முதலில் ஆபீஸ்க்கு வந்து சேர்ந்த ருத்ரன், தந்தையை சென்று பார்த்து விட்டு நடந்ததை மேலோட்டமாக சொல்லி விட்டு,
தனது காபினுக்கு சென்று, “சுமிதா வந்து விட்டாளா?” என பார்த்தான், வழமையான நேரத்தை தாண்டியும் அவள் இன்னும் வராதது அவனை யோசிக்க வைத்தது,
அதே நேரம், அக்ஷயோ முகத்தில் புதிதாக முளைத்த,புன்சிரிப்புடன் விசில் அடித்தவாறு ஆபீஸ்க்கு வந்து சேர்ந்தான்.
வந்ததும் அண்ணாவிடம் சென்று, “ப்ரோ சுமி வந்தாச்சா அவளிட்ட பேசினீங்களா? என்ன சொன்னா?”, என கேள்விகளை அடுக்கிகொண்டே சென்றான்.”
ருத்ரனோ, அவனை பார்த்து “டேய் கொஞ்சம் பொறுடா, இன்னும் அவ வரல, என்னோட கெஸ்சிங் சரி என்டா, அவ இண்டைக்கு ரெஸிக்நேசன் லெட்டரோட தான் வருவா பாரேன்” என்க
அக்ஷயோ, அப்பிடியே தலையில கைவைத்து கொண்டு உட்க்கார்ந்து விட்டான், அவனோ ருத்ரனை பார்த்து அப்பாவியாக “ஏன் அப்பிடி” என்க,
ருத்ரனோ “நீ நேற்று செய்த வேலை அப்பிடிடா, சரி பொறு பார்ப்பம்,” என்க,
“மே ஐ கம் இன் சார்?” , என்ற சுமியின் குரல் கேட்க,
ருத்ரனோ “எஸ் கம் இன்” என்றான்.
அவள் உள்ளே வந்ததும் அக்ஷயை பார்த்து ஒரு நிமிடம் தயங்கினாலும், ருத்திரனை பார்த்து, “சார், உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள்.”
அவனோ சொல்லுங்க, என்றதும் அவள் பார்வை ருத்ரனை தாண்டி, ஒரு முறை அக்ஷயை தீண்டி மீண்டது.
பின்பு ஒரு பெருமூச்சுடன்”சார் நான்என் வேலையை விட்டிடலாம் என்று இருக்கேன்” என்று சொன்னாள்.
அவன் பதில் சொல்ல முதலே, உடனே கதிரையை உதைத்து விட்டு எழுந்த அக்ஷய், கோவமாக கதவை திறந்து அடித்து சாற்றி விட்டு வெளியே சென்றான்.
அதில் ஒருமுறை சுமியின் தேகம் பயத்தில் சிலிர்த்து அடங்கியது.
ருத்ரனோ, “ஓகே சுமிதா இப்போ, ஏன் தீடீர் என்று இந்த முடிவு என்று நான் தெரிஞ்சுக்கலாமா? ” என்க,
சுமிதாவோ, “சார் அது வந்து…….. என்று இழுத்து விட்டு “அது கொஞ்சம் பர்சனல் இஸ்யூஸ் சார்”என்றாள்.
ருத்ரனோ, “ஓகே சுமிதா இப்போ நான் உங்க M .D யாக இல்லாம, கொஞ்சம் உங்களோட கதைக்கணும்.”
“நான் கதைச்ச பிறகு உங்க ரெஸிக் நேசன் பற்றி கதைக்கலாம் ஓகே, “என்று வினவ,
சுமிதா யோசனையுடன் “ஓகே சார்” என்றாள்.
ருத்ரன், “நேரடியாகவே கேட்கிறேன், என்னோட தம்பியை கலியாணம் செய்ய உனக்கு ஓகேவா? இல்ல ஏதாச்சும் ப்ரோப்லேம் இருக்கா ?
இருந்தால் சொல்லு, பட் அக்ஷய் உன் மேல அவ்ளோ பிரியமா இருக்கான், நீ எண்டா காணும் அவனுக்கு, உனக்காக எதுவும் செய்வான்.
அது தவிர குணம் படிப்பு, அழகு எல்லாம் அவனிட்ட நிறைவாவே இருக்கு.”
“அதை விட முக்கியம் , உனக்கும் அவனை பிடிச்சு இருக்கு, பிறகு ஏன் இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் சுமிதா,” என்று கேட்டான்.
அவளோ ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனாள், பின்பு தன்னை சமாளித்துக்கொண்டு “சார், இல்லை அப்பிடி எல்லாம் இல்லை, எனக்கு லவ் எல்லாம்……”என்று சொல்ல தொடங்கி அவன் கை அசைவில் பேச்சை நிறுத்தி அவனை பார்க்க,
அவனோ , “பொய் வேண்டாம் சுமிதா, எனக்கு எல்லாம் தெரியும் நேற்று நடந்தது வரை ஓகே.
“சோ ப்ளீஸ் அவனை மறுக்க காரணம் என்ன? அது தான் கேள்வி,” என்று கேட்டான்.
அவளும் , “ம்ம்ம்.. “என்று விட்டு தலை குனிந்து கொண்டே ,
“நானும் லவ் பண்றேன் தான் சார், பட் உங்க அளவுக்கு ஸ்டேட்டஸ் , வசதி எதுவும் என்கிட்ட இல்லையே சார், அதான் அவரை வெறுக்கிற மாதிரி பேசினான், அவரு நல்லா இருந்தா அது போதும்,” எனக்கு என்றாள்.
ஒரு நிமிடம் ருத்ரன்அசந்து விட்டான், “இது தான் லவ்வா, ஹ்ம்ம் என்னவோ இருக்கட்டும்,” என நினைத்து விட்டு,
“லிஸ்சின் சுமிதா, நீ சொல்றது எல்லாம் ஓகே, பட் என்னோட தம்பிட சந்தோசத்திற்கு முதல் இதெல்லாம் எனக்கு தூசு தான், அவனுக்காக இதை எல்லாம் விட்டு கொடுப்பேன், ஓகே. சோ, நீ அதை பற்றி யோசிக்க வேணாம், வேற ஏதாவது ப்ரோப்லேம் இருக்கா?”என்று கேட்டான்.
அவளும் “இல்லை சார், ஆனால் எனக்கு எல்லாமே என்னோட அக்கா தான் அவளுக்கு ஓகே என்றாள் சரி சார்,”
“அவள் தான் இப்போ குடும்பத்தையே பார்த்து கொள்ளுகிறாள், அவள் ஓகே சொன்னாதான் அம்மா ஓகே சொல்லுவாங்க சார் “என்றாள்,
அவனோ, “ஓகே சுமிதா உங்க அக்கா பெயர் என்ன?, என்ன பண்ணுறாங்க இப்போ?, நான் உங்க 2 பேர் பத்தியும் பேசுறன் அவங்க கிட்ட ,உனக்கு ஓகே எண்டா,” என்று சொன்னான்,
சுமிதாவோ, “அவ பெயர் சுரமஞ்சரி சார், டான்ஸ் டீச்சரா ஒர்க் பண்ராங்க ரொம்ப சாப்ட் அண்ட் ரொம்ப நல்லவ,
“நான் அவளிட்ட, அக்ஷய் பத்தி இது வரை ஒன்னும் சொல்லல, இனி தான் பேசணும் நானே பேசிட்டு நாளைக்கு அவளை கூட்டிட்டு வரேன் சார்,” என்றாள்.
(ருத்ரனுக்கு மஞ்சரி என்ற பெயரைக் கேட்டதும் ஒரு வேளை அவளா இருப்பாளோ, அப்பிடி இருந்தால்…. சே சே என்ன நினைவு எனக்கு, அது கோயம்புத்தூர்ல பார்த்தது, இங்கை நோ ….. என்று மனசை அடக்கி விட்டு)
ருத்ரனும், “ஓகே சுமிதா நாளைக்கு ஆபீஸ்க்கு பக்கத்தில உள்ளே காபி ஷாப்க்கு ஈவினிங் 5 மணிக்கு வர சொல்லுங்க நானும் அக்ஷயும் வாரம்.
“பேசலாம் ஓகே, இப்போ நீங்க நார்மலா போய் ஒர்க்கை பாருங்க , அப்பிடியே இந்த கடிதத்தையும் நீங்களே கிழிச்சு போடுங்க, போகும் போது அக்ஷயயை கொஞ்சம் வர சொல்லிட்டு போங்க ஓகே, “என்று அவனே பேசி முடித்தான்.
அவளும் சிறு சிரிப்புடன், “ஓகே சார்” என்று விட்டு இலேசான மனதுடன் கேபினை விட்டு வெளியேறி அக்ஷயை காண சென்றாள்.
அங்கு சென்று கதவைத் தட்டி அனுமதி பெற்று, உள்ளே சென்றவளை கொலை வெறியுடன் பார்த்துக்கொண்டு இருந்தான் அக்ஷய்.
அவளோ, அதை கணக்கெடுக்காது “சார் உங்களை ருத்ரன் சார் வரட்டாம், போய் பாருங்க, என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொன்னாள்,
அக்ஷயோ, “வேலைய விட்டு போறவ இங்கை எதுக்கு வந்தாய், அப்பிடியே போக வேண்டியது தானே”,
“போ என் கண் முன்னால நிக்காத, வேலைய விட்டு போறலாம்,போடி போ, அப்பிடியே என்னையும் ஒரேடியா கொன்னுட்டு போ…”
“இந்த கவலை இருக்காது எனக்கு, நேற்று கொஞ்சம்
ஓவரா நடந்துகிட்டேன் தான், தப்பு தான், எல்லாம் உன் மேல இருக்கிற லவ்ல தானேடி, ஏண்டி என்னை புரிஞ்சுக்கவே மாட்டேன் என்கிற… “, என்று புலம்ப
அவளோ அவன் பேச பேச அவன் அருகே வந்து அவன் ஷிர்ட்டை பிடித்து இழுத்து அவன் முகம் தாங்கி “ஐ லவ் யு சோ மச் அக்ஷய் மாமா………”, என்றாள் பாருங்களேன்.
அதோட அக்ஷய் அப்பிடியே பிரீஸில் ……….
அடுத்த பதிவுடன் சந்திப்போம் ……..
