அழகுக்கு அழகானேன் உன்னாலே
அத்தியாயம் 8
“ம்ம்மா..” என்று அலறி எழுந்தவளின் கண்முன்னே நின்றிருந்தான் அபிதீவ் சர்மா. அவனைப் பார்த்ததும் நடந்த அனைத்தும் ஞாபகம் வரவே, கண்ணை சுழற்றி தான் இருக்கும் இடத்தை பார்த்தவள், சட்டென எழுந்து நிற்க முயன்று தோற்று போனவளாய் மீண்டும் மெத்தையில் பொத்தென விழுந்தாள். அவளது காலில் சிறு கட்டு ஒன்று போடப்பட்டிருந்தது. அதனைப் பார்த்து கொண்டிருந்தவளுக்கு அருகில் வந்தவன், தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை விட்டுக் கொண்டே,
“உன்னோட வலது கால் பிராக்சராகிருக்கு.. சோ அதுனால இங்க தூக்கிட்டு வந்துட்டேன்..” என்று கூற, தன் ஒரு காலை மட்டும் தரையில் ஊன்றி, எழுந்து நின்றவள், நொண்டி அடித்துக் கொண்டே நகர முற்பட, அவளை தூக்கி மெத்தையில் அமர வைத்தவன்,
“உனக்கு ஒரு தடவை சொன்னாப் புரியாதா? உன்னால இப்போ யாரோட சப்போர்ட்டும் இல்லாம நடக்க முடியாது..” என்றவனின் முகத்தை பார்க்காது எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தவள்,
“யாரோட தயவும் எனக்கு தேவையில்ல.. என்னால நடந்து போக முடியும்.. எனக்கு வழி விட்டு பேசாம இருந்தாப் போதும்..” என்றவளை உக்கிரமாக முறைத்துப் பார்த்தவன்,
“அம்மா தாயே! நான் ஒன்னும் உன்னைய ஆசையா இங்க இருக்க சொல்லல.. நடக்க முடியாம கஷ்டப்படுறியேங்குற மனிதாபிமானத்துனால தான் சொல்றேன்.. ஒழுங்கா அடம்பிடிக்காம ரெஸ்ட் எடு.. உங்க வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்..” என்றவன் கூற, திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள் பாக்யமதி.
“எதுக்கு? என்னன்னு போன் பண்ணீங்க?”
“ஒன்னும் பயப்படாத.. நடந்த எதையும் நான் யார்கிட்டேயும் சொல்லல.. உனக்கு ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்.. சீக்கிரமே வீட்டுக்கு வந்துடுவன்னு சொல்லிருக்கேன்..”
“ஓ.. நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப தாங்க்ஸ்.. என்னால உங்களுக்கு தான் வீண் சிரமம்.. நான் இப்படியே வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துக்குறேன்..”
“இப்படியே வீட்டுக்கு போறியா?” என்று ஒற்றை புருவத்தை உயரத்தியவாறே கேட்டவனை, புருவம் சுருக்கி பார்த்தவள், சட்டென தனது ஆடையை பார்த்தாள். அதுவரை தான் அணிந்திருப்பதை கவனிக்காதவள், இப்போது தான் கவனிக்க ஆரம்பித்தாள். அவள் அணிந்திருப்பது, அவனது ஆடையை தான்.
‘ச்சே.. இவ்ளோ நேரம்.. இதை எப்படி கவனிக்காம விட்டேன்?’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டவள், அவனைப் பார்த்து,
“என்னோட ட்ரெஸ் எங்க? இதை யார் எனக்கு போட்டு விட்டா?” என்றவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே,
“எக்ஸ்கியூஸ் சார்.. மே ஐ கமின்?” என்றவாறே உள்ளே வந்தாள் அவனது பிஏ லீசா.
“எஸ்.. மிஸ்.. லீசா..”
“சார்.. நீங்க சொன்ன சஸ்ல தான் இந்த ட்ரெஸ் எல்லாம் வாங்கிருக்கேன்..”
“தாங்க் யூ மிஸ் லீசா. அதை அங்க வைச்சுட்டு நீங்க கிளம்பலாம்..”
“ஓகே சார்..” என்ற லீசா தான் வாங்கி வந்த சுடிதார்களை அங்கிருந்த டீப்பாய் மேஜையின் மீது வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
“நேரமாகுது.. நான் வீட்டுக்கு போகணும்.. ப்ளீஸ்.. என்னை விட்டுடுங்க..” என்ற பாக்யமதி ‘சந்தைக்கு போகணும்.. ஆத்தா வையும்.. காசு கொடு..’ என்னும் விதமாக சொன்ன வாக்கியத்தையே திரும்ப திரும்ப சொல்ல,
“ஸ்டாப்பிட்..” என்று கத்தியவன்,
“இப்ப எதுக்கு வீட்டுக்கு போகணும்னு துடிக்குற? நான் உன்னை எதுவும் பண்ணிடுவேன்னு பயப்படுறியா? அவ்வளவு சீனெல்லாம் உனக்கில்ல..” என்றவன், கீழே குனிந்து அமர்ந்திருந்தவளின் முடியை பிடித்து தன்னை நோக்கிப் பார்க்குமாறு செய்தவன்,
“ஆமா.. வீட்டுக்கு போகணும்னு இந்த துடிதுடிக்குறியே.. அப்படி அந்த வீட்டுல உனக்குன்னு யார் இருக்கா? சொல்லுடி..” என்று அவளது கூந்தலைப் பிடித்து உலுக்கியவனை கண்ணில் கனல் காக்க பார்த்தவள்,
“எனக்காக யார் காத்துட்டுருந்தா உங்களுக்கென்ன? எந்த உரிமைல என் மேல வைக்குறீங்க? முதல்ல என் மேல இருந்து கையை எடுங்க..” என்றவள் அவனிடமிருந்து தன் கூந்தலை விடுவித்துக் கொண்டாள்.
“ஆமா என்ன கேட்டீங்க? யார் காத்துட்டுருக்காங்கன்னு தானே?! எனக்காக என்னோட உயிர் காத்துட்டுருக்கு.. போதுமா?! என்னை ஏன் இப்படி அடைச்சு வைச்சு சித்ரவதை பண்ணுறீங்க? உங்களுக்கும் அந்த கிஷோருக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல.. ரெண்டு பேரும் அடுத்தவங்களோட உணர்வோட விளையாடுறீங்க..” என்றவள் கத்த,
“நிறுத்துடி.. கிளம்பு.. கிளம்புஊஊஊஊ..” என்று இறுகிய முகத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு கூறியவனை பயத்துடன் பார்த்தாள் பாக்யமதி. அவனது இந்த குரலைப் பற்றி அவள் தான் நன்கு அறிவாளே! இக்குரலுக்கு யாரேனும் அடிபணிந்தே ஆக வேண்டும். இல்லையெனில் அதன் பின் விளைவுகளைப் பற்றி அறிந்தவளாயிற்றே! ஆதலால் மெல்ல தட்டுத்தடுமாறி எழுந்து நின்றவள், மெல்ல சுவற்றைப் பிடித்தவாறே அங்கிருந்து ஒன்றைக் காலில் குதித்து குதித்து நடக்க முயல,
“இந்த ட்ரெஸோட தான் போவேனாலும் சரி.. இல்ல இந்த புது ட்ரெஸை மாத்திட்டு கிளம்பினாலும் சரி.. இல்ல.. இல்ல.. நான் கிழிஞ்ச என்னோட பழைய ட்ரெஸ்ஸை போட்டுட்டுத் தான் போவேன்னாலும் சரி.. உன் இஷ்டம்..” என்றவன் சரெலென அவ்விடத்தை விட்டு அகன்று சென்றிருந்தான்.
‘இப்படியே வீட்டுக்கு போகவும் முடியாது.. பழைய ட்ரெஸ்ஸை போட்டுட்டும் போக முடியாது..’ என்று யோசித்தவள், அவனது பிஏ வாங்கி வந்திருந்த சுடிதாரை அணிந்து கொண்டாள். அவ்வுடை அவளுக்கு மிகச் சரியாக பொருந்தியது. வீட்டுக்கு கிளம்பவென்று மெல்ல ஒற்றைக்காலை ஊணாமல் நொண்டி அடித்துக்கொண்டு அறைக்கு வெளியே வந்தவளின் எதிரே ஒரு வயதான பெண்மணி வந்து நின்றார். அவரை கேள்வியாக பார்த்த பாக்யமதியிடம், தன் வைத்திருந்த ஊன்று கோலை கொடுத்தவர்,
“தம்பி.. இதை உங்கக்கிட்ட கொடுக்க சொன்னாரும்மா..” என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார். அவர் கொடுத்த ஊன்றுகோலை பிடித்துக் கொண்டு வெளியே வந்தவளின் முன்னே தயாராக நின்றிருந்த கார் கதவை திறந்து விட்டார் டிரைவர்.
“அம்மா.. ஐயா.. உங்களை பத்திரமா கொண்டு போய் வீட்டுல விட்டுட்டு வரச் சொன்னார்..” என்று கூற,
“இல்ல.. நான் ஆட்டோவில..” என்று இழுத்தவளை மேலும் பேச இடம் கொடுக்காதவர்,
“அம்மா.. இது ஐயாவோட ஆர்டர்.. இதை மீறினா என்னோட வேலையே போயிடும்.. நான் புள்ளக்குட்டிக்காரன்மா.. தயவு செஞ்சு வண்டில ஏறுங்கம்மா..” என்று கெஞ்ச, அவரைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருக்கவே, காரில் ஏறி அமர்ந்து கொண்டாள் பாக்யமதி. நேரே வீட்டிற்கு வந்து இறங்கியவளை ஓடி வந்து இடையோடு அணைத்துக் கொண்டாள் சிவாணி.
“ஏன்மா இவ்வளவு நேரம்? பாட்டியும் நானும் எவ்வளவு பயந்துட்டோம் தெரியுமா? அப்புறம் அப்பா தான் போன் பண்ணி.. நீங்க அவர்கூட இருக்குறதா சொன்னாரு.. அதுக்குப்புறம் தான் எங்களுக்கு நிம்மதியே வந்துச்சு..” என்று கூறிய சிவாணியை அதிர்ச்சியோடு பார்த்தாள் பாக்யமதி.
“அப்பாவா? யாரை சொல்ற?” என்று அதிர்ச்சியோடு கேட்ட பாக்யமதியை பார்த்து, ஒற்றை கண்ணை மூடி, தன் தெத்துப்பல் தெரிய சிரித்த சிவாணி,
“என்னம்மா விளையாடுறீங்களா? நம்ம ஸ்கூல் கரஸ்பாண்டன்ட் தான் என்னோட அப்பான்னு எனக்கு தெரியும்..” என்று கூற, பாக்யமதியின் தலையே சுற்றியது. மெல்ல மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவளின் உடல் முழுவதும் நடுங்க தொடங்கியிருந்தது. தன்னுடைய குரல் நடுங்க,
“அவர் தான் உனக்கு அப்பான்னு உனக்கு யார் சொன்னா?” என்று கேட்டபின் வலது கையை எடுத்து தன் தோளில் போட்டுக் கொண்ட சிவாணி,
“அவர் தான் சொன்னாரு.. அப்புறம் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்குற போட்டோவைக் கூட என்கிட்ட காட்டுனாரே! என்னோட அப்பா பேரும் அக்ஷயோட அப்பா பேரும் ஒன்னா இருக்கும் போதே எனக்கு டவுட்டா இருந்துச்சு.. ஆனா நீங்க தான் என்னோட அப்பா ஃபாரின்ல இருக்குறதா சொல்லியிருந்தீங்களே?! அதுனால அவரா இருக்காதுன்னு நினைச்சேன்.. பார்த்தா அவர் தான் என்னோட அப்பாவாம்.. நாளைக்கே என்னைய அவரோட வீட்டுக்கு கூட்டிட்டு போறதா சொன்னாரும்மா..” என்று கூற, பாக்யமதியின் மூச்சே தடைபட்டு விடும் என்பது போல் சுவாசிக்க முடியாது நின்றிருந்தாள்.
“அப்போ.. உன் அப்பா வந்து கூப்பிட்டா.. நீ அவரு கூடவே போயிடுவியா?” என்றா குரல் தர்க்க கேட்ட பாக்யமதியை இடையோடு அணைத்துக் கொண்ட சிவாணி, மெல்ல அண்ணார்ந்து பார்த்தவாறே,
“இவ்வளவு நாள் உன்கூடவே இருந்துட்டேன்லம்மா.. இன்னும் கொஞ்ச நாளு அப்பாக்கூட இருந்துட்டு.. அப்புறம் உன் கூடவே வந்துடுறேன்மா..” என்று தனது கண்ணை சுருக்கி கெஞ்ச, ‘அய்யோ..’ என்று கூறி அவ வேண்டும் போல் இருந்தது பாக்யமதிக்கு.
“அப்போ.. உனக்கு அம்மா வேணாம்.. அப்படித்தானே?!”
“ஹூம்.. எனக்கு அம்மாவும் வேணும்.. அப்பாவும் வேணும்.. எங்க ரெண்டு பேருக்கும் ரெண்டு பேரும் வேணும்..” என்று சிவாணி கண் கலங்க, மெல்ல நொண்டிக் கொண்டே வீட்டுக்குள் வந்தவளுக்கு ஏதோ ஒன்று உள்ளுக்குள் நொறுங்கிப் போனது.
‘நாலு வருஷத்துக்கு முன்னாடி வேண்டாத பொம்பளப்புள்ள, இப்ப தான் கண்ணுக்கு தெரியுதோ?! அய்யோ இப்ப நான் என்ன செய்யுறது? பெத்த ரெண்டு குழந்தையையும் அவர்கிட்ட கொடுத்துட்டா.. எனக்குன்னு என்ன வாழ்க்கையிருக்கு? பேசாம இங்கிருந்து வேற எங்கேயாவது போயிட்டா?’ என்று வேக வேகமாக தனிக்கணக்கு ஒன்றை அவளது மூளை வகுத்துக் கொண்டிருக்க,
‘அடிப்போடி.. கிறுக்கி.. நீ நினைச்சா.. நினைச்சது உடனே நடந்துடுமா? அதை நான் நினைக்கணும்.. உன்னை அப்படி ஈசியா விட்டுடுவேனா?!’ என்று சிரித்த விதியை அறியாத பேதை அடுத்த நாள் காலை நடக்கவிருப்பதை அறியாது, நாளை நடக்க வேண்டியவற்றை இன்றே திட்டமிட்டு உறங்கிக் போனாள் பாக்யமதி. அடுத்த நாள் காலை அவளுக்கென காலம் என்ன வைத்து காத்திருக்கின்றதோ?
