காதலால் காதல் செய்
காதல் 2
மீண்டும் ஒரு அதிகாலை……
( மீண்டுமா…… ஹீரோ …… ஹீரோ……
இன்றோடக்சன் வேண்டாமாப்பா)
நம்மாளு ஒரு 6 அடி இருப்பான். அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு அப்படின்னு நீங்க நினைச்சா சாரிப்பா அப்படி எல்லாம் இல்ல.
நம்மள அஞ்சர அடிதான். மாநிறமா தான் இருப்பான். ஆனா என்ன சுமார் மூஞ்சி குமார் தான்யா.
ஆனால் நம்மால் பெரிய பணக்காரங்கன்றதால நல்ல ட்ரெஸ்ஸிங் சென்ஸ் இருக்கும் அதனாலேயே பார்க்க ரொம்ப நல்லா இருப்பான் அதுதான் ஆள்பாதி ஆடைபாதி என்கிறார்களோ சரி சரி ஹீரோவ பார்ப்போம்.
ஆனா உடம்பு மட்டும் ரொம்ப வ்ட்டா வச்சிருப்பான் காலையில் வாக்கிங், ஜாகிங், வீட்ல இருக்கிற ஜிம்ல எக்சசைஸ் சோ நம்மால் பயங்கர fit.
அவனுக்கு கடற்கரையோரமாக ஜாகிங் பண்றது ரொம்ப பிடிக்கும் அப்படி வாக்கிங் போயிட்டு இருக்கும்போது தான் கலையும் ராஜாவும் விளையாடுவதை பாத்துகிட்டு ஜாகிங் போயிட்டு இருந்தா.
அவனுக்கு ஒரு போன் வரவே என் கடற்கரை பக்கத்துல இருந்து கொஞ்சம் தள்ளி வெளிய வந்தான்.
போன் பேசிட்டு திருப்பி ஜாகிங் பண்ண போகும்போது தான் கலை வந்து அவன் மேல விழுந்தா.
விழுந்த வேகத்துல ரெண்டு எக்குதப்பா முட்டிக் கொண்டு இருந்தாங்க.
அன்னைக்குன்னு பாத்து கலை ரொம்ப லூசான டிரஸ் ஆன போட்டிருந்தாள்.
விழுந்த வேகத்துல டிரஸ் கீழே கொஞ்சம் இறங்கிருச்சு.
அவனும் இதை எதிர்பார்க்கல ஆனா வேற வழியே இல்லாம அவன் தல அவள் மார்பு மேல தான் இருந்துச்சு.
அவனுக்கு ரொம்ப கஷ்டமா தான் போச்சு உடனே எந்திரிச்சுட்டான்.
எழுந்து அவளும் எழுவறதுக்கு கை கொடுத்தான்.
எழுந்தவுடன் முதலில் அவள் டிரஸ் தன்
சரி செஞ்சா அவனும் அவகிட்ட சாரிங்க நானும் போன பார்த்துட்டே வந்த கவனிக்கல.
அவ சாரி நானும் பாக்கல தம்பி கூட விளையாடிக் கொண்டே வந்தேன் அதனாலதான் தெரியாம இடிச்சுட்டேன்.
இத்தனை பேசும் போதும் அவன் நிமிர்ந்து கூட பாக்கல ஏன்னா அவளுக்கும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு எல்லாம் இருக்கும் தானே. ஏனா அவன் முகம் இருந்த வாக்கு அப்படி.
அவனும் அப்பதான் கவனிச்சான். என்னடா இந்த பொண்ணு தலைய தொங்க போட்டுக்கிட்டே இருக்குதுன்னு.
அவனும் அப்பதான் அவ முகத்துல எல்லாம் பார்த்தா நல்ல பளிங்கு முகம் நல்ல கலர் அழகான முக அமைப்பு ஒல்லியான தேகம்.
பார்க்க மிகவும் அழகாக இருந்தாள்.
விழுந்த வேகத்துக்கு முகம் மிகவும் சிவந்து போயிருந்தது. இப்பொழுதுதான் அவன் பார்வை ரசனையாக மாற ஆரம்பித்தது.
ஹாய் என் பெயர் மிருதன்.(எவ்ளோ ஹார்டா இருந்தான்.இவன பேரும் மிருதுவா… கலையோடு மைன்ட் வாய்ஸ் இது.)
ஹலோ என்னங்க நான் என் பேரை சொல்லி விட்டேன் இன்னும் உங்க பேரை சொல்லவே இல்லையே.
சோ சாரி என் பேரு கலை. இது என் தம்பி ராஜா. பேரை சொல்லிட்டு, ஓகேங்க திருப்பியும் சொல்லிக்கிறேன் சாரி நாங்க கிளம்புறோம், பாய்
எல்லாம் சரி அப்படின்னு ஒன்னு கேட்டான் பாருங்க அதுல நம்ம கலைப் உள்ள பயந்து அடிச்சு ஓடிப் போயிடுச்சு…..
அப்படி என்னதான் கேட்டுருப்பான்னு அடுத்த எபில பார்க்கலாம்பா….
காதல் செய்வோம்……
