என்னவோ மோகம்
44 EM
வெளியில் கதவு உள் வரும் அனுமதிக்காய் மெல்லிதாய் தட்டப்பட.. மோன நிலையிலிருந்த தம்பதியர் நிகழுலகுக்கு வர..
சடங்காய் யோகிக்கு நிறய நன்றிகள் சொல்லப்பட்டு.. சுபி மறுநாள் மகப்பேறு மருத்துவ கவனிப்புக்கு வரவேண்டும் என்ற அப்பாயின்மென்ட் கொடுக்கப்பட்டு சர்வ மரியாதையோடு அந்த இரவிலும் இருவரையும் அரசு அதிகாரிகள் விஐபி அந்தஸ்து கொடுதகு வீட்டுக்கு அனுப்பி விட.. வழியெல்லாம் நடந்த சம்பவங்கள் அதன் விவரங்கள், இழப்புகள் கேட்டு தெரிந்துகொண்டாள் சுபி.. வருத்தமும் கொண்டாள்..
“கூழோ? கஞ்சியோ? நம்மூர் நம்மூர் தான் மாமா.. இங்கு பகட்டு தான் இருக்கு பாசம் கம்மி..” என்று சலம்பி கொண்டு வர.. யோகி வீட்டுக்கு வந்த பிறகும் இன் மூட் அவுட்.. பால் மட்டும் போதும் என்பதுபோல இருவரும் இரவு உணவை முடித்துக்கொண்டு படுக்கைக்கு வர.. யோகிக்கு யோசனையோ யோசனை.
எப்படி குங்குமம் மூக்குத்தி வந்தது? அவனுக்கு சூட்சுமம் புரிய வில்லை என்றாலும்.. தங்களையும் தாண்டி தெய்வ
சக்தி இருக்கு என்பதை சுபியின் பத்திரத்திலேயே உணர்ந்துவிட்டான்..
குங்குமம் கொடுங்க! சாமி ரூமில் வச்சுடலாம் இங்கு வேணாம்.. சுபி நியாபகம் வந்து கேட்க..
தன் பாக்கெட்டில் பத்திரம் பண்ண பொட்டலம் எடுத்து தந்துட்டான்.. தாய்க்கு போன் போட்டு குலதெய்வதுக்கு வேண்டுதல் வைக்க சொல்ல.. உனக்கு ஒன்னு என்றதும் நேர்ச்சை வச்சுட்டேன் ப்பா.. சிவப்பு கல்லு மூக்குத்தி உன் கையாலேயே பகவதிக்கு காணிக்கை வைக்கிறேன் என்று வேண்டிட்டேன்ப்பா..” அவர் தன் பக்கம் சொல்ல..
வாசலுக்கு போன சுபியை அழைத்து தாய்க்கு சொல்ல பொட்டலம் திறக்க .. அதே மஞ்சள் காகிதம் ஆனால் பொருள் வேறு மாறி திருநீறு இருந்தது .. கண்கட்டு வித்தை போன்ற மாயம்.. திரும்பவும் நெகிழ்ச்சி.. தாயிடம் என்னவென்று சொல்ல?
சரிம்மா வீட்டுக்கு பாத்திரமா வந்துட்டோம் அதை சொல்லத்தான் கூப்பிட்டோம்.. நீங்களும் அப்பாவும் பத்திரமாக இருங்க.. கூடிய சீக்கிரம் நம்மூருக்கே வந்துருவேன்ம்மா.. “
“சரிப்பா ரொம்ப சந்தோசம்…. அப்புறம் சுபி அப்பா இங்கு காத்தே கிடந்தார்.. நீ அப்போ ரெண்டுபேரும் நல்லாருக்கோம் சொன்ன பிறகு தான் அவர் வீடே போனார்.. சுபியை அவர் கிட்டே பேச விடுப்பா என்ன? மறந்துடாதே! வச்சுடுறேன் நல்லா தூங்குங்க… காலையில் பொறுமையா எந்திரிங்க..” இன்னும் ஆயிரம் நலன்கள் சொல்லி தாய் எனும் மனித தெய்வம் தன் மாசில்லா அன்பை பொழிந்து போன் வைக்க..
“சரிம்மா..” என்று இங்கு போன் வைத்தவனின் இதயம் முழுக்க அன்பின் அதிர்வுகளில் துடித்துக்கொண்டிருந்தது..
செல்லை சுபிக்கு கொடுத்துட்டு “உங்கப்பாட்ட பேசு” யோகி நொடியில் உறங்கிட்டான்..
இங்கு தகப்பனிடம் சின்னஞ்சிறு கதைகள் பல பேசி வைத்தவள்.. தூங்கும் கணவனின் இதுவரை பாரா சோர்ந்த முகம் கண்டு தானும் உருகி போனாள்…
தூங்கியவன் நெஞ்சோடு தானும் அட்டையா சுருண்டு தூங்க சொர்க்க இரவு..
காலையிலும் யோகியின் பாராமுகம் தொடர..
நான் ஏதும் மாற்றல மாமா..
என்ன மாத்தல்ல?
திருநீறு!!
ப்ச்! அது ஏதோ மிரகிள்… யோகி தன் லேப்பில் அமர்ந்து விட..
கோவமா?
இல்ல..
கோபம் தான் ..
……
பதில் தாராது யோகி.. கொஞ்சம் கூட அவளை ஒரு பொருட்டாய் மதியாதிருக்க..
அவன் கால்களுக்கு நடுவில் இவள் அமர..
ஒன்னும் வேணாம் விடுடி
எனக்கு வேணும்..
அது இல்ல .. கையை எடு
இருக்கு.. அந்த நீண்ட உருளை பொருளை தடவியவள் உருவ.. தூங்கிய நிலையில் இருந்தது சொந்தம் கொண்டவள் கை பட்டதும் மெல்ல நீண்டு முழிக்க..
அவள் கையை தட்டி விட்டான் கணவன்.. மூட் இல்ல..
நீ லவ் பண்றே பண்றே சொல்ற.. நான் உன்னை பண்ணல என்று நீ எப்படி நினைக்கலாம்? இப்போ எதுக்கு இந்த நடிப்பு? எனக்கு மட்டும் தருவது போல.. ஒன்றும் வேணாம் சும்மா இரு.. நாம ஜஸ்ட் கல்யாணம் ஆனவங்க ஒன்னா இருப்போம் .. போ .. நீ சொன்ன மாறி ஓரமா இரு.. சாருன்னு கூப்பிடு.. எப்படின்னா இரு போடி.. வலியோடு சொன்னான்.. தன் காதல் அன்பு காமமாக கொள்ளப்பட்டதில் ஹர்ட் ஆகிட்டான்.. சுபிக்கு ஒரு அறிவும் கிடையாது என்றாலும் ஏதோ தனக்கு அன்பை கன்வே பண்ண தெரில.. கவலை கொண்டான்..
இப்போ அமைதியா இருப்பது சுபியின் பதிலானது..
பேசுடி.. நான் உன் கூட அப்டி இப்டி இருந்ததெல்லாம் அன்பு தான் தெரிலியா?
சந்தேகமா இருந்துச்சு மாமா..
இன்னும் முகம் சுண்டி போனது யோகிக்கு..
அப்போ என்னை நம்பல …
இல்ல மாமா.. கண்ணீர் பொங்க சுபி சொல்ல..
ஏன் காமுகன் போல உனக்கு தெரிஞ்சேனா? குரல் உயர்த்தினான யோகி..
இல்ல.. நான் உங்களுக்கு செட் ஆவ மாட்டேன் என்ற எண்ணமே இருக்க.. என்னால் எதையும் சிந்திக்க முடில..
சந்தோசம்.. எழுந்து ட்ரெஸ் பண்ணிட்டு வெளியில் போய்ட்டான்.. அன்று பகலில் வீட்டில் இருக்கவே யில்ல.. அவளை ஹாஸ்பிடல் கூட்டி போக நிஷாவை கேப் யோடு அனுப்பி.. அந்நியனாய் நின்று கொண்டான்.. அன்றிலிருந்தே என்றே சொல்லலாம்… ஆணுக்கும் இதோர் அவமானம் அல்லவா? அவன் பக்கம் மியூட் ஆகிட்டான்.. அது உண்மையில் நன்றாகவே இல்லை தான் என்றாலும் இதை கடந்து பேசியோ உறவாடியோ இருந்தால் இவன் அன்பு களங்கப்பட்டுவிடும் அஞ்சினான்.. நேர்மையா இருப்போம் என்றே இந்த இடைவெளி.. அதென்னவோ ஆசையா இருந்தபொழுது இரவில் மூன்று நான்கு முறை என்று அடித்த நீச்சல்கள்.. இப்போ குளத்தை கண்டாலும் கம்முன்னு இருந்தது.. ஏன்? மனசுக்கும் உடலுக்கும் கண்ணுக்கு தெரியாத கனெக்சன் உண்டு .. அங்கு பொங்கினால் இங்கு வழியும்.. அது வறண்டால் இது காயும்.. யோகிக்கு அந்த விதி தான் அப்ளை ஆனது.. வறண்டு போச்சு அவன் காமக்குளம்
சகஜ நிலை மேடிசன் ஸ்ட்ரீட் வந்ததும்.. வேலைக்கு போகல சுபி.. யோகியின் மவுனம் தந்த பயத்தில் அவளே முடிவு பண்ணி வீட்டில் இருந்தாள்.. ஊருக்கு மாசமா இருப்பதை சொல்ல வெட்கம்.. அங்கு இன்னும் ரூமர் ஓடிக்கொண்டிருந்தது.. இ1ன்னும் புருசனுக்கு பிடிக்காது தான் வாழ்ந்துட்டு இருக்கா என்று .. இதில் உடனே பிள்ள சேதி சொல்ல வெட்கமாயிருந்தது.. யோகியே அப்படியே உலகின் புருஷன் போஸ்ட் அப்பாய்ன்ட் ஆனவர்கள் லிஸ்ட்ல சேர்ந்து கெட்டு போயி அமுக்கியா மாறிட்டான்..
இந்த யோகி மாமாவை சுபிக்கு பிடிக்கல.. மாத்திரை ஊசி இன்ஹேலர் தந்த வள்ளல் யோகி காமனைத்தான் பிடிச்சது..
ஆண் என்றால் அதில் கொஞ்சம் ஜாஸ்திதான் ஈடுபாடு இருக்கணும் .. ரெண்டு மாச அப்ரெண்டிஸ் மனைவி கருத்து.. ஹாஹாங் ஓவர் ம்மா..
கன்னியா இருக்கும் வரை கலவி பற்றி தெரியாது.. கனவுகளில் மட்டுமே அது சும்மா பாப்கார்ன் ருசி.. புருஷன் நிகழ்த்தியது பஞ்சுமிட்டாய் ருசி.. நாக்கிலேயே தித்திப்பு நின்றது..
வலியவும் போவ முடில.. பரம்பரை நாணம் காலில் சங்கிலியா.. அவனும் வரல்ல.. ரொம்பத்தான்.. போடா பெருசு ..
Haha
