இதழோடு உறவாட வா….

This entry is part 21 of 21 in the series இதழோடு உறவாட வா

இதழோடு உறவாட வா

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழ்… 26!


திவ்யாவோடு பிஜியில் தான் தங்கி இருந்தாள் அதிதி. அதுவும் மறக்காமல் அனைத்தையும் திவ்யாவிடம் அவள் பகிர்ந்து கொள்ள.. அதிர்ந்து பிளந்த வாயை திவ்யா மூடவே இல்லை.

“ஏன் டி அதி.. ஒரு குடும்பத்துக்குள்ள சில பல டிவிஸ்ட் இருக்கலாம் டி! ஆனா டிவிஸ்டிக்குள்ளேயே ஒரு குடும்பம் இருக்கலாமா? அப்படி தான் டி இருக்கு நீ சொல்ற கதை எல்லாம் கேட்டா..” என்று அதிர்ந்த வாக்கில் சொன்னவள், “ஆனாலும் சூப்பரா இருக்கு இல்ல.. இப்படி முரட்டுத்தனமா முறுக்கிட்டு இருந்த ப்ரொபசர் இப்போ உன் பின்னாடியே சுத்துறது..” கிளுக்கி சிரித்தாள் திவ்யா.

அதிதி அவளை முறைக்க “விடு டி! விடு டி! எப்படியும் அவர் திரும்ப அமெரிக்கா ஓடிருவாரு தானே.. ஆமா நீ என்ன பண்ண போற? நீயும் பின்னாடியே ஓட போறியா? ரெண்டு பேரும் மாத்தி மாத்தி துரத்தி துரத்தி விளையாட போறீங்களா?” என்று கேட்டவளுக்கு அப்படி ஒரு சிரிப்பு! கண்டிப்பாக ரிஷி இவளை விட மாட்டார் என்று அவளுக்குமே அத்தனை நம்பிக்கை அதிதி கூறியதிலிருந்து..

அதிதியிடம் தான் பதில் இல்லை அவள் திவ்யா பேசிக் கொண்டிருக்கும் போது “ஆமாமில்ல.. நாம என்ன செய்யப் போறோம்?” என்று யோசித்துக் கொண்டிருந்தவள் அப்படியே ஆழ்ந்து உறங்கி விட்டாள.

“சரியான கும்பகர்ணி டி நீ!” என்று தூங்குபவளை தலையணையால் மொத்தி விட்டு திவ்யாவும் தூக்கத்தை தொடர்ந்தாள்.

முன்பு இருந்த மனக்குழப்பங்கள் சஞ்சலங்கள் எதுவும் இல்லை அதிதியிடம். ஆனாலும் ரிஷி செய்ததை அவளால் ஒத்துக்க முடியவில்லை. அந்த கோபம் மட்டுமே அவன் மீது!

மீண்டும் ஒரு துள்ளல் நடை.. அகம் மலர்ந்த சிரிப்பு.. விரிந்த புன்னகையோடு கூடிய பேச்சு அதிதியிடம்! ஆனால் முன்பு போல அதிகமாக இல்லை! கொஞ்சமே கொஞ்சமாகத் தான்.

திலீபனுக்கு திவ்யா மூலம் ரிஷி பற்றி செய்திகள் சென்று இருந்தது.

அவனோ “ஆல் ஹேப்பி! மீ ஹேப்பி!” என்றபடி தன் வேலையை பார்த்தான்.

மீண்டும் அதே கல்லூரிக்கு ரிஷி வர மாட்டான் என்று பெருத்த நம்பிக்கை அதிதியிடம்.

“ஆனால் நான் உன் நம்பிக்கை எல்லைக்குள் எல்லாம் வரமாட்டேன்.. முடிந்தால் என்னை கணித்து பார்!” என்றிருந்தான் அவன்!

ஏனென்றால் அவள் வெளியே எங்கேயும் செல்லவில்லை. அவளை பின் தொடரவோ மனதை மாற்றவோ அவனால் இயலாமல் போக.. வேறு வழிமின்றி மீண்டும் காலேஜுக்கு செல்ல தொடங்கினான்.

பரமேஸ்வரனிடம் “கொஞ்ச நாட்கள் எனக்கு ஊட்டியில வேலை இருக்கு. அதுவரை அவ்வப்போது கெஸ்ட் ப்ரொப்ஷரா வரட்டுமா?” என்றதும் அவரோ அகமகிழ்ந்து இரு கைகளையும் விரித்து வரவேற்க..

அப்புறம் என்ன இப்பொழுது அவனது கேபின்லேயே அதிதிக்கும் கேபினை ஏற்படுத்திக் கொடுத்து மீண்டும் பேப்பர்ஸ் ப்ராஜெக்ட் ஸ்டூடண்ட்ஸ் கைடன்ஸ் என்று அவளை தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ள முயன்றான்.

“போன மச்சான் திரும்பி வந்தானே..!” என்று ரிஷி திரும்பி வந்தது ஒரு பக்கம் அனுசுயாவுக்கு ஆனந்தமாக இருந்தாலும், மறுபக்கம் “எங்க தன்னுடைய ஹெச்ஓடி கனவு தகர்ந்து விடுமோ?” என்று பயந்து கொண்டே தான் இருந்தாள்.

கூடவே அதிதியின் கேபினை ரிஷியின் கேபினுக்கு மாற்ற இவளோ சுனாமி என கொந்தளித்து நியாயம் கேட்க போக…

“ஷி இஸ் மை வைஃப்!” என்று ஒற்றை வார்த்தையில் ரிஷி முடிக்க, அவ்வளவுதான் அனுசுயாவின் பிஞ்சு இல்லை முத்தின நெஞ்சு வெடித்து சிதறியது.. பீஸ் பீஸாக..! சில்லு சில்லாக…!

இதயத்தின் மேலே இடது கையை வைத்துக் கொண்டு கேபினுக்குள் நுழைந்த அனுசுயாவை திவ்யாவும் அதிதியும் பார்த்து என்னவென்று தங்களுக்குள் கிசுகிசுகித்துக் கொள்ள.. அவளோ அதிதியை பார்த்து “ஐ ஹேட் யூ! ஐ ஹேட் யூ ஃப்ரம் மை ஹார்ட்!” என்று கத்தினாள்.

முதலில் என்னவென்று புரியாமல் இருவரும் விழிக்க “ஏண்டி ஒருவேளை நீ ரிஷி சாரோட பொண்டாட்டின்னு அவளுக்கு தெரிஞ்சிடுச்சோ?” என்றதும் “அப்படியும் இருக்கலாமோ?” என்று அதிதி பார்க்க..

“என் ரிஷியை பிரிச்சிட்டே இல்ல.. என்கிட்ட இருந்து பிரிச்சுட்டல!” என்று விசும்பியவளை கண்டு, எங்காவது போய் தலையை முட்டிக் கொள்ளலாம் என்று இருந்தது அதிதிக்கு.

“இவ்ளோ சீன் எல்லாம் கிடையாது அந்த ப்ரொஃபஸருக்கு!” என்று உதட்டை சுழித்து கொண்டாள்.

அதற்குள் பியூன் வந்து அவளது கேபினை கெமிஸ்ட்ரி டிபார்ட்மென்ட்டுக்கு மாற்றி விட்டதாக சொல்ல.. அது ரிஷியின் வேலை தான் என்று இவள் பல்லை கடிக்க, திவ்யாவோ வாய்மூடி சிரித்தாள்.
அனுசுயாவோ அவளை பொறாமையாக பார்த்தாள்.

“இப்படி நீங்க செஞ்சுகிட்டே இருந்தீங்கனா.. நான் இந்த வேலை தூக்கி போட்டுட்டு போயிட்டே இருப்பேன்!” என்றாள் ஆத்திரத்தோடு அதிதி!

“முடிந்தால் செய்து பார்!” என்றான். ஏனென்றால் அவளுக்கு அந்த ஊரின் மீது ஒரு பற்று உண்டு. அதிலும் அந்த மலைவாழ் குழந்தைகளின் மீதும் அவர்களின் படிப்பு மீதும் என்றைக்குமே அதிதிக்கு அக்கறை உண்டு! அவ்வளவு சீக்கிரம் இங்கே இருந்து வெளியே சென்று விட மாட்டாள் என்பது ரிஷியின் திண்ணிய எண்ணம்.

இப்படியாக ஒரு வாரம் சென்றது. முன்பெல்லாம் மதியம் தூக்கம் போட்டவள் இப்பொழுது ரிஷியின் கேபினில் அவனோடு இருப்பதை தவிர்ப்பதற்காகவே வகுப்பு எடுக்க சென்றாள். 

“வாட் அ செமிஸ்டிரி மிர்க்கிள்!” என்று கிண்டல் அடித்தான் ரிஷி.

இதற்கு இடையில் ரிஷியும் அதிதியும் கணவன் மனைவி என்று காலேஜ் முழுக்க பரவ.. பலர் ரிஷியை பொறாமையாக பார்த்தார்கள். “இப்படி அழகான ப்ரொஃபஸரை தூக்கிட்டு போயிட்டியே டா!” என்று!! அதில் அந்த நந்தாவும் ஒருவன்.

அன்று மாலை இவள் திவ்யாவோடு நடந்தபடி அருகில் இருக்கும் பிஜிக்கு சென்று கொண்டிருக்க.. ஜீப்பில் அவளை பாலோ செய்து கொண்டு வந்தான் ரிஷி. எப்போதும் நடப்பது தானே.. என்று அவனை கண்டுகொண்டாலும் கண்டுகொள்ளாத மாதிரியே இவள் திவ்யா கூட பேசிக் கொண்டே செல்ல…

சிறிது நேரம் பார்த்தவன் பின்பு அவள் ஹாஸ்டல் உள்ளே நுழையும் அன்பு ஜீப்பினால் வழி மறைத்து ஒரு கதவை திறந்து விட்டு “ஏறு..!” என்றான். 

அவளோ மறுத்து, விடுதியினுள் செல்ல போக…

“இப்போ ஜீப்பில ஏறலைன்னா.. நான் உன் ஹாஸ்டலுக்கே வந்து நம்ம ரெண்டு பேரும் மேரேஜ் ஆனதிலிருந்து எல்லா விஷயத்தையும் சொல்லி உன்னை கூட்டிட்டு போவேன்! அப்படியும் நீ வரலைன்னா பிரச்சனை இல்ல.. விடிய விடிய இங்கே தான் நம்ம ஸ்டே!” என்று ஜீப்பில் இருந்து இறங்கியவன் அந்த பேனர் மீது ஏறி அமர்ந்து கொள்ள..

அவளுக்கும் நெஞ்சம் பதைபதைத்தது! அப்பொழுதே ஒன்றிரண்டு பேர் மெல்ல எட்டி எட்டி இவர்களை பார்ப்பதை பார்த்தாள்.

“இறங்கி தொலைங்க! ஒரு ப்ரொஃபஸர் மாதிரியா பிஹேவ் பண்றீங்க? ஏதோ இப்பதான் பருவம் வந்த ரோமியோ மாதிரி பிஹேவ் பண்றீங்க!” என்று அவள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு கடுப்போடு சொல்ல…

“காதல் வந்த எல்லோருமே ரோமியோ தான் அதி! அதற்கு வயசு பாலினம் எல்லாம் கிடையாது. சரி சரி என்னை லக்சர் கொடுக்க வைக்காத! சீக்கிரம் வந்து சேரு பார்ப்போம்! நிறைய வேலை இருக்கு” என்று இரு கைகளையும் மேலே உயர்த்தி அவன் நெட்டி எடுக்கும் முறையே அவளுக்கு பக்கென்று ஆனது.

அதனால் சத்தம் போடாமல் “முடிஞ்சதை பாத்துக்கோ!” என்று இவள் உள்ளே சென்று விட்டாள்.

அவள் சென்று ஐந்து நிமிடம் கூட இருக்காது, அவளை அழைத்து வரச் சொல்லி வார்டன் ஆளை அனுப்ப, “வரேன்!” என்று சொல்லி அனுப்பினாள்.

“போச்சுடா பிரச்சினை பண்றான் போல..” என்றபடியே அவள் பயந்து கொண்டு கீழே வர இவனோ வார்டன் இருக்கும் அறையில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தான், அதிலும் கையில் காஃபி வேறு! 

இவளை பார்த்த வார்டன் “வா மா உன் வீட்டுக்காரர் பார்க்கணும்னு சொன்னார்” என்றதும் அவளுக்கு திக் என்று ஆனது.

“நீ அமெரிக்கா போகிறாய் அது வரைக்கும் இங்க ஸ்டே பண்ண சொல்லி இருக்காருன்னு என்கிட்ட சொல்லவே இல்லையே? அதுதான் ஏதோ விசா பிராசஸ் பத்தி பேசிணும்னு உன்னை கூப்பிட்டார்” என்றதும் இவள் தலையில் அடித்துக் கொள்ள சென்ற கையை அப்படியே மடக்கிக்கொண்டு “ஓகே மேம் நான் பார்த்துக்கிறேன்” என்று இனிய குரலில் கூறிவிட்டு அவன் புறம் சென்றவள் “வாங்க..!” என்று பல்லை கடித்துக் கொண்டு வெளியில் விஷிடர்ஸ் வந்தால் அமரும் அறைக்கு சென்றாள்.

“சும்மா இந்த மாதிரி எதுவும் சாக்கு போக சொல்லிட்டு வந்தீங்க.. அப்புறம் உங்களை பொக்சே சட்டத்துல உள்ள தள்ளிடுவேன்” என்று மிரட்டினாள்.

“சேச்சே.. பொக்சே சட்டம் அண்டர் 18! நீ அபோவ் 18 இல்ல… இல்லையா?” என்று அவளை மேலே இறங்கப் பார்த்தவன், “பெட்டர் ரேப்னு கேஸ் ஏதும் கொடு! அதுக்கு முன்னாடி ரேப்பை கனகச்சிதமா முடிச்சிடுவோம்!” என்று அவள் முன்னே குனிந்து உதட்டை குவித்து வேகமாக காற்றை அவள் முகத்தில் ஊத.. அந்த வெம்மையும் அவனின் வாசனையும் கலந்த காற்று அவள் உடம்பில் தாக்கத்தை ஏற்படுத்த…

“கிளம்புங்க!” என்று அவள் கிட்டத்தட்ட மிரட்டும் தொணையில் கூற..

அவனோ அசைந்தான் இல்லை? இன்னும் அமர்கையாக இருக்கையில் அமர்ந்து கொள்ள “உன்னோட..!” என்ற தலையில் அடித்துக் கொண்டவள், இவளே வார்டனிடம் சென்று “நாங்க விசா பிராசஸ்க்காக நாளை காலை பாஸ்போர்ட் ஆபீஸ் போகணுமாம் மேம். அதனால இப்பவே கிளம்ப சொல்றாரு! நான் அவரோட போகிறேன் மேம்” என்று அவன் ஆரம்பித்த பொய்யை இவள் முடித்து வைத்து, அவனோடு ஜீப்பில் ஏற, திவ்யாவோ இருவருக்கும் டாடா காட்டி அனுப்பி வைத்தாள்.

“நான் என்னமோ உன்னை கடத்திட்டு போற மாதிரியே மூஞ்சி வச்சிட்டு இருக்க.. சீ.. லவ் ஈஸ் த மேஜிக்!”
என்றவன், வண்டியில் பாட்டை போட எல்லாமே கஜமுஜா பாடல்களாகவே இருந்தது. 

‘எதுக்கு இவன் இப்படி பாடல்களை போடுகிறான்?’ என்று உள்ளுக்குள் நடுக்கம்! ‘ஒருவேளை மாமி வீட்டுக்கு அழைத்து சென்று விடுவானோ? இவன் உடல் மொழியும் பார்க்கும் பார்வையும் போடும் பாடலும் ஒன்றும் சரியே இல்லை!’ என்று பயந்தாள்.

அவள் பயந்தது போல மாமி வீட்டுக்கு எல்லாம் அவளை அழைத்து செல்லவில்லை.

நேராக கேரளாவுக்கு தான் அழைத்து சென்றான். “அடுத்து இரண்டு நாள் லீவு தானே அதுக்கு தான்..” என்று அங்கே ஆசிரமத்தில் இவன் இறக்கிவிட்டதும் தான் அவளுக்கு மூச்சே வந்தது. அதுவரையும் எங்கே வண்டியை பாதிலேயே திருப்பி எங்கையாவது ஹோட்டலுக்கு போயிடுவானோ என்று அத்தனை பயம்.

இரவு 10 மணி நெருங்கும்போது அங்கு வந்திருக்க.. இந்திரனுக்கு என்று ஒதுக்கப்பட்ட குடிலில் இருவர் மட்டுமே இருக்க முடியும். அருகே மற்றொரு குடிலை வாடகைக்கு எடுத்தான்.

 இம்மாதிரி நோயாளிகளை பார்க்க வருபவர்களுக்கு என்று கட்டி வைத்தது. ஒரு நாள் என்றால் நிர்வாகத்தின் சார்பில் இலவசமாக தங்கலாம். அதற்கு மேல் என்றால் அதற்கான வாடகையை அவர்கள் தர வேண்டும் என்று நிலவரம் இருப்பதால் கட்டிவிட்டான்‌ பணத்தை! அதற்கெல்லாம் ரிஷி ஒன்றும் கவலைப்படவில்லை.

அடுத்து வந்து இரண்டு நாட்களும் காயத்ரி மற்றும் இந்திரனோடு தான் அவர்களது முழு ஜாகையும்.

புதிதாக கிடைத்த அப்பாவை இவள் சொந்தம் கொண்டாட.. அவனோ அம்மாவின் அன்பு மழையில் நனைந்தான். குடும்பமாக இப்படி சேர்ந்து சிரித்து வாழ்வது நால்வருக்குமே ஒருவித மன அமைதியை கொடுத்தது.

“அவனுங்களுக்கு பயப்படாமல் உங்க கிட்ட நான் முன்னாடியே வந்து இருக்கணுமோ?” என்று அவ்வப்போது கேட்கும் அதே கேள்வியை இப்பொழுது காயத்ரி கேட்க..

“போடி பைத்தியம்! இழந்ததை நினைத்து வருந்தாதே.. இருக்கும் காலம் வரை இதே மாதிரி சந்தோஷத்தோடு இருப்போம்” என்று காயத்ரியின் தலையில் கை வைத்து மெல்ல ஆட்டினார் இந்திரன்.

“பாத்துகோ டி! இது அம்மாவுக்கு மட்டுமல்ல.. உனக்கும்தான்! பழச நினைக்காம இப்போ உள்ளதை நினை” என்று அவன் மனைவியின் அருகில் சென்று கிசுகிசுக்க…

“அது உனக்கு செல்லாது மகனே! எப்போ அதிதியா உன்னை மன்னிக்கிறாளோ அப்பதான்!” என்று இந்திரன் கூற “எப்படி?” என்று இப்பொழுது இவள் புருவம் உயர்த்தினாள்.

இரவிலோ இருவருக்கும் இடையில் அவள் தலையணையை சுவரா எழுப்ப.. அனைத்தையும் தூர போட்டவன், “எனக்கு வேறு எந்த நினைப்பும் இல்லை! நீயா வந்து மாட்டிக்கிட்டேனா சேதாரம் உனக்கு தான் சிவனேனு படு” என்றதும் அவள் அப்போதும் தூக்கம் வராமல்.. எங்கே அணைத்து விடுவானோ? எங்கே தொட்டு விடுவானோ? எங்கே ஆட்கொண்டு விடுவானோ? என்று ஒருவித அச்சத்தோடு கண் விழித்திருக்க… புரண்டு புரண்டு படுத்தாள். 

அவளுக்கு அவன் மீது பயமில்லை.. அவள் மீதே தான்! அவன் தொட்டால் கண்டிப்பாக உருகி விடுவாள் என்பது அவளுக்கு திண்ணம்! ஆகையால் தான் கோபம் என்ற முகமூடி வைத்துக் கொண்டு அவனை எட்டவே வைத்திருக்கிறாள்.
இப்படியாக அவளது யோசனைகள் சென்று கொண்டிருக்க மொட்ட மொட்ட விழித்திருந்தாள்.

சற்றென்று மலைபாம்பாய் அவளை இறுக்கி தன்னோடு இழுத்து அணைத்தவன், “இது நடந்ததுடும்னு தானே பயந்துகிட்டு கண்ணு முழிச்சிட்டு இருந்த.. இப்ப நடந்துருச்சு! நிம்மதியா தூங்குடி!” என்றான் கரகரத்த குரலில்.

அவனின் மூச்சுக்காற்று அவளது பின் கழுத்தில் வெம்மை ஏற்ற… இன்னும் தூக்கம் தூரம் போனது அதிதிக்கு! 

இப்படியாக நாட்கள் தான் சென்றது!
அவ்வப்போது தன் காதலை அன்பை நேசத்தை செயல்களில் அவன் காட்டிக் கொண்டிருந்தாலும் மலை ஏறின மாரியாத்தா இறங்கவே இல்லை.

காலேஜிலும் இவர்களது ஜோடி செம வைப்பாக தான் போய்க்கொண்டிருந்தது. இவர்களை எங்கேயாவது சேர்ந்து பார்த்தாலே மாணவர்களின் கூக்குரலும்.. கூச்சலும்.. சந்தோஷமும்.. அதிதிக்கு உள்ளூர ஒருவித இதமான மனநிலையே இருந்தது.

இதுவே முன்னே இருந்த அதிதியாக இருந்தால் திரும்பி அவளும் மாணவர்களுக்கு நிகராக பேசி சிரித்து கிண்டல் அடித்து மகிழ்ந்திருப்பாள்! ஆனால்.. இப்பொழுது அமைதியாக கடக்க, அதற்கும் சேர்த்து “எப்படி இருந்த நம்ம மேம்மை நம்ம சார் இப்படி ஆகிட்டாரே..” என்று அதற்கும் பட்டம் ரிஷிக்கு தான் வந்து சேர..

அவனோ அவர்களை தண்டிக்கவும் முடியாமல்.. பதிலும் கூறவும் முடியாமல்.. சங்கடமாக விழித்துக் கொண்டு செல்வான். அதை பார்த்து அதிதிக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.

அவளுக்கு பிடித்தது என்று என்ன என்று அவனுக்கு தெரியாது. ஆனால் அவளுக்கு மிகவும் பிடித்தது கல்வி கற்பிப்பது…!!

//அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்..!’//

பாரதியின் இக்கனவினை நினைவாக்கும் பெண்ணவள்!!

அன்றே ‘ரோமியோ போல பின்னே சுற்றாதே!’ என்று சொன்னாள் அல்லவா… அதற்காக ரிஷி அவள் பின்னே சுற்றாமல் இல்லை! அதையும் செய்து கொண்டு அவளை நிரந்தரமாக தன்னோடு அழைத்துக் கொள்ள மனதில் திட்டம் வகுத்திருந்தான்.

அதன்படி அந்த வாரம் அவள் மலைவாழ் கிராமத்திற்கு பாடம் எடுக்க செல்கையில் அவளை தடுத்து “அம்மா அப்பாவை பார்க்க செல்லலாம்!” என்றான்.

அவளுக்குள் வருத்தம், போன வாரமும் செல்லவில்லை இப்பொழுதும் செல்லவில்லை என்றால்.. அவள் யோசிக்கும் போது “நான் வேறு ஏற்பாடு பண்ணிட்டேன்! இரண்டு டீச்சர் அனுப்பி இருக்கேன்” என்றதும் அவள் சந்தேகத்தோடு பார்க்க.. “சத்தியமா டி! ட்ரஸ்ட் மீ!” என்றான்

“உங்களையா? ட்ரஸ்டா… வாய்ப்பில்ல..!” என்று உதட்டை சுழித்து சென்று விடுவாள்.

இவனது அன்பு செயல்களும் அவளுக்காக செய்யும் அதிரடி செயல்களும் அவளை மலை இறக்கவே இல்லை!! ஏதோ கோமாளியை போலவே பார்த்து வைத்தாள்!!

அவனும் நொந்து விட்டான் அவளை சமாதானப்படுத்த முடியாமல்.. “நான் ஒரு சயின்டிஸ்ட் டி! அமெரிக்கால என் ரேஞ்ச் என்ன தெரியுமா?” என்று ஆரம்பித்தால்..

“என்னை பொன்னமராவதி பார்ட்டில கூப்பிட்டாக.. மாயவரம் பாட்டில கூப்பிட்டாக.. ஆப்பிரிக்காவில் கூப்பிட்டாக.. அண்டார்டிகாவில் கூப்டாக ஏன் நாசாவுல கூட கூப்பிட்டாக..” என்று கோவை சரளா வாய்ஸை இவள் ஃபோனில் ஓட விட..

“அசிங்கப்பட்டான் ரிஷி தனஞ்ஜயன்!” என்று நெற்றியில் குத்திக் கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடுவான். அவளோ நமட்டு சிரிப்போடு அவனை ஓட விடுவாள்!

பகலில் தான் இப்படி என்றால்.. இரவில் தனிமையோ அவனை கொலையாய் கொன்றது!

//நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…
தனிமை அடர்ந்தது…
பனியும் படர்ந்தது…
கப்பல் இறங்கியே…
காற்றும் கரையில் நடந்தது

தனிமை தனிமையோ…
கொடுமை கொடுமையோ…//

என்று பாடவில்லை அவ்வளவு தான்!! மற்றபடி காதல் பித்து முத்தி சுற்றி திரிந்தான் ரிஷி.

இப்போதெல்லாம் காயத்ரியை விட இவன் தான் அதிகம் சொல்வது “டைரக்ட்டா அப்பவே வந்து பேசி அம்மாவை கூட்டிட்டு போயிருந்திருக்கலாம். நல்லபடியாக கல்யாணம் பண்ணி இருக்கலாம் போலேயே” என்று!!

காயத்ரியும் இந்திரனும் அவன் புலம்பலை கேட்டு சிரித்துக் கொள்வார்கள். அதிதியோ கண்டுகொள்ளாமல் இருந்தாலும் அவள் இதழ்களில் ஓரம் துளிர்க்கும் புன்னகையை கண்டுகொண்டான் மாயவன்.

அதிலும் அடிக்கடி அம்மாவை பார்க்க போகலாம், அப்பாவை பார்க்க போகலாம் என்று அவன் அழைத்துக் கொண்டு வருவது.. உண்மையில் அவர்களை பார்க்க அல்ல! இரவின் தனிமையில் நொந்தவன், அவளோடு இரண்டு நாளாவது கூட இருக்கலாம் என்று தான்!

அதுவும் தள்ளி வைத்து அவளை தவிக்க வைத்து கொண்டு இருந்தவளை தாபத்தோடு பார்த்தது “சத்தியமா முடியலடி!” என்று சில சமயம் நேரடியாக கேட்டாலும் அவளிடம் சம்மதத்திற்கான அறிகுறியே இல்லை! அவள் பக்கம் இருந்து சிக்னல் வராது இருக்க இவனும் கட்டாயப்படுத்த விருப்பம் இல்லாமல் விட்டு விடுவான்.

ஆனால் அந்த அணைத்தல்.. தொடுதல்.. அவ்வப்போது அவள் தூங்குகிறாள் என்று எண்ணி கன்னத்தில் கழுத்தில் இதழில் முத்தமிடுதல் தான் அவனுக்கு உயிர்ப்பே!!

அவன் இரண்டு மாதங்கள் அவளை தனியாக விட்டு தவிக்க விட்டான் என்றால்.. இவளோ அதே இரண்டு மாதங்கள் இவன் அருகிலேயே இருந்து தவிக்க தகிக்க வைத்திருந்தாள்.

“பழிக்கு பழி வாங்கறியாடி!” என்று ஒரு முறை கேட்டும் விட்டான். 

தோள்களை உலுக்கிக் கொண்டு சிரித்து நகர்ந்து விடுவாள். சில சமயம் அப்படி ‘சுழித்து செல்லும் உதடுகளை இழுத்து வைத்து கடித்தால் என்ன?’ என்று கைகளும் அவன் உதடுகளும் பரபரக்கும்!! ஆனால் மீண்டும் மலையேறி விடுவாளோ மாரியாத்தா என்று அமைதியாகிடுவான்.


இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது மலைவாழ் கிராமத்திற்கு அவள் சென்று, சனிக்கிழமை காலையில் செல்லலாம் என்று நினைத்திருந்த அவள் அசதியில் நன்றாக உறங்கி விட்டாள். ரிஷி வந்து காத்திருப்பதாக திவ்யா வந்து எழுப்பவும் தான் “இவ்வளவு நேரம் தூங்கிவிட்டோமே!” என்று அவசரமாக கீழே சென்றாள்.

அவனைப் பார்த்ததும் எங்கே கேரளாவுக்கு தான் அழைத்துச் செல்கிறான் என்று நினைத்து “இல்லை.. இன்னைக்கு நான் மீ டாடி பார்க்க வரல! கிராமத்துக்கு போறேன்! அங்கே போய் ரொம்ப நாளாச்சு” என்றாள். அவனும் “அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்! சீக்கிரம் ரெடியாகி வா போகலாம்” என்றான்.

‘என்ன வர வர நாம மனசுல நினைக்கிறத இவன் பேசுறான்? இதெல்லாம் சரி இல்லையே!’ என்று யோசித்தபடியே அவள் உடைமாற்றி வர, அவளை மேலும் கீழும் பார்த்தவன் இடவலமாக தலையாட்டி “புடவை மாத்திட்டு வா!” என்றதும் அவள் முறைக்க..

“போடி! ஒன்னும் உனக்கு திரும்பவும் தாலி கட்டிட மாட்டேன்” என்றதும் “ம்ம்ம்.. ஆசை தோச.. போய்யா அரை கிழவா!” என்றபடி இவளும் சென்றவள் அவன் சொன்னபடியே மாற்றி வந்தாள்.

அவர்கள் கிராமத்தை நோக்கி தான் வண்டி செல்வதை பார்த்து அவள் முகத்தில் ஒரு பிரகாசம்! 

அவர்கள் வசித்த வீட்டில் காயத்ரி இல்லை என்றாலும் செல்லி அவ்வப்போது வந்து சுத்தம் செய்து வைப்பார். ஆனால் அங்கே ஜீப் நிற்காமல் வேறு இடத்தின் முன் நிற்பதை பார்த்து அவள் கேள்வியயாய் அவனைப் பார்க்க “வாங்க மேடம்!” என்று அவன் அழைத்து சென்றான்.

அங்கே ஏற்கனவே ஐந்தாம் வகுப்பறை இருந்த பள்ளியை விஸ்தரித்து விரிவாக்கி இருக்க, பத்தாம் வகுப்புகள் வரை வகுப்பறைகளைக் கொண்ட பள்ளியாய் அழகாய் நிமிர்வாய் அவளை வரவேற்றது.

அவள் ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தோடு அவனைப் பார்த்து “இவ்வளோ ஷார் ப்ரீயட்டுல எப்படி?”

“எல்லாம் ரெடிமேட் சுவர் வச்சு கட்டினது! பட் ஸ்ட்ராங்கா தான் இருக்கும். இப்போதைக்கு என்னால இவ்வளவுதான் முடிந்தது. அதுவும் சின்ன சின்ன கிளாஸ் தான் கூடிய சீக்கிரம் ஒவ்வொன்னாய் பண்ணலாம்” என்று அவன் சிரிக்க இந்த நிமிடம் அத்தனை பிடித்தது அவனை!

அது மட்டுமல்லாமல் மேலே இருக்கும் கிராமத்தில் சின்ன சின்ன சோலார் லைட்டையும் அவர்களின் இயற்கை வாழ்விற்கு பாதிப்பு வராத வகையில் செய்து கொடுத்திருந்தான். அங்கிருக்கும் மூத்தாரிடம் பேசி பள்ளிக்கு பிள்ளைகளை இங்கே வரவழைத்திருந்தான். அவர்களைப் பார்த்ததும் இன்னும் சந்தோஷம் பொங்கியது அதிதிக்கு!

அத்தனை ஊவகையோடும் பொங்கும் சந்தோஷத்தோடும் அவனை பார்த்தவள், அந்த பிள்ளைகளை ஓடி சென்று இரு கைகளால் அணைத்து கட்டிக்கொண்டாள்.

அவள் எதிரில் நின்றவன் “சஸ்பென்ஸ்.. நாட் எட் ஓவர்! இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு” என்று கையை காட்ட.. அங்கே ஆட்டோமேட்டிக் வீல் சேரில் அமர்ந்து இந்திரன் வர அவர் பின்னே காயத்ரியும் வந்தார்.

“அப்பாவும் அம்மாவும் தான் இந்த ஸ்கூல்ல பார்த்துக்க போறாங்க..
நீயும் அப்பப்போ வந்து பாத்துக்கலாம்!” என்றவன் தன் அன்னை தந்தை வைத்தே பள்ளியை திறக்க வைத்தான்.

ஊர் பிரசிடெண்டும் தர்மனும் மற்றும் பெரிய ஆட்கள் எல்லாம் அவனை அவ்வளவு புகழ.. அதுவும் அதிதியின் ஆசையினால் தான் இவன் இப்படி செய்தான் என்று கூறி அதிதியையும் பாராட்டி தள்ளினார்கள்.

அப்போதுதான் அவர்களுக்கும் இவர்கள் குடும்பம் பற்றி சொல்லப்பட்டது. அதாவது ரிஷி இந்திரன் காயத்ரி மகன் என்றும், அதிதி அம்மாவின் ஆட்களின் ஜாதி வெறியினால் அவர்கள் குடும்பம் பலியிட.. தப்பித்து இந்த கிராமத்துக்கு வந்து மருமகளோடு அடைக்கலமாகிவிட்டார் காயத்ரி என்றும்.. காயத்ரியை காணாமல் இவ்வளவு நாட்கள் தேடி இப்போது தான் அதுவும் இந்த திருமணத்தின் மூலம் தான் தெரிந்து கொண்டனர் என்றும் கூறினர்.

கூடவே “இத்தனை வருடங்களாக என் அம்மாவுக்கும் மனைவிக்கும் பாதுகாப்பு அளித்த கிராமத்திற்கு அத்தனை நன்றி” என்று ரிஷி ஆத்மார்த்தமாக கூற.. இவர்களின் பாதி உண்மை பாதி உண்மையை மறைத்த கதையை கேட்டு அந்த கிராமமே நெகழ்ந்தது. இனி இவர்கள் எங்க பொறுப்பு என்று வேறு அதிகாரமாய் உரைத்தது!!

“இப்போதைக்கு மூணு டீச்சர்ஸ் தான் பெர்மனெட்டா அப்பாயிண்ட் பண்ணி இருக்கேன்! மத்தவங்க கொஞ்சம் டெம்ப்ரவரிதான்.. போகப் போக சரி பண்ணிக்கலாம்” என்றதும் காயத்ரிக்கு அந்த இடத்தை பார்த்ததும் அவ்வளவு மகிழ்ச்சி.

தான் இருபது வருடங்களாக பாடம் சொல்லிக் கொடுத்த பள்ளி அல்லவா இன்று விரிவடைந்து நிற்பதை கண்டு அத்தனை சந்தோஷம்! ரிஷியை ஆதூரமாக அணைத்துக் கொண்டார்.

அனைவரும் பேசிக் கொண்டிருக்கும்போது இவளை தனியாக அழைத்து வந்தான்.

“உடம்பை பார்த்துக்கோ! மதில் எறி குதிக்காத! நீ இங்க எப்போதும் வரும் ஜீப் டிரைவரை ஏற்பாடு பண்ணி இருக்கேன். இனி வெள்ளிக்கிழமை தோறும் உன்னை அவர் வந்து கூட்டிட்டு வருவார். அம்மா அப்பாவையும் பாத்துக்கோ.. வேற…” என்றதும் அவள் நெற்றி சுருங்கி அவனை கூர்ந்து பார்க்க..

“நான்.. நான்… திரும்பவும் அமெரிக்கா போறேன்!” என்றான்.

கண்களிலே அவளது அதிர்ச்சி அப்பாட்டமாக தெரிந்தது.

“நான் சில ஜெனிடிக் டிஸ்டார்ருக்கு மெடிசின் கண்டுபிடிக்கிற ஆராய்ச்சில இருக்கேன்! இடையில தான் அப்பா முடியாம போனதும் இந்தியா வந்து அவரை பார்த்து.. அப்புறம் அம்மாவ தேட ஆரம்பிச்சது! அட்லீஸ்ட் அவங்க நல்லா இருக்காங்கன்னு தெரிஞ்சாவது இவர் கொஞ்சம் மனசு சந்தோஷப்படுவாரேனு.. ஆனா அவர தனியா தவிக்க விட்டுட்டு இவங்க மட்டும் குடும்பமாக எப்படி வாழலாம் என்று நினைத்து.. எல்லாமே வேறு விதமாக முடிஞ்சிடுச்சு..” என்று கைகளையும் விரித்து விரக்தியை சிரித்தான்.

“நானும் கொஞ்சம் அவசரப்பட்டேன். அது பொதுவாவே இந்த ஆம்பளைங்களுக்கு வர குணம் போல.. அவங்க என்னதான் தப்பு செஞ்சாலும் அதை எல்லாம் மறந்துட்டு பொண்ணுங்கள மட்டும் குறை சொல்றது! ரியலி ஐ அம் சாரி அதி!” என்று மனதார மன்னிப்பு கேட்டான்.

“உன்ன கல்யாணம் பண்ணும் போது வேணா.. என் மனசுல உன் மீதான காதல் இல்லாம இருந்திருக்கலாம்! ஆனாலும்.. அப்பவே நீ உள்ள நுழைஞ்சுட்ட தானு நினைக்கிறேன்…” என்று நெஞ்சை சுட்டிக்காட்டி சிரித்தவன் கண்களில் அத்தனை காதல்!!

“இன்னைக்கு நைட் கோயம்புத்தூரில் இருந்து எனக்கு அமெரிக்காவுக்கு ப்ளைட்! அதுக்கு முன்ன உன்னை எப்படியாவது சமாளிச்சு உன்னையும் கூட கூட்டிட்டு போலாம்னு விசா பிராசஸ் டிக்கெட் எல்லாமே ரெடி பண்ணினேன்.. பட்..” என்று உதடு பிடிக்கியவன் அவளது கைகளில் ஒரு கவரை திணித்தான்.

“அதி.. நீ என்னை கட்டி அணைக்கவும் வேணாம்! முத்தம் கொடுக்கவும் வேணாம்! உன் விரல் மட்டும் கொடுடி.. கொஞ்ச நேரம் அதை ஹக் பண்ணிட்டு போயிடுறேன்” என்றவனின் குரல் கரகரக்க.. விக்கித்து நின்றவள் எதுவும் பேச முடியாத நிலையில் இருக்க..

அவனாகவே அவளது விரலை பிடித்து தன் உள்ளங்கைக்குள் புதைத்துக் கொண்டவன், அதை அப்படியே எடுத்து தன் நெஞ்சத்தின் மேல் வைத்து ஆழ்ந்த மூச்சு விட்டான். பின் மென்மையாக தன் இதழை பதித்து அதனோடு உறவாடினான் சில மணித்துளிகள்..

பின்பு “இங்கிருந்து போயிடு டி! நீ ஒரு நிமிஷம் நின்னாலும் என்னை என்னால் கண்ட்ரோல் பண்ணிக்க முடியாது!” என்று அவன் கண்களை மூடி கூற.. அவளோ அசையாமல் ஆணியடித்தாற் போல் நிற்க…

“ஏன்டி.. ஏன்‌டி என்னை மன்னிக்கல! பெண்கள்னாலே தாய்மை தானே! அந்த தாய்மைக்கு மன்னிக்கும் குணம் எங்களை விட அதிகம் தானே? பின்ன‌ ஏன்டி என்னை மன்னிக்கல!” என்று அவளது கண்களை பார்த்து கேட்டவன் மின்னல் வேகத்தில் தன் இடது கை அவளுடைய கூந்தலுக்குள் நுழைத்து அவளை முன்னோக்கி இழுத்தான், அவளுடைய மென்மைகள் அவன் நெஞ்சில் மோதி நசுங்க.. அவன் உதட்டைக் குவித்து அவள் இதழில் அழுத்தி ஆழ்ந்து முத்தமிட்டான்.

“…ப்ப்பா.. ” எதோ பிறவி பயனை அடைந்தது போல் ஓர் உணர்வு!!

அவளை விடுவித்தவன், பெருமூச்சு ஒன்றை விட்டு அவளது கன்னத்தை மெதுவாக வருடி, பின் தட்டிவிட்டு அன்னை தந்தையிடம் சொல்லிவிட்டு அங்கு நின்றிருந்த அவன் ஜீப்பில் ஏறி சென்று விட்டான்!


இதழ்… இறுதி அத்தியாயம்!!


அவளை நீங்கி செல்லும் அவனை தான் விழி விரித்து இமை சிமிட்டாமல் பார்த்து சிலையென நின்று இருந்தாள் அதிதி!!

“போயிட்டான்!! இம்முறையும் போயிட்டான்…!! ஆனால் சொல்லிவிட்டு போயிருக்கிறான்..” என்று விரக்தி சிரிப்பு அதிதியிடம்.

அவள் தலை அசைத்து கண் சிமிட்டி கண்ணீரை உள்ளெழுத்துக் கொண்டாள். அவள் கையில் இருந்த கவரைப் பார்த்தாள். பெருமூச்சு விட்டபடி அன்னை தந்தையை நோக்கி சென்றாள்.

மாமி வீட்டில் தான் அவனது ஜாகை அல்லவா.. அங்கிருந்து கிளம்பும்போதே அனைத்தையும் பேக் செய்து தான் வந்திருந்தான். ஒரு வேலை அதிதி மனம் மாறி இருந்தால்.. கண்டிப்பாக அவளையும் அழைத்துக் கொண்டுதான் சென்றிருப்பான்.

ஏனோ இம்முறை அவளை கட்டம் கட்டி தூக்க மனம் விரும்பவில்லை! அவள் தன்னோடு மனதார வர விரும்பினான். ஆனால்… அவளுக்கு பிடித்தமில்லை! அதனால் அவள் இஷ்டப்படி இருக்கட்டும் என்று விட்டு விட்டான். ஆனால் காதல் கொண்ட மனது அவளின் அருகாமையை வேண்டி நின்றது.

கோயம்புத்தூர் ஏர்போர்ட்…

பயணிகள் காத்திருப்பில் அமர்ந்திருந்த ரிஷியின் மனதில் ஏக ஏக்கங்கள்! அநேக எதிர்பார்ப்புகள்!!

“நீ ஆராய்ச்சியில் மட்டும் தான் ரிஷி டான்! மத்தபடி குடும்ப வாழ்க்கையில் உன் பொண்டாட்டி நினைக்கிறது போல நீ கோமாளி தான் போல…”

“பாரு எதையும் ஒழுங்கா ஹேண்டில் பண்ண தெரியல! அவளை ஒழுங்கா காதலிச்சு கல்யாணம் பண்ணி இருந்தா.. எந்த விஷயம் வந்து இருந்தா கூட உன் மீது உள்ள காதல் உன் தவறுகளை அவளை மன்னிக்க வைத்திருக்கும்! நீ கொடுத்த நம்பிக்கை அவளை உன் பால் இழுத்து இருக்கும்!! நீ வைத்த நேசம் அவளை உன்னுடனே பிணைத்து வைத்திருக்கும்!! நீ கொண்ட அன்பு மேஜிக்கை நிகழ்த்திருக்கும் அவளிடம்!! ஆனால்.. இப்போது… எதுவும் இல்லாமல்… பகடைக்காயாய்‌ அவளை பயன்படுத்தி உன் தந்தைக்காக எல்லாம் செய்து விட்டு, இப்பொழுது காதல் மலர்ந்து விட்டது ஓடிவா குடும்பம் நடத்தலாம் என்று கூறினால் வருவாளா??” என்று அவனது அறிவே அவனை வகையாக வைத்து செய்தது.

“அவளும் உணர்வும் ஆசையும் கொண்ட மனிதி அல்லவா??

அவளின் உணர்வுகளை கொன்று ஆசைகளை புதைத்து வெறும் ஜடமாய் விட்டுவிட்டு நீ பறந்தாய்…

இப்பொழுது அதையே காலம் உனக்கு திருப்பி செய்கிறது!!

அளவு கடந்த காதலை அவள் மீது வைத்துவிட்டு, இப்பொழுது நீயும் அதே உயிரற்ற ஜடமாய் தான் திரும்பப் பறக்க போகிறாய்…!”

என்று அறிவு அத்தனை அறிவுறுத்த மனது கடைசி நிமிடமாவது அவள் தன்னை பார்க்க வர மாட்டாளா என்று ஏங்கியது!

தன்னோடு அமெரிக்க வரமாட்டாள் என்பது அவனுக்கு திண்ணம்!

“அட்லீஸ்ட் ஏர்போர்ட்டுக்காவது வந்து ஒரு பை சொல்லி இருக்கலாமே டி.. சரியான கல்நெஞ்சகாரி டி நீ! இராட்ஷஸி!” என்று கண்கள் ஏர்போர்ட்டின் வாசலையே பார்த்திருந்தது! ஏக்கத்தோடு காத்திருந்தது.

ம்ஹூம்… அவள் வரவே இல்லை!
இனி அவள் வரப்போவதும் இல்லை!!

“உன் வாழ்க்கையை நீயே சதுராட்டம் ஆடி எடுத்துக் கொண்டாய். கூடவே அவள் வாழ்க்கையும் சேர்த்து..” என்று அறிவு மீண்டும் அவனுக்கு அறிவுறுத்த.. கண்கள் கலங்கிவிட அதனை ஒரு சிமிட்டலில் உள்ள இழுத்துக் கொண்டவன், வெளியே விறைப்பாய் இருந்தான். ஆனால் உள்ளுக்குள் அத்தனை நொறுங்கி இருந்தான்!!

விமானத்திற்கான கடைசி அறிவிப்பும் வந்துவிட.. மீண்டும் அவனது கண்கள் வாசலையே தான் அத்தனை ஏக்கத்தோடும்.. விழி நிறைய காதலோடும்.. மனது நிறைய நேசத்தோடும் பார்த்தது. ஆனால் அங்கே அவள் நேசத்திற்கு சொந்தக்காரி வரவே இல்லை..

மீண்டும் கண்கள் கலங்க நாசுக்காக அதை துடைத்துக் கொண்டு கடைசியாக உள்ளே நுழைந்தவன் பிளைட்டில் ஏறியும் அமர்ந்துவிட்டான். ஆனால் மனது இன்னும் நிலை கொள்ளாமல் தவித்தது. அவளது அருகாமையை கேட்டு ஊமையாய் அழுதது!

இவன் இந்தியாவுக்கு வந்து கிட்டத்தட்ட 2 1/2 மாதங்களுக்கு மேல் சென்று விட.. இன்னும் அவளின் கோபம் குறையவில்லை! இவன் மீதான காதலும் பிறக்கவில்லை! பின் எப்படி இன்னும் இங்கே இருக்க…?

அவளுக்கு என்ன பிடித்ததா என்று தெரியவில்லை. ஆனால் அவளுக்கு மிகப் பிடித்தது எது என்று தெரிந்தால் தான் அவன் இதுவரை கையில் இருந்த பணத்தை எல்லாம் போட்டு ஏற்கனவே காயத்ரி வேலை செய்த ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளியை விரிவுபடுத்தி இருந்தான். பணம் ஒரு பெரிசு இல்லை அவனுக்கு!!

ஆனால் அருகே இருந்து அவளை பார்க்கவும் அவனால் முடியாதே! ஏற்றுக்கொண்ட வேலை அப்படி!! “அவளும் தன் மீது இரக்கம் காட்டாமல் விட்டுவிட்டாளே ராட்சசி!! சரியான ராட்சசி நீ டி! போ டி இனி நான் வரவே மாட்டேன்” என்று வீம்போடு நினைத்துக் கொண்டு சீட்டில் தலை சாய்ந்தான்.

‘என்னுள்..
ஏன் வந்தாய்? 
எதற்கு வந்தாய்? 
எப்படி வந்தாய்?
என்றெல்லாம் எனக்கு தெரியாது!
ஆனால் இன்று நீ என்னுள் நீக்கமற நிறைந்து விட்டாய்!
அது மட்டும் எனக்கு புரிந்து விட்டது!’
என்று எண்ணியவனின் இடது விழியோரம் ஒரு நீர் துளி!

“நிஜமாவே ரொம்ப பீல் பண்றீங்க போலேயே..” என்ற வார்த்தையில் அவன் திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க அங்கே அளவோடு அழகாய் சிரித்தபடி அதிதி!!

உண்மையான அன்பு கொண்ட கண்ணீருக்கு வலிமை அதிகம்!!

ஆம்!! உறவு நட்பு எதிலும் நாம் உண்மையான அன்பைக் கொண்டு இருந்தால்.. அந்த அன்பு எதையும் நிகழ்த்திக் காட்டும்! மேஜிக் செய்யும்!

அவனின் ஆனந்ததை.. அவனால் அளவிட்டு கூற முடியாது!

அதி.. அதி… என்று உள்ளம் துள்ளாட்டம் போட… அவளை தோளோடு அணைத்துக் கொண்டான்.

“டோன்ட் டச் மீ! இன்னும் உங்கள் மீது உள்ள கோபம் குறைல.. ஆனாலும் ஏதோ மேஜிக் செஞ்சிட்ட மேன் நீ இங்கே இருந்து!” என்று இதயத்தை தொட்டு காட்டியவள் “அதனால தான் கூட வரேன்!” என்றாள் மிடுக்கோடு..

“நீ என்ன வேணாலும் பண்ணு ஆனால் என்னோடு இருந்தே பண்ணு! என்னோடு நின்று கொல்லடி!” என்று தன்னையே அவளுக்கு ஒப்புக் கொடுத்தவன் அவள் கையோடு கையை கோர்த்து அழுத்தமாக பற்றி கொண்டான்.

அத்தனை மகிழ்ச்சி புன்னகை அவனிடத்தில்!

“ஏற்கனவே கொஞ்சம் இவன் அதீத வசீகரம் தான்.. இப்போ இன்னும் கவர்ச்சியாய் வசீகரமாய் தெரிகிறானே!” என்று மனதில் நினைத்துக் கொண்டாள் அதிதி.

‘அவள் வந்து விட்டாள்! என்னோடு வந்து விட்டாள்!’ என்ற சந்தோஷத்தில் ஆர்ப்பரித்த மனது இருவர் உள்ளங்கை இணைவில் இருந்த ஒன்றை கவனிக்க மறக்க… இன்னும் அழுத்தமாக அவள் கையை நெருங்கி நெருக்கிக் கொண்டவன் அப்பொழுது ஏதோ உணர..

சற்றென்று இருவர் கைகளையும் பிரிக்க பார்க்க… அவளோ வம்படியாய் இறுக்கிக் கொள்ள.. “ஹேய்.. அதி.. ப்ளீஸ் டி!” என்றவன் குரலில் அத்தனை நடுக்கம்! சிறு கலக்கம்!!

பின் மலர்ந்த சிரிப்போடு அவள் கைகளை விரிக்க.. அங்கே குட்டியாய் இரண்டு பிங்க் நிற கோடுகளை தாங்கி நின்றது பிரக்னன்சி கார்டு..

“வாட்????” என்று அதிர்ந்து எழுந்து விட்டான் ரிஷி!

அவன் அதிர்ந்த கத்தலில் ஃப்ளைட்டில் இருக்கும் அனைவரும் அவனைத் திரும்பிப் பார்க்க.. அதை எல்லாம் அவன் கவனித்தால் அல்லவா???

“என்னோடு நின்னு கொல்லடினு ஒரு பேச்சுக்கு தான் டி சொன்னேன்! அதுக்காக ஒரு மனுசன இப்படியா டி கொல்லுவ?” என்று வார்த்தைகள் பிண்ண அவளைப் பிடித்து உலுக்கினான். அவளோ சந்தோஷ சிரிப்பில் அவனை பார்த்து கண்ணடித்தாள்.

“சத்தியமா சொல்றேன் நீ எல்லாம் ஒரு யூனீக் பீஸ் டி! இப்படியாடி அதிர்ச்சி வைத்தியம் பண்ணுவ! ஓ மை காட்! ஓ மை காட்! அதி…” என்று அத்தனை ஆதங்கமாய் அவன் பேச..

அவளோ அவனது ஆனந்தம் அதிர்ச்சி ஆற்றாமை கோபம் கெஞ்சல் கொஞ்சல் என்று அனைத்து பாவனைகளையும் ரசித்துப்படியே அமர்ந்திருந்தாள்.

இவனின் அத்தனை பேச்சுக்கும் ஃப்ளைடில் இருக்கும் அனைவரும் இவனையே தான் பார்த்திருக்க.. மெல்ல ஏர்ஹோஸ்டரஸ் வந்து “ப்ளீஸ் சார்! காம் யுவர் செஃல்ப்! எல்லாருக்கும் டிஸ்டர்ப் ஆகும்” என்று தேன் ஒழுக கூற…

“சாரி.. சாரி.. கைய்ஸ்!” என்று அனைவரையும் பார்த்து கூறியவன் இரு கைகளை வைத்துக்கொண்டு அன்னார்ந்து பார்த்து நன்றாக மூச்சை இழுத்து பின் வெளியே விட்டான். இரண்டு மூன்று முறை அப்படி செய்ததும் தான் அவனது அந்த படப்படப்பு சற்று அடங்கியது.

பின்பு “நான் அப்பா! நான் அப்பாவாம்! இந்த பொடுசு அம்மாவாம்!” என்று ஒரு குறுஞ்சிரிப்பு இதழ்க்கடியில் வந்து நெளிய.. அது இப்பொழுது விரிந்து அழகாய் அவன் முகத்திற்கு வசீகரமாய் கவர்ச்சியாய் தெரிய…

“சாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்.. வீ ஆர் பிரகனண்ட்! அந்த சந்தோஷம்தான் கொஞ்சம் எக்ஸைட் ஆயிட்டேன்” என்றான் மகிழ்ச்சியோடு!

அதைக் கேட்டு ப்ளைட்டிலில் இருந்த அனைவரும் கைத்தட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்க.. அருகில் இருந்த ஏர்ஹோஸ்ட்ரஸூம் கூட வாழ்த்தினாள்.

“திரும்பவும் உங்க எல்லார்கிட்டயும் ஒரு எக்ஸ்கியூஸ்..!” என்றவன் மனைவி புறம் கைநீட்ட, இப்பொழுது சிரிப்போடு அவன் கரத்தில் தன் கரத்தை அவள் வைக்க…

அவளை எழுப்பியவன் அவள் கன்னங்களை இரு கைகளால் தாங்கி, அழுத்தமாய் ஆழமாய் தன் இதழ்களை அவள் இதழ்களில் உறவாட விட்டான்..

இந்த உறவு…. ஆண்டாண்டாய்… 

அன்போடும் வம்போடும்..
நேசத்தோடும் சண்டையோடும்..
பாசத்தோடும் சச்சரவோடும் …
நிலைத்து நிற்க..

வாழ்த்தி விடைபெறுவோம் நாம்!!


சுபம்!!










Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *