காதல் தேசத்து ..கைதி..நான்…!!!

       காதல் தேசத்து..கைதி.. நான்…!!!

  
கவர்ந்திழுக்கும் ..கள்வனின்
  காந்தப்  பேச்சும்…
மனதைக் கொள்ளை கொள்ளும்
  உனது.. குபீர் சிரிப்பும்…
திராவிடத்தின் தீரனாக…
  கிரேக்கநாட்டின் கட்டுடலால்…
கட்டிப் போட்டு.. காதல்போர்த்
  தொடுத்தாய்…பூவை..மீது!!
நிராயுதபாணியாய் நின்ற 
  நங்கையை.. நெருங்கி..உன்வசீகர 
வாய்ப்பேச்சால் வீழ்த்தி… வெற்றி 
  வாகை சூடிக் கொண்டாய்!!
உயிர்உள்ளவரை உடன்வருவேன்..
  என..எனக்கு உறுதிஅளித்துவிட்டு..
பின், அதையும் அழித்துவிட்டு
 அகன்றுவிட்டாய்…அரக்கனாக..!!!
உரமேறிய உடல் மட்டுமின்றி
  உன்உள்ளமும்..பாறை போன்றதோ?
காதல் தேசத்தின் சிறையில், தனித்து
  விடப்பட்ட.. தூக்குக்தண்டனை
கைதி.. ஆகிப்போனேன்.. நான்!!
  என்உயிர் உலகைப்பிரியும் முன்,
எனது இறுதி அபிலாஷையாக…
  ஒரேயொரு முறையாவது..
பேசிவிடேன்… என்னிடம்..!!!
  முயன்றிடுவேன்!!என் முடிவில்லா
அன்பை.. உனக்கு
  முழுதாய் உணர்த்திட….!!!!!!

 ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌                     -ஸ்ருதி ஆதி
  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *