ருத்ரன் அவள் கையை பற்றி இழுத்துக் கொண்டு சென்று தனக்கான அறைக்கு சென்று அவளை சோபாவில் தள்ளி விட்டு கதைவை லாக் பண்ணினான்.
ருத்ரன் இழுத்து வரும் போதே, மஞ்சரியின் கண்ணாடி வளையல் உடைந்து அவள் மணிக்கட்டை பதம் பார்த்ததில் அவளுக்கு கையில் இரத்தம் வரத் தொடங்கி இருக்க,
அது அவளுக்கு வலியைக் கொடுத்தது.
இவன் சோபாவில் தள்ளி விட்டதில் அவள் கால் சோபாவில் இடித்துக் கொண்டு அதுவும் அவளுக்கு வலிக்க,
அவளோ கண்ணில் கண்ணீர் வழிய வலியோடும் பயத்தோடும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவனோ தன் கோர்ட்டையும் டையையும் கழட்டி அங்கு இருந்த கட்டிலில் வீசி விட்டு,
தன் ஷர்ட் பட்டின்களை கழட்டி,ஷிர்ட்டை முழங்கைக்கு மேலாக ஏற்றிய வண்ணம், அவளை நோக்கி கோவமாக வந்தான்.
வந்தவன் அவள் முழங்கையை பிடித்து இழுத்து அவளை எழுப்பி, “அங்கை என்ன கேட்டாய் நான் எல்லாம் என்ன மனுஷன் என்று தானே.”
“ஆமா, நான் அப்பிடித்தான் எனக்கு ஒன்று நடக்கணும் என்றால் அப்பிடித்தான் ,”
“ஏதோ பெரிசா கத்தி பேசினாய் அங்கை, இப்போ பேசுடி பார்க்கலாம். உனக்கு எவ்ளோ தைரியம் இருந்த என்கிட்டயே அப்பிடி பேசுவாய்”
“இந்த ருத்ரன் கிட்ட தொழிலில இருக்கிறவங்களே பேச பயப்பிடுவாங்க, நீ என்னோட பி.எ, நீ என்னை கை நீட்டி பேசுற. ” என்று கோவத்தில் அவள் கையை இன்னும் அழுத்திக் கொண்டே கேட்க,
அவளோ, “சார் டி போட்டு பேசுற வேலை வேணாம், கை வலிக்குது சார் ப்ளீஸ் விடுங்க” என்று சொன்னாள்.
அவனோ அவள் கையைப் பார்க்க அதில் வளையல் உடைந்து குற்றிய அடையாளத்துடன் இரத்தக் கசிவும் இருக்க,
அவளை அப்பிடியே சோபாவில் தள்ளி விட்டு “என்னை கோவப்படுத்தி பார்க்காதே அது உனக்கு நல்லது இல்லன்னு சொன்னேன் நீ கேட்கல அப்போ அனுபவி” என்றான்.
அவளோ அழுதபடியே அவனிடம் “நான் வீட்டுக்கு போகணும் ப்ளீஸ்” என்க.
அவனோ கட்டிலில் காலுக்கு மேல் கால் போட்டவாறு அமர்ந்து கொண்டு நீ பேசினதற்கு மன்னிப்புக் கேள் போகலாம் என்றான்.
அவளோ, “சார் நான் பேசினதில எந்த பிழையும் இல்லை, உங்களுக்கு அது தப்பா தெரிஞ்சா நான் ஒன்றும் பண்ண முடியாது.
இப்போ நீங்க என்கிட்ட நடந்த முறைக்கும் சேர்த்து நீங்க தான் மன்னிப்புக் கேட்கணும் சார்.”என்று அவனை முறைத்துக்கொன்டே கூறினாள்.
அவனோ அவளை அழுத்தமாக பார்த்தவாரே “ஓஹ் அப்பிடியோ அப்போ நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்” என்று சொல்லுறாய்,
“அதாவது பாஸ், பி.எ கிட்ட மன்னிப்பு கேட்கணும் சூப்பர்ல,” என்று நக்கலாக கூறி விட்டு எழுந்து,
அவளை நோக்கி வந்து அவள் வளையலால் காயம் பட்ட கையை மெதுவாக அழுத்த ,
அவளுக்கு இன்னும் அதிகமாக வலிக்க “சார் ப்ளீஸ் வலிக்குது,” என்று கையை இழுக்க முயற்சி செய்ய,
அவளின் கண்ணீர் துளி அவன் கையை நனைக்க அவன் அவள் கையை விட்டு விட்டு திரும்பி நின்று “நீ சாரி சொன்னா இப்போவே இங்கை இருந்து போகலாம்,
இல்லை எப்போ சொல்றியோ அப்போ போகலாம் ரைட் மஞ்சு” என்று விட்டு கட்டிலில் போய் தன் ஒரு கையால் கண்ணை மூடிக் கொண்டு படுத்தான்.
அவளோ என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்து இருக்க, ” அவள் மனதில் இவர் எல்லாம் செய்வாராம் நான் மன்னிப்புக் கேட்கணுமாம் , என்னால முடியாது எனக்கும் சுய மரியாதை இருக்கு” என்று நினைத்து பேசாமல் அமர்ந்திருக்க,
அவளுக்கு கையும் காலும் வலிக்க அப்பிடியே சோபாவில் சாய்ந்து இருந்து கொண்டு கையில் குற்றிய கண்ணாடி வளையல் துண்டை மெதுவாக எடுக்க அது இன்னும் வலிக்க தன்னை மறந்து “அம்மா” என்று விட்டாள்.
ருத்ரனோ நேராய் படுத்து இருந்தவன், அவள் சத்தம் கேட்டு ஒருக்களித்து படுத்து அவளை பார்த்தான்.
பின்பு ஒரு பெரு மூச்சுடன் எழுந்து அங்கு உள்ள பெர்ஸ்ட் எயிட் பாக்சாய் எடுத்துக் கொண்டு அவள் அருகே வந்தமர்ந்து அவள் கையை பிடிக்க,
அவளோ “இல்லை வேண்டாம் சார், நானே பார்த்துக் கொள்ளுறேன்” என்று கையை இழுக்க,
அவனோ விடாக்கண்டனாய், மீண்டும் கையை இழுத்து மெதுவாக மருந்திட்டான்.
அவன் மருந்து இட்டதைப் பார்த்து , அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது ஏன் என்றால் அவன் அப்படி மென்மையாக மருந்து இட்டான்.
அவளின் மனமோ மௌனமாய் ,
“காயம் தந்தவன் எவனோ,
அவனே மருந்தும் ஆகிப் போகிறான்,
சுடும் நெருப்பாய் ஒரு நேரம் என்னை எரிக்கிறான்,
மறுகணம் பனிமலையாகி என்னை குளிர்விக்கிறான்,
என் உள்ளமோ உன்னிடம் தஞ்சமடைய எண்ண,
ஏதோ ஒரு திரை உனக்கும் எனக்கும் இடையில்,
அது விலகும் நாள் எந்நாளோ,
உன் கைப்பிடிக்கும் காலமும் எக்காலமோ,
மௌனமாய் உன்னை நான் ரசிப்பேன் அதுவரையும்,
காதல் என்னும் ஆயுதம் கொண்டு என் மௌன சுவரை உடைப்பாயா?
இல்லை உன் முன்கோபத்தீயால் என் காதலுக்கு மூடுவிழா நடத்துவாயா?”
என்று நினைக்க அவள் அவனையே அமைதியாக பார்த்துக்கொண்டு இருக்க ,
அவனோ மருந்து இட்டு முடித்ததும் அவள் கையை மெதுவாக வருடி விட அவள் கூச்சத்துடன் கையை இழுத்துக் கொண்டாள்.
அவனோ, “மஞ்சும்மா சாரி சொல்லிடேன்.முதல் முறையும் தப்பு பண்ணினாய் விட்டுட்டேன், பட் இப்போ முடியாது, “என்று மென்மையாக கூறினான்.
அவளோ, அவனை பார்த்து “அதானே பார்த்தேன் எங்கை சுத்தினாலும் கடைசியில நீங்க சொன்னதை செய்ய வைக்கிறதிலையே இருக்கீங்க,”
“ஹ்ம்ம்……. முதல் முறை நான் தெரியாமல் செய்த தப்பு தான் அது, ஆனாலும் மன்னிப்புக்கேட்க தயாரா இருந்தேன், ஆனா இப்போ நான் தப்பே செய்யல அப்புறம் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்.”
“ஒரு வேளை நீங்க குற்ற உணர்வுல இருக்கீங்க போல அதை நீங்களே இல்லை என்று நிரூபிக்க என்னை மன்னிப்பு கேட்க சொல்றீங்களா சார் “என்று அழுத்தமாக வினவ,
அவனோ, அவள் தாடையில் கை வைத்து தன்னை நோக்கி இழுத்து “ரொம்ப பேசுற இந்த வாயை எப்பிடி அடைக்கணும் என்று எனக்கு தெரியும்” என்று சொல்லிக்கொண்டு,
அவள் சுதாரிக்க முதலே அவளின் உதட்டோடு உதடு பொருத்தினான்.
அவளும் வழமை போன்று அவனைத் தள்ள முயற்சிக்க, அது வீணாய் போக, அவன் தாகத்தை அவள் இதழ்களில் உள்ள நீரை முழுமையாக அருந்தி போக்கிய பின்பே, அவளை விடுவித்தான்.
அவளுக்கு மூச்சு வாங்க, அவனோ ஒரு சிறு குறுஞ் சிரிப்புடன் எழுந்து நின்று தன்னை முறைத்த அவளை பார்த்து “உன்னை கிஸ் பண்ணினாலே என்னோட கோவம் ஸ்ட்ரெஸ் எல்லாம் எங்கையோ பறந்து போயிடுது மஞ்சும்மா, “என்று சொல்லி கண் அடிக்க,
அவளோ அவனை கோவமாக ஏதோ சொல்ல எழும்ப,
அவளின் காலில் பட்ட அடியால் அவளால் நிற்க முடியாமல் தள்ளாட அவன் அவளை சட்டென்று தன் கரங்களில் தூக்கிக் கொண்டான்.
அவளோ திமிர அவன் அவளை மெதுவாக கட்டிலில் படுக்க வைத்து விட்டு அவளின் கால்களுக்கு அருகே அமர்ந்து அவள் புடைவையை சற்று மேலே தூக்க,
அவளோ பதறி எழுந்து அவன் கையைத் தடுக்க, அவனோ “காயம் இருக்கானு பார்க்கத்தான் வேற ஒன்னும் இல்லை ஓகே” என்று சொல்ல அவள் அவன் கையை விட்டாள்.
(அவனோ மைண்ட் வாய்ஸ்சில் நான் தான் இந்த கதையோட ஹீரோ ஆனா இவ என்னை வில்லன் மாதிரியே பார்க்கிறா….. ஏன்மா writer நீ இதெல்லாம் கேட்க மாட்டியாம்மா…என்று புலம்பினான்.)
அவன் மெதுவாக அவள் கணுக்காலை ஆராய அதில் சிறு வீக்கம் மட்டுமே இருக்க அவன் மெதுவாக அழுத்தி தேய்த்து விட்டு “ஜஸ்ட் ஒரு வீக்கம் தான் வேற ஒன்னும் இல்லை, ரிலாக்ஸ் ” என்று விட்டு,
“நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு, நான் இப்போ வரேன்” என்று விட்டு அறையை விட்டு வெளியே சென்று விட்டான்.
அவள் வெளியே சென்று கிளைண்ட் சாப்பிட்டு வர அவர்களை அனுப்பி விட்டு தனக்கும் மஞ்சுக்கும் உணவு கொண்டு வரச் சொல்லி விட்டு மீண்டும் ரூம்க்கு சென்றான்.
மஞ்சுவோ கண்மூடி படுத்து இருந்தாள். ஆனால் தூங்கவில்லை.
அவன் வந்து சோபாவில் அமர்ந்து தன் போனை பார்த்துக்கொண்டு இருக்க, உணவும் வர மஞ்சுவை எழுப்பி சாப்பிட வரச் சொல்ல,
அவளோ, “எனக்குப் பசிக்கல சார், நீங்க சாப்பிடுங்க” என்று சொல்ல,
அவனோ “ஒஹ் இப்போ நான் உனக்கு ஊட்டி விடணுமா? எனக்கு ஓகே நோ ப்ரோப்லேம்” என்று தட்டொடு அவள் அருகே வர,
அவளோ “இவன் செய்தாலும் செய்வான்,” என்று நினைத்துக்கொண்டு, அவனிடம் “நானே சாப்பிடுறேன் தாங்க” என்று வாங்கி சாப்பிட,
அவனும் “அந்த பயம் இருக்கட்டும் ” என்று கூறிவிட்டு தானும் சாப்பிட்டான்.
அதன் பிறகும் இருவரும் அமர்ந்து இருக்க நேரம் போனதே தவிர அவர்கள் நிலையில் மாற்றம் இல்லை .
அப்போது ருத்ரன் மஞ்சரியிடம் “மஞ்சு என்ன இண்டைக்கு நைட் இங்கையே ஸ்டே பண்ணுற பிளானா, எனக்கு ஓகே தான் பட், நான் இப்போ இருக்கிற மாதிரியே எப்பவும் இருப்பன், என்று சொல்ல முடியாது, அதுவும் உன்கிட்ட சான்ஸே இல்லை” என்று கூறினான்.
மஞ்சுவோ அவனை அதிர்ந்து பார்த்தாள்.
அவன் சொன்னதை அப்பிடியே ஒதுக்க முடியவில்லை அவளால், ஏன் என்றால் அவன் அவளிடம் நடந்து கொள்ளுவது அப்பிடி .
ஆனால், இப்போது மன்னிப்புக் கேட்டால் தன் மேல் பிழை என்று ஆகிவிடும். என்ன செய்ய என்று யோசிக்க,
அவளின் போன் அடித்தது. அவள் அம்மா தான், அவள் எடுத்த உடனே, “மஞ்சு எங்கை இருக்காய் எப்போ வருவாய்மா? மீட்டிங் நல்ல படியா முடிஞ்சுதா? ருத்ரன் தம்பி கூடத்தானே இருக்காய், “என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க,
மஞ்சரியோ , “ஓகே அம்மா மீட்டிங் எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதும்மா, நான் இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பிடுவேண்மா , ருத்ரன் சாரும் என் கூடத் தான் இருக்கார், ஓகே அம்மா பை,” என்று விட்டு போனினை வைத்து விட்டு சற்று நேரம் யோசித்தாள்.
பின்பு ஒரு முடிவுடன், ருத்ரன் அருகே மெதுவாக நடந்து வந்து, “சார் நீங்க செய்தது பெரிய பிழை ஆனா ……. ஹ்ம்ம் ஏதோ போகட்டும்,”
“நான் சாரி சொல்லணும் அவ்வளவு தானே, ஓகே என்னில தான் தப்பு, சாரி சார், இப்போ போகலாமா” என்று கேட்க,
அவனோ, அவளை சீண்டும் விதமாக “போதாதே மஞ்சு, அப்போ சாரி மட்டும் கேட்டால் போதும் என்று நினைச்சேன், ஆனா இப்போ நீ எனக்கு ஒரு கிஸ்அண்ட் ஒரு ஹக் கொடு, அப்புறம் கிளம்பலாம் “என்று சொன்னான்.
அவளோ “என்ன விளையாடுறீங்களா சார், நீங்க வாங்க போகலாம்” என்று சொல்ல,
அவனோ அவளின் பதட்டத்தை ரசித்தவாறு அவளை நெருங்கி வர அவளோ அவனை தள்ளி விட்டு ,
கதவிற்கு அருகே செல்ல அவனோ விளையாட்டாய் அவள் முந்தானையை இழுக்க அது அவளின் தோளில் இருந்த ஊசியில் இருந்து விடுபட்டு கீழாய் சரிந்தது.
அவளோ அதிர்ச்சியில் தன் கை கொண்டு தன்னை மறைத்து அவனுக்கு முதுகு காட்டியபடியே குனிந்து முந்தானையை எடுத்து போட்டுக் கொண்டு திரும்பி ,
தீப் பார்வையுடன் ருத்ரனை நெருங்கி, அவன் ஏதோ சொல்ல வர முதலே அவளின் கை அவனின் கன்னத்தில் பதிந்து இருந்தது.
அவனோ அதிர்ச்சியில் ஒரு நிமிடம் நின்று விட்டு சினம் மிக அவளைத் தூக்கி கட்டிலில் போட்டு விட்டு தன் ஷிர்ட்டை கழட்டி எறிந்து விட்டு அவள் மேல் பாய்ந்தான்.
அவளோ விலக முயல, அதை தடுத்து அவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து ,
அவளின் முந்தானையை விலக்கி, அவள் இரு கையையும், தன் இரு கைகளுடன் கோர்த்து அவள் கால்களுக்கு இடையில் தன் கால்களை இட்டு இறுக்கி அவளின் கழுத்தில் முத்தம் பதித்து,
நிமிர்ந்து அவள் முகம் முழுதும் முத்தம் கொடுத்து இதழ்களில் இளைப்பாறினான்.
அவளோ மூச்சு முட்டிட அவனை விலக்கும் வழி அறியாது அவன் அணைப்பில் இருக்க,
முதலில் கோவத்தில் வன்மையாக அவளை அணைத்தவனின் அணைப்பு பின்பு தாபமாக மாறியது.
மென்மையாக அவள் உடலை வீணை போல் மீட்ட தொடங்கி, அவன் அவளுள் கலக்கத் துடிக்க அவள் புடவை முந்தானை முழுவதுமாக நீக்கப்பட்டது. அவன் அடுத்ததாக அவளின் ரவிக்கை கொக்கிகளில் கையை வைக்க போக,
அவனின் போன் அடித்தது. தன் நிலை உணர்ந்தவன், அவளிடம் இருந்து விலகி எழுந்து , அவளைப்பாராமல் அங்கு இருந்த வாஷ் ரூம்க்கு சென்றான்.
அவளோ, எழும்பி தன் புடைவையைச் சரி செய்து விட்டு ஜன்னல் வழியே வெளிய வெறித்தவாரு அமர்ந்திருக்க அவனோ சற்று நேரம் கழித்து வெளியே வந்து,
தன் ஆடைகளை அணிந்தவாறு “வா போகலாம்” என்று அவளைப் பார்க்காது கூறி விட்டு வெளியே செல்ல ,
அவளும் ஒன்றும் பேசாது அவன் பின்னே சென்றாள்……
பேசாத இருவரும் பேசும் போது என்ன ஆகும்……
இவர்களின் மனநிலை என்ன????
அடுத்த பதிவில் பார்க்கலாம்….
