளாக, இருந்ததுடன் அவள் அந்த மீட்டிங்கில் இருந்தாலும் அவள் எதையோ போட்டு மனதுக்குள் குழப்பிக்கொண்டு இருப்பது அவனுக்கு நன்கு புரிந்தது.

எனினும் மீட்டிங்கில் கவனம் செலுத்தி, அண்ணனுக்கு தப்பாத தம்பியாய் ப்ரொஜெக்ட்டை கைப்பற்றி கொண்டான். 

பின்பு அவர்களுக்கு லஞ்ச் அங்கையே ஆரேன்ச் பண்ணி அவர்களுடன், சேர்ந்து உண்டனர்.   

அப்போதும் கவனித்தான், சுமி ஏதோ கடமைக்கு என்று மட்டுமே சாப்பிட்டாள், அவனாலும் எல்லோர் முன்பும் எதுவும் கேட்க முடியாமல் போகவே , அவளை பார்த்த வண்ணமே அவனும் அரைகுறையாக  சாப்பிட்டு முடித்தான்.

பின்பு அவர்கள்ஒரு கை குலுக்கலுடன் விடை பெற்று செல்ல, அவர்களை அனுப்பிவிட்டு, 

அவளை நோக்கி திரும்பி “என்ன ஆச்சு சுமி உனக்கு?  நல்லாத்தானே இருந்தாய், இப்போ தீடீர் என்று ஒரு மாதிரி இருக்கிறாய்? ஏன்மா ? உடம்பு சரி இல்லையா?” என கேட்க, 

அவனின் அன்பில் அவளுக்கு கண்ணை கரித்துக் கொண்டு வர அதை அவனுக்கு காட்டாமல் மறைத்தபடி, “ஜஸ்ட் சும்மா தலைவலி தான் போகலாமா?” என அவனை பாராது எங்கோ பார்த்தபடி  கேட்க , 

அவனோ “வெயிட்” என்று விட்டு , தனது தந்தைக்கு கால் பண்ணி, ப்ராஜெக்ட் கிடைச்சதாய்  சொல்லிவிட்டு,

“நானும் சுமியும் ஆபீஸ் வர கொஞ்சம் லேட்டாகும் அப்பா,” என அவளை பார்த்துக்கொண்டே கூறினான்.

அவரும் “ஓகே, சீக்கிரம் வாங்க” என்று விட்டு வைக்க, அவன் போனை  வைத்து விட்டு, 

“இப்போ நீ உண்மையை சொல்ராய், இல்லாட்டி , நான் இங்கை இருந்து வர்ரதாய் இல்லை,” என அவளை பார்த்து கொண்டே சொல்ல, 

அவளோ ஒரு பெருமூச்சுடன் , “அக்ஷய் நான் இப்போ சொல்றதுக்கு  உங்களுக்கு கோவம் வந்தாலும் பரவாயில்லை,  நீங்க தயவு செய்து உங்க மனசை மாத்திக்கிட்டு வேற யாரையும் லவ் / கலியாணம் பண்ணிக்குங்க , என்னை விட்டுடுங்க, எனக்கு உங்களை பிடிக்கல,”
( இதை சொல்லும் போது அவள் குரல் கமறியது,) 

பின்பு செருமிக்கொண்டே “உங்க மேல எனக்கு அப்பிடி ஒரு எண்ணமும் வராது ,  சோ , ப்ளீஸ் சார் ,” என்க.

அவனோ அவளை கூர்ந்து பார்த்துகொண்டே, “எல்லாம் சொல்லி முடிச்சாச்சா” என கேட்க , 

அவ்ளோ “ம்ம்ம்” என்க, 

அவன் அடாவடியாக அவள் கையை பற்றி இழுத்துக் கொண்டு அந்த ஹோட்டலின் சற்று ஒதுக்கு புறமான பகுதிக்கு சென்று , 

அவளை அங்கு இருந்த சுவற்றில் சாய்த்துக்கொண்டு அவள் தாடையை வலிக்க பற்றி “அங்கை என்னமோ சொன்னியே, அதை இப்போ சொல்லுடி” என்று உறுமினான்.

அவளோ அவனை பார்த்து மலங்க விழிக்க,  

அவன் அவளைப் பார்த்து முறைத்துக்கொண்டே  “என்னடி என்னை பார்த்தால் உனக்கு எப்பிடிடி தெரியுது? காணுற எல்லா பொண்ணுங்க பின்னாடியும் திரியுறவன் மாதிரி தெரியுதா உனக்கு, என் மனசில உனக்கு மட்டும் தாண்டி இடம், 

என்னடி பிரச்சினை உனக்கு ஏன் என்னை பிடிக்கல, ம்ம்ம்ம்….. இல்லை, உனக்கு என்னை பிடிச்சு இருக்கு ஆனா ஏன் மறைக்கிற சொல்லுடி” என அவளை பிடித்து உலுக்க, 

அவளுக்கு தோள்மூட்டில் வலியை தாங்க முடியாமல் கண்ணீர் வழிய, 

அவன் அப்போது தான் அதை உணர்ந்து  கையை எடுத்து விட்டு திரும்பி நின்று தலையை கோதி தன் கோவத்தை சமன் செய்தான். 

அவளோ மெதுவாக “சார், ப்ளீஸ் போகலாம், யாராவது இப்பிடி பார்த்த தப்பா நினைப்பாங்க, “என்க.

அவனோ அடக்க முடியாத கோவத்தில் திரும்பி அவள் இடையை தன்னை நோக்கி இழுத்து, அவள் முகத்தை ஒரு கையால் பற்றி , அவள் உதட்டோடு தன் உதட்டை பொருத்தி அழுந்த  முத்தமிட்டான்.

அவளுக்கு அதிரிச்சியில் முதலில் கண்கள் விரிய அடுத்த நிமிடம், அவனை பிடித்து பலம் கொண்ட மட்டும் தள்ளி  அவனை அடிக்க கையை ஓங்க,

அதை எதிர்பார்த்தவன் போல அதை தடுத்து, கையை பற்றி இழுத்து , மீண்டும் அவளை அணைத்து, உதட்டில் முத்தம் இட்டு அவள் இதழ் தேனை ஒட்டுமொத்தமாக உறிஞ்சி எடுத்தான்.

அவளோ ஒரு கட்டத்திற்க்கு மேல், அவனை விலக்க முடியாமல் அவனுடன் ஒன்றினாள், அதை உணர்ந்த அவன் முகத்தில் ஒரு வெற்றி புன்னகை படர,

அவன் இன்னும் அவளுடன் ஒன்றி போய் அவள் இடை புடவையை கையால் விலக்கி, தன் வெற்று கரம் கொண்டு அதனை ஆராய்ந்து, அதற்கு மேலும் செல்லப் பார்க்க,

அவளோ, அவன் கையைபிடித்து  தடுக்க, அவனும் தன் நிலை உணர்ந்து அவளை விட்டு பிரிய அவள் நிக்க முடியாது அவன் மீதே சாய்ந்து விழ அவளை உடனே தாங்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.

அவள் சுயத்திற்கு வர சிறிது நேரம் எடுத்தது, பின்பு அவள் விலகி அவனை பார்த்த பார்வையில் “இவ்ளோ தானா நீ?” என்ற கேள்வி இருக்க , 

அவன் சாரி என்று சொல்லும் முன்பு “போகலாம் சார்,”என விறுவிறு என்று நடந்து சென்று காருக்கு அருகில் நின்றாள். 

அவனும் ஒன்றும் பேசாது கார் லோக்கை விடுவிக்க, அவள் பின்னால் ஏறி இருக்க , 

அவனோ “சுமி…” என்று அழைக்க, 
அவள் கண் மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள். 

அவனும் இறுக்கமான மனநிலையுடன் காரை ஓட்டிவந்து கம்பெனியை அடைந்தான், அவள் அப்போதும் ஒன்றும் பேசாது இறங்கி சென்று விட்டாள்.

அதன் பின்பு இருவரும் கம்பெனியில் பார்த்துக் கொள்ள முடியாமல் போக, அவள் வீடு சென்று விட்டாள். அவன் வீடு வந்ததும் அவளிடம் பேச முயற்சித்தும் பயன் இல்லை.

அவன் இவற்றை  யோசித்துக்கொண்டே கை காயத்துடனும்,  மனகாயத்துடனும்  பால்கனியில் உறங்கி விட்டான். 

சுமியோ அங்கு போனை பார்த்து அழுது அழுது தூங்கி விட்டாள்.
நாளைய விடியல் யாருக்கு என்ன வைத்து காத்து இருக்கின்றதோ………

அடுத்த பதிவில் பார்க்கலாம்……

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *