என் வினோதமானவனே
அத்தியாயம் – 5
பத்து வருடங்களுக்கு முன் …
கொழும்பு பல்கலைக்கழக.. வர்த்தக பீட வளாகம் …
அந்த சாலையின் இரு மருங்கிலும், தளைத்தோங்கி வளர்ந்திருந்த வாகை மரங்களின் பூக்கள்.. தரையில் உதிர்ந்து கிடந்த.. இரம்மியமான காலைப்பொழுது.
அந்த சாலையில் தான்… ஓர் புத்தகத்தை .. தன் நெஞ்சோடு இறுக அணைத்த வண்ணம் நின்றிருந்தாள் பத்தொன்பது வயதுக்காரியான ஷக்தி!!
அது, அவளுடைய காலேஜின் ரேகிங் பீரியட்… அப்போது அவஸ்த்தையாக உணர்ந்தாலும், இப்போது மீண்டும் அந்நாட்கள் மீளவராதா? என ஏங்கும் சுகமான காலம் அது .
அதிலும் ஷக்தி.. ஃபர்ஸ்ட் யர் மாணவி அல்லவா ? அவர்களுக்கென்று ஓர் ட்ரஸ் கோர்ட் இருந்தது. முதல் வருட மாணவியர்கள், தமது ரேகிங் பீரியட் முடியும் வரை அப்படித்தான் உடை அணிந்து வரவேண்டும் என்று எழுதப்படாத சட்டமாக இருந்தது, இலங்கை பல்கலைக்கழகங்களில்.
நடுவகிடெடுத்து, இரட்டைச் சடை பிண்ணி, இளஞ்சிவப்பு நிறத்தில், பட்டன்கள் வைத்த சட்டை உடுத்தி, கறுப்பு நிற பாவாடையும் போட்டு, கால்களில் சாதாரண பேட்டா செருப்புடன், அச்சு அசல் பட்டிக்காடு போல நின்றிருந்தாள் அவள்.
அவள் மட்டுமல்ல, அவளைப் போல, ஓர் நாற்பது, நாற்பத்தி நான்கு மாணவியர்களும், இருவர் இருவராக கைகளைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தனர். அவர்களுக்கு முன்னால் சில சீனியர் மாணவர்கள்.
தான் அணிந்திருந்த டீஷர்ட்டின் முதலிரண்டு பட்டன்கள் திறந்து விட்ட வண்ணம், கழுத்தில் தான் அணிந்திருந்த வெள்ளிச் சங்கிலி, வியர்வையுடன் இணைந்து பளபளக்க நின்றிருந்தான் ஒருவன்.
தன் பேட்ச்மேட்டினைப் பிடித்து வைத்து, அடாவடி செய்யும், அந்த இரண்டாமாண்டு வர்த்தக பீட சீனியர் மாணவனைப் பார்க்கும் போதே எரிச்சலாக இருந்தது அவளுக்கு.
இருந்தாலும், அவர்களை எதிர்த்து, ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாத்தனத்துடன் இறுகிப் போனவளாக நின்றிருந்தாள் அவள். அந்த அடாவடி சீனியர் முன்னே இருந்த ஜூனியரோ, “வேணாம் சீனியர்.. ப்ளீஸ் சீனியர்.. கேர்ள்ஸ் எல்லாம் இருக்காங்க சீனியர்”என்று கண்களாலேயே கெஞ்சினான்.
பம்மியபடி பின்னே சென்ற ஜூனியரின் பேன்ட் பெல்ட்டைப் பிடித்திழுத்த அடாவடி சீனியர், பளாரென விட்டான் ஓர் அறை மற்றவன் கன்னத்தில். ஒட்டுமொத்த மாணவர்களும் அதிர்ந்து நிற்கலாயினர். ஷக்திக்கோ அந்த அறைச் சத்தத்தின் வீரியத்தில் நெஞ்சு திக்கென்றானது.
அந்த அராத்து சீனியரோ, “டேய் இப்போ உன் பேன்ட்டைக் கழற்றப் போறியா இல்லையா?”என்று கேட்டான். அந்த நேரம் கூட்டத்தில் இடியெனக் கேட்டது ஓர் குரல்.
அடாவடி மாணவர்கள் திடுக்கிட்டு நிற்க, ஜூனியர்களோ பரிதாபமாக நின்றிருந்த கணப்பொழுது அது. “என்னடா நடக்குது இங்கே?’- காற்றிலே மிதந்து வந்தது ஓர் ஏகாந்தமான குரல்.
அங்கிருந்த அனைவரும் திரும்பிப் பார்க்க அங்கே நின்றிருந்தான் அவன். தன் முறுக்கு மீசையை நீவிவிட்ட வண்ணம், இரு கால்களையும் அகற்றி நின்றிருந்தான் அவன். அவனைக் கண்டதும் ஷக்தியின் கண்களில் ஓர் மின்னல். பிற சீனியர்களுக்கோ கொஞ்சம் பரபரப்புக்கு உள்ளாகினர்.
அங்கிருந்த ஒவ்வொருத்தனும் பயத்தில், “அர்.. அர்ஜூன்”என்று பினாத்தலாயினர். ஷக்தியின் உதடுகள் அவளையும் அறியாமல், “அர்ஜூன்”என்றழைத்து, நிசப்தமானது.
அர்ஜுன், அவனது பாங்கற் கூட்டத்துடன் வந்து அடாவடி மாணவர்களை அடைந்தான். அர்ஜூனின் திடகாத்திரமான கைகளில் ஒன்று மேலெழுந்து அந்த முரட்டு மாணவனுக்கு அடிக்க கை ஓங்கிய போது, பதறி ஓடயலாயினர் மற்றவர்கள்.
அடாவடி மாணவனின் கன்னத்திலேயே இரண்டு போட்டு, “என்ன ரேகிங்கா? ஆ? என்ன ரேகிங்கா?”என்று கேட்ட நேரம், அவன் பற்களுக்கிடையில் சிக்குண்ட இதழ்களை, இமைகொட்டாமல் பார்த்திருந்தாள் ஷக்தி.
அடிவாங்கியவர்களின் குழுவை நோக்கி, “எல்லாம் க்ளாஸூக்கு ஓடு.. இனியொரு வாட்டி.. எங்கேயாவது ஜூனியர்ஸை ரேக் பண்றதைப் பார்த்தேன்.. மவ்வனே!!”என்று சுட்டுவிரல் நீட்டி அவன் எச்சரிக்க, தலைதெறிக்க ஓடலாயினர் அவர்கள்.
அவனது பார்வை ஷக்தியில் பதியாமல் அனைத்து மாணவியர்களிலும் ஒருதரம் பதிந்து மீண்டது. இவளுக்கோ அவன் தன்னை மட்டும் பாராததில் ஓர் ஏமாற்றம் கவ்விக் கொண்டது.
அர்ஜூனோ, “கேர்ள்ஸ்.. இனிமேல் அவன் சொன்னான்.. இவன் சொன்னான்னு.. பாவாடை, சட்டை, பேட்டா செருப்பு போட்டு வர்றதைப் பார்த்தேன்”என்று ஜூனியர்ஸூக்கும் எச்சரிக்கை விடுத்தவன், “இது யுனிவர்சிட்டி.. யார்க்கும் யாரையும் கட்டுப்படுத்தும் அதிகாரமோ, உரிமையோ கிடையாது.. புரிஞ்சுதா??”என்று இறுதியில் அதட்டிக் கேட்டான்.
“புரிஞ்சுது சீனியர்!!”-என்றனர் அனைவரும் கோரஸாக. அவள் மட்டும் மௌனமாக, கூட்டத்தில் ஒருத்தியாக. “நான் அர்ஜூன் பாலகிருஷ்ணன்..”என்று தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டதும் கூட்டத்தில் ஓர் சலசலப்பு.
“அட அப்படியாயின்.. பாலகிருஷ்ணன் அமைச்சரின் மகனா இவன்?”-ஆமாம் அவன் மந்திரி மகனே தான். அவன் பின்னணி கூட கொஞ்சம் பேசத்தக்கதாகவே இருந்தது.
தன் செல் நம்பரை மொழிந்தவன், “இது தான் என் நம்பர்.. உங்களுக்கு ஏதாவது ரேகிங் தொல்லைநோ.. யுனிவர்சிட்டி பேஸிக் ஃபேஸிலிட்டீஸில் ஏதாவது பிரச்சினைய் இருந்தால் நீங்க என்னைக் கான்டாக்ட் பண்ணலாம்.. எதுவா இருந்தாலும் தயங்காமல் கேட்கலாம்”என்று கூற, அந்தப் பத்தொன்பது வயது இளம் பெண்ணின் மனதில் அவன் நம்பர் பசுமையாகப் பதிந்து போனது.
அன்றிலிருந்து அர்ஜூன் இந்திரபிரஸ்தத்தின் அர்ஜூனாகவே தெரிந்தான். அந்நேரம் அர்ஜூன் அருகே அவனை விடவும் உயரமாக, விரிந்ம மார்புத் தசைகளுடனும், பரந்த தோள்புஜங்களும் அகன்று தெரிய, டீஷேர்ட் மற்றும் டெனிமில், அவளையே வைத்த கண் வாங்காமல் நின்றிருந்தான் “இளங்கோ”.
பார்ப்பவலை ஈர்க்கும் சற்று பெரிய நயனங்கள் ஷக்தியுடையது. நயனங்கள் மட்டுமா பெரிது? எதையெல்லாமோ எண்ணி தறிகெட்டு ஓடியது மனம். அர்ஜூனை “ஆ”வென்று வாய் பிளக்காத குறையாக பார்க்கும் ஷக்தியின் கண்களில் தெரிந்த திரட்சியில், இளா வாய்பிளந்து நிற்கும் படியாயிற்று.
திருத்தப்படாத அடர்ந்த புருவங்கள், காதோரம் வளர்ந்திருக்கும் பூனைமுடி, கன்னத்தில் ஆங்காங்கே ரோஸ் நிறத்தில் பளபளக்கும் பருக்கள் என்று இயற்கையிலேயே ஷக்தி அழகி!!
இளங்கோவின் கண்கள் மெல்ல கீழிறங்கி அவளுடைய முழங்கால்களைத் தழுவிநமு. கறுமை படராத அழகிய இளஞ்சிவப்பு நிற மூட்டுக்கள் அவளை. ஒரு உரோமம் கூட இல்லாத பால் நிற சரும மேனி பளபளக்கும் அவளுடைய ஆடுதசைக் கால்கள். அவளுடைய கால்கணுக்கூட சிவப்பாக இருக்கக் கண்டு அதிசயித்தது இளங்கோவின் இதயம்.
அவன் கண்கள் மீண்டும் அவள் வதனத்திற்கு இடம்பெயர்ந்து, அவளமு ஈரம் தோய்ந்த ரோஜா இதழ்களை, சிவப்பேறிய கண்களுடன் ஓரிரு நிமிடங்கள் பார்த்து.
காலேஜில் இதுவரை எத்தனையோ அழகிகளைப் பார்த்திருந்தாலும், ஷக்தி சம்திங் ஸ்பெஷல் அவனுக்கு. அவள் த்னனைப் பாராமல் அர்ஜூனையே பார்ப்பது சிறு அசூயை ஏற்படுத்தியது இளாவுக்குள். அனைவரும் களைந்து செல்ல, ஷக்தி தான் அங்கிருந்து அசையாமல் அர்ஜூனையே பார்த்திருந்தாள்.
அங்கணம் அர்ஜூனோடு நின்றிருந்த இன்னோர் சீனியர் தன்னை முறைத்துப் பார்த்திருப்பதை சற்றும் எதிர்பாராதவள், தடுமாறி நின்றாள்.
அர்ஜூனை வைத்த கண்வாங்காமல் பார்த்து வைத்தவள் அவனைக் கண்டு மிரண்டு போனதில் சிறு கோபம் முளைத்தது அவனுள்.
அடித்தொண்டையில் இருந்து சீறியவன், “என்னடீ அங்கே பார்வை?”என்று ஆரம்பத்திலேயே மரியாதை தூள் பறக்கக் கேட்க, அதிர்ந்தாள் ஷக்தி. கண்ணிமைகள் “பச்சக் பச்சக்”என்று முத்தம் வைத்துக் கொண்டன திகைப்பில்.
“அடச்சீ.. ஆம்பளைங்களையே நீ பார்த்ததில்லையா?”என்று திட்டியவன், “க்ளாஸூக்கு போ”என்று மிரட்ன, சற்றே பதறினாலும், “இவன் என்ன.. என்னை இந்த மிரட்டு மிரட்டுகிறான்??”என்று தோன்ற, இளங்கோவை முறைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள் ஷக்தி.
அந்த சம்பவத்திலிருந்து ஷக்தியின் கணெகளெ, அந்த காண்டீப மகாராஜனாகிய அர்ஜூனை ஆர்வத்துடன் பின்தொடர, அதனைத் தொடர்ந்து இளங்கோவின் கண்களும், ஷக்தியின் கண்களும் ஒன்றையொன்று மோதிக் கொள்வது வாடிக்கையாயிற்று. ஆனால் அர்ஜூனை அவள் காதல் கமழப் பார்த்த போதெல்லாப், இளங்கோ ஏன் முறைக்கிறான் என்று அவளுக்கு இறுதிவரை புரியவேயில்லை.
ஒருவேளை அர்ஜூனை, அவனும் காதலிக்கிறானோ? இப்போது தான் ஆண்களை ஆண்கள் காதலித்து, கல்யாணம் செய்து, குடும்பம் நடத்தும் விந்தை எல்லாம் நிகழ்கிறமே? அது போல ஏதேனும் இருவருக்கிடையேயும் இருக்குமோ..?என்ற வேடிக்கையான எண்ணம் தோன்றியது சின்னப் பெண் ஷக்திக்கு.
அதேசமயம் அவளுடைய அர்ஜூனும், இளாவும் ஒருவைரயொருவர் தாபத்துடன் பார்த்த வண்ணம், காதலுடன் நயனமாக நிற்பது போல காட்சி தோன்ற பதறியடித்துக் கொண்டு நடப்புக்கு வந்தாள் ஷக்தி.
அதை எண்ணும் போதே முகம் அஷ்டகோணலாகிப் போனது அவளுக்கு.
அன்றும் அப்படித்தான் ஓர் நிகழ்வு நடந்தது. காலேஜ் கிரிக்கெட் மைதானத்தில், கைகளில் கிரிக்கெட் மட்டையுடனும், கால்களில் தை பேடுடனும் நின்றிருந்தான் அர்ஜூன். அவன் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லையாதலால், அவனுடைய கேசத்தில் வழிந்தோடிய வியர்வையில், அவன் கேசம் நெற்றியில் படிந்திருந்தமையானது தனியழகு!!
பேட்டை ஏந்தியிருந்த அவனது கைகளின் வனப்பு, உடல்வாகு எல்லாம் ஏதொ செய்ய, கேன்டீனிற்கு செல்ல வேண்டியவள் அப்படியே நின்றாள். அவளுடைய அழகான கை நகங்கள், முத்து மூரல் பல்வரிசைக்குள் அடைக்கலமாகியிருந்தது. டென்ஷனுடன், நகம் கடித்துக் கொண்டே, அர்ஜூனின் பேட்டிங்கிற்காக காத்திருந்தாள் அவள்.
வாவ்!! சிக்ஸ்!! அவள் அருகே பவுண்டரியைத் தாண்டி வந்து விழுந்த பந்தைக் கண்டதும், துள்ளிக் குதிக்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு. இருந்தாலும் அவள் கண்கள், அவள் மானசீகமாக வடித்துக் கொண்ட ஒருதலைக் காதலனைப் பார்க்க, யாரோ தன்னை வெகுநேரமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது உணர்ந்து திரும்பிப் பார்த்தாள் அவள்.
அங்கே நின்றிருந்தான் இளங்கோ. அப்படியானால் இளங்கோவும் அங்கேயா நின்றிருந்தான்? நெற்றிக்கண் திறந்த சிவன் போல, தன்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த இளங்கோவின் விழிகளை, நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தவித்துப் போனாள் ஷக்தி.
ஆண்களையே பார்க்காதது போல அர்ஜூனைப் பார்த்து வைத்த அவள் பார்வையில், அவன் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான்? என்று எண்ணிக் கொண்டவள், தன் சுருள் அளகக் கூந்தலை சரி செய்வது போல, நிலையை சமாளிக்குமுகமாக அங்கிருந்து வேகமாக நகர்ந்தாள். அப்போதும் கூட இளாவின் முறைத்தல் பார்வை அவளைத் துளைக்கவே செய்தது.
அன்றிலிருந்து அர்ஜூனை அவள் சைட் அடித்த கணமெல்லாம், இளாவின் முறைத்தல் பார்வை ஞாபகத்துக்கு வந்து போனது. அதே சமயம், கொஞ்சம் அலெர்ட்டாக இளாவும், அங்கே இருக்கிறானா? என்று தேடத் தொடங்கியிருந்தாள் அவள்.
ஆண்களின் கண்களைப் பார்த்து நிமிர்வாகப் பேசும் ஷக்தி கொஞ்சநாளாக, அர்ஜூனின் முகம் பார்க்கவும், அருகே வந்தால் உடல் பரிதவிக்க நிற்கிறாள். அப்படியானால் இது காதலே தான்!அவனாக, அவள் காதலையுணர்ந்து, அவளிடம் காதல் சொல்லும் வரை பொறுமையில்லாதவன், அவனிடம் காதல் சொல்ல முன்வந்தாள் செல் வழியாக.
என்ன தான் அலர்ட் ஆறுமுகமாகவே இருந்தாலும், காதல் சொல்லணும் என்று வரும்போது, இயல்பாக வரும் தயக்கமும், பரிதவிப்பும் ஷக்தியை விட்டு வைக்கவில்லை.
முதன்முதலாக காலேஜில் அர்ஜூன் தந்த இலக்கங்களை, அனிச்சையாய் அழுத்தியது அவள் கைகள். மறுமுனையில் செல் எடுக்கப்பட்டதும் நிமிடமும் தாமதிக்காமல், “ஹலோ அர்ஜூன்”என்றாள் ஷக்தி.
“நீங்க யாரு?”- மறுமுனையில் இருந்மு ஏகாந்தமான ஓர் குரல் கேட்டது.
நா வேறு தடுமாற்றத்தில் வரண்டு போக, “ந்நா.. நான.. நான் ஷக்தி.. ஃபர்ஸ்ட் யர் ஷக்தி”என்றாள் இவள்.
“ஓ.. நீயா சொல்லு.. என்ன விஷயம்?”-அவன் குரலில் சிறு உதாசீனம் படர்வதை அவதானித்தவளுக்குள் கவலை பிறந்தது.
“அ.. அது.. அது வந்து.. நான்.. உ.. உங்கிட்ட பர்ஸனலா ஒ.. ஒரு வ்வி.. ஷயம்..”என்று தட்டுத் தடுமாறி சொல்ல, அவள் எதை சொல்ல வருகிறாள் என்று அவனும் ஊகித்திருக்கவும் கூடுமோ? “நான் இப்போ பிஸி.. போனை வை”என்று கறாராக மொழிந்தது அவன் குரல்.
அவள் முகம் வாட நிற்க, மறுமுனையில் இருந்து, “யாரு இளா.. என் ஃபோனில்?”என்று பக்கத்தில் அமர்ந்திருந்த இன்னோர் ஆண்குரல் கேட்க, ஜர்க்காகிப் போனாள் ஷக்தி.
அப்படியானால் இவ்வளவு நேரம் அவளுடன் அர்ஜூன் போல பேசியது நெடியவன் இளங்கோவா? இவள் கோபத்தில் முகம் சிவக்க நின்றிருக்க, இதுவரை பேசிய இளாவோ, “யாரோ ராங் கால் மச்சி”என்று சொல்வதுப் காதில் கேட்க, ஆத்திரத்தில் அழைப்பைத் துண்டித்தாள் ஷக்தி.
அர்ஜூனுக்கு வந்த அழைப்புக்கு இவன் ஏன் பதில் அளிக்கிறான்? இப்போது மட்டும் அவன், ஷக்தி கண் முன்னாடி இருந்தால், பிடரி மயிரைக் கொத்தாகப் பிடித்தாட்டி, கன்னத்திலேயே அறை விட வேண்டும் போல இருந்தது.
“இளங்கோ.. நீ தான்டா.. என் காதலுக்கு எதிரி.. அர்ஜூன் மட்டும் எனக்கு ஓகே சொல்லட்டும்.. அப்புறம் முதல் வேலையா உன் ஃப்ரன்ட்ஷிப்பை கட் பண்றேன்..”என்று உள்ளுக்குள் கறுவிக் கொண்டவளுக்கு, குறுந்தகவல் மூலமாகவாவது அர்ஜூனுடன் தொடர்பு கொள்ள வேண்டும் போல இருந்தது.
இப்போது செல் கண்டிப்பாக, அந்த குரங்கு இளாவின் கைகளில் இருக்கும் என்ற் ஊகித்துக் கொண்டவள், ஓரிரு மணித்தியாலங்கள் கழித்து, அர்ஜூனுக்கு குறுந்தகவல் அனுப்பலனாள்.
“ஹாய்.. ஐம் ஷக்தி.. ஆர் யூ தேர்?”
ஒரு சில நிமிடங்களில் அவள் செல் குறுகுறுத்து அடங்கியது. ஆம்,அவனிடமிருந்து பதில் வந்து விட்டது. “யெப்.. வாட் டூ யூ வான்ட்?”-கிசுகிசுப்பான குரலில் அவன் ரிப்ளையை வாசித்தாள் அவள்.
“கேன் ஐ கால் யூ நவ்?”- பதில் வந்த அடுத்த செக்கன் இவளிடமிருந்து ரிப்ளை பறந்தது. ஆனால் அவளைப் போல அவசரம் காட்டவில்லை அவன்.ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு, “நோப்.. ஐம் பிஸி ரைட் நவ்”என்று வந்தது பதில்.
காதல் கொண்ட பெண்மனம் அல்லவா? சோர்ந்தது உள்ளம். “ஓஹ்.. வென் கேன் ஐ கால் யூ?”என்று அந்தப் பழைய ரக நோக்கியாவிலிருந்து தட்தட்டென டைப் செய்து மெஸேஜைத் தட்டிவிட்டாள் அவள்.
இந்தமுறை அவனிடமிருந்து அதிவேகமாக வந்தது பதில். “நெவர் எவர் கால் ஹிப்.. காட் இட்?”
‘கால் ஹிம்’ மா? அவன் மெஸேஜிலிருந்த “ஹிம்” அவளைச் சிந்திக்கச் செய்ய, “ஹூ ஆர் யூ?”என்று கேட்டு அனுப்பி வைத்தாள் அவள்.
“அது உனக்கு தேவையில்லாத விஷயம்”-தங்கிலீஷில் வந்தது பதில். அது எப்படி தேவையில்லாத விஷயம் என்று அவன் தீர்மானிக்கலாம். வந்த கடுப்பில், தாருமாறாக அவனை கிழி கிழி என்று கிழித்து, மெஸேஜ் டைப் பண்ணிக் கொண்டிருந்த நேரம் , அவனிடமிருந்து அழைப்பு வந்தது.
அழைப்பை எடுத்தது, இத்தனை நேரம் அவளுடன் சேட் செய்து கொண்டிருந்தது எல்லாமே சாக்ஷாத் அந்த இளாவே தான். இவளும் இருந்த கடுப்பில், அழைப்பை ஏற்று, “ஹலோ என்ன?”என்று கேட்டு வைக்க, மறுமுனையில் இருந்து அதிரடியாக வசைமாரி பொழிந்தது இளாவின் குரல்.
“உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? காதில் நங்கூரம் பாய்ச்சி தான் சொல்லணுமா? அவனுக்குக் கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணாதே”என்ற அவனது சீற்றக் குரல், அவள் காதிலிருந்து செல்லை தூரமாக்கிய பின்னும் கேட்டது.இவளும் விட்டாளா என்ன?
அது தன் சீனியர் என்பதை மறந்து, காதலுக்கு முதல் எதிரி என்று கொண்டவள்,” என்னடா.. ஓவரா பேசுற? நான் அர்ஜூன் கூட பேசினால்.. உனக்கென்னடா?” என்று டபிள்டா போட்டுக் கேட்க, “என்னது டாவா?”அதிர்ச்சியுடன் கேட்டான் இளா.
“ஆமாடா.. டா தான்டா.. உனக்கு எதுக்குடா மரியாதை?”என்று கோபத்தின் உச்சத்தில் சொல்ல, இளாவுக்குள் சரியாகப் பார்த்தால் கோபம் தானே வந்திருக்க வேண்டும்? அது தான் இல்லை. அவளின் உரிமையான பேச்சு இளங்கோவினுள் பூஞ்சோலை மலர்களைச் சொறிய, அவன் இதழோரம் ஓர் சிரிப்பு.
அதைக் குரலில் காட்டிக் கொள்ளாமல், “மரியாதையா பேசுடீ!!”என்றான் அவனும் டீ போட்டு.
மரியாதை த்தெரியாதவன் க்கிட்ட.. நான் எதுக்கு”டா.. மரியாதையா பேசணும்?”என்று மொழிந்தாள்.
“அடச்சீ போனை வைடீ.. உங்கிட்ட போய் பேசினேன் பாரு..”என்றவன், அவள் கத்திக் கொண்டு இருக்கும் போதே அழைப்பைத் துண்டித்தும் இருந்தான். பாவம் ஷக்தி. இவள் தான்.. அவன் துண்டித்தது தெரியாமல்.. ஓரிரு நிமிடங்கள் ஆத்திரத்தில் கத்திக் கொண்டேயிருந்தாள்.
இறுதியில் அவன் அழைப்பைத் துண்டித்து விட்டதை உணர்ந்து, முகம் கடுக்க நின்றாள்.
.
அத்தியாயம்– 6
கோபத்தில் கை, கால்களை வீசிக் கொண்டு நடந்ததாலோ என்னவோ, அவள் அணிந்திருந்த முழங்காலை மறைக்கும் மிடியில், அவள் பின்னழகும் நன்றாகவே ஆடி அசைந்து கொண்டிருந்தது.
அந்த நெடுமரம்.. இளங்கோவைப் பற்றி எண்ணும் போது அவளுள் மலையளவு கோபம் மிகுந்தது. .நேற்று அர்ஜூன் போல இளங்கோவும் அவளுடன் பேசி வைத்தால் இவளும் தான் என் செய்வாள்?
அதை எண்ணும் போது.. இளங்கோவை இன்று கைமா ஆக்க வேண்டும் போல வெறியே மிகுந்தது. நேரே நடந்து சென்று பல்கலைக்கழக ஓட்டுக் கூரை கொண்ட கூடாரங்களுள் ஒன்றை அடைந்தாள் ஷக்தி.
அங்கே இளங்கோ இல்லையாயினும், அமைதியாக செல்லை நோண்டிய வண்ணம் அமர்ந்திருந்தான் இளங்கோவின் நண்பன் ஆனந்த். “ஆனந்த் அண்ணா…”என்றவளாக பட்டென அந்த மேசையில் அடித்துக் கேட்ட தினுசில் செல்லில் இருந்து விழியெடுத்துப் பார்த்தான் ஆனந்த்.
ஆனந்தோ அவளைப் புரியாது பார்த்த வண்ணம் இருக்க, இவளோ,, “இப்போ .. இளங்கோ எங்க இருப்பார்னு தெரியுமா ?” என்று கேட்டாள்.“ஓ.. அவனா? தெரியாதேமா..?” என்றான் ஆனந்த்.
“உங்க கூட தானேண்ணா குட்டிப் போட்ட பூனை மாதிரி அங்கேயும், இங்கேயும் சுத்திட்டு இருப்பான்?” என்று கேட்டாள் அவள். ஆனந்த் வாய் திறந்து ஏதும் பேசவில்லை. ஷக்தியுடன் நிகழும் முதல் உரையாடல் அவனுக்கு.
அவள் யார்?பேர்? ஊர்? என்று எதுவுமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை அவனுக்கு .ஆயினும் தன் தாடையை சொரிந்தவாறு அவளை நோக்கி, “ஆமா.. உன் பெயரென்ன?”என்று கேட்டான்.
அவளுக்கோ.. சீனியரிடம் பேசுகிறோம் என்ற பதற்றம் கிஞ்சிற்றும் இல்லை. “ஷக்தி ஃபர்ஸ்ட் யர் ஷக்தி..”என்றாள் தெனாவட்டாக.“ஷக்தியாஆஆ?…”-பேரைக் கேட்டதும் அதிர்ந்து போனான் ஆனந்த்.
“ஏன்.. இவ்ளோ ஷாக்கிங்?”என்று தன் இடது புருவம் உயர்த்திக் கேட்டாள்.
அவன் குரல் முன்னிலும் பார்க்க தணிந்திருந்தது. “அது … வந்தும்மா… உன் கிட்ட நம்பி விஷயத்தை சொல்லலாமா?”என்று எச்சில் கூட்டி விழுங்கிய வண்ணம் தயங்கித் தயங்கிக் கேட்டான் அவன். “என்ன விஷயம்ணா?”- கண்களில் ஆர்வம் மின்னக் கேட்டாள் அவள்.
அவனுக்கும் ஷக்தியின் கண்களில் மிளிர்ந்த குழந்தைத்தனம் பிடித்துப் போகவே, “அது ஒண்ணுமில்லைமா.. ‘இப்படி தான்.. ஷக்தின்னு ஒரு பொண்ணு வந்து … இளங்கோ எங்கே ன்னு என்னைத் தேடி வரும்.. நான் எங்கே போறேன்னு சொல்லிடாதே மச்சின்னு சொல்லிட்டுப் போனான்” என்றான் ஆனந்த்.
வேண்டுமென்றே அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு, “அண்ணா ப்ளீஸ்ணா.. நான் உங்க தங்கச்சி மாதிரிண்ணா.. என் கிட்ட
சொல்லக் கூடாதா?”என்று கேட்க, அவள் போட்ட பந்தில்..விக்கெட் அவுட்டானான் ஆனந்த்.
“அவன் ஜிம்னாஸ்டிக் ஸ்டேடியத்தில் இருப்பான்மா..”என்று சொல்ல ,மகிழ்ச்சியில், “தேங்க்ஸ்ணோ”என்ற வண்ணம், அங்கிருந்து ஜிம்னாஸ்டிக் ஸ்டேடியத்தை நோக்கி விறுவிறுவென நடந்தாள் ஷக்தி.
அங்கே போனதும் கூட அவளுக்கு வினையாகவே போயிற்று.
அவள் தேடி வந்த இளா ஜிம்னாஸ்டிக் அரங்கில் இருக்கவில்லை. மாறாக அதற்கு பக்கத்தில் உள்ள உள்ளக நீச்சல் தடாகத்தில் தான் இருந்தான்.
அங்கே யாரும் இருக்கவில்லை. அவளது காதலின் எதிரி இளங்கோவைத் தவிர.
தண்ணீரில் வலிமையான துடுப்பு போல கைகளும், கால்களும் மேலே, கீழே சென்று வர கண்களுக்கு “கோகிள்ஸ்” அணிந்து நீந்திக் கொண்டிருந்தான் இளா.
யாருமில்லா தனிமையில்.. நீந்திக் கொண்டிருந்தவனின் வலிமையான தோள் புஜத்தையும், வாலிப்பான கைகளயும் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
நீந்திக் கொண்டிருந்தவனுக்கும் அவள் வந்திருப்பது புரிந்திருக்கக் கூடும்.. தன் நீச்சல் ரவுண்டினை முடித்துக் கொண்டு மேலேறி வந்தவன், வெற்று மார்புடன், இடுப்புக்கு கீழே ஸ்விம் சூட்டுடன் தண்ணீர் சொட்டச் சொட்ட.. பெரும் பெரும் மூச்சுக்களை எடுத்து விட்டுக் கொண்டே நின்றான்.
அர்ஜூனின் மேனரிஸங்களை மாத்திரமே, இரசித்துப் பார்த்திருந்தவளுக்கு.. ஷேவ் செய்யப்பட்டு, பளிச்சென்று இருந்த அவன் முகம், நீர் வழியும் திண்ணிய வெற்றுமார்பு..அவன் எடுத்து விடும் மூச்சு, அவனிலிருந்து இவளை ஊடுருவித் தாக்கிக் கொண்டிருந்த ஈரத்தின் குளிர்மை எல்லாம் என்னமோ செய்தது அவளை.
அடிவயிற்றிலே ஓர் சுகமான அவஸ்தை எழுந்து, உடம்பு முழுவதும் பரவுவது போல ஓர் உணர்வு மயக்கம் தோன்றி மறைந்தது அவளுக்கு.
அடுத்த செக்கன்.. திகைப்பூண்டை மிதித்தாற் போன்று அவள் செய்து கொண்டிருக்கும் மடத்தனம் புரிந்தது அவளுக்கு. தன்னிலேயே ஒரு அவமானம் சூழ்ந்து கொள்ள, சட்டென அவனுக்கு புறமுதுகிட்டு நின்றவள்,
“நான் எதையும் பார்க்கலை” என்று முணுமுணுத்தமையானது இளங்கோவின் காதுகளில் நன்கே விழவே, அவள் செய்கையில் சட்டென மலர்ந்தது அவன் இதழ்கள்.
ஆனால் அவனது துரதிர்ஷ்டம் அவன் சிரிப்பை அவள் பார்க்காமல் போனாள். அவன் மேலிருந்த ஆத்திரம், கோபம் எல்லாம் ஒட்டுமொத்தமாக மறக்கடிக்கப்பட்டு விட, அங்கிருந்து போனால் போதும் என்ற எண்ணத்துடன் கிட்டத்தட்ட எகிறி குதித்துத் தான் ஓடினாள் அவள்.
அவள் ஓடுவதைப் பார்த்து அவன் புன்னகை இன்னும் பெரிதாக, காற்றில் கை நீட்டி “ஹேய் நில்லு.. என்ன விஷயம்னு சொல்லிட்டுப் போ” என்று இரைந்தான் அவன்.
“நான் எதுவும் சொல்ல வரலை” என்றபடி ஓடும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
அந்த நாள் முழுவதும் மனக்கண்ணுக்குள் வந்து அவள் மனதை கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தான் நீச்சல் வீரன் இளங்கோ. அவளுக்கு தன்னைத் தானே சமரசம் செய்து கொள்ள ஓரிரு நொடிகள் தேவைப்பட்டது.
எந்த ஆடவனையும், அவள் வெற்று மார்புடன் பார்த்ததுமில்லை. இன்னும் ஏன் அவள் அண்ணன் பரசுராமன் கூட.. அப்படி அவள் முன்னிலையில் வந்ததுமில்லை. அப்படியிருக்க இளாவை அந்த கோணத்தில் பார்த்தது, அவளை ஏதோ செய்தது உள்ளே.
அங்கே லைப்ரரியில் வணிகப் பிரிவுக்கான லென்டிங் மெட்டீரியல் செக்ஷன். அவள் தேடி வந்த கார்ள் மார்க்ஸின் புத்தகம், ரொம்பவும் உயரமான புத்தக அடுக்கில் இருக்கவே, அதை எடுக்க பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள் ஷக்தி.
மூன்று தடவைக்கும் மேலாக எட்டி எட்டி புத்தகம் எடுக்க முயற்சித்துத் தோற்றாள் அவள். அந்த கணம் அவள் எதிர்பாராத விதமாக.. அவள் மேனியின் பின்புறம்.. ஏதோ ஒரு பெரும் சக்தி நின்று.. தன்னை நெருங்கி நிற்பதை உணர்ந்தாள் அவள்.
அவள் பின்னால் இருந்து நரம்போடிய மாநிறக்கையொன்று உயர்ந்து.. அவள் எடுக்க சிரமப்பட்ட புத்தகத்தை அநாயசமாக எடுக்க, வெடுக்கென்று திரும்பியவள், அங்கே நின்றிருந்த இளங்கோவின் முரட்டு மாருடன் இடித்துக் கொண்டாள்.
எல்லாவற்றுக்கும் மேலாக அவன் இதழ்களோ, அவள் திரும்பிய தினுசில், அவள் நெற்றியில் பச்சக் என்று முத்தம் வைக்கலாயிற்று.
அவளும், அவனது எச்சிலின் குளிர்மையை ஏற்காமல் ஏற்கத் தான் செய்தாள்.. அது யதேர்ச்சை!! அவளோ இளங்கோவைக் கண்டு தலையைச் சற்றே பின்னே சாய்க்க, புத்தக ராக்கையின் உலோகத்தில் அவள் பிடரி இடித்துக் கொள்ளப் போனது.
நிமிடத்திற்குள் சுதாரித்துக் கொண்டவன், தன் கையை வைத்து அவள் பிடரி அடிபடாமல் காத்தான். ஸ்தீரியை காப்பது புருஷலக்ஷணமாயின், அந்நேரம் அவனிடம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது புருஷலக்ஷணமே தான்!!
அவனைத் தள்ளிக் கொண்டு.. அவன் பிடியிலிருந்து வெளியே வந்த ஷக்தி, “நீ… ந்நநீ.. எங்கே இங்கே?”என்று கேட்டாள் அவள்.
ஒன்றுமே நடவாதது போல முகத்தை ரொம்ப கூலாக வைத்துக் கொண்டு, “லைப்ரரிக்கு எதுக்கு வருவாங்க.. புக் ரீட் பண்ணத்தான்”என்றான்.
அவளோ, நேற்று நடந்த திருகுத் தாளம் ஞாபகம் வந்து அங்கிருந்து கடுப்புடன் செல்ல முனைய, அதற்கு விடாமல் கை நீட்டி தடுத்தான் அவன். தான் செல்ல விடாமல் தடுக்கும் இளங்கோவை முறைத்துப் பார்த்தாள் அவள்.
அவளது முறைக்கும் நயனங்களையே தின்று விடுபவன் போல பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவளோ கட்டுப்படுத்திய கோபத்துடன், “வழியை விடுங்க..அடுத்தவன் ஃபோன் காலுக்கும், மெஸேஜூக்குப் ர்ரிப்ளை பண்றவன் கூட பேச பிடிக்கலை” என்றாள் அவள்.
“அர்ஜூன் அடுத்தவன் கிடையாதுமா.. என் நண்பன்..” என்றான் இளங்கோ.. இதழ்களில் சின்ன நமுட்டுச் சிரிப்புடன்.
அவளோ நெடிய பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டே அவனை நோக்கி, “இருந்தாலும் நீங்க ஆன்சர் பண்ணது தப்பு.. வழியை விடுங்க”என்றவள், அணையாய் தடுத்த அவன் கையை உதறித் தள்ளிக் கொண்டு வெளியேறினாள்.
அன்று ஷக்திக்கு விடிந்த நாள் நன்னாளாகவே இல்லை என்று சொல்வது தான் சாலப்பொருந்தும். புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிக்கட்டுக்களில் இறங்க முற்பட்ட போது, அவளது இடது ஆடுதசைக்கால்கள் இறுக்கப் பிடித்துக் கொள்ள, மேற்கொண்டு ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் போக, படிக்கட்டின் கைப்பிடி வரிசையைப் பிடித்துக் கொண்டு வலிபொறுத்து நின்றாள்.
அந்த தசைப்பிடிப்பு அவளுக்கு நேரங்காலமே தெரியாமல் வருவது இயல்பு தான். போயும், போயும் இந்தமாதிரியான நேரத்திலா இது வர வேண்டும்?
திருவிழாவில் தாயைத் தொலைத்த குழந்தை போல அச்சத்தில் அவள் நின்றிருந்த போது தான்.. அவளைக் காக்கும் ஆபத்பாந்தவனாக அங்கே வந்தான் இளங்கோ.
அந்த நேரம் ஒரு முரட்டுக்கரம் அவள் இடையூடு கையிட்டு ஏந்திழையாக அவளைத் தூக்க, தான் அந்தரத்தில் தூக்கப்படுவதை உணர்ந்து பதறிப் போனாள் அவள்.
தலை திருப்பிப் பார்த்த போது அவள் முகம் பக்கத்தில் இருந்த திண்ணென்ற மார்பைக் கண்டு மெய் சிலிர்த்துப் போய் நின்றிருந்தாள்.
சிவந்த கண்களுடன், நகர முடியாமல் தன் ஆடு தசைக் காலை அழுந்தத் தேய்த்துக் கொண்டிருந்த ஷக்தியைக் கண்டதும் அவனாலும் தான் அமைதியாக இருக்க முடியுமா என்ன?
அதனால் தான் விரைந்து செயல்பட்டு அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டான் அவன். இவளோ அத்தனை வலியிலும் தன்னை ஓர் அந்நிய ஆடவன் தூக்கியிருப்பதைத் தாங்க மாட்டாது, “என்ன பண்றீங்க இளா.. யாராவது பார்த்தால் தப்பாயிடும்” என்றாள்.
அவனோ பதிலுரைக்காமல், அநாயசமாக அவளைத் தூக்கிக் கொண்டு, இறுதி படி வரை வந்த பின்பே அவளை இறக்கி விட்டான். இறுதி படியில் அவளை அமர வைத்தவன் அவளை நோக்கி, “கொஞ்சம் இரு..” என்றவன் ஓடோடி சென்று தன் ஷோல்டர் பேக்கிலிருந்து ஸ்ப்ரேயை எடுத்து வந்து, அவள் பக்கத்தில் முளந்தாளிட்டு அமர்ந்தவனாக, ஸ்ப்ரேயைத் தெளித்து விடப்போக, அதற்கு விடாமல் அவன் கையைப் பற்றிக் கொண்டவள், “இளா என்ன பண்றீங்க?”என்று கேட்டாள்.
அவனுக்கோ அவளுடைய இளா என்ற அழைப்பு உள்ளுக்குள் சந்தோஷத்தைக் கொடுக்க ,வலி சுமந்த அவள் விழிகள் பார்த்து சற்றே அதட்டும் குரலில், “லெட் மீ டூ இட்.. சரியாகிடும்.. ஜஸ்ட் ஸ்ப்ரே தான்” என்றவன், கருமத்தில் கண்ணாயினான்.
ஸ்ப்ரேயைக் குலுக்கி தசை பிடித்துக் கொண்ட இடத்தில் ஸ்ப்ரே செய்தவன், தலையை நிமிர்த்திய போது அவள் தன் கீழுதட்டை அழுந்தக் கடித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.
இளம் ரோஜா நிறத்தில் இருந்த அவளது உதட்டினையே ஒரு சில வெறிக்க வெறிக்கப் பார்த்தான் இளங்கோ. அவளது பார்வையோ தசைபிடித்த கால்களில் இருக்க, இவன் பார்வையோ அவளையே தான் மேய்ந்தது.
அவள் ஏதோ மாற்றத்தை உணர்ந்து சட்டென நிமிர்ந்து பார்க்க இதுவரை அவளை சைட் அடித்த இளங்கோ, ஜென்டில்மேன் இளங்கோ ஆகிப்போனான். அவளது கண்களை கண்ணியமாக நோக்கி, “இப்போ எழ முடியுதான்னு பாரு” என்றுரைத்த வண்ணம், அவளது கைச்சந்தைப் பற்றித் தூக்கி நிமிர்த்தவும் செய்தான்.
தன் மென்மையான கைச்சந்தில் அவன் விரல்களின் அழுத்தம் கூட குறுகுறுப்பை கொடுத்தது ஷக்திக்கு. கைப்பிடியைப் பற்றிக் கொண்டு எழுந்தவள், “ம்.. ஐ கேன் டூ இட் அலோன்”என்றாள்.
அந்த நேரம் லைப்ரரி கண்ணாடி வழியாக.. வெளியே பாதையில் தன் பாங்கற் கூட்டத்தோடு செல்லும் அர்ஜூனைக் கண்டு கொண்டது அவள் விழிகள். இளங்கோ தன் கைச்சந்தைப் பிடித்திருப்பதைக் கண்டால் அர்ஜூன் தன்னைப் பற்றி என்ன நினைக்கக் கூடும் என்று தோன்ற, “விடு இளங்கோ.. நான் தான் விடுன்னு சொல்றேன்ல?” என்று படபடப்புடன் எழுந்தவள் சமநிலை தடுமாறி அவன் மீதே விழப்போக, அவள் தன்னோடு விழுந்து விடாமல் இருக்க.. அவள் இடையை லபக்கென்று தாவிப் பிடித்துக் கொண்டது அவன் கைகள்.
அவளுக்கோ… தன் இடையை அவன் பிடித்துக் கொண்னதும்.. மூக்கு நுனி சிவந்து விறுவிறுவென கோபம் போனது. இவனுக்கோ.. எக்குத்தப்பாக இடையில் கை வைத்து அழுத்தி விட்டோமே என்று அவமானமாகிப் போனது.
அவனிலிருந்தும் சமாளித்து எழுந்து கொண்டவள், கார்ள் மாக்ஸின் இத்தாம் பெரிய கட்டுப்புத்தகத்தாலேயே அவனுக்கு நாலு போடு போட்டாள். இவனோ அவளைத் தடுக்க சக்தி பெற்றிருந்தும், பெருந்தன்மையாக அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டு, “ஹேய் ஷக்தி.. சொல்றதைக் கேளுடீ.. இது பை மிஸ்டேக்கின்லி ஹேப்பன்ட்டி..” என்று உரைத்துக் கொண்டிருந்தான்.
ஆத்திரத்தின் எல்லையில் ஸ்ப்ரே டின்னாலேயே அவன் நடு நெற்றிக்கு டங் என்று போட்டவள்,“இது தான் உன் பை மிஸ்டேக்கா?” என்று கேட்டு விட்டு எழுந்து செல்ல, விண் விண் என்று தெறித்த நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டே தட்டுத் தடுமாறி எழுந்தான் அவன்.
அத்தியாயம் – 7
தன்னுடைய மிட் எக்ஸாமிற்காக ப்ரிப்பேர் ஆகிக் கொண்டிருந்த ஷக்தியின் நினைவுகளை அவளையறிமால் ஆட்கொண்டிருந்தான் இளங்கோ.
இன்னும் கூட அவளது முரட்டு விரல்கள் அவளது பஞ்சன்ன இடையில் பிரயோகித்த அழுத்தம் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது அவளுக்கு.
அந்த சிந்தனையில் இருந்து மீள முடியாமல் அவள் தவித்துக் கொண்டிருக்க, அங்கணம் அவளுடைய செல் ஒருமுறை ஒளிர்ந்து அடங்கவே.. மெல்ல மெல்ல தலை திருப்பிப் பார்த்த போது, அர்ஜூனிடமிருந்து மெஸேஜ் வந்திருப்பதைக் காட்டியது அது.
எடுத்துப் பார்த்தாள் ஷக்தி. மறுமுனையில் இருந்து, “இன்னைக்கு பீக்காக் கலர் ப்ளூ மிடியில்.. பார்க்கவே ரொம்ப அழகாக இருந்த ஷக்தி”என்று தங்கிலீஷில் வந்திருந்தது தகவல்.
அன்று போல இன்றும் அர்ஜூனின் செல்லிலிருந்து இளா தான் மெஸேஜைத் தட்டிவிட்டதாக எண்ணிக் கொண்டவளுக்கு, இன்று லைப்ரரியில் நடந்தவை ஞாபகம் வரவே,“போடா பொம்பளை பொறுக்கி”என்று பதிலுக்கு தானும் தங்கிலீஷில் ரிப்ளை தட்டிவிட்டு அவனிடமிருந்து வரப்போகும் ரிப்ளைக்காக காத்திருக்கலானாள் அவள்.ஆனால் மறுபுறத்திலிருந்து கடைசிவரை ரிப்ளை வரவேயில்லை.
அடுத்த நாள் காலை.. காரைத் தரித்து விட்டு கூலிங் க்ளாஸை ஸ்டைலாக மாட்டிக் கொண்டே நடந்து வரும் அர்ஜூனை எப்போதும் போல் இமைக்காமல் பார்த்து இரசித்தாள் ஷக்தி.
அவனைக் கண்களால் ஆராதித்துக் கொண்டே, “குட்மார்னிங் அர்ஜூன்” என்று வழமை போல அவள் விஷ் செய்ய, அவனோ இவளைக் கண்டும் காணாதது போல முகத்தில் சின்ன முறைப்புப் பார்வையுடன் அங்கிருந்து நகர்ந்தான்.அவனது பாராமுகத்தில்.. இந்த ஐந்தரையடி ரோஜா மலரின் வதனம் அப்படியே இருண்டு போனது.
அதற்கு மேலும் தாங்கமுடியாமல் அவனை நாடிச் சென்று, “இன்னைக்கு என்னாச்சு? ஏன் முகத்தை உம்முன்னு வைச்சிட்டுப் போறீங்க.. எப்போவும் நான் விஷ் பண்ணால் அட்லீஸ்ட் தலையையாவது அசைப்பீங்க?எனிதிங் ராங்?” என்று கேட்க, அவன் நடை அப்படியே தடைப்பட்டு நின்றது.
“எவ்ரிதிங் இஸ் ராங் தான்.. முதலிலேயே ஜூனியர்ஸை.. ஜூனியர்ஸ்ன்ற இடத்தில் நிறுத்தியிருக்கணும்.. அது பண்ணாமல் எல்லாரும் ஈக்குவல்.. அது இதுன்னு பெரிய இவனாட்டம் சமத்துவம் பேசினேனில்லையா.. அதுக்குத் தான் நீ நல்ல மரியாதை காட்டிட்ட?”என்றான் அர்ஜூன்.
அவன் பேச்சு, சீற்றம் எதற்கும் அர்த்தம் புரியவில்லை அவளுக்கு.கண்களில் குழப்பம் குடி கொள்ள, “நா.. நானா..? நான் என்ன பண்ணேன் அர்ஜூன்”என்று கேட்டாள் அவள்.
அவனோ அவளது கண்களைக் கூர்ந்து நோக்கினான்.“நான் என்ன பண்ணேனா?” அவள் சொன்னதையே அதிர்ச்சியுடன் கேட்டவன்,அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்த வண்ணம், “நேத்து நைட் தண்ணி, கிண்ணி போட்டிருந்தியா என்ன?”என்று கேட்டான்.
அவளுக்கு நிஜமாகவே அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் போகவே, “இல்.. இல்லையே.. என்ன நடந்ததுன்னு சொல்லுங்க அர்ஜூன்” என்று இறுதியில் மன்றாடும் குரலில் முடித்தாள் அவள்.
“நான் அர்ஜுனா? நான் தான் பொம்பளை பொறுக்கியாச்சே?” என்று ஏளனமாகக் கேட்டான் அவன்.
“பு.. ப்புரியலை”- ஏதோ புரிந்தும் புரியாதது போல உணர்வு தோன்ற திக்கினாள் ஷக்தி.
“யம்மா தாயி.. உனக்கு புரிய வைச்சிட்டிருக்க எனக்கு நேரமில்லை.. தான் இன்னைக்கு அசைன்மன்ட் சப்மிட் பண்ணியாகணும்..”என்று மொழிந்து விட்டு அங்கிருந்து நகர ஆயத்தமாக,வழிநெடுகிலும் சத்தமாக முணுமுணுத்துக் கொண்டே போனான்.
“ஏதோ ட்ரஸ் அழகாக இருக்கேன்னு காம்ப்ளிமென்ட் சொன்னால்.. போடா பொம்பளை பொறுக்கி.. என்னாவொரு பட்டம்? உனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்டா அர்ஜூனா” என்று தன் சுட்டு விரலை, தனக்குத் தானே காட்டிய வண்ணம், மொழிந்து கொண்டே செல்ல அப்போது தான் அர்ஜூனின் கோபத்துக்கு காரணம் புரிந்தது அவளுக்கு.
“ஹேய்.. ஹேய் வெயிட்” என்று இரைந்து கொண்டே ஓடிச் சென்றவள், “அப்போ அந்த மெஸேஜ் அனுப்பியது.. இளங்கோ இல்லையா.. ஒருமுறை இளங்கோ உங்க ஃபோனிலிருந்து ஆன்சர் பண்ணியதால்.. நான் அவர்னு தான் நினைச்சேன்”என்றவள்,சற்றே குனிந்து தன்னிரு காதுகளையும் தொட்டவளாக, “ஸாரி.. ஸாரி ரியலி ஸாரி”என்று கெஞ்சவாரம்பித்தாள்.
அவளது விழிகளையே ஆழ்ந்து நோக்கியவன், கறார்க்குரலில்,“இப்படியெல்லாம் ஸாரி சொன்னால் ஏத்துக்க முடியாது”என்றான்.“அப்போ என்ன பண்ணனும்?”அவனது மலர்ந்த முகத்தைக் காண்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது அவளுக்கு.
தன் கையிலிருந்த நண்பனின் அசைன்ட்மண்ட்டையும், சில ஏஃபோ தாள்களையும், அவள் கையில் வலுக்கட்டாயமாக திணித்து, “வேணும்னா இந்த அசைன்ட்மண்ட்டில் உள்ளது போல பார்த்து.. எனக்கு அசைன்மண்ட் எழுதிக் கொடு” என்றவன் அங்கிருந்து வேகமாக மறைந்தும் விட்டிருந்தான்.
அவளோ கையில் திணிக்கப்பட்ட வெற்றுக் காகிதங்களையும், அவன் புறமுதுகையும் பார்த்த வண்ணம், “ப.. ட்.. எனக்கு ஆப்டர் லன்ச் மிட் எக்ஸாம் இருக்கு” என்றதெல்லாம் காற்றோடு கரைந்து தான் போனது.வேறு வழி? அவளுடைய ஒருதலைக்காதலன் அவளுக்குத் தந்திருக்கும் வேலை!!
காதல் சுழலில் ஆட்பட்டிருந்த.. அந்த அசைன்மண்ட் கூட சுகமான சுமையாகவே இருந்தது.அசைன்மண்ட் எடுத்துக் கொண்டு டீன் ஆபிஸ் முன்னிருக்கும் வரிசையான டேபிள், சேரில் போய் அமர்ந்தவள் வெள்ளைக் காகிதங்களுக்கு மார்ஜின் போட்டு மாங்கு மாங்கு என எழுதவாரம்பித்தாள்.
அந்த கணம் பக்கத்து சீட்டில் நிழலாடுவது போல தோன்ற, சட்டென திரும்பிப் பார்த்தவளின் முன்னே உள்ளங்கையில் கன்னம் தாங்கி.. இவளையே இரசனை பாவத்துடன் பார்த்திருந்தான் இளங்கோ.
இதுவரை இருந்த இரசனை பாவம் மறந்து அவளைப் பார்த்தவன், “நீயேன் அவனுக்கு எழுதிக் கொடுத்துட்டிருக்க? அவனுக்கு கையில்லையா?” என்று கேட்டான்.
“நீயேன் வந்து என்னை டிஸ்டர்ப் பண்ற? உனக்கு வேற வேலையில்லையா?”- அவன் பாணியிலேயே திருப்பிக் கேட்டாள் மங்கை.அவளது அடர்ந்த கண்ணிமைகளின் பக்கவாட்டு தோற்றத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே,“அவனெல்லாம் மடத்தைக் கொடுத்தால் இடத்தைக் பிடுங்குற ரகம்மா.. எனக்கு எக்ஸாம் இருக்கு.. என்னால முடியாது’ன்னு சொல்லிட்டுப் போக வேண்டியது தானே?” என்று கேட்டாள் அவள்.
அவள் ஹீரோவாக வடித்து வைத்திருந்த ஆணை, மடத்தைக் கொடுத்தால் இடத்தைப் பிடுங்குகிற ரகம் சொன்னது சுத்தமாக பிடிக்கவில்லை அவளுக்கு.
“நீங்க உங்க வேலையை மட்டும் பார்த்தால் நல்லது?” என்றவளுக்குள், அர்ஜூனுக்கும், தனக்கும் இடையில் மூன்றாவது நபராக இவன் வந்திரா விட்டால், நேற்று குறுந்தகவல் வந்த போது.. அனுப்பியது இளா என்று இவள் தப்புக் கணக்கு போட்டிருக்கவும் மாட்டாள்.
இப்படி அசைன்மண்ட் எழுதும் நிலையும் வந்திருக்காது என்று தோன்றியது.அவளிடமிருந்து வலுக்கட்டாயமாக அசைன்மண்ட்டைப் பிடுங்கியவன், “சரி கொடு. நீ போய் எக்ஸாம் எழுதணும்ல..? போய் சாப்பிடு” என்றுரைக்க,அவள் பதறிப் போய் எழுந்து கை நீட்டி அவனிடமிருந்து அந்தத் தாள்களைப் பறிக்க முயன்றாள் அவள்.
அவனோ அந்தரத்தில் அவற்றை உயர்த்திப்பிடித்து நிற்க, இவள் அவற்றை எம்பி எடுக்க முயன்று தோற்றாள்.பெருமூச்சு விட்டுக் கொண்டே, கடைக்கண்ணால் முறைத்து, “ஹேய் இது விளையாடுற நேரம் இல்லை”என்று கூறினாள் அவள்.
அவனோ அதை சட்டை செய்தவனாக, “இதை நீ சப்மிட் பண்ணியாகணும்.. அவ்வளவு தானே? நான் டிரெக்ட் ஜூனியர்ஸ் வைச்சு.. இதை எப்படியாவது எழுதி அர்ஜூன் கையில் கொடுத்துட்றேன்..போதுமா? போ.. போந் சாப்பிட்டுட்டு.. மிட் எக்ஸாம்க்கு ரெடியாகு” என்று அவளை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தான் அவளை.
ஒருவன்.. அவன் சுமையை அவள் மேல் ஏற்றி விட்டு வேடிக்கைப் பார்க்கிறான்.இன்னொருவனோ அச்சுமையைத் தாங்க மாட்டாமல் தான் முன்வந்து சமபங்கு எடுத்துக் கொள்கிறான்.ஆனாலும் விந்தையான பெண்ணின் மனமோ.. சுமையைத் தந்து வேடிக்கைப் பார்த்தவனைத் தான் மானசீகமாக நாடியது.
மிட் எக்ஸாம் முடிந்ததும்… வெளியே வந்தவளின் கண்கள் “இளா”வைத் தான் தேடியது.இளங்கோவின் துரதிர்ஷ்டம் அவள் விழிகளில் விழாமல் போனான்.
இன்று தன் அண்ணியின் மெடிக்கல் செக்கப்பிற்காக டிரைவர் சென்றிருக்க.. கார் வராத பட்சத்தில் ஆட்டோவுக்காக காத்திருந்த போது.. வெள்ளை நிற மெர்ஸிடிஸ் பென்ஸ் காரொன்று வந்து நின்றது.அதன் கண்ணாடிகள் மெல்ல கீழிறங்க.. உள்ளே இருந்து கூலர்ஸூடன் சிரித்தான் அர்ஜூன்.
அந்த சிரிப்பில் உள்ளம் தட்டுத் தடுமாறி நிற்க, “இங்கே ஏன் நின்னுட்டிருக்க ஷக்தி?”என்று கேட்டான்.“இல்லை த்ரீவில் பிடிக்குறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்”என்று கூறிய கணம், நொடியும் தாமதியாமல் தன் கார் கதவினைத் திறந்து விட்டான் அவன்.
“கமான் கெட் இன்.. நான் உன்னை டிராப் பண்றேன்”என்று அர்ஜூனே கூறவும், அதற்குப் பின்னும் தாமதிப்பாளா அவள்?
சந்தோஷத்துடன் காரில் ஏற ஆயத்தமான சமயம், சாலையின் நேரெதிரே சரியாக இவளுக்கு எதிரே நின்றிருந்த இளங்கோ கண்களில் பட்டான்.ஹப்பப்பா.. அவன் கண்களில் தான் என்னேவொரு சீற்றம்? கை முஷ்டி மடக்கி நின்று,கழுத்து நரம்பு படைத்து வெளித்தெரிய.. நின்றிருந்தவனைப் பார்க்கவே பயமாக இருந்தது அவளுக்கு.
அவன் கோபத்துக்கு காரணம் அவள் அறியாள். இருப்பினும் ஓரடி நகர விடாமல்.. அவளை அப்படியே கல்லாக்கியது இளாவின் பார்வை.அவளோ நெற்றியோரம் வியர்க்க விறுவிறுக்க.. தொண்டையில் அடைத்ததை எச்சில் கூட்டி விழுங்கியவளாக நின்றிருந்த வேளை.. கேட்டது அர்ஜூனின் குரல்.
“கமான் கெட் இன்!!”
தோய்ந்த முகத்துடன் காரினுள் அமர்ந்தாள் அவள்.அடுத்த செக்கன் செல்லில் ஒரு குறுந்தகவல் வந்திருக்க.. அனுப்பியது சாக்ஷாத் இளாவே தான்.
“அவ்வ்வ்வ் வன்.. கூட போகாதே!”-தங்கிலீஷில் இருந்து அதிகப்படி அழுத்தம் கூட அவளுள் ஏதோ சரியில்லை என்று எண்ண வைத்தது.“ஷக்தி”அவளை ரியர் வீவ் கண்ணாடியூனூடாகப் பார்த்த வண்ணம் சொன்னான் அர்ஜூன்.
“ம்?”என்று ஒற்றை ஒலி எழுப்பியவளாக அவள் திருந்த, அவனோ இதழ்கள் திறந்து அழகு கொள்ளை சிரிப்பொன்றை சிரித்து வைத்தான்.அந்த அழகான நகைப்பில் இளாவின் முறைத்தல் பார்வையும், குறுந்தகவலும் மறந்து போனது அவளுக்கு.
“ஊஹூம்.. சும்மா.. உன் பேரைக்கூப்பிட்டுப் பார்க்கணும்னு தோணுச்சு அதான் கூப்பிட்டுப் பார்த்தேன்” என்றான் அர்ஜூன்.
அதன் பின் இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. மௌனமாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த அர்ஜூன் எதேச்சையாக அவள் பக்கம் திரும்ப..தன்னையே பார்த்திருக்கும் அந்த பேரழகியின் பார்வையில் சித்தம் தடுமாறி, காரை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினான் அவன்.
“என்னாச்சு? கார் ப்ரேக்டவுனா?” என்று இவள் கேட்க,அவனுக்கோ.. அவளது மென்மையான குரலும் தான் ஏதோ செய்தது.
“நான் சுத்தி வளைச்சுப் பேசலை.. மனசை விட்டு சொல்லிட்றேன்.. நீ எனக்கு வேணும் ஷக்தி.. உன் அழகு என்னை.. என்ன என்னமோ பண்ண சொல்லித் தூண்டுது!! காலேஜில் நல்ல பேர் எடுத்திருக்கும் நான்.. ஆப்டரோல் இந்த ஐந்தரையடி குட்டிப் பொண்ணால்.. என் கன்ட்ரோல் இழந்து என்னையறியாமலேயே தப்பு பண்ணிடுவேனோன்னு பயமா இருக்கு.. என் ஃபீலிங்க்ஸ் உனக்கு புரியுதா?”என்று அர்ஜூன் ஏதேதோ பேச தன் காதுகளையே நம்ப மாட்டாமல் நின்றிருந்தாள் அவள்.
அவளது பட்டுப்போன்ற கரங்களைப் பற்றி.. “எனக்கு நீ வேணும் ஷக்தி!!”என்று மொழிய, ஷக்தியின் உச்சாதிபாதம்.. காதல் ஹோர்மோன்கள் தாருமாறாகச் சுரந்து இரத்தம் முழுவதும் விரவி ஓடவாரம்பித்தது.
எப்போதும் கண்ணியமாக நடக்கும் அர்ஜூன்.. இவளைக் கண்டதும் அந்தக் கட்டுப்பாட்டை மீறி ஏதேதொ செய்யத் துடிக்கிறானாமா?
அப்படியானால் அவனுக்கும், அவளைப் போலவே உணர்வலைகள் இருந்திருக்கிறதா?
உணர்ச்சி வசப்பட்டவளாக, “அர்.. ஜூன்.. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.. யெஸ்.. ஐ திங்க் ஐ ஏம் இன் லவ் வித் யூ” என்று கூறியவளின் இமைகள் படபடவென அடித்துக் கொண்டது.
காதலைச் சொன்னவனுக்கு அவள் அருகாமையும், அவளிலிருந்து வரும் பிரத்தியேக மணமும் அவனை ஏதோ செய்ய தன்னை நோக்கி அவளை முரட்டுத் தனமாக இழுத்தவன் அவள் கீழுதட்டைக் கவ்விச் சுவைக்க.. விதிர் விதிர்த்துப் போனாள் அவள்.
இப்படியான அதிரடி, அவசரம் அவள் எப்போதும் நினைத்துப் பார்த்திராத ஒன்று.
அவனிடம் இதழ்களை சிறை கொடுத்து விட்டு அவள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்க.. அந்த அரக்கனிடமிருந்து விடுதலை கொடுக்க.. தெய்வாதீனமாக அலறியது அவள் செல்.
பார்த்தால் அழைப்பெடுத்திருந்தது அவளது அண்ணன் பரசுராமர்.இங்கோ அர்ஜூன் இலக்கு களைந்ததில் ஆத்திரத்தில் ஸ்டியரிங்கிற்கு குத்து விட, அங்கே அவளோ எக்கச்சக்கமான “ண்ணா” போட்டுக் கொண்டே பரசுராமுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
“ஆமாண்ணா.. இல்லைண்ணா.. நம்ம காரில் இல்லைண்ணா.. என் சீனியர் காரில் வந்துட்டிருக்கேன். ஆட்டோ கிடைக்கலைன்னா.. சரிண்ணா வந்துட்றேன்ணா” என்றபடி அழைப்பை துண்டித்தவளுக்கு அர்ஜூனின் முகம் காணவே கூச்சமாக இருந்தது.
“அண்ணா தான் ஃபோனில்.. வீட்டிற்கு சீக்கிரமா வர சொல்றாரு.. கெளம்பலாமா அர்ஜூன்?” என்று கைட்க, அவனும் ஏதும் பேசாமல் வண்டியைக் கிளப்பலானான்.
அன்று அர்ஜூன் தன் ஆழ்மனதில் கிளர்ந்தெழுந்த ஆசைகளை சொன்னானே தவிர, “காதல்” என்னும் வார்த்தையை தவற விட்டான் என்பதை அவதானிக்க மறந்து போனாள் ஷக்தி.
அதைக் கவனித்து அவள் சுதாரித்திருந்தால் இளங்கோவின் சீற்றத்திற்கு அவள் உள்ளாகியிருக்கவே வேண்டாம்
அத்தியாயம் – 8
அன்றிரவு..
குட்டிக் குளியலொன்றைப் போட்டு விட்டு அவள் மஞ்சத்துக்கு வந்த போது.. அவள் செல் ஒளிர்ந்து அடங்கியது. யாரென்று தெரியாத புது இலக்கத்திலிருந்து மெஸேஜ் வந்திருக்கக் கண்டாள் அவள்.
மொட்டைக் கடிதம் போல அதுவொரு மொட்டை மெஸேஜ்!! அந்த மெஸேஜில் இருந்தது எல்லாம் நான்கே நான்கு சொற்கள் தான். “அவன் உன்னை என்ன பண்ணான்?”- மனதுக்குள் அந்த மெஸேஜை வாசித்தவளின் கண்கள் மெல்ல சுருங்கின.
அடுத்த கணம் அநாமதேய மெஸேஜ் காரனுக்கு பறந்தது ஓர் குறுந்தகவல்.
“ஹூ ஆர் யூ?”.
அதைத் தொடர்ந்து அதே அநானிமஸ் நம்பரிலிருந்து அழைப்பு வர, கொஞ்சம் கை துணுக்கத்துடனேயே அழைப்பை ஏற்றாள் அவள். அவள் “ஹலோ” சொல்லும் முன்னர் எகிறிக் கொண்டு கேட்டது மறுமுனையில் இருந்த இளாவின் குரல்!!
“ந்நான்.. ய்யார்ன்னு உனக்குத் தெரியாது?? அவ்வன் க்கூட காரில் போனேல்ல? ரொம்ப என்ஜாய் பண்ணியோ?”என்று கேட்டான் அவன். மறுமுனையாளன் சுட்டிக்காட்டிய அந்த “அவ்வன்” அர்ஜூன் தான் என்று புரிந்தது அவளுக்கு.
இளாவுக்கு ஏன் இத்தனை கோபம்? அவளுக்கு புரியவில்லை. இருப்பினும் சொந்த விஷயத்தில் மூக்கை நுழைக்கிம் இளாவின் செயல் பிடிக்காதவள், “இளா.. திஸ் இஸ் டூ மச்.. மைன்ட் யோர் ஓன் பிஸினஸ்” என்று கூறியது கூட இளாவுக்கு ஆத்திரத்தை கிளப்பியது.
நேரில் வந்தால் அடித்து விடுவானோ என்று ஐயுறத்தக்களவுக்கு எதிரொலித்தது அவன் குரல்.
“எதுடீ.. ஓவ்ன் பிஸினஸ்?? நீ அவ்வன் கூட காரில் ஏறிப் போவ அதைப் பார்த்துட்டு நான் சும்மா இருக்கணுமா?”என்று கேட்க, அவளுக்கு உள்ளே கூஸ்பம்ப் ஓடி மறைந்த உணர்வு.
அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அழைப்பைத் துண்டித்து விட்டாள் அவள்.
இளாவா அவள் அழைப்பை துண்டித்ததும் விடுவான்? அவனிடமிருந்து ஷக்திக்கு அழைப்பு மேல் அழைப்பு வந்து கொண்டே இருக்கலாயிற்று. அவனது தொடரான அழைப்பில் எரிச்சல் மீதூற செல்லை முற்றிலுமாக அணைத்தவன், டிராயர் மேல் போட்டு விட்டு மஞ்சத்தில் மல்லாக்கப் படுக்கலானாள்.
இறுதியில் ஃபோன் ஸ்விச்ட் ஆப் என்று கம்ப்யூட்டர் பெண்ணின் குரல் கேட்க, அவள் ஃபோனை அணைத்த ஆத்திரம் கண்மண் தெரியாமல் எழுந்தது இளாவுக்கு. அவள் மேல் காட்ட முடியாத கோபத்தை அந்த போனின் மேல் காட்டி நாடினானோ? என்னவோ? நோக்கிய செல்லைத் தரையில் ஓங்கி ஓர் அடி அடித்தான் அவன்.
அவளோ அங்கே சீலிங்கைப் பார்த்த வண்ணம், முணுமுணுக்கும் குரலில், ‘லூசு எருமை.. நான் அர்ஜூன் கூட போனால் இவனுக்கென்ன? நான் அர்ஜூனைப் பார்த்தால் முறைச்சுப் பார்க்குறான்.. திட்டுறான்வய.. இவனை புரிஞ்சிக்கவே முடியலையே?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள் அவள்.
சரியாகப் பார்ததால் இன்று அவளது காதல் கை கூடிய நாள். அவளது காதல் தலைவன் அர்ஜூன் அவள் மேலிருக்கும் ஆசையை எல்லாம் எடுத்துரைத்த நாள். அதை இரசிக்காமல்.. இளாவின் சீற்றத்தையும், கேள்விக் கணைகளையும் பற்றியுமே எண்ணிக் கொண்டிருக்கிறாள் என்றால் என்ன அர்த்தம்? அர்ஜூனை விடவும் இளங்கோ அவளைப் பாதிக்கிறான் என்பதா?
அந்த கணம்.. அவள் அறையின் சரிவரப்பூட்டப்படாத ஜன்னலொன்று தடதடவென காற்றுக்கு அடித்துக் கொள்ள, எழுந்து சென்று அதை மூட எத்தனித்த போது, நரம்போடிய வலிய மாநிறக்கையொன்று அவள் கையை பற்றிக் கொண்டது.
பயத்தில் அலறி வாய் திறந்து கத்தப்போனவள், சீற்றத்தில் ஜொலிக்கும் இளாவின் விழிகளைக் கண்டதும் ஸ்தம்பித்துப் போனாள். அவள், அவனை கோபத்தில் திட்ட முன்பாக, முந்திக் கொண்டான் இளா.
“அங்கே நான்.. உன்னால் தூக்கம் கெட்டுத் தவிச்சிட்டிருக்கேன்.. இங்கே நீ.. ஹாயாக தூங்கிட்டிருக்கியா? ம்மரியாதையா வெளியே வா”என்றவன் தன் கண்களோடு, அவள் கண்களைக் கலக்க விட்டிருந்தான்.
நொடிக்கு நொடி அவனது கைவிரல்களின் அழுத்தம் கூடிக் கொண்டே போக, கலங்கிய கண்களுடன், “இளா முதல்ல கையை விடு.. அர்த்த ராத்திரியில் நீ சுவரேபி.. ஒரு பொண்ணு ரூமுக்கு வந்தது தப்பு”என்று நடந்திருக்கும் விபரீதத்தை எடுத்துரைக்க முயன்றாள் அவள்.
“நான் உன் ரூமுக்கு வரலை.. டெராஸூக்குத் தான் வந்திருக்கேன்.. இப்போ நீ வெளியே வரப்போறியா? இல்லையா?” என்று கறார்க்குரலில் கேட்டான் அவன்.
“ம்ஹூஹூம் முடியாது” என்று மறுத்தாள் அவள்.
அவன் அப்போதும் தன் மனநிலையை மாற்றாமலேயே, “டெராஸூக்கு வந்த எனக்கு.. உன் டாரைத் திறந்து ரூமுக்குள்ளே வர.. எத்தனை நேரமாகிம்? அதனாலே நான் அஙுகே வர முதல்.. நீ இங்கே வந்தால் உனக்கு நல்லது”என்று மறைமுக மிரட்டலொன்றையும் விடுத்தான் அவன்.
“இளா நான் ஒரு குரல் கொடுத்தேன்னா.. மொத்த வீடும் என் ரூமில் தான் நிற்கும்”என்று சொன்னாள் அவள்.
“கூப்பிடு.. நல்லா கத்திக் கூப்பிடு.. ஆனால் நாளை காலை நீ காலேஜூக்கு வந்தாகணும்.. அதை நினைவில் வைச்சுக்க?”என்று அவன் அசராமல் பதிலிறுக்க.. அதன் பின் அங்கே மௌனமே நிலவியது.
அவளது பெரிய நயனங்களையே மாறாது பார்த்திருந்தாள் அவள். அவனது விடாத பார்வையில் சோர்ந்து போனவளாக, “சரி கையை எடு.. வரேன்” என்றதும் தான்.. அவன் கை, அவளை விட்டது. அவள் அறையை விட்டு வெளியே வந்ததும் நடந்தது அனைத்தும் எதிர்பாராத ஒன்று!!
அவளுடைய கைகள், முன்னங்கை, இடை, கைச்சந்து ஷோல்டர் என எல்லாவிடமும் சுட்டிக்காட்டி, “அவன் உன்னை எங்கே தொட்டான்.. இங்கே தொட்டானா? இங்கே? இங்கே?”என்று உணர்ச்சி வசப்பட்டு தொட்டுக் கொண்டே போக, அவன் தொடுகையில் கூசிக்குறுகிப் போய் நின்றிருந்தான் அவன்.
“இளா.. வாட் ஹேப்பன்ட் டு யூ? ஏன் இப்படியெல்லாம் நடந்துக்குறே?” தன் இடையில் பதிந்திருக்கும் அவன் கையைப் பற்றித் தடுத்த வண்ணம் சொன்னாள் அவள்.
இன்று பகல் காலேஜில் ‘அர்ஜூன் கூட போகாதே’ என்று அவளுக்கு அறிவுறுத்தியும், அர்ஜூனுடன் காரில் சென்ற கோபம் அவனுக்கு.அவ்வாண்மகனுக்குள் இருக்கும் பொஸஸிவ்னஸ் கிளர்ந்தெழ, கொஞ்சம் அத்துமீறித் தான் நடந்து கொண்டான் அவன்.
தன் தீண்டலை வெறுக்கும் அவளை, வலியுடன் பார்த்தவன், “இதே அர்ஜூன் தொட்டிருந்தால் இனிச்சிருக்கும்ல?”என்று கேட்டான்
“இளா.. ஏன் இப்படி என்னை டார்ச்சர் பண்ற? அவன் தொட்டானா? தொட்டானான்னு கேட்டு.. ஏன் என்னை இப்படி ட்ரீட் பண்ற?” என்று அவள் கேட்க, அதுவும் கூட ஆத்திரத்தையே கொடுத்தது அவனுக்கு.
“இந்த கேள்விக்கு உனக்கு பதில் தெரியாது?”என்று அவளையே கேட்டு.. அவளை திணறடித்தான் அவன். இளா அன்றைய நள்ளிரவில் மனநிலை பிறழ்வானவன் போலத் தான் ஷக்தியின் கண்கள் முன் நின்றான்.
ஆனால் இளா உண்மையில் ஓர் குழந்தை. ஷக்தியின் அன்பை மாத்திரம் வேண்டி நிற்கும் ஓர் குழந்தை.
அவள் ஷோல்டரைப் பற்றி உலுக்கி, “ஏன்னா இந்த இளா.. உன்னை லவ் பண்றான்.. இதுவரைக்கும் எந்த பொண்ணையும் காதலிக்காத இளா.. இந்த முரட்டு சிங்கிள் இளா. உன்னைக் கண்ட நாளிலிருந்து ஆத்மார்த்தமா லவ் பண்றான்.. என்று காதலைக் கூட வன்மையாக உரைத்தான் அவன்.
ஷக்தி அன்றைய நாளில் இரு ஆடவர்களின் ப்ரபோஸலைத் தாங்கி நின்றாள். ஒருத்தன் பெண்மையை ஈர்க்கும் மென்மையுடன் சொல்லி காதலை வெளிப்படுத்தினான் என்றால்.. இன்னொருத்தன்.. அந்த பெண்மையை வேரோடு தகர்க்கும் வகையில் காதல் சொல்லி அவளை உருக்குலைக்கிறான்.
“இப்பவாவது புரியுதா? அர்ஜூனை நீ பார்க்கும் போது அவன் கூட பேசும் போது.. அவன் கூட காரில் டிராவல் பண்ணும் போது நான் நானாக இல்லை.. எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை.. ஏன்னா நீ எனக்கு மட்டும் தான்!!”என்று அவன் சொல்ல, அப்போது தான் அவனது சீற்றத்திற்கான காரணமே புரிந்தது.
இருப்பினும் அவள் காதலிப்பது அர்ஜூனைத் தானே? அர்ஜூனும் இன்று மனம் திறந்து அவன் காதலை செப்பினானே? “என்ன இதெல்லாம் அர்ஜூன்” என்று அவன் பெயரை அவள் உச்சரித்தது கூட காண்டானது அவனுக்கு.
“அர்ஜூன்.. அர்ஜூன்.. அர்ஜூன்.. அவ்வன் ப்பேரை சொல்றதை ந்நிறுத்து!!”என்றான் அவன். இவளோ ஆடிப்போய் நின்றிருக்க, அவனோ, “அர்ஜூனை விட நான் என்ன கேவலமாவா இருக்கேன்..” என்றவன் மீண்டும் அவள் ஷோல்டரை ஆவேசமாக பற்றிக் கொண்டாள்.
அவளோ.. அவனது சீற்றம் சீறும் முகத்தைக் காணப் பிடிக்காமல்.. தலையை குனித்துக் கொள்ள.. இவனோ, “என்னைப்பாரு.. என் கூட பேசு.. ‘இளா என்னை ட்ராப் பண்ணுங்கன்னு என் கிட்ட கேளு.. உனக்கு சகலதுமா நான் இருப்பேன்.. எனக்கு நீ வேணும்.. புரிஞ்சுக்கடீ’என்று இறுதியல் கெஞ்சலில் முடித்தான் அவன்.
இரவில் சுவரேறி குதித்து வந்து.. அத்து மீறும் ஆடவனை எந்த பெண்ணுக்கும் தான் பிடிக்கும். அவளுக்கும் இளாவைப் பிடிக்காமல் போனது.
அந்த நேரம் தான் அவ்வசம்பாவிதம் நடந்தேறிநது. தன் சொற்கள் தான்.. அவளுக்கு காதலை உணர்த்த தவறினாலும்.. தன் செயல் நிச்சயம் காதல் உணர்த்தும் என தப்புக்கணக்கு போட்டான் அவன். அவனது வலிய கரங்களில் ஒன்று மேலெழுந்து.. அவளது இடையைப் பற்றித் தன்னோடு இழுக்க.. இவளது இதழ்களை அடாவடியாகக் கவ்விக் கொண்டான் இளா. அவனது முரட்டு இதழ்கள் அவள் இதழ்களுடன் இரண்டறப் பொருந்தியிருந்தது.
அவளது கைகள், அவனது அணைப்பிலிருந்து விடுபட அவனது தோள்புஜங்களை சாரமாரியாக தாக்கிக் கொண்டிருந்தது.
சடாரென தன் மொத்த பலத்தையும் திரட்டி அவளிலிருந்து வெளியே வந்தவள், பளாரென ஓர் அறை விட்டிருந்தாள் அவன் கன்னத்தில். இவளோ கண்களில் கண்ணீர் வழிந்தோட, “இளா ஐ ஹேட் யூ.. இனி என் கண் முன்னாடி வராதே”என்று எரிச்சலுடன் மொழிந்து விட்டு அறைக்குள் நுழைய, அதற்கு விடாமல் பற்றிக் கொண்டது அவன் கை.
“ஷக்தி.. ஒரு நல்லவனை இழந்துட்டோமேன்னு அப்புறம் நீ தான் ரொம்ப வருத்தப்படுவ?” என்றான் அவன் ஆழ்ந்த குரலில்.
அவனோ அதற்கு மறுபதிலளிக்காமல் தன் கையை அவனிடமிருந்து உருவி எடுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தவள், அறைக்கதவை அவன் முகத்திலடித்தாற் போன்று பட்டென சாத்தினாள். மூடப்பட்டது அறைக்கதவு மாத்திரமல்ல இதயக்கதவும் தான் என்று சொல்லாமல் சொல்கிறாளோ? கதவையே வெறித்துப் பார்த்த வண்ணம் நின்றிருந்தான் இளா. .
அத்தியாயம்-9
நேற்று முழுவதும், இளாவின் செய்கையால் தூக்கம் தொலைத்ததாலோ .. என்னவோ.. அவள் கண்களும் தான்.. செக்கச் செவேலென்று சிவந்து போயிருந்தது.
அவளது அழகு நுதலிலே சின்னதாய் விபூதிக் கீற்று!! அவள் மாசற்ற முகத்துக்கு திவ்யத்தை அளித்துக் கொண்டிருந்தது. காலையிலே வந்து.. தன் காதல் தலைவனுக்காக காத்திருக்கலானாள் தேவி.
என்ன தான் தலைவனை சந்திப்பதாக இருந்தாலும் கூட.. அவள் முகத்தில் அர்ஜூனை காணப்போகும் சந்தோஷ படபடப்பு துளியளவும் இல்லை. விட்டத்தை வெறித்துப் பார்த்தவளாக… அந்த வாகை மரத்தின் அடியில் போடப்பட்டிருக்கும் மரபெஞ்சில் அமர்ந்தவளின் ஞாபகத்தினை சூறையாடியிருந்தான் இளங்கோ.
இளா.. அவளது சீனியர். அவன் மேல் எப்போதும் அவளுக்கு மதிப்புண்டு. இருப்பினும் நேற்று அவளிடம்.. அத்துமீறி நடந்து கொள்வான் என்று அவள் எதிர்பார்த்திராத ஒன்று.
அவள் உதடுகளில் வலுக்கட்டாயமாக பதிந்த அவனுதடுகளின் ஈரம்.. தற்போதும் ஓர் பிரம்மையான குளிர்மையைத் தோற்றுவிக்கவே செய்தது.
அதனால் தன் கீழுதட்டை அழுந்தக் கடித்து, கைகளைக் கோர்த்து அழுத்தமாக பிசைந்து கொண்டே.. தன் உணர்ச்சிகள் தடம் புரளுவதை சமாளிக்கலானாள் அவள். அர்ஜூனும் தான்.. நேற்று அவளுக்கு முத்தம் கொடுத்தான்? ஆனால் இது போல எதுவுமே.. நிகழவில்லையே? என்ற கேள்வி அவளுள் எழாமலில்லை.
மாறாக பயமும், படபடப்பும் தானே அவளுக்கு அந்நேரம் மிகுந்திருந்தது? இருப்பினும் இளாவை கை நீட்டிய ஆத்திரம் ஒரு புறமும், கவலை மறுபுறமும் என சூழ்ந்து கொள்ளவே செய்தது அந்த மெல்லினத்தை.
அவள் தன் சிந்தையிலிருந்து மெல்ல மெல்ல நடப்புலகுக்கு திரும்பிய போது, அவள் எதிரே.. அவளுக்கு நன்கு பரிச்சயப்பட்ட ஆண்மகன்.. கைகளை காற்றில் அசைத்து.. அவள் அட்டன்ஷனை தன் பக்கம் திருப்ப முயன்று கொண்டிருப்பதைக் கண்டான் அவன்.
மெல்ல கண்களை உயர்த்திப் பார்த்த போது அது அர்ஜூன் என்பது புலனாகிற்று. நேற்றெல்லாம்.. அவனைக் காணும் போது கண்ணோடு தோன்றுமே ஓர் காதல் மயக்கம்!! இன்று அவளில் அது இல்லை. மாறாக அதுவொரு வெறிச்சோடிப்போன பார்வை!
காதலியின் பார்வை மாற்றத்தையும், முகச் சோர்வையும் கண்டு கொண்டானா அவளது காதலன்? ம்ஹூஹூம் அதுவும் இல்லை!!
“ஷக்தீ…ஷக்தீஈஈ..ஷக்தி!!..” என்று இத்துடன் ஏழாவது முறையாக.. அவளை அழைத்திருப்பான் அர்ஜூன். ஆயினும் எட்டாவது அழைப்பில் தான் சிந்தனை களைந்தது அவளுக்கு.
அவள் பார்வை தன் முகத்துக்கு மேலேறியதை கண்டவன், ‘என்னாச்சு? ஏன் டல்லா இருக்கே?’ என்று நாசூக்காகவேனும் கேட்கவில்லை.
அதை விட்டுவிட்டு, ‘உஃப்’ என்று இதழ்கள் குவித்து பெருமூச்சு விட்டவன், “இப்பவாவது.. இந்த அழகான கண்களுக்கு.. என்னைப் பார்க்கணும்னு தோணிச்சே?” என்று விட்டு..பெரிதாக ஹாஸ்யம் பேசிவிட்டதைப் போல தனியாக நகைத்தான் அர்ஜுன். அந்த ஹாஸ்யத்தை இரசிக்கும் அவள் மனோநிலையில் இல்லை. பாவம்!! அவன் முகத்தை நிர்மலமான முகத்துடன் பார்த்திருந்தாள்.
இவனோ, அவள் முன்னே ஒரு பென்ட்ரைவ்வை நீட்டி, “இதில் சில நோட்ஸ் எடுத்து வைச்சிருக்கேன்.. இதை வைச்சு.. பவர்பாய்ன்ட்டில் ஸ்லைட்ஸ் பண்ணி வைச்சிடு.. இன்னைக்கு டென் தேர்ட்டி.. எனக்கு ப்ரசன்டேஷன் இருக்கு… நான் நைன் தேர்ட்டிக்கு வந்து எடுத்துக்குறேன்” என்று இடைவிடாமல் மொழிந்து கொண்டே சென்றவன், அவள் சிலை போல உட்கார்ந்திருப்பதைக் கண்டும் காணாதவனாக, கோர்த்திருந்த அவள் கைகளின் நடுவில் பென்ட்ரைவ்வை வைத்தவன்… இல்லை ஏறத்தாழ திணித்தவன்.. அங்கிருந்து நகர்ந்தான்.
அவன் காததூரம் சென்ற பின்பு தான்.. அவள் கையில் திணிக்கப்பட்ட பென்ட்ரைவ்வும், அவன் கொடுத்த வேலையும், அதே டைமில் அவளுக்கு இருக்கும் லெக்சர்ஸ்ஸூம் ஞாபகம் வரவே, நீண்ட நேரம் வாய் மூடி இருந்ததால் விளைந்த கம்மிப் போன குரலில், “அர்ஜூன்.. எனக்கு லெக்சர்ஸ் இருக்கு..” என்று சொன்னதெல்லாம்… அந்த அர்ஜூனின் காதுகளுக்கு விழவேயில்லை. அவை காற்றோடு காற்றாக கலந்து போனது. அவள். ஷக்தி! தன் காதலனின் ப்ரசன்டேஷன் வர்க்கிற்காக.. தன் லெக்சர்ஸ்ஸை ‘கட்’ அடிக்க வேண்டும் என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டாள்.
அன்று பார்த்து.. ஷக்தி தன் லேப்டாப்பையும் வைத்து விட்டு வந்திருந்த காரணத்தினால்.. காலை எட்டே முக்காலுக்கெல்லாம்.. கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஐசிடி லேப்பிற்கு.. ஓடி ஓடிச் சென்று.. அங்கிருந்து ஒரு கணனியாய் பார்த்து அமர்ந்து.. அர்ஜூனின் வேலைகளை கண்ணும், கருத்துமாக செய்யவாரம்பித்தாள்.
அவள், அவன் சொன்ன வேலைகளை எல்லாம் முடித்து.. பென்ட்ரைவ்வில் சேவ் செய்து விட்டு.. வெளியே வரும் போது மணி ஒன்பதே காலைத் தாண்டியிருந்தது.
‘ஒன்பதரைக்கு வருவேன்’ என்ற அர்ஜூனின் சொற்கள் ஞாபகம் வரவே, அவனைத் தேடி அவள் கண்களும், கால்களும் ஒருங்கே அலை பாய..அங்கிருந்து சிறிது தூரம் நடந்திருப்பாள். யாரையும் கவனிக்காது அவசரமாக விரைந்து கொண்டிருந்தவளின் வெண்மையான கையை.. நேற்றிரவு போல இன்றும் ஓர் கை பற்றியிழுத்து.. ஐசிடி லேப்பின் சுவரும், பெரிய பற்றையும் வளர்ந்திருந்த இடத்திற்கு இழுக்கவும்… அவன் இழுத்த இழுப்பிற்கு இழுபட்டுப் போனவள் பதறத் தான் போனாள்.
அங்கே ஐசிடி லேப்பின்.. யார் கண்ணுக்கும் உறுத்தாத சுவரில் சாய்ந்து நின்றிருந்தான் அடாவடி இளங்கோ. இவளோ அவன் இழுப்பில்.. அவனது திடகாத்திரமான திண்ணிய மார்பிலேயே இரு கை ஊன்றி.. சமாளித்து நின்றிருந்தாள்.
அவனது விழிகளை ஏறிட்டு முறைத்துப் பார்த்தவள், அவன் கையை தன்னிலிருந்தும் ஆவேசமாக அப்புறப்படுத்திக் கொண்டு, அங்கிருந்து நகர முற்பட்ட போது, அவளது முன்னங்கையைப் பற்றியவன், “ஷக்தி ப்ளீஸ்.. ப்ளீஸ் நில்லு” என்றான்.
அவன் பிடி மென்மையாக இருப்பதை உணர்ந்தவள், கையை இழுத்துக் கொண்டு செல்ல முனைந்த நேரம்.. அவன் பிடி வன்மையானது. வாய் திறந்து ஏதும் பேசாமல்.. கல்லாய் நின்று.. அவனுக்கு புறமுதுகு காட்டி விட்டத்தை வெறித்தாள் ஷக்தி.
“நான் சொல்றதை.. ஒரு வாட்டி கேளு”- மீண்டும் அதே கெஞ்சும் குரல் அவனிடமிருந்து. கண்களை மூடி… ஆழ பெருமூச்சு விட்டுக் கொண்டே திரும்பியவள், “எதைக் கேட்கணும்?.. உன்னோட பொறுக்கித்தனத்தை இனியும் என்னால பொறுத்துக்க முடியாது!!..” என்ற நேரம் சட்டென இடையிட்டான் அவன்.
அவன் கண்களிலும், குரலிலும் ஒரு மன்றாட்டம் அப்பட்டமாகவே தெரிந்தது. “ஷக்தி… நேத்து நான் பண்ணது தப்பு தான்.. ரியலி ஸாரி.”என்றான் அவன்.
“ஸாரி சொன்னால் எல்லாம் சரியாகிடுமா?” என்று கேட்டாள் அவள்.
இளங்கோ வாயடைத்துப் போய் நின்றான். ஆம். ஷக்தி சொல்வதும் சரி தானே? அவனது அத்துமீறலுக்கு ‘ஸாரி’ என்ற ஒற்றைச் சொல் போதுமா???
இன்னும் அவளது மெல்லிய முன்னங்கை, அவனது கரத்திற்குள் சிறைபட்டிருப்பது புரிய, “க்கைய வ்விடு… இளங்கோ… க்கையை விடு.. இது காலேஜ்.. நீ ரொம்ப ஓவரா போற?”என்றாள் அவள்.
அவனோ அப்போதும் அவள் கையை விடவேயில்லை. அவன் பெயரை மென்மையாக அழைத்து, “ஷக்தி.. ஸாரீடி… உன் மேல கண்ணு, மண்ணு தெரியாமல் வைச்ச காதல்..” என்று தன் உள்ளக்கிடக்கையில் உள்ளதை வெளிப்படுத்தி விடும் ஆவல் அவனுக்கு.
“என்ன காதலா? ஒரு பொண்ணுக்கிட்ட… அத்துமீறி நடந்துக்கிறது தான் உன் பார்வையில் காதலா?” என்று கேட்டாள் அவள்.
“ஐய்யோ ஷக்தி..”- அங்கே சுற்றி இங்கே சுற்றி.. ஆரம்பித்த இடத்திற்கே வந்து நிற்கும் அவளின் பேச்சில் கொஞ்சம் கடுப்பாகவே செய்தான் அவன்.
ஏற்கனவே லெக்சர்ஸ் போக முடியவில்லையே என்ற கடுப்பு வேறு, அர்ஜூனின் செயலினால் விளைந்த எரிச்சலும் வேறு இளங்கோவின் மீது பாய்ந்தது. ‘காதல்.. காதல்’ என்று சொல்லிக் கொண்டு அத்துமீறும் அவனை வெறுப்பேற்றும் எண்ணம் மிகவே, “இப்போ சொல்றேன்.. கேட்டுக்கோ… நேத்து.. ‘அவன் என்ன பண்ணான்?.. என்ன பண்ணான்?’னு கேட்டேல்ல?.. அதுக்கு பதில் இது தான்!!..” என்று கூறியவள், அவன் முகம் போன போக்கை உள்ளுக்குள் அனுபவித்துக் கொண்டே, ஒவ்வொரு சொற்களையும் அழுத்தி அழுத்தி, “அவ்வன் என்னை க்கிஸ் ப்பண்ணான்.. உன்னை ம்மாதிரி அநாகர்ரீகமாக இல்லை.. ர்ரொம்ப நாகரிகமா.. அதுவும் என் சம்மதத்துடன்.. அவன் க்காதலை சொன்னப்புறம் தான்.. உன்னை ம்மாதிரி அத்துமீறி இல்லை..!!!”என்றாள் அவள்.
அவனோ.. ஷக்தி மொழிந்தவைகளைக் கேட்டு எழுந்த சீற்றத்தில்.. அவளது கைகளை சட்டென விட்டான். திரும்பி ஓர் உதை.. தன் கால்களால் அந்த சுவற்றுக்கு விட்டான்.
தன் ஷக்தியை.. இன்னொருவன் தீண்டியிருக்கிறான் என்பதையே பொறுத்துக் கொள்ள இயலவில்லை அவனுக்கு. அவளோ இறுகிய முகத்துடன் நின்றிருந்தாலும்.. அவனை டென்ஷனாக்கிய ஒரு வித திருப்தியில் நின்றிருந்தாள்.
கூடவே கண்களும் சேர்ந்து கலங்கவே, இரு கைகளாலும் தலை கோதிக் கொண்டே, “ஷக்தி.. அர்ஜூனுடைய உண்மை முகம் தெரியாமல் பேசிட்டிருக்க.. அவன் ஒண்ணும் அவ்வளவு நல்லவன் கிடையாதுடீ..!!” என்றான் தொண்டையில் அடைத்ததை விழுங்கிக் கொண்டு.
அவளிடமிருந்து சட்டென ஒரு நமுட்டுச் சிரிப்பு வெளிப்பட்டது.
“அப்போ சார்.. யாரு?.. ரொம்ப ரொம்ப்ப நல்லவரோ? அர்ஜூன் உன் ஃப்ரண்ட் தானே? எப்படி உன்னால.. உன் ஃப்ரெண்ட்டையே தரக்குறைவாக பேச மனம் வருது??.. எனக்கு.. என் அர்ஜூனைப் பத்தி தெரியும்..!!” என்றாள்.
அர்ஜூனின் அடி முதல் நுனி வரை அறிவான் இளங்கோ. ‘நட்பு’ என்ற ஓர் உன்னதமான உறவுக்காகத் தான்.. துரியோதனனைக் காட்டிக் கொடுக்காமல் நின்றான் இந்த நவீன கர்ணன். இருந்தாலும் ஷக்தியால் வெறுப்பேற்றப்பட்டிருப்பவனாயிற்றே அவன்?
உண்மையை சொல்ல நாவு துடிக்கவே, பற்களைக் கடித்துக் கொண்டு, “என்ன தெரியும்டீ உனக்கு? அவன் உன்னை ‘யூஸ் அன்ட் த்ரோவ்’வாக யூஸ் பண்ணிட்டிருக்கான்!!..”என்றான் அவன்.
அது தான் உண்மை. அதை ஷக்தி கொஞ்சம் ஆசுவாசமாக அமர்ந்து யோசித்திருந்தாலும் கூட.. அவளாகவே உணர்ந்து கொண்டிருக்கக் கூடும்!!ஆனால் எடுத்துச் சொன்னவன் வேண்டாதவனாயிற்றே?
பனை மரத்திற்கு தேள் கொட்டினால், தென்னை மரத்திற்கு நெறி கட்டிய கதையாய் போனது இங்கே.
அர்ஜூனைப் பற்றி இகழ்வாக சொல்வதைத் தாங்க மாட்டாமல், “இளா மரியாதையா.. பேசு.. என் பாய் பிரண்ட்டைப் பத்தி என்னிடமே தவறா பேசுறது பிடிக்கலை எனக்கு.. நான் கெளம்புறேன்!!” என்றவளாக.. அங்கிருந்து வெளியேற முற்பட்டவளை விடவில்லை அவன்.
அவளுக்கு தான் வைத்திருக்கும் அன்பை நிரூபிப்பதில் தான் மீண்டும் மீண்டும் தவறு செய்தான் இளங்கோ!!
அவனைப் பொறுத்தவரையில்.. தன்னை ஆகர்ஷிக்கும் பெண்ணின் உடலைத் தொட்டு..அவள் மேல் தான் வைத்திருக்கும் காதலை.. தன்னாசையை எல்லாம் சொல்லாமல் சொல்லி.. உள்ளத்தைத் தொட முயற்சிக்கும் எண்ணம்!!
அவளது ஷல்வாரின் காலரைக் கொத்தோடு.. அதிரடியாகப் பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், குனிந்து.. அவளது ஈரமான செவ்வதரங்களை அடாவடியாக கவ்வ முனைந்தான்.
அவளது பெரிய அழகு நயனங்கள் அகல விரிந்தன. அவள் எடுத்து விடும் தாருமாறான மூச்சுக்காற்று.. அவன் முகத்தில் பட்டு மோதலாயிற்று. அவனது இதழ்களும், எச்சிலும் தன்னைத் தீண்ட முனையா வண்ணம்… சட்டென தலையைக் குனித்து நின்றாள் அவள்.
தன் இணையை சேர வந்த இவனது அதரங்கள்.. அவளது உச்சந்தலைக்குத் தான் முத்தம் வைக்கலாயிற்று. அவனால்.. இறுதிவரை.. அவளை முத்தம் வைக்க முடியாமலேயே போனது. மீண்டும் அவன் முயற்சித்த போது..
இறுக மூடிய அவள் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைக் கண்டவுடன்.. உள்ளுக்குள் அப்போது தான் அவன் செய்து கொண்டிருக்கும் மடத்தனம் புரிந்தது. அவன் கைகள்.. அவளது ஷல்வார் காலரை மெல்ல விடுவிக்கவே, கோபத்துடன்,
“அவனுக்கு நீ எத்தனையாவது கேர்ள் பிரண்ட்னு தெரியுமா?”என்று இரைந்து கேட்டான்.அவளுக்கோ அவன் எதை சொல்ல வருகிறான் என்று கேட்கும் எண்ணம் இல்லை!
மாறாக அவளும் கண்ணீர் துளிர்க்க, நாசித்துவாரம் விடைத்து அடங்க, “இளா… இது என் பால்கனின்னு நினைச்சிடாதே.. இது காலேஜ்.. நீ என் கிட்ட அத்துமீறினீன்னா…கண்டிப்பா நீ அசிங்கப்பட்டுப் போயிடுவ?..”என்று கூறிக் கொண்டிருந்த கணம்,அவனது உயர்ந்த கால்களில் ஒன்று.. அவளது காலை நோக்கி இடம்பெயர பதறிப் போய் பின்வாங்கினாள் அவள்.
அது பதர்கள் நிறைந்த பூச்சிப்பட்டைகளும், விஷ ஜந்துகளும் சஞ்சாரம் செய்யும் இடம் அல்லவா? அவளது காலின் சின்ன விரலைத் தன் கொடுக்குகளால் கொட்ட விளைய ஆயத்தமாக இருந்தது ஒரு தேள்.
அந்த நேரம் பார்த்து.. அதை மிதிக்க.. இவன் கால் வைக்க.. அவள் கால் எடுக்க, அன்று பார்த்து சாதாரண சேன்டில்ஸ் போட்டு வந்திருந்தவனின் சின்ன விரலை பலமாகப் பிடித்துக் கொண்டது அந்த விஷத்தேள்!!
அதைக் கண்டு.. பின்வாங்கி… அவள் பதறி நின்றதெல்லாம் ஒரு கணம் தான்!! அடுத்த நிமிஷம் அவளுள்… அவனுக்காக எழுந்த பரிவு காணமல் போனது. சற்று நேரத்திற்கு முன் அவன் அத்துமீறலும், அடாவடியும் ஞாபகம் வரவே, ‘தேள் கொட்டத்தான் வேண்டும்!!இறைவன் தண்டனை!!’ என்பது போல இறுகிய முகத்துடன் நின்றாள் அவள்.
அது அவன் காலைக் கடிக்க வந்த தேளாயின்.. இறைவன் தண்டனை எனலாம்!! ஆனால் கடிக்க வந்தது இவளை அல்லவா? அவளுக்கு வந்ததைத் தானே இவன் வாங்கிக் கொண்டான்.
அவனது மாநிற உடம்பு.. கொஞ்சம் கொஞ்சமாக செந்நிறம் பூத்ததை கண்கூடாகக் கண்டாள் ஷக்தி. விழிகளும் செம்மை கொண்டு… காலில் இரத்தம் வழிந்தோட.. அத்தனை வலியையும் அவளுக்காக தாங்கிக் கொண்டு வெளிறிப் போன முகத்துடன் ஷக்திக்கு ஏதேனுமோ என்று பயந்து போனவனாக.. அந்த இக்கட்டான நிலைமையிலும் அவளை உச்சாதி பாதம் வரை கரிசனையுடன் ஆராய்ந்து பார்த்தான் இளங்கோ.
அவளுக்கோ.. அவனுடைய கரிசனம் மிகுந்த பார்வை குறுகுறுப்பை ஏற்படுத்தினாலும்.. ஏதும் பேசாமல் திரும்பி நடந்தாள்.
ஒரு பேச்சுக்காகவேனும், “ ரொம்ப வலிக்குதா? நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டா?” என்று மனிதநேயத்துடன் கேட்கவில்லை அவள். திரும்பி நடந்தவளின் முதுகுக்குப் பின் கேட்டது அவனது வலியை அடக்கிக் கொண்டு கேட்கும் குரல்.
“ப்போ.. ஒ… ரு உண்மைக் காதலை உன்னால புரிஞ்சிக்க முடிய… லைல? இப்பவும் சொல்றே.. ன்.. நீ கண்டிப்பா ஒரு நாள் வருத்தப்படப்போற.. அப்போ உன் பக்கத்துல நான் இஇரு.. க்க மாட்டேன்!!..” என்றான் அவன்.
அவனது ‘ நான் இருக்க மாட்டேன்!!.’ என்ற வார்த்தை மட்டும் அவள் காதில் நாராசமாகப் பாய்ந்து.. அவள் நடையை ஒரு கணம் தடுத்து நிறுத்தத் தான் செய்தது.
********************
என்ன தான் ஷக்தி… அவன் மேலிருந்த கடுங்கோபத்தில்.. அன்று அவன் மரண வலியுடன்.. தேள் கொட்டியவனாக நிற்கும் போது.. குரூரமான மனத்துடையவளாக வந்திருந்தாலும் கூட…. அன்றிலிருந்து.. கடந்து வந்த மூன்று நாட்களிலும் அவள் நினைவுகளை ஆக்கிரமித்திருந்தது இளங்கோவே தான்.
அவன் காட்டிய அதிரடியான காதலை ஏற்க முடியாமல் திண்டாடி.. யாரை உளப்பூர்வமாக வெறுத்தாளோ? அவன் தரிசனத்தையே அவள் இதயம்.. அவளையும் மீறி மானசீகமாக வேண்ட ஆரம்பித்திருந்தது.
அன்று தேள் கொட்டலுடன் சென்றவனாயிற்றே? அவனுக்கு என்னானது.. ஏதானது என்ற பதைபதைப்பு..அன்றைய இரவு முழுவதும் அவளது தூக்கத்தைக் கொன்றது.
தேள் கடிபட்டு.. இறந்தவர்களின் துர்மரணங்களை வேறு… அவளுடைய மரமண்டை மூளை.. ஞாபகம் காட்டவே.. அவளது பதைபதைப்பு அதிகமானதே ஒழிய குறையவில்லை.
அன்றிரவே அவனுக்கு அழைப்பெடுத்து விசாரிக்க நாடியவளுக்கு… ‘இது எல்லாம் அவளால் தானே?’ என்ற குற்றவுணர்வினால் எழுந்த கரிசனையை.. ‘காதல்’ என்று கொள்வானோ என்று பயம் எழவே.. அழைப்பையும் எடுக்காது விட்டாள்.
அடுத்த நாள் காலை காலேஜ் வந்திருந்தவளின் கண்கள்.. வழமைக்கு புறம்பாக அர்ஜூனைத் தேடுவதை விடுத்து.. இளங்கோவையே தேடவாரம்பித்தது. அவள் கண்களுக்கு சிக்குவேனா? என்றிருந்தான் அவன்.
யாராவது சீனியர் கூட்டம்.. கேன்டீனிலோ, ஆடிட்டோரிய வாயிலிலோ இருக்கக் கண்டால்… பிறர் தன்னை என்ன எண்ணக்கூடும் என்ற நினைப்பே அற்று.. இளங்கோவைத் தேடினாள்.
இளங்கோவின் ஆத்ம நண்பன் ஆனந்த்தை தேடிப் போய்.. இளாவைப் பற்றி விசாரிக்கலானாள் ஷக்தி. இவர்களுக்கிடையில் நேற்று அந்த புதருக்குள் நடந்தவைகள் அறியாத ஆனந்த்தோ, “நேத்து பையன் ஏதோ மரம் மட்டைகள் இருக்கும் பக்கம் போயிருக்கான் போலம்மா… தேள் கொட்டிருச்சி.. நல்ல வேளை பையன்.. புத்திசாலித்தனமா யோசிச்சு.. தன்னோட கர்ச்சீப்பை எடுத்து.. தேள்கொட்டின இடத்துக்கு ஓரடி தள்ளி.. கட்டுப் போட்டிருக்கான்… இல்லைன்னா… விஷம் ஏறியிருந்தால்.. எமலோகம் தான்னு… அவங்க அம்மா.. அவனுக்கு நாட்டு வைத்தியம் பார்க்க போன இடத்தில் சொல்லியிருக்காங்க… கடிச்சது சாதாரண தேள் இல்லை.. விஷத்தேளாம்மா..” என்று நண்பனின் ஒருதலை காதலிக்கு எல்லா தகவல்களையும் கூற… அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து நின்றாள் ஷக்தி.
அது அவளைக் கடிக்க வந்த தேள் தானே? ஒருவேளை.. இவள் மேலுள்ள ஆத்திரத்தில் தேள் கொட்டியதற்கு முதலுதவி ஏதும் செய்யாமல் இருந்திருந்தால்.. இளங்கோவின் நிலை???
நினைக்கவே பயமாக இருந்தது ஷக்திக்கு. எப்போதும் பூரணை நிலவாக ஜொலிக்கும் அவள் முகம்.. அன்று முகில் மறைத்த நிலவாக சோபையிழந்து போனது.
லெக்சர்ஸ் எதிலும் அவள் மனம் பதியவில்லை. மாறாக இளங்கோவின் நிலைமைக்கு ‘நான் தானே காரணம்!!’ என்ற குற்றவுணர்வு எழுந்து…. அவளை நார்மலாக இருக்க விடவேயில்லை.
இப்படியாகக் கழிந்த அவஸ்த்தையான மூன்று நாட்களிலும்.. அர்ஜூன்… அவளை நாடி வரவுமில்லை. அப்படியே வழியில் ஷக்தி எதிர்ப்பட்டிருந்தாலும் கூட..அவளது உடலின் எழிலினை கண்களாலேயே ஆசையுடன் எடைபோடுபவனுக்கு.. அவளது முகவாட்டம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள தோன்றவுமில்லை.
இளங்கோவின் நினைவிலேயே இருந்தவளுக்கு.. அர்ஜூன் தேவை என்றால் வருவதும், தேவை இல்லாவிடின் மூன்றாவது நபர் போல நடத்துவதும்.. பெரிய குறையாகத் தென்படாது போனது.
மூன்றாம் நாளும்.. இளங்கோவைக் காணாத முகவாட்டத்துடன், பார்க்கிங் ஏரியாவில் தன் தோழி காவ்யா வரும் வரை நின்றிருந்தவளை நாடி வந்திருந்தான் அர்ஜூன்.
அர்ஜூனின் கண்கள்.. அவளது கழுத்துக்கு கீழேயே சொற்ப நேரம் மேய்ந்ததை கூட அறியாமல் நின்றிருந்தாள் ஷக்தி. ஆயினும் ஒருவன் தன்னை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான் என்பதை பெண்மைக்கேயுரிய டெலிபதி தெரியப்படுத்த.. சட்டென நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
அப்போது.. அந்த கணம் பொறுக்கி லுக்கிலிருந்து, ஜென்டில்மேன் லுக்கிற்கு மாறிய அர்ஜூனோ, அவளிடம், “ஷக்தி… ஏன் இன்னைக்கு உன் முகமெல்லாம் டல்லா இருக்கு?.. எனிதிங்க் ரோங்?உடம்புக்கு ஏதாவது முடியலையா?” என்று கேட்டவன், இது தான் சாக்கு என்று கொண்டு.. அவளது நெற்றியிலும், கழுத்திலும் புறங்கை வைத்து அவள் உடல் உஷ்ணத்தை கணிக்கப் பார்க்க, சட்டென அவன் கையை தடுத்து நிறுத்தியவள், மெல்லிய குரலில், “ம்ஹூஹூம் நத்திங்..” என்றாள் .
அர்ஜூனின் பார்வையோ மெல்ல இடுங்கியது. அன்று அவளது இதழ்களை கவ்விக் கொண்ட போது அமைதியாக மற்றும் அதை இரசித்துக் கொண்டே ஒத்துழைத்தவள்,
இன்று அவனைத் தொடவும் அனுமதியாதது அவனுக்கு ஓர் பலத்த அடியைக் கொடுத்தது போல இருந்தது.
அதேசமயம் எப்போதும் அவனைக் கண்டால்.. ஷக்தியின் விழிகளில் தோன்றும் மயக்கமும் தான் எங்கே?கீழுதட்டினை பெருவிரலாலும், சுட்டுவிரலினாலும் தடவிய வண்ணமே யோசித்தவனுக்கு தோன்றியதெல்லாம்,
‘கொஞ்ச நாளாக இவளைக் கண்டுக்காமல் இருந்தது தப்பாச்சோ??’ என்பது தான்.
அடுத்த செக்கென், நிர்மலமான முகத்துடன் நிற்கும் ஷக்தியை நோக்கி நிமிர்ந்தவன்,“சரி வா.. இன்னைக்கு உன்னை வீட்டில் ட்ராப் பண்ணிடறேன்..” என்று கேட்ட போது.. அவளது காதோரம் அனிச்சையாய் ஒலித்தது இளங்கோவின் தவிப்பு மிக்க குரல்.
‘என்கிட்ட ட்ராப் பண்ணுன்னு கேளு..புரிஞ்சுக்கடீ!!’என்ற அவனுடைய கலங்கிய கம்பீரமான குரல். அர்ஜூனுடன் செல்வதை எதுவோ ஒன்று தடுக்க, அர்ஜூனின் விழிகளைப் பாராது, “இல்லை வேணாம்.. நான் கொஞ்சம் திங்க்ஸ் வாங்க.. ‘ஆர்ப்பிக்கோ சூப்பர் சென்டர்’க்கு போக வேண்டியிருக்கு..” என்று தட்டுத் தடுமாறி உரைத்தாள் அவள்.
“சரி வா அப்போ.. ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்.”அவள் தான்.. தோழி காவ்யாவிற்காக காத்திருப்பவளாயிற்றே?
அதை சொல்லி தன் மறுப்பை தெரிவிக்க நாடியவள், தயக்கத்துடன், “இல்லை.. நான்..காவ்யாவுக்காக வெயிட் பண்ணிட்..” என்று சொல்லிக் கொண்டிருந்த வேளை.. அவளைப் பேசவே விடாமல் இடையிட்டான் அர்ஜூன்.
“என்ன? ‘நான்.. நான் கூப்பிட்டால் வர மாட்டியா?” என்று கேட்டு வைத்தால்… அவளாலும் தான் எப்படி போகாமல் இருக்கவும் முடியும்? மௌனமாக ‘சரி’ என்று தலையாட்டியவள்… மெல்ல திரும்பி.. அவள் கார் பக்கமாக.. நடந்து சென்று.. கார் கதவின் பிடியில் கை வைத்த போது தூரத்தே.. கேட்டது ஓர் ஆண்குரல்.
“மச்சீ!!..” என்ற அந்த ஆண்குரலில்… அவள் உடம்பில் இருக்கும் கோடான கோடி மயிர்க்கால்களும் சிலிர்த்துக் கொண்டதை உணர்ந்தாள் அவள்.
இந்த மூன்று நாட்களாக அவளைத் தவிர்க்க விட்டவனின் குரல்!! தன்னைக் காக்க வேண்டி.. மரண வேதனையை சுகித்தவனின் குரல் அது!! விழிகள் விரிய… அவன் மேலுள்ள கோபம் மறந்து.. புன்னகை பூத்த இதழ்களுடன்.. சட்டென்று திரும்பி குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினாள் அவள்.
தூரத்தில் தன் டெனிம் பாக்கெட்டுக்குள் இருந்த கையை எடுத்து.. தலை கோதிய வண்ணமே, அர்ஜூனின் வண்டியை நோக்கி மெல்லோட்டமொன்றை ஓடி வந்து அடைந்த இளங்கோவின் கண்கள்.. மறந்தும் கூட அவளின் பக்கம் திரும்பவேயில்லை.
வெறுப்புக்கும், விருப்புக்கும் நூலிழை அளவு தான் வித்தியாசமாம்!அங்கணம்… அவளை வெகுநாட்கள் கழித்துக் கண்டதில் அவளுள் எரிச்சல் எழாமல்.. ஆனந்தம் எழுகிறது என்றால்? இளங்கோவைக் கண்டதும் நேசப்புன்னகையுடன் தன் நடையை நிறுத்திக் கொண்ட மற்றவன், உரிமையுடன், “சொல்லுடா..” என்றான்.
“எங்கே போற..?”- அடுத்ததாகக் கேட்டான் இளங்கோ.
காதலியுடன் வெளிச்செல்லும் மற்ற நண்பர்களைப் போல பொய் உரைக்காமல், “ஷக்தி கூட.. ஆர்ப்பிக்கோ போகப் போறேன்டா” என்ற அர்ஜூனின் நேர்மை.. ஷக்திக்கு இதத்தையே தந்தது.
அர்ஜூன் ‘ஷக்தி’ என்ற பேரைக் குறிப்பிட்டு சொன்ன போதும் கூட.. அவன் திரும்பி அவளைப் பார்க்கவேயில்லை. ஆனால்.. ஷக்தியின் பார்வையோ.. அவனைத் தான் துளைத்துக் கொண்டிருந்தது. அவளுக்காக தேள் கடி வாங்கியவனின் முகத்தில் சோர்வு இருக்கிறதா? கால் எப்படி இருக்கிறது?
வீங்கியிருக்கிறதா? என்ற சின்னச்சின்ன விஷயங்களை கூட விடாமல் பார்த்தாள் அவள்.
அவன் முகத்தில் சோர்வு இல்லையாயினும், தேள் கடித்த இடம் சற்றே சிவந்து வீங்கிப் போயிருப்பதைக் கண்டு கொண்டவளுக்கு.. இரு ஆடவர்கள் பேசிக் கொள்வதில் கவனம் பதியாமல்.. கண்கள் இலேசாக கலங்கியது. ஆனால் இளங்கோ அர்ஜூனின் திருகுத்தாளங்களை நன்கே அறிந்தவன்.
ஷக்தியுடன் அர்ஜூன் கழிக்கும் தனிமை.. அவளுக்கு தான் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நன்கறிந்து வைத்திருந்தவன், அதற்கு இடம் கொடாமல், “ரொம்ப நல்லதாப் போச்சுடா.. நானும் சில திங்க்ஸ் வாங்க வேண்டியிருக்கு..” என்றுரைக்க, அவனை வரவேண்டாம் என்று சொல்ல முடியாமல், வேண்டா வெறுப்பாக, “சரி வண்டியில் ஏறு..” என்றான் அர்ஜூன்.
முன் ஸீட்டில் ஏற, கதவின் பிடியில் கை வைத்திருந்த ஷக்தியின்.. வெண்மையான புஷ்டி விரல்களின் மேல்.. கையை வைக்கச் சென்றான் இளங்கோ.
அதில் ஷக்தி பதறிப் போய் பின்வாங்க.. அவனோ ஏதும் நடவாதது போல கதவைத் திறந்து முன் ஸீட்டில் ஏறிக் கொண்டான். ஷக்தி பின்னே அமர்ந்து, அர்ஜூன் டிரைவர் ஸீட்டில் ஏறிக் கொண்டதும் வண்டியும் நகர்ந்தது.
இளங்கோவின் முகம் ரியர் வீவ் கண்ணாடி வழியாக தெரிய, அவனையே தான் வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டே வந்தாள் இந்த இளம் பெண். அவளால்.. அவனுக்கு எத்தனை கஷ்டம்? தேள் கடி விஷ வேதனையை எத்தனை நாளாக அவன் சுகித்திருக்க வேண்டும்?
அந்த கணம்.. அவனது வற்றியிருந்த கால் வீக்கத்தைப் பார்த்த கணம்.. அவன் காலை உள்ளங்கையில் ஏந்தி தடவி விட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது அவளுக்கு.
இது எதனால்? சத்தியமாக தெரியவில்லை தான்!! இருப்பினும் ‘மனிதநேயம்’ என்று சொல்லி கேள்வி கேட்ட மனதை அடக்கிக் கொண்டாள்.
அவனோடு காரில் பிரயாணப்பட்ட அம்மங்கை.. தன் தலைவன் சூரியனை நோக்காமல்.. சந்திரன் அவன் பார்வை தன் மேல் விழாதா என தன்னையும் அறியாமல் ஏங்கலானாள்!!
யதேர்ச்சையாக.. அர்ஜூன் ரியர் வீவ் கண்ணாடி பக்கம் திரும்பிப் பார்த்திருந்தால் கூட.. அவள்.. இளாவை வைத்த கண் வாங்காமல் பார்ப்பது அப்பட்டமாகப் புரிந்திருக்கும்!
ஆனால்… ஷக்தியுடனான தனிமை வாய்க்கவில்லையே என உள்ளுக்குள் மருவிக் கொண்டே வந்த அர்ஜூனின் மனநிலை.. அங்கே அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.
தீடீரென காரை சடன் ப்ரேக் போட்டு நிறுத்த.. முன் ஸீட்டை இறுகப் பற்றிக் கொண்டவளின் நெற்றி அடிபடப் போக, அதற்கு விடாமல் அவள் நெற்றிக்கு குறுக்கே வந்து தாங்கிப் பிடித்திருந்தது இளாவினது உள்ளங்கை.
அவன் விழிகளோ பதற்றத்துடன்.. அவளை ஆராய.. அந்த விழிகளில் தெரிந்த அக்கறையில்.. ஒரு கணம் உருக்குலைந்து போய் நின்றிருந்தாள்.
அந்த நேரம் விழிகளில் தோன்றிய புதுமாதிரியான உணர்வினை களைக்கவென கேட்டது, கார்க்கண்ணாடி சுக்குநூறாக உடையும் ஒலி!! இளாவும், அர்ஜூனும் முகத்துக்கு நேராக.. முழங்கை வைத்து, கண்ணாடித் துகள் முகத்தைக் கிழிக்காமல் சமாளித்து நின்றிருந்த நேரம், அர்ஜூனின் ஜன்னல் கண்ணாடியும் உடைக்கப்பட்டு.. ஒரு குண்டுக்கை.. கார்க்கதவைத் திறந்து.. டீ ஷர்ட் காலரைப் பற்றி வெளியே இழுத்தது.
இளா சுதாரித்துக் கொண்டு காரை விட்டு இறங்கி.. தங்கள் முன்னே மலைமாடுகள் போல நின்றிருந்த நான்கைந்து தடித்தாண்டவராயன்களைப் பார்த்து, “டேய்.. யாருடா நீங்க?..” என்று கேட்ட நேரம்.. அர்ஜூனின் தலைக்கு.. கட்டையாலேயே விழுந்தது ஓர் அடி.
அர்ஜூனுக்கு விழுந்த அடியை பொறுக்க மாட்டாமல் சட்டென்று எழுந்து வெளியே இறங்கி ஓடோடி வந்தாள் ஷக்தி.அர்ஜூனோ நடுமண்டையிலிருந்து இலேசாக இரத்தம் வடிய நிற்க.. நண்பனை அடித்தவன் மேல் கொலை வெறி மிகுந்தது இளாவுக்கு.
அர்ஜூனை அடித்தவன் மூக்கிலேயே ஓர் ‘பன்ச்’ விடவே.. அந்த மலைமாட்டின் மூக்கிலிருந்து குபுகுபுவென எட்டிப் பார்த்தது இரத்தம்.
அதில் கடுப்பாகிப் போன இன்னொரு மலைமாடு.. இளாவை அடிக்க கட்டையை ஓங்க.. தன் வலது காலை உயர்த்தி.. அவன் நெஞ்சிலேயே ஓர் உதை உதைத்தான் இளா.
முதன் முதலாக.. தன் மனது ஹீரோவாக வரித்து வைத்திருந்த அர்ஜூன்.. ஒற்றையடிக்கே பம்மிப் போய் நிற்பதுவும், இத்தனை நாளாக சக மாணவனாக எண்ணியிருந்த இளா.. தைரியத்துடன்.. அந்த ரவுடிகளை எதிர்கொள்வதையும் பார்த்து… அர்ஜூனின் ஹீரோயிஸத்தின் மீது உருவான மாயக்கட்டு மெல்ல மெல்ல அறுபடலாயிற்று அவளுக்கு.
இருப்பினும் இரத்தம் வழிய நின்றிருந்த அர்ஜூனை நாடிச் சென்றாள் அவள்.அவள் வண்டியை விட்டு இறங்கியிருப்பதை அப்போது தான் பார்த்த இளா, அவளிடம் அந்நேரம் தான் வாய் திறந்து பேசலானான்.
ஆயுதங்களுடன் நிற்கும் ரவுடிகளிடம் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே அவளைப் பார்த்து… சீற்றத்துடன் கத்தினான் அவன்.
கை முஷ்டி இறுக்கி, கழுத்து நரம்புகள் புடைத்து வெளித் தெரிய, “நீயெதுக்கு வ்வெளியே வந்த?.. உள்ளே இருக்க.. வேண்டியது தானே?” என்று பேசிக் கொண்டிருந்த போதே..அதில் ஈவிரக்கமற்ற ஓர் கறுத்த குண்டன்.. உருட்டுக்கட்டையால் ஷக்தியின் மண்டைக்கே அடிக்க ஓங்க, சட்டென்று பாய்ந்து, அவளைத் தன் நெஞ்சோடு.. ஓர் குழந்தை போல அணைத்து,அந்த அடியைத் தன் முதுகில் வாங்கிக் கொண்டான் இளா.
அடி வாங்கிய அந்த கணப்பொழுது… இளாவின் உடல் முழுவதும் ஒரு கணம் விறைத்து.. மூச்சு ஒரு நிமிஷம் நின்று வரவே… அதிர்ச்சியடைந்த மற்றும் கலங்கிய முகத்துடன்.. அவன் இதயக் கூட்டின் பக்கத்திலிருந்து.. அவனையே தான் அண்ணாந்து பார்த்தாள் அவள்.
ஒரு நிமிடத்தில் சமாளித்துக் கொண்டவன், அடிபட்டு இரத்தம் வழியும்.. அர்ஜூனை நோக்கிக் கொண்டே, “டேய்.. யாருடா நீங்க? உங்களுக்கு என்னடா வ்வேணும்??” என்று இரைந்து கேட்க, அந்த ஆளரவமற்ற சாலையின் ஒதுக்குப்புறமாக பைக்கில் நின்று.. அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஓர் இள வயது ஆடவன் அவர்களை நோக்கி வந்தான்.
அவன் வருவதைக் கண்டதும்.. குண்டர்கள் அவனை அடிப்பதை விட்டு விட்டு.. அந்த ஆடவனையே நோக்க, அவனைப் பார்த்த இளாவின் விழிகள் மெல்ல விரிந்து, அதரங்கள், “விஜய்!!”என்றன மெல்லமாக.
விஜய். கொமர்ஸ் ஃபேகல்ட்டியில் எப்படி ஒரு அரசியல் பின்புலம் கொண்ட அர்ஜூன் பாலகிருஷ்ணனோ? அதே போல இன்ஜினியரிங் ஃபேகல்ட்டிக்கு, ஒரு “விஜய் நாராயணசாமி”!!
“நாராயணசாமி”யும், “பாலகிருஷ்ணனும்”அரசியலில் பரம எதிரிகள்!! இந்நாள் மந்திரி “பாலகிருஷ்ணனாயின்”, முன்னாள் மந்திரி “நாராயணசாமி”!! கைகளில் ஹெல்மெட்டுடன் வந்த விஜய், அர்ஜூனை நோக்கி சீறிப்பாயும் குரலில், “டேய் உனக்கு.. என் ஆளு ஷ்ஷீலா க்கேட்குதா?..” என்ற வண்ணமே, அர்ஜூனின் கைச்சந்துக்கு ஓங்கி ஓர் அடி ஹெல்மெட்டினால் அடிக்க, பதறிப்போய்.. சரிந்து விழப்போன நண்பனைப் பிடித்துக் கொண்டான் இளா.
ஷக்தியோ “ஷீலா” என்று கேட்ட புதுப்பேரில் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தாள். விஜய்யோ, அர்ஜூனை நோக்கி சுட்டுவிரல் காட்டி எச்சரிக்கும் தொனியில், “ஷீ இஸ் மைன்.. கொமர்ஸ் ஃபேகல்ட்டி.. இன்ஜினியரிங் ஃபேகல்ட்டி ப்பக்கத்திலேயும் நிற்க முடியாது.. ஷீலா எனக்குத் தான்..” என்றுரைக்க, சட்டென இடையிட்டான் இளா.
“விஜய் நீ பண்றது தப்பு.. காலேஜ் பிரச்சினையில் வெளியாட்கள்.. வர்றது.. நமக்கு தான் ஆபத்து!!..”என்று மாணவர்கள் ஒற்றுமையைப் பற்றி எடுத்துரைக்கலானான் இளா.
விஜய்க்கோ தன் காதலி ஷீலாவை.. அர்ஜூன் எடுத்துக் கொண்ட ஆத்திரமும், ஆவேசமும் அர்ஜூனைக் காணக் காண மிகுந்தது. ஹெல்மட்டால் மீண்டும் அர்ஜூனைத் தாக்க முயன்றவனின் கையை, தடுத்து நிறுத்தியிருந்தது இளங்கோவின் கை.
அவனை உறுத்து விழித்துக் கொண்டே விஜய், “கையை விடு இளா.. பிரச்சினை எனக்கும், அவனுக்கும் தான்.. இதில் நீ தலையிடாதே… பொண்ணுங்க பின்னாடி போய்.. வாய் வைக்கிறது அந்த நாய்க்கு என்ன புதுசா? ஆனால் இந்த தடவை அவன் கை வைச்சது என் ஷீலா மேல்.” என்றவன், அர்ஜூனை கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டே, “காலேஜ் பிரச்சினையில் வெளியாட்கள் வராமல் இருக்கணும்னா.. அதுக்கு இந்த.. ந்நாயி.. என் ஷ்ஷீலா பின்னாடி வ்வர ம்முதல்.. யோசிச்சிருக்கணும்..விஜய் கிட்ட வாலாட்டினால் என்ன நடக்கும்னு..க்காட்டுறேன்!!” என்று கறுவியவன்.. கண்களால் ஜாடை செய்ய.. அங்கே மீண்டும் ஆரம்பமானது ஒரு குட்டி யுத்தகளம்.
அன்று அந்நொடி வெளிப்பட்ட அர்ஜூனின் இன்னொரு முகத்தில்.. தான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து.. அதை சகித்துக் கொள்ள முடியாமல் நின்றாள் ஷக்தி.
அர்ஜூனின் தலைக்காயத்திற்கு துப்பட்டாவால்.. கட்டுப்போட எண்ணியிருந்தவள்… அப்படியே கல்லாய் சமைந்து நின்றாள்.
என்ன தான் நண்பன் ப்ளே பாயாக இருந்தாலும் கூட.. அவன் அடிவாங்குவதைத் தாங்கமாட்டாமல்.. இடையிட்டு.. தான் கற்று வைத்திருந்த கராத்தே வித்தையைக் காண்பிக்கலானான் இளா.
இளாவுக்கு விழுந்த சிற்சில அடிகளில்.. அவன் கைகளில்.. நெற்றியில் பொங்கி வழிந்த இரத்தத்தில்.. இனம்புரியாமல் தவித்துப் போய் துடித்தாள் அவள். அவள் அவன் புறமுதுகையே பார்த்திருக்க.. அவள் கையை ஏதோ அழுத்துவது போல.. குனிந்து அவள் கையைப் பார்த்தாள் அவள்.
இளாவின் கை.. சண்டை ஆரம்பமான போது அவள் கையைப் பற்றிக் கொண்டது தான். குண்டர்கள் இதற்கு மேலும் சமாளிக்க முடியாது என்று வெருண்டோடி.. அர்ஜூன் தன் தந்தைக்கு அழைப்பெடுத்து, ‘ஆம்புலன்ஸ்’ வண்டி வரும் வரையிலும் கூட.. அவன் ஷக்தியின் கையை விடவேயில்லை.ஷக்தியும்.. அவனை.. உள்ளே புதுமாதிரியான உணர்வுடன் வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை நிறுத்தவேயில்லை.
