இதழோடு உறவாட வா….

This entry is part 19 of 21 in the series இதழோடு உறவாட வா

இதழோடு உறவாட வா

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழோடு உறவாட வா….

இதழ்…. 24!!



தன்னவளை கைகளை அள்ளிக்கொண்டு உள்ளிருந்த படுக்கையில் படுக்க வைத்தான் ரிஷி. 

“அதி.. அதிமா.. என்ன டா ஆச்சு உனக்கு? கண்ண திறந்து பாரு டா!” என்று கன்னத்தில் மென்மையாக தட்டி எழுப்ப அதிதியோ விழிக்கவே இல்லை. இன்னும் பயம் பீடித்துக் கொண்டது காயத்ரியை!!

‘இவ்வளவு தியாகமும் செய்தது இவள் ஒருத்திக்காக தானே? மயங்கி சரிந்தவளுக்கு ஒன்று என்றால் என்னால் தாங்க முடியுமா? அய்யோ அதி மா! எழுந்திரிடா!!’ என்று அரற்றி கொண்டிருந்தவரின் அத்தனை கோபமும் ரிஷி மேல் தான் திரும்பியது!

‘இவனால் தான்.. இவனால் மட்டும் தான் இவளுக்கு இப்படி! இவனை யார் இப்பொழுது பழையதை நோண்டிக்கொண்டு இங்கே வர சொன்னது? பழையது தான்! முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டுமே!’ என்று அவருக்கு அத்தனை கோபம்!!

அதிதியின் அருகே அமைதியாக அமர்ந்திருந்தவன், அவளின் நலிந்த தோற்றத்தைக் கண்டு வருத்தத்தோடு பார்த்திருந்தவனை பார்த்த காயத்ரி “உங்க அப்பா விஷயம் முடிந்தது.. முடிந்தது.. முடிந்தது தான்! அதனை திரும்ப ஓட்ட வைக்க பார்க்காதீங்க! என் மகளோட உங்களுக்கு வாழ பிரியம் இருந்தால்.. வாழுங்க! இல்லையா இந்த கல்யாணமே நடக்கலன்னு சொல்லிட்டு என் பொண்ணுக்கு நான் வேற வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடியும்!” என்றார் தன்னை போல தன் மகளும் தனித்திருக்கக் கூடாது என்று!!

“ஓஹ்..!! அப்போ இந்த காதல் கல்யாணம் எல்லாம் சும்மாவா? நீங்க என்னை கேட்டது தான்! அப்போ உங்களுக்கு சும்மா தான் போல.. இல்லையா? சரி.. ஓகே! அப்போ நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணாமல் இருந்திங்க!” என்று எழுந்து அவரை கூர் பார்வையால் துளைத்து அவன் கேட்க.. அவனின் பார்வை வீச்சை தாங்க முடியாத காயத்ரி வேறுபக்கம் முகத்தை திருப்பிக் கொண்டார்.

“எனக்கு அதிதி போதும்! வேற யாரும் வேண்டாம்!” என்றார்.

“அவ்வளவு சுயநலக்காரியா நீங்க?”
என்று அவனின் கேள்விக்கு அவரோ விரத்தியான சிரிப்பே பதிலாக கிடைத்தது.

“இப்போதைக்கு நீங்க வேற பேச்சு பேச வேண்டாம்! அதிதி விழிக்கட்டும்!” என்றதும் 

“இல்லை.. அதிதி விழிக்கும் முன்னே இதற்கு நீங்க தீர்வு சொல்லி ஆக வேண்டும்! உங்களால எங்க அப்பா எப்படி இருக்காரு தெரியுமா?” என்றதும் அவனின் அப்பா அப்பா என்ற வார்த்தை அவருக்கு சுள்ளு என்று ஏதோ குத்தியது.

“சும்மா அப்பா.. அப்பா.. என்குறீங்க அப்போ ஏற்கனவே ஒரு குடும்பத்தை வைச்சிகிட்டு தான் அந்த ஆள் என்னிடம் பழகி இருக்காரா? அப்படிப்பட்டவரை நான் எதுக்கு ஏத்துக்கணும்? அவரை விட்டு நான் பிரிந்து 23 வருடம் தான் இருக்கும். ஆனால் உங்களின் வயது அவரின் துரோகத்தை எனக்கு சொல்கிறது அல்லவா? அப்படிப்பட்ட துரோகிக்காக என் மகளை நான் விட்டுக் கொடுக்கப் போவதில்லை!” என்று கோபத்தோடு மூச்சு வாங்க வாங்க பேசியவரின் முன்னே கைகட்டி வந்து நின்றவன்…

“அதிதி உங்களை மீ-னு கூப்பிடுறதுனால நீங்க அவளுக்கு அம்மாவா? இல்லை தானே! அது போல தான் எனக்கு அவரும்” என்றவனை புரியாமல் பார்த்தவரிடம், “உறவுமுறையில் அவர் எனக்கு சித்தப்பா..! என் அப்பாவின் தம்பி!” என்றான்.

அவருக்குத்தான் இந்திரனின் குடும்பத்தை மொத்தமாக தெரியும் அல்லவா? 

“யோகேந்திரன்.. அவங்க.. பையனா?” என்று தட்டு தடுமாறு கேட்டார்.

பத்தில் ஒரு வாய்ப்பாக வேறொரு திருமணம் செய்து கொண்டிருப்பார் என்று நினைத்த காயத்ரி எண்ணத்தில் மண் விழுந்தது!
அது மட்டுமல்ல இவன் அவரின் பையன் என்றால் என்னை காதலிக்கும் முன்னை அவருக்கு வேறு ஒரு குடும்பம் இருந்திருக்க வேண்டும் என்று கூறி அவரை விலக்கி வைக்கலாம் என்று நினைத்தார். நூற்றில் ஒரு வாய்ப்பாக அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று நினைத்தார். இப்பொழுது எல்லாம் மாயமாகி விட்டதே என்று விக்கித்து நின்றார்.

“இத்தனை வருடங்களாக ஒருவர் நான் வேறு கல்யாணம் செய்து கொண்டேன் என்று கூறியும் தனித்து இருந்திருக்கிறார் என்றால்.. இது என்ன மாதிரியான காதல்? என்ன மாதிரியான நேசம்?” என்று புரியாமல் நிலைகுத்தி நின்ற விழியில் இருந்து ந்ர் திவலைகள் வழிய ரிஷியை பார்த்தார்.

ரிஷியின் கண்களில் அவ்வளவு கண்டனம்! அது எப்படி என் அப்பாவை நீங்கள் விட்டுவிட்டு வரலாம்? அவரிடம் பொய் கூறலாம்? என்று! அத்தனை கண்டிப்போடும் நின்றிருந்தான்.

மெல்ல கண்களைத் துடைத்துக் கொண்டவர் “இது முடிஞ்சு போன விஷயம் தம்பி! இனிமேல் இதை பேச வேண்டாமே! என் பெண்ணுக்கு அம்மா அப்ப் இல்லை என்று அவள் ஏங்கக் கூடாதுன்னு தான் நான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன். ஆனால் இன்னைக்கு நீங்க அவ முன்னாடியே நா அவளுக்கு அம்மா இல்லை என்று சொல்லி அவ மனசு உடைச்சிட்டீங்க! யாருக்குமே தான் ஒரு அனாதை என்றால் தாங்க முடியாது தெரியுமா? அதுவும் என் பெண்ணுக்கு இவ்வளவு நாளா தெரியாமல் நான் மறைத்து வைத்திருந்ததை ஒரு நொடியில் போட்டு உடைச்சிட்டீங்களே?” என்று மகளின் நிலை நினைத்து அவருக்கு அத்தனை ஆற்றாமையாக இருக்க ரிஷியை பிடித்து அத்தனை கேள்வி கேட்டார்.

“இத்தனை வருடமாக வளர்த்த உங்கள் பெண் உங்களுக்கு முக்கியம் என்றால்.. இத்தனை வருடஙகளாக என்னை வளர்த்த என் அப்பா எனக்கு முக்கியம் இல்லையா? வெளிநாட்டில் ஒரு கலவரத்தில் பஸ்ஸில் தீப்பிடித்த போது என்னை ஜன்னல் வழியே தூக்கி எறிந்து காப்பாற்றி விட்டு அந்த பஸ்ஸின் தீ ஜூவாலைக்கு என் பெற்றோர் மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 20 பேர் பலியானார்கள். அதற்குப் பின் அங்குள்ள அரசாங்கம் விசாரித்து என்னை என் சித்தப்பா கையில் கொடுத்தது” கண்களில் அவன் பெற்றோரை நினைத்து கண்ணீர்!

“என் சித்தப்பாவும் முதலில் என்னை அந்த விபத்தில் தாக்கத்திலிருந்து வெளியேற்றிக் கொண்டு வருவதற்கு எவ்வளவு பாடுபட்டார் தெரியுமா? அம்மா அம்மா என்று இரவு தூக்கத்தில் நான் அரற்றியபோது.. அப்பா அப்பான்னு நான் ஏங்கிய போது என் அருகிலே இருந்து கவலை துடைத்தவர், கூடிய சீக்கிரம் உனக்கு ஒரு அம்மாவை கூட்டி வருகிறேனு சொல்லுவார்! உங்களை நினைத்து என்னிடம் கதை கதையாக பேசியிருக்கிறார் ஆனால் ஒரு கட்டத்தில்… கட்டத்தில்… நமக்கு இந்த ஊரே வேணாம் உனக்கு அம்மா இல்லை! அப்பா மட்டும்தான் இனி! உனக்கு அம்மா அப்பா எல்லாம் நான் மட்டும் தான்” என்று என்னை அழைத்துக் கொண்டு டெல்லிக்கு சென்று விட்டார். 


“நானும் என் அப்பாவின் முகத்தை பார்த்து அவர் காட்டும் அன்பில் அக்கரையில் பாதுகாப்பில் என் பெற்றோரை கூட மறந்து படிப்பு வேலைனு இருந்துட்டேன். ஆனா.. ஆனா.. அது எத்தனை தவறுனு இப்பொ புரியுது! என் அப்பா என்னை கவனித்தது போல நான் அவரை கவனித்திருக்க வேண்டும்! அவரின் மன ஏக்கங்களை தெரிந்திருக்க வேண்டும்!” என்று கண்களை மூடி தன் அழுகையை கட்டுப்படுத்தி நின்றவனிடம் பாய்ந்து சென்ற காயத்ரி…

“இந்திருக்கு என்ன ஆச்சு ரிஷி? அவர் நல்லாத்தானே இருக்கிறார்?” என்று அத்தனை பதைப்பதைபோடு கேட்டார் அந்த பேரிளம் பெண்!

என்னதான் மனதை மறைத்து “எங்கள் வீட்டில் காதலுக்கு சம்மதம் கொடுக்கல.. அவங்களை எதிர்த்து என்னால் எதுவும் செய்ய முடியாது! இனி என்னை பார்க்க வராதீங்க! எனக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது” என்று கூறி விலகி சென்றாலும்.. அவரைத் தவிர வேறு ஒருவரை மனதால் கூட நினைக்காமல் இத்தனை வருடங்களாக மனதுக்குள்ளையே வைத்து பூஜித்தவர் அல்லவா? மகளோடு இங்கே தனியாக இருந்தாலும் மனதால் அவரோடு இருந்தவர் அல்லவா? அந்த ஆழ்மன காதலும் அழியா நேசமும் அவரை உந்தி தள்ளியது இந்திரன் பக்கம்.

“மன அழுத்தம் ஜாஸ்தியாகி அவருக்கு ஸ்ட்ரோக்! என்னதான் நானும் விஞ்ஞானியாக இருந்தாலும் ஓரளவுக்கு மேல் அவரை குணப்படுத்த முடியவில்லை! இடது பக்கம் கையும் காலும் இப்பொழுது அவருக்கு வேலை செய்யவில்லை” என்றான் அழுத்தமாக கண்களை மூடிக்கொண்டு..

“என்னது ஸ்ட்ரோக்கா?” என்று அதிர்ந்து வாயில் கை வைத்து விட்டார் காயத்ரி.

“ம்ம்ம்…!” என்றவன் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு போட்டோவை எடுத்து அவரிடம் காட்டினான். அது காயத்ரியும் இந்திரனும் அவர்கள் காதலிக்கும் காலத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் அது!!

“இந்த போட்டோ மாதிரி கிட்டத்தட்ட நிறைய போட்டோ எங்க அப்பா பிரிண்ட் போட்டு வச்சிருந்தாரு! அவரோட பர்ஸில்.. அவருடைய டைரில.. அவரோட சோல்டர் பேக்ல.. அவரோட நீக்கமற நிழல் போல தான் நீங்களும்! அவர் கூட ஒர்க் பண்ணுன எல்லோருக்கும் அவர் பர்ஸ்ல இருக்கிற உங்க ஃபோட்டோ பார்த்து நீங்க தான் அவர் மனைவின்னு தெரியும்… என்கிட்டயும் இதுதான் உன் அம்மானு தான் முன்னாடியே அறிமுகப்படுத்தி இருந்தார்” என்றான். அப்பாவை பற்றி பேசும்போது அவன் முகத்தில் அத்தனை ஒரு மென்மை!

“என்ன??? இவனிடம் என்னை அம்மா என்று சொல்லி வளர்த்தாரா?” என்று அத்தனை ஆச்சரியம் காயத்ரிக்கு!

“ஆனா.. அவ்வளவு காதல் வைத்திருவங்களால எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்க முடிஞ்சதுனு கோபத்தோடையும் வெறுப்போடையும் தான் உங்களை இங்கே பார்க்க வந்தேன்! நீங்க இங்க இருக்கிறது எங்க அப்பாவுக்கு தெரியாது. நான் உங்களை வந்து இப்படி பார்த்து பேசினேன் தெரிஞ்சாலே ரொம்ப வருத்தப்படுவார். உங்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யக்கூடாது என்று நினைச்சார்!”

“ஆனா என்னால அப்படி இருக்க முடியல! அவ்வளவு காதலா இருந்துட்டு அந்த காதல்ல ஒரு சொட்டு அளவு கூட உங்க மனசில் இருக்காதா? அதை எப்படி மறந்து இன்னொருவரோட குடும்பம் குழந்தைனு இருக்க முடிஞ்சது? அப்போ உங்களால் காதலிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவருக்கு அந்த வலி ரணங்கள் எப்படி இருக்கும்னு உங்களால நினைக்க முடியலை இல்லையா? இதையெல்லாம் உங்களுக்கு திருப்பி கொடுக்கணும்னு நினைச்சேன்! அதிதியை காதலிச்சு நீங்க விட்டுட்டு போன மாதிரி விட்டுட்டு ஒரேடியா அமெரிக்கா போய்டம்னு ப்ளான் பண்ணி தான் வந்தேன்..” என்றதும் அவர் திடுக்கிட்டு அவனைப் பார்க்க…

“அப்படித்தான் முதலில் நினைச்சேன்! ஆனால் அதிலுமே நிறைய சிக்கல்… உங்கள அம்மாவாக நினைச்சு வளர்ந்திட்டு அவளிடம் எப்படி நான் நெருங்க முடியும்? அவளை பார்க்கும் போதெல்லாம் கோபமும் கடுப்பும் ஆகத்தான் பேசி திட்டுவேன்! உங்களிடம் காட்ட முடியாத அந்த கோபத்தை.. பழி வாங்க முடியாத ரணத்தை எல்லாம் அவளை பேசி பேசி குறைக்க பார்த்தேன்!” என்றதும் அவனை முறைத்தார் காயத்ரி!

“அதன் பிறகு தான் தெரிந்தது நீங்கள் அவளுக்கு அத்தை என்று!! முதலில் அவள் உங்க சாயலில் இருப்பதில் அம்மா போல என்று கொஞ்சம் குழம்பி தான் இருந்தேன். ஆனா.. அத்தையின் சாயலிலும் மருமக இருக்கலாம்னு உங்க அண்ணன் மகள் நிரூபித்து விட்டாள்!” என்று ரிஷி கூறியதும் முகம் முழுவதும் பெருமை பொங்க தன் பெறாத மகளை பார்த்தார் காயத்ரி.

“நடந்ததை எல்லாம் விடு.. ஆனா.. இப்ப வந்து இப்படி பண்ணிட்டு இருக்கிறது கொஞ்சம் கூட சரியில்ல! எங்க ரெண்டு பேரோட வாழ்க்கை எப்பவோ திசை மாறி திசை மாறி எங்கெங்க வழியில் நாங்க முக்கால்வாசி தூரம் கடந்து வந்துட்டோம்! இனி அதில் பின்னால் பயணிக்க எதுவுமே கிடையாது!” 


“அதனால் இப்படி போட்டு நீங்களும் குழம்பி எங்களையும் குழப்பாதிங்க! அதுக்கு பதில் அதிதியை கூட நல்ல வாழ்க்கை வாழ பாருங்க… நீங்க இல்லாத பத்து நாட்கள் அவளால் அவளாகவே இருக்க முடியவில்லை. எனக்காவது இந்திரனை விட்டுட்டு வாழ்க்கையில் பிடிப்பு என்று அதிதி இருந்தா.. ஆனால் அவளுக்கு..?” என்று சொல்லி நிறுத்தி “என் பேச்சைக் கேளு ரிஷி!” என்றார் இப்பொழுது உரிமையோடு..


“நானே உங்க பேச்சைக் கேட்கணும்னா… நீங்க என் பேச்சை கேட்கணும்!” என்று அவனும் விரைத்துக் கொண்டு நின்றவன்,
“எனக்கு எங்க அப்பா தொலைச்ச அந்த வாழ்க்கை கொஞ்சமாவது திருப்பி கொடுக்கணும்னு நினைக்கிறேன்” என்றதும் அவர் திடுக்கிட்டு நெஞ்சில் கை வைத்து “இது சரிவராது ரிஷி!* என்றார் கண்டனத்தோடு.

“ஏன்? ஏன் சரி வராது?” என்று இவனும் விடாப்படியாக கேட்க…

“புரிஞ்சுக்கோ ரிஷி! ஊர் உலகத்தை பொறுத்தவரை நான் ஏன் என்னை பொறுத்த மட்டும் நான் அதிதியின் அம்மா! எனக்கு அவள் மகள்! உனக்கு அவர் சித்தப்பா ஆகினும் அப்பா முறை தானே.. பின் எப்படி அவரோடு என்னை நீ இணைக்க முடியும்? கொஞ்சமாவது புரிந்து பேசு!” என்று அவர் தவிப்போடு ‘நான் சொல்வதைக் கேளேன்!’ என்று கண்களில் கெஞ்சியவாறே அவனிடம் பேச.. அவனோ அதை புறந்தள்ளியவன்…

“அப்படி எல்லாம் விட முடியாது! எனக்கு எங்க அப்பாவோட கடைசி காலத்துலயாவது அவர் நேசித்த அந்த காதல் அவருடைய இருக்கணும்னு ஆசைப்படுறேன்” என்றான் விடா கொண்டனாக!!

“ஐயோ.. ரிஷி..!” என்று அவர் மீண்டும் கெஞ்ச…

“அப்போ 23 வருஷமா உங்களை மட்டுமே நினைச்சுட்டு இருந்த அவருக்கு நீங்கள் எதுவும் செய்ய மாட்டீங்க அப்படித்தானே? உங்களுக்கு உங்கள் அண்ணன் மகள்.. உங்க ரத்தம்.. அவள் மட்டும் தான் முக்கியம்! இந்திரன் என்பவர் யாரோ தானே? அவருக்கு என்ன நடந்தால் என்ன? எப்படி செத்தால் என்ன? அப்படித்தானே!” என்று சற்று காரசாரத்தோடு வினவ அதில் துடி துடித்துப் போனார் காயத்ரி..

“அவர் குடும்பம் பிள்ளைகளோடு நன்றாக வாழனும் தானே அவரை விட்டு நான் தனியே வந்ததே! நீ இப்படி பேசுவது கொஞ்சம் கூட சரியில்ல ரிஷி.. என்னுடைய இத்தனை வருட வேண்டுதல்கள் என் அதிதிக்காகவும்‌. என் இந்திரனுக்காகவும் தான்! என்றார் என்றால் கலங்கிய குரலில்!!



“அப்போ அந்த காதலுக்கு கொஞ்சமாவது நியாயம் செய்யுங்க? ஒதுங்கி நின்னு நீங்க காட்டிய அன்பால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை! நீங்களும் நலமாக இல்லை.. அவரும் நலமாக இருக்கவில்லை. இவங்க ரெண்டு பேரும் நலமும் உங்க கையில தான் நீ போய் இருக்கு!” அவரின் குற்ற உணர்ச்சியை தூண்டி.. உணர்வு குவியலாய் நிற்கும் அவரிடம் தன் காரியத்தை சாதிக்க நினைத்தான்.

“சரி.. இவ்வளவு பேசுறிங்க அவரிடம் உங்கள் பக்கம் நியாயத்தை அப்பவே சொல்லியிருந்தால்.. இந்நேரம் நாமெல்லாம் ஒரு குடும்பமாக இருந்திருக்கலாம்… அல்லவா?”

“எனக்கு கிடைக்காத அம்மா பாசம் உங்களிடம் இருந்தும்.. அதிதிக்கு கிடைக்காத தந்தை பாசம் என் அப்பாவிடம் இருந்து அதிதிக்கும் கிடைத்து இருந்திருக்கும்” என்றான்.
சற்று முரண்பட்ட கருத்துதான்!

“எதே?” என்று அதிர்ச்சியில் ஒலித்த சத்தத்தை கேட்டு அவர்கள் திரும்பி பார்க்க.. அங்கு அதிதி இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு கலவரமாக அமர்ந்திருந்தாள்.

‘அப்படி ஒன்று நடந்திருந்தால்… இவன் அவளுக்கு அண்ணன் முறையில் அல்லவா இருந்திருப்பான்?? அதை நினைக்கவே அவளுக்கு குமட்டிக் கொண்டு வர.. அதை முகத்தில் அப்பட்டமாக காட்ட மனைவியின் மனதை அறியாதவனா ரிஷி? அவன் முகத்தில் ஒரு கேலி புன்னகை தவழ்ந்து ஓடியது!

“அப்படி மட்டும் நடந்திருந்தால்.. இந்த பொடுசு கல்யாணம் பண்ணிக்கணும் எனக்கு அவசியமே இருந்திருக்காது! வேற நல்ல பொண்ணா பாத்து நானும் கல்யாணம் பண்ணி இருப்பேன்” என்று அவளையும் சேர்த்து அவன் வார…

“யாரு? யாரு பொடுசு? போய்யா பெருசு!” என்று பேசிக் கொண்டே வந்த அதிதியில் பழைய அதிதியை கண்டவன் கண்கள் மின்னியது.

“உண்மைதானே.. நான் மேல்மாடி என்றால் நீ ஃப்ளோர் அதுவும் கிரவுண்ட் ப்ளோர்ல நிக்கிற! உயரமே பத்தல..” என்று அவன் அவள் முன்னே நின்று தங்கள் உயரத்தை சுட்டிக் காட்ட..

இலளோ பெருமூச்சு விட்டபடி “இந்த ஹைட் எல்லாம் அப்போ உங்களுக்கு தெரியலையா? எனக்கு ஹைட் பத்தலைனு உங்க ஹைட்டுக்கு தூக்கி முத்தம் கொடுக்கும் போதும் இல்லை லவ் மேக்கிங் பண்ணும் போது இதெல்லாம் பிரச்சனையா உங்களுக்கு தெரியல என்ன?” என்று தன் உயரத்தை குறைத்து சொல்லிவிட்டானே என்று கோபத்தில் அவள் கொஞ்சம் இஸ்கு இஸ்காகவே கேட்க…

காயத்ரி, ரிஷி அவளிடம் பேச ஆரம்பித்ததுமே மெல்ல அந்த அறையில் இருந்து வெளியே வந்துவிட்டார். முட்டி மோதி ரெண்டும் வரட்டும் என்று!!

கண்டிப்பாக ரிஷி அதிதியை விட மாட்டான் என்ற ஒரு நம்பிக்கை இப்போது அவருக்கு. ஆனால் இந்திரனை தன்னால் எப்பொழுதும் இந்த வயதில் ஏற்க முடியுமா என்று ஏக கேள்விகள்! அனேக குழப்பங்கள் அவரது மனதில்!!

“அத தாண்டி சொல்றேன் என் பொடுசு!” என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன் “இப்படி இதழோடு இதழ் சேர்க்கும் போது நம்ம ஹைட்டுக்கு கொஞ்சமாவது இருந்தால் தானே.. அவள் கன்னத்தை ஆசையாக பற்றி இப்படி சாய்த்து லிப் டு லிப் கொடுக்க முடியும்” என்றவன் அதை அப்படியே செயல்படுத்தி இருக்க.. இப்பொழுது இருவரின் இதழ்களுக்கிடையே காற்று மட்டும் நுழையவே அனுமதி!!

“பாவி என்னலாம் சொல்கிறான்? அந்த ஐந்து நாட்களாக.. இப்படி பொடுசா இருக்கிற உன்னை இடுப்பில் சுமந்து கொண்டு காதல் செய்வதும் சுகமாகத்தான் இருக்கிறத டி அதி’ என்று மோக கிறுக்கில் என்னை முழுங்கியவனா இவன்?” என்று அவனை கண்களால் எறித்தவள் அடுத்த நிமிடம் அவன் கன்னத்தை அழுத்தமாக பற்றி இதழ்களை கடித்து வைத்தாள அதி.. அதி வன்மைமாக..!
துளி காதலாக..!

சத்தியமாக இப்படி ஒரு வேகத்தை செயலை அதிதியிடம் ரிஷி எதிர்பார்க்கவே இல்லை. அதிர்ந்து விழித்தவன், அவளது கைகளின் இறுக்கத்தை தளர்த்தி தன் தாடையிலிருந்து பிரிக்க..

அவளது கை இறுக பிடியிலிருந்து விலக்கிக் கொண்டதை அறியாமல்.. அவளின் அதிரடியால் பின்னால் சாய்ந்து கீழே உருண்டு விழுந்ததையும் உணர்வுக்கு புரியாமல்…
ஒரு மோன நிலையிலேயே அவளது செயல்களை கிறக்கத்தோடு பார்த்திருந்தான்!

இந்த வேகமே ஏக்கத்தின் வெளிப்பாடு தானே!
அவளின் ஏக்கம் அவனை பாதிப்பதாய்!
ஏனென்றால்.. அவள் அளவு அவனும் ஏங்கியிருந்தானே!!

அவளின் அதீத நெருக்கம்..
அவனிடத்தில் தீரா கிறக்கம்!!


அவனின் கன்னத்தைக் கடிக்கத் தொடங்கினாள் அதிதி. அவனோ அதை கண்கள் மூடி ரசிக்க… இன்னும் வெறியுடன் கடித்தாள்!! 

“ஏய்.. பொடுசு வலிக்குது டி!! விடுடி!! காட்டுல சுத்தி சுத்தி காட்டு விலங்கு மாதிரியே இப்படி கடிக்கிறியேடி!!” ஒரு கட்டத்தில் அவனுக்கு வலிக்க.. அவன் போராடினான் அவள் கடியிலிருந்து தப்பிக்க…

“வலிக்கட்டும்.. உனக்கு இன்னும் நல்லா வலிக்கட்டும்!! எனக்கு இங்கு வலிக்குது தெரியுமா? அதே மாதிரி உனக்கும் வலிக்கட்டும்!! நல்லா வலிக்கட்டும்!!” என்று தன் நெஞ்சை சுட்டிக்காட்ட அவன் பார்வை அங்கு போனதை கண்டவள், “பார்க்கிறதை பாரு.. கண்ணு முழி இரண்டையும் நோண்டிடுவேன்!” என்று இன்னும் அவனை வேகமாக கடிக்க முயன்றாள்.

“நான் எங்கடி அங்க பார்த்தேன்? நீ தானே காமிச்ச..! ஆனாலும் எனக்கு பார்க்க மட்டுமல்ல.. எல்லாத்துக்கும் ரைட்ஸ்ம் இருக்கு.. தெரியுமா? என்று கண்ணடித்தவனின் சீண்டல் அவளை இன்னும் வெறியேற்றியது!

அவள் கைகளை இவன் சிறைபிடிக்க முயல அவளோ சிக்காமல் தப்பித்தாள்.

அவன் முயன்றால் வேகமாக அவளை பிரட்டி கீழே தள்ளிவிட்டு எழ முடியும். ஆனால் ரிஷியோ அவளை ரசித்தான்.

அவளது கோபத்தை.. 
அவளது அருகாமையை… 
அவளின் ஸ்பரிசத்தத்தை..
அவளின் நெருக்கத்தை..
அவளின் ஆற்றாமையை..
இலைமறை காயாக இருக்கும்..
அவளது காதலை..
அவளது நேசத்தை..
அவளது பொஸஷிவ்னஸை..
அவளின் அனைத்தையும்!!

ரசித்தவன், அவளை ருசிக்க எண்ணிட..

மெல்ல மெல்ல அவனது இதழ்கள் அவளது இதழ்களை நோக்கி நெருங்கியது!

இதழோடு உறவாட வருவான்….























.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *