மோக விழிகளால் தீண்டாதே அசுரா
மோகம் : 6
மும்பை சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையம்.
வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகள் அனைவரும் தத்தமது உடைமைகளை செக்கிங் கொடுத்துவிட்டு ஹாங்காங் செல்லும் விமான பயணத்திற்காக காத்துக் கொண்டு இருக்க…வழக்கத்தை விட அங்கு காவல் சற்று பலமாகவே போடப்பட்டு இருந்தது.
அங்கு நடப்பவை எல்லாம் ஓரக் கண்ணில் கவனித்துக் கொண்டே அலட்சியதொனியில் அமர்ந்து இருந்த அந்த கொடியவனோ, தலையில் குல்லா முகத்தில் மாஸ்க், வெள்ளை நிற ப்ளேசர் அணிந்து உள்ளே கருப்பு நிற ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்துக் கொண்டு நன்றாக சாய்ந்து அமர்ந்து இருந்தவன், போலீஸ் படை தன்னை சுற்றி வலை வீசி அங்கும் இங்கும் தேடுவதை அறிந்தும் அலட்டிக்கொள்ளாமல் அமர்த்தலாகவே அமர்ந்து இருந்தான்.
எப்பா என்ன துணிச்சல் என்று வியக்கத்தான் தோன்றியது.
“விமானத்திற்குள்ளே பயணிக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட, ஒவ்வருவராக வரிசையில் நிற்க வைக்கப்பட்டு. டிக்கெட்களையும் பாஸ்போர்ட்டையும் மீண்டும் ஒருமுறை பரிசீலித்ததும் அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருக்க, மற்றவர்கள் வரிசையாக காத்துக் கொண்டு இருக்க, அங்கு மும்பை கமிஷனர் சாணக்கியன் நின்று இருப்பதை அப்போதுதான் எதிர்ச்சியாக கவனித்தான் அந்த அரக்கன். அவர் போலீஸ் உடையில் வராமல் மாறாக மப்டியில் வந்திருந்தார். கண்கள் ஒவ்வொருவரையும் கூர்மையாக அலசி ஆராய்ந்துக் கொண்டு இருந்தது.
அவரை ஒரு நொடி உற்று கவனித்தவன்…. “நேர்மையான ஆளுன்னு மட்டும் தான் நினைச்சேன் பரவால்யில்ல கமிஷனருக்கும் கொஞ்சம் மூளையும் இருக்கும் போல…” என்று அலட்சியமான பார்வையை அவரின் முன் வீசிவிட்டு…
அவர் நடந்து கொண்டே அவன் அருகில் வந்து நின்றபோது,
“கமிஷனருக்கே ஆட்டம் காட்டினால் என்ன…? கொஞ்ச நேரம் விளையாடிப் பார்ப்போமே…!!” என்று சாணக்கியனை சீண்டும் எண்ணம் அந்த அரக்கனுக்கு தோன்றியதோ என்னவோ…?
அவர் அவன் அருகில் நிற்கும் போது… “ஹலோ சார் நீங்க மும்பை கமிஷனர் சாணக்கியன் தானே…?” என்றவன் அவர் பதில் சொல்வதற்கு முன் கட்டி அணைத்துவிட்டு, “உங்கள மாதிரி ஆபீஸர் எல்லாம் நம் நாட்டில் இருக்கிறதுனால தான் ஒரு கொலையாளி கூட உங்களை மீறி தப்பித்து போக முடியலை.” என்று பாராட்டுவது போல் பேசினானா இல்லை, உன் கண் முன்னே நான் தப்பித்துப் போகிறேன் பார். என்னை பிடிக்க முடியவில்லையடா முட்டாள்.” என்று மட்டம் பேசுகிறானா என்று அவனுக்கே வெளிச்சம்.
ஹான்… ஹான் என்று தலை அசைத்தவர்,சரியான ஆர்வக்கோளாறு என்று மனதில் நினைத்துக் கொண்டு… “செக்கிங் முடிந்தால் கொஞ்சம் கிளம்பு பா பின்னாடி வரிசையில் நிறைய பேர் நிக்கிறாங்க பாரு.” என்று சொன்னதும்… “ஒரு செல்பி மட்டும் எடுத்துக்கிறேன் சார்.” என்று சொல்லிக்கொண்டு அவசர அவசரமாக போனை எடுத்து பளிச்சென்ற புன்னகையில்… ஒரு செல்பியும் எடுத்து கொண்டான்.
அவனுக் குல்லாவை அவிழ்த்துவிட்டு, மாஸ்க்கும் கூலிங் கிளாஸும் போட்டு இருந்ததால் அந்த அரக்கனின் முகம் சாணக்கியனுக்கு சரியாக பதியவே இல்லை.
தான் தேடி வந்தவனை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்ற பரபரப்பிலே இருந்தவர், தன் எதிரில் நின்று இயல்பாக உரையாடிக் கொண்டு இருப்பவனா தான் தேடிக் கொண்டிருப்பவன் என அதி புத்திசாலி கமிஷனரான சாணக்கியனின் மூளையை கூட ஒரு நொடி தன் வசப்படுத்தி மழுங்கடித்துக் கொண்டிருந்தான் அந்த அரக்கன்.
செக்கிங் முடிந்த பின்பு, விமானத்தில் எல்லோரும் ஏறி அமர்ந்து விமானம் புறப்பட்டு சென்றது.
தன் அலைப்பேசியை எடுத்து பேச முயன்றவராக, பாக்கெட்டுக்குள் இருந்து கையை விட்டவரின் கையில் தட்டுப்பட்டது ஒரு காகிதம்.
அதை புருவம் சுருக்கி ஒரு முறை பிரித்துப் பார்த்துவிட்டு திடிக்கிட்டுப் போனார்.
“ராஸ்கல்… சிட்..” என்று தலையில் அடித்துக் கொண்டவர் வேகமாக வாக்கி டாக்கியில்… “கால் த ஏர் கண்ட்ரோல் ரூம் இம்மீடியட்லி. ஸ்டாப் தி ஹாங்காங் பிளைட் சூன் அஸ் பாசிபிள்.”
“சார்…” என்று அதிர்ந்தான் எதிர்மறையில் இருந்த ஒரு காவல் அதிகாரி.
“இடியட் நான் சொல்றது காதில் விழுதா இல்லையா…?”
“எஸ் சார்.”
“அந்த கல்பிரிட் எனக்கே விபூதி அடிச்சிட்டான் டா… அந்த பிளைட் இப்பவே இங்க தரை இறங்கி ஆகணும்.” என்று உத்தரவு பிறப்பிக்க அதன்படியே அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் கேப்டனுக்கு செய்தி பறந்தது.
ஹாங்காங் விமான கேப்டன் விமானத்தை லாபகமாக திருப்பி வானில் சுழற்றிக் கொண்டே மீண்டும் தரையில் இறக்க உள்ளிருந்த பயணிகள் எல்லோரும் புரியாமல் ஒருவருக்கொருவர் கலவரம் ஆகி கொண்டிருந்தனர்.
பயணிகளை சமாதானம் செய்து வைக்க மெடிக்கல் எமர்ஜென்சி என்று மட்டும் தான் சொல்லி வைத்திருந்தனர்.
உண்மை நிலவரத்தை அங்கு இருப்பவர்களிடம் சொல்ல முடியாதல்லவா…
உள்ளே இருக்கும் திருடன் உஷாரா ஆகிவிட்டு இங்கிருக்கும் பயணிகளை ஏதாவது செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது அதனால் இப்படி ஒரு பொய்யை சொல்லி விமானம் மீண்டும் மும்பையில் தரையிறக்கப்பட்டது.
தன்னை முட்டாள் ஆக்கிவிட்டு பறந்து சென்றவனை கொன்று விடும் ஆத்திரத்தில் சீறிக்கொண்டு உள்ளே சென்றார் சாணக்கியன்.
உள்ளே சென்று ஒவ்வொரு பயணிகளாக பார்த்துக் கொண்டிருக்க, அங்கு அவன் இல்லை.
ஒரு நொடி சாணக்கியனே குழம்பிப் போனார். ஹரிஷ் என்ற பெயரில் அவன் சென்ற பாஸ்போர்ட் போலியானது என்பது மட்டும் ஊர்ஜிதம்.
சாணக்கியன் விமான நிலையம் முழுவதும் தேடிக் கொண்டிருக்க ஆனால் நம் அரக்கனும் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தான்.
ஆச்சரியமாக இருக்கிறதா…? அவன் நோக்கம் விமானத்தில் செல்வது அல்ல அதில் பல ஆபத்துகள் இருந்த போதும் திரில்லிங் தான் அவனுக்கு பிடிக்குமே… மனக் கிளர்ச்சிக்கு செய்த சிறு விளையாட்டு. கமிஷனர் சாணக்கியனை விளையாட்டுக் காட்டியதில் கூடுதல் சந்தோஷம் அவ்வளவுதான் அவனுக்கு.
அவன் திட்டமிட்டபடி கப்பலில் தான் பயணம்.
காவல் கெடுபடிகள் அதிகம் இருக்கும் வேளையில் வானத்தில் பயணம் செய்பவன் போல போக்கு காட்டிக் கொண்டு வந்தவன் விமானத்தில் ஏறாமல் வேறு வழியாக சென்று காரின் மூலம் இப்போது துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான்.
போலீசின் கவனம் முழுவதும் விமான நிலையத்தை சுற்றியே வலம் வந்து கொண்டு இருக்க… அவன் துறைமுகம் வழியாக தப்பித்துக் கொண்டு போக, இன்னும் எளிமையாகவே போனது.
சாணக்கியன் சிசிடிவி கேமரா முழுவதையும் செக் செய்து அவன் முகத்தை படம்பிடிக்க எத்தனிக்க,
அங்கு அவன் வந்து போனதற்கான ஒரு தடயமும் அங்கு இல்லை. அதைக் கண்டும் அவர் அயர்ந்து போனார்.
அவன் தான் உள்ளே வரும்போது அவன் அடியாட்கள் ஒருவனை சிசிடிவி ரூமில் விட்டிருந்தானே அவன் சென்று ஒவ்வொரு இடங்களையும் அவ்வப்போதே டெலிட் செய்து வேறு ஒரு புட்டோஜை அதில் காப்பி செய்து வைத்திருந்தான்.
இத்தகைக்கு கூறிய மூளை உடைய கொடியவனை எப்படி பிடிக்க போகிறோம் என்று முதல் முறையாக அதிர்ந்தார் சாணக்கியன்.
கம்பீரம் படிந்த சாணக்கியனையே ஒரு நொடி நிலைகுலைய வைத்த அந்த அரக்கனும் கேப்டன் ஈகிள் என்று பொறிக்கப்பட்ட சிறு ஜெட் போட்டில் பயணித்துக் கொண்டிருந்தான்.
இது நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு ஆதிராவின் வீட்டில் பலத்த கலவரமே மஹாவின் மனதில் வெடிக்க காத்திருந்தது.
மஹாலக்ஷ்மி என்ற சரிதா, அவள் அனுப்பிய தகவல்களை சரி பார்த்து இன்னொரு லிங்க் அனுப்பப்பட்டிருந்தது.
அதிலிருந்த தகவல்கள் இதுதான்…
அதிராவுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதுவும் மாலத்தீவில் ஒரு பிரபலமான பீனிக்ஸ் குரூப்பின் ரீசார்ட்டில் வேலைக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த தகவலை கண்ட மஹா, எப்படி ஆதிராவை இதற்கு சம்மதிக்க வைப்பது என்று குழம்பித்தான் போனார்.
அவள் படித்தது ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மெண்ட் என்பதால் ஒரு பிரபல பைவ் ஸ்டார் ரிசார்ட்டில் கிடைத்த வேலையை அவ்வளவு சீக்கிரம் அவள் மறுத்து விட முடியாது என்பது உண்மைதான். மாலத்தீவு போய் வேலை செய்ய அவள் ஒத்துக் கொள்வாளா என்ற எண்ணமும் தோன்றத்தான் செய்தது.
கொடுத்த வேலையை முடிப்பது தன் கடமையை என்று எண்ணியவர் ஆதிராவிடம் அதைப்பற்றி பேச வேண்டும் என எண்ணி அறைக்குள் நுழைய, அதற்குள் மீண்டும் அலைபேசி அழைத்தது.
அதை எடுத்துப் பார்த்த அவருக்கு அகரனிடம் இருந்து வந்திருக்கிறது என்று அறிந்தபோது பட்டேன்று காதிற்கு கொடுத்தார்.
“ஹலோ அகரா எங்கடா போன ஆளையே காணோம்.” தாயாக பரிதவித்தார் மஹாலட்சுமி.
ஆனால் எதிர்மறையில் பலத்த சிரிப்பு அதைக் கேட்டதும் அதிர்ந்து போய்விட்டார்.
அந்த சிரிப்பு அவரின் காதில் நாராசமாய் ஒலிக்க. தன் மகனுக்கு என்னவோ ஏதோ என்று இதயம் துடிதுடித்தது.
“அகரன் இப்போ எங்கே…?” என்றார் பயந்த குரலில்.
“என்கிட்ட தான் பத்திரமாக இருக்கான்…” என்று சொல்லி வீடியோ காலில் வர, முகத்தில் ஆறாக வடிந்த வியர்வையை துடைக்க கூட தோன்றாமல் எச்சில் விழுங்கிக் கொண்டு பச்சை பட்டனை மேல்நோக்கி தள்ளினார் மஹாலட்சுமி.
அங்கு ஒரு கூண்டில் இருக்கையையும் கட்டப்பட்டு கிழித்த நாராக அவனை தொங்க விட்டிருந்தனர்..
இந்த நிலையில் கண்டபோது பெத்த தாயின் வயிறு எரிந்தது.
“அவன விட்டுடுங்கடா…கொலகார பாவிங்களா… என் மகனை விட்டுடுங்கடா…” என்று கெஞ்சியவர்… “என் மகனை விடல நான் போனிக்ஸ் குரூப்க்கு தகவல் அனுப்பி விடுவேன்.” என்று சிறிதாக மிரட்டி பார்த்தார்.
அதையெல்லாம் கண்டு துளி கூட அஞ்சுபவனா நம் அரக்கன். காதை குடைந்து கொண்டு, “நீ அங்க போன் போட்டு அவன் லிங்க் அனுப்பி நீ பதில் சொல்லி அங்கிருந்து திரும்ப செய்தி வரதுக்குள்ளே…உன் பையன் உன்னை விட்டு எப்போவோ பரலோகம் போயிருப்பான்” என்றான் நக்கலாக.
“வேணாம் உங்களுக்கு என்ன வேணும்… என் பையன விட்டுடு எனக்கு இருக்கிறது ஒரே ஒரு பையன் தான்.” என்று கெஞ்சினார்…
அந்த கெஞ்சுதலை எல்லாம் பொருட்படுத்தாமல்… “ஆதிராவை என்னுடைய இடத்துக்கு நீயா கூட்டிட்டு வரணும். அவ வந்தா உன் பையன் உயிரோடு இருப்பான் இடையில் ஏதாவது கோல்மால் வேலை செஞ்சா உன்னையும் உன் பையனையும் கொல்வதற்கு எனக்கு ஒரு செகண்ட் கூட ஆகாது.” என்று அழுத்தமாக கூறியவன் அவரின் பதிலை கூட எதிர்பார்க்காது போனை கட் செய்து விட்டான்.
அதன் பிறகு அந்த அரக்கன் அவருக்கு போன் செய்யவில்லை. பலவாறு சிந்தித்தவருக்கு தன் மகனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே நிறைந்து இருக்க, அதேசமயம் ஆதிராவையும் அவனுக்கு படையல் வைக்க அவருக்கு மனமில்லை.
என்ன செய்வது என்று புரியாமல் இருதலைக்கொல்லி எறும்பாக தத்தளித்தார்.
அவனிடம் ஒப்படைத்தால் கண்டிப்பாக பீனிக்ஸ் நம்மை கொன்று விடுவார். இன்னொரு பக்கம் ஆதிராவை அவனிடம் ஒப்படைக்காமல் போனால் தன் மகனையும் தன்னையும் அவனுக்கு கொல்ல நிமிடங்கள் கூட ஆகாது இந்த நிலையில் என்ன செய்வது என்று யோசித்தவருக்கு பைத்தியமே பிடித்து விடும் போல் இருந்தது.
யோசனையில் நெடு நேரம் அமர்ந்திருந்தவர், ஆதிரா காலேஜ் முடிந்து வீட்டிற்கு வரும் அரவம் கேட்க அவசரமாக கண்ணை துடைத்துக் கொண்டு முகத்தை கழுவி, வா ஆதிரா… “கிளாஸ் எப்படி போச்சு…?” என்று இயல்பாக கேட்டார்.
“ஓகே தான் மஹா. அகரன் எங்க…?” என்று பார்வையை வீடு முழுவதும் துழாவி கேட்டாள்.
அதிரனை பற்றி ஆதிரா கேட்டபோது என்ன சொல்வது என்று தெரியாமல் தத்தளிக்க, “உனக்கு ஒரு ஆஃபர் லெட்டர் வந்திருக்கு ஆதிரா…?” என்று அவளிடம் கொடுக்கவும்…
அதை படித்துவிட்டு துள்ளி குதித்தாள். அவளால் அதை நம்பவே முடியவில்லை எவ்வளவு பெரிய கம்பெனி? அதில் நமக்கு வேலையா..? என்றவளுக்கு வானத்தில் பறப்பது போன்று உணர்வு கால் தரையில் நிற்கவில்லை. ஆனால் ஒரு சந்தேகம்.. இந்த கம்பெனிக்கு நான் பதிவு பண்ணலையே…? பிறகு இது எப்படி…?” என்று புரியாமல் கேட்டாள்.
என்னவென்று சொல்வது என்று தெரியாமல் யோசித்தவர், “அகரன் தான் உனக்கு இந்த வேலைக்கு ஏற்பாடு பண்ணினான்… அந்த கம்பெனியில் இருக்கும் ஒரு மேனேஜர் அவனுக்கு தெரியும் போல அவர் மூலம் சிபாரிசு செய்து வாங்கி இருக்கிறான்.. வாயில் வந்ததை சொல்லி மழுப்பி ஒருவழியாக சம்மதிக்க வைத்தார்.
அகரன் எனக்காகவா இவளோ பண்ணி இருக்கான். கண்டிப்பா நான் இப்ப அவனை பார்த்து தேங்க்ஸ் சொல்லியே ஆகணும் எங்க அவன்…? என்று மீண்டும் கேட்டாள் ஆதிரா.
வருவான். சென்னையில் ஒரு மீட் இருக்குன்னு சொனனான் இல்லையா…? ஒரு இன்னைக்கு நடக்குது அதான் உங்கிட்ட சொல்லாமல் போய்ட்டான்.” என்று மட்டும் சொன்னவர்.
“திங்ஸ் எல்லாம் எடுத்து வச்சுக்கா ஆதிரா, நாளைக்கு உன்னை வேலைக்கு வர சொல்லி இருக்காங்க” என்றதும்..
“என்னம்மா குண்டு மேல குண்டா போட்டுட்டு இருக்க. என்னால உடனே எப்படி போக முடியும் அதுவும் உங்களை விட்டுட்டு நான் எப்படி மா போவேன்,”என்று அழும் குரலில் கையை பிடித்துக் கொண்டவளை…
“இந்த மாதிரி வாய்ப்பு எல்லாம் கிடைக்கும் போதே உபயோகப்படுத்திக்கனும் ஆதிரா… அகரன் லண்டன்ல லட்சத்தில் இவ்வளவு சம்பாதிக்கிறான். குடும்பம்னு சுருங்கி இருந்தானா மும்பையில ஏதோ ஒரு வேலைக்கு 30 ஆயிரத்துக்கு போய் இருப்பான்…அதனால் நீங்க எத பத்தியும் யோசிக்காமல் கிளம்புவதற்கு ஏற்பாடு பண்ணு.”
“ஆனா இது மாலத்தீவு என்று எழுதி இருக்கிறதே…?
விமான டிக்கெட் எல்லாம் என்ன பண்ணுறது..? விசா எல்லாம் இருக்கே. இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கு…என்ற கேள்விக்கு கேட்ட மகளை எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ ரெடி மட்டும் ஆகு.” சொல்லிவிட்டு அறைக்குள் சென்று விட்டார்.
அடுத்த ஒரு வாரத்தில் மாலை ஐந்து முப்பது மணிக்கு மும்பையில் விமான நிலையத்தை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தவளை… “பிஸ்கட் சாப்பிடு.” என்று கொடுத்த மஹாலட்சுமி கண் கலங்கினார்.
“வேணாமா.” என்று அவள் மறுத்த போதும்…
“கொஞ்சம் சாப்பிடு.” என்று வலுக்கட்டாயமாக பொங்கிய கண்ணீரை மறைத்துக் கொண்டு கொடுத்தார்.
கொஞ்சம் நேரத்தில் அந்த பிஸ்கட்டை உண்ட பின்பு கண்கள் சொருகியது. அவள் மயக்கம் அடைந்திருப்பதை உறுதி செய்துகொண்டு யாருக்கோ போனில் அழைக்க
அதன் பின் இருவரும் சென்று கொண்டிருந்தார்கள் ஒரு தனிப்பட்ட விமானத்தில். கேப்டன் ஈகிள் என்று அந்த விமானத்தில் பொறிக்கப்பட்டு இருந்தது.
மோகம் தொடரும்….
